400 ரிக்வேத ரிஷிகள் பட்டியல் – 7 (Post No.10,762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,762

Date uploaded in London – –    20 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

301. விவ்ரஹ்தா காஸ்யப 10-163

விப்ராத் ஸெளர்ய  10-170

விஸ்வக கார்ஸ் னி  8-86

விஸ்வகர்மா பெளவன  10-81/82

விஸ்வ மணி பெளவன்  10-81/82

விஸ்வமனா  வையாஸ் வன  8-23/26

விஸ்வ வாரா ஆத்ரேயி  5-28

விஸ்வ சாமா  ஆத்ரேய 5-22

விஸ் வாமித்ர  காதினஹ  3-1/12; 3-24/53; 3-57/62; 9-67;10-137

விஸ் வாவசு கந்தர்வ 10-139

விஸ்ணு ப்ராஜாபத்ய  10-184

விஹவ்ய ஆங்கிரஸ 10-128

வீதஹவ்ய ஆங்கிரஸ 6-15

வ்ர்ஷ  ஜான 5-2

வ்ர் ஷகண வாசிஷ்ட 9-97

316. வ்ர்ஷா கபி ஐந்த்ர  10-86

வ்ர்ஷாநாக வாதரசன  10-136

வேன பார்கவ 9-85; 10-123

வேன என்பது வரலாற்றில் முக்கியமான பெயர். அவனைக் கெட்ட அரசர் பட்டியலில் மநு ,சேர்த்துள்ளார். அவனை மக்களே புரட்சி செய்து கொன்றுவிட்டனர். ஆனால் அவன் தொடையைக் கடைந்து ப்ருதிவீ என்ற புத்திரனை உருவாக்கி மன்னன் ஆக்கினர் ரிஷிகள். இதனால் பூமிக்கு ப்ருத்வி என்று பெயர்.பிரெஞ்சுப் புரட்சிக்கும் முன்னர் மக்கள் எழுச்சியில் இறந்த முதல் மன்னன் வேனன். அவன் உடலில் இருந்து CLONING க்ளோனிங் என்னும் அதி நவீன விஞ்ஞான முறையில் வேறு ஒருவர் உருவாக்கப்பட்டது போல கதை செல்கிறது. இந்த வேன பார்கவ ரிஷிக்கும் அந்த மன்னருக்கும் தொடர்பு உண்டா, இருவரும் ஒருவரா என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

XXX

வைகானசஹ  சதம்  9-66

இதுவரை இரு வைகானச பெயர்கள் வந்துள்ளன. வைஷ்ணவர்கள் பின்பற்றும் வைகானச ஆகமத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா என்று ஆராயலாம். பெயரில் சதம் / 100 என்ற எண் வந்துள்ளது. முன்னர் 1000 என்ற எண் , சில பெயர்களில் கண்டோம். தமிழில் கண்ணாயிரம் என்ற பெயர்களை இன்றும் காண்கிறோம்.

XXX

வ்யஸ்வ ஆங்கிரஸ  8-26

வ்யாக்ரபாத வாசிஷ்ட 9-97

புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாத) தமிழ்நாட்டின் சிதம்பரம் முதலிய ஊ ர்களுடன் தொடர்புடையவர் . தமிழ் நாட்டில் குறைந்தது 9 புலியூர்கள் உண்டு.

சம்யு பார்ஹஸ்பத்ய  6-44/46

சகபூத நார்மே த  10-132

எகிப்து நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாண்ட மன்னரின் பெயரும் நார்மெர்  NARMER  . சக த்வீபத்தின் பெயரும் இந்த ரிஷி அல்லது மன்னரின் பெயரில் உள்ளது ஆராய்ச்சிக்குரியது.

பழங்காலத்தில் ஆடசி புரிந்த மன்னர்களும் புரோகிதர் போலவே அதிகாரங்கள் PRIEST KINGS உடையவர்கள். அது மட்டுமல்ல புறநானூற்றில் உள்ளது போலவே பல மன்னர்களும் கவி ஞர்களாக இருந்துள்ளனர். ரிக் வேதம் முழுதும் உள்ள வரலாற்றை சிலர் மட்டுமே ஆராய்ந்துள்ளனர். இது மஹாநாடு கூட்டி ஆராய வேண்டிய விஷயம்.

இந்தப் பெயர் நர்மதை நதியுடன் தொடர்புடையதா என்றும் ஆராயலாம்.

XXXX

சக்தி வாசிஷ்ட  7-32; 9-97; 9-108

வசிஷ்டரின் புதல்வரான சக்தி பற்றியும் விச்வாமித்ரருடன் உள்ள மோதல் பற்றியும் நிறைய கதைகள் உள்ளன.

சங்க யாமயான  10-15

சசி பெளலோமி 10-159

வரும் ஒரு பெண் கவிஞர். 30 பெண் புலவர்கள் பெயரை முன்னரே கொடுத்துள்ளேன்.

சதப்ரபேதன வைரூப  10-113

சபர காக்ஷி வத  10-169

சபர , சபரி என்பதெல்லாம் வேடர் குலப் பெயர்கள்

சச கர்ண காண்வ 8-9

சச கர்ண– என்றால் முயல் காது ; அந்தக் காலத்திலும் இப்படி பட்டப் பெயர்கள் உண்டு. தமிழ்ப் புலவர்களில் ஒருவர் பெயர் நரித் தலை ; அவர் பெயர் நரிவெரூவுத் தலையார்.

XXX

சஸ்வதீ ஆங்கிரஸீ  8-1

பெயரே பெண்பால் புலவர் என்பதைக் காட்டுகிறது.

சார்யாத மானவ  10-92

மநு குடும்பத்தினரின் பெயர்களில் மானவ ஒட்டிக்கொள்ளும் ; இந்தப் பெயர்களை தனியாக ஆராய்தல் அவசியம் ஆகும்.

சச பாரத்வாஜ 10-152

சிபி ஒளசிநார  10-179

தமிழ் இலக்கியத்தில் மிகவும் அடிபடும் மன்னர் சிபிச் சக்ரவர்த்தி; சோழர்கள் தமிழர்கள் அல்ல ; அவர்கள் ஆதிகாலத்தில் வடமேற்கு இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறியவர்கள் இதை முன்னரே தனி ஆராய்ச்சிக் கட்டுரையாக எழுதியுள்ளேன். சூரிய குலம் என்று கல்வெட்டுகளில் வருவதற்கு முன்னரே புறநானூற்றின் பழைய பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் புறாவுக்காக உயிர் கொடுத்த சிபியின் பெயர் வருகிறது. தமிழர்களின் பழமையை ரிக் வேத காலத்துக்குத் தள்ளும் குறிப்பு இது. சங்க இலக்கியத்தில் அதிகமாக அடிபடும் மன்னர் சிபி ஒருவரே.

