இசை தரும் நோயற்ற வாழ்வு! -2

tamil yal panan

By ச.நாகராஜன்

 

     ‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை எழுதிய ஜான் எம் ஆர்டிஸ் (தோற்றம் 31-1-1952 மறைவு 11-4-2012) இசையை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தி ஏராளமானோருக்கு உதவி புரிந்துள்ளார். மூட்டுவலியாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்த வயதான மூதாட்டியை பூரண குணமாக்கிய சம்பவத்திலிருந்து பல்வேறு வலியாலும் மன அழுத்தத்தினாலும் தூக்கமின்மையாலும் அவதிப்பட்ட ஏராளமான பேர்களை அவர் மீட்டிருக்கிறார்.

 

 

    முதுமையை அடைந்து விட்டதால் கவலைப்படுவோரும் ஈடு செய்ய முடியாத இரத்த பந்தம் அல்லது சொந்தத்தில் இழப்பை அடைந்தோரும் இசையின் மூலமாக அற்புதமான ஆறுதலைப் பெற்று வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை ‘ம்யூசிகல் மெனு’ என்ற உத்தியின் மூலமாகத் தங்களுக்குரிய குணப்படுத்தும் முறையைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும்படி தங்கள் சிகிச்சைக்கான மெனுவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் அளவு வழி காட்டியுள்ளார்.

 

 

     அவரது அரிய ஆராய்ச்சிகளின் முடிவாக அவர் கண்டுபிடித்துள்ளவை: இசையானது 1) மகிழ்ச்சியைத் தரும் 2)உறவுகளை மேம்படுத்தும் 3) நோய்களைக் குணப்படுத்தும் 4)படைப்பாற்றலை ஊக்குவிக்கும் 5) உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் 6) ஆத்ம திருப்தியை உண்டாக்கும்

   நாடித் துடிப்பை சீராக்கி சுவாசத்தை ஒழுங்குபடுத்தி இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் சீராக்கி மூளை மின்னலைகளை சாந்த நிலைக்குக் கொண்டு செல்ல இசை ஒரு அற்புத வழியாகும் என்கிறார் அவர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே வைப்ரேஷன் எனப்படும் துடிப்பு என்பதால் இயற்கையின் லயத்திற்கு இணங்க இருக்கும் இசையை நாம் கேட்பதால் அளப்பரிய நன்மைகளைப் பெறலாம் என்கிறார் ஆர்டிஸ்.

டான் காம்பெல் என்னும் பிரபல உளவியலாளர் ‘தி மொஜார்ட் எபக்ட்’ என்று இசையின் ஆற்றலை விளக்கும் உலக பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார்.

 

 

க்ரிகாரியன் சாண்ட் (Gregorian chant) : மன இறுக்கத்தை நீக்கி மனதை சாந்தப்படுத்தும்

பாரோக் இசை (Slower Baroque) வகைகளான பாச் ஹாண்டல் விவால்டி ஆகியவை படைப்பற்றலை ஊக்குவித்து புதியனவற்றைக் கண்டுபிடிக்க உதவும்

க்ளாஸிகல் இசை (மொஜார்ட் போன்றவை) ஒருமுனைப்படுத்தலை ஊக்குவித்து நினைவாற்றலை மேம்படுத்தும் (மாணவர்களுக்கு உகந்தது)

காதல் (ரொமாண்டிக்) இசை ( ஷூபெர்ட் ஷூமென், ட்சாய்கோவ்ஸ்கி போன்றவை) நம் புலன்களைக் கூர்மையாக்கி காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் அதிகரிக்கும்.

 

 

ஜாஸ் நம் உணர்வுகளை மேம்படுத்தி ஆனந்தத்தை உருவாக்கி சமுதாயத்துடன் இணையும் ஆவலை ஏற்படுத்தும்.

மத சம்பந்தமான இசையோ நம்மை உடல் மற்றும் உள்ள வலியிலிருந்து மீட்கும்.

இப்படி இசை நிபுணர்கள் கூறுவதை அறிவியல் ஆராய்ச்சிகள் உண்மையே என்று கூறி நிரூபிக்கின்றன.

 

The-String-Family-The-Bird-Feed

ட்ரினிடி காலேஜில் பேராசிரியராகப் பணியாற்றும் டான் லாய்ட் இசை பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் மூளைகளில் பல்வேறு விதமான மெல்லிய உணர்வுகளை எழுப்புவதாகக் கூறுகிறார்.இதற்கு மூளையை ஸ்கேன் செய்து மியூசிகல் இன்ஸ்ட்ருமெண்ட் டிஜிடல் இண்டர்பேஸ் ((MIDI)  மூலம் ஏராளமான  தரவுகளை (டேட்டா) சேகரித்தார். இதன் மூலம் ஒரு நோயாளியின் சீரற்ற செயல்பாடுள்ள மூளைக்கும் சாதாரண நிலையில் இருக்கும் மூளைக்கும் உள்ள வேறுபாடுகளை அவரால் சுலபமாக இனம் காண முடிந்தது.

நமது பாரம்பரிய இசையில் உள்ள பல்வேறு ராகங்கள் பல நோய்களைத் தீர்க்கும் அரிய விஷயத்தை அனைவரும் நன்கு அறிவர்.

 

 

பைரவி ராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக ஆராய்ச்சி மையம்’ மூலமாக பைரவியின் பெருமையைக் கண்டுணர்ந்த பிரபல இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன் இதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிஜமாக நடந்த  சம்பவங்கள் வாயிலாக விரிவாகக் கூறியுள்ளார்.

 

1933ஆம் ஆண்டு ப்ளோரென்ஸ் நகரில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரபல இசை விற்பன்னர் ஓம்கார்நாத் தாகூரை (1897-1967) இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி (1883-1945) சந்திக்க விருப்பம் தெரிவித்துத் தன் காரை பிரத்யேமாக அனுப்பி வைத்தார். ஓம்கார்நாத் தாகூர் ஹிந்தோள ராகத்தை அனுபவித்துப் பாடிக் காட்ட முஸோலினி அதில் உள்ள வீர ரஸத்தை அனுபவித்து உச்ச கட்டத்தில் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று கூவினார்.அவர் வியர்வையில் மூழ்கி கண்கள் சிவக்க வீரத்தைக் காண்பிக்கும் கம்பீரத்தின் உச்சத்தில் இருந்தார்.

 

 

இப்படியும் ஒரு இசை இருக்க  முடியுமா என்று வியந்த முஸோலினிக்கு அடுத்து ஓம்கார் நாத் தாகூர் சாயாநாட் என்னும் துன்ப நிலையைச் சுட்டிக் காட்டும் ராகத்தைப் பாடிக் காட்ட முஸோலினி கண்ணீர் அருவியாகப் பொழிய இசையின் வலிமையைக் கண்டு அசந்து போனார். தூக்கமில்லாமல் தான் தவிப்பதைக் கூறிய முஸோலினிக்கு பூரியா ராகத்தை தாகூர் இசைக்க அரை மணி நேரத்திலேயே வெகு நாட்களாகத் தூங்காத முஸோலினி அசந்து தூங்கினார். பாரத இசையின் வலிமையை தானே நேரில் அனுபவித்த முஸோலினிக்கு வியப்புத் தாளவில்லை.

 

 

சர்வாதிகாரி என்றாலும் கூட இசையில் அபார பிரியம் கொண்ட முஸோலினி சைவ உணவை சமைத்து ஓம்கார் நாத்தைத் தன்னுடன் உணவருந்தி விட்டே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.பின்னர் ஓம்கார்நாத் தாகூர் பிரியா விடை பெற்றார்!

இன்னும் இலக்கியம் மற்றும் சரித்திரம் கூறும் சில செய்திகளையும் சம்பவங்களையும் காண்போம்.

 

 

(அறிவியல் துளிகள் என்ற தொடர் பிரபல டைரக்டர் திரு.கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாக்யா வார இதழில் 4-3-2011 இதழில் துவங்கியது.19-7-2013இல் 125 அத்தியாயங்களைக் கொண்டு வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் தொடர்கிறது.      இதில் 21-9-2012 இதழில் 82ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இரண்டாம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்)

 

 

Please Read earlier posts on music written by London Swaminathan:

1.Rain Miracles: Rain and Fire by Music

2.மழை அற்புதங்கள்

3.இசைத் தமிழ் அதிசயங்கள்

4.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

5.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

6.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

Contact swami_48@yahoo.com

படங்கள் பல வெப்சைட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி.

இசை தரும் நோயற்ற வாழ்வு! – 1

musgrid1024

Part 1

ச.நாகராஜன்

ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் என்றார் மகாகவி பாரதியார்!முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும் அவர்களின் இசைக் கருவிகள் மூலமாக அருவியெனப் பொழியும் போதும் எண்ணிலா விந்தைகள் நடக்கின்றன. உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் நோயற்ற வாழ்வு வாழ இசை உதவுகிறது என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவு.

அறிவியல் ரீதியாக இதை அறிந்து கொள்ள மூளை மின்னலைகளைப் பற்றி முதலில் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் பகுதி மூளையின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்கு. (இதைத் தமிழில் மூளை மேலுறை என்று சொல்லலாம்.) இதில் கோடிக்கணக்கில் நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் (ஒரு கடுகின் அளவில்) சுமார் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானு கோடி நியூரான்கள் மூளை இணைப்பில் உள்ளன என்று ஊகித்துப் பிரமிக்கலாம். இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப் பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்புத் தூண்டுதலினால் மின் செயல் பாட்டை ஓயாமல்  இவை தூக்கத்தில் கூட அனுப்புகின்றன; பெறுகின்றன. இந்த மூளைச் செயல்பாடு நின்று விட்டால் அதையே உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மரணம் என்கிறோம்.

