புறநானூறு புள்ளி விவரங்கள் ! -1(Post No.15,911)

Written by London Swaminathan

Post No. 15,911

Date uploaded in London –24 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க இலக்கியத்தில் பதினெட்டு மேற்கணக்கு நூல்கள் உள. அவைகளை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று கூறுவர். எட்டுத் தொகையில் மிக முக்கியமான நூல் புறநானூறு ; அது கிடைத்திராவிடில் பழங்காலத் தமிழ் நாட்டு மக்களின் வீரமும் கொடையும், பெரிய அரசர்களின் வாழ்வும் தெரியாமல் மறைந்து போயிருக்கும்  . புறநானூறு நூல் பற்றி அறிஞர்கள் உ.வே.சா, கைலாசபதி , கமில் சுவெலபில் தரும் தகவல்  இதோ :

முதல் பாடல் கடவுள் வாழ்த்து – சிவ பெருமானின் புகழ் நிறைந்தது   , பாரதம் பாடிய பெருந்தேவனார் , அதாவது மிஸ்டர் மஹாதேவன் –பாடியது .

****

இந்த நூல் ஹிந்து தர்மத்தின் நான்கு தூண்களான தர்ம, அர்த்த, காம , மோக்ஷம் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது . திருக்குறளை தர்ம அர்த்த காமம் என்று வள்ளுவன் பிரித்தது போல இதுவும் முப்பால் அடங்கியது .

இது பற்றி உ வே சாமிநாத அய்யர் கூறுவதாவது ,

இந்நூற் பிரதி ஒன்றின் தொடக்கத்தில் அற நிலை என்ற குறிப்பு இருந்ததைக்கொண்டு , இந்நூல் அற நிலை, பொருள் நிலை, இன்ப நிலை என முப்பெரும் பகுதியுடையதாக ஊகிக்கலாம் .

— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.

****

வெள்ளைக்காரனுக்கு வேட்டு

சில திராவிட அரை வேக்காடுகளும் , தத்துப்பித்து நடிகர் நடிகையரும் வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று அவ்வப்போது உளறுவதை பத்திரிகைகளில் காணலாம் . இதற்கு வேட்டு வைக்கும் பாடல்கள்  2, 6 ,17,  67, முதலிய பாடல்கள் ஆகும்; ஏக பாரதம் என்ற கருத்து அவைகளில் உள.

இன்னும் சில திராவிட அசடுகள் ஆரிய- திராவிடம் என்று பேசி தமிழர்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம்;  முதல் பாடலிலும் கடைசி பாடலிலும் நால் வேதமும் வேள்வியும் புகழப்படுகிறது .

***

நச்சினார்க்கினியர் மறுப்பு

மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் பெயர் நச்சினார்க்கினியர்; உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று புலவர்கள் போற்றிய பிராமணன் அவன்.

ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் திணை, துறை, பாடப்பட்டோர் , பாடினோர், பாடப்பெற்ற சூழ்நிலை , இவற்றை விளக்கும் குறிப்புகளும் உள்ளன . இவற்றுள் தினை, துறை, பற்றிய குறிப்புகள் அவ்வப்பாட்டிற்குப் பொருத்தமாக அமைந்தனவல்ல  என்று நச்சினார்க்கினியர் கருதுகிறார் (தொல்.பொருள். புறத்.35) .அன்றியும், புறத்திணை இயல் உரையில், இப்புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வேறு திணை,  துறைகளுக்கு உதாரணமாகக் காட்டியதோடு புறநானூற்றுக் குறிப்பை மறுத்தும் உள்ளனர். (சூ 5, 8, 1 உரை). ஆனால் பாடினோர் முதலியனாரைப்பற்றிய  குறிப்புகள் மறுக்கப்படாமையால் , அவை பழைய வரலாற்றைத் தெரிந்து எழுதிய சிறந்த குறிப்புகளாகவே கருதத்தக்கன.

— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.

***

பழைய உரைகள் கிடைக்கவில்லை!

இந்நூலின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது .  இவ் உரையாசிரியர் , சில பாடல்களுக்கு எழுதிய விசேடக்குறிப்புகளிலிருந்து , இவ்வுரைக்கும் முந்திய உரை ஒன்று  இந்நூலுக்கு இருக்கவேண்டும் என்றும் தெரிய வருகிறது .

***

 கிடைக்காத பாடல்கள்

ஆராய்ச்சியாளரின் ஒரு சிலர் கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர் ;இவற்றுள் 267, 268 பாடல்கள் முற்றும் மறைந்து போயின; இப்பாடல்களுக்குரிய பழைய உரைகள் கூடக்கிடைக்கவில்லை . 266 ஆம் பாடலுக்குப் பிற்பகுதி பாடல்களில் பலவற்றின் அடி  , சீர் , முதலியனவும்  சிதைவுபட்டுள்ளன.

சிதைந்த பாடல்கள் -44;

பாடிய புலவர்கள் – 157  பேர் ;

பெண் புலவர்கள் -15;

அரசர்/புலவர் பாடல்கள் -14;

***

கைலாசபதி கருத்து

மிகப்பழைய பாடல்கள்- 248-357;

121 பாடல்களின்  கொளு -வில் முழு விவரம் இல்லாததால் பாடப்பட்டோன் யார் என்று தெரியவில்லை;

புகழும் பாடல்கள்-141;

இரங்கல் / அழுகைப் பாடல்கள்- 43;;

18 சேர மன்னர்கள் பற்றி 27 பாடல்கள்;

13 சோழ மன்னர்கள் பற்றி 74 பாடல்கள்;

12 பாண்டிய மன்னர்கள் பற்றி 37 பாடல்கள்;

48 குறுநில, வேளிர் தலைவர்கள் பற்றி 141 பாடல்கள்;

காரி, பாரி, அஞ்சி, பேகன்  ஒவ்வொருவருக்கும் 4 பாடல்கள்;

Tags- புறநானூறு ,புள்ளி விவரங்கள்! -1

To be continued…………………….

Leave a comment

Leave a comment