இதே போல அதிய மான் முதலியோர் கரும்பு (இக்ஷ்வாகு) வம்சத்தினர் என்று அவ்வையார் பாடுவது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையையும் படிக்கவும்

சிரிம்பித பாரத்வாஜ  10-155

சிசு ஆங்கிரஸ  9-172

இவர் ஞான சம்பந்தர் போல குழந்தையாக  இருக்கும்போதே கவி பாடியவர் போலும் !

சிறு பெண்ணாக வீணை வாசித்து புகழ்பெற்ற பேபி காயத்ரீ , கல்யாணம் ஆகி BABY பேபி பெற்ற பின்னரும் அவரை நாம் பேபி காயத்ரீ என்றே கடைசி வரை அழைக்கிறோம் . அது போல சிசு / பேபி / குழந்தை என்ற பெயர் ஒட்டிக்கொண்டு  இருக்கலாம். எங்கள் வீட்டில் சகோதர சகோதரிகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர் பெயர் பால கிருஷ்ண ஐயங்கார் . அவர் வாக்கிங் ஸ்டிக் WALIKNG STICK இல்லாமல் நடக்க மாட்டார். அவ்வளவு தள்ளாத வயது. இருந்த போதிலும் அவரை நாங்கள் கிழட்டுக் கிருஷ்ண ஐயங்கார் என்று சொல்லவில்லை.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் வ்ருஷ கபி / SEXY MONKEY செக்சி குரங்கு என்ற ரிக் வேத பாடலை வைத்து வெளிநாட்டினர் அவர்கள் செய்யும் செக்ஸ் விஷயங்களை எல்லாம் எழுதித் தள்ளியுள்ளனர் ; அந்தப் பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருவதுடன் இங்கே புலவர் பட்டியலிலும் உளது. ஆக பெயரை மட்டும் வைத்து உளறிக்கொட்டுவோருக்கு இது ஒரு எச்சரிக்கை .

XXX

சுனஸ் சேப ஆஜிகர்த்தி  1-24/30

சுனஸ் சேப என்றால்’ ‘நாய் வால்’ என்று பொருள்; யாகத்தில் பலி கொடுக்க இவரை அரிச்சந்திர மஹாராஜா யூப  கம்பத்தில் கட்டிவைத்திருந்த பொது அந்தப் பக்கம் வந்த விசுவாமித்திரர் புரட்சி செய்கிறார். அவரை விடுவித்து தேவராதன் என்று பெயர் சூட்டி வேத ரிஷி பட்டியலில் சேர்த்துவிட்டார். இந்த நாய்வால்,  அஜீகர்த்தர் என்ற ஏழைப் பிராஹ்மணனின் புதல்வர்.; அவர்கள் நாய்வாலை விற்றுவிடுகின்றனர்.

இறுதியில் நாய்வாலும் பலி இடப்படவில்லை. அதற்க்கு முன்னரோ பின்னரோ புருஷ மேத யக்ஞத்தில் யாரும் பலி இடப்பட்டதாக வரலாறும் இல்லை. ஆனால் பெயரை மட்டும் வைத்து வெள்ளைக்கார ர்கள்  புஸ்தகம் புஸ்தகமாக எழுதித் தள்ளிவிட்டனர் ; உண்மையில் சொல்லப்போனால் பைபிள், பெரிய புராணம் முதலியவற்றில்தான் உண்மையில் நடந்த நர பலி  பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையனுக்கு ஏன் ‘நாய்வால்’ என்று பெயர் என்பதையும் எவரும் ஆராயவில்லை

உண்மையில் புருஷ மேதம் / மனித யாகம் பதிற்றுப்பத்து என்ற சங்க நூலிலும் உள்ளது.

ஏய் பார்ப்பனப் புலவரே உமது  கவிதை கண்டு மெச்சினோம்; உமக்கு என்ன வேண்டும் என்று சேர மன்னன் வினவுகிறான்.உடனே பாலைக் கெளதமனார் என்ற அந்தப் புலவர் நானும் என் மனைவியும் உடலோடு சொர்க்கம் புகவேண்டும் என்கிறார்கள். அசந்து போன சேர மன்னன் பல்யானை செல் கெழு குட்டுவன், அது எப்படி முடியும் என்று வினவ, நான் சொல்லும்படி பத்து வேள்விகளை இயற்று. பத்தாவது வேள்வியின்போது என்ன நடக்கிறது என்று  பார் என்கிறார் சேர மன்னன் செய்த பத்தாவது யாகத்தன்று பார்ப்பனப் புலவரும் பார்ப்பனியம் மாயமாய் மறைந்து விடுகின்றனர். இதுதான் புருஷ மேத யக்ஞம் என்பது என் கருத்து.

XXX

சுனஹோத்ர பாரத்வாஜ  6-33/34

ஸ்யாவாஸ் வ ஆத்ரேய 5-52/61; 5-81/82; 8-35/38; 9-32

ஸ்யேன ஆக்னேய 10-188

ஸ்யேன என்றால் பருந்து, களுக்கு என்று பொருள்

தமிழில் பல ஆந்தை பெயர்கள் உண்டு. இது ஆந்தையூர் என்பதிலிருந்து வந்ததாகச் செப்புவர். இது விவாதத்துக்குரிய விஷயம்

ஸ்ரத்தா காமாயாநீ  1-151

பெண் புலவர்

ஸ் ருத கக்ஷ ஆங்கிரஸ 8-92

341- ஸ்ருத பந்து  கெளபாயன / லவ்பயான 5-24; 10-57/60

இதுவரை 341 ரிஷிகள் பெயர்கள் பட்டியலிடப்பட்டன

தொடரும் ………………………………

TAGS- ரிஷிகள் பெயர்கள்-7

எழுத்து வருத்தனம் – 1 (Post No.10761)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,761
Date uploaded in London – – 20 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை
எழுத்து வருத்தனம் – 1
ச.நாகராஜன்

எழுத்துக்களை வைத்து சொற்களில் விளையாடும் ஒரு விளையாட்டு எழுத்து வர்த்தனம்.
பொருள் பயக்கின்ற ஒரு மொழியை எடுத்துக் கொள்ள வேண்டியது.
அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பது தான் எழுத்து வருத்தனம் என அழைக்கப்படுகிறது.
இதை நன்கு விளக்கி, ‘சித்திர கவி விளக்கம்’ என்ற தனது நூலில் (1939ஆம் ஆண்டு வெளியீடு) வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமால் கலைஞர்) தரும் உதாரணப் பாடல் இது :

ஏந்திய வெண்படையும் முன்னா ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும் – வாய்ந்த
வுலைவி லெழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் றாமரையென் றாம்.

