Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதையை பரத முனி சொல்கிறார்நாட்டிய சாஸ்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் 6000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனியால் இயற்றப்பட்டது . இதில் 36 அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல்
tags- இந்திர விழா, ‘ஜார்ஜர’, நாட்டியம், நாடகம் கதை, பரத முனி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விஞ்ஞான புனைக் கதை எழுதிய முதல் ஆசிரியர் எச்.ஜி.வெல்ஸ் (H G WELLS) என்பது பலருடைய கருத்து ஆகும்.
ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் என்பது அவருடைய முழுப் பெயர் ஆகும். அவர் இங்கிலாந்தில் பிராம்லியில் (Bromley) பிறந்தார்.அவரது குடும்பம் ஏழைக் குடும்பம்.. ஒரு கடையில் உதவி செய்பவராகப் போனவருக்கு லண்டனிலுள்ள ஒரு விஞ்ஞானப் பள்ளியில் படிப்பதற்கு உபகார சம்பளம் கிடைத்தது.
கல்லூரியில் அவருடைய ஆசிரியர் பிரபல அறிவியல் நிபுணரான தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley) ஆவார். அவர் டார்வின் எழுதிய பரிணாமக் கொள்கையை இவருக்குப் போதித்தார். பிராணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்து பரிணாம வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் அவை எவ்வாறு வளர்ச்சி அடையும் என்று எச்.ஜி.வெல்ஸ் கற்பனை செய்தார். அவற்றைப் பல நாவல்களில் எழுதினார்.
29 வயது வரை கணக்கராகவும், ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். பின்னர் முழு நேர எழுத்துப் பணியில் குதித்தார். தன் வாழ்நாளில் சுமார் 80 கதைகளையும் ,நாவல்களையும் எழுதினார். அவற்றில் பல விஞ்ஞான கற்பனைக்கு கதைகள். அது போக மீதிக்க தைகள் சமூக, அரசியல் விஷயங்கள் பற்றியவை. வரலாற்றைச் சுவைபட படிக்கும் வகையில் ஒரு புஸ்தகமும் (Outlines of History) எழுதினார்.
வெல்ஸ் எழுதிய முதல் விஞ்ஞான கற்பனைக் கதை டைம் மெஷின் (Time Machine) எனப்படும் காலப் பயண யந்திரம் ஆகும். ஒருவர் வருங்காலத்துக்குப் பயணம் செய்து இந்த பூமி அழியும் காலத்தைக் காணும் கதை அது. எதிர்காலத்தில் இரு வகை மனிதர்கள் உருவாகலாம்; முதல் ரகம் ‘ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்ற இலோய்’ வகுப்பு. இரண்டாவது, செயல் முறைக்கு உகந்த ‘மார்லக்ஸ் வகுப்பு’. இதற்கு அடுத்த படியாக கிரகங்களுக்கு இடையே எழும் சண்டை (வார் ஆ ப் தி ஒர்ல்ட்ஸ்) பற்றி ஒரு கற்பனைக் கதை எழுதினார்.
செவ்வாய்க் கிரக மக்கள் பூமி மீது படை எடுப்பதாவும் அவர்களை பூமியிலுள்ள புழு அளவேயுள்ள கிருமிகள் அழி ப்பதாவதும் எழுதினார் . இந்த இரண்டு புஸ்தகங்களும் இவருக்கு புகழ் ஈட்டின
மனித குலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் உண்டு என்று நம்பினார். ஆயினும் காலம் செல்லச் செல்ல மனித குலத்தின் கொடூரச் செயல்களும் சுயநலமும் அவருக்கு கவலை ஏற்படுத்தின.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் பயன்படுத்தி வரும் வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்தப் படுவதால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பசுமை வாயுக்கள் வளி மண்டலத்தை மாசு படுத்தி வந்துள்ளன. கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பத்தில் 0.85 டிகிரி செண்டிகிரேடு கூடுதலாகி உள்ளது. ஒவ்வொரு பத்து ஆண்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்போது வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.இதனால் தட்பவெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.
உலகின் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் கடலுக்கு 60 கிலோமீட்டர் அருகிலேயே வசித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவர்.
