மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை! (Post No.6101)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 21 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 6-22 am


Post No. 6101

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 15-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு ஐம்பதாம் கட்டுரை – அத்தியாயம் 414

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽நமது மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!

ச.நாகராஜன்

கம்ப்யூட்டர் கையால் இயக்கப்படும் நிலை மாறி மூளையுடன் இணைக்கப்படும் கருவி பற்றிய அதிசயத்தை நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாளைய நமது வாழ்க்கை நமது மூளையுடன் இணைகப்பட்ட கம்ப்யூட்டர் சாதனங்களுடன் தான்!

இன்று லட்சக்கணக்கானோர் ஆப்பிள் வாட்சைக் கையில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

அது நமது இதயத் துடிப்பைச் சரியாகச் சொல்கிறது; நாம் எடுத்து வைக்கும் ஸ்டெப்ஸ் (நடக்கும் போது எடுத்து வைக்கும் அடிகள்) மொத்தம் எத்தனை, அந்த ஸ்டெப்ஸ் எத்தனை நிமிடங்களில் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அன்றாடம் நம் உடலிலிருந்து செலவழிக்கப்படுக் கலோரிகள் எவ்வளவு என்பதையும் தினமும் இரவில் எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் அதில் டீப் ஸ்லீப் – ஆழ்ந்த உறக்கம் எத்தனை மணி நேரம் – சாதாரண உறக்கம் எத்தனை மணி நேரம் – எத்தனை முறை நடுவில் எழுந்திருக்கிறோம், அது எத்தனை நிமிடம் என்பதையும்  சரியாகச் சொல்கிறது. இந்த ஆப்பிள் வாட்சை நமது மொபைலுடன் ‘சிங்க்’ செய்யும் போது- இணைக்கும் போது -மொபைலில் அனைத்து விவரங்களையும் பார்க்க முடிகிறது!

லட்சக் கணக்கானோர் இன்று அன்றாடம் பார்த்துப் பயனடையும் நடைமுறை என்றாகி விட்டது, இது!

அடுத்து என்ன? பி.சி.ஐ – ப்ரெய்ன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் (Brain Computer Interface)- சாதனங்கள் மனித உடலின் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்படப் போவது தான்! இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் இந்தச் சொற்றொடரில் உள்ள கம்ப்யூட்டருக்கும் உடலுக்கும் தொடர்பு கிடையாது; அதோடு இந்த சாதனம் நேரடியாக மூளையுடன் இணைக்கப்படப்போவதும் இல்லை. ஆனால் பெயர் மட்டும் பி.சி.ஐ!

      நமது நரம்பு மண்டலம் இதர உடல் பகுதிகளால் வெளி உலகுடன் இணைக்கப்படுகிறது.நமது ஆணையின் படி தசைகள் சுருங்குகின்றன, விரிகின்றன, இயங்குகின்றன. உடல் அங்கங்கள் வெளியில் செய்யப்படவிருக்கும் வேலைகளை நாம் சொன்னபடி செய்கின்றன.

கண்கள் பார்க்கின்றன; காதுகள் கேட்கின்றன; உடல் இயங்குகிறது. வெளி உலகத்திலிருந்து வரும் சிக்னல்களைப் பெற்று அதற்கேற்ப உடல் இயங்குகிறது. எதிர்த்தாற்போல் கார் வருகிறது,ஒதுங்கிப் போ உள்ளிட்ட குறைந்த பட்சம் நாற்பது உயிர் காக்கும் முடிவுகளை சிறிது தூரம் செல்வதற்குள் நாம் எடுக்கிறோம் – நாம் அறியாமலேயே!

வெளி உலகத்திலிருந்து செய்திகளை அல்லது விசைகளை இன்னொரு விதமாகவும் அறிகிறோம். எடுத்துக்காட்டாக ரொபாட் மூலம் என்று சொல்லலாம். எளிய உதாரணம் தெர்மாமீட்டர். வெளி உலக உஷ்ணநிலையைச் சொல்கிறது. உடல் உஷ்ணத்தையும் தெரிவிக்கிறது!

