கீதையின் ஆறாவது கட்டளை! (Post No.7139)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-25 am


Post No. 7139

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7123 வெளியான தேதி : 22-10-2019 – கீதையின் ஐந்தாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் ஆறாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஆறாவது கட்டளை இது :

 Thou Shalt Seek the Lowest Place

 நீ உனக்கென ஒரு தாழ்ந்த இடத்தை நாடு

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

அதிகாரத்தையும் விளம்பரத்தையும் தேடும் இந்த உலகின் இன்றைய நாளில் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? விந்தை தான்!

அக்பரை கடவுள் என்று துதி பாடும் கூட்டம் பீர்பலிடம் வந்து, ‘அக்பர் கடவுள் தானே, அதை நீ ஒத்துக் கொள்கிறாயா?’ என்று கேட்டனர்.

பீர்பல் திட்டவட்டமாக அதை மறுத்து விட்டார்.

இது தான் சமயம் பீர்பலை ஒழித்துக் கட்ட என்று எண்ணிய அவர்கள் அக்பரிடம் சென்று, “நீங்கள் தாம் எம் கடவுள். ஆனால் பீர்பல் இதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்” என்று கோள் மூட்டினர்.

அக்பர் உடனடியாக பீர்பலை அழைத்தார்.

“பீர்பல், இவர்கள் என்னைக் கடவுள் என்று எண்ணுகிறார்கள். நீர் அதை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியது உண்மையா?” என்று கேட்டார்.

பீர்பல் ஆம் என்று தான் கூறியதை ஒத்துக் கொண்டார்.

அக்பர் கோபத்துடன், “ பீர்பல், நான் என் குடிமக்களுக்கு கடவுள். உமக்கு எம் மீது கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா?” என்று கேட்டார்.

பீர்பல் அக்பரை நோக்கிக் கூறினர் :”அரசே! தாங்கள் கடவுள் இல்லை என்று நான் கூறியது உண்மை தான்! ஏன் அப்படிக் கூறினேன்? தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே! அதனால் தான் நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினேன்”

பீர்பலைத் தண்டிக்க நினைத்தவர்கள் இந்தப் பதிலைக் கேட்டு திடுக்கிட்டனர்.

அக்பருக்கு ஒரே மகிழ்ச்சி. வியப்பு தாளவில்லை.

“சற்று விளக்கிக் கூறும்” என்று பீர்பலை நோக்கிக் கூறினார்.

பீர்பல் கூறினார்: “அரசே! கடவுளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவோ பேர் என்னென்ன தவறுகள் உண்டோ அவ்வளவையும் செய்கிறோம். ஆனால் அவரது சாம்ராஜ்யமான இந்தப் பூவுலகிலிருந்து ஒரு போதும் அவர் யாரையும் விரட்டி விடுவதில்லை.

ஆனால் தாங்களோ, எவனேனும் ஒருவன் தவறிழைத்து விட்டதாகத் தோன்றினால் அவனை உடனடியாகத் தண்டித்து விடுகிறீர்கள்; நாடு கடத்தி விடுகிறீர்கள்! தங்களின் அதிகாரம் எப்படிப்பட்டது, பாருங்கள்! தாங்கள் கடவுளுக்கும் ஒரு படி மேலே தானே இருக்கிறீர்கள்?!”

அக்பர் பெரும் புத்திசாலி.

பீர்பல் கூற வந்ததை நன்கு புரிந்து கொண்டார்.

அகம்பாவம் ஒருவனை எந்த அளவுக்குக் கொண்டு போய் விடும் என்பதை, தான் கடவுள் என்று கூறியதை ஒத்துக் கொண்டதாலேயே தெரிய வருகிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

பீர்பலை அவர் போற்றித் தன் நிலையை உணர வைத்ததைப் பாராட்டினார்.

மாமன்னர் அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில் இருந்தார். அவரது அன்னைக்குத் துக்கம் தாளவில்லை. ஓவென்று அழுதார்.

அலெக்ஸாண்டர் அவரை அருகில் அழைத்தார். “தாயே! கவலைப்பட வேண்டாம். நான் இறந்த பிறகு என்னைப் புதைத்த பிறகு, வரும் பௌர்ணமியன்று என் கல்லறைக்கு வந்து அலெக்ஸாண்டர் என்று என்னைக் கூப்பிடுங்கள். நான் உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.

அலெக்ஸாண்டர் மரணமடைந்த பின்னர் அவர் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

முழுநிலா ஒளி வீசிப் பிரகாசிக்கும் பௌர்ணமியும் வந்தது.

கல்லறைக்கு ஓடோடி வந்த அலெக்ஸாண்டரின் தாயார், அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு வந்து, “ஓ!அலெக்ஸாண்டர்” என்று கத்திக் கூப்பிட்டார்.

உடனடியாக நாலா புறங்களிலிருந்தும் ஏராளமான குரல்கள் எழும்பின:

“இங்கு நூற்றுக் கணக்கான அலெக்ஸாண்டர்கள் புதையுண்டு கிடக்கிறோம். எந்த அலெக்ஸாண்டரை நீங்கள் கூப்பிடுகிறீர்கள்? உங்களுக்கு யார் வேண்டும்?”

இது தான் உலகம்.

அக்பர் ஒரு நாள் பீர்பலுடன் விருந்துண்டார்.

“ஆஹா! பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு கறிகாயை நான் கண்டதே இல்லை. என்ன ருசி? நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்.

“மன்னா! அது தான் உண்மை! எப்படிப்பட்ட கறிகாய் கத்தரிக்காய்! அதனால் தான் அதற்கு கிரீடம் போல ஒன்றை வைத்திருக்கிறான் கடவுள்”

பீர்பலின் இந்த பதிலால் அக்பருக்கு ஏக குஷி.

ஆனால் அன்று அவருக்கு ஜீரணம் ஆகவில்லை. பெரிதும் கஷ்டப்பட்டார்.