அதிக வெப்பமான நிலையில் நாம் காற்றை சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறுகளும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 2003ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் எப்போதும் இல்லாதபடி 70000 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. சுத்தமான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குமாறும் பயன்படுத்துமாறும் அது இடைவிடாது வலியுறுத்தி வருகிறது.
குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்கள் படிம எரிம பொருளைப் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டை மட்டுப் படுத்தும்,
2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் செயல்பட, ஒரு செயல்திட்டத்தைத் தந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து மனித குலம் விழிப்புணர்ச்சிப் பெற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்ப வலியுறுத்தியுள்ளது.
ஐந்து வயதுக்கும் கீழாக உள்ள குழந்தைகளும், முதியோரும் தட்ப வெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த அபாயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
பல அறிவியல் ஆய்வுகள், ‘தட்ப வெப்ப மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்படும்’, ‘சூறாவளிகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும்’, ‘தொற்று வியாதிகள் பரவும்’, ‘பல தீவுகளில் வசிப்போரும் கடலோரம் வசிப்போரும் அபாயத்திற்கு உள்ளாவர்’ ஆகியவற்றைத் தெரிவித்துள்ளன. ஆகவே இதைத் தடுக்க ஒவ்வொருவரும் இந்தச் சீர்கேட்டைத் தடுக்கும் ஒரு தலைவனாக தம் தம் பகுதிகளில் செயல்பட வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Atreya asked Bharata the reason for writing Natya sastra.
Bharata said,
Natyaveda was created by Brahma. Long long ago people of this world, goaded by greed and avarice, and jealousy and anger took to uncivilised ways of life.(Literally Gramya = vulgar).
The world was then inhabited by Gods, Demons, Yakshas Rakshasas, Nagas and Gandharvas . Various lords were ruling. At that time gods led by Mahendra approached Brahma and requested him to give them something which would not only teach them but be pleasing both to eyes and ears. Since Sudras are not allowed to listen to Vedas why not create a fifth Veda which would be accessible to all varnas/ castes
Brahma agreed. He dismissed the petitioners and meditated in solitude. Then he took
words from the Rigveda,
music from Sama veda,
movements and make up from Yajur veda and
emotional acting from the Atharvanaveda.
Then he called Indra and others and said,
Here is the Natyaveda. Let the Suras/Devas practise it. It requires persons who are smart, intelligent, observant and self controlled.
Indra pondered and then said that the Suras were unable to practise it since they did not have all the qualifications. Sages are self controlled and grasped with the Vedic knowledge. Then Brahma entrusted it to me.
Brahma said to me
You have a large number of sons and students and so you practise it. So I practised it with my sons and trained them in words, emotions and movements:_
Bharati
Sattavati
Arabhati and
Vrtti
When I informed Brahma what I have done, he promised me to give all the materials required. I myself had seen Siva dancing with movements, gestures and emotions. When I said females were good to perform with grace, he created Apasaras. He created Narada and Gandharva to sing. He provided Swati and his disciples to play on instruments
When I reported to him all the practices were done, rehearsals over, he asked me to perform the first show in the Flag festival of Indra.
I commenced the performance with an interesting
Nandi= benedictory singing of eight sentences from the Vedas. When it was staged with fights and roars resulting in the defeat of the demons by devas Brahma and other gods were so pleased with the performance that they showered presents on the actors:-
Indra gave the flagpole ,
Brahma a crooked stick,
Varuna a gourd
Surya an umbrella
Siva a Siddhi
Vayu a fan
Vishnu a throne,
Kubera a crown
Sarasvati acoustics
And others — Yakshas, Rakshasas and Nagas suitable ones.
After the first show, defeated demons became angry and caused the director to become unconscious on the stage. Indra used his flagpole to thrash all the demons. It crushed —- jarjara— all the demons. Then they all wished that ‘jarjara’ be there for ever to protect them . Indra said So be it.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். அவர் வங்காளி மொழிக் கவிஞர். நாடக ஆசிரியர்,ஓவியர் ஆவார் . இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் நூலுக்காக 1913ல் நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கு இப்பரிசு கிடைத்தது அதுவே முதல் தடவை.
