GNANAMAYAM 1-6-2025 PROGRAMME REPORT

ISAIKKAAVI RAMANAN MADE A POWERFUL SPEECH FOLLOWED BY AN INTERVIEW ON GNANAMAYAM BRODCAST FROM LONDON ON SUNDAY 1-6-2025. HE SPOKE ABOUT INDIA’S CONTRIBUTION TO WORLD THOUGHT QUOTING BHARATI AND UPANISHADS. HE ANSWERED ALL THE QUESTIONS ABOUT HIS GURU, HIS BOOKS, HIS POEMS AND HIS ACTING AND LECTURING. AFTER HIS TALK LONDN SWAMINATHAN INTERVIWED HIM. HIS GESTURES SHOW HOW POWERFUL HIS SPEECH WAS.

OTHER PARTICIPNTS

GNANAMAYAM First June 2025 SUNDAY BROADCAST PROGRAMME SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .

***

Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London .

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on – The Chintpurni Temple, – Sakthi Peetam – Himachal Pradesh

****

SPECIAL EVENT-

Talk by Isaikkavi Ramanan on His Contribution to Tamil Language and  Community

Isaikkavi Ramanan is a famous speaker, actor, playwright, author, composer  and a poet; won a number of awards.

He is saying about himself :

“Not special in any way. Fortunate in every way”.

Official Name T.A. Venkateswaran

Date of birth January 29, 1953, Tirunelveli

Married to Anuradha

Father of Anand and Vikram (Twins)

Education Commerce Graduate

Work Experience       

27 years in The Hindu, one of India’s leading national dailies. Joined as a Sales Representative, became Regional Manager at Visakhapatnam, and quit employment when I had 10 years to go, to pursue my personal dreams.

Gifts from Providence

A prolific poet in Tamil, composer and singer. Stage Actor. Acted in Televesion serials and presented about 1400 programmes as well in various channels. Author in Tamil and English.

Publications

About 15 books in Tamil comprising compilation of poems and articles

Wrote “Sikaram” the biography of Sri K. Balachandar, a doyen film maker

Three books in English, “Chips Down? Chin Up!” ; Business Mantras, a Pictorial on Sri N Mahalaingam and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.

Three translation works from English to Tamil and one from Tamil to English

Several CDs containing my poems and songs in my voice; also sung by my sons and sister.

CDs containing conversations with Dharma Raman in English and Tamil on Vedas, Aathi Chudi, Durga Sapta Sloki and my poems and songs with her introductions

Published 42 books so far

Media

Pothigai TV : Anchored about 200 epispdes of “Konjam Kavithai Konjam Thaeneer” for about two years

Acted in four Tamil serials, including one directed by the late K. Balachander

Sri Sankara TV : Spoke on “Kanchi Mahan: 501 episodes and On the path of Dharma 275 episodes. “Deivathin Kural” 56 episodes, “Kanchi Mamuniyin Kaaladiyil” 45 episodes.

MakkalTV : Spoke on ThirukkuraL in “Thamizh Amizdhu.” 165 episodes

Makkal TV : “Pannisai VithagargaL” 165 episodes

About 1400 episodes in all in various television channels

Public Speaking

Addressing varied age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs and motivational talks.

Wrote and has been acting in SB Creations’ “Bharathi Yaar?” Staged in Chennai, different parts of Tamilnadu and also in Muscat, Melbourne, Singapore and nine places in the USA.

Travel Abroad

Seven visits to parts of the U.S.A. and six Canada – lecture / stage play tour

Seven visits to Singapore – lecture tour

Sri Lanka, Malaysia, Abu Dhabi, Muscat, Australia, UK

Pilgrimage

Ardent pilgrim, visited several holy places in India

35 visits to different parts of the Himalayas so far

Other interests

A keen photographer

Awards: About 46, including Tamilnadu Govt’s Kalaimamani

Goal

Spiritual enlightenment and spreading cheer and positivity through cultural / literary programmes

Fortunate to come under the tutelage of Satguru Sivananda Murty, who lived in Bheemunipatnam, near Visakhapatnam

 ****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

1-6-2025 ஞாயிற்றுக்கிழமை ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

நேரில் காணலாம்; கேட்கலாம்via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழு– Master Akash Ramesh.

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் .

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –  ஹிமாச்சல பிரதேச  சக்தி பீடம்- சிந்த் பூரணி அம்மன் கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சொற்பொழிவு:- இசைக்கவி ரமணன் .

தலைப்பு — நூல்கள் மூலமும் சொற்பொழிவு மூலமும் ஆற்றும் தமிழ்த் தொண்டு.

இசைக்கவி ரமணன் வாழ்க்கைக்குறிப்பு

 பிறந்த இடம் திருநெல்வேலி / 30.03.1954

 தமிழ்க்கவிஞன் என்னும் ஒரே அடையாளம். இசையோடு கவிதைகளைப் பாடுவது இயல்பு.

27 ஆண்டுகள் ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் பணிபுரிந்து முன்னோய்வு. சென்னை, பெங்களூரு, மதுரை, விசாகப்பட்டினம் கிளைகளில் பணி

37 முறை இமயத்தின் பல பகுதிகளுக்குப் பயணம்

புகைப்படக் கலையில் ஆர்வம்

கனடா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, மஸ்கெட் (ஓமன்), ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆங்கிலச் சொற்பொழிவுகள்

இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி, கொல்கத்தா, மணிப்பூர் போன்ற ஊர்களிலும் சொற்பொழிவுகள்

தொலைக்காட்சி : முடிந்த நிகழ்ச்சிகள் : பொதிகையில் இரண்டாண்டுகள், “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” நிகழ்ச்சி (சுமார் 200) . மக்கள் தொலைக்காட்சியில், “பண்ணிசை வித்தகர்கள்” (165) “தமிழ் அமிழ்து´ (165) நிகழ்ச்சிகள். சங்கரா தொலைக்காட்சியில் “காஞ்சி மகான்” (501) நிகழ்ச்சி;

 “தர்மத்தின் பாதையில்” On the Path of Dharma என்ற தலைப்பில் தமிழ் / ஆங்கிலத்தில் தொடர் சொற்பொழிவு (275) / தெய்வத்தின் குரல் (60) “காஞ்சி மாமுனியின் காலடியில்” என்னும் தொடர் சொற்பொழிவு (50).

நான்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடிப்பு

இதுவரை பங்குகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சுமார் 1400 +

தினமலர், தமிழ் இந்துவின் யூடியூபுக்காக, சுய முன்னேற்றம் / கவியரசர் கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சிகள்.

தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள்: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திவரும் “காலங்களில் அவன் வசந்தம்” 100 நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.  

மதுரத்வனி மற்றும் இண்டேன் குருகேஸ் ஏஜென்சியின் ஆதரவில் சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் “இசைக்கவியின் இதயம்” ; மதுரத்வனி மற்றும் சேவாலயாவின் “மாதம் தோறும் மகாகவி” இவை தவிர, சென்னையிலும் வெளி ஊர்களிலும் சொற்பொழிவுகள் – கவிதைகள் பாடல்களோடு.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் என் நண்பன் திரு. மகேஷ் கிருஷ்ணன் வழங்கிய “இசைக்கவி” என்னும் விருதே அடையாளமாகத் தொடர்கிறது.

 விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள பீமுனிப்பட்டினத்தில் வாழ்ந்த சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களிடம் தஞ்சம்.

தேசமே கோயில், தர்மமே தெய்வம், தமிழே சுவாசம் என்று வாழ முயலும் ஆன்மிகப் பயணி.

*****

எழுதிய நூல்கள்

கவிதை நூல்கள்: 13

01 கோடுகள் இல்லா உலகம்

02 அகத்தியர் அந்தாதி

03 பிள்ளைப் புலம்பல்

04 மனோன்மணி மாலை

05 ரமணனைக் கேளுங்கள் + குறுந்தகடு

06 வண்டி போய்க்கொண்டிருக்கிறது + குறுந்தகடு

07 மரியன்னை பதிகம்

08 அராளகேசி அருட்பாமாலை

09 ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்

10 துர்கா சப்தஸ்லோகி

11 நதியில் விழுந்த மலர் + குறுந்தகடு

12 அபிராமி அம்மை பதிகம்

13 என்னுயிர் மீனாட்சியே

உரைநடை நூல்கள்: 20

01 எந்த வானமும் உயரம் இல்லை

02 இமயம் : அந்தரங்கத்தின் பகிரங்கம்

03 எல்லோர்க்கும் தந்தை இறைவன்

04 மனம் செய விரும்பு

05 என் குருவே என் இறைவன்

06 எந்தத் திருமணம் வெற்றி பெறுகிறது? 

07 “சிகரம்” – இயக்குநர் “சிகரம்” – திரு, கே. பாலசந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாறு

08 பல முகங்கள் சில நினைவுகள்

09 ஒளிமயமான எதிர்காலம்

10 வெற்றி நிச்சயம்

11 காலங்களில் அவன் வசந்தம்

12 கண்ணதாசன் – இலக்கியத்தின் கண்ணாடி

13 தெய்வப் பிறவிகள் (தினமலர் வெளியீடு)

14 பாமரன் பார்வையில் பாரதி (தினமலர் வெளியீடு)

15 சேச்சு

16 ஈசாவாஸ்ய உபநிடத விளக்கம்

17 கம்ப தரிசனம்

18 பெரியவர்

19 பார்த்ததும் பதிந்ததும்

20 குரோம்பேட்டை ஞாபகங்கள்

இது தவிர மொழிபெயர்ப்பு நூல்கள், குறுந்தகடுகள் ஆகியவற்ரையும் வெளியிட்டுள்ளார் . மேடை நாடகங்கள் எழுதியும் நடித்தும் உள்ளார்.

2000 ஆண்டு, விசாகப்பட்டினத்தில், என் குருநாதர் சத்குரு ஶ்ரீ சிவானந்தமூர்த்தி அவர்களின் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் நான் அவருக்கு அளித்த வரவேற்புக் கவிதைக்கு மறுமொழியாக அளித்த “மதுரகவி” என்பதே நான் பெற்ற முதல் விருது. இது தவிர எண்ணற்ற விருதுகள்!

****

நேரம் இருப்பின் இடையே  பாடல்கள்!

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham— 

Tags-Gnanamayam Broadcast, June 1, 2025, Programme, Summary

ஞானமயம் வழங்கும் (1-6-2025) உலக இந்து செய்திமடல் (Post No.14,584)

Written by London Swaminathan

Post No. 14,584

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

(Collected from Popular Newspapers and edited for broadcast)

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் முதல் தேதி 2025-ம் ஆண்டு

முதலில் இந்தியச் செய்திகள்! 

****

 அமர்நாத் யாத்திரைக்கு 3 . 5 லட்சம் பேர் முன்பதிவு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நாடு முழுவதும் இருந்து 3.5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான் அனைத்து பாதுகாப்புஏற்பாடுகளும் செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்த கோடை சீசனில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாங்கள் அமர்நாத் யாத்திரையில் முழு கவனம் செலுத்த போகிறோம். எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த யாத்திரைக்குப் பிறகு சுற்றுலாவை மேம்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும், இவ்வாறு கூறினார்.

52 நாட்கள் கொண்ட அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுவரையில் இந்த யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் 3.5 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது 

அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்

மத்திய பாதுகாப்புப் ஆயு தப் படையினரை மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்புகிறது. இவர்கள் ஜூன் மதம் இரண்டாவது வாரம் முதல் பாதுகாப்புப் பணிகளை ஏற்பார்கள். 

***** 

அயோத்தி ராமர் கோவிலில்  சிவன் சிலை பிரதிஷ்டை

 அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண பிரதிஷ்டை ஜூன் 3 முதல் ஜூன் 5, 2025 வரை நடைபெற உள்ளது.

 உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில்  ராமர் கோவிலில் நேற்று சிவ பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல், அபிஷேக ஆராதனைகள் துவங்கப்படும் என்று கோவில் நிர்மாணக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்

 இப்போது 90 சதவிகித வேலை முடிந்துவிட்டது கோவிலைச் சுற்றி வலம் வரும் பிரகார பாதை அமைக்கும் பணி செப்டம்பரில் நிறைவடையும் ; கோவில் அமைப்பு தொடர்பான எல்லா வேலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும் மிஸ்ரா தெரிவித்தார். 

****

வைகாசி விசாக திருவிழா: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

 முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் வைகாசி விசாகம் ஒன்று. வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிற 9-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

 ****

பிரேசில் நாட்டு ஜோனாஸ் மாசெட்டிக்கு பத்மஸ்ரீ விருது!

இந்து சமய பாரம்பரிய  உடையில் வந்து ராஷீரபதியிடம் விருது பெற்றார்.

அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஒருவர் ஜோனாஸ் மாசெட்டி Jonas Masetti என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்துமத ஆன்மீக குரு ஆவார். வேஷ்டி- அங்கவஸ்த்ரம் – சிகை முதலியவற்றோடு அர்ச்சக வடிவில் வந்து விருதுபெற்ற அவரின் ஆன்மீக பெயர் விஸ்வானந்தா.

பிரேசில் நாட்டின் ஜெனிரோவில் பிறந்த இவர், இயந்திரப் பொறியியலில் (Mecanical Engineer) பட்டம் பெற்று, பிரேசில் இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பங்குச் சந்தையில் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

இருப்பினும், வாழ்க்கையில் ஏதோ குறைவது போல் உணர்ந்த ஜோனாஸ் அவர்கள் யோகா மற்றும் தியானம் மூலம் ஆன்மீகப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்.

2004 ஆம் ஆண்டு தமிழகம்- கோவை ஆனைகட்டியில் உள்ள ஆச்சிரமத்திற்கு வந்து சுவாமி தயானந்த சரஸ்வதியிடம் வேதாந்தம் பயின்றார். நான்கு ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கற்றார்.

பிறகு தனது குருவின் வழிகாட்டுதலின்படி, பிரேசில் திரும்பிய ஜோனாஸ் ‘விஷ்வ வித்யா’ என்ற அமைப்பை நிறுவி வேதாந்த போதனைகளை பரப்பத் தொடங்கினார்.