புலன்கள் அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை எலக்ட்ரோ என்செபலோகிராம் அல்லது ஈஈஜி என்கிறோம். ஒரு ஈஈஜி எலக்ட்ரோடை மண்டையில் இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும்.  ஈஈஜி, சீரான  இடைவெளியில் வருகின்ற ரிதம்களை ஆல்பா,  பீட்டா டெல்டா மற்றும் தீட்டா என நான்கு வகைகளாகப் பதிவு செய்கிறது.இவற்றை ப்ரீக்வென்ஸி (அலைவரிசை அல்லது அலைவெண்) என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.

மண்டையோட்டுடன் இணைக்கப்படும்  எலக்ட்ரோரோடுகள் ஆம்ப்ளிட்யூடை மைக்ரோவோல்ட் அளவால் தெரிவிக்கும். ஒரு மைக்ரோ வோல்ட் என்பது பத்து லட்சம் வோல்ட்டின் ஒரு பகுதி!

இதைக் கீழ்க்கண்ட விளக்க அட்டவணை மூலமாகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

ரிதம்         ப்ரீக்வென்ஸி     ஆம்ப்ளிட்யூட்

(ஹெர்ட்ஸில்)     மைக்ரோவோல்ட்டில்

ஆல்பா         8-13                  20-200

பீட்டா            13-30                                          5-10

டெல்டா        1-5                   20-200

தீட்டா          4-8                    10

நமது மூளை மேலே காணப்படும் நான்கில் ஏதேனும் ஒன்றில் உள்ள பிரக்ஞை நிலையையே எப்போதும் கொண்டுள்ளது.

Musical-Instruments-The-Bird-Feed-1024x790

பீட்டா நிலை: விழித்து இருக்கும் போது உள்ள நிலை இது. கண்கள் திறந்திருக்கும். முற்றிலுமான விழிப்புணர்ச்சி இருக்கும். இந்த நிலையில் மேல் அளவை ஒருவர் தொடும் போது அதிக சிந்தனை வயப்பட்டு கவலையுடன் இருக்கிறார் என்று சொல்லி விடலாம்!

ஆல்பா நிலை: இது மனம் ஓய்வாக அமைதியாக இருக்கும் நிலை. மனதில் இருக்கும் டென்ஷனை மட்டும் ஒருவர் அகற்ற முடியுமானால் ஒரே நிமிடத்தில் கண்களை மூடிய நிலையில் இந்த நிலையை எய்தி விடலாம்..ஆல்பா நிலையில் இருக்கும் போது படைப்பாற்றல் திறன் எனப்படும் கிரியேடிவிடி அதிகரிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.ஆகவே தான் பல விளம்பரங்கள் உங்களை “ஆல்பா” நிலைக்கு அழைத்துச் செல்வதாகத் தம்பட்டம் அடிக்கின்றன. பகல் கனவு காணுவோரும் இந்த நிலையில் தான் இருப்பர்.

தியானத்தின் பலனாக ஆல்பா நிலையை அடைய முடியும் என அறிவியல் பூர்வமாக அறியப்பட்டு விட்டதால் தான் மேலை நாடுகள் அனைத்தும் யோகாவையும் தியானத்தையும் தங்கள் அன்றாட வாழ்வில் இப்போது கொண்டு வந்து விட்டன.

தீட்டா நிலை: இது தூக்கத்தின் முதல் படி என்பதால் தூக்க உணர்வு இதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆகவே தூங்குவோரை தீட்டா நிலையில் உள்ளதாகச் சொல்லி விடலாம். குழந்தைகள் பகல் கனவு காண்பதும் தீட்டா நிலையில் தான்!

டெல்டா நிலை: ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஒருவரின் நிலை டெல்டா நிலை. யோகிகள் மட்டும் விழித்திருக்கும் போதே தங்கள் பழக்கத்தினால் இதே நிலையில் இருப்பதும் உண்டு!

இசை மனிதனுக்கு மனச் சாந்தியைத் தந்து அவனை அமைதிப்படுத்துகிறது என்பதை பல நூற்றாண்டுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் சில குறிப்பிட்ட இசைத் துணுக்குகள் மூலமாக ஆல்பா நிலையை ஒருவர் உடனடியாக அடைய முடியும் என்பதை நவீன அறிவியல் சோதனைகள் நிரூபித்து வருகின்றன. பிரக்ஞை நிலையில் ஆல்பா நிலையை அடைந்து ஒரு ஆழ்ந்த லயத்துடன் மன சாந்தியை சுகமாகப் பெற விரும்புவோர் தங்களுக்கு உரிய ஆல்பா இசையைக் கேட்டு மகிழ்ந்து பயன் பெறலாம்.

 

கர்நாடக சங்கீதம் போன்ற கிளாஸிகல் இசை, மெல்லிசைப் பாடல்கள் ஆன்ம நிலையை உயர்த்தும் மத சம்பந்தமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள் என எதை வேண்டுமானாலும் எது உங்களுக்கு மன அமைதியைத் தருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கேட்கலாம் என்கிறது அறிவியல்.

ஆனால் இசையின் இந்த வலிமையை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் இதற்கெனவே இசைப் பாடல்களையும் இசைக் கருவிகளின் விசேஷ ஒலியையும் கொண்ட ப்ரெய்ன் வேவ் என்டர்டெய்ன்மெண்ட் எனப்படும் மூளை மின்னலைப் பொழுது போக்கு இசையை உலகெங்கும் அறிமுகப்படுத்தி வருகின்றன.நூற்றுக்கணக்கில் இந்த இசைப் பாடல்கள் சந்தையில் வந்து குவிந்து விட்டன!

இதை டவுன் லோடிங் எனப்படும் தரவிறக்கம் மூலமாக உங்கள்  கணினியில் ஏற்றிக் கொள்ளலாம். சி டி எனப்படும் குறுந்தகடில் பதிவு செய்து கேட்கலாம்.

இசையின் வலிமையையும் பலன்களையும் அற்புதமாக விவரித்து ‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை ஜான் எம் ஆர்டிஸ் என்பவர் எழுதியுள்ளார்.

This article was written by my brother Santanam Nagarajan for Bakya Tamil Magazine.

************************

சிந்துசமவெளியில் ‘செக்ஸ்’ வழிபாடு

lingam yoni indus

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

சிந்து சமவெளி பற்றி தமிழர்களின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’’ என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ‘’பேனா எடுத்தவன் எல்லாம் ‘பிளாக்’காரன்’’ என்பது புதுமொழி. சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ‘பிளாக்’கில் எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் படித்துவிட்டு எழுதுகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுதுபவர்கள் முதலில் அங்கே பின்பற்றப்பட்ட மதத்தையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அறியவேண்டும். அதுவும் ஊகம்தான். ஏனெனில் படத்தில் உள்ள எழுத்துக்களை இதுவரையும் யாராலும் படிக்க முடியவில்லை. அவரவர்கள் தங்கள் கருத்துக்களை மனம்போல போக்கில் எழுதிவருகிறார்கள்.

 

மனம்போன போக்கில் எழுதுபவர்களில் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியவர் மார்ஷல் என்னும் தொல்பொருட் துறை இயக்குநர் ஆவார். இவர் அங்கே கிடைத்த சில பொருட்கள் ஆண்குறி வடிவில் இருக்கவே அதை லிங்க வழிபாடு என்று சொல்லிவிட்டார். நடுவில் துளைகளுடன் வட்டவடிவில் கிடைத்த கற்களை பெண்குறி (யோனி) என்று சொல்லிவிட்டார். அவை மொஹஞ்சதாரோவில் எங்கே கிடைத்தன என்பதைச் சொல்லவில்லை. அது போன்ற கற்கள் வேறு எங்கேயும் கிடைக்கவும் இல்லை. இவர் செய்த தவறுகள் மகத்தான தவறுகள். தொல்பொருட் துறையினரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றத் தவறிவிட்டார். பெரிய வெள்ளைக்கார அதிகாரி சொல்கிறார் என்பதால் அப்போது கேள்வி கேட்க நாதி இல்லை.

 

தற்கால வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த லிங்கம்-யோனி கற்கள் பற்றிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய சிந்துவெளி நாகரீகத்தில் மற்ற இடங்களில் இது ஏன் கிடைக்கவில்லை? 4000 முத்திரைகளில் இப்படி ஒரு வழிபாடு பற்றி ஏன் படமே இல்லை? புலி தேவதை, பேய் முத்திரை, ஆடு நரபலி முத்திரை, பசுபதி முத்திரை, பெண்குறியிலிருந்து மரம் வெளிவரும் முத்திரை, கொம்பன் முத்திரைகள், ஆட்டுக் கொம்பு தெய்வ முத்திரை, பல மிருகங்கள் ஒட்டிக் கிடக்கும் பலமிருக முத்திரை இப்படி எவ்வளவோ கிடைத்த இடத்தில் லிங்க வழிபாடு பற்றி ஏன் ஒன்றுமே இல்லை?

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டுகிறேன்)

மார்ஷலை மாஹா ‘பிராட்’ (மோசடிக்காரன்) என்று இதுவரை யாரும் சந்தேகிக்கவில்லை. ஆனால் தொல்பொருட் துறை ஊழியர்கள் பின்பற்றும் அடிப்படைக் கொள்கைகளைக் கூடப் பின்பற்றவில்லை என்று மட்டும் குற்றம் சாட்டுகின்றனர்.

pasupati

ஒரு யோகி போல அமர்ந்திருக்கும் ஒரு கடவுளைச் சுற்றி பல மிருகங்கள் இருப்பதைப் பார்த்தார். இது பசுபதி என்றும் சிவனுக்கு முந்திய ஒரிஜினல் சிவன் என்றும் சொல்லிவைத்தார். இந்த உருவத்தின் ஆண்குறி எடுப்பாக வெளியே நீண்டிருக்கும் (ithyphallic). அவருக்குத் தமிழ் தெரியாது. அப்போது தமிழ் தெரிந்த ஆட்களுக்கு சிந்து சமவெளி தெரியாது. ஆரிய திராவிட வாதம் என்னும் விஷச் செடி மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்ததால் அதைப் பற்றித் தமிழர்களுக்கு தெரியும். இந்த விஷ வித்தை ‘’ஈஸ்ட் இந்தியா கம்பெனி’’யிடம் (East India Company) மானிய உதவி பெற்று வேதங்களை மொழிபெயர்த்த மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர் விதைத்திருந்தார். பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்தைத் தோண்டி எடுத்தவர்கள் அந்த விஷச் செடிக்கு நீர் பாய்ச்சி  மரமாக வளர்த்தனர்.

