ராமாயணத்தில் வரங்கள் (59) வருணன் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது! (Post.15,848)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,848

Date uploaded in London – 9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (59) வருண பகவான் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் ஹம்ஸத்திற்கு வருண பகவான் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் வருண பகவான் ஹம்ஸத்தை நோக்கி இப்படிக் கூறினார்:

வருணஸ்த்வப்ரவீதத்ஹம்ஸம் கங்காதோயவிஹாரிணம் |             ஸ்ரூயதாம் ப்ரீதிசம்யுக்தம் வச: பத்ரரதேஸ்வர ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 30

வருண: – வருண பகவான்                               கங்காதோயவிஹாரிணம் – கங்காதீர்த்தத்தில் விஹரித்துக் கொண்டிருந்த ஹம்ஸம் – ஹம்ஸத்தைப் பார்த்து                                       து – இப்போழுது இப்படி சொல்லி அருளினார்                      பத்ரரதேஸ்வர – பறவைகளில் சிறந்த ஹம்ஸமே                    ப்ரீதிசம்யுக்தம் – அனுகூலமாயிருக்கிற                                      வச: – ஆக்கினையாவது                                             ஸ்ரூயதாத் – கவனமாய் கேட்கப்படட்டும்

வர்ணோமனோஹர: சௌம்ய சந்த்ரமண்டலசன்னிப: |                      பவிஷ்யதி தவோதக்ர: ஷுத்தபேனசமப்ரப: ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 31

சௌம்ய – குணவானே!                                                 தவ – உனது                                                                 வர்ண: – உருவம்                                                சந்த்ரமண்டலசன்னிப: – சந்திரமண்டலத்தை ஒத்ததாயும்              சுத்தபேண சமப்ரப: – நிர்மலமான வெண்மை நிறமுடைய நீரின் நுரை போன்ற காந்தியுடையதாயும்                                      மனோஹர – மனோஹரமாயும்                                           உதக்ர: – உனக்கு மட்டும் உரியதாயும்                                    பவிஷ்யதி – விளங்கட்டும்

மச்சரீரம் சமாசாத்ய காந்தோ நித்யம் பவிஷ்யஸி |                       ப்ராப்யஸே சாதுலாம் ப்ரீதிமேதன்மே ப்ரீதிலக்ஷணம் ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 32

மச்சரீரம் – பஞ்சபூதங்களினால் என்னால் ஏற்படுத்தப்பட்டதை (அதாவது ஜலத்தை)                                                               நித்யம் – எப்போதுமே                                                     சமாசாத்ய – அடைந்து                                                 அதுலாம் – ஒப்புயர்வில்லாத                                                ப்ரீதிர் – மன சந்துஷ்டியை                                              ப்ராப்யஸே – அடைவாய்                                             காந்த: – மிக அழகாகவும்                                            பவிஷ்யஸி – விளங்குவாய்                                               ஏதத் ச – இதுவே                                                                 மே – எனது                                                               ப்ரீதிலக்ஷணம் – அன்பிற்கு அடையாளம்

இப்படி வருண பகவான் ஹம்ஸத்திற்கு தூய்மையான வெண்மை நிறத்தைத் தந்தருளினார். இதற்கு முன்னர் ஹம்ஸங்கள் வெண்மை கலந்த நீலவர்ணத்தையும், சிறகுகள் கரிய நுனிகளைக் கொண்டவையாகவும் சிறகுகளிடையே பாகங்கள் உயர்ந்த சுத்தமான பசும் புல்லைப் போல இருப்பதையும் கொண்டிருந்தன.

வர்ணனின் அருளால் இனி ஹம்ஸங்கள் வெண்மை நிறத்துடன் விளங்க ஆரம்பித்தன.

இது அன்பிற்கடையாளமாய் தரப்பட்ட வரமாகும்.

**

Leave a comment

Leave a comment