தமிழ் வேளிர்கள் வேள்வித் தீயில் தோன்றியது உண்மையா? (Post.15,956)

scene from Ramayana

யாக குண்டத்திலிருந்து மீனாட்சி தோன்றுகிறாள் 

Written by London Swaminathan

Post No. 15,956

Date uploaded in London – 7 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சோழர்கள் இந்தியாவின் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்ததாக புறநானூற்றுப்  பாடல்கள் மூலமும் கண்ணகியின் சிலப்பதிகாரப் பேச்சு மூலமும் அறிகிறோம் ; அவர்கள் ராம பிரானின் சூரியவம்சத்தைச் சேர்நதவர்கள். இதைக் கம்பனும், கம்ப ராமாயணத்தில் போற்றிப் பாடுகிறான் .

பாண்டியர்கள் சந்திர வம்ச மன்னர்கள் என்பதை பிற்காலக் கல்வெட்டுகளும் பேசுகின்றன.  அவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் உள்ள  தொடர்பினை அர்ஜுனன்- அல்லிராணி / சித்ராங்கதா கல்யாணம் மூலமும் சூரசேனர் மகளான காஞ்சனமாலாவுக்குப் பிறந்த மதுரை மீனாட்சி அம்மன் வாயிலாகவும் அறிகிறோம் . அந்த மதுரை மீனாட்சியும் யாக குண்டத்தில் தோன்றியதாகவே பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்கிறார்

சேரர்கள் தங்களை அக்கினி குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டார்கள் .

தொன்று முதிர் வேளிர் எனப் புகழப்படும்  வேளிர்களும் அக்கினி குலத்தைச் சேர்ந்தவர்களே ; இதைக் கபிலர் புறநானூற்றின் 201 ஆவது பாடலில் பாடுகிறார் . நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தின் பழமை பற்றி எழுதிய கர்னல் டாட் என்பவர் நான்கு ராஜஸ்தான் க்ஷத்ரிய குல மக்கள் தாங்கள் யாககுண்டத்தில் தோன்றியதாகக்  கூறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளார்  .

யாக குண்டத்திலிருந்து திரெளபதி தோன்றுகிறாள் 

மஹாபாரத திரெளபதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும் அவரும் யாக குண்டத்தில் தோன்றியதாகவே மஹாபாரதம் விளம்புகிறது . தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அவருடைய மஹாராணிகளுக்குக் குழந்தைகள் பிறக்க யாககுண்டத்தில் தோன்றிய தேவன்தான் அமிர்த கலசத்தைக்  கொண்டுவந்தான் . யாககுண்டத் தீயில் தோன்றுவதை ராமாயணம் மஹாபாரதம் புறநானூறு , ராஜஸ்தான் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன .

கபிலர் பாடிய புறநானூற்றின் 201 ஆவது பாடலில் , வேளிர்கள் தடவினில் தோன்றியதைக் சொல்லிவிட்டு அவன் 49- ஆவது தலைமுறை என்ற அரிய விஷயத்தைச் செப்புகிறார் அதாவது அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் குடியேறியவர்கள் ஆவார்கள். 

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரும் வேறு ஒரு பாடல் உரையில் அகத்திய முனிவர் 18 குடிகளைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்ததை ருத்தி செய்கிறார் ஆகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் தமிழ் நாட்டுக்கு குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது

***

.ஐராவதம் மஹாதேவன் உளறல் !

தடவு என்பதற்கு யாக குண்டம் என்றும் தடா என்பதற்கு அண்டா என்றும் பொருள் கூறுகிறது 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி . இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய  ராகவ அய்யங்காரும் உறுதி செய்தார் ; அதை மறுத்து தடவுக்குப் புதிய  பொருள் கற்பித்தார் காலஞ்சென்ற ஐராவதம் மஹாதேவன்!  அவருக்கு தடவில் தோன்றிய மீனாட்சி, திரெளபதி, அக்கினி குல ராஜஸ்தானிகள் தெரியாது போலும்! பழைய உரைகாரர்களும் வேள்வித் தீ , யாக குண்டம் என்றே பொருள் சொல்லியுள்ளனர் . .