 

சிவன் என்ற தெய்வம் தொல்காப்பியத்தில் இல்லையே? சிவன் என்ற சொல்லே தேவார காலம் வரை தமிழில் இல்லையே? சங்க இலக்கியத்தில் வரும் சிவனை முக்கண்ணன், நீலமணிமிடற்றோன் என்று வேதகால தெய்வமாக மட்டுமே புறநானூறு வருணிக்கிறதே? தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் சிவனை திராவிடனே என்று சொல்லாமல் ஆரியனே என்று மட்டும் சொல்கிறார்களே? சிவனை கருப்பன் என்று சொல்லாமல் செம்மேனி அம்மான் என்று மட்டும் சொல்கிறார்களே? என்றெல்லாம் கேள்வி எழுப்பி மார்ஷலை மடக்க ஆட்கள் இல்லை. நான் இப்போது டென்மார்க்கிலும் (Gundestrup Cauldron) பஹ்ரைனிலும் பசுபதி முத்திரை இருப்பதை படத்துடன் வெளியிட் டிருக்கிறேன். சிந்து சமவெளி பற்றி எழுதும் எவருக்கும் நான் பஹ்ரைனில் இருந்து வெளியிட்ட முத்திரை இருப்பது கூடத்தெரியாது. பசுபதி, சிவன், லிங்கம், யோனி இவை எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் ஆயிற்றே? இவைகளை திராவிட என்று எப்படி சொல்லலாம்? திராவிடர்களை ஆரியர்கள் ஓடஓட விரட்டியதாக எழுதி திராவிடர்களைக் கோழைகளாக, பயங்கொள்ளிகளாகச் சித்தரிக்கிறீர்களே என்று கேட்கவும் அப்பொழுது நாதி இல்லை.

 

பசுபதி உருவத்தில் ஆண்குறி (ithyphallic) நீட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னதோடு, அவர் எங்கோ கண்டு எடுத்த கற்களை லிங்கம்—யோனி என்று வருணித்ததோடு, ஆரிய திராவிட வாதத்தையும் புகுத்தி சிந்து சமவெளி நாகரீகத்தையே திசை திருப்பிவிட்டார்.

 

இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் அவை லிங்கமும் இல்லை, யோனியும் இல்லை, அவை விளையாட்டுப் பொருட்கள் (செஸ் விளையாட்டு சிப்பாய், யானை, குதிரை Gamesmen) போன்றவை என்றும் அவை எடைக் கற்கள் என்றும் யோனி போன்ற வட்டக் கற்கள் தூண்களை எழுப்பப பயன்பட்டக் கற்கள் என்றும், அவை காலம் அறியப் பயன்படுத்தப்பட்ட கற்கள் (astronomical)  என்றும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.

indus lajjagauri

மேலும் பல ‘செக்ஸ்’ முத்திரைகள்

ஒரு முத்திரையில் இரண்டு பக்கம் பாயும் புலிகளும் நடுவில் சித்திர எழுத்துக்களும் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து ஒரு மரம் வெளிவரும் படமும் உள்ளது. இதை பூமாதேவி என்றும் தாவரங்கள்  வளருவதை இது குறிப்பதாகவும் ‘அறிஞர்கள்’ விளக்குவர்.

 

வட இந்தியாவில் பல இடங்களிலும் ‘’லஜ்ஜ கௌரி’’ (Lajja Gauri) என்ற சிலைகள் உண்டு. இவையும் இதே போல காலை அகட்டி பெண் உறுப்பு தெரியும் வகையில் இருக்கும். இவை எல்லாம் ‘’பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ வேண்டும்’’ என்ற வளப்பத்தைக் (Fertility)  குறிக்கும் என்று அறிஞர் பெருமக்கள் பகர்வர்.

பலி ஆட்டுடன் தோன்றும் ஒருவன் ஒரு தலையை (நரபலி) தெய்வத்தின் முன்பு வைத்திருக்கும் முத்திரையில் ஒரு மீன் வடிவ எழுத்தில் ஒரு பொட்டு வைத்திருக்கும். இதைக் கூட பெண்குறி என்று ஆய்வாளர்கள் எழுதுவர். சுருங்கச் சொல்லின் சிந்து சமவெளியில் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது!!!

 

‘தில்முன்’ எனப்படும் பஹ்ரைனில் பல செக்ஸ் காட்சி முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவை வேறு வகையானவை.

சிந்து சமவெளி பற்றிப் பேசும், எழுதும் தமிழர்கள் முதலில் அந்தக் கால மத நம்பிக்கைகளை அறியவேண்டும். சிந்து நதி, பஞ்சாப் சமவெளி பற்றித் தமிழர்கள் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? சங்க இலக்கியத்தில் கங்கையையும் இமயத்தையும் புனிதமானவை என்று போற்றிப் புகழ்ந்தவர்கள் ஏன் சிந்து பற்றி மவுனம் சாதித்தனர்? என்றெல்லாம் சிந்திக்கவேண்டும்.

 

lajja gauri,bhaktapur,nepal

Lajja Gauri from Nepal

சிந்து சமவெளி பற்றிப் புத்தகம் எழுதிய எல்லோரும் ஏன் சம்ஸ்கிருத நூல்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டுகின்றனர்? மீன் உருவத்தைத் தவிர வேறு எதற்கும் தமிழில் ஏன் உதாரணம் காட்டமுடியவில்லை என்றும் மதத் தொடர்பான முத்திரைகளுக்கு ஏன் தமிழில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் சொல்ல முடியவில்லை என்றெல்லாம் சிந்திக்கவும் வேண்டும். 1960ஆம் ஆண்டுகளில் இந்த எழுத்துக்களை திராவிட அமைப்புடையவை என்று சொன்ன பின்லாந்துக்காரர்கள், இந்த ஆய்வில் ஏன் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்

gota bali seal

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:

Please read my earlier posts: 1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals 7. Bull Fighting: From Indus Valley to Spain via Tamil Nadu 8. The Great Scorpion Mystery in History 9.  (In Tamil) சிந்து சமவெளியில் புலிப்பெண் 10. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 11. Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana + 575 articles on Tamil Sanskrit Literature and Indian Culture.

To get the above articles, type any of the article titles and add ‘from tamilandvedas.wordpress.com or from swamiindology.blogspot.com

For further list contact swami_48@yahoo.com

ராஜாஜி ரமணரை தரிசித்ததுண்டா?

Image

வாசகரின் சந்தேகத்திற்கு விளக்கம்! 

ச.நாகராஜன்

நமது வாசகர்களில் ஒருவரான கார்த்திக் சீனிவாசன் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்:

 

 

நீங்கள் ரமணரைச் சந்தித்தவர்களின் பட்டியலில் ராஜாஜி அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்குத் தெரிந்த வரையில் ராஜாஜி ஒருபோதும் மஹரிஷியைச் சந்தித்ததில்லை. மஹாத்மா மஹரிஷியைச் சந்திக்கவிருந்த திட்டத்தையே கூட அவர் மாற்றியவர். அதற்காகக் கடுமையாக விமரிசனத்திற்குள்ளானார். இந்த மூவரையும் நான் கொண்டாடுபவன் என்றாலும் கூட இந்த வரலாறு தான் எனக்குத் தெரியும். ராஜாஜி எப்போதேனும் மஹரிஷியைச் சந்தித்திருந்தால் அது பற்றிய குறிப்பைத் தாருங்கள்.

 

 

ஸ்ரீ ரமணாஸ்ரமம் வெளியீடான ‘சத்குரு ஸ்ரீ ரமண மஹரிஷி சரிதமும் உபதேசமும்’ எட்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் பாகத்தில் ‘நான் எவ்வாறு பகவானிடம் வந்தேன்” என்ற பகுதியில் மூன்றாவது அத்தியாயமாக ராஜகோபாலாச்சாரி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை ராஜாஜி அவர்களின் வார்த்தைகளில் (பக்கம் 149-150) அப்படியே தருகிறேன்:

 

 

1936ஆம் வருடம் ஜனவரி மாதம் ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். அங்கு இருந்த பக்தர்களுடன் சில மேனாட்டவரும் ஹாலில் இருந்தனர். அங்கிருந்த தெய்வீக சூழ்நிலையும், ஹாலில் நிலவிய ஆழ்ந்த அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது.சோபாவில் உட்கார்ந்த பகவான் எங்கும் அன்பையும் எளிமையையும் பொழிந்தார். நான் விசிஷ்டாத்வைதத்தைச் சேர்ந்தவன்.எனவே அந்த தத்துவத்தில் பரிச்சயம் கொண்டவன்.பகவானுடைய உபதேசத்தினால் கவரப்பட்ட நான் எவ்வாறு விசிஷ்டாத்வைதத்தையும் அத்வைதத்தையும் ஒன்றுபடுத்துவது என்று கேட்டேன். சிறிது நேரங்கழித்து பகவான் “எப்படி இருந்தாலும் உன்னுடைய கர்மாவை அனுபவிக்க வேண்டும். அப்படியிருந்தால் நீ காப்பாற்றப்படுவாய்” என்றார். பகவானின் இந்த உபதேசத்தை மீண்டும் பலமுறை எண்ணிப் பார்த்து, அதனால் பலன் அடைந்திருக்கிறேன்.