மறுநாள் பீர்பலிடம் அவர், “பீர்பல்! கத்தரிக்காய் போல ஒரு மோசமான கறிகாயை நான் பார்த்ததே இல்லை! நீர் என்ன சொல்கிறீர்” என்றார்.

“மன்னா! அது தான் பெரிய உண்மை! அதனால் தான் அதன் தலையில் ஆணி போன்ற ஒன்றை அடித்து சுற்றி வர முள்களை கடவுள் கொடுத்திருக்கிறார்” என்றா பீர்பல்.

அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. “பீர்பல்! நேற்று நீர் தான் கடவுள் அதற்குக் கிரீடம் கொடுத்திருக்கிறார். அது தான் பிரமாதமான காய் என்றீர். இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறீரே” என்றார் அக்பர்.

பீர்பல் மன்னனை நோக்கிக் கூறினார்: “ மன்னரே! எனக்கு நீங்கள் தான் எஜமானர். கத்தரிக்காய் இல்லை. நீங்கள் சொன்னதை மறுத்து இந்த எளியேன் பேசக் கூடாது. ஆனால் கத்தரிக்காயைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அது எனக்கு எஜமானன் இல்லை” என்றார்.

அக்பருக்கு பீர்பலின் எளிமை புரிந்து விட்டது.

எப்போதும் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துக் கொள்ளும் பண்பு அவருக்குப் புரிந்து அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

எளிமை என்றும் வெற்றி பெறும்!

***

கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள் (Post No.7133)

India- Vietnam Joint Issue

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am


Post No. 7133

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுளின் பாத சுவடுகளை வழிபடுவதும், ஞானியரின் காலணிகளை வழிபடுவதும் பாரத நாட்டில் தொன்றுதொட்டு  இருந்துவரும் பழக்கங்கள். ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன். காசி இந்து பல்கலைக் கழக துவக்க விழாவுக்கு வர இயலாது என்று சிருங்கேரி சுவாமிகள் சொன்னவுடன் பாதுகைகளை  வாங்கிச் சென்று பெரிய மரியாதை செய்து அவற்றைத் திருப்பி அனுப்பினார் அமைச்சர். பாதுகா சஹஸ்ரம் என்ற பெயரில் இறைவனின் திருவடிகள் மீது 1000 பாடல் இயற்றினார் வேதாந்த தேசிகன். வள்ளலார் பாதக் குறடுகள் முதல் மஹாத்மா காந்திஜியின் பாதக் குறடுகள் வரை இன்றும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் தரிசிக்கப்படுகிறது.

இந்துக்களுக்கு மண்ணும் புனிதம், மலையும் புனிதம். பக்தர்களின் காலடித் தூசி தன்  மீது படவேண்டும் என்பதற்காக மாமன்னர்கள் தங்கள் பாத சுவடுகளை கோவில் தரைகளில் பொறிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் காலடிச் சுவடுகள் மீது நாம் படக்கூடாது என்று அஞ்சி அதன் மீதும் மண்டபம் எழுப்பிவிட்டோம்.

இமய மலை முதல் இலங்கையின் சிவனொளி பாத மலை (Adam’s Peak) வரை பாதச் சுவடுகளை வழிபடுவதில் வியப்பில்லை ஆனால் கம்போடியாவிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபடக்கூடிய பாத சுவடுகள் உள்ளதைப் பலரும் அறியார்.

வியட்நாம், கம்போடியாவின் பழைய பகுதி ப்யூனான் (Funan). அங்கு முக்கிய வைஷ்ணவக் கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்வெட்டு ஜயவர்மனின் மனைவி குலப் பிரபாவதி செய்த தானம் பற்றியது. பிராமணர்கள் வசிக்கும் குரும்ப நகரத்தில் அவள் இறைவனின் தங்க விக்ரகத்தை நிறுவினாள்; ஒரு நந்தவனத்தையும், ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்தாள்; மற்றொரு கல்வெட்டு விஷ்ணுவின் பாத சுவடுகள் பற்றியது. குணவர்மன் என்பவன் சக்ர தீர்த்த ஸ்வாமின் என்னும் விஷ்ணுவின் பாத சுவடுகளைப் பொறித்தான். அடுத்ததாக ருத்ரவர்மன் கல்வெட்டு புத்தர், பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறது.

604-ம் (CE 604) ஆண்டில் (சக ஆண்டு 526) ஒரு பிராஹ்மணன், மலை உச்சியில் சிவன் பாதத்தைப் பொறித்து அதன் மீது தண்ணீர், பால் விழுவதற்காக ஒரு குடத்தை நிர்மாணிததாக ஒரு கல்வெட்டு இயம்புகிறது. அதைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பியதையும் கல்வெட்டு உரைக்கிறது.

613 (CE 613) ஆண்டில் சிவன் மடி மீது பார்வதி அமர்ந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது.

xxxx

Brahma Stamp in Indo China

சீனர்கள் அடித்த கொள்ளை – ஒரு லட்சம் பவுண்டு தங்கம்

சீனாவின் லியங் வம்சாவளி (History of Liang Dynasty) )  பற்றிய புஸ்தகம் கிடைத்துள்ளது. அதில் வியட்நாமென்னும் சம்பா  தேசத்தில் இருந்து சீனர்கள் ஒரு லட்சம் பவுண்டு எடையுள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கவுண்டின்ய வம்சத்தில் வந்த மன்னர் தங்க சிம்மாசனத்தில் படாடோபங்களுடன், அழகிகள் சாமரம் வீச, எழுந்தருளியதாகவும் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது நாம் சினிமாவில் காணும் மன்னர்களின் காட்சிகள் அத்தனையையும் அவர்கள் அப்படியே வருணித்து எழுதியுள்ளனர்.

சம்பா தேச பாமர மக்கள் உடை அணியாமல் இருந்ததாகவும் அவர்களுக்கும் உடை அணியும் வழக்கததை கவுண்டின்யர் கற்றுக் கொடுத்தகதாவும் சீனர்கள் எழுதி வைத்துள்ளனர்.