தடா வுக்கும் தடவுக்கும் வித்தியாசம் தெரியாமல் தடவு தடவென்று தடவிவிட்டு சட்டைக்கேற்ப கைகளை வெட்டிக்கொண்ட மனிதனாக நிற்கிறார் காலஞ்சென்ற ஐராவதம் மஹாதேவன் ; வாழையடி வாழையாக வந்த உரைகாரர்களின் மூஞ்சியில் உறைகளைப்போட்டு மூடி இருக்கிறார் ; ஆயினும் பரஞ்சோதி முனிவரும் மகாபாரத வியாசரும் ராஜஸ்தான் கல்வெட்டுகளும்  கபிலரும் இவருக்குப் பதில் சொல்லிவிட்டார்கள்.

கபிலர் சொல்லும் தடவு சங்க இலக்கியத்தில் உண்டு; ஆனால் ஐராவதம் சொல்லும் தடா சங்க இலக்கியத்தில் இல்லை !

இதோ கபிலர்  பாடல்

புறநானூறு 201, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள்

யாக குண்டத்திலிருந்து ஒரு தேவன்  தோன்றுகிறான் 

“இவர் யார் என்குவை ஆயின், இவரே,

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்

முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை

படுமணி யானைப் பறம்பின் கோமான்,

நெடுமாப் பாரி மகளிர், யானே,  5

தந்தை தோழன், இவர் என் மகளிர்,

அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே,

நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்

செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை

உவரா ஈகைத் துவரை யாண்டு  10

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்,

தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே!

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்!  15

யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து

இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்

பொன்படு மால் வரைக் கிழவ! வென்வேல்

உடலுநர் உட்கும் தானைக்

கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.” 

***

தடவினுள் (8) – ஒளவை துரைசாமி உரை – ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – ஓமகுண்டத்தின்கண்.   Iravatham Mahadevan who traces Akathiyar from the Dravidian Indus Valley Civilization to the South, quotes M. Raghava Iyengar’s interpretation of the word தடவு as ‘sacrificial vessel’ in the latter’s book வேளிர் வரலாறு.  He adds, “Even he missed the obvious connection between Akathiyar and his inseparable water pitcher”.  He adds further, “The word tadavu (variant taṭa, தட) means a ‘big clay pot’ (DEDR 3027) etymologically related to taṭa (தட) ‘thick, large’ (DEDR 3020).  The matter has now been put beyond doubt as the word tada occurs in a Thamizh -Brahmi inscription (ca.2nd cen l. BCE) incised on a broken storage jar excavated at Kodumanal, Thamizh Nadu.  The fragmentary inscription reads ‘earthen jar storing (?) cold (and) hot water’.  The word tatavu ‘jar’ is also attested in Thamizh literature. It occurs twice in a poem in Nācciyār Tirumoḻi; (9:6), assigned to ca. 8th cent. CE: nūru taṭāvil veṇṇey (நூறு தடாவில் வெண்ணெய்) – ‘a hundred jars of butter’; nūru taṭā niṟaintha akkāra adicil (நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்) – ‘a hundred jars of sweet morsel’”.

****

வேளிர் என்ற சொல்லே வேள்வி (யாகம் ) என்ற சொல்லிலிருந்து வந்ததே .

ராஜஸ்தானில் பரமார், பிரதிஹார் , செளஹான் சாளுக்கிய (சோலங்கி)  ஜாதிகள் வேள்வித் தீயில் தோன்றியதை பெருமையாக எழுதிவைத்துள்ளார்கள்

****

சீதையும் ஆண்டாளும் நிலத்தில் தோன்றினார்கள் என்றால் நாம் பொருளை யூகிக்க முடிகிறது; ரிஷி முனிவர்கள் போன்ற பெரியோர்களுக்குப் பிறந்த குழந்தையை எல்லோரும் காணும் இடத்தில் விட்டுச் செல்வார்கள் ; ஆ னால் தீயினில் தோன்றிய விஷயங்களை படம்போட்டேக் காட்டியுள்ளனர்! இப்படிப்படங்கள் இல்லாவிடில் நாமே  வேள்வி செய்து அதன் பயனாக பிள்ளைகளைப்  பெற்றார்கள் என்று கருதலாம் ; அப்படியில்லாமல் தெள்ளத்  தெளிவாக, யாக குண்டத்தில் தோன்றியதாகவே நமது சமய நூல்கள் பகர்கின்றன.

வடபால் முனிவன் என்று கபிலர் குறிப்பிட்டுப் பாடியது வசிஷ்ட முனிவர் என்றும் தெரிகிறது; ஏனெனில் கர்னல் டாட் எழுதிய ராஜஸ்தான் வரலாற்றில் வசிஷ்டர் மூலம் யாகத்தியில் தோற்றுவித்த நான்கு க்ஷத்ரிய குலங்களை விவரித்துள்ளார் ; ஸ்கந்த புராணமும் யாகத் தீயில் தோன்றிய கதைகளை உண்மையென்றே உறுதி செய்கின்றன.