பாடலின் கடைசி அடியில் தலை, மலை, பொன், தாமரை என்ற சொற்கள் அமைவதற்குரிய வழி மேலே உள்ள மூன்று அடிகளில் இருப்பதைப் பாடல் கூறுகிறது.
விளக்கத்தைப் பார்ப்போம்:
மால் – திருமால்
ஏந்திய வெண்மை படையும் – கையில் ஏந்திய படைக்கலமாகிய வெள்ளிய சங்கும்
முன் நாள் எடுத்ததுவும் – முன்னொரு காலத்தில் (இந்திரன் பொழிந்த மழையைத் தடுக்க) மேலே உயரத் தூக்கிப் பிடித்ததும்
பூ துகிலும் – அழகிய ஆடையும்
உந்தி பூத்ததுவும் – நாபியில் மலர்வித்ததும்
(ஆகிய இவற்றில்)
வாய்ந்த – பொருந்திய
உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றா சேர்க்க – குற்றமற்ற எழுத்துக்களை முறையே ஒன்றன் மேல் ஒன்றாகச் சேர்க்க
(அது முறையே)
தலை, மலை, பொன், தாமரை என்று ஆம் – தலை, மலை, பொன், தாமரை என்ற எழுத்துக்களாக ஆகும்.

திருமால் ஏந்திய வெண் படை – சங்கு – அது கம்பு
இந்த கம்பு என்பதில் எடுத்துக் கொண்டது ‘கம்’.
இதன் பொருள் தலை.
இதனுடன் ‘ந’ என்னும் எழுத்தை முன்பு சேர்க்க அது ‘நகம்’ என்ற சொல்லாக ஆகும்.
நகம் என்பதன் பொருள் மலை.
இதனுடன் ‘க’ என்ற எழுத்தைச் சேர்க்க அது ‘கநகம்’ என்ற சொல்லாக ஆகும்.
இதன் பொருள் பொன் என்பதாம்.
இந்தக் கநகம் என்ற சொல்லுக்கு முன்பாக ‘கோ’ என்ற எழுத்தைச் சேர்க்க வருவது ‘கோகநகம்’ என்ற வார்த்தை.
இதன் பொருள் தாமரை.
ஆக, கம், நகம், கநகம், கோகநகம்’ என்று எழுத்து வருத்தனமானதைக் காணலாம்.
சித்திர கவி வரிசையில் எழுத்து வருத்தனம் என்பதும் ஒன்றாகும்.


tags- சித்திர கவி

GNANA MAYAM ZOOM/ FACEBOOK BROADCASTING

SEE US ON FACEBOOK/GNANAMAYAM AT 1 PM LONDON TIME 6-30 PM INDIAN TIME TODAY SUNDAY

PROGRAMME FOR TODAY

PRAYER WITH THIRUPPUGAZ BY MRS JAYANTHI SUNDAR

TEMPLE VISIT IN TAMIL  BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN

THIRUKKAZUKKUNDRAM TEMPLE

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISNAVI ANAND

–SUBHAM–

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 2 (Post No.10,760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,760

Date uploaded in London – –    19 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PANINI’S MYSTERIOUS 83 WORDS- PART 1 WAS POSTED YESTERDAY.

36.Harana 4-2-65

37.Kabari 4-1-42

It is found in old Tamil  literature. The meaning is a special type of female coiffure (kesa vesa)

Tamil poet Tiru Valluvar used Kavarimaan (Kural 969) . The deer like animal which gives long hair for dressing women or making chowries.

Tamil dictionary also gives the meaning for both Kavari and Savari fake hair; hair extension. Dancing girls use this to extend the length of their hair during shows. Old women also use it when they lose most of their hair. In the olden days men only took the characters on the stages and they also used this Kabari.

B= V are interchangeable; so do Ka=Sa

chowry- Bushy tail of a Yak

In the same way Koni (Goni in Panini) is also listed in old Tamil Dictionary.

38.Kaakshah 6-3-103

Kaastiira  6-1-152

Kaasuu 5-3-90 (meaning spear)

Kaaraskara 6-1-153

Kuucavaara 4-1-104 and 4-3-94

According to some geographical inferences  it was Kuuca, old name of Turkey; appaearing in a sanskrit manuscript  nd inscriptions from that region. Sanskrit dictionary says ‘ name of a locality’; name of a Rishi

43.Kulattha 4-4-4

Later usage meant autumnal crop or pulase.

Tamils also use Kollu (horsegram)

44.Kulija  5-1-55

45.Kumbaa 3-3-103

In feminine gender it becomes Kumbhi. Tamils also form the feminine gender same way

Kizavan – kizavi or kizathi

Kuravan – Kurathi

Modern Tamil Paatakan – Paataki

According to Vedic Index it denotes a female adornment, connected with the dressing of the hair.

Kumbham in modern usage is Pot (Purna Kumbha)

Tamil lexicon (1935) says Karakam (folk dance with  balancing pots on head)

Tamils used it for gathering grains etc in a comb shape.

English word Comb may be derived from it. We can see Hindu ladies’ coiffure in comb shape. Even people gathering is Kumbal in colloquial language

The verbal root is KUVI; (noun Kuviyal).

46.Kustumburu = Coriander; 6-1-143

In Tamil it s KOTTA MALLI; in Telugu Kottamiri and in Kannada Kotambari.

Susruta (1-217-3; 4-2-100) also used it as a spice.

Tamils use it in everyday cooking.

This shows Panini was familiar with Tamil Customs. Coriander seeds are used as a Masala ingredient in North Indian Menu as well.

Coriander and Black pepper show that Panini was familiar with South India.

47.Kutilikaa 4-4-18

48.Kutu,  Kutupa 5-3-89

Later commentaries explain it as a ‘leather case, container for oil.’

It is a container with narrow neck.

Tamils also has the word KUTUVAI (P=V) in a later period

Even in Chemistry labs he narrow necked glass jars called Kutuvai.

Any vessel with round bottom and long neck to store liquids. Even Surai Kudukkai (bottle guard) has the same shape. Hunters use it to store honey.

49.Mahanagara 6-2-89  means Big City; translated in Tamil it is Peru Nagar. That is in old Tamil as well. But no one knows a particular city with this name.

It may mean any ‘big city’

50.Maasatama 5-2-57; meaning last day of the month

(Can we split it as Masa+ athame?)

Tamil literature use Maatha for Maasa (S=T changes is seen through out Tamil literature and in English as well Sion+Tion)

To be continued……………………………..