அவரது போதனைகள் பிரேசில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது.  அவர் பகவத் கீதையை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் வேதாந்தம் மற்றும் யோகா குறித்து பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஜோனாஸ் மாசெட்டி தனது ஆன்மீக போதனைகள் மூலம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*****

 தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 142வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

தாய்நாட்டின் மீதான சாவர்க்களின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், சுதந்திர இயக்கத்தின் மீதான சாவர்க்கரின் துணிச்சலை தேசம் ஒருபோதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாவர்க்கரின் தியாகமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காக துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் உச்சத்தைத் தாண்டியவர் சாவர்க்கர் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நலனை அகில இந்திய உணர்வாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரப் போராட்டத்தை தனது எழுத்துக்களால் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றியவர் சாவர்க்கர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சமூகத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வீர் சாவர்க்கர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

*****

ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி ஜூன் 22-ம் தேதி நடத்தவிருக்கிறது.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பூமி பூஜை மே மாதம் 28-ஆம் தேதி நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும், மதுரையில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22 ல் நடக்கவுள்ளது.

அதற்கான பூமி பூஜை மதுரை வண்டியூரில்  நடந்தது. ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கோ பூஜையுடன் விழா தொடங்கியது.

இதற்கு முன்னர்,

கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்துகொண்டு மாநாட்டுத் தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு வழங்குகிறது எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், ஜூன் 22ஆம் தேதி மதுரையில் கட்சி பாகுபாடு இன்றி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

**** 

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை தேவை – அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் தேசத்துக்கும் , ராணுவத்துக்கும் எதிராக சிலர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை ராம்நகரில் படைவீரர்களை பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம் என்ற நிகழ்வில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவம் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு எதிராக சிலர் பல்வேறு கருத்துகளை பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல எனவும் கூறினார்.

****

 லண்டனில் ருத்ர ஜபம்,  யக்ஞம் 

லண்டனில் நடந்த ருத்ர ஜபம் யக்ஞம் காரணமாக, சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலி பரப்பு நிகழ்ச்சி, ஒத்திவைக்கப்பட்டதை முன்னரே அறிவித்து இருந்தோம் . 

மித்ர சேவா அமைப்பின் சார்பில் நடந்த அந்த நிகாழ்ச்சி திரு கல்யாண சுந்தர சிவாசார்யா தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. சுமார் ஆயிரம் பேர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு யஜுர் வேதத்திலுள்ள ருத்ரம் – சமகம் ஆகியவற்றை பதினோரு முறை ஓதினார்கள் அதே நேரத்தில் ஹோமமும் நடந்தது. ஒவ்வொரு அணுவாகம் முடியும்போதும் மேடையில் அலங்கரிக்கப்பட்ட பளிங்குச் சிலை சிவலிங்கத்துக்கு அபிஷேகமும் ஆரத்தியும் நடந்தது 

ஏராளமான பெண்களும் சிறுவர் சிறுமியரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்; இறுதியில் மகா பிரசாதமும் வழங்கப்பட்டது .

பிரிட்டனின் தொலைதூர நகரங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர் . மித்ரா சேவா சாரிட்டி இதை மூன்றாவது ஆண்டாக நடத்தியுள்ளது; மேலும் ஆண்டுதோறும் உடையாளூர் டாக்டர் கல்யாணராமன் தலைமையில் ராதாகிருஷ்ண கல்யாணத்தையும் மித்ர சேவா அமைப்பு நடத்தி வருகிறது .

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

 அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் எட்டாம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

 —SUBHAM—-

 Tags-ஞானமயம் , (1-6-2025) ,உலக இந்து செய்திமடல் 

நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 Part Two(Post.14,583)

Written by London Swaminathan

Post No. 14,583

Date uploaded in London –  2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Part two)

சங்கப்  புலவர்களின் பெயர்களில் அதிகம் காணப்படுவது மதுரை; ஆகையால் தற்போதைய மதுரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது .அதற்குப் பின்னர் நான் மாடக்கூ டல் என்ற காரணப் பெயர் தோன்றியது; அதற்குப்பின்னர் ஆலவாய்  என்ற காரணப் பெயர் தோன்றியது . அந்தப் பெயரைத்தான் திருஞான சம்பந்தர் அதிகம் பயன்படுத்துகிறார். மாணிக்கவாசகர்தான் மதுரை என்ற பழைய சொல்லைப்  பயன்படுத்துகிறார் . ஆலவாய் என்பது பாம்பு தனது  வாயால் தன்னுடைய வாலினைக் கவ்விக் கொள்ளும் வடிவம் ; இந்த வட்டத்திற்குள் இருப்பது மதுரை இதை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசனும் உரகபுரம் என்ற சொல்லினால் ரகுவம்சத்தில் எழுதியுள்ளார் . இதை ருசுப்பிக்கும் வகையில் சங்க காலப் புலவர் பெயர் மதுரைப் பேராலவாயார் (புறநானூறு 247, 262)  என்றும் காணப்படுகிறது.

****

.இரண்டு திருவிளையாடல் புராணத்திலும்  படலம் எண்  வரிசை

பரஞ்சோதி      —          நம்பி 

மதுரை நகரம் கண்ட படலம் 3- 36

நான் மாடக்கூடல் ஆன படலம்  18- 12

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் 40-48

திரு ஆலவாய் ஆன படலம் 49 – 47

(இந்த மூன்று பெயர்களும் சங்க இலக்கியத்தில் இருப்பதால்  இதற்கு முந்திய லீலைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வைக்க வேண்டும் என்பது என் துணிபு)

தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் 52-53—-  16, 17

வாதவூரடிகள் தொடர்பான படலங்கள் —  58 to 61 —  27 to 30

கூன் பாண்டியன்/ சம்பந்தர் படலம்  62,63–  37,38

வரகுணன் யார் ?

இவ்வளவு  பின்னனி  இருக்கையில் வரகுணன் என்ற ஒரு மன்னர் பெயரினை வைத்து மாணிக்கவாசகரை ஒன்பதாம் நூற்றாண்டுக் காரர் என்று சிலர் முத்திரை குத்திவிட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன் என்று இருப்பதை மறைத்து எழுதுகினறனர் வரலாற்றுக்குத் தெரிந்த இரண்டு வரகுணன்கள்  எட்டு ஒன்பது நூற்றாண்டுக   ல்  இரூந்தவர்கள் என்பதும் ஜிக் சா பசில் JIGSAW PUZZLE  கதைதான்! ஒன்றை வைத்து ஒன்றின் காலத்தை நிர்ணயிக்கின்றனர். உறுதியான சான்று எதுவும் இல்லை. நல்ல வேளையாக நம்பியும் பரஞ்சோதியும் சம்பந்தர் கதையை மாணிக்கவாசகர் கதைக்குப்பின்னர் வைத்துள்ளனர் அவர்களும்  மாணிக்க வாசகரே முதல்வர் என்று நம்பினர்.

வரகுணன் என்பது பட்டப்பெயர் அதாவது சங்கராசார்யார் தலைலாமா, போப்பாண்டவர், இந்திரன் போன்ற பதவிப்பெயர்கள் அப்பா அமமா கொடுத்த அல்லது அலிஸிஷேக காலத்தில் புரோகிதர்கள் கொடுத்த பெயர் அல்ல ஆகையால் வரலாற்றுக்குத் தெரியாத வேறு ஒருவரையும் இப்படி வரகுணன் என்று அழைத்திருக்கலாம் ஏனெனில் மாணிக்க வாசகர் கால மன்னர் அரிமர்த்தன பாண்டியன்.

