Written by London Swaminathan
Post No. 15,893
Date uploaded in London –20 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 60
ராமபிரான் அவதரித்த இடம் அயோத்தி.
விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.
பிரம்மா உலகைப் படைத்தபோது, விஷ்ணு வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். பிரம்மா அந்தப் பகுதியை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கித் தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்கு கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் பெயரில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில் தசரதரின் மகனாகப் பிறந்தவர் ராமர்.
முக்தி அளிக்கும் ஏழு தலங்களான அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) இவற்றில் அயோத்தியே முதன்மையானது.

லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டரில், சரயு நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் அற்புதத் தலம் அயோத்தி. அயோத்தியில் பல ராமர் கோயில்கள் இருக்கின்றன.
****
கோவில் மசூதியாகி மீண்டும் கோயிலான கதை !
ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர்பாக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் 1528ல் பாபர் மசூதி ஒன்று கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம மூர்த்திகளை அங்கே பிரதிஷ்டை செய்தார்கள். 1992ல் அங்கே இருந்த மசூதியை ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் , லால் கிருஷ்ண அத்வானி தலைமையில் இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தனர்.
அயோத்தி பற்றியும் ராம ஜென்ம பூமி பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு அத்வானி போன்ற தலைவர்கள் முன்னின்று நடத்திய ‘ரத யாத்திரை’தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
****
அனுமன்/ குரங்கு அதிசயம்
பாபர் மசூதிக்குள் இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பூட்டியிருந்த கோயிலின் கதவைப் பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.”
இது மட்டும் அல்ல, உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீ பராசரன் ராமருக்காக காலில் செருப்பு இல்லாமல் 92 வயதிலும் நின்று கொண்டு வாதாடினார். வெற்றி கண்டார்
புதிய ராமர் கோயில்

5 பிப்ரவரி 2020 அன்று அயோத்தி இராமர் கோயிலைக் கட்டும் திட்டத்தை நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 -8- 2020 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்குபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) செய்து கோவில் திறக்கப்பட்டது
புதிய கோயிலின் அமைப்பு
இது வட இந்தியக் கோவில் கட்டிடக்கலையின் நகரா பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவார். கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள்.

கோவிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளைக் கொண்டது இதன் நடுவில் உள்ள கருவறையைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் உள்ளன. . கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் . கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை இராமர் வீற்றிருக்கிறார் .
கருவறை கோயில் மற்றும் அதைச் சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் உள; சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரசுவதி தேவியின் 12 அவதாரங்கள் ஆகிய சிலைகள் இருக்க்கின்றன . கோவில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம், கல்வி மற்றும் அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக் கப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் இராம நவமி அன்று இராமர் நெற்றி மீது
மூன்று நிமிடங்கள் சூரியக் கதிர்கள் பட்டு திலகம் போல் ஒளிரும் வகையில் கோயில் கட்டப்பாட்டிருக்கிறது . திருப்பதி பாலாஜி கோவிலுக்கு குவிவது போல அயோத்தி கோவிலுக்கும் தங்க வெள்ளி நகைகள் குவிந்தவண்ணமுள்ளன.
****
QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ (Post No.12,918)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,918
Date uploaded in London – – 15 JANURARY 2024
xxxx
Quiz Serial No.92
1.ராமர் பிறந்த ஊர் அயோத்தி; அது எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையின் மேல் இருக்கிறது?
XXXX
2.ராமர் கோவில் மீது முஸ்லீம் மன்னன் பாபர் கட்டிய மசூதி அகற்றப்பட்ட பின்னர், 500 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் என்ன ?
XXXX
4.அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சிலையைச் செய்தவர் யார்?
XXXX
5.ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமை என்ன?
XXXX
6.ராம பிரான் பிறந்தது நவமி திதியில்; புதிய கோவிலில் நவமி நாட்களில் நடைபெறும் பொறியியல் அதிசயம் என்ன?
XXXX
7. ராமர் கோவில் கோபுரத்தின் உயரம் என்ன?
xxxxx
8.ராமர் கோவிலில் எத்தனை கதவுகள் ?