 

 Image

     ராஜாஜி மஹரிஷியை தரிசித்ததும், அவருடைய அன்பையும் எளிமையையும் கண்டு மகிழ்ந்ததும் அவருடைய உபதேசத்தால் அவர் கவரப்பட்டார் என்பதும் மஹரிஷியின் அருளுரையை அவர் எண்ணி பலன் அடைந்ததும் அவர் வார்த்தைகளிலேயே மேலே படித்த பிறகு இனி சந்தேகம் யாருக்கும் எழாது.

 

 

.     திருவண்ணாமலைக்கு காந்திஜி வந்தபோது அவர் மஹரிஷியை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கவில்லை என்பது பற்றிப் பார்ப்போம். காந்திஜி தனது பயண நிகழ்ச்சிகளில் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை அவரது வாழ்வையும் வாக்கையும் விளக்கும் நூறு தொகுதிகளைப் படித்தோர் நன்கு உணர முடியும். ஜம்னாலால் பஜாஜுடன் வந்த ராஜேந்திரபிரசாத், மஹாதேவ தேசாய் ஆகியோரை ரமணாஸ்ரமத்திற்கு அனுப்பியவரே மஹாத்மா தான். அவர் நினைத்திருந்தால், அவரது பயண நேரம் அனுமதித்திருந்தால் நிச்சயம் அவர் ரமணாஸ்ரமம் சென்றிருக்கக் கூடும். ஆகவே முழு பொறுப்பாளராக ராஜாஜியை இதில் விமரிசிப்பது தவறோ?

 

 

      என்றாலும் கூட மஹரிஷியின் அணுக்க பக்தரான ஸ்ரீ ஏ.தேவராஜ முதலியார் தனது டே பை டே வித் பகவான் (Day by Day with Bhagavan) என்ற நூலில் அன்றாட நிகழ்வுகளை நடந்தது நடந்தபடி அப்படியே குறித்து வைத்துள்ளார். அதில் 27-1-1946 அன்று காலையில் நடந்தவற்றை அவர் எழுதியுள்ளார். அன்று காந்திஜியைச் சந்திக்க மதராஸ் சென்றிருந்த கிருஷ்ணஸ்வாமியிடம் பகவான் நடந்தவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இதில் முக்கிய பகுதி வருமாறு:

 

 

    கிருஷ்ணஸ்வாமி பகவானிடம் சொன்னார்:”நமது நண்பர்களில் சிலர் மஹாத்மாவுக்கு ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்யுமாறு யோசனை கூற வேண்டுமென்று விரும்பினர்.ஆனால் அவர்கள் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரைக் கலந்து பேசிய போது அவர் இங்கே எங்களில் யாரும் மஹாத்மாவை அணுக முடியாது. ராஜாஜி மட்டுமே செல்வாக்கு படைத்தவர்” என்று சொன்னார்.. இதைக் கேட்ட பகவான் “அவாயெல்லாம் இங்கேயெல்லாம் வரவிடமாட்டா” என்றார்.

(ஆங்கில டயரியில் இந்தச் சொற்கள் மட்டும் தமிழிலும் தரப்பட்டிருக்கிறது!)

 

 

ஒரு வாரத்திற்கு முன்னால் பகவான், “மஹாத்மா முன்னொரு முறை (ஆஸ்ரமத்திலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள) இங்குள்ள மாட்டு சந்தை நடக்கும் இடத்திற்கு வந்தார். அவரது பணியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே முடித்தார்.நிதியளிப்பைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

 

 

   கிருஷ்ணஸ்வாமி, மஹாத்மா அடிக்கடி பகவானைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேல் அபார மரியாதை வைத்திருப்பதாகவும் சொன்னார் என்ற இன்னொரு செய்தியையும் சொன்னார். அதற்கு பகவான்,”ஆமாம், ஆமாம். அது அப்படித்தான்! எப்போதெல்லாம் யாராவது மன அமைதி இல்லை என்று அவரிடம் சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் அவர் பாக் செய்து, ”ரமணாஸ்ரமத்திற்குப் போ, அங்கு சிறிது காலம் இருந்து விட்டு வா” என்று சொல்லி இங்கே அனுப்பி விடுவார்” என்றார்.

ஆகவே தேவராஜ முதலியாரின் நாட்குறிப்பு நடந்ததைத் தெளிவாக விளக்குகிறது. மஹாத்மா காந்திஜியும் மஹரிஷியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் அதற்கு ராஜாஜி முனைப்பாக ஏதேனும் செய்திருக்கலாம் என்ற ஆதங்கப் பட்டிருப்பது நிஜமே.

 

 

இனி மஹாத்மா மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் மஹரிஷி  கண்களில் நீர் கசிந்ததையும் அன்று ஆஸ்ரமத்தில் பக்தர்கள் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை தொடர்ந்து இசைத்ததையும்  ஆஸ்ரம ஏடுகள் மூலமாக அறிகிறோம்.

 

மஹாத்மாவைப் பற்றியும் மஹரிஷியைப் பற்றியும் ஏராளமான சுவாரசியமான செய்திகள் இருந்தாலும் முத்தாய்ப்பாக ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன்.

 

மஹாத்மா மறைவுக்குப்பின்னர் நடந்தது இது:-

நேற்று ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா மஹாத்மாவின் போட்டோவைக் காண்பித்து, “காந்திஜியும் மஹாத்மாவும் சந்திக்காமல் போனது பரிதாபமே” என்றார்.

 

 

பகவான் ரமணர் : சில காலத்திற்கு முன்னர் அவர் திருவண்ணாமலை வந்திருந்தார்.மலையைச் சுற்றி உள்ள சாலையில் ஆசிரமத்திற்கு அப்பால் அவரது கூட்டம் ஏற்பாடாகி இருந்தது.இங்கிருந்தோர் அவர் திரும்பும் போது ஆஸ்ரமத்திற்கு வருவார் என்று நினைத்தனர்.ஆனால் கூட்டத்தின் நெருக்கடியினால் அவரால் அது முடியாமல் போனது. அவர் ஸ்டேஷனுக்கு நேராகச் சென்று விட்டார்.பின்னால் இதற்காக அவர் மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. சங்கர்லால் பேங்கரும் ஜம்னாலால் பஜாஜும் இங்கு வந்து ஸ்கந்தாஸ்ரமத்தைப் பார்த்தனர். அவர்கள் மஹாத்மாவை இங்கு வந்து சில நாட்கள் தங்குமாறு தூண்ட விரும்பினர்.ஆனால் அது நடக்கவில்லை. சபர்மதியிலோ அல்லது வார்தாவிலோ யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டால் மஹாத்மா அவர்களை நோக்கி,”ரமணாஸ்ரமத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு  மாதம் தங்கி இருந்துவிட்டுப் பின் வாருங்கள்” என்பார். ராமசாமி ரெட்டியார் முதல் மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு மஹாத்மாவை பார்க்கச் சென்ற போது மஹாத்மா அவரை எவ்வளவு காலமாக ரமணாஸ்ரமத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதாகத் தெரிகிறது. அவர் முப்பது வருட காலமாகப் போய்க் கொண்டிருப்பதாக பதில் சொன்ன போது மஹாத்மா, “அப்படியா! நான் மூன்று முறை முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை அங்கே போக முடியவில்லை” என்றார். அவரால் என்ன செய்ய முடியும்? ஒரு கணம் கூட அவரைத் தனியே இருக்கவிடாத போது அவரால் எப்படி வர முடியும்?

 

பகவான் இன்றைய பேப்பரில் வெளியாகி இருந்த, ”மஹாத்மா அந்த துயர சம்பவத்திற்கு முதல் நாள் தனது மரணத்தைப் பற்றி ஒரு கனவை முன்கூட்டியே கண்டார்.ஆகவே வெகு சீக்கிரமாக அவரது பேப்பர்களைப் பார்த்து முடித்தார். அதுவே அவர் பிரார்த்தனைக்கு தாமதமாக வரக் காரணம் ஆனது” என்ற செய்தியைப் படித்தார். 

பிறகு கூறினார்:” ஆம்! ஞானோதயம் பெற்றோருக்கு அந்த அளவு கூட என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா என்ன? அவர்கள் அறிவார்கள். ஆனால் மற்றவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள்” என்றார்.

 

 

ஆதாரம் : ரமணாஸ்ரம வெளியீடுகள்

 

ஆனால் இதற்கெல்லாம் தெளிவாக பதிலை ரமணரே கூறியிருக்கிறார்.

“எந்த ஒரு மஹாசக்தி இங்கே இருக்கிறதோ, அதுவே அவரையும் வழி நடத்துகிறது” என்று மஹாத்மாவைப் பற்றி அவர் கூறியுள்ளார். அந்த மஹாசக்தி திருவுள்ளப்படியே எல்லாம் நடக்கிறது. அவரவர் பணியை அவரவர்க்கு ஒதுக்கிட்டுத் தந்த அந்த மஹாசக்தி இவர்களின் சந்திப்பு தேவை என்றால் அதை நடத்தி முடித்திருக்காதா, என்ன?அல்லது அந்த மஹாசக்தியே இந்த இருவருக்குள்ளும் இருந்து அவர்கள் ஒரே சக்தியாக  இயங்கிய போது, அதை அவர்களும் நன்கு உணர்ந்திருந்த போது அவர்கள் சந்திக்க வேண்டும் என்ற தேவை தான் ஏது?!

