Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-1
ரிக் வேதம் உலகின் பழமையான நூல், உலகின் முதல் கவிதைத் தொகுப்பு (ANTHOLOGY) , இன்றும் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே பழைய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. தள்ளிப்போன, உதவாக்கரை வெளிநாட்டு மண்டுகளும் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது. ஆனால் , வேடிக்கை என்னவென்றால், இப்போது இந்துக்களின் கல்யாணங்களில் பயன்படுத்தப்படும் மந்திரங்களில் உள்ள பல சொற்களுக்குக் கூட நமக்கு அர்த்தம் தெரியவில்லை. சிலர் அவைகளை ஆடைகள் என்பர்; சிலர் அவைகளை தேரின் பாகங்கள் என்பர். தினமும் மாட்டு மாமிசம் சாப்பிடும் பசுக்கொலை பாதகர்கள், அவை கல்யாண விருந்தில் வெட்டப்பட்ட மாமிசத் துண்டுகள் என்பர் . அதாவது ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்வர்.
இந்துக்களைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு அர்த்தமே தேவை இல்லை ; மனித குலம் வாழும் வரை இவைகள் ஒலிக்கட்டும்; நன்மைகள் வந்தெய்தும்; தீமைகள் எல்லாம் நலியும் என்பதே. இந்தக் கொள்கையை அவர்கள் கடைப்பிடித்திராவிடில் இன்று நம் கைகளில் வேதம் தவழாது ; வாய்களில் வேதம் முழங்காது.
குறிப்பாக ஒருவர் இறந்த பின்னர் 12 நாட்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் முழுதுமாக புரிவதில்லை. வெள்ளைக்காரர்கள் 30 பேர், ஆளுக்கு ஒரு கருத்து எழுதி இருக்கின்றனர். இன்று விக்கி பீடியாவில் கிடைக்கும் RALPH T H GRIFFITH கிரிப்பித் மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்புகளில் (FOOT NOTES) ‘எனக்கு அர்த்தம் புரியவில்லை’ என்று பக்கத்துப் பக்கம் எழுதியிருக்கிறார். வேதத்தை முழுதும் படிப்போருக்கு இது விளங்கும்.
நான் ரிக்வேதத்தைக் கரைத்துக் குடித்த கூத்தனுர் ஸ்ரீ சிங்கார சுப்ர மண்ய சாஸ்திரிகளுக்கு ‘உபந்யாச செக்ரடரி’யாக’ இருந்தேன். மதுரை வரும்போதெல்லாம் அவரது உபன்யாசத்துக்கு டி.வி.எஸ். (T V S) நிறுவனத்தார் கார் அனுப்புவார்கள். என் வீட்டிலிருந்து அவருடன் கூடவே சென்று அவர் உபன்யாசத்தைக் குறிப்பு எடுத்து தினமணிப் பத்திரிகையில் பிரசுரிப்பேன்.
அவர் காஞ்சி பராமசாரிய சுவாமிகள் வைத்த ரிக் வேத பரீட்சையில் தேறி, ஒரு வீடு, பசு மாடு, சால்வை, தங்கக் காசு பெற்றவர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த நிலவுலகில் எவ்வளவு காலம் வாழப்போகிறார் என்பதைச் சொன்னவர். “ஏய் சிங்காரம் !என் கைகளில் அக்ஷதையைப் போடு என்று சொல்லி, அதில் கைகளில் தங்கியதை மட்டும் எண்ணிப் பார்த்து ‘ஓ நான் இவ்வளவு ஆண்டுகள் இருப்பேனா’ என்று வியந்தாராம். சாஸ்திரிகளுக்கே தெரிந்திருக்காது எதற்காக அக்ஷதையைப் போடச் சொன்னார் என்று; பின்னர்தான் தெரிந்திருக்கும் . நான் ஆர்வத்துடன் எத்தனை ஆண்டுகள்? என்று சாஸ்திரிகளைக் கேட்டபோது ‘அதல்லாம் சொல்லப்படாது’ என்று பிராமண பாஷையில் பதில் சொல்லிவிட்டார்.
ராமாயண உபன்யாசத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வேத மந்திரங்களை முழங்குவார். வீட்டிற்கு வரும்போது இரவு 10 மணி ஆகிவிடும். முதல் நாள் உபன்யாசத்தில் சொன்ன வேத மந்திரங்களை மறுநாள் காலையில் கேட்டு எழுதி இயன்றவரையில் மதுரை தினமணியில் வெளியிட்டோம்.
வீட்டில் என் அம்மா சாப்பாடு பரிமாறும்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கோ அதை இரவு போஜனத்துக்கு செய்து வைக்கிறேன் என்பார். நாங்கள் எல்லோரும் ஏதோ அரிசி உப்புமா அல்லது இட்டிலி, தோசை என்று சொல்லுவாரோ என்று ஆர்வத்தோடு காது கொடுத்து நிற்போம். அவரோ “நீங்கள் எல்லோரும் பரம க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்து அருளுவார். அப்பேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கும் கூட வேதத்தின் ‘அர்த்தம்’ பெரிதல்ல.
நேரடியாக சப்ஜெக்டுக்கு வருகிறேன்.
பத்தாவது மண்டலத்திலுள்ள மந்திரங்களை முதலில் எடுத்துக் கொள்வோம் .
குளத்தின் நடுவில் பறவை வசிக்கிறது
10-5-1
‘பறவை சுனையின் நடுவே வசிக்கிறது’
ஆஹா, ஒரு கொக்கு அல்லது நாரை , வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ளது போல ஏரியின் நடுவில் மரத்தில் கூட்டு கட்டி வசிக்கிறது என்று நம் நினைப்போம்; ஆனால் விமர்சகர்களெழுதியது : ‘சூரியன் (பறவை) கிழக்கே (சுனையில்) உதிக்கிறான்’ என்பதாகும். ஆகையால் ரிக் வேத விஷயத்தில் வெள்ளைக்காரன் போல அவசரப்பட்டு மந்திரங்களை எடைபோடக் கூடாது.
Xxx
10-5-5
ஏழு சிவப்பு சகோதரிகள்
ஏழு என்ற எண் , ஏராளமான இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளியும் இந்த எண்ணையும் மூன்றையும் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளது .
‘ஏழு சிவப்பு சகோதரிகள்’ என்பதை அக்கினி தேவனின் 7 சிவப்பு நாக்குகள்’ தீக் கொழுந்துகள் என்று விமர்சித்து காளி , கராளி முதலிய 7 பெயர்களை அடுக்குகிறார் சாயன ர்.
சாயனரின் உரையை நோக்குமிடத்து புராணக் கதைகளுக்கான விதைகள் ரிக் வேதத்திலேயே ஊன்றப்பட்டது தெளிவாகும்.
வேறு ஒரு இடத்தில் ‘ஏழு சகோதரிகள்’ என்பதற்கு பறவையியல் அறிஞர் தவே (Mr Dave) என்பவர் வங்காளத்தில் பெரும்பாலும் ஏழு ஏழாகப் பறக்கும் ஒருவகைப் பறவைகளை அவர்கள் இன்றும் ஏழு சகோதரிகள் என்று அழைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் .
