Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
*இனிய பொங்கலோ பொங்கல்*
அன் *பால்* நனைத்த
*அரிசி* யாம் நல்லறமும்
இன்பப் *பயறும்*
இள *நெய்* நல்மனமும்
*வெல்லப்* பேச்சும்
*வெண்பருப்பு* மென்சிரிப்பும்
நல்ல பழக்க *நறுந்தேனமுதும்*
*கற்கண்டுச்* சொற்கொண்ட
*கரும்பும்* உபசரிப்பும்
பொற்புஎனும் *முந்திரியும்*
பொறையான *திராட்சைகளும்*
*ஏலக்காய்* வாசனையாய்
எளிமையும் *குங்குமப்பூ*
போலத்தான் நடத்தை
பொலிவும் *பசுமஞ்சள்*
மங்களமாய் நமக்குள்ளே
மலருமருட் *சூரியனாய்ப்*
*பொங்கியதா, அன்பர்களே!*
பூத்துக் குலுங்கிடுங்கள்!
*கனிமரமாய்க்* கொட்டிக்
*கனுப் பொங்கல்* காணுங்கள்!
இனியதி *தை* புதியதி *தை*
என்றுமி *தைப்* பேணுங்கள்!
நலந்தரும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
மீ. ரா
14-1-2022
SRI M. RAJAGOPALAN (MEE.RAA) IS A SCIENTIST WORKING IN LONDON. HE HAS WRITTEN POEMS ON ALL TEMPLES AND GODS IN LONDON AND DONATED THE MONEY TO THE RESPECTIVE TEMPLE RECIVED THROUGH THE SALE OF HIS BOOKS. HE HAS TRANSLATED BHAGAVAD GITA IN TAMIL VERSES AS WELL. HIS RECENT POEMS ARE GIVEN BELOW
பாரதி யார்!
பாரதி யார்? ஞானத்தீ! பைந்தமிழின் தேனூற்று!
வாரிதி யாய்த்தமிழின்பம் வார்த்தமழை மேகம்!
பாரதி காரிஎனப் பரம சுகப் பெருஞானத்
தேரதி காரத்தால் தெருவிலிட்ட குருவான
சாரதி! தீரமுனி! சத்தியத் தணற்துண்டு!
நேரதி காரமினி நிலம்பிறந்தார்க் கேஎன்று
கூறிஎழும் வெண்சங்கு! கோபுரத்து மணியோசை!
வீரியத்தை உள்ளத்துள் விதைத்த தமிழ்விவசாயி!
பித்தன்! மதிசூடும் பெருமானைப் போற்கந்தல்
சுத்தித் திரிந்த சுடர்விளக்கு! சக்தியுமை
பக்தன்! பெண்குலத்தைப் பணிந்த மாமேதை!
சித்தன்! சுதந்திரத்துச் சிந்துதரும் பொன்வண்டு!
வார்ப்பான் விடுதலையை வரவைப்பான் தீக்குள்விரல்
சேர்ப்பான் சிரித்துசுகம் செய்யும் எனச்சொல்வான்!
பார்ப்பான் வையத்தைப் பரசக்தி வடிவென்பான்!
வேர்ப்பான் தமிழரிடம் வீரமுரம் கொள்ளென்பான்!
முண்டாசு! நெற்றியொளி முகப்பு பரஞானம்!
கொண்டாடச் சுட்டுவிழி! கூர்மை எனமூக்கு!
வண்டாடுங் கண்ணுக்குள் வளர்கருணை கூர்மீசைத்
துண்டாடும் செவ்வாய்! தூயதமிழ் மடைதிறப்பு!
மின்னல்! தமிழ்முழக்கு மேகம் பெருகுமிடி!
கன்னல்! வழிகாட்டி! கத்திமுனைப் புத்திமதி
தின்னத் தருவமுதம்! தென்னகத்து ஞானவொளி
என்னவொரு பிறப்பு! எந்தைகவி பாரதியார்!
கோழை களைக்குட்டிக் குனியாமல் தலைநிமிர்த்தி
வாழவழி செய்த வைர மனச்செம்மல்!
ஏழையென இருந்து எல்லாமும் கொடுத்தளித்த
வாழை! பாரதியார் வாழ்க்கையினி நம்பாடம்!
மீ. ராஜகோபாலன் (11-12-2021)
XXXX
அருட் குரு பகவான் ரமணர் ஜெயந்தி (30-12-2021)
Poem by M Rajagopalan
tags – Mee.Raa, ரமணர் ஜெயந்தி, பாரதி யார், பொங்கலோ பொங்கல், மீ.ரா. மீ ராஜகோபாலன்
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,560 Date uploaded in London – – 14 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
சூரிய தேவனே, உன்னைத் தொழுது போற்றுகின்றோம்! ச. நாகராஜன்
மகர சங்கராந்தி! சூரியன் தன் பாதையை மாற்றுகின்ற காலம்! உத்தராயணம் பிறக்கிறது. உலகத்தில் உள்ள நாகரிகங்கள் அனைத்தும் போற்றும் உயிர் காக்கும் அற்புத மஹரிஷி சூரியன்! இந்தப் பாதைக்காகத் தான் காத்திருந்தார் பீஷ்ம பிதாமகர், தன் இருப்பிடம் ஏக! சிவ பிரான் சூர்யாஷ்டகத்தில் ‘மகாபாபஹரம் தேவம்’ என்று பலமுறை போற்றும் அற்புத பகவான் சூரியன்.