தாகூர், கல்கத்தாவில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். பாதிக் கல்வியை இங்கிலாந்தில் கற்றார். இவரது குடும்பம் பணக்கார குடும்பம். எட்டு வயதிலேயே இவருக்குக் கவிதை எழுதும் ஆற்றல் வந்தது. இவர் எழுதிய ஜனகண மன… இந்தியாவின் தேசீய கீதமாகத் திகழ்கிறது. இதே போல எங்களது தங்க வங்காளம் – அமர் சோனார் பங்களா – வங்கதேசம் என்னும் நாட்டின் தேசீய கீதமாக உளது.
தாகூருக்கு 17 வயதானபோது அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 30 வயதானபோது கிழக்கு வங்கத்தில் உள்ள (இப்போது அது வங்கதேசம் என்னும் நாடு) குடும்ப நிலன்புலன்களைக் கவனிக்கச் சென்றார். அங்கு திரட்டிய கிராமீய கதைகள், நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கை களையும் பிற்காலப் படைப்புகளில் பயன்படுத்தினார்.
தாகூர் பழைய சம்பிரதாய நடையை, பாணியைக் கைவிட்டு, மக்கள் பேசும் மொழியில் எழுதினார். இது வங்காளி மொழியில் பெரிய மாற்றங்களைக் கொணர்ந்தது. இது சம்பிரதாயக் கவிஞர்கள் அறிஞர்களுக்குப் பிடிக்காததால் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது ஆயினும் தாகூர் தளராமல் இந்திய கலாசாரத்தை மேலை உலகில் பரப்பும் பணியை எழுத்து மூலமாக மேற்கொண்டார்.அதேபோல மேற்கத்திய கலாசாரம் குறித்து வங்காளி மொழியில் எழுதினார்.
இதனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தாகூரின் புகழ் பரவியது. இந்திய கலாசாரம், மேற்கத்திய கலாசாரம், தத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். இயற்கை அழகு கொஞ்சும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் இந்த நிறுவனம் பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக் கழகமாக மாறியது. .இறைவனின் படைப்புகள் எல்லாம் ஒன்றே என்றும் அவற்றில் ஒருமைப்படுத்தும் சிந்தனை இழையோடுகிறது என்றும் நம்பினார். பிரிட்டிஷ் ஆடசியிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென்றும் குரல் எழுப்பினார். இவர் கவிதை, நாடகங்களோடு தத்துவ நூல்கள், நாவல்களையும் எழுதியுள்ளார்.
1913ல் இவருடைய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு கிடைத்தது. வங்காளி மொழியில் தான் எழுதிய கவிதைகள் பலவற்றை எடுத்து அவரே மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டதால் இந்தப் பரிசினைப் பெற முடிந்தது. பக்தி என்பது இதன் அடித்தளமாக அமைந்துள்ளது. ‘நான் பாடுவதெல்லாம் உனக்காகவே’ என்பது இதில் இழையோடும் கருத்து ஆகும் இந்த நூல் வெளியானபோது அவருக்கு வயது 49. இரண்டாயிரத்தும் மேலான பாடல்களுக்கு இசையும் அமைத்தார். அவை இன்றும் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் பாடப்படுகின்றன. இவருடைய பாடல்களை சுவாமி விவேகானந்தரும் பாடியுள்ளார். எழுபது வதில் ஓவியம் தீட்டத் துவங்கினார். அதிலும் சிறந்து விளங்கினார்.
தாகூர் பிறந்த தேதி மே 7, 1861
இறந்த தேதி – ஆகஸ்ட் 7, 1941
வாழ்ந்த ஆண்டுகள் – 80
இலக்கியப் படைப்புகள்:-
1878- A POET’S TALE
1894- THE GOLDEN BOAT
1902 – BINODINI (VINOTHINI)
1910- GITANJALI
1910- GORA
1914 – CHITRA
1916- THE HOME AND THE WORLD
1931 – THE RELIGION OF MAN
1939- SHYAMA
1940- MY BOYHOOD DAYS
–SUBHAM–tags- நோபல் பரிசு, ரவீந்திரநாத் தாகூர்., வங்காளி மொழி, ஜனகண மன, கீதாஞ்சலி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாகிஸ்தான் பற்றி மஹாத்மா காந்திஜியும் மஹரிஷி அரவிந்தரும் கூறியவை!
ச.நாகராஜன்
பாகிஸ்தான் உருவான விதத்தை பாரத தேச மக்கள் அனைவரும் அறிவோம்.