புதிர்களுக்கு விடை என்ன ?

பதில் சொல்ல முடியாத கேள்வி இது; தருமி என்ற பிராமணப் புலவருக்கு சிவபெருமானே பாடல் எழுதிக்கொடுத்து நக்கீரனுடம் சண்டைபோட்டதை அப்பரும் பாடியுள்ளதால் அது கிபி/CE 600-க்கு முன்னர் என்று உறுதியாகிட்டது அப்பருக்கு 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி   நடந்ததால்தான் சோழநாட்டு அப்பர் அதை பாடியுள்ளார்.

****

புதிர்களுக்கு விடை எங்கே உள்ளது ?

1.புலவர் தருமி பற்றிய அப்பரின் தேவார பாடல் ;

2.ஸுந்தர பாண்டியன் என்று ஆதி சங்கரர் குறிப்பிடும்  பிரம்ம சூத்திர உரை ; சங்கரர் காலத்திலும் குழப்பம் இருக்கிறது ஆதிசங்கரர்  போலவே பிற்காலத்தில் அபிநவசங்கரர்  என்று ஒருவர் பட்டம் ஏற்று அதே போலா செயல்பட்டதால், சாதனை செய்ததால் இருவரையும் ஒருவராக எழுதிக் குழப்பிவிட்டனர் . காஞ்சீபுர மடத்தினர் ஆதி சங்கரரை மிகவும் முற்காலத்தில் வைப்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

3.வரகுண மங்கை என்று நம்மாழ்வார் பாடிய பாசுரம். நம்மாழ்வார் வரகுண மங்கை என்கிறார் ; மாணிக்கவாசகர் உத்தரகோச மங்கை என்றார் ; இந்த மங்கை சொல் பற்றியும் ஆராய்வது அவசியம்  (பிற்கால பட்டினத்தார், தாயுமானவர் பாடல்களை விட்டுவிடலாம் )

நம்மாழ்வார் பாசுரம் குறிப்பிடும் வரகுண மங்கை –பாசுரம்

வரகுணமங்கை நம்மாழ்வார் பாடல்

நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

திருவாய்மொழி பத்து

புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை

இருந்துவை குந்தத்துள் நின்று,

தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே

என்னையாள் வாயெனக் கருளி,

நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப   

பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்பநீ காணவா ராயே.   , 3687

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மன்னன் வரகுணனுக்கும் இந்த ஊருக்கும்  எந்தத் தொடர்பும்  இல்லை! அவனோ சிவ பக்தன்; அப்படியிருக்க வரகுண மங்கை என்ற பெயர் எப்படி வந்தது?

****

4.கர்நாடக ஆளுப்பா வம்ச மன்னர்கள் !!!

இது முக்கியமான தடயம் ; ஆலவாய் என்ற பெயரே ஆளுப்பா என்று மருவியுள்ளது இவர்கள் பாண்டியா என்று தங்களை அழைத்துக்கொண்டு பாண்டியரின் மீன் சின்னத்துடன் காசுகளையும் வெளியிட்டனர். மேலும் தி, வி. பு மன்னர் பெயர்களையும் வைத்துக்கொண்டனர் (இது பற்றி தனி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிறேன்)

****

5.மூர்த்திநாயனார் மர்மம் !

மூர்த்தி நாயனார் என்ற வணிகரை, யானை மாலை போட்டு மன்னர் ஆக்கியதை நம்பியும் சேக்கிழாரும் பாடினார் ; அவர் சமணர்களின் எதிரி. சேக்கிழாரும் பாடியதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்டிருக்கிறார் அவர் பற்றிய குறிப்புகள் வரலாற்று ஏடுகளில் எங்கணுமே இல்லை . அவர் எப்போது ஆண்டார்?

இதே போல இலக்கியங்கள் புகழும் பொற்கைப் பாண்டியன் யார் ? பசும்பூண் பாண்டியனா?

6.அபிஷேக பாண்டியன்– நான்மாடக் கூடல் தொடர்பினை வைத்து அவனுக்கு கி பி நான்காம் நூற்றாண்டினைக் குறிக்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அதையும் தொடக்கமாக வைத்து முன்னும் பின்னும் காய்களை நகர்த்தலாம்.

7.மதுரைப் பேராலவாயார் புறநானூற்றின் 247, 262 பாடல்களை இயற்றியதால் ஆலவாய்ப் பெயரும் 2000 ஆண்டுப் பழமை உடைத்து!

அபிஷேக பாண்டியனும்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சிறு வயதிலேயே பட்டம் ஏற்றதையும் ஓப்பிடலாம் கரிகாலன்கள்  மூவர்  இருந்தது போல  வரகுணன் மூவர் இருந்திருக்கலாம்! கரிகாலன் மன்னன் காலத்தில் ராஜசேகர  பாண்டிய மன்னன்  ஆண்டதாக தி. வி. பு. கூறுகிறது! எந்தக் கரிகாலன் ?

****

மதுரை என்ற பெயரின் தோற்றம் மர்மமாக உள்ளது

கலித்தொகையில் திரு மருத முன்துறை வருகிறது; மருதம் ஊர் என்பதே மதுரை ஆனதாகவும்,  கிருஷ்ணனின்  வட மதுரைஊரை வைத்தே  மதுரை தோன்றியதாகவும் பலர்  செப்புவர் . 

பதினோராம்  திருமுறையிலும்  தி வி பு விலும்  சேரமான் பெருமாள் நாயனார், பாணபத்திரர், திரு ஆலவாயான் ஆகியோர் ஒரே காலத்தில் இருந்த குறிப்பு வருகிறது இவர் வேறு  திரு ஆலவாயான் ??

இவ்வாறு ஏராளமான புதிர்கள் வருகின்றன ; இந்தப்புதிரை விடுவிக்க தி.வி.பு. மகாநாட்டினைக் கூட்டி அறிஞர்கள் ஆராய வேண்டும் அப்போது புதிருக்கு விடைகாணலாம்

 *****

வேள்விக்குடி செப்பேடு

சூடாமணி / சூளாமணி என்ற பெயர்கள் தி.வி.பு.வில் நிறைய மன்னர் பெயர்களில் வருகிறது. அவை எல்லாம் பிற்காலப் பாண்டியர் பெயர்களில் வருவதை செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறுவதால் இவை எல்லாம் பரஞ்சோதி, நம்பி ஆகியோரின் கற்பனையில் உதி த்தவை அல்ல.

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் பாண்டியனை வர்மன் என்ற பட்டத்துடன் கூறுகிறது. இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் யூப தமபங்களும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் பூர்ண வர்மன் என்ற பெயருடன் கிடைத்துள்ளமான . இவை எல்லாம் தி .வி.பு ஸம்ஸ்க்ருதப் பெயர்களை உறுதி செய்கின்றன. பூர்ண வர்மன் நாலாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன்  .