********************    

திராவிடர்கள் யார்?

brahmins 2

எழுதியவர்: சந்தானம் (லண்டன்) சுவாமிநாதன்

(இதுவரை எனது பிளாக்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டிவிட்டது. நாள் தோறும் 1200 ‘’ஹிட்ஸ்’’ வருகின்றன. உங்கள் ஆதரவுக்கு நன்றி).

‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு

யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)

‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!

திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

Rahul_Dravid

கிரிக்கெட் ஆடும் திராவிடன்

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்!  அது சரியல்ல. உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

veda[atasala

திராவிடாசாரியா

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.

3_veddahs

Picture of Veddahs (classified as Dravidas)

தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்.

irula_snake_catching_thehindu_6-9-2009

Picture of Irulas (classified as Dravidas)

வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லிக் குழப்புகின்றனர். தமிழர்களோ,  ”நாங்கள் குமரிக்கண்டவாசிகள்” — என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:

விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.

சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு

11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature

21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.

Pictures are taken from various websites;thanks.

swami_48@yahoo.com

பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!

220px-Ramana_3_sw

மே 2013 ஞான ஆலயம் இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை

பகவான் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள்!

ச.நாகராஜன்

 

அபூர்வமான ஏதோ ஒரு சக்தி 

“ஏதோ ஒரு சக்தி ஞானியின் தேகத்தின் மூலமாக வேலை செய்கிறது. அவனது சரீரத்தை உபயோகித்து வேலையை முடிக்கிறது” என்று அணுக்க பக்தர் தேவராஜ  முதலியாரிடம் (5-5-1946 அருளுரை) கூறிய பகவான் ரமண மஹரிஷி ஒரு போதும் ‘தான் தான் அந்த மஹாசக்தி’ என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டதில்லை.

ஏதோ ஒரு சக்தி அனைவரையும் இங்கு இழுக்கிறது என்று அவர் குறிப்பிட்ட போது அந்த சக்தியால் இழுக்கப்பட்ட பாக்கியவான்களில் மஹாராஜாக்கள், மஹாராணிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், யோகிகள், சாமான்யர்கள் ஆண்டிகள் உள்ளிட்டோர் இருப்பதைப் பார்த்து பிரமிக்க முடிகிறது. ஒவ்வொரு வருக்கும் ஒரு அனுபவம்;ஒரு செய்தி!

 

மைசூர் மஹாராஜா,பரோடா மஹாராணி, மகாகவி பாரதியார், ராஜேந்திர பிரசாத், மஹாதேவ தேசாய், ராஜாஜி, சாமர்செட் மாம்,பரமஹம்ஸ யோகானந்தா, காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள், பால் பிரண்டன், சாட்விக் என்று ஆரம்பித்தால் இந்தப் பட்டியல் ஆயிரத்தையும் தாண்டுகிறது. “அந்த சக்தியிடம்” அவர்கள் அனுபவித்தது என்ன? ஒரே வாக்கியத்தில் அதிசயமான, இறைவனின் சந்நிதி பாக்கியம் தான் என்று சொல்லி விடலாம்.

 

 

சிவநகர் மஹாராஜாவின் கேள்வி

உத்தரப்பிரதேசத்திலுள்ள சிவநகர் மஹாராஜா பகவானிடம் புகலிடம் அடைந்து தனக்கு ஞானம் அளிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

பகவான் நாம மகிமையையும் பிரம்ம ஞானம் பற்றி அஷ்டாவக்ர கீதை உரைப்பதையும் எடுத்துரைத்தார். பிரம்மஞானம் அடைய எவ்வளவு நேரமாகும் என்ற கேள்விக்கு பிரம்மஞானம் உடைய குருவிடம் முழு சரணாகதி அடைந்து ‘நான் –எனது’ என்ற எண்ணங்களை விட்டு விட்டால் குதிரையின் அங்கவடியில் ஒரு காலை வைத்து மறு காலைத் தூக்கி வைப்பதற்கு ஆகும் நேரம் தான் தேவை என்ற அஷ்டாவக்ர கீதைப் பகுதியை விவரித்த பகவான், “ அவ்வளவு நேரம் கூட ஆகாது. அகம்-பாவம் மறைந்த உடனேயே ஆன்ம பாவம் ஒளிரும் என்று தன் அனுபவத்தில் கண்டதை உரைத்தார். அனைவரும் பிரமித்தனர்.

 

 

கவிஞரின் கண்ணீரும் மூச்சுத்திணறலும்

 

ஹரீந்த்ர நாத் சட்டோபாத்யாயா என்ற வங்கக் கவிஞர் அரவிந்தாஸ்ரமத்தில் இரு வருடம் இருந்தவர். அவர் பகவானை தரிசித்துப் பேசுகையில் தான் 4000 பதினான்கு வரிப்பாடல்களையும் 50000 வரிகள் கொண்ட கவிதையையும் மேலும் பல கவிதைகளையும் நாடகங்களையும் இயற்றியதைக் கூறினார். அவரது நாடகம் ஒன்றின் பகுதியை உணர்ச்சியுடன் அவர் நடித்துக் காட்டினார். பின்னர் அவர் கேட்டார்:”அதெப்படி, பகவானே!உங்கள் சந்நிதியில் நாங்கள் கண்ணீரால் மூச்சடைத்துத் திணறுகிறோம்?”  .பகவான் மௌனமாகப் புன்னகை புரிந்தார். பின்னர், “மனதைத் தொடும் விஷயங்களைப் படித்தாலோ கேட்டாலோ கண்ணீர் பொங்கி வழிகிறது” என்றார்.

 

பிறிதொரு சமயம் இதே பொருள் பற்றிப் பேச்சு வருகையில் ”கதாகாலக்ஷேபம் செய்பவர்கள் கல்நெஞ்சக்காரர்கள் போலும். எப்படி அவர்களால் உணர்ச்சி பொங்க கண்ணீர் வடிக்காமல் தொண்டை கட்டாமல் கதையை சொல்லி கொண்டே போக முடிகிறது” என்று வியந்தார். பகவானுக்கு பக்தர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போதெல்லாம் உணர்ச்சி கட்டுமீறும்; கண்ணீர் பொங்கும்; படிப்பதை நிறுத்தி விடுவார். பரம ஞானி ஒரு சிறந்த பக்தனாக இருக்க முடியும், ஞான மார்க்கமும், பக்தி மார்க்கமும் இறைவனை அடைய இரு வழிகளே என்பதைத் தன் வாழ்க்கையிலேயே வாழ்ந்து காண்பித்து அந்த உண்மையை நமக்கு உணர்த்தியவர் அவர்.

 

ramana stamp

பாரதியார் பெற்ற உத்வேகம்

திருவண்ணாமலையில் பிரசங்கம் செய்ய வந்த மஹாகவி பாரதியார் ரமண சந்ந்நிதியில் வந்து அமர்ந்து உத்வேகம் பெற்றார். பின்னால் பகவானிடம் இது பற்றிக் கேட்ட போது, பாரதியார் படத்தைப் பின்னால் பார்த்த போது தான் அவர் தான் வந்திருந்தார் என்று ஊகிக்க முடிகிறது என்று அருளினார். இப்படி தன்னை யாரென்று சொல்லிக் கொள்ளாமல் பகவான் எதிரே அமர்ந்ததனாலேயே உத்வேகம் பெற்ற பெரியோர்கள் ஏராளம்!

 

பரமஹம்ஸ யோகானந்தரின் கேள்வி

‘ஆடோபயாகிராபி ஆஃப் தி யோகி’– என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதியவரும் கிரியா யோகத்தை அமெரிக்காவிலிருந்து உலகெங்கும் பரப்பியவருமான பரமஹம்ஸ யோகானந்தர் ரமண மஹரிஷியை (29-11-1935 அன்று) சந்தித்தார்.மக்களிடம் ஆன்மீக முன்னேற்றத்தை எப்படி எழுப்புவது என்ற அவர் சந்தேகத்திற்கு ஒவ்வொருவருடைய ஆன்மீக முனேற்றத்திற்கு தக்கபடி  அவரவருக்கேற்றபடி குறிப்புகளை வழங்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார் ரமணர். துன்பத்தைப் போக்க யோகம் மதம் ஆகியவை உதவுமா என்ற அவர் கேள்விக்கும் அவை துன்பத்தைப் போக்க உதவும் என்று தெளிவு படுத்தினார்.

 

 

சிவனே திருவண்ணாமலை

திருவண்ணாமலை ரகசியத்தைப் பற்றி பால்பிரண்டன்(23-1-1936 அன்று) பல்வேறு கேள்விகளைக் கேட்டு பகவானைக் குடைந்தார்.

மலையில் குகைகள் உள்ளனவா என்ற பிரண்டனின் கேள்விக்கு எனது அகக் காட்சிகளில் குகைகள், நகரங்கள், தெருக்களைக் கண்டுள்ளேன் என்றார் ரமணர். சித்தர்கள் அதனுள் இருக்கிறார்களா என்றார் பிரண்டன். பெரிய சித்தர்கள் உள்ளனர் என்று பதிலளித்தார் பகவான். சித்தர்கள் இமயமலையில் இருப்பதாக அல்லவா சொல்லப்படுகிறது என்று பிரண்டன் விடாமல் கேட்ட போது கைலாஸம் சிவனின் இருப்பிடம் தான்; ஆனால் சிவனே தான் இந்த மலை“ என்று தீர்க்கமாக பதில் அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார் மஹரிஷி.

