துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 19 (Post No.15,887)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,887

Date uploaded in London –   19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 19 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

पुनि धीरजु धरि अस्तुति कीन्ही। हरष हृदयँ निज नाथहि चीन्ही॥

मोर न्याउ मैं पूछा साईं। तुम्ह पूछहु कस नर की नाईं॥4 

மீண்டும் துளசிதாசரிடம்…………………..

பிறகு ஹனுமன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  பகவானைப் போற்றினார். தமது தலைவனை அடையாளம் கண்டு கொண்ட  அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ரீ இராமனைப் பார்த்து ஹனுமான் “சுவாமி! நான் தங்களைக் கேட்டவை அனைத்தும் நியாயமானதே. பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தவசி கோலத்தில். நான் ஒரு குரங்கு. அதனால் குரங்கு புத்திக்கு ஏற்ப உங்களை ஏதேதோ கேட்டேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் நீங்கள் மனிதனைப் போல என் கதையைச் சொல்லும்படி கேட்பது விந்தையினும் விந்தை” என்றான்.

..

 निज नाथहि चीन्हीं பல ஆண்டுகளுக்குப் பிறகு  தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தபஸ்வி கோலத்தில் . இங்கு தான் மீண்டும் அந்த பத்ம இராமாயணத்தை நமக்கு நினைவு படுத்துகிறார், சிறு வயதில் இராமுனுடன் விளையாடியுள்ளார். பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதுவும் தவசி கோலத்தில் வேறு இருப்பதால் உடனே அடையாளம் தெரியவில்லை என்பதாகச் சொல்கிறார். அதனால் நான் கேட்டதில்  நியாயம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக நீங்கள் கேட்டதில் என்ன நியாயம்? நீங்கள் பரப்பிரம்மம், எல்லாம் அறிந்தவர். அப்படி இருக்கும்போது தாங்கள் என்னிடம் எப்படிக் கேள்வி கேட்கிறீர்கள். தாங்கள் எல்லாம் தெரிந்தவர்தானே? என்று ஹனுமன் நினைக்கிறான். 

तव माया बस फिरउँ भुलाना। ता ते मैं नहिं प्रभु पहिचाना।।5

एकु मैं मंद मोहबस कुटिल हृदय अग्यान।

पुनि प्रभु मोहि बिसारेउ दीनबंधु भगवान॥2 

“நானோ தங்கள் மாயாவசத்தால் என்னை மறந்து திரிந்து கொண்டிருக்கிறேன். எனவே என் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.” 

प्रष्टव्यं योग्यमस्माकं त्वं पृच्छसि कथं नृवत्। 

मायावश्यो भ्रमाम्यत् प्रभु न ज्ञातवानतः॥

 “நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று கேட்கிறான்)

जदपि नाथ बहु अवगुन मोरें। सेवक प्रभुहि परै जनि भोरें॥

नाथ जीव तव मायाँ मोहा। सो निस्तरइ तुम्हारेहिं छोहा॥1

“இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சுவாமி! ஜீவர்கள் அனைவரும் உங்கள் மாயையினால் தானே கட்டுண்டு நிற்கிறார்கள். உனது அருள்தான் அவர்களை  உய்விக்கும். அண்ணலே!

ता पर मैं रघुबीर दोहाई। जानउँ नहिं कछु भजन उपाई॥

सेवक सुत पति मातु भरोसें। रहइ असोच बनइ प्रभु पोसें॥2

 “உன் மேல் ஆணை உம்மை பூஜிப்பதோ  உம்மை அடைவதற்கு யோகசாதனகளைச செய்வதோ  எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கேயாவது சேவகன் தனது எஜமானனை நம்பி வாழ்பவன் கவலைப் பாடுவானா? அது போல் தாயை நம்பி வாழும் குழந்தை கவலைப் படுமா? அதுபோல என்னை ரட்சிப்பவர் தாங்கள் தான். உமது திருவடிகளைச்  சரணம் அடைந்து  உம்மையே அண்டி நான் வாழ்வேன், துளசிதாசர் இங்கு कछु भजन उपाई॥ என்றப் பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உன்னை நினைத்து சிறிதளவே பூஜித்தாலும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கு அந்தச் சிறிதளவு பூஜைகூட செய்யத் தெரியாது என்று ஹனுமன் பணிவுடன் சொல்ல முயல்கிறார். இந்த சுலோகம் ஹனுமானின் பதினாலாவது ஸ்துதி.. நட்சத்திரங்களில்  பதினாலாவது சித்திரை . ஹனுமானின் நட்சத்திரம் சித்திரை. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு நன்மையே நடக்கும்.

 ஹனுமன் தனக்கு ஒன்றுமே தெரியாது ஞானமில்லாதவன். எனது தலைவனை மட்டும் நம்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது எனக்கு இறைவனை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வேறு பாதையும் இல்லை என்று அந்த நாராயணனிடம் சரண் அடைகிறான். அதாவது சர்ரனாகதி தத்துவத்தில் இது முதல் அம்சம். . அப்படியானால் சரணாகதி தத்துவத்தின் அந்த ஆறு அங்கங்கள் என்ன?