400 ரிக்வேத கால புலவர்கள் பட்டியல்-6 (Post No.10,759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,759

Date uploaded in London – –    19 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேத கால புலவர்கள், முனிவர்கள், ரிஷிகள், கவிஞர்கள்  பட்டியல் -6

கடந்த 5 நாட்களில்  261 புலவர்களைக் கண்டோம்

262.ரஃஷோகா பிராஹ்ம  10-162

ராஹுகண ஆங்கீரஸ 9-37/38

சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் புலவர் ஒருவர் பெயர் பிரம்மா.

இதேபோல பிராக்ருத நூலான காதா சப்த சதி யிலும்  கவிஞர் பிரம்மா உண்டு.

ராஹு , கேது முதலிய கிரஹங்கள் பெயர்களையும் இது வரை கண்டோம்.

ராத ஹவ்ய ஆத்ரேய 5-65/66

ரேணு வைஸ்வா மித்ர 9-70; 10-89

ரேப காஸ்யப 8-97

இதில் காணும் பல ரிஷிகளின் பெயர்களை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் அபிவாதயே மந்திரத்தில் சொல்லுவதால் பிராமணர்கள் 4000 ஆண்டு வரலாற்றின் பெட்டகங்களாக, பொக்கிஷங்களாகத் திகழ்கிறார்கள். சங்க இலக்கியத்தில் உள்ள கோத்திரங்களை முன் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன் .

ரேபசுனு காச்யபவ்  9-99/100

ரோ மஸா  1-126

நல்லவேளை, இப்படி ஒரு முனிவர் பெயர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தால் வெள்ளைக்கார்கள் இவருக்கு ரோமானிய முத்திரை குத்தி இவரும் கைபர் கணவாய் வழியாகப் பின்னர் வந்திருக்கலாம் என்று எழுதியிருப்பார்கள் . இவர் 4000 ஆண்டுகளுக்கு முந்தியவர்.

லப ஐந்த்ர  10–119

இந்திர என்பது ஒரே ஆளின், மன்னரின், கடவுளின் பெயர் அல்ல என்பதற்கு இதுவும் சான்று. ராவணனின் மகன், இந்திரனையும் ஜெயித்ததால் அவனுக்கு இந்திரஜித் என்று பெயர். ஆதிகாலத்தில் வாழ்ந்த அகஸ்திய மகரிஷி இந்திரனை சபித்த கதையையும் படிக்கிறோம். ஆகையால் பல இந்திரர்கள் இருந்ததை அறியலாம்.

லுச தானகா 10-35/36

முன்னர் கண்ட லப என்பதை ‘லவ’ என்றும் சொல்லலாம். ப=வ மாற்றம் நிறைய உண்டு; ஆனால் லுச என்ற பெயர் சுமேரிய, பாபிலோனிய நாகரீகத்தில் வரும் பெயர் ஆகும்.

லோபாமுத்ரா 1-179

இந்தப் பெண்மணி பற்றி நிறைய கதைகள் உண்டு. நச்சினார்க்கினியர், இவரை தொல்காப்பியர் கால பெண்ணாகக் காட்டுகிறார். அது தவறு. இராமாயண கால அகஸ்தியர் வேறு.

தொல்காப்பிய முனிவரின் குரு – அகஸ்தியர் வேறு.

வத்ஸ ஆக்னேய 10-187

வத்ஸ  காண்வ 8-6

வத்ஸ ப்ரி பாலந்தன 9-68; 10-45/46

வம்ரு வைகானஸ  10-99

வருண 10-124

இதை வருணன் என்ற வேத காலக் கடவுளே பாடியதாகவும் சொல்லலாம். அவர் பெயரை வைத்துக் கொண்ட புலவராகவும் இருக்கலாம் ; பெயர் தெரியாத புலவராக இருந்தால் அவர் பாட்டில் வரும் சிறப்பு சொற்றோடரை அவருக்கு சூட்டுவதை ரிக் வேதத்தில் 20, 30 புலவர் விஷயத்தில் காண்கிறோம். சங்க நூல்களைத் தொகுத்தோரும் இப்படி தேய்புரி பழங் கயிறு, செம்புலப் பெயல் நீர் என்று பெயரிட்டுள்ளனர்.; அவர்கள் ரிக் வேதத்தை அப்படியே பின்பற்றியுள்ளனர்.

வவ்ரி ஆத்ரேய  5-19

வச ஆஸ் வ்ய  8-46

வசிஷ்ட மைத்ராவருண 7-1/32; 7-33; 7-34/104;9-67; 9-90; 9-97; 10-137

வசிஷ்ட புத்ரஹ 7-33

வசு பாரத்வாஜ 9-80/82

வசு கர்ண வாசுக்ர 10-65/66

வஸுக்ருது வாசுக்ர 10-20/26

வசுக்ர 10-28

வசுக்ர ஐந்த்ர 10-27; 10-29

வசுக்ர வாசிஷ்ட 9-97

வசுக்ரபத்னீ  இந்திர னுசா 10-28

வசுமனா  ரோவ் ஹிதாஸ்வ   10-179

289. வசுரோசிச ஆங்கிரஸஹ ஸஹஸ்ரம்  8-34

290.வசு ஸ்ருத ஆத்ரேய 5-3/6

291.வசூயவஹ ஆத்ரேயஹ 5-25/6

சுமார்  11 புலவர் பெயரில் வசு என்ற சொல் வந்துள்ளது .

ஆயிரம்  என்ற எண்ணும் இருப்பது குறிப்பிடத்தக்கது .

வாக் ஆம்ப்ருணி  10-125

வாதஜுதி வாதரசன 10-136

வாமதேவ கெளதம 4-1/17; 18, 19; 4-45/48

விப்ர ஜுதி வாதரசன 10-136

விப்ர / வசு பந்து கெளபாயன அல்லது லவ்பயான 5-24;10-57/60

விமத ஐந்த்ர  10-20/26

விமத ப்ராஜாபத்ய 10-20/26

விரூப ஆங்கிரஸ  8-43/44; 8-75

300.விஸ்வவத் ஆதித்ய 9-13

இதுவரை 300 புலவர்கள் பெயர்களைக்  கண்டோம்

To be continued………………………………………

tags- புலவர்கள் பட்டியல்-6

கடை எழுத்து அலங்காரம்–1 (Post No.10,758)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,758
Date uploaded in London – – 19 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

கடை எழுத்து அலங்காரம் – 1
ச.நாகராஜன்

முதல் எழுத்து அலங்காரம், நடு எழுத்து அலங்காரம் பற்றிப் பார்த்தோம்.
இனி கடை எழுத்து அலங்காரம் பற்றிப் பார்ப்போம்.