சீனர்களுக்கு சிறிய கப்பல் மட்டுமே கட்டத் தெரிந்ததால், தென் சீனக் கடலில் ,இந்துக்களின் நீண்ட கப்பல்களுக்கு , பயணிகள் மாற்றப்பட்டதாகவும் சீனர்கள் சொல்கின்றனர்.

ஒரு பவுண்டு= 453 கிராம்; ஒரு பவுன்/ சவரன் = எட்டு கிராம்)

xxx

உடனே செய்க!

உலக நாடுகள் முழுதும் அவரவர் எழுதிய புது வரலாற்றைப் படிக்கின்றனர். இந்தியர்கள் மாட்டும் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றை இன்று வரை படிக்கின்றனர்!!!

இந்திய வரலாற்றை விரைவில் திருத்தி எழுத மாபெரும் இயக்கம் துவக்க வேண்டும். தமிழர்களும் ஏனைய தென் இந்தியர்களும் தென் கிழக்கு ஆசியாவில் எட்டு நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆண்டதை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; சிங்க்கப்பூரின் பெயர் சம்ஸ்க்ருதம் (சிம்ஹ புரம்; இலங்கையின் பெயர் சம்ஸ்க்ருதம்- லங்கா, சிம்ஹலதேச); பர்மாவின் பெயர் பிரஹ்மா, கம்போடியாவின் பெயர் காம்போஜம், லாவோஸின் பெயர் லவன் தேசம்; வியட்நாமின் பழைய பெயர் சம்பா; மலேயாவின் பெயர் மலை நாடு- தமிழ்) சாவகம், சுமத்ரா போன்ற` இந்தோநேஷிய தீவுகள் தமிழ், சம்ஸ்கிருத நூல்களில் உள்ளன; தென் கிழக்காசிய வரலாற்றை தமிழர்கள் கற்றால் ராஜேந்திர சோழன், வீர பாண்டியன், குலோத்துங்க சோழனின் கடற்படை வலிமை புரியும். வியட்நாமை ஆண்ட திருமாற பாண்டியன் முதல் 1500 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்). அந்த புகழோங்கிய காலம் மீண்டும் வரும்; வரச் செய்ய முடியும்!)

Shoe worship | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › shoe-worship

1.      

15 Aug 2012 – Why Do Hindus Worship Shoes? By London swaminathan. “A pair of sandals worn by the Maharishi is expected to fetch £80,000 when they are …

Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-temple-in-syria-with-…

1.      

8 Apr 2017 – Written by London swaminathan Date: 8 APRIL 2017 Time uploaded in London:- 13-47 Post No. 3799 Pictures are taken from various sources; …

Footprints on sands | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › footprints-on-sands

1.      

12 Jul 2017 – Written by London Swaminathan Date: 12 July 2017. Time uploaded in London- 18-24. Post No. 4074. Pictures shown here are taken from …

Durga | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › durga

1.      

20 Jul 2018 – The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his …

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints …https://tamilandvedas.com › 2018/10/07 › காலம…

1.      

Translate this page

7 Oct 2018 – Tamil and Vedas … காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the … some of his most famous poems, including the Village Black Smith. … Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)In …

Xxxx subham xxxx

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள் (Post No.7131)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7131

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் 21-10-2019 நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனைத்து நலன்களையும் அருளும் ருத்ராட்ச ரகசியம்!

ச.நாகராஜன்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பயன்கள்

உலகில் அனைத்து நலன்களையும் பெறும் பல வழிகளில் ருத்ராட்சம் அணிவது மிகவும் முக்கியமான பயன் தரும் ஒரு வழியாகும். இதன் இரகசியங்களை அறிதல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இறையருள் பெற ஏற்றது,

சகல தோஷங்களையும் போக்க வல்லது

பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது

ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும் அருள்வது

சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது

நவ சக்திகள் நம்மிடம் உருவாக வைப்பது

சுப காரியங்களைத் தடையின்றி நிறைவேற்றி வைப்பது

காம தேவனின் அருள் சித்திப்பது

என இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

புராண வரலாறு

ருத்ராட்சம் தோன்றியது பற்றி நமது புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

தேவி பாகவதம் கூறும் வரலாறு இது:

ஒரு காலத்தில் திரிபுரன் என்னும் அசுரன் திருமால் பிரமன் உள்ளிட்ட அனைவராலும் ஜயிக்க முடியாதபடி இருந்து அனைவரையும் துன்பப்படுத்தி வந்தான்.

அக்கினி போலச் சுடர் விட்டு எரிப்பதாயும், சகல தேவ சொரூபமாயும் உள்ள அகோரம் என்னும் திவ்ய அஸ்திரத்தைப் பற்றி சிவபிரான் பல்லாயிரம் வருடம் சிந்தித்திருந்து கண் விழித்தார். அவரது அஸ்திரத்தால் அசுரன் அழிந்தான்.

அப்போது அவரது மூன்று கண்களிலிலிருந்தும் நீர்த்துளிகள் கீழே விழுந்தன. அதிலிருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாயின. அவரது ஆணையின் பொருட்டு அந்த மரங்களிலிருந்து முப்பத்தெட்டு பேதமாயுள்ள ருத்ராட்சங்கள் தோன்றின. வலக்கண்ணாகிய சூரிய நேத்திரத்திலிருந்து தோன்றிய பன்னிரெண்டு பேதங்கள் கபில நிறமாயின.

இடக்கண்ணாகிய  சந்திர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினாறு பேதங்கள் வெண்ணிறமாயின.

அக்னி நேத்திரத்திலிருந்து தோன்றிய பத்து பேதங்கள் கறுப்பு நிறமாயின.