இவ்வாறு எந்த ஒரு விஷயத்துக்கும் வேதமே மூலமாக இருப்பதால்தான் மநு போன்ற பேரறிஞர்கள் உலகத்துக்கும் தர்மத்துக்கும் வேதமே மூலம் (வேர்) என்கின்றனர்.
Xxxx
वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।
आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6
தருமத்தின் ஆணிவேர் வேதங்கள்; அவைதான் புனித சட்ட திட்டங்கள் ; இதற்கு அடுத்தபடியாக வருவது பாரபர்யமாகப் பின்பற்றப்படும் நடை முறைகள்; அதாவது அவரவர் குலத்தின், குடும்பத்தின் ஆசாரம் . இதற்கும் பின்னர் ஏதேனும் சந்தேகம் வருகிறதா; அந்தக்காலத்தில் வாழும் ஒழுக்க சீலர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் ; இதற் கெல்லாம் அடுத்ததாக மனச் சாட்சி என்று ஒன்றுள்ளது. அதுவே சொல்லும் எது தப்பு; எது சரி என்று.- மனு தர்ம சாஸ்திரம் 2-6
“The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ reli-gion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6
पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।
अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥
“The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94
வேதங்கள் என்பன நம்முடைய மூதாதையர்களின் , கடவுளரின், மனிதர்களின் சாச்வதமான கண்கள்; வேதங்களின் அறிவுரைகளை எவரும் முழுதும் படித்தறியமுடியாது . அதன் ஆழத்தையும் எவராலும் அளக்கமுடியாது ; இது ஆதாரம் உடைய சத்தியம்/ உண்மை– மநு ஸ்ம்ருதி 12-94
Xxx
பகவத் கீதையில் கடல் பற்றிய வருணனை வருகிறது ‘அசலப் பிரதிஷ்டம், ஆபுர்யமானம்’ என்பது அந்தவரிகள் ; அதாவது எங்கும் நிறைந்தது ;அசைக்கவெண்ணாதது .
இந்த வரிகள் வேதத்துக்கும் பொருந்தும்
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவை வருணிக்கையில் ‘அப்ரமேயம்’ என்பர்; அதாவது இவ்வளவு என்று அளவிட முடியாதவர். அதுதான் வேதம். சஹஸ்ரநாமத்தின் முதல் வரியே இறைவனை பூத , பவ்ய, பவத் பிரபு என்று போற்றும்; கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் எல்லாம் இறைவன்; அதாவது அவன் காலத்தைக் கடந்தவன்; அவ்வாறே வானிலிருந்து ரிஷிகளால் ரேடியோ அலைகளைப் போல கேட்கப்பட்ட பேருண்மைகளே வேதங்கள்.
இதனால்தான் இன்று விக்கி பீடியாவில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும் ரிக் வேதத்தின் 10,000 மந்திரங்களை மொழிபெயர்த்த ரால்ப் டி .எச். கிரிப்பித் Griffith , பக்கத்துக்குப் பக்கம், ‘அர்த்தம் விளங்கவில்லை; தெளிவில்லாமல் இருக்கிறது; ஒருவேளை இப்படி இருக்குமோ; Ludwick லுத்விக் இப்படி நினைக்கிறார்; Wilson வில்சன் இப்படி எழுதியுள்ளார்; சாயனர் இப்படிச் சொல்கிறார் என்றெல்லாம் அடிக்குறிப்பில் சேர்த்து வருகிறார். அதாவது அவரே குழம்பி, நம்மையும் குழப்புகிறார்.
Xxx
கந்தர்வி 10-11-2
தட்சனின் மகள் சுரபி ; சுரபியின் மகள் கந்தர்வீ; அவள் ஒரு அப்சரஸ்; குதிரை இனத்தின் தாய் !! இங்கேயே புராணக்கதை வந்து விடுகிறது ஜொனாதன் ஸ்விப்ட் Jonathan Swift’s Gulliver’s Travels எழுதிய கல்லிவரின் யாத்திரை கதையை எல்லா சிறுவர்களும் படித்திருப்பார்கள். அது அரசியல் நையாண்டி ; லில்லிபுட் என்ற ஊரில் எல்லா மக்களும் கட்டை விரல் அளவுடைய மக்கள்; ஆகையால் மனித உருவமுள்ள கல்லிவரைக் கண்டு ஆச்கார்யமடைவர். இதற்கு அடுத்தபடியாக அவர் அறிவுள்ள குதிரைகள் வாழும் ஓரித்துக்குச் செல்வார். அந்தப் பெயர் ஆங்கிலேயர்களால்கூட உச்சரிக்க முடியாது. அதாவது குதிரை கணைக்கும் ஒலியைச் சேர்த்து எழுதிய பெயர்
Houyhnhnm . இந்தக் கதையை நினைவுபடுத்துகிறது கந்தர்வீ கதை.
கவ்யர்கள் – இறந்து போன (manes) முன்னோர்களின் ஒரு வகை.
மாதலி/ ரி பற்றிய சுவையான விஷயம் மஹா பாரதத்தின் வன பர்வத்தில் உள்ளது ; பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விண்கலத்தின் பைலட் மாதரி; அவன் அர்ஜுனனை ஏற்றிக் கொண்டு இந்திரலோகம் செல்லும் போது, புண்ய ஆத்மாக்கள் ஒளி ரூபத்தில் வானவெளியில் நட்சத்திரங்களாக ஒளி வீசுவதைக் காண்கிறான். பின்னர் பூமிக்குத் திரும்புகிறான்.
ஆக மஹாபாரத மாதரியும் ரிக்வேதத்தில் வருகிறான். வியாசர் என்ற மஹாபாரத கால வரலாற்று ஆசிரியர்; முனிவர் நான்கு வேதங்களை தொகுத்ததால் மஹாபாரத, ராமாயண கதாபாத்திரங்கள் சிலரை நாம் ரிக் வேதத்தில் காண்கிறோம். அதாவது கி.மு. 3150-க்கு முன்னர் வாழ்ந்தோர் .
கவ்யர்கள் என்னும் பிதுருக்கள் (manes) பற்றி விளக்கம் இல்லை
Xxx
10-14-9 Ghosts
இப்பாடல் மயானத்தைச் சுற்றி வரும் பிசாசுகளை நோக்கி கூறப்படுவதாக சாயன பாஷ்யம் / உரை விளம்புகிறது
புறநாநூற்றில் மயானப் பேய்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுடுகாட்டில் திரும்பிப் பார்க்கக்கூடாது என்ற கருத்தும் புற நானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது ( பாடல்கள் 369-372)
To be continued………………………….
tags- ரிக் வேதத்தில் , புரியாத , பேய்கள், தேவதைகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Rig Veda, the oldest book, and the oldest anthology in the world, contains many riddles. Sometimes the seers (Rishis) play with numbers, sometimes they play with words and sometimes with names. Even about the name, they talk about Secret Names of Gods. No one knows what they mean. Even the half baked, non- believers of Western countries could not say anything about them.
In the Yajur Veda the seers talk about 200 animals, plants, objects to be sacrificed in the Horse Sacrifice called Asvamedha. No one could identify several words in the list. They don’t even know whether they mean a bird or insects or animals or plants!