 

ramana with fan

காலம் வெளி கடந்த மஹரிஷி

 

போலந்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் பெயரை உமாதேவி என்று மாற்றி வைத்துக் கொண்டார்.அவர் காஷ்மீரிலிருந்து வந்து  (10-11-1936 அன்று) பகவானை தரிசனம் செய்தார். காஷ்மீரில் எடுத்த காட்சிகளை அவர் அனைவருக்கும் ஆசிரமத்தில் காண்பித்த போது “பயணம் செய்யும் சிரமம் செய்யாமலேயே நாம் அந்த இடங்களைப் பார்த்து விட்டோம்” என்று நகைச்சுவையுடன் கூறினார் பகவான். ஆனால் இதன் ஆழ்ந்த பொருள் உண்மையில் வேறு. காலம், வெளி கடந்த தன்மையில் மஹரிஷி ஏராளமானோருக்குத் தன் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் காட்டியுள்ளார்.

 

 

ஒரே சக்தியே அனைவரையும் இயக்குகிறது

பின்னால் ஜனாதிபதியாக இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் ரமணாசிரமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி இருந்தார். விடைபெறும் நாளில் (18-8-1938 அன்று) பகவானிடம் சென்று,” நான் மஹாத்மா காந்திஜியின் அனுமதியின் பேரில் தான் இங்கு வந்துள்ளேன். அவரிடமே சீக்கிரம் திரும்பிப் போக வேண்டும். அவருக்கு ஏதேனும் செய்தி தருகிறீர்களா” என்று கேட்டார். “அவரிடம் அத்யாத்மீக  சக்தி வேலை செய்கிறது; அதுவே அவரை வழி நடத்துகிறது. அது போதும். வேறென்ன வேண்டும்!” என்று பதிலிறுத்தார் ரமணர்.

எந்த சக்தி இங்கிருந்து வழி நடத்துகிறதோ அதே சக்தி அவரையும் வழி நடத்துகிறது என்று ஒரு முறை மஹாத்மாவைப் பற்றி ரமணர் குறிப்பிட்டு ‘அந்த ஏதோ ஒரு சக்தியைப் பற்றிக்” குறிப்பிட்டுள்ளார்.

 

ரமண மஹரிஷி ஒரு திறந்த புத்தகம்

சிவனே திருவண்ணாமலை என்ற ரகசியத்தையும், அங்கிருந்து இயக்கும் அபூர்வ சக்தி ரமணரை ஆட்கொண்டதையும் அந்த சக்தி உலகத்தில் உள்ள பாக்கியம் பெற்றோரை அவர் வசம் இழுத்ததையும், உயரிய ஞானியாக இருந்தாலும் காட்சிக்கு எளியராய், பரம பாகவதனாக பக்தி செலுத்தி கண்ணீர் பொங்க இறைவனை அவர் வழி பட்டதையும், பெரும் யோகிகளுக்குக் கூட உத்வேகம் ஊட்டியதையும் கவிஞர் போன்ற யுக புருஷர்களுக்கு ஆன்ம சக்தி அளித்ததையுமே ரமணரைச் சந்தித்த விதவிதமான இறை அன்பர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

 

 

மஹரிஷி ரமணர் ஒரு திறந்த புத்தகம்; அந்த புத்தகத்தைப் படித்தவர்களைப்  பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் ஏராளம் உள்ளன! அவற்றை ஊன்றிப் படிக்கும் போது மஹரிஷி ரமணர் குறிப்பிடும் “ஏதோ ஒரு சக்தி” அவரே தான் என்பதை உணர முடியும். பகவானைச் சந்தித்த பாக்கியவான்களின் சந்திப்புகளில் நிகழ்ந்ததைப் படிக்கும் போது அது நமது ஆன்ம ஒளியைத் தான் தூண்டுகிறது! – இன்றும், என்றும்!

This article was written by my brother S Nagarajan of Bangalore: swaminathan

********************

Sibi Story in Old Tamil Literature!

chola-flag-2

By London Swaminathan

Did Tamil Chozas come from North?

 

Chera, Choza, Pandyas are the three great kingdoms of ancient Tamil Nadu. We know for sure they existed at least 2500 years ago. Valmiki, Vyasa, Bodhayana, Katyayana, Kautilya, Asoka, Karavela, Kalidas, Varahamihira, Dandi and others mention one or the other Tamil dynasties. All the Tamil kings claimed links with Surya clan of Sri Rama or Chandra clan of Pandavas. Some even claimed link with Agni clan. We find it more in later literature, inscriptions and copper plates. Some people thought they were all boasting to raise their profile. But the story of Sibi is found in the old part of 2000 year old Sangam Tamil Literature!

 

Chozas who ruled from the rice bowl of Tamil Nadu claimed that Sibi of North West India was one of their fore fathers. Story of Sibi is in Mahabharata and it gained currency in later literature. Sibi was son of King Usinara and queen Madhavi. He was a righteous king. Indra and Agni wanted to test his integrity and so they took the form of birds hawk and dove. The hawk chased the dove and it sought protection from Sibi. Sibi was ready to give the hawk anything except the dove. But the hawk (Indra) was so adamant demanded either the dove or equal measure of meat from the king. When the king cut his flesh and placed it on one pan and the dove on the other pan, it was never equal. The king himself mounted the balance to give himself for the sake of the dove. But Indra and Agni revealed themselves and blessed him. There is another story of Sibi’s eye donation in the Buddhist Jataka.

 

This story is sung by several poets and they are in Purananuru verses 37, 39, 43 46 and 228. Sibi’s wards were called Saibya in Sanskrit. Sangam Tamil poets Tamilized this word and called the Chozas Sembian. This word is in other Sangam books Aka Nanuru (36) and Natrinai (14).

SibiBorobudur

The story of Sibi Chakravarthy is so famous that it was sculpted in the Barhut, Nagarjunakonda ,Amaravati bas-reliefs and  Borobudur in Java,Indonesia (see Boropudur sculpture above).

Tamil epics Silappadikaram and Manimekalai gave more details about this link. Since the oldest part of Sangam Tamil literature mentions it no one can reject it. The link is confirmed with other stories as well.

Sibi ruled from the north west of India. There was a Sibi puram on the banks of river Chenab in Punjab. Sibi clan is mentioned in Rig Veda and Brahmanas. Panini referred one Sivapuram may be the same Sibipuram

 

One of the Chozas known as Thodithol Sembian is credited with shooting down three flying forts. We have the same story attributed to Lord Shiva. Sage Agastya ordered him to install 28 day Indra Festival in Tamil Nadu. Another king Musukunthan, son of Mandhata, helped Indra to save his city from the attacks of demons. Indra gave him several magical gifts!One Choza king was said to have ruled the mythical paradise on earth Uttara Kuru. Manu Neethi Choza who followed Manu’s rules verbatim made his son to die under the chariot wheel because he killed a calf under his chariot wheel. The cow came all the way to palace and rang the bell to seek justice.

sibi,pak

 

City of  Sibi in Pakistan.

Sibi story was known to all the people in India. It is strange that the Chozas who ruled from the peninsular India claimed link with him. This raised the question whether Chozas had their origin in North West India. Anyone who argues they might have migrated from south to north must remember all the names are in Sanskrit and already in Hindu epics and Puranas (mythology).

 

This Sibi story in the old part of 2000 year old literature is another nail in the coffin of Aryan Dravidian race theory. All the three dynasties claimed close links with ancient Hindu dynasties of north. Sri Rama represented Surya clan and Pandavas represented Chandra clan. Famous tamil epic begins with a prayer to Sun (Surya), Chandra (moon) and Rains. It may represent Chozas, Pandyas and Cheras. Ancient Tamils considered the whole country as one and all were their brothers.

 

Please read my earlier posts: 1.Indra festival in the Vedas and Tamil Epics 2.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 3.Karikal Choza and Eagle shaped Fire Altar 4.Why do British judges follow a Tamil king? 5.Flags : Indus Valley- Egypt Similarity 6.Veera Matha in the Vedas and Tamil Literature 7.Tolkappian a Genius 8.Did Tolkappian copy Panini? 9.தமிழ் முனிவர் அகஸ்தியர் 10.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 11.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 12.வீரத் தாயும் வீர மாதாவும் 13.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

Contact swami_48@yahoo.com; pictures are  taken from different sites;thanks.

the story of king sibi 12.8.10

சோழர்கள் தமிழர்களா?

SibiBorobudur

Sibi Story in sculptures, Borobudur, Indonesia.

By London Swaminathan

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் மஹாவம்சம், கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், காளிதாஸ் முதலிய பலராலும் பாராட்டப்பட்டவர்கள்.

 

1.தமிழ் இனத்தின் வயது என்ன?, 2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை, 3.தமிழ்-கிரேக்க தொடர்பு 4. திராவிட ராணி கி.மு.1320 (5) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 6. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் முதலிய பல கட்டுரைகளில் ஏற்கனவே தமிழ் இனத்தின் பழமையை, பெருமையை விளக்கிவிட்டேன்.

 

சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் அடிபடுகின்றன. எல்லோரும் வடபுல மன்னர்களுடன் சொந்தம் பந்தம் கொண்டாடினாலும் சோழர்கள் பற்றிய செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. பிற்காலச் செப்பேட்டிலும், கல்வெட்டுகளிலும் மட்டும் இச்செய்தி வந்திருந்தால் இதைப் பலரும் வெறும் புகழுரை என்று ஒதுக்கி இருப்பார்கள். ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தின் பழமையான பகுதி என்று கருதப்படும் புறநானூற்றில் இச் செய்தி ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்படுவதால் இதில் உண்மை இருக்கவேண்டும்.

(ஆரிய திராவிட வாதம் பேசும் பேதிலிகளுக்குப் புறநானூறும் ஏனைய சங்க இலக்கிய நூல்களும் தரும் பதில் இதோ):

 

சோழர்களின் மூதாதையர்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதில் இருந்து வந்தவர்கள்என்று தோன்றுகிறது. தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன. பாண்டவர்களின் சந்திரகுலத்துடன் பாண்டியர்கள் சொந்தம் கொண்டாடுவது போல இவர்கள் ஸ்ரீ இராமனின் சூரிய குலத்துடன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.

chola-flag-2

Choza’s Tiger Flag

சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.