ருத்ராட்சம் என்றால் ருத்ரனின் கண்கள் எனப் பொருள். (அக்ஷம் – கண்கள்)

ருத்ராட்சம் கிடைக்கும் இடங்கள்

சிவ பிரானின் அருளால் இப்படித் தோன்றிய அபூர்வமான ருத்ராட்ச மரங்கள் வடக்கே இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும், திபெத்திலும், மலேசியா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் நெடிது வளர்கின்றன. சுமார் 75 அடி உயரம் வரை இந்த மரங்கள் வளர்வது ஒரு அபூர்வக் காட்சி. ருத்ராட்ச மரங்களிலிலிருந்து உருவாகும் ருத்ராட்சக் கொட்டைகள் பனாரஸ் உள்ளிட்ட இடங்களில் சுத்தமானதாகக் கிடைக்கின்றன.

ருத்ராட்ச மரத்தின் அறிவியல் பெயர் எலாயோ கார்பஸ் கானிட்ரூஸ் (Elecocarpous Ganitrus ) என்பதாகும்.

இன்று உலகில் 38 வகை ருத்ராட்சங்களில் 21 வகைகள்  கிடைக்கின்றன.

ருத்ராட்ச வகைகளும், அவை தரும் பலன்களும்

ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள துவாரம் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு மரபாகும். ருத்ராட்சங்களின் பகுதிகளை முகம் என்று அழைக்கிறோம்.

ஒரு முகத்திலிருந்து 21 முகம் வரை உள்ள ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன என்ற போதிலும் சில வகைகள் கிடைப்பது அரிது.

ஒரு முகத்திலிருந்து 14 முகம் வரை உள்ள ருத்ராட்சங்களை அணிவதால் ஏற்படும் அரிய பலன்களை ருத்ராட்ச ஜாபால உபநிடதம் விளக்குகிறது.

சிவ புராணமும் தேவி பாகவதமும் சில விளக்கங்களை அளிக்கின்றன.

அவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்:

ஒரு முகம் : இந்திரிய நலம் பெற்று பர தத்துவத்தில் லயிப்பர்.

இது சிவ சொரூபம்.

இரண்டு முகம் : அர்த்த நாரீஸ்வர சொரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரரின் அருள் இருக்கும். புத்தி பூர்வமாகவும் புத்தியற்று செய்ததுமான பாவங்கள் அனைத்தையும் போக்கும்.

மூன்று முகம் : மூன்று அக்னிகளின் சொரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும். ஸ்த்ரீ ஹத்தியை ஒரு நொடியில் போக்கும்.

நான்கு முகம் : பிரம்மாவின் வடிவம். இதை அணிவதால் பிரம்ம பிரீதி ஏற்படும். நரனைக்  கொன்ற பாவம் போக்கும்.

ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம சொரூபம். பிரம்மஹத்தி பாவத்தையும் போக்க வல்லது.

ஆறு முகம் : முருகனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் பெரும் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி, சிறந்த ஞானம், சம்பத்து, தூய்மை ஆகியவற்றிற்கு இடமானது. புத்திமான் இதை அணிய வேண்டும். விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏழு முகம் : சப்த மாதாக்களை அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம் சிறந்த ஞானம் ஏற்படும்.

எட்டு முகம் : எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம். இதை அணிபவர்கள் ஸத்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் அருளையும் அஷ்ட வசுக்களின் பிரியத்தையும் கங்காதேவியின் அருளையும் பெறுவர்.

நவ முகம் : நவ சக்திகளின் உறைவிடம். இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.

தச முகம் : யமனை அதி தேவதையாகக் கொண்டது. இதை அணிவதால் நவ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.

பதினொரு முகம் : ஏகாதச ருத்ரர்களை அதி தேவதையாகக் கொண்டது. எப்போதும் சௌபாக்கியத்தை வளர்க்கும்.

பன்னிரெண்டு முகம் : மஹா விஷ்ணு சொரூபம். 12  ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

பதிமூன்று முகம் : விரும்பிய சுப சித்திகளை அருள்வது. இதை அணிவதால் காம தேவனின் அருள் ஏற்படும்.

பதினான்கு முகம் : ருத்ர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும்.

 நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்ச வகைகள்

இனி 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதையையும் அணிய வேண்டிய ருத்ராட்சத்தையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்தப் பட்டியல் வருமாறு:-

நட்சத்திரம் அதி தேவதை அணிய வேண்டிய ருத்ராட்சம்

அசுவனி     கேது          நவமுகம்

பரணி        சுக்ரன்         ஷண்முகம்

கார்த்திகை   சூர்யன்         ஏக முகம், த்வாதச முகம்

ரோஹிணி    சந்திரன்       இரண்டு முகம்

மிருகசீரிஷம்  செவ்வாய்     மூன்று முகம்

திருவாதிரை     ராகு        எட்டு முகம்

புனர்பூசம்      ப்ருஹஸ்பதி  ஐந்து முகம்

பூசம்           சனி          சப்த முகம்

ஆயில்யம்      புதன்           நான்கு முகம்

மகம்           கேது         நவ முகம்

பூரம்           சுக்ரன்        ஷண்முகம்

உத்தரம்        சூர்யன்        ஏக முகம், த்வாதச முகம்

ஹஸ்தம்      சந்திரன்        இரண்டு முகம்

சித்திரை       செவ்வாய்    மூன்று முகம்

சுவாதி          ராகு        எட்டு முகம்

விசாகம்       ப்ருஹஸ்பதி    ஐந்து முகம்

அனுஷம்       சனி           சப்த முகம்

கேட்டை       புதன்           நான்கு முகம்

மூலம்         கேது            நவ முகம்

பூராடம்        சுக்ரன்          ஷண்முகம்

உத்தராடம்      சூரியன்       ஏக முகம், த்வாதச முகம்

திருவோணம்    சந்திரன்        இரண்டு முகம்

அவிட்டம்        செவ்வாய்     மூன்று முகம்

சதயம்           ராகு          எட்டு முகம்

பூரட்டாதி       ப்ருஹஸ்பதி      ஐந்து முகம்

உத்தரட்டாதி     சனி            சப்த முகம்

ரேவதி           புதன்           சதுர் முகம்

ஜன்மராசிக்கு உரிய ருத்ராட்சங்கள்

ஜன்ம ராசியை வைத்தும் ருத்ராட்ச வகைகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். அந்தப் பட்டியல் வருமாறு :