Let us stick to Rig Veda and see how many unknown names crop up:
SEVEN RED SISTERS -10-5-5
Seven and Three are found in Indus Valley seals . Among the Number Seals they are at the top. For Hindus everything Sacred is 7 or 3. Seven rivers, cities, hills, continents etc are Sacred for them. Here Sayana rightly says they are the seven tongues of Fire/ Agni. They are given names Kaali, Karaali etc.
Seven is associated with rain bow colours (VIBGYOR) and Hindus called them Seven Horses of the Chariot of Sun God.
Mr Dave describes Seven Sisters as a kind of birds in Eastern Part of the country. Even Sayana interprets Seven differently as 7 meters in prosody, Saptaswara in Music. That is why Hindus said Veda is the root of the world :-
MANU’S QUOTE ON VEDAS
वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।
आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ Manu 2-6
“The whole Veda is the (first) root of the righteousness/ dharma/ religion and sacred law, next the tradition and the virtuous conduct of those who know the Veda further, also the customs of holy men, and finally self-satisfaction”- MANU 2-6
पितृदेवमनुष्याणां वेदश्चक्षुः सनातनम् ।
अशक्यं चाप्रमेयं च वेदशास्त्रमिति स्थितिः ॥ Manu12-94॥
“The Veda is the eternal eye of the ancestors, gods and humans; the teachings of the Vedas are impossible to master and impossible to measure; this is an established fact”- Manu 12-94
xxx
GANDHARVI : Rig Veda 10-11-2
Said to be the daughter of Surabhi, one of the daughters of Daksa and the Mother of the Race of Horses ( we are reminded of Jonathan Swift’s Gulliver’s Travels- Houyhnhnms are a fictional race of intelligent horses described in the last part of Jonathan Swift’s satirical 1726 novel Gulliver’s Travels. The name is pronounced either or. Swift apparently intended all words of the Houyhnhnm language to echo the neighing of horses)
(Seeds of all Hindu Mythologies are in the Rig Veda; one must learn to read between the lines)
xxx
KAVYAS , MATALI 10-14-3
Kavyas – a class of manes, the spirits of a pious race of ancient times. No one knows who they are. Funeral hymns in the tenth Mandala are full of puzzles and riddles.
Matali is the charioteer of Indra; but in the Vanaparva of Mahabharata he is the pilot of Inter Galactic Space Shuttle who takes Indra to another galaxy and brings him back to earth. Even theory of Time Dilation is explained there. Stars are interpreted as departed pious people.
xxx
GHOSTS 10-14-9
According to Sayana, this stanza is addressed to the Pisacas/ ghosts and other evil spirits that haunts the place of cremation.
Sangam Tamil book Purananuru also talks about the spooky, eerie and unearthly things in the crematorium.
Next mantra talks about world’s first recorded dog Sarama’s two off springs, two dogs with four eyes. Sarama is Indra’s hound. Greeks borrowed this word from us and called Hermes (H=S in Greek; Sindhu becomes Hindu)
xxxx
USANAN -10-22-6
Usanaa or Usanas Kavya is frequently mentioned in the Veda as a favoured friend and companion of Indra.
(Indra is a title; not a single person; it means leader)
In the Bhagavad Gita, Krishna identifies himself with Usana among the Kavis/poets. Even during Rig Vedic days he became legendary. Probably the world’s first poet. He is known as Kavi. From him came Kavya; the oldest Tamil poet Tol Kappiyan also belongs to this clan. He is called Tol- Kavya. V=P/B are interchangeable. He is not the only one from this clan- Kavya Gotra; another Kaappiyaatru Kaappiyanaar of Sangam book Pathitru Pathu is also famous. They are all from Kerala, ancient Taml Chera Country.
xxx
SUSA, SUSI – 10-26-6
Ludwig says name of a man and a woman. According to Sayana and Wilson it is ‘he goat’ and ‘she goat’. But why Susa and Susi for goats? No explanation. This mantra also says about woollen garments
Vedic god Pusan has a goat drawn Chariot (it is in mantra 8). In later Puranas, the Vahana of Agni is also goat.
xxx
PANCHADASA SOMA- 10-27-2
Here Sayana gives some interesting details about Soma herb. Its leaves grow for 15 days in the bright half of month and dies in the next fifteen days in the dark half of a month. So, Soma is punned with Soma/moon because of this quality. Now we know the reason Soma herb is named after Soma, the moon because of this. Hindus always link Moon and the growth of plants, unlike others. Scientists couldn’t agree with us.
xxx
THE PURPLE TINTED EAGLE & SOMA OSHADI-10-30-2 AND 10-30-5
For the purple tinted eagle, commentators say Soma, The Moon (My view is that Soma herb is always connected with the falcon or eagle in many verses. So, it is not moon).
And in the fifth mantra Soma Osadhi is interpreted as Dharba or Kusa grass. In short Soma is interpreted according to their whims and fancies!
XXX
DOUBLE CURRENTS -TWO DHARAS – 10-30-10
Probably it meant two kinds of waters called Ekadhanaa and Vasativari.
( I don’t know what they mean; probably terms used in the Yaga??)
xxx
KURU SRAVANAN – 10-32-9
No one knows whether it is the name of a king or anyone that hears the hymn. Sayana interprets ‘the one who hear the praises’ (in the hymn); but others say it is the name of a King!!
xxx
DHUHISASU- 10-33-1
There is a scholarly discussion on the word. Ludwig suspects it to be the name of a prince defeated by the king KURURSRAVANA. Literally the word means ‘the malevolent’.Ghost??
xxx
WOLF AND QUAIL- 10-39-13
Commentators say the quail is probably ‘Dawn’ delivered from the jaws of the wolf ‘Night’ by the TWIN LIGHT GODS. This is Yaska’s interpretation according to Sayana. Also in 1-112-8. Everyone, thus, agrees, that a lot of imagery, symbolism and allegory are in the Vedas. Wolf is not an animal here; quail is not a bird here!!!
xxx
VAIKUNDAN, SAPTAHU.10-47-6
Vaikunthaa was a female demon. Her son was Vaikuntha. That ‘Asuri’ woman becomes Indra’s second mother!
Saptagu means drawn by Seven Oxen!!
xxx
PARNAYAN, KARNJA – TREE DEMONS 10-48-8
Commentators say apparently ‘Tree Demons’. Sangam Tamils said Anangus/ Nymphs live in lakes, ponds, rivers and on Trees. Later Hindu Tamil epics said Brahmarakshas live in natural spots.
In 1-53-8 also we come across them along with one more Asura Vangrda
In Fourth Mandala, Mrgaya and Pipru are described as demons of the Air. And in the next line Indra is said to have struck down 50,000 black demons. Immediately the Anti Hindu Max Muller gang added it must be native aborigines!!! In all the world conflicts, we see enemies! But in Vedas only, all enemies are given Racial attributes!!! In 2000 year old Tamil literature Tamils killed only Tamils and they are all described as fiery enemies!!!
xxx
SRUTHARVARNAN -KING 10-49-5; may be a king.
PADGRIBI- DEMON or some savage or enemy 10-49
xxx
GUNGUS – 10-48 WHO THESE PEOPLE ARE NOT KNOWN.
