Written by London Swaminathan
Post No. 15,903
Date uploaded in London –22 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 3 (English version posted separately with meaning in English)
21
த்வம் ஸ்த்ரீ த்வம் புமானசி த்வம் குமார
உத வா குமாரீ
த்வம் ஜீர்ணோ தண்டேன வம்சஸி
த்வம் ஜாதோ பவஸி விச்வதோ முக :
–ச்வேதாச்வரோபநிஷத்
நீதான் பெண், ஆண் , குமாரன், குமாரி , தடி பிடித்து நடுங்கும் கிழவன் ; நீ விஸ்வரூபம் உடையவன் .
त्वं स्त्री त्वं पुमानसि त्वं कुमार उत वा कुमारी।
त्वं जीर्णो दण्डेन वञ्चसि त्वं जातो भवसि विश्वतोमुखः॥
tvaṁ strī tvaṁ pumānasi tvaṁ kumāra uta vā kumārī |
tvaṁ jīrṇo daṇḍena vañcasi tvaṁ jāto bhavasi viśvatomukhaḥ ||
****
22
யதோ வாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ந பிபேதி கதா சனேதி
-தைத்ரீயோபநிஷத் 2-4
எந்தப் பிரம்மத்தை அடையப்பெறாது வாக்கம் மனதும் பின்வாங்குகிறதோ , அந்தப் பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிகிற வித்வான் எதற்கும் அஞ்சுவதில்லை ; இது உண்மை .
यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चनेति ॥ १ ॥ तैत्तिरीयोपनिषद्ब्रह्मानन्दवल्लीनवमोऽनुवाकः
yato vāco nivartante | aprāpya manasā saha| ānandaṁ brahmaṇo vidvān| na bibheti kutaścaneti |
****
அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம்
பஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமானாம் ஸரூபா:
அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ (அ)னுசேதே
ஜஹாத்யேனாம் புக்தபோகாமஜோ(அ)ன்ய:
—-ச்வேதாச்வரோபநிஷத் 4-5
பிறவாத பிரக்ருதியானவன் சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறம் உடைவனாக இருக்கிறான். தன்னைப் போல பல வடிவங்களை அவன் உண்டு பண்ணுகிறான் . பிறவாத ஒரு ஜீவன் அவளில் கட்டுண்டு அவளைச் சார்ந்து கிடக்கிறான்; பிறவாத இன்னும் ஒரு ஜீவன்அனுபவித்துப் பார்த்துவிட்டு அவளைத் துறந்து விடுகிறான்.
ajām ekāṁ lohita-śukla-kṛṣṇāṁ bahvīḥ prajāḥ sṛjamānāṁ sarūpāḥ |
ajo hy eko juṣamāṇo ’nuśete jahāty enāṁ bhukta-bhogām ajo ’nyaḥ || [1]
–Shvetashvatara Upanishad (Verse 4.5)
अजाम् एकाम् लोहितशुक्लकृष्णम् बह्वीः प्रजाः सृजमानां सरूपाः
अजो ह्येको जुषमाणोनुशेते जहात्येनां भुक्तभोगाम् अजोन्यः
****
24
நைவ ஸ்த்ரீ ந புமானேஷ ந சைவாயம் நபும்ஸக:
யத்யத்சரீரமாதத்தே தேன தேன ஸ யுஜ்யதே
— ச்வேதாச்வரோபநிஷத் 5-10
ஈசன் ஆணல்ல, பெண்ணல்ல அலியுமல்லன்; எந்தச் சரீரத்தை அவர் எடுக்கிறாரோ , அந்தச் சரீரமயமாக அவர் மிளிர்கிறார்.
naiva strī na pumāneṣa na caivāyaṃ napuṃsakaḥ |
yadyćcharīramādatte tene tene sa yujyate ||Shvetashvatara Upanishad (Chapter 5, Verse 10)
****
25
ஓம் மதுவாதா ரிதாயதே
மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ்ஸந்த்வோஷதீ:
மது நக்தமுதோஷஸி
மதுமத் பார்த்திவக்ம் ரஜ:
மது த்யௌரஸ்து ந: பிதா
மதுமான் நோ வனஸ்பதிர்
மதுமாகம் அஸ்து ஸூர்ய:
மாத்வீர் காவோ பவந்து ந:
–மஹா நாராயண உபநிஷத் 39-4
பிராமணர்கள் அமாவாசை தர்ப்பணத்திலும் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
காற்று இனிது அடிக்கட்டும் .நதிகள் இனியவைகளாக ஓடட்டும். மூலிகைகள் நமக்கு இன்பம் தருபவைகள் ஆகுக. இரவிலும் பகலிலும் இனிமையே நிறைந்திருக்கட்டும் ; நிலத்தின் மண்ணின் இன்பம் பொலிக . நம் தந்தையாகிய வானுலகில் இன்பம் ஓங்குக ; கனி கொடுக்கும் மரங்களில் இன்பம் ததும்புக.சூரியன் இன்பத்தைத் தோற்றுவிப்பானாக. பசுக்களிடத்திலிருந்து நமக்கு இன்பம் சுரப்பதாகுக .
मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः ।
माध्वीर्नः सन्त्वोषधीः ॥
मधु नक्तमुतोषसो मधुमत् पार्थिवं रजः ।
मधु द्यौरस्तु नः पिता ॥
मधुमान्नो वनस्पतिर्मधुमानस्तु सूर्यः ।
माध्वीर्गावो भवन्तु नः ॥
–Rig Veda 1.90.6
[oṃ madhu vātā ṛtāyate madhu kṣaranti sindhavaḥ | mādhvīrnaḥ santvoṣadhīḥ | madhu
naktamutoṣaso madhumat pārthivaṃ rajaḥ | madhu dyaurastu naḥ pitā | madhumānno
vanaspatirmadhumāṃ astu sūryaḥ | mādhvīrgāvo bhavantu naḥ |
To be continued………………..
Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part 3, Tamil Upanishad