தேவி பாகவதம் சிறப்புக்களைக் கூறி வியக்கும் தேவன் சூரியன். பாரதியார் ஞாயிறு வணக்கம் என்று கூறி கவிதைப் பாமாலை சூடி மகிழும் அற்புத கிரகம் சூரியன். மயூர கவி சூரிய சதகம் பாடி தொழுது தன் நோயைப் போற்றிக் கொண்ட வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. நவ கிரக நாயகன் சூரியன். ஜோதிடம் வியக்கும் அற்புத காரகன் சூரியன். சூரியனார் கோவிலில் குடி கொண்டு அருள் பாலிப்பவன். கஹுராஹோ கோவிலில் வியக்க வைக்கும் சிற்பங்களுடன் தன் புகழ் பரப்புபவன்.
நூற்றுக் கணக்கான கோவில்களில் தன் ஒளிக்கதிர் கொண்டு சிவபிரானைத் தொழுபவன். ஆகவே அக்கோவில்களுக்கு சூரிய பூஜைக் கோவில்கள் என்ற சிறப்பைத் தருபவன். மாமல்லபுரத்தின் குகைச் சிற்பங்களில் சூரியன் சித்தரிக்கப்படுகிறான். சோழ மன்னர்கள் தங்களைச் சூரிய குலத்தவர் என்று எழுதி வைத்துள்ளனர்.
சூரிய சந்திரர் என்று வால்மீகி ராமாயணத்தில் பல முறை பல எடுத்துக்காட்டுகளுக்கு ஆதாரமாகத் திகழ்பவன். சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் வைத்துத் தன் கவிதா சக்தியினால் பல அபூர்வ உண்மைகளைத் தருபவன் கம்பன்.
அவனொத்த மஹா கவிஞர்கள் தங்கள் தங்கள் கவிதைகள் மூலம் அவனை ஏற்றிப் புகழ் அடைகின்றனர். 108 நாமங்களால் சூரிய அஷ்டோத்திரம் சொல்பவர்களுக்கு அருளை வாரி வழங்குபவன்.
வெல்ல முடியா ராவணனை வெல்ல அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருத்ய ஸ்தோத்திரத்தை ராமருக்கு அருள அதைத் துதித்து முக்கோடி வாழ்நாளைக் கொண்ட ராவணனின் வாழ்நாளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார் இராம பிரான். ‘சுட்டும் விழிச் சுடர் தான் சூரிய சந்திரரோ’ என்று பாரதி பெண்ணின் கண்ணுக்கு உவமை கூறும் பெருமை படைத்தவன் சூரியன்.
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி TO SOPHIA என்ற கவிதையில் ‘THY DEEP EYES, A DOUBLE PLANET’ என்று கூறி அவன் புகழ் பாடிப் பெருமைப் பட வைத்தவன். பொழுது புலர்ந்தது என்று திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாட்டுக்களை அருளிய மூல காரணத்துக்குரியவன்.
உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் ஜீவனைத் தருபவன்; பரிபாலிப்பவன்.
தாவரங்களுக்கு உயிர் ஆற்றலைத் தருபவன். ஒரு நொடியில் அவன் தரும் சக்தியைப் பெற பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலையும் வியக்க வைப்பவன். தன் ஒளியால் பல கிரகங்களையும் பரிபாலிப்பவன். சௌரம் என்ற ஆண்டுக் கணக்கைத் துவக்கி வைப்பவன். பல புராணங்களில் பல்லாயிரம் ஸ்லோகங்களால் துதிக்கப்படுபவான்.
ஏழு குதிரைகள் கொண்டவன். ஏழு வண்ணத்தான். எழுத ஒண்ணா வண்ணத்தான். ஒற்றைச் சக்கரத் தேரைக் கொண்டவன்.
மயூர கவியின் சூரிய சதகத்தில் ஒரு ஸ்லோகத்தை இங்கு பார்த்துப் பரவசமடைவோம்:
தாமரை மலர் மஹாலக்ஷ்மியின் இருப்பிடம். அவள் மலரப் போகும் தாமரை மலரின் ‘மொக்கு’ என்ற குடிலில் ஒளிந்து கொண்டிருப்பவள். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு லக்ஷ்மியின் கடைக் கண் பார்வையும் அதனால் செல்வம் உண்டாக வேண்டும் என்ற நோக்கத்தால், கிரணங்கள் என்ற தனது கைகளால் தாமரை மொட்டுக்களைச் சூரியன் திறந்து விடுகிறான். உடனே உள்ளே இருக்கும் லக்ஷ்மி தென்படுகிறாள். அவளது பார்வை பக்தர்களின் மீது விழுகிறது. பக்தர்கள் உடனே செல்வந்தர்கள் ஆகின்றனர். இதற்காகவே தான் சூரியன் தாமரை மலரை மலரச் செய்கின்றானோ!