ஜன்ம ராசி      ராசி அதிபதி      அணிய வேண்டிய ருத்ராட்சம்

மேஷம், விருச்சிகம்    செவ்வாய்      மூன்று முகம்

ரிஷபம், துலாம்        சுக்ரன்          ஷண்முகம்

மிதுனம், கன்னி         புதன்           நான்கு முகம்

கடகம்                  சந்திரன்        இரண்டு முகம்

சிம்மம்      சூரியன்          ஏகமுகம் அல்லது த்வாதச முகம்

தனுசு, மீனம்        ப்ருஹஸ்பதி         ஐந்து முகம்

மகரம், கும்பம்    சனி              சப்த முகம்

ருத்ராட்சங்களை எப்படி அணிவது

ருத்ராட்சங்களை அதற்குரிய பட்டு நூலில்  இணைத்து அணிவது மரபு. பித்தளையிலும், வெள்ளியிலும், தங்கத்திலும் இணைத்து அணிவது அவரவர் வசதியைப் பொறுத்தது.

முதலில் அணியும் போது ருத்ராட்சங்களை கங்கை ஜலம் அல்லது பசும்பாலில் அல்லது கோமூத்திரத்தில் நனைத்து அணிதல் வேண்டும்.

சுத்தமான நிலையில் அணிவது நல்ல பயனைத் தரும்.

புஷ்ய நட்சத்திரமும் வியாழக்கிழமையும் கூடிய நாளில் இதை அணிந்தால் அதிகப் பலனைப் பெறலாம் என அற நூல்கள் கூறுகின்றன. (வருடத்திற்கு இந்த அமைப்பு இரு தடவை வரலாம்)

பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம். சிவ புராணத்தில் சிவன் பார்வதியிடம் , “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும்,பெண்களும் இதை அணியலாம்” என்று கூறி அருள்கிறார் (சிவ புராணம் அத்தியாயம் 25, சுலோகம் 47)

எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது

நல்ல விஷயம் தெரிந்த, உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பர் அல்லது நிபுணர் மூலம் வாங்குவதே சிறந்தது.

ஏக முகம் கிடைப்பது அரிது. பஞ்ச முகம் சுலபமாகக் கிடைக்கும்.

அரிதாகக் கிடைக்கும் ஏக முகம் லட்ச ரூபாய் என்று சொல்லும் போது பஞ்ச முகம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்குக் கூடக் கிடைக்கும். சில ருத்ராட்சங்களின் விலை இருபது லட்சம் என்று சொல்லும் போது மலைக்க வேண்டி இருக்கும்.

108 மணிகள் அல்லது 54 மணிகளைச் சேர்த்து மாலையாக அணிவது பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்கும் மரபாகும்.

எப்படி சோதிப்பது?

ருத்ராட்சம் வாங்குவதில் சுலபமாக ஏமாற்றப்படலாம்.

ஆகவே நல்ல ருத்ராட்சமா எனச் சோதித்து உறுதியான பின்னரே வாங்கி அணிய வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.

ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை எப்படி அறிவது?

முதலில் பார்வையால் சோதனையிட வேண்டும். ருத்ராட்சம் அனைத்தும் ஒரே போல ஒரு வித வேறுபாடுமின்றி இருந்தால் அது மோல்டிங் எனப்படும் அச்சில் வார்க்கப்பட்ட செயற்கை மணிகள்- சிந்தடிக் – என்பதைச் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். இயற்கை ருத்ராட்சங்கள் நிச்சயம் சிறிது வேறுபாட்டுடன் துளைகளுடன் இருக்கும்.

அடுத்து அதன் ஸ்பெஸிபிக் கிராவிடி எனப்படும் அடர்த்தி எண் அல்லது ஒப்படர்த்தி 1.1 முதல் 1.6 வரை இருக்கலாம்.

தாமிரக் காசுகளின் இடையே மிகவும் தரமான ருத்ராட்ச மணியை வைத்தால் அது சுழலும்.

இன்னும் ஒரு எளிய வழி – ருத்ராட்சத்தை நீரில் போட்டால் நல்ல ருத்ராட்சம் மூழ்கும். போலிகள் மிதக்கும்.

அறிவியல் வியக்கும் ருத்ராட்சம்

ஆயுர்வேதத்தில் மூட்டுவலி உள்ளிட்ட பல வியாதிகளுக்கு ருத்ராட்சப் பயன்பாடு அறிவுறுத்தப்படுகிறது. வல்லார் ஒருவர் வழியே இதைக் கேட்டு அறியலாம்.

காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் ராய் என்பவர் ருத்ராட்சத்தை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தினார்.

 நவீன சாதனங்களை வைத்து ஆராய்ந்ததில் அவர் ருத்ராட்ச மணிகளின் பல அபூர்வ உண்மைகளைக் கண்டு பிரமித்தார். ருத்ராட்சம் உடலில் படும் போது டை எலக்ட்ரிக் பொருளாகப் பயன்பட்டு  வெவ்வேறு முகங்கள் உடைய ருத்ராட்ச மணிகள் வெவ்வேறு கபாசிடர்களாக இயங்கிப் பல்வேறு பயன்களைத் தருவதை அவர் கண்டார்; உலகிற்கு அறிவித்தார்.

ஆக அறிவியலும் வியக்கும் மணி ருத்ராட்ச மணி.

மணிகளிலேயே சிறந்த மணி ருத்ராட்ச மணி என நமது சாஸ்திரங்கள் உரத்த குரலில் அறிவிக்கின்றன.

பயன்படுத்துவோம்; பலன் பெறுவோம்!