இப்படி ஒரு நாடு உருவாவதை மஹாத்மா காந்திஜி விரும்பவில்லை.
அவர் கூறிய சில சொற்கள் இவை:-
அதை அப்படியே ஆங்கிலத்தில் காணலாம்.
“I am firmly convinced that the Pakistan demand as put forth by the Muslim League is un-Islamic and I have not hesitated to call it sinful”.
– Harijan 6, October 1946
–
“முஸ்லீம் லீக் முன் வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கை இஸ்லாமுக்கு எதிரானது. அது பாவகரமானது என்று சொல்ல நான் தயங்க மாட்டேன்.”
இது தான் அவரது நிலைப்பாடாக 1946 அக்டோபரில் – அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் பாகிஸ்தான் உருவாவதற்கும் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் – இருந்தது.
பாகிஸ்தான் அவரது விருப்பமில்லாத நிலையில் 1947 ஆகஸ்டில் உருவானது.
அவர் கூறினார் அடுத்து:-
“If Pakistan persists in wrong doing there is bound to be war between India and Pakistan.”
– Harijan 28, September 1947
பாகிஸ்தான் தவறு செய்வதைத் தொடர்ந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் உருவாகும். – இப்படி அவர் 1947 செப்டம்பரில் கூறினார் – அதாவது அவர் மறைவதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக.
அஹிம்சையை வாழ்நாள் கொள்கையாக வலியுறுத்திய அவராலேயே பாகிஸ்தானின் தவறான போக்கும் செயலும் சரியில்லை என்பது கூறப்பட்டது. அது தொடர்ந்தால் போர் தவிர்க்க முடியாது போய் விடும் என்றார் அவர்.
போரை அவரால் என்றேனும் ஆதரிக்க முடியுமா?
அவர் அடுத்துக் கூறுவதைப் பார்ப்போம்:
“I have been an opponent of all warfare. But if there is no other way of securing justice from Pakistan, if Pakistan persistently refuses to see its proved error and continues to minimize it, the Indian Government will have to go to war against it. If there is a war, the Hindus in Pakistan cannot be fifth columnists there. No one will tolerate that. If their loyalty lies not with Pakistan they should leave it. Similarly the Muslims whose loyalty with Pakistan should not stay in the Indian Union.
– Harijan 6, October 1947
–
“எல்லாப் போரையும் எதிர்த்து வருபவன் நான். ஆனால் பாகிஸ்தானிலிருந்து நீதி கிடைக்காதிருக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் தொடர்ந்து தனது தவறுகளைச் செய்து கொண்டிருப்பதைக் காணாதிருப்பின், அதைக் குறைப்பதற்கு மறுப்பின், அதற்கு எதிராக இந்திய அரசு போருக்குச் செல்ல வேண்டியிருக்கும். போர் ஏற்படின் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் ஐந்தாம் படையாக அங்கு இருக்க முடியாது. அதை யாரும் பொறுக்க மாட்டார்கள். அவர்களின் விசுவாசம் பாகிஸ்தானிடம் இல்லையெனில் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். அதே போல பாகிஸ்தானுக்கு விஸ்வாசமாக உள்ள முஸ்லீம்கள் இந்திய யூனியனை விட்டு வெளியேற வேண்டும்.”
மிகத் தெளிவாக இப்படி 1947 அக்டோபரில் அவர் கூறினார்.
பாகிஸ்தானைப் பற்றிய மிகத் தெளிவான பார்வையை அவர் கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.
பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பை 1947லிருந்து இன்றைய வரை இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் ஹிந்துக்களும் நன்கு உணர்வர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஓரிழையில் இணைந்து பாகிஸ்தானை நோக்கினால் பாகிஸ்தான் தனது வாலை ஆட்ட நினைத்தும் பார்க்காது.
இனி மஹரிஷி அரவிந்தர் பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிக் கூறியதைப் பார்ப்போம்.
திருச்சி வானொலி நிலையத்திற்கு ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு உரையை மஹரிஷி அரவிந்தர் தந்தார்.
அதில் “The Partition must go” – பிரிவினை போக வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“(பாகிஸ்தான்) பிரிவினை என்பது செயற்கையானது. அது போக வேண்டும். போய் விடும்” என்பது அவர் கருத்தாக இருந்தது.