இருள் கருமை நிறம். யமனைப் போன்றது. யமனோ மக்களின் உயிரை வாங்கி விடுகிறான். மக்களின் உணர்வை இருள் வீழ்த்தி விடுகிறது.
சூரியன் தன் பல்லாயிரக்கணக்கான கிரணங்களால் யமனைப் போன்ற இருளை வீழ்த்தி ஒழித்து மக்களின் சங்கடங்களைப் போக்கி அவரவர் செயல்களில் ஈடுபடச் செய்கிறான். இப்படி மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் சூரிய பகவானின் மாந்துளிர் போலச் சிவந்த இளம் கதிர்கள் உங்களைக் காக்கட்டும்.
இப்படி அற்புதமான கருத்துக்கள் உடைய நூறு ஸ்லோகங்களால் சூரியனைத் துதித்து மகிழ்கிறார் மயூர கவி! நம்மையும் மகிழ வைக்கிறார்.
பொங்கல் நன்னாளில் சூரிய பூஜை செய்வோம்! சிறப்போம்!
அனைவருக்கும் எமது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
tags- பொங்கல் ,வாழ்த்துக்கள், மகர சங்கராந்தி, சூரியன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
The pictures are shared between swamiindologly.blogspot.com and tamilandvedas.com. So far four parts were posted in both the blogs (2+2) in the past two days.
This is fifth part .
(1,3,5 parts are posted in tamilandvedas and 2,4,6 are posted in swamiindology.blogspot.com)
tags- part-5, old german book, rare pictures, Ajanta, Sigiriya
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET ME CONTINUE MY COMMENTARY ON BHUMI SUKTA IN ATHATHARVANA VEDA (A.V.)
A.V.BOOK 12; HYMN 1 WITH 63 MANTRAS
We have already seen 20 out of 63 mantras or stanzas. See the attachments for original Sanskrit and English translation of the mantras.
MY COMMENTS
Mantra 21/ Stanza 21
Here the poet echoes the most famous Gayatri Mantra found in all the Four Vedas
“May Mother Earth sharpen me bright and make me aflame”
Compare it with the Gayatri Mantra.
“We meditate on that most adored Supreme Lord, Sun/the creator, whose effulgence (divine light) illumines all realms (physical, mental and spiritual). May this divine light illumine our intellect. (May He stimulate our intellect)”
Earth is described as ‘clad in her fiery mantle’. It is a beautiful scientific description. Earth is alive and kicking . The space shuttle pictures and Hubble telescope pictures show it with all the illuminated areas. When the Vedic poets sang, there was no electric light. But the millions or billions of Yaga Fire illuminated the Earth. That is what made the poet to say ‘Agnivasa/Fiery Mantle.
xxx
Mantra 22/ Stanza 22
Here the poet describes the decorations and fire altars and the happy men and women wandering. In another hymn a Vedic poet says ‘let us decorate like a mother decorating/beautifying her child’. All men and women do this to their children. Vedic poets describe also the bedecked, bejewelled brides. So we may get a good picture of decorated fire altar or the entire earth.
I am reminded of two anecdotes-
Sakuntala, the forest beauty, the heroine of world famous Sakunatala Drama of Kalidas decoratesthe forest. Y/Jugal Prasad, the hero in Aranyak Novel of Bengali writer Vibhuti Bhushan Vandopadhyaya decorates the forest by planting newer species in newer areas in different parts of the forest. He waits for a whole year and feels very happy when they bloom in those areas. He decorated the forest without expecting anything.
Aranyak, Bibhutibhushan Bandyopadhyay
The Vedic poet prays also for healthy and long life. The word Jara for old age gives the word Gerontology in European languages.
Xxx
Mantra 23/ Stanza 23
Those who live in villages are very familiar with the fragrance from the earth. For city dwellers it is a rare commodity; in fact, they did not know what it is. He talks about the fragrance in rivers, the plants. Here the word ‘Gandha’ for good smell and fragrance is very important. We find the heavenly singers Gandharvas and heavenly dancers Apsarasses through out Rig Veda (RV) the oldest book in the world. Gandharvas mean sweet smelling. Apsaras are their wives. According to one AV hymn, there are 6333 Gandharvas. We don’t know the significance of this number. Wherever the Number meaning is not known, Western translators reject or ridicule them as ‘fanciful’, ‘meaningless’ numbers!!!
“May no one hate me is added in many stanzas.”
When the poet says it, there is a hidden message. One should not hate another in this beautiful world- The Big Blue Marble. That is why after describing the beauty of earth, he adds it again and again.