    ஆக நரம்பு மண்டலத்திலிருந்து எப்படி தகவல்களைப் பெறலாம் அந்தத் தகவல்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை அறிந்து விட்டால் இனி நமக்கு உடலே தேவை இல்லை!

இந்த விஷயம், நமது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன ஜாலங்கள் செய்யப் போகிறது?

அது தான் சுவையான செய்தி!!

நமது உடலில் காயத்தாலோ அல்லது வியாதியினாலோ ஒரு அங்கம் பழுதுபட்டு விட்டது, இயங்க மாட்டேன் என்கிறது. கவலையை விட்டு விடலாம், இருக்கவே இருக்கிறது பி.சி.ஐ.

முதுகு தண்டுவடத்தில் ஒரு பிரச்சினை. அதனால் உணர்வே இல்லாமல் போய் விடுகிறது. உடலை இயக்கவே முடியவில்லை. என்ன செய்வது?

விபத்து ஒன்றில் மூளையில் காயம். உடலால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பக்கவாதம் வந்து விட்டது; டயபடீஸ் விபரீதம்- காலை துண்டிக்க வேண்டுமென்கிறார் டாக்டர்.

ஜுரத்திலிருந்து கான்சர் வரை, அதிக ஓசையினால் காது கேட்கவில்லை என்பதிலிருந்து நகர முடியவில்லை என்பது வரை ஒவ்வொருவருக்கும் ஒரு மெடிகல் பிரச்சினை!

பி.சி.ஐ.கருவிகள் உடலுடன் இணைக்கப்பட்டால் பார்வை தெரியும்; உடல் அங்கங்கள் இயங்கும்.உடல் இயக்கம் ‘லாக்’ செய்யப்பட்டவர்கள் மற்றவர்களுடன் இப்போது தொடர்பு கொள்ள முடியாது தவிப்பது போலல்லாமல் தான் சொல்ல வேண்டியதை மற்றவர்களிடம் சொல்லலாம்; தேவையானதைப் பெறலாம்.

         இந்த பி.சி.ஐ.சாதனங்கள் இப்போது உடலில் பதிக்கப்படுகின்றன (Implant).ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் இதை உடம்புடன் தொட்டால் போதும் (இப்போது ஆப்பிள் வாட்சை கையில் கட்டிக் கொள்வது போல) என்ற நிலையும் வந்து விடும்.

அப்போது உடல் குறைகளை இயல்பாக உடையவர்களும் திடீரென ஏற்பட்ட விபத்துக்களினால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோரும் ஒருவித கஷ்டமும் இன்றித் தங்கள் வாழ்க்கையை எப்போதும் போலத் தொடர முடியும்.

        இரண்டு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, இப்படிப்பட்ட சாதனங்களின் அதீத விலை! இன்னொன்று நிச்சயமாக இவை இயற்கையான உடல் உறுப்புகள் போல அச்சு அசலாக இருக்காது.

ஆனாலும் என்ன, பெரிய பாதிப்பிற்கு சரியான நிவாரணமாக இது அமைகிறதே!

ஆக எதிர்கால உலகில் ஆளுக்கு ஒரு பி.சி.ஐ இணைப்புடன் இருப்போமோ, என்னவோ!

நமது உடலின் நரம்பு மண்டலத்திற்கும் வெளி உலகத்திற்கும் தொடர்பைத் தரும் பி.சி.ஐ – மூளை கணினி தொடர்பு சாதனத்தை வரவேற்கத் தயாராக இருப்போம்.

மாறிக் கொண்டே இருக்கும் உலகில் மாறாதது மாற்றம் ஒன்று தான்! மாற்றத்தை வரவேற்போம்!

அறிவியல் அறிவில் வாழ்வில் .. ..