இந்தப் பாடல், யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் 57வது பாடலாக அமைகிறது.

கள்ளுடனே பன்றிசங்கு கஞ்சனிவைக் கக்கரமூன்
றுள்ளசொல்லு ளிவ்விரண் டோர்ந்தெடுத்தால் – குள்ளகடை
யெட்டெழுத்தில் வேதனரி யேத்துபிதா வின் பொருள்கண்
டிட்டுநகு லேச்சரனை யெண்

பாட்டில் உள்ள எட்டு எழுத்துக்களைக் கண்டு, அதில் கடைசி எழுத்தை மட்டும் சேர்த்துப் பார்த்தால் வருவது விதி மால் துதி தாதை என்று ஆகும்.
இதுவே “வேதனரி யேத்து பிதா” என்பதற்கான பொருளாக அமைகிறது.

அதாவது விதி மால் துதி தாதை வேதனரி யேத்து பிதா.

கள்ளு மற (வி) சங்கு நந் (து)
குந் (தி) சுத் (தி)

பன்றி மைம் (மா) கஞ்சன் விதா (தா)
கேழ (ல்) தந் (தை)

இவற்றில் கடைசி எழுத்துக்கள். வி, தி, மா, ல், து, தி, தா, தை என்று ஆகிறது.
இவற்றைச் சேர்த்தால் வருவது ‘விதி மால் துதி தாதை’.

இதே நூலில் உள்ள இன்னொரு கடையெழுத்து அலங்காரப் பாடல் இது:-

எண்சீரடி விருத்தம்

செந்நீர்கா டுகிழாள்பா டலத்திற் கேய்ந்த
செழிய மொழி மூன்றனினீற் றக்க ரத்தால்
தன்னேரில் நகுலையிடை மேவு தெய்வச்
சங்கரனுந் தேவியுந் தோற் றிடந்தான் கண்டோம்
முன்னீரீ ரக்கரத்தாற் கண்டோ மீசன்
முழங்கு மணி வாசகர்க்காக் கொண்டமூர்த்த
மன்னான்மார் பகத்துமையாள் தனத்திழைத்த(து)
அவரிருவர் திருமேனி யளவு மாதோ
இது பாடல் எண் 58 ஆகும்

இதில் மூன்று சொற்கள் திகிரி என்ற சொல்லைத் தருவதைக் காணலாம்.
செந்நீர் —- குரு(தி)
காடுகிழார் —- வடு (கி)
பாடலம் —- பாதி (ரி)

இந்த மூன்று சொற்களின் கடை எழுத்துக்களை இணைத்தால் வருவது திகிரி.
திகிரி என்ற சொல் மூங்கிலைக் குறிக்கும். (பிங்கலந்தை நிகண்டு தரும் அர்த்தம் இது.)
அதே சொல் மலையையும் குறிக்கும். (திவாகர நிகண்டு தரும் அர்த்தம் இது. )

மூங்கில் – சிவன் தோற்றிடம்
மலை (கிரி) – உமையின் தோற்றிடம்


நகுலையிடத்து மேவு தெய்வ சங்கரனும் உமையும் தோன்றிய இடம் எவை?
மூங்கிலும் மலையும் ஆகும்.

மூன்று சொற்களில் கடை எழுத்து நீங்கலாக அமையும் சொற்கள்
குரு, வடு, பாதி ஆகும்.

குரு’ என்பது சிவன் மாணிக்கவாசகர்க்காக கொண்ட மூர்த்தம்.
‘வடு’ என்பது சிவன் மார்பில் உமை தனத்தால் இழைத்தது
‘பாதி’ என்பது சிவன் மேனியில் உமை திரு மேனியின் அளவு ஆகும்.

புலவார் எப்படி ஒரு அருமையான கடை எழுத்து அலங்காரப் பாடலை இயற்றி இருக்கிறார் என்பதை அறிந்து வியக்க வேண்டியது தான்!


Panini’s Mysterious 83 words show he is close to Vedic Period – Part 1 (Post No.10,757)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,757

Date uploaded in London – –    18 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Panini was the world’s first grammarian; he was the symbol of brevity.

‘Brevity is the soul of wit’ (Shakespeare said it in English) probably came from Panini’s clever use of words. Later Sutra (aphorism) literature followed him. In Tamil, Tiru Valluvar used pithy sayings. Tirukkural is famous for its brevity.

Dr Aravinda Kumar of Uttar Pradesh in his book ‘Archaic Words in Panini’s Ashtadhyayi’ (year 1981) has given a list of 83 words. Those words are not in Vedas or later classical literature. If the words are found in either of these two, they have different meaning; not what Panini said.

At the end of his book which was the basis of his Ph.D. thesis he concludes that Panini lived closer to Vedic period for the following reasons:

If the words are found elsewhere,

Many words underwent a radical change in meaning.

Morphological changes are also evident in some cases.

It must be borne in mind that such profound and vast semantic changes in the language call for much longer duration of time.

If a study like this is done on all the works of Panini (the Ganapaatha, the Dhaatupaatha, the Unaadikosa and Lingaanusaasana) it will shed much greater illumination.

Goldstucker and other scholars who placed Panini in 700 BCE or before are right.

Here is the list of words dealt with by him in the book:

Words and their occurrence in Ashtadhyayi are as follows:

Abhresa 3-3-37

Acitta 4-2-47

Adhruva 3-4-54

Agnaayi 4-1-37

Ajatsunda 6-1-151

Ajaada 4-1-171

Ajiravaati 6-3-119

Anaya 5-2-9

Aniravasita 2-4-10

Antara 1-1-36

Antarghanah 3-3-37

Anubraahmana 4-2-62

Anugava 5-4-83

Anu padiinaa 5-2-9

Anu pravacaniiya 5-1-111

Anu satika 7-2-20

Apakara 4-3-32

Arma 6-2-90

The author says,

Arma = ruined and deserted place

It is interesting to note that in the Armaic language of the Semitic family  the word ARMA has been used in the sense of uneven and stony part of the country. It is quite probable that the word Arma owed its origin to the Armaic language.

My comments

Armaic was the language spoken by Adam and Jesus according to scholars. Earlier I posted an article about Coriander, Guggulu and Goni from V S Agrawala’s book. According to these scholars, Panini used Greek, and other Semitic language words. At least these people agree that we had contacts with these areas from 1000 BCE.

xxxx

Aristapura 6-2-100

Asmaka 4-1-171

Atyaakaara 6-1-134

Avastara 3-3-120

Aacita 4-1-22; 5-1-53; 6-2-146

Aakranda 4-4-38

Aanaaya 3-3-124

Meaning is a net ,a fisherman’s net according to later dictionaries

My comments :

There is a famous Saivite saint by name Aanaaya Nayanaar, who went to Sivaloka by music. He sang the glory of Siva and attained liberation. He attracted all animals by  playing his flute reminding us of St Francis of Assisi.

