வெற்றிலை போடுவது எப்படி ? (Post No.15,952)

Written by London Swaminathan

Post No. 15,952

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

படித்ததில் பிடித்தது ; சென்னை திருவல்லிக்கேணி பி, நாகராஜன் எழுதிய ஒரு  பேப்பர் கட்டிங் வைத்திருந்தேன்; அதை த் தூக்கிப்போடுவதற்கு முன்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

சாப்பிட்ட பிறகு ஆசமனம் செய்து தாம்பூலம் எடுத்துக் கொள்ளவேண்டும் ; இரண்டு பாக்குகளி எப்போதும் போட்டுக்கொள்ளக்கூடாது ; இதற்கு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம் .

வெற்றிலையின் நுனி, நரம்பு, காம்புகளை  நீக்கி சுண்ணாம்பு தடவி உபயோகிக்கவேண்டும். சுண்ணாம்பு  வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது .

ஒரு பாக்கு ஆரோ க்கியமும் சுகமும் தரும்;

இரண்டு பாக்கு கள் பயனற்றதாகச் செய்யும்;

மூன்றும் அதைவிட எண்ணிக்கையில் அதிகமும் எடுக்கும் பாக்குகள் சிறந்தது.

 வெற்றிலையின் நுனியினால் வியாதி உண்டாகும்; காம்பினால் பாவம் கிட்டும்; கிழிந்த துண்டானது ஆயுளைக்குறைக்கும்; நரம்பு புத்தியை அழிக்கும்; அதனால் நுனி, காம்பு, நரம்பு, துண்டு  வெற்றிலையை விட்டுவிட்டு அறிவாளிகள் தாம்பூலம் உட்கொள்கிறார்கள் .

இதோ சம்ஸ்க்ருத ஸ்லோக ஆதாரம்

தாம்பூல க்ரஹணம்

ஸுபூகம் ஸுபத்ரம்   ச சூர்யேண ஸமன்விதம்

அத த்வாத்விஜ   தேவ்பய :  தாம்பூலம் வர்ஜயேத் த்விஜ:

ஏக பூகம் ஸுகாரோக்யம் த்விபூகம் நிஷ்பலம்  பவேத்

அதி ஸ்ரோஷ்டம்     த்ரிபூகம் ச அதிகம்  சைவ துஷ்யதி

பர்ணமூலே பவேத் வியாதி : பர்ணாக்ரே பா பஸம் பவ:

சூர்ணபர்ணம் ஹரேதாயு:  சிராபுத்தி  வினாஸனீ

தஸ்மாதக்ரம் சிராம் சைவ  விஷே ஷத :

சூர்ணபர்ணம்  வர்ஜயித்வா தாம்பூலம் காததாத் புத: 

இதி வசிஷ்ட:

–subham—

Tags- வெற்றிலை, போடுவது எப்படி?, தாம்பூலம், பாக்கு, சுண்ணாம்பு

Leave a comment

Leave a comment