Xxxx
Mantra 24/ Stanza 24
Traditional Hindu marriage is celebrated for 4 days. Now a days it is shortened to half a day because of the expenses and travels involved in it. No one celebrates marriage like a Hindu. The decorations and the jewellery involved in it beats all imaginations. The most popular Wedding Mantras in the RV 10-85 and AV 14 give full details where the bride is described ‘You are the Queen’. It elevates women to the highest place. The mantra projects Surya’s bride as an ideal bride. That Surya bride comes in many other Vedic hymns. The poet prays that he should also have the same fragrance as that girl. One who has seen a Tamil Brahmin Family Wedding would know the fragrance of flowers, sandal, Kumnkum, Turmeric and Kasturi. In addition to it, they make fragrance powder with various ingredients. They use it in the bath. (Known as Srivilliputur Andal Snana Powder).
Here the fragrance entering Lotus is also mentioned by the poet. Lotus is the National flower of India. In Tamil the word for Flower and Lotus is same- MALAR. So we may take it as the representative of all flowers. Like peacock, the lotus flower is praised as Satapatra (100 petalled) in Sangam Tamil literature and Sanskrit literature.
Sangam Tamil poems Aka Nanuru 86 and 136 also describe the beautiful Hindu Weddings.
In short, the poet looks at all that is ‘positive on earth’ and then gives the message ‘please don’t hate anyone’ in such a beautiful place called Mother Earth. Throughout the 63 stanzas feminine pronoun SHE is used for Mother Earth.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 10
அதர்வண வேத பாடல் / மந்திரம் 25,26,27 ஆகிய மூன்றையும் படித்தால் மனிதன், மிருகங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தையும் புலவர் குறிப்பிடுவதைக் காணலாம். இவை அனைத்திலும் உள்ள வாசனை அனைத்தும் , அதாவது நல்ல குணங்கள் அனைத்தும் என்னுள்ளே இணைய பூமா தேவி அருள் புரியட்டும் என்பது பிரார்த்தனை . “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (உறவினர்) என்ற புறநானூற்று வரிக்கும் ஒரு படி மேலே சென்றார் பாரதி.
காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் ;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம் — பாரதி.
இவை எல்லாம் வேதத்தில் இருக்கிறது என்பதை அதற்கு முந்திய இரண்டு வரிகளில் பாரதியார் சொல்லிவிடுகிறார்.
வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் –
என்று பாடுகின்றார்
மந்திரம் 24ல் இறவாத தன்மையுடைய ‘அமர்த்யாஹா /தேவர்கள்’ என்ற சொல் வந்துவிட்டது. என்னையும் அப்படி ஆக்குக என்று வேதப்புலவன் வேண்டியதையும் கண்டோம். ஆக மொத்தத்தில் இந்த பூமாதேவியின் மேல் வசிக்கும் ஒரே இனம்! பூமி என்பது சுவாசிக்கும் ஒரு உயிர் (Earth is living; earth is breathing) என்ற கருத்து வேத காலத்திலேயே வந்துவிட்டது. இப்பொழுது ஆண்டு தோறும் ஒருநாளை ஒதுக்கி அன்னை பூமியைக் காப்பாற்றுக (Save Mother Earth Day) என்று கொண்டாடுகிறார்கள். அதை வேத காலத்திலேயே சொல்லிவிட்டார்கள் இந்துக்கள். பூமியை அன்னை என்று 63 பாடல்களில் / மந்திரங்களில் போற்றும் புலவன்/ முனிவன் ஒரு பாடலில் பூமாதேவி ‘கல் , மண் , தூசியால் ஆனவள்’ என்றும் பாடுகிறான் (காண்க மந்திரம் 26)
இதை யெல்லாம் சொல்லிவிட்டு, தாயே உன்னை வணங்குகிறேன் என்கிறார் முனிவர்/புலவர்.
அதர்வண வேத மந்திரம் 25-ஐ உற்று நோக்கினால் இது மேலும் விளங்கும் ; அதில் ஆண்கள், பெண்கள், மகன்கள் , குதிரைகள், காட்டு மிருகங்கள் , யானைகள் , தள , தள , பள பள கன்னிப் பெண்கள் — எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லும் புலவன் — இவர்களிடையே உள்ள ஒளி, வனப்பு பள பளப்பு , ஆகிய அனைத்தும் என்னுள் புகட்டும் என்று வேண்டுகிறார். காட்டு மிருகமானாலும் 16 வயது இளம் மங்கையானாலும் — அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு உண்டு என்ற கருத்து வேத கால மக்கள் மனதில் பதிந்திருந்தது.
மந்திரம் 27-ல் தாவரங்கள் அனைத்தும் வந்து விடுகின்றன.
மந்திரம் 28 இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, தாண்டும்போது இடது, வலது கால்கள் தடுமாறக் கூடாது என்று வேண்டுவது விநோதமாகத் தோன்றும்.