XXXX
9.ராமர் கோவில் மணி எவ்வளவு பெரியது?
xxxx
10.ராமர் கோவில் த்வஜ ஸ்தம்பம் எத்தனை அடி உயரம் உடையது ?
xxxx
BONUS QUESTIONS
11. ராம பிரானின் வைர நெக்லஸ் (கழுத்துக்கு மாலை) எவ்வளவு பெரியது?
xxxx
12.சீதா தேவி பிறந்த ஜனக்பூர் நேபாளத்தில் உள்ளது. அங்குள்ள கோவிலும் மக்களும் அனுப்பும் பரிசுகள் என்ன?
xxxx
13.உலகிலேயே பெரிய ஊது பத்தியை / வர்த்தியை யார் அயோத்திக்கு அனுப்புகின்றனர் ?
xxxx
14.ராமர் கோவில் விளக்குகளில் மிகப்பெரியது எது?
xxxx

விடைகள்
1.உத்தர பிரதேசத்தில் சரயூ நதிக்கரையில் அயோத்தி நகரம் இருக்கிறது .
XXXX
2.அயோத்தி நகர ராமர் கோவில் கும்பாபிஷேகம் -ஜனவரி 22, 2024.
XXXX
3.அயோத்தி நகருக்குள்ள இன்னொரு பெயர் சாகேதம்; முஸ்லீம்கள் சூட்டிய பெயர் பைசாபாத்.
XXXX
4.மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிலை தான் அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட உள்ளது .இந்த சிலையின் உயரம் 51 அங்குலம்;இதன் எடை என்பது 1.5 டன் ;. ராமரின் தலையில் கிரீடம் இருக்கும்.
xxxx
5. ராமர், கிருஷ்ணர், வியாசர், திரெளபதி ஆகியோர் கருப்பு நிறத் தோல் உடைய கருப்பர்கள் ; வியாசர் தவிர மற்ற மூவரும் பேரழகு வாய்ந்தவர்கள்; ஆரிய- திராவிட வாதம் பேசிய அரை வேக்காடுகளுக்கு இவர்களுடைய நிறம் செமை அடி கொடுக்கிறது.
xxxx
6.நவமி நாட்களில் ராம பிரானின் முகத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம் லென்ஸ்கள் மூலம் வடிவமைத்துள்ளனர் .ராமர் ஸூரிய குல / ரவி குல திலகம் என்பதை இது காட்டும்..
.XXXX
7.கோபுர உயரம் 161 அடி. கோவிலின் நீள அகலம் 380 அடிக்கு 250 அடிகள் ஆகும் (250 feet wide, 380 feet long and 161 feet (49 m) high கோவிலின் பரப்பளவு 2.77 ஏக்கர் ; கோவில் வளாகத்தின் பரப்பளவு 71 ஏக்கர் .
XXXX
8.ராமர் கோவிலில் 46 கதவுகள் இருக்கின்றன. அவைகளை 100 கிலோ தங்கத்தைக் கொண்டு முலாம் பூசுகின்றனர் .ராமர் கருவறையில் 12 அடி உயரத்திலும் 8 அடி அகலத்திலும் தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்
XXXXX
9.உத்தர பிரதேச மாநிலம் ஜலேசரில் மிக பிரமாண்டமான மணி ஒன்றை எட்டு வகையிலான உலோகத்தால் செய்துள்ளனர்.அந்த மணியின் எடை 2100 கிலோ ! இந்த மணியை தயார் செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது.
XXXX
10. இந்தக் கொடி மரத்தின் (த்வஜ ஸ்தம்பம்) உயரம் 44 அடி. அதன் எ டை 5500 கிலோ. பித்தளையால் ஆனது . குஜராத்திலுள்ள ஆமதாபாத் நிறுவனம் இதை உருவாக்கியது.
xxxxx
BONUS QUESTIONS
11.சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளியை கொண்டு ராமர் சிலைக்கு நெக்லஸை உருவாக்கியுள்ளார். 40 கைவினைஞர்கள் 35 நாட்களில் இதைச் செய்து முடித்தார்கள்.
xxxx
12.ஜனகபுரி மக்களும் சீதை கோவிலும் 2 லாரிகள் நிறைய 3000 பரிசுகளை அயோத்திக்கு அனுப்பினர் . அவை வெள்ளிப் பாத்திரங்கள் , உலர்ந்த பழங்கள் , துணி மணிகள் ஆகும். இலங்கையில் சீதையை ராவணன், அசோக வனத்தில் சிறை வைத்தான். அங்கிருந்து புனித பாறை ஒன்றை இலங்கை நாடு அனுப்பிவைத்துள்ளது .
