WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,942
Date uploaded in London – 3 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 21
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமன் மேலும் சொல்கிறான் “எல்லோரும் என்னைப் பார பக்ஷம் பார்க்காதவன் என்று சொல்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்குக் காட்டாத பரிவு அடியார்களுக்குக் காட்டுகிறவன் நான்.இவ்விஷயத்தில் நான் பாரபட்சம் பார்ப்பவன். ஏனென்றால் அடியார்கள் என்னையே சரணடைந்தவர்கள். மற்றவர்கள் உதவியை நாடாதவர்கள்.. ஆஞ்சநேயா! எவன் அண்ட சராசரங்களை ஆண்டவனாகவும், தன்னை அவைகளின் சேவனாகவும் கருதி நெறி பிறழாமல் தொண்டாற்றி வருகின்றானோ அவனே என் சேவகன் என்பதைத் தெரிந்து கொள்”.
“நீயும் “நான் இராம சேவகன். அசையா அசையும் பொருட்கள் நிறைந்த இந்த உலகம் முழுவதும் பகவத் ஸ்வரூபத்துடன் எனது உருவமாக விளங்குகிறது என்று நினைக்கிறாய். என்னை அடைந்த பக்தர்களிடமும் சராசர மயமான இந்த உலகத்தில் நீ எல்லோருடனும் கருணையுடன் இருக்கிறாய். ஆகையால் ஆஞ்சநேயா! நீ வானரனாக இருந்தபோதிலும் என் ஸ்வரூபம்தான். அதனால் நான் உன்னை நிராகரித்துவிட முடியாது” என்று கூறினார் பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆஞ்சநேயர் பெரு மகிழ்ச்சி உற்றார். துக்கம் அவரை விட்டு விலகியது.
இராமன் தன்னை समदरसी என்று சொல்கிறார். அதாவது பாரபக்ஷம் பார்க்காதவன் என்று சொல்கிறான். இதற்கு சமமான சுலோகம் ஒன்று பகவத் கீதையில் உள்ளது.
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय: |
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् || 29
நான் எல்லா உயிர்களிடத்திலும் சமமாக இருக்கிறேன்.அனால் யாரிடமும் வெறுப்பைக் காட்டுவதில்லை. யாரிடமும் பாரபட்சமாக இருப்பதில்லை. ஆனால் என்னை அன்புடன் வழிபடும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள்.நான் அவர்களில் வசிக்கிறேன்.
கீதையின் கண்ணனின் கூற்று
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय: |
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् || 29||
நான் எல்லா உயிர்களிடமும் சமமானவன்.
எனக்கு யாரும் வெறுப்புக்குரியவர்களாகவோ,
யாரும் மிகவும் விருப்பமானவர்களாகவோ இல்லை.
ஆனால், யார் என்னை பக்தியுடன் வழிபடுகிறார்களோ,
அவர்கள் என்னுள் இருக்கிறார்கள்,
நானும் அவர்களுள் இருக்கிறேன்.
எல்லா உயிரும் எனக்கே சமம் –
எவரும் எனக்குப் பகை இல்லை!
யாரும் எனக்குப் பிரியம் இல்லை –
பக்தி கொண்டவனே எனக்குள் வாழ்கிறான்!
பக்தி எனும் தீபம் எரிந்தவுடன் –
பகவான் நெஞ்சத்தில் புகுந்துவிடுவான்!
பக்தன் உள்ளத்தில் பரந்தவுடன் –
பரமன் உள்ளத்தில் நிழலாகுவான்!
சமம் என்பது பார்வையின் நெறி –
பக்தி என்பது பாசத்தின் நெறி!
பகவான் எல்லோரிடமும் சமம் –
ஆனால் பக்தனிடம் பாசம்!
நீ என்னை நேசித்தால் –
நான் உன்னுள் வாழ்வேன்!
நீ என்னை உணர்ந்தால் –
நான் உன்னில் ஒளிர்வேன்!