–subham –

Tags — திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part two, last part

ஆலயம் அறிவோம்! சிந்த்பூரணி ஆலயம் (Post No.14,582)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 582

Date uploaded in London –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-6-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம் 

வழங்குவது பிரஹண்நாயகி சத்யநாராயணன் 

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

    நிறைந்த சுடர்மணிப் பூண்

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் – இவள்

    பார்வைக்கு நேர் பெருந்தீ

வஞ்சனை இன்றிபகை இன்றி,  சூதின்றி,

    வையக மாந்தர் எல்லாம்

தஞ்சம் என்றே உரைப்பீர் “சக்திஓம் சக்தி

    ஓம் சக்திஓம் சக்திஓம்!

                 – மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ள, 108 சக்தி பீடங்களில் ஒன்றான, சிந்த்பூரணி ஆலயம் ஆகும். மாதா ஜ்வாலாமுகியின் அம்சமே சிந்த்பூரணி தேவியாகும்.

இமயத்தின் மேற்குப் பகுதி வடக்கிலும், ஷிவாலிக் மலைத் தொடர் கிழக்கிலும், சூழ்ந்திருக்க இது பஞ்சாப் மாநிலத்தை எல்லையாகக் கொண்டு ஹிமாசல ப்ரதேசத்தில் அமைந்துள்ளது.

உனா  மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் டெல்லியிலிருந்து 420 கிலோமீட்டர் தூரத்திலும், ஜலந்தரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்திலும் சண்டிகரிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இங்கு எழுந்தருளியுள்ள துர்கா தேவியின் அம்சமான தேவியை சின்னமஸ்திகா தேவி என்று அனைவரும் அழக்கின்றனர். இந்த தேவிக்கு தலை கிடையாது. இப்படி தேவி எழுந்தருளியுள்ளதைப் பற்றிய மார்க்கண்டேய புராணம் கூறும் வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் தேவர்களை அசுரர்கள் மிகவும்  துன்புறுத்தினர். தேவர்கள் துர்க்கையை வேண்டவே, சண்டி தேவியாக அவதாரம் எடுத்து தேவி அசுரர்களை அழித்தாள்.. ஆக்ரோஷமான அந்த தேவி அசுரரை வதம் செய்த பின் தன்னுடன் இருந்த தனது காவல் தேவதைகளான யோகினிகள் ஜயா மற்றும் விஜயா ஆகியோரின் பசி தீராமல் இருக்கக் கண்டாள். அவர்களின் பசியைத் தீர்க்கத் தனது தலையை வெட்டி அதிலிருந்து வெளிவந்த ரத்தத்தை அவர்களுக்குக் கொடுத்தாள். தன்னை அண்டி இருப்போருக்குத் தன்னை அழித்தும் கூட அருள் புரியும் தேவி சின்னமஸ்திகா தேவி என்பது இதன் தாத்பரியம்.

இந்தத் தலத்தைப் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. 

தட்சன் செய்த யாகத்தில் தேவி பார்வதியின் உடல் வெட்டப்படவே, தேவியின் உடல் பாகங்கள் பாரதமெங்கும் விழுந்தன. அவை சக்தி பீடங்கள் என்று அறியப்படுகின்றன. அந்த பாகங்களில் தேவியின் பாதம் விழுந்த இடம் இது தான். இங்கு தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது. 

தேவியின் சிலை ஒரு உருண்டையான கல்லாகவே இங்கு  உள்ளது. ஆலயத்தின் பின்னால் ஒரு ஆலமரமும் உள்ளது.

இந்த ஆலயம் எழுந்ததைப் பற்றியும் ஒரு வரலாறு உள்ளது.

இதை நிறுவியவர் பண்டிட் மாய் தாஸ் என்பவர். இவர் ஒரு சரஸ்வத் பிராமணர். அவரது வமிசாவளியினரே இருபத்தியாறு வம்சங்களாக இங்கு பூஜை செய்து வருகின்றனர்.

ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்த அவர் ஆலமரம் ஒன்றின் அடியில் இருந்து இளைப்பாறி சற்றே கண்ணயர்ந்தார். அப்போது துர்க்கா தேவி அவரது கனவில் தோன்றி அந்த இடத்தில் தான் ஒரு கல்லாக தங்கி உள்ளதாகவும் அதை உரியபடி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருமாறும் கூறி அருளினாள். அவரும் ஒரு ஆலயத்தை எழுப்ப அங்கே உரிய முறையில் பூஜைகள் நடைபெறலாயின.

 ‘சின்னமஸ்திகா தாம்’ என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலின் எல்லா திசைகளிலும் சிவபிரானுக்குக் கோவில்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும், கிழகே காலேஸ்வர் மஹாதேவர் ஆலயமும், மேற்கே நாராயண மஹாதேவர் ஆலயமும், வடகே மச்சகந்த மஹாதேவர் ஆலயமும் தெற்கே சிவ்பாரி ஆலயமும் அமைந்துள்ளன,

 940 மீட்டர் உயரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. ஆலயத்தின் அருகே பண்டிட் மாய்தாஸின் சமாதியும் உள்ளது.

அனைத்து விதமான நலன்களைப் பெறவும் எதிரிகள் தொல்லை தீரவும் இந்த தேவியை வழிபட திரளாக பக்தர்கள். வருகை புரிகின்றனர். குளிர்காலத்தில் உஷ்ணநிலை பூஜ்யம் டிகிரிக்கு கீழாகச் செல்வதால் பக்தர்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இங்கு வருகின்றனர்.

 இங்கு நவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் நவராத்திரி காலத்தில் இங்கு திரளாகக் கூடுகின்றனர். 

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சின்னமஸ்திகா தேவி என அழைக்கப்படும் சிந்த்பூரணி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

உலக இயல்பு இது தானோ? (Post No.14,581)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,581

Date uploaded in London – –2 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதம்

உலக இயல்பு இது தானோ?

ச. நாகராஜன்

சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:

செல்வமும் வறுமையும் வரும் விதம் இது தான்!

கேஷாம்சின் நிஜவேஷ்மனி ஸ்திதவதாமாலஸ்யவஸ்யாத்மனாம்

   த்ருஷ்யந்தே பலிதா லதா இவ சிரம் ச்ம்பந்நஷாகா: ஸ்ரிய: |

அம்பித் லங்த்யயதாம் கனோ: கன்யதாம் க்ஷோணிதலம் க்ஷுந்தததாம்

 அன்யேதாம் வ்யவஸாயசாஹஸசதியாம்  தன்னாஸ்தி யத் பச்யதே ||

சிலருக்கு அவர்கள் வீட்டிலேயே ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தாலும் கூட,  கொடிகளில் தவழும் பழங்கள் போல செல்வம் ஏராளமாக வந்து அவர்களிடம் சேர்கிறது;

ஆனால் மற்ற சிலருக்கோ அவர்கள் கடல் கடந்து சென்று சுரங்கங்களைத் தோண்டி பூமி முழுதும் அலசினாலும் கூட, மிகுந்த உழைப்பை மேற்கொண்டாலும் கூட அன்றைய தினத்திற்கு சமைப்பதற்கான ஒரு பொருள் கூடக் கிடைப்பதில்லை.

*

இதயத்திலிருந்து வரும் இனிமையான வார்த்தைகள்!

கேஷாம்சித் வாசி சுகவத் பரேஷாம் ஹ்ருதி மூகவத் |

கஸ்யாப்யா ஹ்ருதயாத் வக்த்ரே வல்கு வல்கந்தி சூக்தய: ||

சிலருக்கு கிளிகள் போல இனிமையான வார்த்தைகள் அவர்கள் வாயில் தவழ்கின்றன; சிலருக்கோ ஊமைகளைப் போல அந்த வார்த்தைகள் அவர்கள் இதயத்திலேயே முடங்கி விடுகின்றன.