ஆனால் பிராதஸ்மரணம் என்னும் காலை வழிபாடு செய்வோருக்கு இது வியப்பாக இருக்காது. படுக்கையில் இருந்து எழுந்திருந்து பூமியில் காலை வைத்து மிதிப்பதே தவறு என்று எண்ணி, இந்துக்கள் மன்னிப்பு கோருகிறார்கள்; அவ்வளவு மதிப்பு. அதாவது இந்துக்கள் உதட்டளவில் பூமியை வெறுமனே புகழவில்லை. அடி மனத்தின் ஆழத்திலிருந்து பூமாதேவியை உயிருள்ள அன்னையாகவே மதித்தனர் ; ஆகையால் தாயே கோபித்துக் கொள்ளாதே! என் நடையும் செயல்பாடும் நன்றாகவே இருக்கட்டும் என்கிறார்.
இப்படி நமக்கு நாமே சொல்லிக்கொள்வது நமக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அதிகரிக்கும் ; இதை ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestionஎன்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நம் வீட்டில் சின்னக் குழந்தைகள் “எனக்கு கணக்கு வராது , படிப்பு வராது, பாட்டு வராது” என்று சொன்னால், நாம் தைரியம் ஊட்டும் சொற்களை சொல்லுகிறோம். உடனே அவர்கள், செய்ய முடியாததை செய்கிறார்கள்; இதே போல நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டிக்கொள்ளும் வாசகங்கள் வேதத்தில் மிக மிக அதிகம்.
சில வரிகளை புலவர் மீண்டும் மீண்டும் சொல்வதும் இதனால்தான்; என்னை யாரும் வெறுக்கக் கூடாது என்று அவர் திரும்பத் திரும்ப சொல்லுவதில் மறறொரு செய்தியும் உளது. அதாவது நீயும் யாரையும் வெறுக்காதே; பாரதியார் வரியில் ‘உலகு இன்பக் கேணி ‘.அதையும் வேதம் சொல்வதாகவே பாரதியார் பாடுகிறார் !
இதோ சான்று
சமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
“ஆழி சூழ் உலக நாயகியே! மலைகளை முலைகளாக உடைய என் தாயே !
விஷ்ணுவின் மனைவியே ; உனக்கு என் பணிவான வணக்கங்கள் உரித்தாகுக :
என்னுடைய கால்களை உன்மீது வைக்கிறேன் ; அதைப் பொறுத்து அருள்வாயாகுக”
என்ற மந்திரத்தைச் சொல்லி விட்டு ஒவ்வொரு இந்துவும் எழுந்திருக்கிறான். அதற்கு முன்னர் கண்களை விழித்தவுடன் வலது கையைப் பார்த்து
கராக்ரே வசதி லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கோவிந்தஹ ப்ரபாதே கரதர்சனம்—
என்று சொல்லி கரத்தில் உள்ள எல்லா கடவுளரையும் வணங்குகிறான் . பூமியின் மீதும் தன உடலின் மீதும் மனிதக்குள்ள மதிப்பை, மரியாதையை அதர்வண வேத பூமி சூக்தத்திலும் “காலை நினைவுகள் / ப்ராத ஸ்மரணம்” என்ற துதியிலும் காண்கிறோம். (இந்த மந்திரம் சிறிது மாறுதலுடனும் சொல்லப்படும்; ஆனாலும் கடவுளர் பெயர்களில் மாற்றம் இல்லை )
கோடிக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்றும் இந்த காலை வழிபாட்டை, அவர்களுடைய ஷாகாக்களில் சொல்வது சிறப்புடைத்து.
Xxxxx
இதோ அதர்வண வேத பூமி சூக்த (AV; Book 12; Hymn 1) மந்திரங்களும் அவற்றின் பொருளும்:–
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,556 Date uploaded in London – – 13 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜனவரி 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1 ச.நாகராஜன்
இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.
ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.
இதோ நூறு வழிகள் :-
உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்! ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!
கேள்வி கேளுங்கள் : எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள். இசையை அனுபவியுங்கள் : இசைப் பிரியராக இல்லாத ஒருவரை உலகில் காண்பது மிகவும் அரிது. இசையைக் கேட்கும் போது மூளை ஆற்றல் கூடுவதையும் வாக்கு வன்மை கூடி சரளமாகப் பேச முடிவதையும் ஆய்வுகள் கண்டுள்ளன. குறிப்பாக கரோனரி ஆர்டிரி வியாதி (Coronary artery disease) உள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த கர்நாடக, ஹிந்துஸ்தானி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்டு அமைதி பெறலாம். வாக்கு வன்மை இரட்டிப்பாகக் கூடுவதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வியப்பு தான் அடைய வேண்டியிருக்கிறது. இசை கேளுங்கள்!
கற்றுக் கொண்டே இருங்கள் : ஒரு விஷயத்தைக் கற்கும் போது நியூரான்கள் மற்றும் அவற்றின் இடையே உள்ள இணைப்புகள் ஆகியவற்றின் அளவும் அமைப்பும் மாறுகின்றன. படிப்பதால் மட்டும் கற்க முடியும் என்பதில்லை. புதிய இடங்களுக்குப் போவது, ஒரு புதிய மொழியை அறிவது, ஒரு புதிய இசையைக் கற்று நாமே பாடுவது, ஒரு இசைக் கருவியைக் கற்பது, ஏன் இணைய தளத்தில் ஒரு புதிய தகவலைத் தேடுவது இவை எல்லாமே கற்பதற்கான வழிகள் தாம்!
