Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,849)

Written by London Swaminathan

Post No. 15,849

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருத்தண்கால் (திருத்தங்கல்)

அருள்மிகு நின்ற நாராயணன் திருக்கோவில்:-

மூலவர்: நின்ற நாராயணன்

தாயார்: செங்கமல நாச்சியார்

உற்சவர்: திருத்தண்காலப்பன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: தேவச்சந்திர விமானம்

தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம்

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

பாற்கடலில் படுத்துறங்கும் பரந்தாமனாம் இறைவன் நாராயணன் நான்கு நாச்சியார்களுடன் காட்சி தந்து அருளும் தலம்.

வினாசக முனிவர் “வைகானஸ ஆகமம்” விதிகளை முனிவர்களுக்கு எடுத்துரைத்த தலம்.

திருத்தங்கல் பெயர்க் காரணம் :-

திருமகள் “மகாலஷ்மி” வந்து இங்கு தங்கியிருந்த தலம் ஆதலால் திரு + தங்கல் “திருத்தங்கல்” என்று பெயர் பெற்றது.

இவ்வூர்.சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாய்த் திகழும் இத்தலத்தில் “கருநெல்லிநாதர்” என்ற திருப்பெயரோடு சிவபெருமானும், “ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள்” என்ற திருநாமத்தோடு பெருமாளும் தரிசனம் தருகின்றனர்.

தலவரலாறு

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.

இவர்கள் இருவருக்கும் தென்புறத்தில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிய முருகப் பெருமான் பழனி ஆண்டவராக மிக இளமையாக காட்சி தருகிறார்.

வள்ளி – தெய்வானையுடன் குடும்ப சகிதமாய் இல்லாமல் தனித்து அருள்பாலித்தாலும், திருத்தங்கல் மக்களின் பெரும்பாலான திருமணங்கள் இவர் முன்னிலையில் தான் நடக்கின்றன.

ஜாம்பவிதேவி என்பவள் இராம அவதாரத்தில் கிட்கிந்தையில் இருந்த ஜாம்பவானின் மகளாவாள். அவளைத் திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க ஆவல் கொண்ட ஜாம்பவான், கிருஷ்ண அவதாரத்தில் திருமணம் செய்து வைத்ததாகவும், அவர்களின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தில் நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம் என இரண்டு திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தந்தாலும் நின்ற மூர்த்தியே பிரதானமாகக் கருதப்படுகிறார்.

மலையாக மாறிய ஆலமரம்:-

சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் தாங்கள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவோ “ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் இப்போதும் சயனிக்கிறார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கித் தவமிருந்தது. அதன் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் “உனக்கு என்ன வரம் வேண்டும்?? என்று கேட்க, ஆலமரமோ “தாங்கள் எப்போதும் பான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொள்ள வேண்டும்” என்று கேட்டது.

“திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக!!! நான் திருமகளை மணம் செய்ய வரும் காலத்தில் உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்”, என்றார் ஸ்ரீமந்நாராயணன்.

மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், “தங்கும் ஆல மலை” எனப்பட்டது, காலப்போக்கில் இதுவே மருவி “தங்காலமலை” என்றானது.

குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள அற்புதத் தலம்;

தாயார் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் ஒரே தலம்;

கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அமிர்த கலசத்துடனும் காட்சி தரும் ஒரே தலம்.

சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருத்தங்கல் இரயில் நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

****

மங்களாசாசனம் :-

இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார் -1 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரங்கள் என மொத்தம் 5 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

***

பாசுரங்கள்

1399.  

பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால்

ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*

ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே. 

2068.  

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*  பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*

செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-

தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!  

2251.  

தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,*

தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  – தமர் உள்ளும்-

மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,*

ஏ வல்ல எந்தைக்கு இடம்.

2708.  

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்

காரார் திருமேனி காணும் அளவும்போய்

சீரார் திருவேங்கடமே திருக்கோவ

லூரே*(2)–மதிள்கச்சி ஊரகமே பேரகமே

பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே

பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்

ஆராமம் சூழ்ந்த அரங்கம்*–கணமங்கை  (2)

–subham—

Tags—Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருத்தண்கால், திருத்தங்கல்

Leave a comment

Leave a comment