பாகவதத்தில் இராமன் சொல்வதாவது
नाहमात्मानमाशासे मद्भक्तै: साधुभिर्विना ।
श्रियं चात्यन्तिकीं ब्रह्मन् येषां गतिरहं परा ॥ ६४ ॥
நான் என்னைத் தனியாக விரும்புவதில்லை,
என் பக்தர்களும் சத்புருஷர்களும் இல்லாமல்.
அவர்கள், யாருடைய இறுதி இலக்காக நான் இருக்கிறேனோ,
அவர்களுடன் மட்டுமே நான் பரம சிரியை (மிக உயர்ந்த செல்வம்) அனுபவிக்க விரும்புகிறேன்.
O best of the brāhmaṇas, without saintly persons for whom I am the only destination, I do not desire to enjoy My transcendental bliss and My supreme opulences.
The Supreme Personality of Godhead is self-sufficient, but to enjoy His transcendental bliss He requires the cooperation of His devotees. In Vṛndāvana, for example, although Lord Kṛṣṇa is full in Himself, He wants the cooperation of His devotees like the cowherd boys and the gopīs to increase His transcendental bliss. Such pure devotees, who can increase the pleasure potency of the Supreme Personality of Godhead, are certainly most dear to Him. Not only does the Supreme Personality of Godhead enjoy the company of His devotees, but because He is unlimited He wants to increase His devotees unlimitedly. Thus, He descends to the material world to induce the nondevotees and rebellious living entities to return home, back to Godhead. He requests them to surrender unto Him because, unlimited as He is, He wants to increase His devotees unlimitedly. The Kṛṣṇa consciousness movement is an attempt to increase the number of pure devotees of the Supreme Lord more and more. It is certain that a devotee who helps in this endeavor to satisfy the Supreme Personality of Godhead becomes indirectly a controller of the Supreme Lord. Although the Supreme Lord is full in six opulences, He does not feel transcendental bliss without His devotees. An example that may be cited in this regard is that if a very rich man does not have sons in a family he does not feel happiness. Indeed, sometimes a rich man adopts a son to complete his happiness. The science of transcendental bliss is known to the pure devotee. Therefore the pure devotee is always engaged in increasing the transcendental happiness of the Lord.
இதை இராம சரித மானசிலும்(சுந்தர காண்டம்) இராமன் சொல்லுவதாக துளசி தாசர் சொல்கிறார்
जननी जनक बंधु सुत दारा । तनु धनु भवन सुहृदु परिवारा।
सब कर ममता ताग बटोरी । मम पद मनहिं बाँधि बर डोरी।
समदरसी इच्छा कछु नाहीं। हरष सोक भय नहिं मन माहीं॥3॥
अस सज्जन मम उर बस कैसें। लोभी हृदयँ बसइ धनु जैसें॥
तुम्ह सारिखे संत प्रिय मोरें। धरउँ देह नहिं आन निहोरें॥4॥
தாய் தந்தை, பிள்ளை, துணைவி –
தானும், வீடும், செல்வமும்!
உறவுகள் எல்லாம் விலக்கினேன் –
உன் பாதத்தில் மனம் பிணைத்தேன்!
சமம் எனும் பார்வை எனக்குள் –
சஞ்சலமில்லை, ஆசை இல்லை!
சோகம், சந்தோஷம், பயமில்லை –
சதாசிவம் எனும் நிலைதான்!
பக்தன் எனில் உன் உள்ளத்தில் –
பரமன் எனில் பக்தன் உள்ளத்தில்!
ஆசை கொண்டவன் செல்வத்தில் வாழ்வான் –
ஆசை இல்லாதவன் உன்னில் வாழ்வான்!
இராமன் தனது பக்தர்களுக்குச் சொல்லிகொள்வது “நீ தாய் தந்தை மனைவி குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்து, மோகத்தை விட்டு உனது மனத்தை எனது பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடு. பேராசை கொண்டவனின் இதயத்தில் உள்ள செல்வப்பற்று போல அத்தகைய பக்தர்கள் எனது இதயத்தில் தங்கிவிடுகின்றனர். அத்தகையவர்கள் மட்டுமே எனக்குப் பிரியமானவர்கள். நசன் எவருடைய தயவுக்கும் கட்டுப்பட்டு அவதரிப்பதில்லை”
** தொடரும்