எதிர்காலம் காணும் மஹரிஷியின் தீர்க்க தரிசனமாகவே இதைக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் பிரிவினை பற்றி மஹாத்மா காந்திஜி கூறிய கருத்துக்களும், அதே போல 1950 முடிய வாழ்ந்த மஹரிஷி அரவிந்தர் கூறிய கருத்துக்களும் தனியே தொகுக்கப் பட வேண்டும்.
அது ஒரு தெளிவான எதிர்காலத்தை பாரத தேச மக்களுக்குக் காட்டும்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இத்தாலி நாட்டில் காதல் பாட்டுக்களை நகைச் சுவை ததும்ப எழுதிய புலவர் ஓவிட் (OVID) , லத்தின் மொழி இலக்கிய கர்த்தாக்களில் வர்ஜில் , ஹோரஸ் போன்றோருடன் வைத்து எண்ணப்படுபவர்.
ரோமானிய புராணத்தையும் இவர் சுவைபடப் பாடியுள்ளார். மத்திய இத்தாலியில் சல்மோனா என்னும் ஊரில் பணக்கார நிலச் சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, ‘மகனே நீ சிறந்த வழக்கறிஞர் ஆக வேண்டும்’ என்று சொல்லி ரோம் நகருக்குக் கல்வி கற்க அனுப்பிவைத்தார். ஓவிட்டுக்கு வழக்காடுதலைவிட சொல்லாடல், கவியாடுதல் மிகவும் பிடித்தது. ஆகையால் வழக்கறிஞர் படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு எழுத்துச் சித்தராக மாறினார். நல்ல சுக போக வாழ்வு. முப்பது வயதுக்குள் ரோம் நகரம் முழுதும் அறிந்த பிரமுகர் ஆனார்.
ஓவிட் , அகஸ்டஸ் சக்ரவர்த்தி காலத்தில் வாழ்ந்தார். அவர்தான் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. அதற்கு முன்னர் பல நுற்றண்டுகளாக இருந்த ரோமானிய ஆட்சி ஊழல் புயலில் சிக்கி, உ ள் நாட்டுப் போரில் இடிந்து விழுந்தது .புதிய சக்ரவர்த்தி புராதன ரோம சாம்ராஜ்ய பண்புகளை மீண்டும் எழுப்ப அரும்பாடு பட்டார் . பழைய பண்புகள் மலர வேண்டும் என்றார் .
இந்த சூழ்நிலையில் ஓவிட் காதல் பற்றி ஒரு கிண்டல், நக்கல் கவிதை (THE ART OF LOVE ) எழுதினார். அது அகஸ்டஸை ஆத்திரப்படுத்தியது. ஒரு ஆணையோ பெண்ணையோ மயக்கி காதல் வலையில் சிக்க வைப்பது பற்றி அவர் பகடியும் கேலியும் மிகுந்த கவிதை ஒன்றை யாத்தார். அவருடடைய யாப்பு, அவருக்கு ஆப்பு வைத்தது . ஆபாசக் கவிதை எழுதிய குற்றத்துக்காக உம்மை நாடுகடத்துகிறேன் என்று சொல்லி, சக்ரவர்த்தி அகஸ்டஸ், நமது கவிஞர் ஓவிட்டை கருங்கடல் கரையிலுள்ள ஒரு தன்னந்தனிக் காட்டு ஊருக்கு அனுப்பினார்.
ரோம் நகரை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மெட்டமார்பசிஸ் METAMORPHOSES என்னும் நூலை எழுதி முடித்தார். ரோமானிய கிரேக்க புராணக் கதைகளில் வரும் தேவதைகளைப் பற்றிய நூல் இது. இதன் பொருள் – உரு மாற்றம்.