 In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.

Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA  (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.

Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.

In the north Four Rajpiut clans are said to have come out of Yaga Fire pit of Vasisthta Rishi.

Rajput Kshatriyas PARAMARA (PARAMAR), PRATIHARA  (PARIHARA), CHALUKYA (SOLANKI) AND CAAHAMAANA (CHAUHAN) CAME FROM A SACRIFICIAL FIRE PIT ON MOUNT ABU. Col. Tod has reported it in his Annals of Antiquities of Rajasthan.

Skanda Purana 7-3-1 also confirms the Fire Pit matter.

***

தமிழர்களின் அபார வரலாறு அறிவு பற்று

இந்துக்களுக்கு வரலாற்று அறிவு கிடையாது என்பது வெள்ளைக்காரர்களின் குற்றச்சாட்டு ; ஆயினும் கல்வெட்டுகளிலும் தினசரி பூஜை செய்யும்போது சொல்லும் சங்கல்பங்களிலும் திதி- வாரம்- நட்சத்திரம்- ஆண்டு- யுகம் முதலிவற்றைச் சொல்வதோடு பூமியில் எந்த தீபகற்பத்தில் எந்த நதிக்கரையில் இதைச் செய்கிறோம் என்ற பூகோள அறிவிப்பினையும் இந்துக்கள் இன்றுவரை நாள் தோறும் செய்து வருகின்றனர் .

புறநானூற்றில் ஐயாதி வெண் தேரையார் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலில் அவருக்கு முன்னர் இறந்த மன்னர்களின்  எண்ணிக்கை கடல் மணலினும் பலவே — அதாவது எண்ணில் அடங்கா — என்று பாடுகிறார்; அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னர்களின் எண்ணிக்கை பற்றி தெரிந்திருந்ததால்தான்  இப்பட்டிப் பாடியிருக்கிறார். இன்னும் ஒரு சங்கப் புலவர் ஒரே நாளில் ஏழு மன்னர் ஆட்சியில் அமர்ந்த செய்தியினைப் படுகிறார் . இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன .

மூர்த்தி நாயனாருக்கு ஒரு யானை,  மாலை போட்டு மன்னர் ஆக்கிய பெரிய புராணச் செய்திக்குக் கூட நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை ! அறிஞர்கள் உட்கார்ந்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தால் புதிய செய்திகள் கிடைக்கும் 

***

புறநானூறு 363பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்தேரையார்


இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரேசுடு பிணக்
காடு பதியாகப் போகித் தத்தம்  5
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது,
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலம் கலனாக விலங்கு பலி மிசையும்  15
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பு அகம் முழுதுடன் துறந்தே.

எகிப்து நாட்டில் குழப்பம் ஏற்பட்டு குறுகிய காலத்தில் எழுபது மன்னர்கள் மாறியதாக வரலாற்றில் படிக்கிறோம் . அது போலத் தமிழ் நாட்டிலும் நடந்ததோ என்று எண்ண வேண்டியுள்ளது ! மூன்று தமிழ்ச் சங்க வராற்றினைக் கூறும் இறையனார் அகப்பொருள்  தரும் எண்ணிக்கையைக் கூட நாம் நம்பித்தான் ஆக வேண்டும்! ஐயாதி வெண்தேரையார் என்பதை நான் மண்டுக மகரிஷியின் என்பதன்  மொழிபெயர்ப்போ என்றும் எண்ணுகிறேன் . புறநானூற்றுப் புலவர் பட்டியலில் வான்மீகி ,பிரம்ம, பிரம்மச்சாரி, சங்க வருணன் நாகரீயர் முதலிய பெயர்கள் இருப்பதால் இப்படி ஒரு சிந்தனை!

–subham—

Tags- தமிழ், வேளிர்கள், வேள்வித் தீ,  தோன்றியது, அக்கினி குல க்ஷத்ரியர்கள், கபிலர் பாடல், தடவு, யாக குண்டம் , புறம் 201,  நாற்பத்தொன்பது, தலைமுறை, வரலாறு ஐயாதிச் சிறுவெண்தேரையார், ஐராவதம் மஹாதேவன் உளறல்

Leave a comment

Leave a comment