***

கீதையின் ஐந்தாவது கட்டளை! (Post No.7123)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 22 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-33 am
Post No. 7123

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7115 வெளியான தேதி : 20-10-2019 – கீதையின் நான்காவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் ஐந்தாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் ஐந்தாவது கட்டளை இது தான் :

Whatever Thou Doest, Do It for the Love of God

நீ எதைச் செய்தாலும் கடவுளின் மீது அன்பு கொண்டு செய்

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

எந்தச் செயலைச் செய்தாலும் மனிதர்களை மகிழ்விக்கச் செய்யக் கூடாது. ஆனால் இறைவனின் அருளைப் பெறவே செய்ய வேண்டும்.

டெட்சு – ஜென் ஒரு புத்த துறவி. புத்த மத அறநூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பது அவரது பேரவா. இப்படிச் செய்தால் புத்தரின் உபதேசங்கள் ஜப்பானியரைச் சுலபமாக சென்றடையும் என்று அவர் எண்ணினார்.

ஆனால் இதற்காக பெரும் நிதி தேவை என்பதை உணர்ந்தார். ஆனால் மனம் தளராது ஒரு பொதுநல நிதி ஒன்றை அவர் ஏற்படுத்தி அனைவரிடமும் நிதி உதவி கேட்டு சேகரிக்க ஆரம்பித்தார்.

பத்து வருட காலம் கழிந்தது. தேவையான நிதி சேர்ந்தது. தனது பணியை ஆரம்பிக்க வேண்டியது தான் என்று அவர் எண்ணினார். அப்போது ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

உடனடியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய தான் சேகரித்த நிதி அனைத்தையும் கொடுத்தார்.

ஆனால் தான் ஆரம்பித்த பணியை அவர் அப்படியே விட்டு விடவில்லை.

மீண்டும் பணம் சேகரிக்க ஆரம்பித்தார்.

இன்னொரு பத்து வருட காலம் கழிந்தது. போதுமான நிதி சேர்ந்தது.

 இந்தச்  சமயம் இன்னொரு பேரிடர் வந்தது. அவர் தான் சேகரித்திருந்த நிதி அனைத்தையும் மக்களுக்கு உதவி செய்வதற்கென இந்த முறையும் கொடுத்தார்.

ஆனால் அவர் தான் எடுத்த பணியை விடுவதாயில்லை.

அடுத்து இந்த முறையும அவர் நிதியைச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்னொரு பத்து ஆண்டுகள் ஓடிய பின்னர் போதுமான பணம் சேர்ந்தது.

கடைசி கடைசியாக ஜப்பானிய மக்களுக்கு புத்தமத அறநூல்கள் சென்று சேர்ந்தன.

ஜப்பானிய மக்கள் மிக்க அன்புடன் அதை ‘தி தேர்ட் இம்ப்ரெஷன்’ – (The Third Impression)- மூன்றாவது பதிப்பு என்று கூறினர்.

முதல் இரண்டு பதிப்புகள் செயல் முறைப் பதிப்புகளாம். மூன்றாவது பதிப்பு தான் அச்சிடப்பட்ட பதிப்பாம்!

டெட்சு – ஜென் உண்மையான ஒரு கர்மயோகி. அவர் எதைச் செய்தாலும் இறையன்புடன் செய்தார்.

ரமண மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனதைப் பொறுக்கமாட்டாத சிலர் அவரிடம் வந்து, “நீங்கள் ஒரு பித்தலாட்டக்காரர். கடவுளிடம் பேசுவதாக நீர் பொய் சொல்கிறீர். எங்கே, அந்தக் கடவுளை எங்களிடம் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று கூவினர்.

“காட்டாவிட்டால், அவரிடமே உங்களை “அனுப்பி விடுவோம்” என்று அவர்களில் ஒருவர் எச்சரிக்கவும் செய்தார்.

ரமண மஹரிஷி சாந்தமாக இருந்தார்; அனைத்தையும் கேட்டார்.

பின்னர் அவர்களிடம், “நாளை காலை எல்லோரும் வந்து விடுங்கள் . கடவுளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.

அடுத்த நாள் அனைவரும் வந்து குழுமி விட்டனர்.

ரமணர் அவர்கள் அனைவரையும் இருள் அடர்ந்த காட்டினூடே அழைத்துச் சென்றார்.

அங்கு சிதிலமடைந்த குடிசை ஒன்று இருந்தது.

அதற்குள் இரண்டு ஆடிப்போன கட்டில்கள் இருந்தன.

குடிசைக்குள் சென்ற அனைவரும் அங்கு ஒரு வயதான தம்பதியினர் கட்டில்களில் படுத்திருப்பதைப் பார்த்தனர். இருவரும் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவுடனேயே கூட்டத்தினர் வெகு வேகமாக வெளியே சென்று தூரத்தில் நின்றனர்.

ரமணரோ அவர்கள் காயத்தைக் கழுவி கட்டுப் போட்டார். மெதுவாக நடந்த இந்தச் செயல் மூன்று மணி நேரம் நீடித்தது.

பின்னர் கூட்டத்தினரை நோக்கிய ரமணர்,”அதோ அவர்களிடம் நான் கடவுளைப் பார்க்கிறேன். அவர்களிடம் பேசுகிறேன். அவர்கள் மூலமாக இறைவனுக்கு நான் தொண்டு செய்கிறேன்” என்றார்.

அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர். அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரது அருளுக்காக வேண்டினர்.

மனிதன் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவன் இறைவனின் பக்கத்தில் இருக்கிறான்.

எந்தச் செயலைச் செய்தாலும் இறைவன் மீதான அன்புடன் செய்ய வேண்டும்!

இது தான் கீதை தரும் கட்டளை!