ஆனால் சிலருக்கோ நல்ல வார்த்தைகள் அவர்கள் இதயத்திலிருந்து நடனமாடிக் கிளம்பி அவர்கள் வாயை அடைகின்றன!

*

குலத்தையே அழிப்பவர்கள் யார்?

குவஸ்த்ரம் ஹரதே தேஜ: குபோஜ்யம் ஹரதே பலம் |

குபார்யா ஹரதே ப்ராணம் குபுத்ரே ஹரதே குலம் ||

அழுக்கான ஆடையானது ஒருவனது மதிப்பைக் குறைக்கிறது. ஊசிப் போன உணவு ஒருவனது பலத்தைக் குறைக்கிறது. கற்பில்லாத மனைவி ஒருவனது பிராணனை அழிக்கிறாள். நல்ல நடத்தையில்லாத மகன்கள் ஒருவனின் குலத்தையே அழிக்கின்றனர்.

மோதிரம் அணிக!

குஷம் ஸ்வர்ணம் சதா தார்ய பஹிர்மால்யம் ந தாரயேத் |

நாகந்தே பிம்ருயாத் புஷ்பம் நாத்மார்தம் கும்பயேத் ஸ்த்ரஜம் ||

ஒரு மனிதன் எப்போதும் குஸம் புல்லை (தர்ப்பை புல்லை) அணிய வேண்டும். அத்துடன் தங்க மோதிரத்தையும் அணிய வேண்டும்.

வெளிப்புறத்தில் மாலையை ஒருவர் அணியக் கூடாது. மணம் இல்லாத மலரை அணியக் கூடாது. ஒருவர் தான் சூடும் மாலையைத் தானே தொடுக்கக் கூடாது.

 கர்மபலன் வந்தே தீரும் 

கும்பம் நிர்மார்தி சக்ரேண கும்பகாரோ ம்ருதா புவி |

ததேவ கர்மசூத்ரேண பலம் தாதா ததார்தி ச || 

பூமியிலிருக்கும் களிமண்னைக் கொண்டு ஒரு குயவன் ஒரு பானையைச் செய்கிறான். அதே போல படைப்பவன் (விதி) ஒருவன் செய்த கர்மத்திற்குத் தக்கபடி பலனைக் கொடுக்கிறான்.

**

Pictures of 2500 Indian Stamps!- Part 50 (Post No.14,580)

Written by London Swaminathan

Post No. 14,580

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

PART 50 

Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

–subham—

Tags– Stamps posted today include YEAR 1997, YEAR 1998 STAMPS,

Pictures of 2500 Indian Stamps,PART 50,

MAHATMA GANDHI, COMMUNAL HARMONY, SOCIAL UPLIFTMENT, PEASANT’S WELFARE, PICKING SALT, MOTHER TERESA, NAHAR SINGH, PATTABI SITARAMAYYA, JEROME D SOUZA, JAGDISH CHANDRA JAIN, MAHARANA PRATAP,  JOHAR SINGH, A KHAN, RAM PRASAD BISMIL, GORKHA RIFLES, PORT BLAIR JAIL, ROTARY INTERNATIONAL, NEHRU WITH BABY, CHILDREN’S DAY, VALLABHAI  PATEL, SS HINDOSTHAN SHIP, RIVER MAIL SERVICE, REVERENCE FOR LIFE,  V S KHANDEKAR, HAZARI PRASAD DWIVEDI, NANAK SINGH, JAL COPER, POST OFFICE HERITAGE BUILDING, INDPEX STAAMPS, BHARAT PARYATAN DIWAS

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1 6 2025 (Post No.14,579)

Written by London Swaminathan

Post No. 14,579

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

டம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2. – நீரினால் மரணம்

3. – நாம் வசிக்கும் புனித நாடு.

4. – ராமன் கையிலுள்ள வில்

5. – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6. – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7. – தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர். வைஷ்ணவ ஜீயர் கையில் இருக்கும்.

9. – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

விடைகள்

1.வக்ரதுண்டம் – பிள்ளையாரின் வளைந்த துதிக்கை

2.ஜலகண்டம் – நீரினால் மரணம்

3.பரத கண்டம் – நாம் வசிக்கும் புனித நாடு.

4.கோதண்டம் – ராமன் கையிலுள்ள வில்

5.சுந்தரகாண்டம் – இந்த ராமாயணப் பகுதியை படித்தால் நிறைய செல்வம் கிடைக்கும் .

6.நவகண்டம் – போருக்குச் செல்லும்  முன்னால் தமிழர்கள், உடலை வெட்டி செய்யும் உயிர்த் தியாகம் .

7.மார்த்தாண்டம்- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வணிகத் தலமாகும். இதைத் ’தொடுவெட்டி’ என்ற பெயராலும் அழைப்பர்.

8.த்ரிதண்டம்  – முக்கோல் அந்தணர் என்று தொல்காப்பியம் கூறும் கம்பின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.

9.பிரம்மாண்டம் – பிரம்மாண்டம் – நம் முடைய பிரபஞ்சத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்.   

–SUBHAM—

TAGS- லண்டன், தமிழ், குறுக்கெழுத்துப் போட்டி,1 6 2025

நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post No.14,578) Part one

Goddess Meenakshi of Madurai Temple in Wedding pose.

Written by London Swaminathan

Post No. 14,578

Date uploaded in London –  1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நம்பியை  நம்பாதே ! தி, வி பு ஆராய்ச்சிக் கட்டுரை-8

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-8

வரலாற்றில் எவ்வளவோ புதிர்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் ஒன்று மாணிக்க வாசகர் பற்றிய அதிசயமான புதிர்; விடுகதை , மறைப்பு!

World famous Madurai Meenkashi Sundareswrar / Shiva Temple.

சைவ சமயக்குரவர்கள் படங்கள் எல்லாவற்றிலும் நால்வர் படத்தைக் காண்கிறோம். நால்வர்  என்பவர்கள் திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம், மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள்.

புதிர் என்ன?

பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகரை ஏனைய  மூவரும் ஏன் குறிப்பிடவில்லை ?  அது போகட்டும்; மாணிக்கவாசகர் அவர்களுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்து இருந்தால் , அவர் ஏன் மூன்று தேவாரப் பாடகர்களைக் குறிப்பிடவில்லை?  அட,அது போகட்டும் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் ஏன் இவரைப் பாடவில்லை ? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய அறிஞர்கள் அனைவரும் சப்பைக்கட்டு, நொண்டிச் சாக்குதான் கூறியுள்ளனர் . அவற்றைத் திரும்ப எழுதும் தேவையே இல்லை . ஆகையால் இதற்கு வரலாற்றுச் சான்றுகள் காண்பதே. முறை  

இந்தக் கேள்வி ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?  ஏனெனில் மாணிக்கவாசகருடைய  காலம் நமக்குத் தெரியவேண்டும் .