VAGINAN – 10-56-2 it meant strong, strong steed; apparently the name of the deceased.
ASUNITI – 10-59- 5 it is assumed it is the personification of a deity presiding over the funeral
USEENARANI- 10-59-10- It must mean wife of Usinara. The meaning is not clear. With the same name some people in Madhya Pradesh are found.
ASAMAATI- 10-60-2 Sayana says it is the name of a king; others don’t agree and they say it meant Unequalled.
BAJERATHA VAMSAM- 10-60-2 Griffith writes it is un certain whether the name of a prince or a country!
xxx
BOAR- 10-67-7 Sayana says bearers of excellent water!
SEVEN SISTERS – 10-71-3 commentators say tone of seven singers. One ornithologist says it meant a kind of birds. Even today they are known as seven sisters in Bengal.
ARJIKIYA, SUSOMA, VIBHASA – 10-75-5 commentators couldn’t even recognise these rivers.
SILAMAVATI and URNAVATI ARE RIVERS – 10-75-8 but no one knows where they are. Sayana says they are Sindhu’s other names.
xxx
10-85 is the most famous Wedding Mantras, used even today by the Brahmin priests:-
RAIBHI 10-85-6
This and the following two are feminine names; they may be secular songs; only a guess
NAARAASAAMSI
GAATHA
xxx
KOSAM 10-85-7 some say bridal outfit; others say chariot part; only a guess
KRTHYA 10-85-28 it may be the name of a deity or an evil spirit or demon
xxxx
ASASANAM, VISASANAM, ADHIVIKARTANAM 10-85-35
Some interpret it as parts of wedding dress; others as cutting, chopping meat. Hindus never serve non vegetarian food in weddings.
Even in wedding mantras (10-85) foreign translators could not get the meaning. They add ‘may be, probably’ etc. They say the wedding mantras are latest part of Vedas and yet they couldn’t get the meaning!
UPTO HYMN 85 IS COVERED IN TENTH MANDALA.
–SUBHAM–
tags- Soma plant, Demons, Asuras, Ghosts, Evil Spirits, in Rig Veda
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!! – 1
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் புராணம் என்ற அருமையான நூலை சமீபத்தில் 4-10-2021 அன்று வெளியிட்டுத் தமிழுக்கு அரும் சேவையைச் செய்துள்ளது.
171 அழகிய அரும் தமிழ்ச் செய்யுள்கள் கொண்ட இந்தப் புராணத்தை இயற்றியவர் ஸ்ரீமத் வாமதேவ முருக பட்டாரகர் ஆவார். ‘பட்டாரக’ என்றால் நல்லொழுக்கமும் உயரிய ஞானமும் உடைய அந்தணர் என்று பொருள். இவர் திருக்கைலாய பரம்பரை சிதம்பரம் வாமதேவ மறைஞான சம்பந்த சைவாசாரிய மரபினர் ஆவார். முருக பட்டாரகரின் தந்தையார் பெயர் பொன்னு பட்டாரகர். முருகவேளின் அணுக்க பக்தரான முருக பட்டாரகர் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தை அனுபவித்துப் படித்து அதை அனைவருக்கும் கூறி மகிழ, அன்பர்கள் பலர் அவரை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் பற்றி ஒரு நூலை இயற்றுமாறு வேண்டினர். அதன் பலனாக இந்த நூல் மலர்ந்தது. இதன் முதல் பதிப்பு 10-9-1917இல் வெளியானது. முதற் பதிப்பிற்கு முன்னுரை அளித்தவர் மாயவரம் தாலுக்கா ஸ்ரீ பொன்னுரங்கம் பிள்ளை ஆவார். அவர் தனது முன்னுரையில் இந்த நூலாசிரியரின் குமாரர் மாணிக்க பட்டாரகர் தனது தந்தையாரின் நூலிலிருந்து பல செய்யுள்களைக் கூறி மகிழ்விப்பது வழக்கம் என்று கூறி இருப்பதால் இவரது காலம் ஆயிர்த்து எண்ணூறுகளில் இருப்பது தெரிய வருகிறது.
முதல் பதிப்பில் செய்யுள்கள் மட்டுமே உள்ளது. 104 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் பெரு முயற்சி எடுத்து இதை வெளியிட்டுள்ளார்.
திரு கார்த்திகேய சிவம் சைவாகமங்களிலும் வல்லவர்; சிவத்தொண்டில் சிறந்தவர். தமிழுக்குச் சேவை செய்யத் துடிப்பவர். ஆகவே பல அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். நூலை அப்படியே செய்யுள் வடிவில் மட்டும் வெளியிடாமல் இதற்கு ஒரு அரிய உரையையும் சேர்த்து வெளியிட நிச்சயித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இந்த அழகிய நூலுக்கு சுருக்கமான ஆனால் அற்புதமான உரையை கல்யாண்புரி என்ற கூனம்பட்டி ஆதீனப் புலவர் ‘தத்புருஷ தேவநாம’ சைவ.இராம.மாணிக்கவாசகன் சிறப்புறச் செய்துள்ளார்.
கடவுள் வாழ்த்து, நூல் பெயர், அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகிய நூலுக்குரிய அம்சங்களைப் பெற்றுள்ள இந்த நூல் உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்களை ‘குற்றமில்லாத அருட்குரவராகிய கச்சியப்ப சிவாசாரியர் சகாத்தம் எழுநூற்றில்” கச்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றிய விதத்தை மெய்சிலிர்க்கும் வண்ணம் விவரிக்கிறது.
செய்யுள் நயமும் சொல் நயமும் பொருள் நயமும் கற்பனை நயமும் முருக பட்டாரகர் ஒரு தேர்ந்த புலவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
கந்த புராணத்திற்கு அடியெடுத்து அருளியவர் சாக்ஷாத் முருகப்பிரானே ஆவார்.
‘திகடச் சக்கர செம்முக மைந்துளான்’ என்ற முருகப் பிரானின் அடியை கச்சியப்பர் சபையில் அரங்கேற்றத்தின் போது சொல்லி ஆரம்பிக்க ஒரு புலவர் எழுந்தார்.
“சுவாமிகாள்! தாங்கள் கூறிய முதல் அடியில் திகழ் தசம் என்பதை திகடசம் என்று கூறி இருக்கிறீர்! இப்படி அமைவதற்கு தொல்காப்பியத்தில் விதி இல்லையே!” என்று கூற அதிர்ந்து போன கச்சியப்பர், ‘இப்படி எனக்கு அடி எடுத்துக் கொடுத்தவர் முருகனே தான்’ என பதில் கூறுகிறார்.
‘அப்படி எனில் அதை முருகனே சொல்லட்டும் அல்லது அதற்குரிய இலக்கண விதியைக் காண்பியும்’ என அப்புலவர் கூற ‘நாளை இதற்கு பதில் கூறுகிறேன்’ என்று பதில் சொல்கிறார் கச்சியப்பர். அன்று மனம் வாடி வருந்திய அவர் கனவில் தோன்றிய முருகப் பிரான். “வருந்தற்க! நாளை அவையில் சோழ நாட்டுப் புலவர் இதற்கான இலக்கண விதியை காட்டுவார்” என்று கூறி அருள்கிறார். மறு நாள் அவை கூடியது. சோழநாட்டுப் புலவர் வீர சோழியம் நூலைக் காண்பித்து அதில் சந்திப்படலம் 18ஆம் செய்யுளை எடுத்துக் காட்டுகிறார். அதில் சரியான விதி இருக்கிறது. அனைவரும் அதிசயித்து அதை ஏற்றுக் கொள்கின்றனர். அப்படிக் கூறிய புலவர், “அவ்விடை மறைந்து போனார்!”