***

அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி-சுவையான சம்பவங்கள் (Post No.7121)

WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com

Date: 21 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-19
Post No. 7121

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதையின் நான்காவது கட்டளை! (Post No.7115)

WRITTEN BY S Nagaarajan
swami_48@yahoo.com

Date: 20 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-48 am
Post No. 7115

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7108 வெளியான தேதி : 18-10-2019 – கீதையின் மூன்றாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் நான்காவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் நான்காவது கட்டளை இது தான் :

 Thou Shalt Not Miss Thy Daily Appointment With God

 நீ கடவுளுடனான உனது தினசரி சந்திப்பை நழுவ விடாதே

இதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:

கடவுளைப் பார்க்கலாம், உணரலாம், தொடலாம், கேட்கலாம் – மௌனத்தின் ஆழத்தில்!

கிறிஸ்தவ ஞானியான தாமஸ் மெர்டன் (Thomas Merton) ‘தி வாட்டர்ஸ் ஆஃப் சைலன்ஸ்’  (‘The Waters of Silence) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மௌனம் என்பது அழகிய, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதி என்று வர்ணிக்கிறார். மௌனம் மனதைச் சுத்தமாக்கும். இதயத்தை உயர்த்தும். ஆழத்தில் இருக்கும் ஆன்மாவைக் காட்டும்!

இந்த வேக யுகத்தில் ஏராளமான யுவதிகளும் இளைஞர்களும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்கிறார்கள். தங்களது செல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் சார்ஜ் செய்வது அவசியம் என்கின்றனர் அவர்கள்.

இதை நான் அன்றாடம் பார்க்கலாம்.

ஏராளமான செயல்களில் மனத்தையும் இதயத்தையும் ஈடுபடுத்தும் மனிதனும் கூட தன்னை அடிக்கடி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் – அனைத்து ஆற்றல்களுடன் கூடிய கடவுளிடம்.

பெரியோர்களும் மஹரிஷிகளும் மூன்று விதமான ப்ராரப்தங்களைக் கூறுகின்றனர்.

முதலாவது அனிச்ச ப்ராரப்தம் :- இறைவனின் செயல்கள் அனிச்ச ப்ராரப்தம். சுனாமி, காத்ரீன் சூறாவளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இரண்டாவது பரேச்ச ப்ராரப்தம் :  இவை கட்டாயத்தினால் நீங்கள் செய்யும் சில செயல்கள். எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளும் சிலரை மனிதர்கள் சபிக்கின்றனர்; பொருமுகின்றனர். இறைவனின் சக்தியே எங்கும் வியாபித்து அனைவரையும் செயல்பட வைக்கிறது என்று உணரும் போது நாம் கிளர்ச்சியுறச் தேவையே இருக்காது.

மூன்றாவது ஸ்வேச்ச ப்ராரப்தம் : நமது சொந்த மதியினால் நாம் ஆற்றும் செயல்கள் ஸ்வேச்ச ப்ராரப்தம் எனப்படும்.

இதை இப்படிச் செய்திருக்கலாம்… இது மட்டும் அப்படி இருந்தால் என்று பல முறை நாம் வருந்திச் சொல்கிறோம்.

எல்லாமே இறைவனின் செயல்கள். அந்த தெய்வீக ஆற்றலுடன் நமது சொந்த மதியை இணைக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.

அந்த ஆற்றலிடம் உங்களை ஒப்படைத்து விட்டால் உங்கள் பயணம் பாதுகாப்புள்ள ஒரு பயணமாக ஆகி விடும்.

கபீர் தாஸர் ஒரு முறை கங்கை நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்வாகப் பறவை ஒன்றைப் பார்த்தார்.

அந்தப் பறவை எப்போதும் எவ்வளவு தாகமாக இருந்த போதிலும் சுத்தமான நீரை மட்டுமே பருகும். எவ்வளவு நீர் இருந்தாலும் அதை அது தொடாது. வானிலிருந்து விழும் சுத்தமான மழைத் திவலைகளை மட்டுமே அது அருந்தும்.

அவர் பாடினார்:

நீரின்றி எப்படி மீனால் உயிர் வாழ முடியாதோ

சக்ரவாகப் பறவையின் தாகம் எப்படி ஒரு மழைத்துளியினால் மட்டுமே தீர்க்கப்படுமோ

அதே தீவிரத் தன்மையுடன் மகான்கள் இறைவனுக்காக ஏங்குகிறார்கள்!

அவனது தரிசனம் ஒன்றே அவர்களின் தாகத்தைத் தணிக்கும்!

இங்கிலாந்தில் பழைய காலத்து வாத்தியம் ஒன்றைக் காண முடியும். அதன் பெயர் ஏலியன் ஹார்ப் (Aeolian harp). அதை  தோட்டத்திலோ அல்லது திறந்த ஜன்னல்களின் முன்போ வைத்து விடுவார்கள்.

தவழ்ந்து செல்லும் காற்று அதன் மீது பட்டு தெய்வீக இசை ஒன்றை எழுப்பும்.

நாமும் கூட இறைவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருந்தால் ஏலியன் ஹார்ப் போல அவரும் நம் மீது அழகிய இசையை எழுப்புவார். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்- அது ஆழ்ந்த அமைதியில் மௌனத்தில் மட்டுமே எழும்!

மொத்தத்தில் இறைவனுடன் நாம் ‘Tune up’ செய்து கொண்டால் போதும்.

அவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்!

***

SHOWER OF GEMS & GOLD ON LORD SHIVA (Post No.7113)

COMPILED BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-39
Post No. 7113

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

–subham–

சிங்கப்பூரில் சிவபெருமான்! வியட்நாமில் முருகன்!! (Post No.7112)

Shiva in Singapore Museum
Shiva in Berlin Museum

WRITTEN BY London Swminathan
swami_48@yahoo.com

Date: 19 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-50 am
Post No. 7112

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

broken Murug/ SKANDA
MURUGA/ SKANDA WITH HEAD IN 1903
DANANAG MUSEUM IN VIETNAM

கீதையின் மூன்றாவது கட்டளை! (Post No.7108)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 18 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 5-37 AM
Post No. 7108

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் : 7101 வெளியான தேதி : 16-10-2019 – கீதையின் இரண்டாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் மூன்றாவது கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.