நண்பர்களைப் பெறுங்கள். மனிதர்கள் கூட்டு சமூகத்தால் வாழ்பவர்கள். தனியாக ஒருவரால் வாழவே முடியாது. உறவுகள் மூளையை மேம்படுத்தும். மற்றவர்களுடன் ஊடாடி மகிழ்வது, உண்மையிலேயே மூளைக்கான சிறந்த பயிற்சி. நண்பனில்லா மனிதன் பாழ்! மன அழுத்தத்தைக் குறையுங்கள். அது தான் மனிதனின் முதல் எதிரி. தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் அது மூளை செல்களைப் பாதிக்கிறது. நினைவாற்றல் திறன் குறைகிறது. ஆகவே வாழ்க்கையை லகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். சிரித்து மகிழுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து என்ற அனுபவ மொழி அற்புதமான உண்மை. அது மூளைக்கும் நினைவாற்றலுக்கும், உடலுக்கும் அற்புதமாகப் பொருந்தும். ஜோக்குகளும், பஞ்ச் டயலாக் வரிகளும் மூளையைக் கற்கச் செய்கிறது; படைப்பாற்றல் திறனைக் கூட்டுவிக்கிறது.
எதையும் நேர்த்தியாக வைத்திருங்கள் : இந்தியரிடம் இருக்கும் மகத்தான குறை எதையும் நேர்த்தியாக நிர்வகிக்காமல் கன்னா பின்னாவென்று அலங்கோலமாக வைத்திருப்பது தான். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். இது மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. விஷயங்களை எளிதாக்குகிறது. படபடப்பைத் தவிர்க்கிறது. டெஸ்கிலிருந்து மட்டும் குப்பைகளை அகற்ற வேண்டாம். மூளையிலிருந்தும் அனாவசிய விஷயங்களைத் தேக்காமல் அகற்றி விடுங்கள்.
பகல் கனவு காணுங்கள் : பகல் கனவை அனுபவித்துக் காண்பது மூளைக்கான சிறந்த பயன் தரும் ஒன்று. மனம் அங்கும் இங்கும் அலை பாயும் போது பிரச்சினைக்கான தீர்வைக் காணும். இது ஆய்வின் முடிவு. பல மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இது அமைந்துள்ளது.
கையினால் எழுதுங்கள் : நாம் மறந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் கையினால் எழுதுவது. வார்த்தைகளை எழுதிப் பார்ப்பதால் மூளை ஆற்றல் கூடுகிறது; கற்றல் மேம்படுகிறது. நினைவாற்றல் கூடுகிறது.
மூளை விளையாட்டுக்கள் எனப்படும் ப்ரெய்ன் கேம்ஸ் – Brain Games – பலவற்றை விளையாடுங்கள். மூளையில் உள்ள வெவ்வேறு பகுதிகள் புதிர்களை விடுவிக்கும் போதும், விடுகதைகளை விடுவிக்கும் போதும் புதிய தொடர்புகளைப் பெறுகின்றன; மூளைத் திறனைக் கூர்மையாக்குகின்றன.
தொலைக்காட்சியைப் பாருங்கள். தொலைக்காட்சியை அளவோடு அதாவது ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் பார்ப்பது மூளை ஆற்றலை வளர்க்கிறது. நேரடிப் பேட்டியில் பங்கு கொள்வோரில் பலர் இப்படி தொலைக்காட்சியை அளவோடு பார்ப்பதால் மிகத் திறமையுடன் பதில் அளிக்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரே வழியில் தினமும் போகாமல் சற்று வழியை மாற்றிப் பழகுங்கள். இப்படிப் புதிய செயலைச் செய்வதால் டோபமைன் வெளியாகிறது. அது புதிய நியூரான்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் நகரைப் பற்றி நன்கு அறிந்து அதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆய்வு ஒன்றில் நகரத்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் இடம் பற்றி அறியும் மூளைப் பகுதிகளில் வல்லுநர்களாக இருப்பது தெரிய வருகிறது.
ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள். மோட்டார் கண்ட்ரோல், கேட்டல், பார்க்கும் பகுதிகள் எனப்படும் மூளைப் பகுதிகள் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களிடம் மற்றவர்களை விட அதிகத் திறனுடன் இயங்குவதை ஆய்வு கூறுகிறது. உரக்கப் படியுங்கள். எதையேனும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உரக்கப் படித்துப் பழகுங்கள். உரக்கப்படித்தால் நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிறது.
ஒரு புதிய மொழியைக் கற்க ஆரம்பியுங்கள். மூன்று மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக ஐ க்யூ கொண்டிருக்கின்றனர். அல்ஜெமீர் வியாதி உள்ளவர்கள் ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பேடுகளில் குறிப்பெடுங்கள் : உங்கள் கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது நினைவுக்கு ஆதாரமாகவும் இலக்கியத்தை கற்கும் உங்கள் மூளையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆக்ஸிஜனோடு கூடிய இரத்தைத்தை கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆகவே தான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் படி தூண்டுகின்றனர்.
மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். மற்றவர்களுக்கு எதையேனும் கற்பிக்கும் போது நீங்கள் தகவலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது. அதைப் புதிய முறையில் திருப்பி அமைத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் திறன் கூடுகிறது.
ஓவியம் வரையுங்கள். ஏதேனும் ஒரு சித்திரம், படம், ஓவியம் ஒன்றை வரைந்து பாருங்கள். படம் வரைவது வலது பக்க மூளைப் பகுதியின் செயலை அதிகரித்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துகிறது. கலர் பென்சில்கள் உங்கள் மூளையைச் சக்தி உள்ளதாக ஆக்கும் சிறிய கருவிகள்!
ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். வெட்டி அரட்டை, வீண் பேச்சு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் போது மூளை வெகு வேகமாகச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கருத்துக்களை உரிய வார்த்தைகளில் சொல்ல அவசியம் ஏற்படுகிறது. ஆகவே சிறந்த விஷயங்களைக் குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பது மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆகையால் தான் அறிஞர்களிடம் பழகு, நல்லோரை அணுகு என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.
உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் புதிய இடங்களில் செயல்படுவது மூளையை ஊக்கப்படுத்தி மாற்ற வழி வகுக்கிறது. அடுத்த முறை வேறு ரெஸ்டாரண்ட், ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதற்கான வழிகள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பாஸிடிவ் சிந்தனைக்காக மூளையில் உள்ள பகுதிகளைச் செயலாற்ற வைப்பது உங்களால் நிர்ணயிக்கப்பட்ட உங்களின் குறிக்கோளே. வெற்றியைப் பெறச் சிறந்த வழி முதலில் குறிக்கோளை நிர்ணயிப்பது தான்! வாழ்க்கையை வளமாக்க வழி குறிக்கோள் ஒன்றைக் கொள்வது தான்! *** மற்ற வழிகள் தொடரும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.
HERE IS PART 3 (PART ONE AND TWO WERE POSTED YESTERDAY)
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,553 Date uploaded in London – – 12 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 12. நினைவைப் போற்றித் துதிக்கும் அஞ்சலிக் கட்டுரை (அவதார தினம் : 12-1-1863 சமாதி 4-7-1902)
ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்! ச.நாகராஜன்
அறிய முடியா மாபெரும் மஹான்
வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தைக் காக்க வந்த மாபெரும் மஹான் ஸ்வாமி விவேகானந்தர். அவரை யாராலும் அளக்க முடியாது; அவரை யாராலும் முழுவதுமாக அறிய முடியாது. தான் வந்த நோக்கத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டுத் தன் இருப்பிடத்திற்கு மீண்டார் அவர். அவரைப் பற்றிய ஏராளமான அனுபவங்களை அவருடன் பாரதத்திலும் மேலை நாடுகளிலும் பழகியவர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். ஜோஸபைன் மக்லியாட் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தை. அவர் தனது நினைவலைகளில் குறிப்பிடும் சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
ஏன் ஸ்வாமிஜி நீங்கள் தனிப்பட்ட கடவுளைப் புகழ்கிறீர்கள்? ஆல்பெர்டா ஸ்டர்ஜெஸ் (Alberta Sturges) என்பவர் ஜோஸபைனுக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி (Niece). பின்னால் இவர் லேடி சேண்ட்விச் என்ற பெயரால் அறியப்பட்டார். (Lady Sandwich) அவர் ஸ்வாமிஜியின் அளப்பரிய அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்.
எதை எடுத்தாலும் அவரை விஞ்ச முடியாது; அப்படி ஒரு பிரம்மாண்டமான பல்துறை அறிவு.
ரோமுக்கு அவருடன் சென்ற ஆல்பெர்டா அங்குள்ள பல்வேறு இடங்களை ஸ்வாமிஜிக்கு விவரித்தார். ஆனால் அவரே அந்த இடங்களைப் பற்றிய ஸ்வாமிஜியின் பேரறிவைக் கண்டு வியந்து போனார். செயிண்ட் பீட்டருக்கு ஸ்வாமிஜியை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள ரோமன் தேவாலயத்தில் உள்ள அடையாளச் சின்னங்களையும் நகைகளையும் மகான்களின் மீதிருந்த அற்புதமான அணிகலன்களையும் காண்பித்து விவரித்தார். அவர் ஸ்வாமிஜியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் :”ஸ்வாமிஜி! தனிப்பட்ட கடவுளை நம்பாதவர் நீங்கள். அப்படி இருக்க, இங்கு இப்படி மிகவும் போற்றுகின்றீர்களே”
ஸ்வாமிஜியின் போற்றுதலால் வியந்து இந்தக் கேள்வியைக் கேட்ட ஆல்பெர்டாவை நோக்கி ஸ்வாமிஜி, “ஆனால் ஆல்பெர்டா, நீ இதை நன்கு போற்றித் துதிக்கிறாயே! இதற்கு உரிய மரியாதையைத் தந்து தானே ஆக வேண்டும்”. ஆல்பெர்டா நெகிழ்ந்து போனார்.