It looks like a Tamil word. The 1935 Ananda Vikatan Tamil dictionary says Aanaaya kalai= an attire which looks like a net!!

We have to do more research on this word.

xxx

Aapamityaka 4-2-21

Aasandivat 8-2-12

Aasvina 5-2-19

Distance travelled by horse (I have written an article about it)

Bharga 4-1-111, 178

Daardurika 4-3-34

Dhanva 4-2-121

Glaha 3-3-70

Goghna 3-4-73

Goni 4-1-42

Gotraa 4-2-51

Goni (grain sack)  is an interesting word. Even Tamils use the word Koni Usi (special needle for stitching sacks)

Gonaka is found in Brahmajaala sutta. It means woollen cloth made from the hair of long haired goats. It was presumably the same thing as Kaunakesa, one piece loin cloth worn by the early Sumerians and Accadians and made of suspended loops of wool hanging from a woollen skirt. It may be surmised that this word travelled to India through trade and commerce in pre-Paninian time.

Susruta (2-34-11) uses in the sense of a sack.

If some one sees some similarity with Sumerians then they jump to conclusion that we borrowed it fro mthem. Why should Panini write grammar for Sumerian or Semitic words? is my question. I quoted Anaya Nayanar story from Periya Puranam and earlier Tamil literature. Can I say Panini borrowed it from Tamils?

35 words covered so far.

To be continued…………………………..

 tags- Panini, Mystery words, archaic, Anaya nayanar, Goni, Arma, Armaic language, Sanskrit, Tamil

400 ரிஷிகள் புலவர்கள் பட்டியல் – 5 (Post No.10,756)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,756

Date uploaded in London – –    18 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

210. பிரத வாசிஷ்ட 10-181

ப்ரபூவசு ஆங்கிரச  5-35/36, 9-35/36

ப்ரயவந்த ஆத்ரேயஹ 5-20

ப்ரயோக பார்கவ 8-102

ப்ரஸ்கன்வ காண்வ  1-44/50; 8-49; 9-95

ப் ரியமேத ஆங்கிரஸ 8-2;868/69;8-87;9-28

பந்து கெள பாயன  5-24; 10-57/60

பப்ரு ஆத்ரேய 5-30

பப்ரு என்ற சொல் மிட்டன்னியன் நாகரீகத்திலும் MITANNIAN CIVILIZATION  உள்ளது (கி.மு.1380 கல்வெட்டு 1380 BCE CUNEIFROM SANSKRIT INSCRIPTION)

பரு ஆங்கிரஸ 10-96

பாஹு வ்ருக்த ஆத்ரேய 5-44; 5-71/72

பிந்து ஆங்கிரஸ  8-94;9-30

புத ஆத்ரேய 5-1

புத ஸெளம்ய 10-101

ப்ருஹ துக்த வாமதேவ்ய 10-54/56

ப்ருஹ த்திவ ஆதர்வண 10-120

ப்ருஹன்மதி ஆங்கிரஸ 9-39/40;10-71/72

ப்ருஹஸ்பதி லெளக்ய  10-72

ப்ரஹ்மா திதி காண்வ  8-5/

பயமான வார்ஸாகிர  1-100

பரத்வாஜ பர்ஹஸ்பத்ய  6-1/30; 6-37/43; 6-53/74; 9-67; 10-137

பர்க ப்ராகாத  8-60/61

பாவயவ்ய  1-126

பிக்ஷு ஆங்கிரஸ 10-117

பிக்ஷு BIKSHU என்பதை இதற்கு 1500, 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர்கள் எல்லா சன்யாசிகளுக்கும் பயன்படுத்தினர். பிச்சை எடுப்பவர் என்பது பொருள் ; சங்கப் புலவர்களில் ஒருவர் பெயர் ஓரில் பிச்சையார் ; ஒரே இடத்தில்/ வீட்டில் மட்டுமே பிச்சை எடுக்கவேண்டும் என்பது சாஸ்திர விதி.

பிஷக் ஆதர்வண  10-97 (மஹாபாரத காலம்)

BISHAK= DOCTOR; P HYSICIAN

234.புவன ஆப்த்ய 10-157

பூதான்ச காஸ்யப 10-106

ப்ருகு வாருணி 9-65; 10-19

மத்ஸ்ய சம்மட 8-67

இது ஆராய்ச்சிக்குரிய  பெயர் .இது பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன் ; கீழே இணைய்ப்பில் காண்க:-

மத்ஸ்ய சம்மட MATHSYA SAMMADA என்பதை மநு ஸ்ம்ருதி மட்டுமே குறிப்பிடும் கெட்ட , மோசமான அரசர்களில் ஒருவரான சுமுகன் SUMUKA;

 சுமேரியர்கள் குறிப்பிடும் துமுசி, தம்முஸ், கில் காமேஷ் DUMUZI, TAMMUZ கதையுடன் தொடர்புபடுத்தியுள்ளேன். மொழியியல் ரீதியில் சம்மட =துமுசி= தம்முஸ் = சுமுக என்பது சாத்தியமே .மேல் விவரத்துக்கு எனது 2014ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கவும் .

மதித யாமயான 10-19

மதுச் சந்தஹ வைச்வாமித்ரஹ 1-1/10

ரிக் வேதத்தின் முதல் பாடல் ; கவிஞர் பெயர் தேன் கவிஞன் = மது சந்தம் = தேன் மொழிக் கவிஞன் . இதுதான் வியாசர் தேர்ந்தெடுத்த அற்புதப் பாடல். அக்னி  மீளே என்று  அ – எழுத்தில் துவங்குவதால் எழுத்துக்களில் நான் அ -காரம் என்று கிருஷ்ணன் பகவத் கீதையிலும் வள்ளுவன் முதல் குறளிலும் சொன்னான். வள்ளுவனுக்கு ரிக் வேதமும் தெரியும்; கீதையும் தெரியும் என்பதை வள்ளுவன் சம்ஸ்க்ருத அறிஞன் என்ற கட்டுரையில் காட்டியுள்ளேன்.

மநு ஆபசவ 9-106

மநு வைவஸ்வத 8-27/31

மநு சாம்வரண  9-101

மன்யு  தாபஸ 10-83/84

மன்யு வாசிஷ்ட 9-97

இந்த மநு ரஹஸ்யம் குறித்து முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளேன் .