உலகின் பிரபலமான மூளை இயல் கேஸ் இது:

1935ஆம் ஆண்டு, குஸ்டாவ் மொலைஸன் (Henry Gustav Molaison) என்னும் பையன் ஒரு நாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் மோதி விழுந்து விட்டான். ஐந்து நிமிடம்  உணர்ச்சியற்று இருந்தான். அவனுக்கு பத்து வயதான போது வலிப்பு வர ஆரம்பித்தது. இது தொடரவே 1953ஆம் ஆண்டில் அவனது 27ஆம் வயதில் மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் நிச்சயித்தார்.

மூளை அறுவையைச் செய்தவர் பிரபல டாக்டர் வில்லியம் பீச்சர் ஸ்காவில்லி Dr.William Beecher Scoville).

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. வலிப்பும் நின்றது.ஆனால் மொலைஸனுக்கு புதிய பிரச்சினை ஒன்று வந்தது. பேசிக்கொண்டே இருக்கும் போது புதிய விஷயம் பற்றிப் பேசினால் அதுவரை பேசி வந்த விஷயம் மொலைஸனுக்கு மறந்து போனது.

அவருக்கு பழைய விஷயங்கள் ஞாபகத்தில் இருந்தாலும் புதிய விஷயம் எதுவும் மூளையில் ஏறவில்லை; நிற்கவில்லை.

2008ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அவர் இறந்தார். அவரது மூளை எடுக்கப்பட்டு  2401 துண்டுகளாக ஆக்கப்பட்டு அந்தத் துண்டுகளை முப்பரிமாணப் படங்களாக எடுத்தனர்;ஆராய்ந்தனர்.

அதிலிருந்து ஒரு பெரிய விஷயத்தை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டனர். மூளை இரண்டு விதமான நினைவுகளைக் கொண்டுள்ளது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒன்று பெயர்கள், தேதிகள் பற்றியது. இன்னொன்று  சைக்கிளை ஓட்டிக் கொண்டே போவது போன்ற தானியங்கிச் செயல்கள்!    

       அடுத்து  செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படும் மூளை மேலுறையின் பாகங்கள் எல்லா நினைவுகளையும் சமமாகப் பாதுகாக்கிறது என்ற விஞ்ஞானிகளின் இதுவரை கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது தெரிய வந்தது.

     மொலைஸனின் மூளைத் துண்டுகளில் மேற்கொண்ட ஆய்வில், உடனடியாக அப்போது தான் தெரிய வரும் ஒரு விஷயத்தைப் பற்றிய நினைவுக்குக் காரணம்  ஹிப்போகாம்பஸும் (மூளைப் பின்மேடு), அமிக்தலாவும் (அச்சம் மகிழ்ச்சி ஆகியவற்றை உணர்த்தும் வாதுமை வடிவ மூளைப் பகுதி) தான் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதைத் தெரிந்து கொண்டதிலிருந்து இப்போது மூளையின் ஒரு பக்கத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மூளை இயல் டாக்டர்கள் மேற்கொள்கின்றனர்.

     மொலைஸனுக்கு மூளையின் இரண்டு பக்கமும் நடந்த அறுவையினால் பாவம், அவரால் புது விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரது மூளை பற்றிய ஆய்வு உலகில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது!

கெட்டதிலும் ஒரு நல்லது விளைந்தது!

****

OLDEST SATYAGRAHA IN THE WORLD (Post No.6100)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-28


Post No. 6100

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தோபா சுவாமிகள் செய்த அற்புதங்கள் (Post No.6099)

Compiled by london swaminathan

W

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-50 am


Post No. 6099

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்! POST6098

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 20 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 5-24 am


Post No. 6098

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1922019 (Post No.6097)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 19 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 20-42


Post No. 6097

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. – பசு,பதி,பாசம் முதலியன பற்றிப் பேசும் சைவப் பிரிவு