பணமா, நானா, வாங்கவே மாட்டேன்!
இலையுதிர்காலம் வந்தது. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஸ்வாமிஜி மிஸ்டர் சேவியர் (Mr and Mrs Sevier) தம்பதிகளுடனும் மிஸ்டர் ஜே.ஜே. குட்வினுடனும் (J.J.Goodwin) வந்தார். பிரம்மாண்டமான வரவேற்பு இந்தியாவில் ஸ்வாமிஜிக்காகக் காத்திருந்தது. குட்வின் தான் ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்த சுருக்கெழுத்தாளர். அவர் மிகுந்த திறமைசாலி. கோர்ட்டில் ஸ்டெனோகிராபராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரை 54, வெஸ்ட் 33வது தெருவில் நடந்த ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அழைத்து அனைத்தையும் பதிவு பெறச் செய்தனர். அவை தான் நமக்கு Lectures from Colombo to Almora போன்ற நூல்களில் கிடைத்துள்ளன. ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைச் சுருக்கெழுத்தாக எடுக்கும் அசகாய சூரர் அவர்.
அவரை இந்த பணிக்கு அழைப்பது என்பது நிறைய செலவாகும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் ஸ்வாமிஜியின் ஒரு வார்த்தையைக் கூட யாரும் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அழைக்கப்பட்டார். ஒரு வாரம் சுருக்கெழுத்துப் பணியில் ஈடுபட்ட குட்வின் பின்னர் பணம் வாங்க மறுத்து விட்டார்.
“என்ன ஆயிற்று, உங்களுக்கு?” என்று அவரைக் கேட்ட போது, குட்வின் கூறினார்; ”விவேகானந்தர் தன் வாழ்க்கையையே கொடுக்கும் போது நான் எனது சேவையையாவது கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டார். ஸ்வாமிஜியுடன் உலகம் முழுவதும அவர் கூடவே சென்றார்.
ஸ்வாமிஜியின் வாயிலிருந்து உதிர்ந்த பொக்கிஷமான வார்த்தைகள் ஏழு தொகுதிகளாக வெளி வந்ததற்குக் காரணம் குட்வின் தான்!
இதென்ன நெற்றியில் செங்குத்துக் கோடு?! (நாமம்)
ஜோஸபைன் இந்தியா வந்தார். பம்பாயில் அவரை அளசிங்கர் வரவேற்றார். அவர் நெற்றியில் செங்குத்தான கோடு (நாமம்) இருந்ததைப் பார்த்து வியந்தார் ஜோஸபைன். காஷ்மீருக்கு ஸ்வாமிஜியுடன் ஜோஸபைன் சென்ற சமயம் ஒரு முறை அளசிங்கரைப் பற்றி அவர், “ என்ன பரிதாபம் பாருங்கள், அளசிங்கர் வைஷ்ணவ சின்னத்தை நெற்றியில் போட்டுக் கொண்டிருப்பது?” என்று விமரிசித்தார்.
உடனே அவர் பக்கம் திரும்பிய ஸ்வாமிஜி கடுமையாக, “என்ன, என்ன சொன்னாய் நீ? உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி!” என்று கூறினார். ஜோஸபைனுக்கு ஒன்றும் புரியவில்லை – ஸ்வாமிஜி ஏன் இப்படிக் கடுமையாக வார்த்தைகளைக் கூறினார் என்று. பின்னால் தான் அவர் தெரிந்து கொண்டார்.
அளசிங்கர் தான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துப் பணம் சேர்த்து ஸ்வாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பினார் என்று. அளசிங்க பெருமாள் சென்னையில் உள்ள கல்லூரியில் தத்துவப் பாடம் போதித்தவர். அவருக்கு மாதச் சம்பளம் 100 ரூபாய்கள். தந்தை, தாய், மனைவி, நான்கு குழந்தைகளைப் பேணி குடும்பத்தை அவர் நடத்தி வந்தார். “அவர் அப்படிப் பணம் சேர்த்திராவிடில் ஒரு வேளை எங்களைப் போன்றவர்கள் ஸ்வாமிஜியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று பின்னால் நினைவுக் குறிப்புகளில் எழுதினார் ஜோஸபைன்.
இப்படி ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. படித்தால் வியப்போம், பிரமிப்போம். பிரம்மாண்டமான ஒரு அவதாரம் பூமிக்கு வரும் போது அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு ஒரு பாடத்தை போதிக்கும், இல்லையா! விவேகானந்தரைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் செல்வோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.
HERE IS PART 1
FOLLOWING IS THE I THE REFERENCE TO 2020 POST
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7706
Date uploaded in London – 17 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
FOLLOWING ARE SOME RARE PICTURES ABOUT INDIA IN AN OLD GERMAN BOOK. PICTURES ARE TAKEN AT BERLIN AND LONDON MUSEUMS. SOME ARE FROM INDIA. THE BOOK WAS PUBLISHED IN 1929.