 ஒரு இந்தியவியல்INDOLOGIST வெளிநாட்டு அறிஞர் மிக அழகாக இதை வருணித்தார் ; இந்திய வரலாற்றில் எந்தக் காலத்தையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை . ஏனெனில் அது Jigsaw Puzzle   ஜிக் சா பசில் போன்றது; ஒரு  சதுரத்தை நகர்த்தினால் இன்னொரு சதுரம் நகருகிறது !

இப்போது கட்டுரையின் தலைப்புக்குச் செல்வோம் .

பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் முதலில் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து மொழிபெயர்த்து திருவிளையாடல் புராணத்தை எழுதினார் . அவருக்கு நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஞ்சோதி முனிவர், இன்னும் ஒரு திருவிளையாடல் புராணத்தை எழுதினார் இவை தவிர கடவுள் மாமுனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் , சிவ லீலாவர்ணம் என்ற சம்ஸ்க்ருத  திருவிளையாடல் புராணம் முதலியன உள்ளன . பரஞ்சோதி முனிவர் கால வரிசைப்படி நூலினை அமைத்தார் அதாவது மதுரை கூடல் –ஆலவாய் என்ற மூன்று பெயர்களில் புராணத்தை பாடல் வடிவில் எழுதினார் ஆனால் நம்பி மதுரையைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சரித்திரப்படி முதலில் இருந்தது மதுரை ; மூன்று சங்கங்களை உண்டாக்கி தெய்வத் தமிழை வளர்த்த புண்ய பூமி மா மதுரை ; இன்றுவரை அதற்குச் சான்றாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வானத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது; இதற்குப் பின்னர் நன் மாடக்கூடல், ஆலவாய் பெயர்கள் ஏற்பட்டன. இந்த வரிசையை பரஞ்சோதி கையாண்டுள்ளார் ஆனால் ம்பி, மதுரை என்ற நகரம் தோன்றியதை இடையே வைத்துள்ளார்.

இந்த வரிசை தவறு என்று மேம்போக்காகச்ச் சொல்லிவிடலாம் ஆயினும் நம்பியைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவி டமுடியாது ; காரணம் ?

அவர் எந்த மதுரையைக் கூறினார்? என்ற கேள்வியை அவர் தரப்பு வழக்கறிஞர் நீதி மன்றத்தில் எழுப்புவார். முதற் சங்க மதுரை, இரண்டாம் தமிழ்ச் சங்க மதுரை ஆகியவற்றைக் கடல் கொண்ட பின்னர் இப்போதுள்ள மதுரை தோற்றுவிக்கப்பட்டது . மகஸ்தனிஸ் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இண்டிகாவில் பாண்டேயா என்ற தென்னாட்டு மஹாராணியைக் குறிப்பிடுகிறார் அதாவது மீனாட்சி அம்மையாரின் புகழ் பீஹாரிலுள்ள பாட்னா வரை அப்போதே பரவியதால் இப்படி  எழுதியுள்ளார் அது எந்த மதுரை ? இதிலும் ஒரு புதிர் !  கி பி 75 CE  வாக்கில் மதுரை மாற்றப்பட்டதாக பிளினி PLINY  என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியுள்ளார் மதுரை எரியுண்டது பற்றிப் பேசும் சிலப்பதிகாரத்தின் காலம் கி பி 132 CE  என்று கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் குறிப்பால் அறிகிறோம் இது தற்கால மதுரையே! ஏனெனில் இன்றும் மதுரையில் கோவலன் பொட்டல் உள்ளது.

Goddess Meenakshi of Madurai Temple.

பரிபாடல் போன்ற சங்க நூல்கள்  மதுரை,  தாமரைப்பூ போல வீதிகள் அமைந்த ஊர்  என்று பாடுகிறது ; இன்றும் மதுரை அப்படியே உள்ளது; மீனாட்சி சுந்தரேச்வரர் கோவில் நடு நாயகமாகத் திகழ ஆடி, ஆவணி, சித்திரை மாசி வீதிகள் சதுரத்துக்குள்  சதுரமாக அமைய, பின்னர் வெளி வீதியும் வைகை ஆறும் உள்ளன.

கல்லாடம் போன்ற நூல்கள் 64 திருவிளையாடல் என்று சொல்லிவிட்டு 32  திருவிளையாடல்களை — அதாவது சிவ பெருமான் நடத்திய அற்புத லீலைகளைப் பட்டியல் இடுகிறது. சில லீலைகளை சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது

நம்பி என்ன தப்பு செய்தார் ?

தொடரும்…………………… to be continued

Tags- திருவிளையாடல் புராணம் , ஆராய்ச்சிக் கட்டுரை-8,நம்பியை  நம்பாதே, Part One

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! (Post No.14,577)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,577

Date uploaded in London – –1 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

கல்கி வார இதழும் மூதறிஞர் ராஜாஜி அவர்களும்! 

ச. நாகராஜன்        

தேசீயப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், தமிழிசை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான பேராசிரியர் கல்கி (பிறப்பு:9-9-1899 மறைவு 5-12-1954)  மாயவரம் அருகே உள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ராமசாமி ஐயர் – தையல்நாயகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

1924ல் ருக்மிணி என்பவரை மணந்தார். ஒரு புதல்வர் – ராஜேந்திரன். ஒரு புதல்வி – ஆனந்தி. இருவரும் தந்தை வழியில் மிளிர்ந்த எழுத்தாளர்களே.

 கல்கி மாணவப் பருவத்தில் முதன் முதலாக ராஜாஜியைச் (தோற்றம் 10-12-1878 மறைவு 25-12-1972) சந்தித்தார். அவரிடம் ஏற்பட்ட ஈர்ப்பால் அவரைப் பற்றி நிறைய விசாரித்து அவரை நன்கு அறிந்து கொண்டார்..

 பின்னால் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு வருட சிறை வாசத்தில் பெற்ற அனுபவம், திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜியின் சேவை ஆகியவற்றைப் பார்த்து அவருடைய சிஷ்யராகவே ஆனார். இந்த அபூர்வமான பந்தத்தை அவர் பூர்வஜன்ம பந்தம் என்று பின்னால் எடுத்துரைத்தார்.

 திருச்செங்கோடு ஆசிரமத்தில் ராஜாஜி ஆரம்பித்த விமோசனம் பத்திரிகையின் பொறுப்பை ஏற்றார் கல்கி. பின்னர் 1923ல் நவசக்தி இதழில் பணியாற்றினார். அதன் பின்னர் 1931ல் திரு எஸ்.எஸ்.வாசன் நடத்திய ஆனந்தவிகடனில் துணை ஆசிரியர் பதவியை வகித்தார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரம் காட்டினார் கல்கி. அரசை எதிர்க்கும் இந்த இயக்கம் திரு வாசனுக்கு சங்கடத்தைத் தந்தது.

 விகடனிலிருந்து வெளியேறிய கல்கி திரு, சதாசிவம் உதவியுடன் கல்கி பத்திரிகையை 1941ல் ஆரம்பித்தார். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அரசியல் கட்டுரைகள் உள்ளிட்டவை பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தன.

 கல்கி வார இதழ் ராஜாஜியின் முழு ஆசீர்வாதத்தைப் பெற்றது.

டி.கே.சி. அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, பி.ஶ்ரீ., நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் தங்கள் படைப்புகளை கல்கிக்கு அனுப்ப அது மக்கள் ஆதரவை வெகுவாகப் பெற்றது.