5. இந்தியாவில் பெரிய மரம்;ஒரு படையே அதன் கீழ் தங்கலாம்

7. 8. – திருமண விருந்து

9. – பெண்

10. -வாசனை

11. – அவன் அண்ணன்;இவன் அவன்………………………

13. -அடி,பாதம்;குறளில் கடவுளின்கால்

கீழே

1 – சிவன் கோவில்களில் பின்பற்றப்படும் பூஜா விதிகளைக் கூறும் நூல்

2. – கேரளத்தில் பிறந்தவர்; சந்யாஸி பெரிய மிஷனை உண்டாக்கியவர்; கீதைச் சொற்பொழிவு நிகழ்த்தியவர்

3. – கொடை

4. – அ,ஆ, இ, ஈ கற்பித்தல்

6. போரில் ஏற்படும் காயங்கள்

8. -மரத்தின் கிளை; வேதத்தின் கிளை

11. வயதானால் இதுதான் மூன்றாவது கால்

12. (கீழிருந்து மேல்)- மதுரையில் சிவ பெருமான் வந்தி என்னும் கிழவியிடம் பெற்றகூலி

answers

Comparison between Babylonian and Indian Inscriptions (Post No.6096)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 19 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 17-57


Post No. 6096

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இனி 2 மயில் மட்டுமே சமைக்கலாம்- அசோகன் உத்தரவு (Post No.6095)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 19 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 15-33


Post No. 6095

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் (Post No.6094)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 19 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-41 am


Post No. 6094

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா  8-2-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஒன்பதாம்) கட்டுரை – அத்தியாயம் 413paaபா

 வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள் தயார், தயார்!

ச.நாகராஜன்

உலகின் அதிரடி மாற்றங்களைக் கண்டுபிடித்து வணிக நிறுவனங்கள் அவற்றை அறிமுகப்படுத்தும்  வருடாந்திர திருவிழாவான சி.இ.எஸ் (Consumer Electronics Show) அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கோலாகலமாக நடந்து முடிந்தது. 4500 நிறுவனங்கள் இதில் பங்கு பெற்றன.250 மாநாடுகள் நடந்தன. 150 நாடுகளிலிருந்து 180,000 பேர் இதைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். எல்லாம் பிஸினஸ் தான்! 25 லட்சம் சதுர அடியில் 24 விதமான நுகர்வோர் தயாரிப்புகள் இடம் பெற்றன.

இவற்றில் உலகையே மாற்றப் போகும் அதிரடி கண்டுபிடிப்புகளில்  பெரிய  ட்ரோன்கள், பெரிய டி. வி. பெட்டிகள், உள்ளிட்ட கண்டு பிடிப்புகளைப் பார்த்தவர்கள் மலைத்து நின்று விட்டனர். ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு எங்கும் கொடி கட்டிப் பறக்கிறது. அமேஸான், கூகிள் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் தொழில்நுட்பத் தலைமை இடத்தைப் பிடிக்கப் போட்டி போடுகின்றன.

தலையாய கண்டுபிடிப்புகள் சிலவற்றை இங்கு பார்ப்போம் :

தானாகவே வரும் சூட்கேஸ்!

ரயில் நிலையத்திலோ அல்லது ஏர்போர்ட்டிலோ எதற்காக சூட்கேஸ்களை தள்ளிக் கொண்டு போக வேண்டும்? அது தானாகவே இனி நம்முடன் நகர்ந்து வரும்! ஓவிஸ் (Ovis) என்ற சீனக் கம்பெனி ஒன்று முகத்தை அறிந்து கொள்ளும் காமரா பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இயக்கத்திற்கான அலாக்ரிதத்தையும் தன்னுள் கொண்டு உங்களோடு அழகாக நடந்து வரும் சூட்கேஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது! ஜனக் கூட்டத்தில் யாருடனும் அது மோதாது. உங்களிடமிருந்து அது ஆறு அடிக்கு மேல் தள்ளிச் சென்றால் உங்கள் கையில் மாட்டப்பட்டிருக்கும் ரிஸ்ட் பேண்ட் அதிர்ந்தவாறே உங்களுக்கு அதை உணர்த்தும். அத்துடன் ஒரு ஜிபிஎஸ் வேறு! ஆகவே சூட் கேஸ் எங்கிருக்கிறது என்பதை ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கண்காணிக்கலாம். சரி, விலை?  799/ டாலர் தான்! அதாவது சுமார் 56000 ரூபாய்கள்!