xxxx xxxx
13.குஜராத் வடோதரா நகரிலுள்ள நிறுவனம் 108 அடி நீளமுள்ள ஊது பத்தியை / வர்த்தியை அயோத்திக்கு அனுப்பியிருக்கிறது. இதன் குறுக்களவு மூன்றரை அடி; எடை 3610 கிலோ. இது 50 கிலோமீட்டர் தொலைவுக்கு வாசனையைப் பரப்பும் .
xxxx
14.வதோதராவை சேர்ந்த அரவிந்த் பாய் மங்கள் பாய் பட்டேல் என்ற விவசாயி 1100 கிலோ எடையுள்ள ராட்சத விளக்கை வடிவமைத்துள்ளார். பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கு 9.25 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்டது . இதை ராமர் கோவிலுக்கு அனுப்பியுள்ளார்.
****
அயோத்தி அதிசயங்கள்
1.ராம நவமி அன்று அயோத்தி ராமர் விக்ரகம் மீது சூரிய பகவான் (சூரிய கிரணங்கள்) பொட்டு / திலகம் வைத்ததாகும் . ஆ னால் இது நவீன கால, விஞ்ஞானிகள் உருவாக்கிய அதிசயம். தமிழ் நாட்டிலோ 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்துக்கள் கட்டிய கோவிலில் சூரிய ஒளி, சந்நிதிக்குள் புகுந்து விக்கிரகத்தை அலங்கரிப்பதை, ஆராதிப்பதைக் காண்கிறோம் அப்போது நவீன கால கருவிகளே இல்லாமல் இந்து சமய சிற்பிகள் அந்த அதிசயத்தைச் செய்துகாட்டினார்கள்.. இந்து கட்டிடக் கலையின் உன்னத நிலைக்கு அது ஒரு சான்று.
2.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண ஓவியங்களை வரைந்து புஸ்தகம் வெளியிட்டனர். அந்த 70 படங்களை நான் இரு முறை இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இதைவிட அதிசயமான தங்கம்- நீலக்கல் (GOLD- LAPIZ LAZULI) பதித்த அதிசய ராமாயணத்தைக் காசி மன்னர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கினார். அதன் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த தங்க ராமாயணத்தை பக்கம் பக்கமாகப் பிரித்து ஏலம் விட்டுவந்தனர். தகவலறிந்த நல்லஎண்ணம் படைத்தோர் கிடைத்த பக்கங்களை மீட்டு பெங்களூர் மியூசியத்தில் வைத்துள்ளனர் .
3.இதனிடையே ராம பக்தர்கள் இருவர் , வட இந்தியா முழுதும் வீடுதோறும் முழங்கும் துளஸிதாஸ் ராமாயணத்தை தங்கத் தகடுகளில் எழுதி ராமர் பாதங்களில் அர்ப்பணித்துவிட்டனர் .
இதோ விவரங்கள்:–
தங்கத் தகடுகளில் ராம சரித மனஸ் (துளசிதாஸ் ராமாயணம்)
முன்னாள் ஐ. ஏ .எஸ் . அதிகாரி சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன் சிறந்த ராம பக்தர். அவரும் அவருடைய மனைவி ஸரஸ்வதியும் (an ex-IAS officer, Subramanian Lakshminarayanan and his wife Saraswathy) இந்த பொக்கிஷத்தை ராமர் காலில் சமர்ப்பித்தனர் .
இதன் மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் ; இந்தப் புஸ்தகத்தில் எடை 151 கிலோ.மொத்தமுள்ள 10,902 பாடல்களையும் தங்க எழுத்துக்களில் பொறித்துள்ளனர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் லக்ஷ்மி நாராயணன், தனது வாழ்நாளில் சேகரித்த பணம் அனைத்தையும் இதில் செலவிட்டுவிட்டார் ; வரலாற்றில் அலையாத இடமும் பெற்றுவிட்டார் ; அவரது மனைவி ஸரஸ்வதி இதற்கு உறுதுணையாக நின்றார்.
ராமசரித மனஸ் புஸ்தகத்தில் 480 முதல் 500 தங்கப் பக்கங்கள் இருக்கின்றன. இதைத் தயாரிப்பதில் 24 காரட் தங்கமும், தாமிரமும் பயன்படுத்தப் பட்டது. புஸ்தகம் செய்யும் பணியை அந்தத் தம்பதியினர் சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு நகைக்கடைஇடம் ஒப்படைத்திருந்தனர் .