 ராஜாஜி தனது அரசியல் கருத்துக்களையும், சமூகம் மேம்படுவதற்கான கருத்துக்களையும், ஆன்மீக இதிஹாஸ பொக்கிஷங்களையும், உயரிய ஆன்மீகக் கருத்துக்களையும் கல்கி இதழின் வாயிலாகத் தெரிவித்து வந்தார்.

 சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து போன்ற காலத்தை வென்ற ராஜாஜியின் படைப்புகள் கல்கி வார இதழில் தொடராக வந்தன.

ஆயிரமாயிரம் பேர் அதைப் படித்து ஊக்கம் பெற்றனர்.

 ராஜாஜியின் மறைவுக்குப் பின்னரும் அவரது கருத்துக்களும், சிறப்பான சிந்தனைகளும் தொடர்ந்து கல்கி இதழில் வெளியாகிக் கொண்டே இருந்தன.

 ராஜாஜி வாழ்க்கை வரலாறு கல்கியில் தொடராக வெளி வந்தது. ஶ்ரீமதி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ‘சில நினைவுகள்’ என்ற தலைப்பில் சுவையான தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

 கல்கியில் அவ்வப்பொழுது பல்வேறு தலைப்புகளில் வெளி வந்த. அவரது சிந்தனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை.

அவற்றில் சில கருத்துக்கள்:

 ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சொற்பொழிவில் அவர் கூறியது:

இளைஞர்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகமாகக் காண முடியாத வீரம், விடாமுயற்சி ஆகியவற்றைப் படித்து ஊட்டம் பெற வேண்டும்.

 திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் என்ற கட்டுரை வசந்தம் இதழில் பிரசுரமானது. 35ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது கல்கி அதை மீண்டும் பிரசுரம் செய்தது.

“மனனக மலமற மலர்மிசை

எழுதரு மனனுயர் வளவிலன்” என்று ஆழ்வார் ஆரம்பத்தில் பாடும் போது “மலர்மிசை ஏகினான்” என்று வள்ளுவனார் பாடியது நினைவுக்கு வருகிறது.

 நவசக்தியில் வெளியான கவிதை ஒன்றை கல்கி மீண்டும் பிரசுரம் செய்தது:

மதுவைத் தருவது பாவம் என்ற கருத்தை அழகுமல்ல புகழுமல்ல என்ற கவிதையாக தமிழக அரசுக்குத் தருகிறார் ராஜாஜி.

அந்தக் கவிதையின் கடைசி வரிகள்:

 “கவலைக்கு மருந்திது பயமின்றி

அருந்தென்று தருவது பாபமாச்சே

நண்பனாகச் சொல்லுகிறேன்

நல்லதுக்குச் சொல்லுகிறேன்

பாபத்தைச் செய்யாதே!”

 ராமகிருஷ்ண உபநிஷதத்தை அழகுறத் தமிழில் அளித்தார் ராஜாஜி.

அதிலிருந்து கல்கியில் பிரசுரமான ஒரு உபதேசம் இது:

 கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பையன் கிறுகிறுவென்று சுழன்று சுற்றுகிறான். எத்தனை வேகமாகச் சுழன்றாலும் கம்பத்தைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு சுழல்கிறான்.

அதைப் போல் பகவானைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு உலக வாழ்க்கையில் சுழலுங்கள்

 மீ.ப. சோமு அவர்கள் எழுதிய ரவிசந்திரிகை நூலுக்கு முன்னுரையில் ராஜாஜி அவர்கள் குறிப்பிட்டது:

“தொடர்கதைகளை எனக்கு இப்போது படிக்க முடிகிறதில்லை. நான் ‘ரவிசந்திரிகை’யைப் படிக்கவில்லை. ஏன் படிக்க வேண்டும்? எழுதிய ஆசிரியரைப் (சோமு) படித்து விட்டேன். அவருக்கும் நூலுக்கும்  என் ஆசிகள் – சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

 கடைசியில் கல்கி இதழில் வெளியான” ராஜாஜி வாழ்க்கை வரலாறு” தொடரில் தன் தாயார் சிங்காரம்மாவிடம் அவர் கற்றுக் கொண்ட ஒரு பாடத்தைப் பற்றிச் சொன்னதைப் பார்க்கலாம்:

 “தாயார் சிங்காரம்மா அவனுக்குக் கூறிய கதைகள் வேடிக்கையாகவும் இருந்தன; போதனைகளாகவும் அமைந்தன…. அவற்றில் ஒன்று ….

எதன் மீது ஏற வேண்டுமோ அத்துடன் ஒட்டினாற் போல் ஏணியை வைக்கக் கூடாது.’ஸ்திரமான ஒரு கோணத்தில் வைக்க வேண்டும்.”

 தாயாரின் கூற்று படி, ஸ்திரமான ஒரு கோணத்தில் தனக்கென்று அமைத்துக் கொண்ட பாணியில்  ஏணியை வைத்து உயரத்தில் ஏறி அதில் மற்றவரையும் ஏற வைத்த மூதறிஞர் ராஜாஜியையும் மறக்க முடியாது; அவரது போதனைகளை இடைவிடாமல் வழங்கி வந்த வழங்கி வரும் கல்கி வார இதழையும் மறக்க முடியாது; கல்கியை நிறுவிய மாபெரும் மனிதரான கல்கியையும் மறக்க முடியாது! 

என்ன சரிதானே! நண்பர்களே!!

***

லண்டன் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி3152025 ( Post No.14,576)

Written by London Swaminathan

Post No. 14,576

Date uploaded in London –  31 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ரம்”– என்று முடியும் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்

1. –பெண்களுக்கு மிகவும் பிடித்தது;

2. –,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்;

 3. — ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4. அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; ,

 5. — முத்து மாலை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்;

 6. தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்;

7. –அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு;

8. ஷேவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கி ருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும்  

31-5-2025

1    2    3
           
           
           
           
8    ம்    4
           
           
           
           
7    6    5

31-5-2025

1    2    3ரா
       மே 
  ங்  ம்  ஸ்  
   கா பா    
        
8டிகாம்காங்4
        
   து தா ஹா   
    ந்    
 தி   கா   க் 
7    6    மு5

விடைகள்

1.அலங்காரம் 2.அம்பாரம், 3.ராமேஸ்வரம், 4.சங்காரம்5.முக்தஹாரம்6.கா ந் தாரம், 7.அதிமதுரம் 8.படிகாரம்

1.அலங்காரம் –பெண்களுக்கு மிகவும் பிடித்தது; 2.அம்பாரம்–,குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்; 3.ராமேஸ்வரம்– ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தலம்; , 4.சங்காரம்– அளித்தால் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; , 5.முக்தஹாரம்– முத்து மாலைஎன்ற ஸம்ஸ்க்ருதச் சொல்; , 6.கா ந் தாரம்– தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளது  திருதராஷ்டிரனின் மனைவியின் தேசம்; , 7.அதிமதுரம்–அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு; 8.படிகாரம்–  ஷேவ் ஹீவிங் முடிந்தவுடன் ஆண்கள் முகத்தில் தடவிக் கொள்வார்கள் ;கிருமிகளைக் கொல்லும்; ரத்தக் கசிவைத் தடுக்கும் .

—subham—

Tags- லண்டன், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி,3152025