மருதஹ 1-165

தமிழில் மருத நிலம் என்று சொல்வதுடன் ஒப்பிடலாம்

மாதரிஸ்வ காண்வ  8-54

மாந்தாதா யவனாஸ்வ  10-134

மான்ய மைத்ராவருணி 8-67

(அகஸ்தியர் பெயர் மான PIGMY= SHORT )

முத்கல பார்ம்யஸ்வ  10-102

புராணக்  கதைகளில் முத்கலர் பெயர் உளது

மூர ஹ ன்வான்  வாமதேவ்ய 10-88

ம்ரிலீக வாசிஷ்ட 9-97; 10-150

மேதா திதி காண்வ 1-13/13; 8-1; 8-2; 8-32; 9-2; 9-41/43

மேத்ய காண்வ 8-1; 8-3; 8-33;

யக்ஷ்ம நாஸன ப்ராஜாபத்ய 10-161

யஜத ஆத்ரேய 5-67/68

யக்ஞ ப்ராஜாபத்ய 10-130

யம வைவஸ்வத 10-10; 10-14

யமி  வைவஸ்வதீ   10-10; 10-154

யயாதி நாகுஷ 9-101

மூன்று யயாதிகள் உண்டு. மஹாபாரத யயாதி வேறு .

261- யவிஸ்த சஹச புத்ரஹ 8-102

முன்னர் சஹஸ்ர புத்ரஹ என்று ஒரு புலவரைக் கண்டோம்

இதுவரை 261 புலவர்கள் பெயர்கள் பட்டியல் இடப்பட்டன .

XXX

ஜீசஸ்=ஜஸ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஜ…

· Translate this page

11 Dec 2014 — உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் மத்ஸ்ய சம்மட என்ற மர்ம மன்னர் …


2014 | Tamil and Vedas | Page 76

https://tamilandvedas.com › page

· Translate this page

9 Jul 2014 — … பகவானின் வாஹனம் கருடன் – மத்ஸ்ய புராணம் … மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக …


புத்தர் எப்படி, எப்போது இந்துவானார்? – Tamil and …

https://tamilandvedas.com › புத்…

· Translate this page

8 Jul 2014 — ரிக் வேதத்தில் குறிப்பிடப் படும் மனு, மத்ஸ்ய சம்மட ஆகியன மறைமுகமாக …

Matsya Sammada | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › matsya-sammada

14 Nov 2014 — Maha Sammata of Mahavamsa, one and the same? Yes, they are same! Matsya Sammada is a mysterious name in the Satapata Brahmana. Rig Veda (RV 7-18 …


Fish God | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › fish-god

Sumuka of Manu Smriti , Maha Sammata of Mahavamsa, one and the same? Yes, they are same! Matsya Sammada is a mysterious name in the Satapata Brahmana.

TO BE CONTINUED …………………………………..

TAGS- புலவர்கள் பெயர்கள், பட்டியல்-5

முதல் எழுத்து அலங்காரம் – 2 (Post No.10,755)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,755
Date uploaded in London – – 18 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

முதல் எழுத்து அலங்காரம் – 2
ச.நாகராஜன்

முதல் எழுத்து அலங்கார வகையில் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
இதுவும் யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை அவர்கள் எழுதிய நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து என்ற நூலில் உள்ள பாடலே. இது 54வது பாடலாக அமைகிறது.

பாடல் :
கட்டளைக் கலித்துறை

புடையிற் கடலொலி நீங்கா நகுலைப்பொ னாலயத்துக்
கடவுட் குரிய குணமா றொருங்குறக் காட்டுமொழி
யொடுநற் கிளியொரு கட்பறை தேம லுவைக்கியல்பே
ரடியிற் பசுபதி நாற்சிர மெஞ்சின ஆய்ந்தறியே

கடவுளுக்குரிய குணங்கள் ஆறு. இவற்றை ஒருங்கே காட்டும் மொழி
(ப) கம்
கிளியின் பெயர் : (சு) கம்
ஒரு கட்பறையின் பெயர் :- (ப) தலை
தேமலின் பெயர் :- (தி) தலை

மேலே உள்ள (அடைப்புக்குறிக்குள் உள்ள) முதல் எழுத்துக்களைச் சேர்த்தால் வருவது பசுபதி என்ற சொல்.

இந்த சொற்களில் (பகம், சுகம், பதலை, திதலை) முதல் எழுத்து நீங்க மீதி வரும் சொற்கள் – கம், கம், தலை, தலை.
இவை நான்கும் நான்கு சிரங்களாகின்றன.

என்றும் கடல் ஒலி நீங்காத, நகுல பொன் ஆலயத்து கடவுளுக்குரிய குணங்களை ஒருங்கே காட்டும் மொழியும் ஒரு நல்ல கிளியின் பெயரும், ஒரு கட்பறையின் பெயரும், தேமலின் பெயரும் சேர்த்து வரும் பசுபதிக்கு மீதி உள்ளவை நான்கு சிரங்களாகின்றன. ஆய்ந்து பார்த்து அறிவாயாக.

இப்படி முதல் எழுத்து அலங்கார வகைப் பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன.


400 ரிக் வேத ரிஷிகள் ,புலவர்கள்  பட்டியல்-4 (Post No.10,754)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,754

Date uploaded in London – –    17 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

400 ரிக் வேத ரிஷிகள்  புலவர்கள்  முனிவர்கள்  கவிஞர்கள் பட்டியல்-4

ரிக் வேதத்தில் ஏறத்தாழ 400  புலவர்கள், ரிஷிகள், கவிஞர்கள்  பெயர்கள் உள்ளது .

அவர்களுடைய பெயர்களை வேத அநுக்ரமணி  தருகிறது.அதுதான் உலகின் முதல் INDEX இன்டெக்ஸ். .

இதோ நாலாவது பகுதி …..

155.தேவஸ் ரவா யாமயான 10-17

தேவாஹா  10-51, 10-53

தேவாதிதி காண்வ 8-4

தேவாபி ஆர்ஷ்டிசே ன 10-98 (மஹாபாரத காலம் )

த்யு  தான மாருத  8-96

த்யும்ன விஸ்வசர் சனி ஆத்ரேய 5-23

த்யும்னிக வாசிஷ்ட 8-87

த்ரோண சார்ங்க 10-142 (மஹாபாரத காலம் )

த்வித ஆப்த்ய 9-103

த்வித ம் ருக்த வாஹ ஆத்ரேய 5-18

தருண ஆங்கிரஸ 5-15

த்ருவ ஆங்கிரஸ 10-173

நபஹ  ப்ரபேதன வைரூப 10-112

நர பாரத்வாஜ 6-35/36

நஹுஷ மானவ 9-101

நாபாக காண்வ 8-39/42

நாபானெதிஷ்ட மானவ 10-61/62

இது முக்கியமான பெயர். மநு சொன்னதைக் கேட்காமல் முரண்டு பிடித்ததால் சுமேரியாவுக்கு அனுப்பப்பட்டவர்.