ரத்தம் எடுக்காமல் ப்ளட் ஷுகர் அளவைச் சொல்லும் ஏர்பெடிக்!

டயபடீஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. அடிக்கடி கைகளைக் குத்தி ரத்தம் எடுத்து ப்ளட் ஷுகர் அளவைப் பார்க்க வேண்டாம். சான் டியாகோ கம்பெனியான ஏர்னஸ் என்ற கம்பெனி ஏர்பெடிக் என்ற கங்கணம் ஒன்றைத் தயாரித்துள்ளது. உங்கள்  மூச்சுக் காற்றை வைத்தே அது ரத்தத்தின் ஷுகர் அளவைச் சொல்லி விடும். அது உங்களுக்கு மட்டும் இந்த அளவை அனுப்பாது; உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் கூட அனுப்பி விடும்! அதன் சென்ஸர்கள் மிகவும் நுட்பமானவை. செயற்கை அறிவின் சிகரம் இது – டயபடீஸ் நோயாளிகளுக்கு வரபிரசாதம்.

பறக்கும் கார்!

யாரால் இந்த டிராபிக் ஜாமை சகித்துக் கொள்ள முடியும்? காரில் ஊர்ந்து சென்று ஒரு இடத்திற்கு போவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது, இல்லையா! கவலையை விடுங்கள்.பிரபல கம்பெனியான ஊபர் தரையில் போகும் டாக்ஸியிலிருந்து சற்று உயர் மட்டத்திற்கு உயர்ந்து விட்டது; ஆமாம், அது பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தப் போகிறது. அதனுடன்  கூட்டு சேர்ந்துள்ள பெல் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்ஸியில் பைலட் மற்றும் நான்கு பயணிகள் போகலாம். மணிக்கு 150 மைல் வேகத்துடன் இது பறக்கும். இதன் எல்லை 150 மைல் பரப்பளவு தான்! 2020இல் உலகின் எல்லா பெரிய நகரங்களிலும் இது பறக்கும்.

டிராபிக் ஜாமிலிருந்து விடுதலை தான், இனி!

மாயக் கண்ணாடி!

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்து அலுத்துப் போய் விட்டதா! சேவி ஸ்மார்ட் மிர்ரர் (Savvy Smart Mirror) என்னும் மாயக் கண்ணாடி இதோ தயார்! இது தொடு திரை ஒன்றைக் கொண்டிருக்கும். பருவ நிலை பற்றி உடனுக்குடன் கூறும்; அவ்வப்பொழுது சுடச்சுட நாட்டு நடப்பு செய்திகளைத் தரும். இன்ஸ்டாகிராமுடன் கூட இதை இணைத்துக் கொள்ளலாம். எந்த வித ஆப்ஸையும் இதனுடன் இணக்க முடியும். வாஷிங்டனில் உள்ள எலக்ட்ரிக் மிர்ரர் என்ற கம்பெனி தயாரிக்கும் இதன் விலை 2500 டாலர்.(அதாவது சுமார் 1,75,000 ரூபாய்கள்!)

ஆலோசனை தரும் லு-மினி !