தமிழ் நாட்டில் கம்ப ராமாயணம் புகழ்பெற்ற மாதிரி, வட இந்தியா முழுதும் ராமா சரிதா மனாஸ் என்ற பெயரில் துளசிதாஸ் கோசுவாமி எழுதிய ராமாயணம் புகழ்பெற்றதாகும். இதை அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவந்தி (பேச்சு வழக்கு வட்டார இந்தி) மொழியில் எழுதினார்
இதிலும் ஆறு காண்டங்கள் — பால அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, உத்தர காண்டங்கள் இருக்கின்றன. புஸ்தகத்தின் மொத்த எடையில் 140 கிலோ தாமிரமும் சுமார் ஏழு கிலோ தங்கமும் அடக்கம்.எழுத்துக்கள் 24 காரட் தங்கத்தல் இருக்கும்.
XXXX
சூரிய திலகம்
ராம நவமி விழாவின் முக்கிய நிகழ்வாக, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.
அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது ‘டேப்’ TAB மூலம் கண்டு களித்தார். பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராம நவமி கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான சூரிய அபிஷேக மகோத்சவம் இன்று (17-4-2024) நடைபெற்றது. நண்பகல் 12.01 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பால ராமரின் நெற்றியில் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு சூரிய ஒளிக்கதிர் விழுந்து திலகமிட்டது. நெற்றித் திலகத்தின் அளவு 58 மி.மீ. அளவுக்கு இருந்தது. பக்தர்கள் தெளிவாக காணும் வகையில் நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் சூரிய ஒளி நேரடியாக நுழைய வழி இல்லை. இதனால், கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய ஒரு விரிவான வடிவமைப்பு மூலம் பால ராமராமரின் நெற்றியில் சரியாக விழும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வானியற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளனர
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக விழச்செய்யும் வகையில் ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
****
பழைய அயோத்தி
யோகி பார்த்தசாரதி யோகி சிங்காரம்மா தம்பதியால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அம்மாஜி மந்திர் என்ற கோவில்தான் திவ்ய தேசக் கோவிலாகக் கருதப்படுகிறது. அம்மாஜி என்பது சிங்காரம்மாவைக் குறிப்பிடுகிறது.
அம்மாஜி மந்திர்
ராமஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமர் எழுந்தருளி இருக்கிறார்.
கர்ப்பகிருஹத்துக்கு இடப்புறமாக இன்னொரு சந்நிதியில் ரங்கநாதர், ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.
மூலவர்: ஸ்ரீ ராமர், சக்ரவர்த்தித்த திருமகன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார்: சீதாப் பிராட்டி
விமானம்: புஷ்பகலா விமானம்
புஷ்கரணி: பரமபத புஷ்கரணி, சரயு, நாகேஸ்வர தீர்த்தம், வைதேஹ்ய தீர்த்தம், சூரிய தீர்த்தம், ரத தீர்த்தம்.
பிரத்யக்ஷம் (காட்சி பெற்றவர்கள்): பரதன், தேவர்கள், முனிவர்கள்
அயோத்தி ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் – 6 பாசுரங்கள்
குலசேகராழ்வார் – 4 பாசுரங்கள்
தொண்டரடிப் பொடியாழ்வார் – 1 பாசுரம்
திருமங்கை ஆழ்வார் – 1 பாசுரம்
நம்மாழ்வார் – 1 பாசுரம்
மொத்தம் 13 பாசுரங்கள்
பாசுரங்கள் இதோ:
முதல் ஆயிரம்- -பெரியாழ்வார் திருமொழி
உந்தி பறத்தல்
6. முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (311)
7. காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
தூ மணிவண்ணனைப் பாடிப் பற (312)
8. தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (313)
10. காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (315)
***
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம்
4. வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (320)
8. மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (324)
****
கண்டம் என்னும் திருப்பதி
9. வட திசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (398)
முதல் ஆயிரம் – குலசேகராழ்வார் -பெருமாள் திருமொழி
தாலாட்டு
6. சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (723)
7. ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (724)
***
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்
1.740 அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (740)
8. அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (747)
****
முதல் ஆயிரம் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி
4. மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (919)
இரண்டாம் ஆயிரம் -திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
குழமணிதூரம்
8. கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (1874)
****
நான்காம் ஆயிரம் -நம்மாழ்வார் -திருவாய் மொழி
ஏழாம் பத்து
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்
1. கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488)
—Subham—
Tags-
Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-60; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , அயோத்தி, ராமர் கோவில்