கருங்கடலோர ஊரில் தனிமை வாழ்வு வாழ்ந்தபோதும் கவிதை எழுதுவதை நிறுத்தவில்லை. தன்னை மீண்டும் ரோம் நகருக்குள் அனுமதிக்கும்படி கெஞ்சிக் கெஞ்சி கவிதைகளை யாத்தார் . அனால் அகஸ்டஸோ , அவருக்குப் பின்னர் வந்த டைபீரியஸ் என்ற மன்னரோ மனம் மாறவேயில்லை. ஓவிட் , கடலோர ஊரிலேயே உயர்நீத்தார் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Dhananjaya’s Dasarupaka
Almost thousand years ago, a writer called Dhananjaya wrote a treatise called Dasarupaka (ten forms of plays). He said,
“It was Brahma who extracted from the four Vedas their essence and created the Natyaveda out of it. It was sage Bharata who put it in to practice; and it was Siva and his consort Parvati who (respectively) contributed the Tandava and Lasya dances. Against this galaxy of authors who else dare explain dramatics? I am contributing my little mite to reveal the excellence of the work”.
xxx
The original work, the text says in its first chapter, was composed by Lord Brahma for the celestial immortals ruled by Indra . In the last chapter, it is said that for the terrestrial world, it was recomposed or edited by Konami, Vvastysa, Sandilya and Dattila, who are mentioned both as the sons and disciples of Bharata.
But dramaturgy was studied even before Panini of eighth century BCE. Panini refers to Nata Sutras— aphoristic guide for the Natas — by two persons Silalin and Krsasva.
Xxx
Meaning of Words not known
We come to know that several hands tried to update the book. It resulted in contradictory, repetitive and incongruent final text. There are words and passages impossible to understand. Even an erudite scholar like Abhinavagupta gives several meanings to a word. For instance meaning of Mattavarani is not known. The gods of eight quarters are placed on eight places to protect the theatre; in the Mattavarani, , Indra, the master or the patron of the show, is seated. Mattavarani means intoxicated elephant. Is it a special seat like Royal box?. Correct meaning is not known. Similarly Dwibhumi— two grounds— in connection with the theatre, where Abhinavagupta is on an imagination spree.
Another example, where confusion and contradiction exist is the description of three kinds of theatre houses.
In the first chapter, the book begins with the origin of drama and narrates how and why Bharata produced the first play. The sixth chapter begins with the sages asking Bharata five questions . Here he used the word Sutra and summarised the first five chapters. This lead to the conclusion that the first five chapters are added later. And originally it was in ‘Sutra’ form and authors like Kohala produced it in the present ‘sloka’ form.
Originally the open field was used as the auditorium; in the course of time a Dwibhumi was thought of. That is the auditorium was in two levels. Later a building with four walls came. And each change was incorporated in the book.
My comments
All these apparent contradictions can be resolved if we understand that it was updated according to the development of stage and acting. Whatever we don’t understand belong to the oldest stratum.
The text underwent changes may be seen from another circumstance. In one instance the death of a hero is prohibited on the stage. But the dramatist Bhasa has his hero dead on the stage. ‘Goes to heaven’,says the stage direction. Does it mean it was written before Bhasa? Role of sthapaka is also different in both.
Characters in a play should not be many says Bharata.
But in Bhasa’ s plays we see many characters. Even critics have called Bhasa’s plays ‘bahu bhumika’, having many characters.
There are many more remarks which would date NS to a later period.
My view is that it shows updating. While updating any book Hindus don’t dare to touch the previous writers. We see such contractions even in the epics Ramayana and Mahabharata.
Like Mahabharata
Like Mahabharata which encompassed all earlier stories and philosophies, NS too boasts that
“What is found here may be found elsewhere, but what is not here cannot be found anywhere”.
Playwrights continued the use of Bharata’s Sanskrit and Prakrit. Bharata himself said that dress and speech conform to the regional usage of the spectators .
Since foreigners were not well versed in our customs, and then they had falsely believed that Greeks were far superior in all aspects, they drew wrong conclusions. The only help they did was translating all the Sanskrit works into English .
They had no intimate knowledge of our tradition.
Crimes came before the Penal code,
Language came before grammar and
Drama came into existence before the NS
xxx
Drama in the Rig Veda
RV 6-29-3
“Your devotees embrace your feet for glory.
Bold, thunder armed, rich through your strength in rewarding.
Robed in a garment fair as heaven to look on,
You have displayed you like an active dancer.”
Active dancer in the fourth line is translated into Tamil as actor by Jambunathan.
In the days of Rig Veda only dance drama existed. So actor and dancer is acceptable.