வந்தவர் முருகப் பிரானே என்பதை உணர்ந்த அவையினர் சிரம் தாழ்த்தி கச்சியப்பரை வணங்கினர். தினமும் தனது நூலின் செய்யுள்களை விளக்கி ஒரு வருடத்தில் புராணத்தை முடித்தார் கச்சியப்பர்.
“மருவிய நாடொறும் வாசித்துப்
பொருளுரை செய்த புராணமதைக்
கருவறு தேசிகர் கச்சியப்பர்
ஒரு வருடத்தி னுற முடித்தார்”
10346 பாக்கள் அடங்கிய நூலை முறைப்படி அர்ச்சனை செய்து கச்சியப்பர் அரங்கேற்றம் செய்ய, தொண்டை நாட்டின் இருபத்தி நான்கு கோட்டத்தில் வாழும் வேளாளர்கள் பெரிதும் மகிழ்ந்து அவரைப் போற்றினர்; கச்சியப்பரை சிவிகையில் ஏற்றி காஞ்சி மா நகரை வலம் வந்தனர்.
இவ்வளவு விஷயங்களையும் தெள்ளு தமிழில் செய்யுள் இலக்கணம் வழுவாது அழகுறச் சொல்கிறது இந்த நூல்
இது முருக பக்தர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏன் தமிழ் மக்கள் அனைவருக்குமே படித்து மகிழ உகந்த ஒரு நூல். நூல் அழகுற வாசித்துப் பொருளைப் புரிந்து கொள்வதற்கு எளிதாக அச்சிடப்பட்டுள்ளது.
நூலின் மொத்தப் பக்கங்கள் 96. அச்சுப் பதிப்பு சிறப்புற அமைந்துள்ளது. வடிவமைப்பு சிறப்புற இருக்க நூல் தரம் வாய்ந்த தாள்களில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் விலை ரூபாய் நூறு மட்டுமே.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 10-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஆஜ்மீர் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்திபீடம்!
ஸ்ரீ நாராயண உவாச : த்வமேவ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ ச சரஸ்வதீ
ப்ரஹ்மாணீ வைஷ்ணவீ ரௌத்ரீ ரக்த ஸ்வேதா ஸிதேதரா
ஸ்ரீ நாராயணன் சொல்லுகிறார் :- ஹே! காயத்ரி தேவியே, தாங்களே ஸந்த்யையாகவும், காயத்ரியாகவும், ஸாவித்ரியாகவும், ஸரஸ்வதியாகவும், ப்ரஹ்மாவின் சக்தியாகவும், ரக்தஸ்வேதை என்ற தேவதையாகவும், ஸிதேதரையாகவும் ப்ரகாசிக்கிறீர்கள்!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் 27வது பீடமாக அமையும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் புஷ்கரில் உள்ள மணிபந்த் சக்தி பீடம் ஆகும். இந்தத் தலம் காயத்ரி மலையில் புஷ்கருக்கு அருகில் ஆஜ்மீரின் வடமேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புஷ்கர் பிரம்மா கோவிலுக்கு அருகே 7 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. சதியின் அங்கபாகங்களில் ஒன்றான மணிக்கட்டு விழுந்து அமைந்த சக்தி பீடம் இது.
தக்ஷப்ரஜாபதி தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. தாக்ஷாயணி எனப்படும் சதி தேவி தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று சிவபிரானை ஏன் அழைக்கவில்லை என்று கேட்க தக்ஷன் பெரும் கோபம் கொள்கிறான். சிவபிரான் அருளினால் வீர பத்திரனும் காளியாக மாறிய சதியும் யாகத்தை அழிக்கின்றனர். தக்ஷ வதமும் முடிகிறது. தேவி தனது தியானத்தால் அக்னியை மூட்டி அதில் தன் உடலை அர்ப்பணிக்கிறாள். நடந்ததை அறிந்த சிவபிரான் தாக்ஷாயணியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறான். யாராலும் தாண்டவத்தை நிறுத்த முடியாத நிலையில் விஷ்ணு பகவான் தன் சுதர்ஸன சக்கரத்தை ஏவி சதி தேவியின் உடலை 51 துண்டுகளாக ஆக்குகிறார். அவை பாரதமெங்கும் சிதறி வீழ்ந்தன. அவையே சக்தி பீடங்களாக ஆயின.
சதியின் மணிவேதிகா எனப்படும் இரு மணிக்கட்டுகள் ஆஜ்மீர் காயத்ரி மலைப் பகுதியில் விழுந்தன. ஆகவே இங்கு அமைந்துள்ள ஆலயம் மணிவேதிகா ஆலயம் எனப் பெயரைப் பெற்றுள்ளது. இங்கு பின்னால் ஸ்தாபிக்கப்பட்ட விக்ரஹம் காயத்ரி தேவியினுடைய விக்ரஹம் ஆகும். இங்கு இரு விக்ரஹங்கள் உள்ளன. ஒன்று காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சதியினுடையது. இன்னொன்று அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்பவன் என்ற பொருளில் அமைந்துள்ள சர்வானந்தா என்ற சிவபிரானின் விக்ரஹம். இது சாமுண்டா ஆலயம் புஷ்கர் என்றும் அழைக்கப்படுகிறது.
நவராத்திரி விசேஷமாக இங்கு ஒன்பது நாட்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதே போல சிவராத்திரியும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிது. சிவலிங்கத்தின் மீது பால் அபிஷேகம் செய்து வில்வப் பழம் நிவேதனம் செய்யப்படுகிறது.
காயத்ரி அறிவின் தெய்வமாகும். “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்பது காயத்ரி மந்திரத்திற்கான மகாகவி பாரதியாரின் தமிழாக்கம் ஆகும். காயத்ரி மந்திரத்தை உபாசித்து சாதனை மேற்கொள்பவர்கள் தமக்கு உகந்த இடமாக இதைக் கருதி இங்கு வருகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 800 அடி உயரமுள்ளது காயத்ரி மலை. பிரம்மாண்டமான தூண்களுடன் சிற்பச் சிறப்பைக் காட்டும் வண்ணம் இந்த ஆலயம் அமைந்துள்ளது.மலைகளில் மேருவும், பறவைகளில் கருடனும், புண்ணிய தீர்த்தங்களுள் புஷ்கரும் சிறந்தவை என்று பத்ம புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த புஷ்கரானது புஷ்கர், கயா, கங்கா, குருக்ஷேத்திரம், பிரயாகை ஆகிய பஞ்ச தீர்த்தங்களுள் முதன்மை இடத்தைப் பெறுகிறது. பாண்டவர்கள் தமது அக்ஞாத வாச காலத்தில் ஒரு பகுதியை இங்கே கழித்தனர். பாண்டவர்கள் இங்கு ‘பஞ்ச குண்ட்’ என்ற இடத்தில் யக்ஞமும் செய்ததாக ஐதீகம்.