 

சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர். பஞ்சாபில் ஜீனாப் நதிக்கரையில் சிபிபுரம் உள்ளது. இதைத் தான் பாணினி சிவபுரம் என்று குறிப்பிட்டதாகவும் சில அறிஞர் கருதுவர். சிபிகள் செய்த கண் தானத்தை புத்த ஜாதகமும் அவன் வேள்விகள் இயற்றி சொர்க்கம் சென்றதை மஹாபாரத ஆதிபர்வமும் விளக்கும்.

 

மேலும் பல வியப்பான செய்திகள்

அகத்திய முனிவரின் ஆணையை ஏற்று, தொடித்தோள் செம்பியன் என்ற சோழன், 28 நாள் இந்திர விழாவினை ஏற்பாடு செய்ததாக மணிமேகலை காப்பியத்தில் காணலாம் (1-1-10). அவன் சிவபெருமான் போல அசுரர்களின் மூன்று ஆகாயக் கோட்டைகளத் தகர்த்ததை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் தருகிறார் (தொல். பொருள் 102 உரை). புறநானூறும் (பாடல் 39) சிறுபாணாற்றுப்படையும் (81-82), சிலப்பதிகாரமும் (29-17) இதையே கூறும்.

 

சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் உள்ள இலக்கியங்கள் அனைத்தும், கல்வெட்டுகள், மெய் கீர்த்திகள், செப்பேடுகள் அனைத்தும் சோழர்களின் சூரியகுலத்தைப் போற்றிப் புகழ்கின்றன.

 

மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

 

புராண, இதிஹாசங்களில் சிபிச் சக்ரவர்த்தி சூரிய குல மன்னனாகக் காட்டபடவில்லை. இதில் வியப்பு ஒன்றுமில்லை. சூரியகுல, சந்திரகுலக் கலப்புத் திருமணத்தில் எதுவும் சாத்தியமே.

வரலாற்றுப் பேரறிஞர், தொல்பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா.நாகசாமி எழுதிய புத்தகத்தில் (யாவரும் கேளிர்) பல அரிய செய்திகளைத் தருகிறார்:

சோழ மன்னர்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய செப்பேடுகளில் இருந்து அறியலாம். காச்யபர், அத்ரி ஆகிய இரண்டு ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

sibi colour

சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.

இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.

மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

 

ஒருமன்னன் குட மலையை அறுத்து பொன்னி நதியக் கொண்டுவந்தான் என்றும் இன்னொருவன் மேல்கடல் நீரைக் கீழ்க்கடலில் விட்டான் என்றும் நாபாகன் என்ற சோழன் முதுமக்கள் தாழியை வழக்கத்தில் கொணர்ந்தான் என்றும், மனுநீதிச் சோழன் தனது மகனையே தேர்க்காலில் இட்டதையும், நரைமுடி தரித்து நீதி வழங்கியதையும் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறும்.

 

கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து வேள்வி இயற்றியதையும் பருவக் காற்றைப் பயன்படுத்தி கப்பல் விட்டதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன் கீழே காண்க.

இந்தியர்களை ஆரியர், திராவிடர் என்று இனம் பிரித்து சூது வாது புரிந்தவர்களுக்கு புறநானூறு நல்ல சூடு போடுகிறது.

உதவிய நூல்கள்: 1.சங்கத் தமிழ் இலக்கியம், 2.இரு பெரும் காப்பியங்கள் 3.இந்தியப் பண்பாடும் தமிழரும்— எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ். இராமகிருஷ்ணன்  4. யாவரும் கேளிர்— தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி

 

Please read my earlier posts:

1.Indra festival in the Vedas and Tamil Epics 2.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 3.Karikal Choza and Eagle shaped Fire Altar 4.Why do British judges follow a Tamil king? 5.Flags : Indus Valley- Egypt Similarity 6.தமிழ் முனிவர் அகஸ்தியர் 7.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 8.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 9.வீரத் தாயும் வீர மாதாவும் 10.Veera Matha in the Vedas and Tamil Literature 11.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 12.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 13.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  14.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 15.தமிழ் இனத்தின் வயது என்ன? 16.தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்).17. Pandya king who Ruled Vietnam.+ 560 articles about Indian Culture.

Pictures are taken from various sites;thanks; contact swami_48@yahoo.com

sibi

 

Sibi in modern Pakistan

நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!

gold+bank+of+england

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

நாலு லட்சம் தங்கக் கட்டிகள்!

ஒவ்வொன்றும் 13 கிலோ எடை (29 பவுண்டு)!

இன்றைய விலையில் ஒவ்வொரு கட்டியும் 350,000 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்டுகள் (இந்திய ரூபாயில் 3,50,000 X 89 ரூபாய்)

மொத்த மதிப்பு 15,0000 கோடி £150 billion பவுண்டுகள்

வரிசை வரிசையாக தங்கக் கட்டிகள்!!!

 

நாலு லட்சம் தங்கக் கட்டிகள் வேண்டுமா? பார்க்க மட்டும் தான்! லண்டனுக்கு வருவோர் ‘த்ரெட் னீடில் Thredneedle Street (ஊசி நூல் தெரு) ஸ்ட்ரீட்’ டுக்குப் போய் ‘’பாங்க் ஆF இங்கிலாந்து’’ Bank of England பொக்கிஷ அறையில் உள்ள தங்கக் கட்டிகளைப் பார்ப்பது வழக்கம். இனிமேல் லண்டனுக்கு வராமலேயே நீங்கள் பார்க்கலாம். வீட்டில் கம்ப்யூட்டரும் இன்டெர்னெட்டும் (Internet) இருந்தால் போதும்.

 

இங்கிலாந்து வங்கி என்பது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்றது. அரசாங்கத்தின் செல்வமான தங்கக் கட்டிகள் மற்றும் புதிது புதிதாக அடிக்கும் கரன்ஸி நோட்டுகள் எல்லாம் இங்கே மலை போல குவிந்திருக்கும். இப்போது இதை ஆப்பிள் அல்லது கூகுள் அப்ளிகேஷன் மூலம் (Apple Store, Google play market place; 360 degree panoramic view) பார்க்கலாம். அப்ளிகேஷன் களை இலவசமாகப் பெறலாம்.

gold 3

இங்கிலாந்து வங்கியின் கதவுகள் குண்டு துளைக்க முடியாத கதவுகள்! பின்ன என்ன? இவ்வளவு தங்க கட்டிகளை வைத்துக்கொண்டு, உதைந்தால் திறக்கக்கூடிய  மரக் கதவா போட்டிருப்பார்கள்? பத்து பவுண் நகைகளைப் பாதுகாக்கவே அரிசிப்பானைக்குள்ளும் தலையணைக்குள்ளும் ஒளித்துவைக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் வங்கியின் தலைவர்கள் இங்கே கூடி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அந்த அறிவிப்பு வரும் வரை நிதித் துறையில் உள்ளவர்களும், பங்கு மார்க்கெட்காரர்களும், என்னைப் போல வீட்டுக்கு மார்ட்கேஜ் (வீட்டின் பெயரில் வாங்கிய கடன்) பாக்கி உள்ளவர்களும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்போம். ஆனால் கடந்த ஒரு வருடமாக வட்டி விகிதம் மிகவும் குறைவு. குளிர்ச்சியான செய்தி. வங்கிக் கூட்டம் நடக்கும் அறையே ராஜ சபை போல இருக்கும்.

 

ஒரு காலத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ராஜ சபையிலும் இப்படித் தங்கம் குவிந்திருந்தது. உலகிலேயே பெரிய தங்க நாணயத்தை வெளியிட்டதும் நாம்தான்! திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவில் புதையல் பற்றிப் படிதவர்களுக்கு இதெல்லாம் கொசுறு! விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வத்தை மதி[[இட வந்தவர்கள் அதை மதிப்பிட முடியமல் மலைத்து திரும்பிப்போய்விட்டார்கள். கஜினி முகமது, சோமநாதபுரத்தைக் கொள்ளையடித்து சிவன் சொத்தைக் கொண்டுபோய் கஜின் நகரம் முழுவதும் தங்கக் கதவு போட்டானாம்.

 

இந்தியாவின் அபார, அபூர்வ செல்வம் பற்றி நான் எழுதிய ஏழெட்டு கட்டுரைகளின் தலைப்பு கீழே உள்ளது. படித்தால் மலைத்துப் போவீர்கள்.

 

1.கொலவெறி வைரம் 2.ஆயிரம் கோடி ரூபாய் ரத்தின உருண்டை 3.அமுதசுரபி எங்கே? மயிலாசனம் எங்கே? சங்கப்பலகை எங்கே? 4.Indian Wonder: Largest Golden Temple in the World 5.Hindus need an Indiana Jones 6.Krishna’s diamond in USA? 7.Gem stones in Kalidasa and Tamil Literature 8.Indiahhhhhh…..  Richest country in the World (Parts 1 to 6) 9.Largest gold coin 10.தங்கம் விலை உயருமா?

gold 1

 

அருகம்புல் ரகசியங்கள்

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆல்போல் தழைத்து அருகு (அறுகு) போல வேரூன்ற வேண்டும் என்று தமிழர்கள் வாழ்த்துவதை அறிவோம். ஆலமரம் மிகப்பெரிய மரமாக வளர்ந்து விழுதுகள் மூலமாக காலம் காலமாக வாழ்வதை நாம் அறிவோம் (காண்க எனது முந்தைய கட்டுரை: இந்திய அதிசியம்- ஆலமரம் )

 

வரலாறு, தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ஒரு அரிய தகவலைத் தருகிறார்: அருகம் புல், புல் வகைகளில் அரசு போன்றது. ஆகையால் ராஜாக்கள் பட்டாபிஷேக தினத்தன்று அருகம் புல்லை வைத்து ஒரு மந்திரம் சொல்லுவார்கள். ‘’அருகே, புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ அதே போன்று மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ எணன்று முடி சூடும்போது மன்னன் கூறவேண்டும் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன’ (பக்கம்26, யாவரும் கேளிர், டாக்டர் இரா நாகசாமி)

 

அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் புல்லும் ஒரே வகைத் தாவரம் தான். ‘கிராமினே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11,000 வகைத் தாவரங்களில் தர்ப்பைப் புல்லுக்கும் அருகம் புல்லுக்கும் மட்டுமே தனி இடம் கொடுத்தனர். பிள்ளையாருக்கு ஏற்றது அருகம் புல். நவக் கிரக ஹோமங்களில் கேது கிரகத்துக்கு சாந்தி செய்யும்போது அருகம் புல்லை ஹோமத் தீயில் இடுவர். கேது கிரகத்துக்குப் பிள்ளையார் அதி தேவதை.

மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் அருகம்புல்லையும் சாணியில் நட்டுவைப்பர். அருகம் புல் இருந்தால் சாணியில் புழுப்பூச்சிகள் வராது. அருகம் புல்லுக்கு வடமொழியில் தூர்வா என்று பெயர். இப் பெயர் கணபதி மந்திரங்களிலும் உபநிஷத்திலும் வருகிறது. பிள்ளையாரை தூர்வாப் ப்ரியாய நம: என்று சொல்லி வழிபடுவர்.

2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் இலக்கியத்திலோ தொல்காப்பியத்திலோ ‘சிவன்’ என்ற சொல்லே கிடையாது. அதே போல பிள்ளையார் பற்றிய குறிப்பும் கிடையாது. ஆனால் கபிலர் என்ற பிராமணப் புலவரின் பெயர் ரிஷி முனிவர்களுக்கும் உண்டு. பிள்ளையாருக்கும் உண்டு. பகவத் கீதையில் கண்ணபிரான் (9-26) ‘எனக்கு பத்ரம் புஷ்பம், பலம் தோயம்= இலை, பூ, பழம், தண்ணீர்’ எதைக் கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறுகிறார். இதையே கபிலரும் (புறம் 106)

‘’புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா’’ என்று கூறுகிறார்.

 

புல், இலை, எருக்கு ஆகிய எதைப் போட்டு பூசித்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லாது என்று கபிலர் கூறியதை எனது ‘’புறநானூற்றில் பகவத் கீதை’’ என்ற கட்டுரையில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இங்கு பிள்ளையாரின் ஒரு பெயரான ‘’கபிலர்’’ என்ற பெயரைக் கொண்ட புலவர், புல், இலை, எருக்கம் என்று கூறுவதைப் பார்த்தால் இது மூன்றும் பிடித்த ஒரே கடவுள் பிள்ளையார்தான்!

புல் என்பது அருகம் புல்லையும், பத்திரம் என்பது விநாயகருக்குப் பிடித்த 21 வகை இலைகளையும், எருக்கம் என்பது எருக்கம் பூவையும் குறிக்கலாம்.

மாணிக்கவாசகர் புல்லாகிப் பூண்டாகி என்று பாடுவதிலும் பொருள் உளது. இன்னொரு உண்மை என்னவென்றால் இறந்தவன் மறுபிறப்பு எடுப்பது எப்படி என்று கூறும் உபநிஷத்துகள் நமது ஆன்மா மழை மூலம் புல்லை அடைந்து, பசுவின் வயிற்றை அடைந்து பாலாக மாறி தாயின் வயிற்றில் கரு மூலமாகப் புகும் என்றும் சொல்லப்பட்டிருப்பதும் கவனிக்கப் படவேண்டியது.

 

பாம்பு- கீரி சண்டை மர்மம்

பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது.

அருகம் புல் பெயரிலேயே சக்தி கொடுக்கும் சூரியன் பெயரும் (அருகன்) இருக்கிறது. அருகன்=சூரியன்=ஆர்கோஸ் (கிரேக்கம்)= பர்கோ தேவஸ்ய( காயத்ரி மந்திரம்) எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்கள்.

இலங்கை மக்களும் நாட்டார் சமூகத்தினரும் அருகின் பெருமையை நன்கு அறிவர். இலங்கையில் குழந்தைகளுக்கு ‘’பால் அரிசி’’ வைப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகளுக்கு பாலில் அருகம் புல்லைத் தோய்த்து வாயில் விடுவர்.

கல்யாண காலங்களில் மணமக்களை வாழ்த்தி அருகரிசி போடுதலும் உண்டு.

மருத்துவ குணங்கள்

மிருகங்களில் பலம் வாய்ந்ததும், வேகம் மிக்கதும், பலன் தருவதும் சாக பட்சிணிகள் தான்; அதாவது சைவ உணவு சாப்பிடுபவையே; .யானை, குதிரை, காண்டாமிருகம், பசு ஆகிய அனைத்தும் சைவ உணவு, குறிப்பாக அருகம் புல் முதலியனவற்றை சாப்பிடுபவை. குதிரை, முயல், காட்டுப் பன்றி ஆகியன அருகம் புல்லை விரும்பிச் சாப்பிடும். இவை அனைத்தும் அபார வேகம் மிக்கவை. அத்தனைக்கும் அருகம் புல் ‘பெட்ரோல்’ மாதிரி.

நோய் வந்தால் பூனை, நாய், கோழி ஆகியன கூட அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைக் காணலாம்.

 

அருகம் புல் பற்றிய புராணக் கதையும் கூட அதன் குணத்தைக் காட்டும். அனலாசுரன் என்பவன் நல்லோர் அனைவர்க்கும் துன்பம் செய்தான். எல்லோரும் பிள்ளையாரை வேண்டவே அவர் அனலாசுரனை விழுங்கிவிட்டார். பெயருக்கு ஏற்றவாறே அவன் அவர்க்கு வயிற்றில் அனலை உண்டாக்கி எரிச்சல் தரவே, பிள்ளையாரும் அருகம் புல்லைச் சாப்பீட்டே குணம் அடைந்தார்.

அருகம் புல் சாற்றை காலையில் அருந்துவது நல்லது. இது மலச் சிக்கல், உடலில் உள்ள விஷம் ஆகியவற்றை நீக்கும்.தோல் நோய்கள், மார்பு, நுரை ஈரல் தொடர்பான நோய்கள், ஜனன உறுப்புகள் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

 

ஜெர்மனி போன்ற நாடுகளில் புல் சாற்றைக் கலந்தும் ரொட்டி செய்கிறார்கள். மக்கள் அதை விரும்பி வாங்குகிறார்கள். நாமும் அருகம் புல் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றை செய்யலாம். புல் வகைகளை உணவாக உட்கொள்ளுதல் பற்றி தனி புத்தகமே ஆங்கிலத்தில் இருக்கிறது. ஒரு வேளை ஆங்கிலப் புத்தகத்தில் ஆங்கிலேயர் சொன்னால் தான் நம்மவர்களுக்குப் புரியும் போல இருக்கிறது.

பிரதமர் இந்திராகாந்தி வெளிநாட்டுக்குச் சென்றபோது அவருக்கு பரிசாக அளித்த கம்பளம் இந்தியாவில் செய்யப்பட்டது (மேட் இன் இண்டியா) என்று எழுதப்பட்டதை அவரே ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.அது போல அருகம்புல்லும் ‘பாரீன்’ சரக்காக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

அபிதான சிந்தாமணி தரும் தகவல் (பக்கம் 109)

அறுகு: ஒரு விதமான பூண்டு. இதைக் கஷாயம் செய்து மிகவும் விருப்பமான உருசியுள்ள, குளிர்ச்சியுண்டாக்குகிற குடிநீராக உபயோகப் படுத்துகின்றனர். இது உப்பறுகு, கூந்தலறுகு, சிற்றறுகு, புல்லறுகு, பேரறுகு, பானையறுகு, வெள்ளறுகு என பேதப்பட்டு குணங்களும் மாறுபடும். இது தேவர்கள் பொறுட்டு அநலாசுரனை விநாயகர் விழுங்கிய காலத்து வெப்பம் தணிவுற முனிவர் பூசித்தலாலும், விரோசனையால் விநாயக மூர்த்தி பசியாக வந்த காலத்திற் பசி தணிய நிவேதிக்க இட்டமையாலும், ஆசிரியை எனும் ரிஷி பத்தினியால் தேவேந்திரனிடம் துலை ஏறப்பெற்றுத் துலையில் தேவேந்திரன் செல்வத்தினும் உயர்ந்தமையாலும், தருப்பையில் ஒன்றாதலாலும் ஏற்றமுடைத்தாம் (விநாயக புராணம்) துலை= தராசு

 

நான் எழுதிய வேறு மருத்துவக் கட்டுரைகள்

1.டாக்டர் முருகனும் பேஷன்ட் அருணகிரிநாதரும் 2.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 3.தக்காளி ரசத்தின் மகிமை 4.Why Do Hindus Practise Homeopathy? 5.Copper Kills Bacteria 6.Amazing Medical Knowledge of Tamils 7.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும்,அருணகிரிநாதரும் 8.OM boosts Brain Power 9.Prayers Good for Hearts, says scientists 10.யானைக் காப்பி 11.ஒருவேளை உண்பான் யோகி 12.Tomatoes Prevent Cancer 13.Head towards North is Wrong 14.Miracles by the Blind and Oldest Organ Donation 15.The Tortoise Mystery: Can we live for 300 years? 16.Scientific Proof for Shamudrika Lakshnam 17.Bhishma: First man to practise Acupuncture 18.வடக்கே தலை வைக்காதே 19.How did a Pandya King get a Golden Hand? + 570 articles on other subjects.

Contact: swami_48@yahoo.com; pictures are not mine.