புத்த மத பாம்பாட்டியும் இந்துமத பாம்பாட்டியும் ! (Post.15,953)

Written by London Swaminathan

Post No. 15,953

Date uploaded in London – 6 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PICTURE OF BUDDHIST MONUMENT.

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி சம்ஸ்க்ருத மொழியின் புகழைப் பரப்பிய பாணினி பஞ்சாப்பில் உள்ள கபிஸ்தலம் பற்றிச் சொன்னார்; தமிழ் நாட்டிலும் ஒரு கபிஸ்தலம் உள்ளது ; வியப்பான ஒற்றுமை !

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் அத்ரிபிருகு, குத்ச, வசிஷ்ட, கெளதம, காஸ்யப , ஆங்கீரஸ ரிஷிகளின் பெயர்களை சொல்லி வணக்கம் செலுத்துவர்; இதே வரிசையில் அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அஷ்டாத்யாயி நூலில் எழுதியுள்ளார் ; இதுவும் வியப்பான ஒற்றுமை !

இப்போது குரங்குகளையும்  பாம்புகளையும் பிடித்து வந்து தெருத்தெருவாகச் சென்று வேடிக்கைக் காட்டும் சிற்பத்திலும் வியப்பான ஒற்றுமை தெரிய வந்துள்ளது .

மிகவும் புகழ்பெற்ற மதுரை டிரான்ஸ்போர்ட் கம்பெனி T V S  ஆண்டுதோறும் வெளியிடும்  டயரி,  காலண்டர்களில் ஒன்றினை  50 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்தேன்; இப்போது அதிலுள்ள படங்களை நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டு தூக்கி எறிந்து விட்டேன்  . அதில் புத்த மத சிற்பத்தில் குரங்கினையும் பாம்பினையும் கொண்டுவந்து வேடிக்கை காட்டும் படம் இருந்தது; அதைத்  தமிழ் நாட்டின் புகழ் பெற்ற ஆன்மீக ஓவியர் சில்பி வெளியிட்ட புஸ்தகத்தில் பார்த்தது திடீரென்று நினைவுக்கு வந்தது ; அதிலும் வியப்பான ஒற்றுமை! ஆனால் இரண்டு சிற்பத்துக்கும் இடையேயுள்ள கால இடைவெளி சுமார் 1000 ஆண்டுகள்!  தூரமு ம் அதிகம் ; யார் யாரைப் பார்த்து காப்பி அடித்தார்கள் என்று ஆராயத்  தேவை இல்லை; ஏனெனில் இந்தியா முழுதும் ஒரே மாதிரி இதிஹாஸப் புராணக் கதைகளுடன் நடனம், பாட்டு, கலைகள் இருப்பதைக் காண்கிறோம். அதே போல இதிலும் ஒற்றுமை !

புத்தமத சிற்பம் ஆந்திரத்தில் அமராவதியிலுள்ள 1800 ஆண்டுப் பழமையான சிற்பம் ஆகும்.

ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் உள்ள சிற்பம் சுமார் 800 அல்லது 600 ஆண்டுப் பழமை உடையதாக இருக்கலாம்  ஆயினும் இரண்டு பாபாட்டியும் ஒரே காட்சியைக் காட்டுகின்றனர் !

FROM SRI VAIKUNDAM IN TAMIL NADU.

–subham—

Tags- புத்த மத பாம்பாட்டி, இந்துமத பாம்பாட்டி, அமராவதி சிற்பம், ஸ்ரீவைகுண்டம் சிற்பம்,

Leave a comment

Leave a comment