புஷ்கரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு முறை பிரம்மா யாகம் செய்யத் தகுந்த இடம் தேடி வான் வழியே வந்த போது இந்த இடத்தில் அவர் தாமரை வளைந்து நீர் ஊற்று சுரந்ததாம். அந்த இடமே புஷ்கரம் எனக் கூறப்படுகிறது. பிரம்மாவுக்கு உள்ள ஒரே கோவில் இது தான். ஒரு சமயம் சாவித்திரி தேவி பிரம்மாவை சபித்ததால் அவருக்கு வேறு எங்கும் ஆலயம் இல்லை என வரலாறு கூறுகிறது. இங்குள்ள பிரம்மா ஆலயம் முழுவதும் சலவைக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவில் ஏராளமான மக்கள் இங்கு கூடுகின்றனர்.பௌர்ணமி தினத்தை மையமாக வைத்து முன்னும் பின்னுமாக மொத்தம் ஏழு நாட்கள் இந்த விழா இங்கு கொண்டாடப்படுகிறது. பிரம்ம புஷ்கரணியில் ஸ்நானம் செய்து பிரம்மாவை வழிபட்டால் தலை எழுத்து மறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காயத்ரி தேவியும் சிவபிரானும், பிரம்ம தேவனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கீர்த்தியைக் கொடுக்கும் காயத்ரி ஸ்தோத்திரத்தை ஸந்த்யா காலத்தில் படித்தால் மஹா பாபங்கள் விலகி அளவற்ற புண்யம் உண்டாகும். மஹா ஸித்திகள் ஏற்படும். நன்றி வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 13 கட்டுரை எண் 10004 வெளியான தேதி
22-8-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 14
(46 முதல் – 50 முடிய)
ச.நாகராஜன்
46. ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள்!
அக்னி தேவதை கூறுகிறது: நான் இப்போது வாசுதேவர் மற்றும் இதர தேவதைகளுக்கு ஆலயம் அமைப்பதன் பலன்களைக் கூறுகிறேன்.
கடவுளரின் கோவில்களை அமைக்க ஒருவர் ஆசை கொண்டால் அவருக்கு ஆயிரம் பிறவிகளில் அவர் செய்த பாவம் போய்விடும். யாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கிறதோ அவர்களுக்கு நூறு பிறவிகளில் செய்த பாவம் நீங்கி விடும். ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோவில் அமைப்பதை அங்கீகரிக்கும் ஒருவரும் அவரது பாவங்களிலிருந்து விடுபடுவதோடு அச்சுத (விஷ்ணு) லோகத்திற்குச் செல்வார். ஹரிக்கு கோவில் ஒன்றை அமைக்கும் ஒருவர் அவரது ஒரு லட்சம் மூதாதையருக்கு சென்ற காலத்திலும் எதிர்காலத்திலும் விஷ்ணு லோகத்தை அளிக்கிறார். விஷ்ணுவிற்குக் கோவில் கட்டும் ஒருவர் அவரது மூதாதையரின் ஆவிகள் விஷ்ணு லோகத்தில் தங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று மிகவும் கௌரவிக்கப்பட்டவர்களாய் அங்கேயே இருக்கின்றனர். தேவதைக்கு கோவில் அமைக்கப்படும் போது அப்படி அமைப்பவருக்கு பிராமணரைக் கொன்ற பாவம் உள்ளிட்ட அனைத்தும் போய் விடும்.
அக்னி புராணம் அத்தியாயம் 38- ஸ்லோகம் 1 முதல் 5 முடிய
ஒரு நாளாவது ஒருவன் பஸ்மம் (திருநீறு/விபூதி) தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணிய பலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக:- என்னவெனில் அவன் மஹாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போகும். இது சத்தியம்! சத்தியம்! சந்தேகமில்லை.
முக்தி என்னும் ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம், பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாம். பஸ்மோத்தூளனமுள்ளவன் மூர்க்கன் ஆனாலும் பண்டிதன் ஆனாலும் அவன் எவ்விடத்தில் புசிக்கின்றானோ அவ்விடத்தில் ரிஷபக் கொடியை உடைய பரமேஸ்வரன் தேவி ஆகியோரோடு புசிக்கிறான்
தேவி பாகவதம்,பதினொன்றாம் ஸ்கந்தம் அத்தியாம் 13
49. கிருஷ்ணர் தருமருக்கு சிவபூஜை பற்றிக் கூறியது!
பசியுடன் வந்த துர்வாஸ முனிவரை கிருஷ்ணரின் அருளால் திருப்திப் படுத்தி அனுப்புகிறார் தர்மர்.
துர்வாஸ முனிவர் திருப்தியுடன் தர்மரை விட்டு அகன்றவுடன் தருமர் கிருஷ்ணனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.
“கிருஷ்ணா, உன் அனுக்ரஹம் மட்டும் இல்லாதிருந்தால் என் நிலைமை மோசமாகப் போயிருக்கும். துர்வாஸரிடம் சாபம் பெறுவதைக் காட்டிலும் அவர் வருவதற்குள் உயிரை விட்டிருப்பேன்” என்றார்.
உடனே கிருஷ்ணன், “ தருமா! சிவபெருமானுடைய அனுக்ரஹம் தான் காரணம். துவாரகையில் இருக்கும் போது உபமன்யு முனிவர் எனக்குச் சிவ பூஜையை உபதேசித்தார்.வடுக கிரியில் ஏழு மாதம் தீக்ஷை பெற்று சிவபூஜை செய்து தியானித்தேன். சிவனும் எனக்கு தரிசனம் தந்து சத்ருக்களை வெல்லும் சக்தியை அளித்தார். நீங்களும் சிவபூஜை செய்யுங்கள். அவர் அனுக்ரஹத்தால் உங்களுக்கு வரும் துன்பங்கள் பனி போல நீங்கும். எனக்கு அருள் புரிந்ததன் காரணமாக சிவபிரான் அங்கே வில்வேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்” என்றார்
சிவ புராணம் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறும் அத்தியாயம்
ஆதி சைவர் எனப்படுவோர் சிவபிரானின் ஊர்த்வ முகத்திலிருந்து தோன்றியவர்கள் ஆவர்.
கௌசிகர், காசியபர், பரத்வாஜர், அத்திரி, கௌதமர் ஆகிய ஐந்து முனிவரும் சதாசிவனின் பஞ்ச முகங்களால் தீக்ஷை செய்யப்பட்டவர்களாம். அவர்கள் குலத்தில் பிறந்தவர்களே ஆதி சைவர்கள் ஆவர்.
***
புராணத் துளிகள் மூன்றாம் பாகம் முற்றிற்று.
INDEX
ஆலயம் கட்டுவதனால் ஏற்படும் பலன்கள், நவநிதிகள், விபூதி தாரண மஹிமை, கிருஷ்ணர் கூறிய சிவ பூஜை மஹிமை, ஆதிசைவர் மஹிமை.
tags- ஆலயம் கட்டுதல், பலன்கள், நவநிதிகள், விபூதி , ஆதிசைவர் , மஹிமை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே கல்லில் 150+ மாங்காய் அடிக்கும் பார்ப்பனன் !