शरिये ते पादा दुव आ मिमिक्षुर्ध्र्ष्णुर्वज्री शवसा दक्षिणावान | वसानो अत्कं सुरभिं दर्शे कं सवर्ण नर्तविषिरो बभूथ ||
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அவர் ஆங்காங்கு நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
கண்பார்வையற்ற ஒருவனுக்கு கண் பார்வையை அருளினார் ராமதாஸர். கிணற்றில் விழுந்த ஒருவனை உயிர் போகாமல் உயிர்ப்பித்தார். ஒரு சுமங்கலிப் பெண் தன் கணவனை இழந்து அழ, உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அருளினார் சமர்த்தர். அவளது கணவனை சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றிருந்தனர். அங்கு அவனை ராம நாமம் சொல்லி உயிர்ப்பித்தார். அவர் அருளியபடியே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்தான். உத்தவன் என்று பெயரிட்டப்பட்ட அந்த மகனே பின்னால் ராமதாஸரின் சீடராக ஆனார்.
ராமதாஸருக்குச் சீடர்கள் பெருகினர். உத்தவ் ஸ்வாமி, கல்யாண் ஸ்வாமி, வெண்ணா ஸ்வாமி, திவாகர் ஸ்வாமி, ஆசார்ய கோபால்தாஸ் உள்ளிட்ட பலரும் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
ராமதாஸர் விட்டலனைப் போற்றும் ஏராளமான அபங்கங்களை இயற்றினார். தஞ்சாவூரில் அவர் இருந்த போது அபங்கங்களை கர்நாடக இசையில் பாட அவர் ஊக்குவித்தார். அதன் பயனாக இன்றும் அபங்கங்கள் ஹிந்துஸ்தானி இசையில் கேட்பதோடு கர்நாடக இசையிலும் நாம் கேட்க முடிகிறது. பல ஆன்மீக நூல்களையும் அவர் இயற்றி அருளியுள்ளார். அவரது தாஸபோதம் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும். தாஸ் என்றால் சீடன்; போதம் என்றால் உபதேசம். சீடருக்கு உபதேசமாக அமையும் இந்த நூல் மராத்தி மொழியில் உரைநடை நூலாக அமைகிறது. 1654ஆம் ஆண்டு அவர் இதை இயற்றினார். இதில் பக்தி மார்க்கத்தைப் பற்றி அவர் விரிவாகக் குறிப்பிடுகிறார். 20 அத்தியாயங்களில் 7751 உரைநடைப் பகுதிகளை இது கொண்டுள்ளது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை, சாஸ்திரங்கள், பிரம்மசூத்ரம் உள்ளிட்ட அனைத்து புண்ய நூல்களின் சாரமாக இது திகழ்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,சிந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டஇந்த நூல் இப்போது ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் படிக்கக் கிடைக்கிறது.
ராமதாஸரின் ஆரத்திகளுள் கணேச ஆரத்தி குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைவதோடு இன்று அனைவராலும் ஆரத்தியின் போது பாடப்பட்டு வருகிறது. சுககர்த்த துகஹர்த்த ஸ்லோகம் என்று இதன் பெருமை கூறப்படுவதால் இது சுகத்தைத் தரும்; துக்கத்தை அகற்றும் என்பது உறுதியாகிறது. மனாசே ஸ்லோகம் என்ற அரிய நூல் 205 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இதை அவர் சீடரான கல்யாண் ஸ்வாமியுடன் சேர்ந்து இயற்றினார். அவரது ஸ்ரீமாருதி ஸ்தோத்ரம் புகழ் பெற்ற ஆஞ்சநேய ஸ்தோத்ரம் ஆகும். அதை ஓதுவதால் ஏற்படும் அபார பலன்களை அந்த ஸ்தோத்ரத்தின் இறுதியில் காணலாம். இன்னும் ஆத்மா ராம், 11 லகு கவிதா, ஷத்ரிபு நிரூபண், மானபஞ்சகம், சதுர்த்தமான், பீம ரூபி ஸ்தோத்ரம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். ராமாயணத்திற்கு அவர் மராத்தியில் டீகா எனப்படும் விளக்கஉரை வேறு அருளியுள்ளார்.