अनुकूलस्य संकल्पः प्रतिकूलस्य वर्जनम् ।

रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वरणं तथा ।

आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति:

இந்த சுலோகம் ஹரி-பக்தி-விலாஸம் (என்ற வைஷ்ணவக் கிரந்தத்தில் இருந்து வருகிறது, இது ஸ்ரீ சனாதன கோஸ்வாமி அவர்கள் எழுதியது. இதில் ஷட்விதா சரணாகதி — பகவானிடம் சரணாகதியாக இருப்பதற்கான ஆறு முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன.

சரணாகதி – ஆறு அம்சங்கள்

1.       அனுகூலஸ்ய ஸங்கல்பः –

 நன்மைக்கே மனதளவில் ஒப்புதல்

பகவானுக்கு ஏற்ற, தர்மத்துக்கு ஏற்ற, பக்திக்கு ஏற்ற செயல்களை மனதாலும், செய்கையாலும் ஏற்கும் மனநிலை.

-உதாரணம்: ஜபம், பஜனம், தர்மம், பக்தி, சேவை.

“நான் பகவானுக்கே உகந்ததைச் செய்கிறேன்” என்ற மனநிலை.

2.       ப்ரதிகூலஸ்ய வர்ஜனம் –

 தர்மத்துக்கு எதிரானதைத் தவிர்த்தல்

-பக்திக்கு விரோதமான, தர்மத்துக்கு எதிரான, மாயை சார்ந்த செயல்களை முழுமையாக விலக்குதல்.

-உதாரணம்: அகங்காரம், ஆசை, பொய், வன்மம்.

“பகவானுக்கு விரோதமானதை நான் செய்ய மாட்டேன்” என்ற உறுதி.

3.       ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ: –

 பகவான் என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை

-எந்த சூழ்நிலையிலும், பகவான் என் பாதுகாவலர் என்ற உறுதியான நம்பிக்கை.

-இது பக்தியின் ஆதார நம்பிக்கை.

“என்னை யாரும் காப்பாற்ற முடியாது; பகவானே என் காப்பாளர்”.

4.       கோப்த்ருத்த்வே வரணம் –

 பகவானை என் பாதுகாவலராக ஏற்கும் மனநிலை

-பகவானை என் வாழ்வின் வழிகாட்டி, பாதுகாவலர் என உணர்ந்து ஏற்கும் நிலை.

-இது சரணாகதியின் செயற்கூறு.

“நான் உன்னையே என் வழிகாட்டியாக ஏற்கிறேன்”. 

5.       ஆத்மநிக்ஷேப: –

தன்னை முழுமையாக பகவானிடம் ஒப்படைத்தல்

-சுயம், அகங்காரம், சொந்த விருப்பம் ஆகியவற்றை முழுமையாக விட்டு,

பகவானிடம் தன்னை ஒப்படைக்கும் நிலை.

“என் வாழ்க்கை, என் சிந்தனை, என் செயல்—

6.       கார்பண்யம் –

தாழ்மையும், தனிமையும் உணர்தல்

-தாழ்மை, தன்னம்பிக்கையின் இல்லாமை,

பகவானின் தயை இல்லாமல் நான் ஒன்றும் அல்ல என்ற உணர்வு.

“நான் ஒன்றும் இல்லை; நீயன்றி நான் எதுவும் இல்லை”.

🔱மொத்தமாக: சரணாகதி என்பது ஒரு மனநிலை, ஒரு தத்துவம், ஒரு பக்தி யோகத்தின் உச்சம்.

 இந்த ஆறு அம்சங்கள் இல்லாமல், உண்மையான சரணாகதி இல்லை.

நன்மை எனில் நான் துணிவேன் –

நாயகனுக்கே நான் ஒப்பேன்!

தீமை எனில் நான் தவிர்வேன் –

தேவர் வழியில் நான் நிற்பேன்!

பாதுகாப்பு நீயே எனில் –

பயமென்ன? என் நெஞ்சம் உறும்!

வழிகாட்டி நீயே எனில் –

வஞ்சகங்கள் எல்லாம் மறும்!

என் உயிரை உனக்கே கொடுப்பேன் –

என் உள்ளம் உனக்கே உருப்பேன்!

தாழ்மையுடன் நான் நிற்பேன் –

தந்தை என உன்னை ஏற்பேன்!

ஆறு நெறிகள், ஆறு தீபங்கள் –

ஆனந்தத்தின் வாசல் திறக்கும்!

சரணாகதி எனும் சிகரம் –

சதாசிவத்தின் சுடர் பரக்கும்!To be continued……………………………………………………………………………..

Leave a comment

Leave a comment