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்’ என்று சொல்லுவோம். ஆங்கிலத்தில் ‘ஒரே கல்லால் இரண்டு பறவைகளைக் கொல்லலாம்’ Kill Two Birds with One Sone என்பர். ஆனால் பிராமணன் தினமும் 150 கடவுளுக்கு மேல் , புனிதர்களுக்கு மேல், ஒரே கிரியையில் கும்பிட்டு விடுகிறான். இந்த அற்புதத்தை அவர்கள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள். அந்த வழிபாட்டுக்கு சந்தியாவந்தனம் என்று பெயர்.
வேத காலத்தில் ஸரஸ்வதி -சிந்து – கங்கை நதிக்கரையில் முழங்கிய மந்திரங்கள் இன்றுவரை உலகெங்கிலும் முழங்குவது உலக அதிசயமே.
இதுநாள் வரை எழுதாத மேலும் ஒரு விஷயத்தை சேர்த்துவிடுவதே இன்றைய கட்டுரையின் நோக்கம்.
இந்த விச்வே தேவா , தேவதா: என்பது யார் என்று பார்த்தால் ஒரு நீண்ட பட்டியலே கிடைக்கிறது.
ரிக் வேதத்தில் விச்வே தேவா :என்ற தலைப்பில் பல துதிகள் உள்ளன.
அதில் ஒரு துதியில் ஒரே மந்திரத்தில் 16 கடவுளரின் பெயர்கள் வந்து விடுகின்றன. ஆனால் மேலும் பல தெய்வங்களும் அதே தலைப்பில் வந்து விடுகின்றனர் : வேதத்தில் வரும் அத்தனை கடவுளரின் பெயர்களையும் கொண்டு வந்து விடுகின்றனர் !
இவர்களில் ஒரே தெய்வம் பல பல பெயர்களுடன் வந்திருக்கிறதா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.
இது தவிர சோம மூலிகையைக் காக்க்கும் வில் வீரர்கள் பெயர்கள் வருகின்றன.
சுருங்கச் சொல்லின் 20,30 தேவதைகளின் பெயர்களை தனியே சொல்லுவதற்குப் பதிலாக, புத்திசாலித்தனத்தோடு , இந்த விச்வே தேவர்கள் பட்டியலில் கொண்டு வந்து விடுகின்றனர் !
அந்தக் காலத்தில் எல்லா பிராமணர்களும் நான்கு வேதத்தில் ஏதேனும் ஒரு வேதத்தை முழுக்க படித்து இருந்ததால் அவர்களுக்கு அத்தனை கட வுளரும் நினைவுக்கு வந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை
Xxx
FROM MY OLD ARTICLE
இதே பிளாக்கில் 6-10-2017-ல் எழுதியது கீழே உள்ளது.
தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.
நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-
நான் (நான் தினமும் செய்யும்) யஜுர் வேத சந்தியாவந்தனத்திலிருந்து தருகிறேன்
ரிக் வேத, சாமவேத சந்தியாவந்தனங்களில் கூடுதல் மந்திரம் உண்டு
அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)
சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:
(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)
4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்
மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,
யமன்
(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)
எடுத்துக்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:
யமன், தர்மராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய (death is derived from this word), நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.
பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)
90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் பத்தாம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON SWAMINATHAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
ஒவ்வொருவரின் வாழ்விலும் நலமும், வளமும் வரட்டும்; பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து
நவராத்திரி திருவிழா அக்டோபர் 07 ந்தேதி தொடங்கி வருகிற 15- ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொருவருக்கும் நவராத்திரி திருவிழா வாழ்த்துகள்.
வருகிற நாட்களில், ஜனனி மாதாவை பக்தியுடன் நாம் வழிபட வேண்டிய நாட்கள் வர இருக்கின்றன.
இந்த நவராத்திரி திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் ஆகியவற்றை கொண்டு வரட்டும் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, துர்க்கை கடவுளை வழிபடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
XXX
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
‘கடவுள் பெயரில், தனியார் அறக்கட்டளை,
தனிநபர்கள் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த, வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. ‘எதிர்காலங்களில் உற்சவங்களை நடத்த, ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்’ என, கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நவ., 10 முதல், 19ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ‘கொரோனா காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை; இதில், கோவில் நிர்வாக அதிகாரி தலையீடு எதுவும் இல்லை; நிகழ்ச்சிக்காக, பல சபாக்கள் சார்பில், பணம் வசூலிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘கடவுள் பெயரில், தனி நபர்கள், தனியார் அறக்கட்டளைகள் நன்கொடை வசூலிக்கக் கூடாது’ என, நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். உடனே, தொலைவில் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, நன்கொடை வசூலிப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘பாரம்பரியமாக உள்ள நடைமுறையில் குறுக்கீடு செய்ய மாட்டோம். சட்டவிரோத அம்சங்கள் ஏதேனும் சுட்டிக் காட்டப்பட்டால், நீதிமன்றம் தலையிடும்’ என தெரிவித்தனர்.
XXXX
தசரா விழா துவக்கம்: மின் விளக்கில் ஜொலித்த மைசூரு அரண்மனை
உலக பிரசித்தி பெற்ற 412-வது மைசூரு தசரா விழாவை சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வும் தற்போதைய முதலமைச்சர் பொம்மையும் துவக்கி வைத்தனர்.
கர்நாடகாவில் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து மைசூரில் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் விழா அக்.07 கோலாகலமாக துவங்கியது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெள்ளி பல்லக்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி தசரா விழாவை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணாவுக்கு, சந்தனத்தால் செதுக்கப்பட்ட யானை பரிசாக வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இரவில் மின் விளக்கில் மைசூரு அரண்மனை தங்கம் போன்று ஜொலித்தது. மேலும் நகரின் பல பகுதிகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
XXXX
திருமலையில் மூன்றாம் நாள் பிரமோற்சவம்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி–திருமலை பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை,
சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
மலையப்ப சுவாமி, மூன்றாம் நாள் காலை, சிம்ம வாகனத்தில் வலம் வந்தார். மாலையில், முத்துபந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளினார். வாகனச் சேவையின்போது மங்கல வாத்தியங்கள், வேத கோஷம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
XXX
வள்ளலார் பிறந்த நாள், தனிப்பெருங்கருணை நாளாக கடைபிடிக்கப்படும் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ந் தேதி, தனிப்பெருங்கருணை நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என்று tamil nadu முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 5.10.1823 அன்று பிறந்தார்.
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு, ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.
பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். ‘அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி’ என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.
அவர் பிறந்தநாளான அக்டோபர் 5-ந் தேதி, இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ என கடைபிடிக்கப்படும் — இவ்வாறு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
XXXX
புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி
நவராத்திரி திருவிழா வருகிற 15ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக வீட்டில் கொலு பொம்மைகளை (களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள்) வைப்பது வழக்கம். புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் கட்டுப்பாடுகளால், கொலு பொம்மை விற்பனைகளும் முடங்கின.