ஏழு கட்டளைகளுள் மூன்றாவது கட்டளை இது தான் :

 Thou Shalt Do Thy Duty and a Little More

நீ உனது கடமையை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரும் பாடகியான மாப்ரிபான் (Mabribon) ஒரு நாள் மாலை தன்னைப் பார்க்க வருபவர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

பல பேரைச் சந்தித்த பிறகு, தனது வேலைக்காரியிடம், “மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம்” என்றார்.

தனது விசிறிகளிடம் பேசி அவர்களைத் திருப்திப்படுத்துவதை அவர் தனது கடமைகளுள் ஒன்றாகக் கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரே ஒருவர் தான் இருக்கிறார்,அம்மா” என்றாள் வேலைக்காரி. “அதுவும் அவன் ஒரு சிறு பையன்” என்றாள் அவள்.

“சரி, உள்ளே அனுப்பு” என்றார் மாப்ரிபான்.

தயங்கித் தயங்கி அறைவாசலில் நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்த மாப்ரிபான். “வா, உள்ளே வா, உன் பெயர் என்ன?” என்றா.

“பியரி” என்றான் பையன்.

“சொல், உனக்கு என்ன வேண்டும்?” மாப்ரிபான் கேட்க பையன் பதில் சொன்னான் :” எனது அம்மா… மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். நான் எழுதிய ஒரு கவிதையைக் கொண்டு வந்திருக்கிறேன். அதை நீங்கள் பாடினால் .. அதற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்தால்.. மிகவும் உதவியாக இருக்கும். இந்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன்”

“அட, உனது கவிதையைக் கொடு. அப்படியே உன் முகவரியையும் சேர்த்துக் கொடு.”

பையன் கவிதையுடன் முகவரியையும் சேர்த்துக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

மறுநாள் மாப்ரிமான் அந்தக் கவிதையை அரங்கத்தில் பாடினார்.

அனைவருக்கும் அந்தக் கவிதை பிடித்திருந்தது – அவருக்கும் தான்!

அனைவரும் ஆரவாரித்துக் கை தட்டினர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக அவர் பியரியின் வீட்டிற்குச் சென்றார்.

அவனையும் அவனது தாயாரையும் பார்த்தார்.

“பியரி, உனது கவிதை பிரமாதம். அனைவரும் அதைப் பாராட்டினர். இதோ இந்தா” என்று அன்று நிகழ்ச்சியில் கிடைத்த முழுப்பணத்தையும் மாப்ரிபான் அளித்தார்.

“உனது தாயாருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ அதை இப்போது செய்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

நன்கொடை, உதவி என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு கடமைக்கும் சற்று மேலாகச் செய்வது தான் சேவை.

அதை செய்யத் தவறக் கூடாது

*

பிரபல ஓவியரான மைக்கேலேஞ்சலோவிற்கு 20 வருட காலம் நம்பிக்கைக்குரியவராயும் பணி செய்பவராகவும் இருந்தவர் ஆர்பினோ (Arbino) என்பவர்.

ஆர்பினோவிற்கு வயது அதிகமாகவே தள்ளாமை வந்து விட்டது. நீண்டகாலம் தான் இருக்கப் போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

மைக்கேலேஞ்சலோ அவரை நன்கு ஓய்வு எடுத்து சக்தியை சேமிக்கும்படி கூறி அதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆர்பினோ அதற்கு இணங்கவில்லை.”உங்களுக்கு நான் ஒரு சுமையாக ஆகி விடுவேனே” என்றார்.

ஆனால் மைக்கேலேஞ்சலோ அவரை ஆசுவாசப்படுத்தினார்.

“ஒரு சுமையும் இல்லை நான் இரவும் பகலும் உங்களைப்பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

சொன்னபடியே தன் வார்த்தையை அவர் காப்பாற்றினார்.

ஆர்பினோ நோய்வாய்ப்பட்டார். அவரை நன்கு பார்த்துக் கொண்ட மைக்கேலேஞ்சலோ ஆர்பினோவின் இறுதி நாட்களில் அவர் படுக்கை அருகே அமர்ந்து ஒரு பெரிய அற்புதமான ஓவியத்தையும் வரைந்து முடித்தார்.

*

அமெரிக்க ஜனாதிபதி க்ளீவ்லேண்ட் (Cleaveland)  ஒரு பயணத்திற்காக ரயிலில் ஏறினார். அவருடன் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரிச்சர்ட் கில்டரும் (Richard Gilder) அதே ரயிலில் பயணம் செய்தார்.

ஜனாதிபதி அந்த ரயிலில் பயணம் செய்வதைக் கேட்ட ரிச்சர்ட் அவரைத் தேடி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாகப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஜனாதிபதியிடம் சொல்ல வேண்டிய  முக்கியமான விஷயம் ஒன்று இருந்தது.

 ஆனால் எவ்வளவு தேடியும் அவரால் ஜனாதிபதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழப்பமடைந்த ரிச்சர்ட் கடைசி கோச்சுக்குச் சென்று ரயில் கண்டக்டரிடம் ஜனாதிபதி எங்கே என்று கேட்டார்.

என்ன ஆச்சரியம். அங்கே ஒரு மர பெஞ்சில் ஜனாதிபதி அமர்ந்திருந்தார்.

ஒரு பெண்மணி தனது குழந்தையுடன் ரயிலில் ஏற தனது சீட்டை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து விட்டு மர பெஞ்சில் அமர்ந்து பயணிக்கலானார் க்ளீவ்லேண்ட்!

*

இது போன்ற இன்னும் ஏராளமான சம்பவங்களை அடுக்கடுக்காகச் சொல்லி சாது வாஸ்வானி கடமையைச் செய்யும் போது அதில் பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

****

ஏழு யக்ஞங்கள், 7 சந்தங்கள், 7 ஸ்வரங்கள் (Post No.7106)

WRITTEN BY london Swaminathan
swami_48@yahoo.com

Date: 17 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-54
Post No. 7106

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.