Written by London Swaminathan
Post No. 15,984
Date uploaded in London – 15 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அகநானூறு என்னும் சங்க கால நூலில் பரணர் என்னும் புகழ்மிகு புலவர் கப்பலைத்தாக்கி அழிக்கும் சிறிய இறால் மீன்களை பற்றிப் பாடுகிறார் :
“சினங்கெழு தானைத் தித்தன் வெளியன், 5
இரங்கு நீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள்ளிறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடையக் கடந்த வென்வேல்” —அகநானூறு 152
1
இறால் மீன்கள் கப்பலைத் தாக்குமா ?
சின்ன மீன்கள் ஒரு பெரிய கப்பலைக் கவிழ்க்குமா என்று நாம் எண்ணலாம் . பரணருக்கு கடல் பற்றிய அறிவு அதிகம்; ஆகையால் அவர், கப்பலைத் தாக்கி அழிக்கும் இறால் மீன்களை உவமையாகப் பயன்படுத்துகிறார். தற்காலத்தில் அதிக தகவல் கிடைக்கிறது . அந்தக் காலத்தில் பரணருக்கு மீனவர்கள் நிறைய கதைகளை சொல்லியிருக்க வேண்டும் !
2
இறால் மீன்களின் வகைகளில் மான்டிஸ் ஷ்ரிம்ப் Mantis Shrimp என்பது தாக்குவதற்காகவே பிறந்தவை! இவை துப்பாக்கியிலிருந்து குண்டு with the force of a 0.22-caliber bullet தாக்கும் ஆக்ரோஷத்தில் தாக்கும்; அப்போது உண்டாகும் நீர்க்குமிழிகள் வெப்பமாக இருப்பதோடு அதிர்ச்சி அலைகளை உண்டாக்கும். கடல் மீன் காட்சிசாலையில் இவை கண்ணாடித் தொட்டிகளைத் தாக்கும் பொது இதை அறிந்தனர் . குறைந்த ஆழமுள்ள பகுதியில் கப்பல்களையோ பெரிய படகுகளோ நிற்கும்போது இது கடலிலும் நடைபெறுகிறது அப்போது கப்பலின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துவிடும்! செப்பனிடாமல் கடலில் நுழைந்தால் கப்பல் முழுகிவிடும்!
3
Pistol (Snapping) Shrimp: பிஸ்டல் ஷ்ரிம்ப் என்னும் வகை இறால் மீன்கள் மிகவும் சிறியவை ஆனால் கூரிய கிடுக்கி போன்ற நகங்கள் உடையவை; அவை தாக்கும்போது ஒளியும், ஒலி அலைகளும் உண்டாகும். இவை கப்பலைத் தாக்கி அழிக்காவிடிலும் அவைகளின் கூட்டம், கிடுக்கி நகங்களை உடைத்து விட்டுச் செல்லும்போது உண்டாகும் சோனிக் பூம் SONIC BOOM என்னும் ஒலி குண்டுகள் கப்பலின் மின்னணுக் கருவிகளை பாதிக்கும்; இது இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது தெரியவந்தது ; எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கலைக் கண்டு பிடிக்கமுடியாதபடி இவை தடுத்துவிட்டன.
4
இன்னொரு வகை இறால்களை கொலைகார இறால் “Killer Shrimp” (Dikerogammarus villosus) என்று அழைக்கிறார்கள் ; இவை கப்பல் அல்லது பெரிய படகுகளின் அடித்தளத்திலும் பக்க வாட்டிலும் ஆயிரக் கணக்கில் ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன . கப்பலை நீர்மட்டத்துக்கு மேலே நிறுத்தினாலும் அந்த ஈரப்பதத்தில் பல நாட்களுக்கு இவை உயிர் வாழ்கின்றன; அவைகளை அகற்றாமல் கப்பலோ படகோ பயணம் செய்தால் இவை உலகம் முழுதும் பரவிவிடும்; ஆகையால் கப்பல் ஓட்டுவோர் இவைகளை அகற்றிய பின்னரே பயணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் ; கடலில் நமக்குத் தெரியாத இத்தனை எதிரிகள் இருப்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பரணருக்குத் தெரிந்திருக்கிறது!
–Subham—Tags- இறால் மீன்கள், கப்பலைத் தாக்கும் , அகநானூறு 152, பரணர்