சிறந்த ஆன்மீகப் பெரியாராகவும் அரசியலில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வழி வகுத்ததோடு அந்நிய முகலாரின் ஆக்கிரமிப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவராகவும் இருந்த அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். பக்தி மார்க்கத்தில் ஜாதி பேதம் கிடையாது என்பதை அவர் வலியுறுத்தியதோடு பெண்களுக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். ‘பெண்களின் கர்ப்பத்திலிருந்தே ஒவ்வொருவனும் உருவாகிறான். இந்த முக்கியத்துவத்தை அறியாதவனை மனிதன் என்று எப்படிக் கூற முடியும்’ என்கிறார் அவர்.
அவரது தாக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஹிந்து எழுச்சியிலும் இருந்ததை சமீபத்திய வரலாறு சுட்டிக் காட்டுகிறது. பாலகங்காதர திலகர் அவரிடமிருந்தே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பதைச் சொல்வதற்கான உத்வேகம் பெற்றார்.
ஹிந்துக்கள் அனைவரையும் ஓரிழையில் இணைக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை 1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஸ்தாபித்த பரமபூஜனீய டாக்டர் ஸ்ரீ கேசவபலிராம் ஹெட்கேவார் ராமதாஸரது பல உரைகளையும் பாடல்களையும் தனது டயரியில் எழுதும் பழக்கம் உடையவர். ஹிந்து எழுச்சிக்கு அவர் சமர்த்த ராமதாஸரிடமிருந்தே உத்வேகம் பெற்றார்.
இறுதியாக சமர்த்த ராமதாஸர் தனது இறுதி நாட்களை சதாரா மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் காட்டில்,தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்ரஹத்தில் அருகில் இருந்தவாறே, ஸ்ரீராம் ஜயராம் ஜய் ஜய் ராம் என்று ராமநாமத்தை ஜபித்தவாறே கழித்தார். கடைசி ஐந்து நாட்களில் அவர் நீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். 1681ஆம் ஆண்டு தனது 73ஆம் வயதில் ராமனுடன் ஒன்றினார். உத்தவ் ஸ்வாமி அவருக்கான இறுதி மரியாதைகளைச் செய்தார். பின்னால் மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சாம்பாஜி போன்ஸ்லே அவருக்கு ஒரு சமாதியைக் கட்டினார்.
இறுதியாக அவரது மனாசே ஸ்லோக அருளுரைகளில் ஐந்துடன் இந்த உரையை முடிப்போம் :
2வது ஸ்லோகம்:
நேர்மையும் பக்தியும் நிறைந்த பாதையைக் கடைப்பிடிப்போம். இந்தப் பாதை நம்மை ஸ்ரீ ஹரிக்கு இட்டுச் செல்லும். விலக்கப்பட்ட அனைத்தையும் தவிர்ப்போம்; போற்றப்படும் அனைத்தையும் முழு மனதுடனும் பக்தியுடனும் செய்வோம்.
ஸ்லோகம் 3 ஒவ்வொரு நாள் காலையும் ஸ்ரீ ராமரைத் துதிப்போம்.. ஸ்ரீ ராம் என்று சொல்லி நமது வேலையைத் தொடங்குவோம். நல் நடத்தையை எப்போதும் கடைப்பிடிப்போம். நற்செயல்களைச் செய்பவனையே இந்த உலகம் போற்றும்.
ஸ்லோகம் 186
ஸ்ரீ ராமர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். நாம் ஸத்தியத்தைக் காண்போமாக.எப்போதும் ஸ்ரீ ராமருடன் நாம் இணைவோமாக. ஸ்ரீ ராமரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அஹங்காரத்தை வெறுத்து ஒதுக்குவோமாக.
ஸ்லோகம் 204
ஸத்ஸங்கம் உலகப் பற்றைத் துறக்க காரணமாக அமையும். ஸத்ஸங்கமே முக்திக்கு வழி வகுக்கும்.
இறுதியான 205வது ஸ்லோகம்
மனதிற்காக நல்ல கீதங்களைக் கேட்டு மனதிலிருந்து அழுக்கை அகற்றுவோம். நமது மந்தமான பிரக்ஞையை விழிப்புணர்வுள்ள ஒன்றாக மாற்றுவோம்.ஞானத்தைப் பெறுவோம். உலகப் பற்றைத் துறப்போம். மனதிற்காக நல்ல பாடல்களைக் கேட்டு மனதைச் செம்மைப் படுத்துவோம். முக்தியைப் பெற ராஜமார்க்கத்தைக் கடைப்பிடிப்போம்.