இதிலுள்ள பெயர் உத்தானபிஷ்டிம் என்றும் பைபிளில் நாபா= நோவா என்றும் பாரசீக ஜொராஷ்டிரர் புஸ்தகங்களில் இதே எயரிலும் உள்ளதால் பிரளய காலத்துக்குப் பின்னர் இந்துக்கள் சுமேரியா முதலிய இடங்களுக்குச் சென்றதற்கு நல்ல இலக்கிய சான்று கிடைத்துள்ளது.

நாபானெதிஷ்ட மானவ  என்றால் மநுவுக்கு  அடுத்து வந்தவர் என்று பொருள்.

நாரத காண்வ 8-13; 9-104/105

நாராயண 10-90

இதுவும் முக்கியமான பெயர். நாராயண என்பதற்கு நீரையே இருப்பிடமாகக் கொண்டவர் என்று பொருள். இந்த நீர் என்பது ரிக் வேதத்தில் வருவதை வைத்து சில அரை வேக்காடுகள் ரிக் வேதத்தில் தமிழ்ச் உள்ளது என்று உளறிவைத்தனர். ஆனால் நீரெய்ட்ஸ் Nereids என்ற நீர்த்த தேவதைகளை தமி ழுக்கம் முந்தைய கிரேக்க புராணக்  கதைகள் காட்டுகின்றன. கிரேக்கத்தில் ஒரு சொல் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலம் உடைய சொல் என்பது வெளிநாட்டினர் வாதம். ஆனால் நான் எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் அது பிழை என்று காட்டியுள்ளேன். சுமார் 50 தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் உள்ளன. இவை அலெக்ஸ்சாண்டர் காலத்துக்கும் முந்தியவை. ஆகவே தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றே; அதிலிருந்து சென்றவைதான் அந்தச் சொற்கள் என்றும் திராவிட மொழிகே க்கு டும்பம் என்பது பிதற்றல் என்றும் காட்டியுள்ளேன்.

நித்ருவி காஸ்யப 9-63

நீபாதிதி காண்வ 8-34

ந்ர் மேத ஆங்கிரஸ 8-89/90, 98/99, 9-27, 9-29

நர மேரு என்ற பெயரை எகிப்திய மன்னர் பட்டியலில் கி.மு.3000 லும்,  நப தேவர மண்டூகதேவ என்ற பெயரை கி.மு.2000 லு ம் காணலாம்.

நப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆகாயம், வானம் என்று பொருள்.

நேம பார்கவ 8-100

நதா கெளதம 1-58/64; 8-88; 9-93

பதங்க ப்ராஜாபத்ய 10-177

பரமேஷ்டி ப்ரஜாபதி 10-129

பராசர சாக்த் ய 1-65/73; 9-97;

பரு ச்சேப தைவோதாசி 1-127/139

182.பர்வத காண்வ 8-12; 9-104/5

பவித்ரா ஆ ங்கிரஸ 9-67;9-73,9-83

பரசுராம ஜமதக்னி  10-110 (ராமர் காலத்து ரிஷி)

பாயு பாரத்வாஜ 6-75

புனர்வத்ஸ காண்வ 8-7

புருமீள ஆங்கிரஸ 8-71

புரு மீள செளஹோத்ர 4-43/44

புருஷமேத ஆங்கிரஸ 8-8/90

புரூருவ ஐல 10-95,

புருஹன்மா  ஆங்கிரஸ 8-70

புஸ்திகு காண்வ 8-59

பூத தக்ஷ  ஆங்கிரஸ 8-94

பூரண வைஸ் வாமித்ர 10-160

பூரு ஆத்ரேய 5-16/17

ப்ருது வைன்ய 1-48

முன்னர் கண்ட பரசுராமர், புரூரவஸ், ப்ருது , வேனன்  ஆகியோர் கதைகள் புராணங்களில் விரிவாக உள்ளன. டிக் வேதத்தை வரலாறு என்று நம்புவோர் இந்தப் புராணக் கதைகளையும் வரலாறு பூர்வ மன்னர்கள் என்றே கருத வேண்டும்

ப்ரசத்ர காண்வ 8-56

பெளர ஆத்ரேய 5-73/74

ப் ரகாத காண்வ 8-1, 8-48, 8-62/65

ப்ரசேத ஆங்கிரஸ 10-164

ப்ரஜாபதி பரமேஷ்டி 10-129

ப்ரஜாபதி வாகிய 3-38; 3-54/56; 9-84

ப்ரஜாபதி வைஸ் வாமித்ர 3-38, 3-54/56; 9-101

ப்ரஜாவான்  ப்ரஜாபத் ய 10-183

ப்ரதர்தன காசிராஜ 9-96, 10-179

இது முக்கியமான பெயர்; மஹாபாரதத்தில் காசிராஜாவின் புத்திரிகள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்போர் எப்படி கதையின் போக்கையே மாற்றுகின்றனர் என்பதை அறிவோம். வேத காலத்திலேயே காசி மன்னன் இருப்பதும் அவன் பெயர் பிரதர்தனன் என்பதும் தெரிகிறது. . இதே பெயர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும்  மிட்டன்னியன் நாகரீகத்திலும் (MITANNIAN CIVILIZATION 1380 BCE  கி.மு.1380) வருவது குறிப்பிட்டத்தக்கது. காசி முதல் துருக்கி வரை கி.மு 1380க்கும் முன்னரே, மன்னர் பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது

இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். மஹாபாரத உத்தியோக பர்வமும் திவோதாசன் புத்திரன், மாதவியின் மகன், யயாதியின் தெளஹித்திரன் (அபிதான சிந்தாமணி , பக்கம் 1119) என்று கூறுகிறது. சத்ருஜித் என்பது மறறொரு பெயர் என்றும் சொல்கிறது. ஆக இது மிகவும் பிரபலமான  பெயர். துருக்கி வரை சென்றுவிட்டது. யயாதி என்ற பெயரில் மூவர் இருப்பது போல பிரதர்தனன் பெயரிலும் பலர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.

ப்ரதி க்ஷத்ர ஆத்ரேய 5-46

ப்ரதி ப்ரப ஆத்ரேய 5-49

ப்ரதி பானு  ஆத்ரேய 5-48

209.ப்ரதி ரத  ஆத்ரேய 5-47

SO FAR 209  RISHI NAMES LISTED

TO BE CONTINUED…………………………………….

tags- ரிக் வேத ரிஷிகள்,  புலவர்கள்,  முனிவர்கள் , கவிஞர்கள் ,பட்டியல்-4,