ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**

Leave a comment

Leave a comment