2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு இப்போது புதுச்சேரி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
XXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON SWAMINATHAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by APARNA KRISHNAN
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by APARNA KRISHNAN
PM Narendra Modi Greets People On Navratri
Tweeting of a photo himself worshipping Goddess Durga, Prime Minister Narendra Modi greeted the people on the auspicious occasion of Navratri.
Prime Minister Narendra Modi on Thursday greeted people on the beginning of Navratri.
May Navratri be the bringer of strength, good health and prosperity in everyone’s lives, he said.
xxx
Dasara festivities begin in Mysuru
The famous 10-day long Dasara festivities commenced in Mysuru in Karnataka.
Former Karnataka CM SM Krishna with Basavraj Bommai, current chief minister inaugurated Mysore Dasara Festival on Thursday
For the first time in the history of the annual 10-day-long Mysore Dasara festivities in Karnataka, the idol of Goddess Chamundeshwari will be brought from Chamundi Hills to the Mysuru Palace in an elephant procession (jumbo savari).
However, the jumbo savari, usually held from Mysuru Palace to Vanni mandap grounds, will be limited to the palace premises for the second consecutive year due to Covid restrictions.
Xxx
Now Navaratri news from Britain
South Indian families held Doll Display known as Golu at homes and invited guests in the traditional way. South Indian Society arranged an on line display of such golus in the houses.
For Bengalis the Navaratri culminates in Durga Puja.
The United Kingdom will be witnessing over 40 Durga Pujas this year including one Mega Durgotsav organised by BIBA (Bilete Bangali) at Zoroastrian centre in London.
xxxx
BJP opposes use of shoes to ‘decorate’ Durga puja pandal in Kolkata
The BJP on Saturday objected to the use of shoes for “decorating” a Durga puja pandal in Kolkata, alleging that it would hurt religious sentiments of people.
Leader of Opposition Suvendu Adhikari said in a tweet on Saturday that the organisers have committed a “heinous act” by adorning the pandal wall with shoes, and urged the chief secretary and home secretary to look into the matter.
“A Durga Puja pandal in Dumdum Park has been decorated with shoes. This heinous act of insulting Maa Durga in the name of ‘Artistic liberty’ won’t be tolerated. I urge the Chief & Home Secretary @egiye_bangla to intervene and compel the organizers to remove the shoes before Shashti,” he added.
Echoing him, former Meghalaya governor and veteran BJP leader Tathagata Roy told reporters that “everything cannot be tolerated in the name of artistic freedom. This is a grave insult to goddess Durga and hurts our religious sentiment”.
Organisers of the puja pandal in Dumdum, however, rejected the assertion and said that the shoe installation on the sidewalk leading to the marquee depicts farmers’ movement in the country, and the Durga idol, set up at a considerable distance from it, is surrounded by paddy stacks.
XXXX
CHRISTIAN PROPAGANDA IN TEMPLE SCREEN; TENSION IN VIJAYAWADA
Devotees expressed ire over campaign of other religion on LED screens set up atop IndrakeeladrI the abode of Godess Kanaka Durga in Vijayawada amidst Dasara celebrations.
The Information and Public Relations Department entrusted the live screening of Dasara celebrations to a local TV channel. The campaign of other religions appeared on the LED screens immediately after the relay of Dasara celebrations on Thursday night.
The enraged devotees damaged one of the LED screens set up near the road on Krishna riverbank.
Meanwhile, the temple authorities filed a complaint with police to inquire into the incident, to make it clear whether the campaign of other religion was intentionally relayed or by mistake.
The Viswa Hindu Parishad leaders met Executive officer D Brahmaramba and submitted a memorandum demanding action on the erring officials. The EO assured them that special attention will be paid to prevent recurrence of such incidents.
Temple authorities said “We came to know from devotees and police that a video, purportedly of an evangelist of Philadelphia AG Church, was played in one of the LED screens. The display was immediately stopped and a complaint was lodged with police. During interrogation, it came to light that it was purely accidental as the operator concerned failed to switch off after the live telecast had ended, and played the channel’s daily program accidentally,” temple EO D Bramaramba said.
XXXXX
NOW NEWS FROM AMERICA
Several US states, including Texas, Florida, New Jersey, Ohio and Massachusetts, have proclaimed October as the Hindu Heritage Month, noting that Hinduism has “contributed greatly” to America through its unique history and heritage. The proclamations came after various Hindu organisations in the US announced the addition of another major festival, an entire month of festivals, in October as the Hindu Heritage Month.
According to the organisers, the celebrations will include cultural programmes, fashion shows, webinars, multi-day conferences, walkathons and more.
According to the president of Hindu University of America, Kalyan Viswanathan, “The Hindu Heritage Month is a great opportunity for the Hindu community to remember our collective journey so far — from the ancient Vedic times, our own golden eras, through the trials and tribulations of conquests and colonisation — and look optimistically forward at the opportunity we have for recovering and rearticulating the Hindu worldview for future generations.”
XXXX
NEWS FROM LONDON
More than 600 devotees walk across London in a historic ‘Smruti Pada-Yatra’
As part of the centennial birth anniversary celebrations of His Holiness Pramukh Swami Maharaj, and to mark the 88th birth anniversary of His Holiness Mahant Swami Maharaj, a special smruti pada-yatra (pilgrimage by foot) was organised by BAPS Shri Swaminarayan Mandir, London – popularly known as ‘Neasden Temple’ – on Sunday 3 October 2021.
More than 600 people of all ages, including resident swamis of the mandir, walked a distance of 13.5 miles to visit historic and sanctified places that encompass a period of more than 50 years of significance.
The pilgrimage began in warm autumnal sunshine from Alexandra Palace –
The journey of around 4 hours and 30 minutes of walking time rekindled cherished memories for senior devotees and provided an opportunity for youths and children to become part of BAPS’s rich history in London.
Xxx
Temple vandalised in Tamil Nadu reports Hindu Post News Paper
Murtis of Hindu deities were vandalised by anti-Hindu elements in Siruvachur, Tamil Nadu. They were found in a beheaded state with their hands and other parts chopped off. Desecration and demolition of temples and murtis have increased since DMK came to power in May.
Siruvachur Madura Kaliamman temple is one of the prominent temples in TN and the presiding deity is considered to be the Kula Devi of Kanchi Shankaracharya. She is the Kula Devi of lakhs of Hindus across the state as well. Madura Kaliamman temple and other small temples around it are under the control of TNHRCE.
The main deity Madura Kaliamman is believed to reside in the main temple only on Mondays and Fridays. So public darshan is allowed on these 2 days only.
The hillocks behind the temple is where Devi is believed to reside on other days. At the foothills there is a temple for Parivaara Devatas like Aiyyanar, Selliamman, Periyasamy, Karuppasamy and Saptha Kannis. Word is that only men are allowed to visit this temple. When some men went to the temple on Mahalaya Amavasya to worship, to their shock they found the murtis in a decapitated state. Heads, hands and other parts of the murtis were broken by miscreants.
Devotees have lodged a complaint with the police and police are looking into the issue. Such attacks on Hindu temples have increased after the atheist DMK came to power according to Hindu Post Magazine.