சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் தேவதாஸ் நாயுடு எழுதிய பாஞ்சாலங்குரிச்சி சரித்திரம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சுவையான செய்திகளின் மூன்றாவது பகுதி இது—
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபோதும் ஊமைத்துரை தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். இரவோடு இரவாக வெள்ளைக்காரர் வியக்கும் வண்ணம் கோட்டையும் கட்டினார்கள். அதைத் தகர்க்க ஆங்கிலேயர்கள் மிகப்பெரும் பீரங்கி வெடிகுண்டுகளை உபயோகித்தனர்.
ஊமைத்துரை மரணம்
அடுத்து நடந்த சண்டையில் ஊமைத்துரை காயம் அடைந்தார். பின்னர் அவரும் தூக்கிலிடப்பட்டார்.
செந்தில் ஆண்டவன் பக்தர்கள்
கட்டபொம்மன் நாயக்கர் வைஷ்ணவ மற்றும் ஜக்கம்மாள் வழிபாட்டில் வந்தவர்கள் என்றாலும் கட்டபொம்மன் முருகபக்தரும் ஆவார். தினமும் திருச்செந்தூரில் முருகனுக்கு தீபராதனை நடந்த செய்தி முரசுகள் மூலம் வந்தபின்னர்தான் சாப்பிடுவார். இதற்காக நீண்ட தொலைவுக்கு நகரா மண்டபங்கள் அமைக்கப்பட்டதாம்.
இறுதியில் தமிழ் மக்களின் மனம் புண்பட்டிருப்பதை அறிந்த வெள்ளையர் கட்ட பொம்மன் சந்ததியாருக்கு பல வசதிகளைச் செய்துகொடுத்து சமாதானப்படுத்தினர்.
நம் நாட்டின் சுதந்திரம் கட்டபொம்மன் போன்ற ஆயிரக்கக்கானோர் முயற்சியில் கிடைத்ததேயன்றி வெறும் அஹிம்சையால் மட்டும் கிடைக்கவில்லை.
வெள்ளைக்கார கொள்ளைக்காரர்கள் 40,000 வராகன் கொள்ளையடித்த செய்தி
குலவை சத்தம் போட்டவுடன் வெள்ளையர் மீது தாக்குதல்
கட்டபொம்மனை வெள்ளைக்கார அதிகாரிகளும் கலெக்டர்களும் பலமுறை அழைத்த போதும் அவர் போகவில்லை. இறுதியாக ஒரு நாள் சந்தித்தபோது கோபால் அய்யர் கடிதங்களைப் படித்து முடித்தவுடன் பயங்கர மோதல்.
ஊமைத்துரையின் வீரம்
கட்டபொம்மனுக்கு
தூக்கு
எட்டயபுரம்
ராஜா காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மன் பிடிபட்டார். தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டவுடன் அமைதியாக நடந்து சென்றார். அவ்வளவு வீரம்; அவ்வளவு மன உறுதி.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கல் போடுவது நினைத்த காரியத்தை எல்லாம் நிறைவேற்றும் என்பதால் போகும் வரும் மக்கள் எல்லோரும் கல் போட்டு மரியாதை செய்வர்.