லுலுலாப் (Lulu Lab)என்று தென்கொரியக் கம்பெனி ஒன்று தயாரித்து அளிக்கும் பரிசு லு மினி(Lu Mini)! இந்த லு-மினியைக் கையில் பிடித்துக் கொள்ளலாம். 7 விநாடிகளில் உங்கள் முகத்தை அதனுடைய மல்டி – ஸ்பெக்ட்ரல் கேமராவினால் ஸ்கேன் செய்து பருக்கள், சொரசொரப்பு, குழிகள் போன்ற ஆறு விதக் கோளாறுகளைக் கண்டு பிடித்து உங்களுக்கு ரிபோர்ட் தந்து விடும். அவற்றைப் போக்க ஆலோசனைகளையும் தந்து விடும். இந்த வருடமே சந்தைக்குள் புகுவதற்கு இது தயார்.

இன்னும் சமையலறைக்குள்ளும் புகுந்து விட்டன பல நிறுவனங்கள்!சுவையான ப்ரெட் தயாரிக்கும் சாதனம், பர்கர் தயாரிக்கும் சாதனம் என்று பல சாதனங்களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்துகின்றன பல உலக நிறுவனங்கள்!

இப்படி நூற்றுக் கணக்கான தயாரிப்புகள் தொழில்நுட்ப மேன்மையுடன் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைத்திருப்பதைப் பார்த்தவர்கள் பிரமிக்கிறார்கள்! நாளுக்கு நாள் உலகம் மாறி வருகிறது என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்திலேயே கட்டியம் கூறும் கோலாகலத் திருவிழா லாஸ்வேகாஸில் முடிந்தது; லாஸ் வேகாஸை Sin City என்று சொல்வது வழக்கம்; ஆனால் இந்த திருவிழாவைக் கண்டவர்கள் இதை சூப்பர் – டெக் சிடி (Super-Tech City) என்கின்றனர்!

அடுத்த மூன்று வருடங்களுக்கான தேதிகள் கூட இப்போதே அறிவிக்கப்பட்டு விட்டது. 2020 – ஜனவரி – 9 முதல் 12 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய) 

2021 – ஜனவரி – 7 முதல் 10 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய) 

2022 – ஜனவரி 6 முதல் 9 முடிய (வியாழன் முதல் ஞாயிறு முடிய) 

நாளைய உலகைக் காண விரும்புவோர் கிளம்ப ஆயத்தமாகலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

பிரான்ஸை சேர்ந்த டாக்டர் ரெனே தியோபில் ஹியாசிந்தே லானெக் (Rene Theophile Hyacinthe Laennec 1781-1826)என்பவர் தான் ஸ்டெதெஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். அவர் இதைக் கண்டுபிடித்த சம்பவம் சுவையான ஒன்று. 

அவர் பாரிஸில் நெச்சர் – என்ஃபண்ட்ஸ் மலாடெஸ் மருத்துவ மனையில் (Necher-Enfants Malades Hospital)பணியாற்றி வந்தார். 1816ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு இள மங்கை அவரிடம் சிகிச்சைக்காக வந்தாள். அவளது இதயத்துடிப்பைச் சரி பார்க்க வேண்டி இருந்தது. அதற்கு அந்தக் கால வழக்கம் – கை விரல்களால் மார்பைத் தட்டிப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஆனால் ரெனே தியோபிலுக்கு அந்த இள மங்கையின் மார்பை, இப்படி விரலால் தட்டிப் பார்ப்பது நாகரிகமான ஒன்று இல்லை என்று தோன்றியது. ஆகவே ஒரு பேப்பரை சுருளாக மடித்து அவள் மார்பின் மீது வைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். அவரே ஆச்சரியப்படும் படி இந்த முறையால் அனைத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனடியாக ஸ்டெதெஸ்கோப்பைத் தயாரித்தார்; வெற்றியும் பெற்றார்.

இது தான் ஸ்டெதெஸ்கோப் உருவான கதை!

***

பாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக் கல்வெட்டுகளும் (Post No.6093)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 18 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 18-06


Post No. 6093
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

STORY OF TAMIL DEVADASIS – Part 5 (Post No.6092)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 18 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 10-48 am


Post No. 6093

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))