பயங்கரவாதிகள் பற்றி வள்ளுவன், சேக்கிழார் (Post No.5771)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 12 December 2018


GMT Time uploaded in London – 10-53 am

Post No. 5771


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தற்காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் நேரடியாகத் தாக்கினால் ‘வீரர்கள்’ என்று புகழ்வோர் சிலர். ஆனால் பொய் வேடம் கொண்டு நண்பன் போல, சீடன் போல நடித்துக் கொன்றால் அத்தகையவரை கோழை என்று உலகமே இகழும். நமது காலத்திலேயே காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த பெண் வணங்குவது போல வணங்கி வெடிகுண்டு வைத்து இருபதுக்கும் மேலானவர்களைப் படுகொலை செய்த வன் செயலை உலகமே கண்டித்தது. 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஜூலியஸ் ஸீஸரைக் கொல்ல வந்த நண்பன் ப்ரூட்ட,,,, ஸைப் பார்த்து ‘யூ டூ ப்ரூட்டஸ்’  (et tu Brute? You too Brutus?) என்று சீஸர் சொன்ன வரிகளை நாம் அறிவோம்.

காளிதாசன் காலத்திலும் இது நடந்தது. கி.மு.73-ல் சுங்க வம்ஸத்தின் கடைசி அரசனான தேவ பூதியை ஒரு அடிமைப் பெண், ராணி போல வேடம் அணிந்து, படுக்கை அறைக்குள் நுழைந்து கொன்றாள். அமைச்சன் வாசுதேவனின் சதியின் பெயரில் அது நடந்தது. பஞ்ச தந்திரமும் மன்னர்களின் படுகொலை பற்றிப் பேசுகிறது.

வள்ளுவர், சேக்கிழார், திருத்தக்க தேவரும் அத்தகைய சம்பவங்களைப் பாடி வைத்திருப்பது, இந்தப் படுகொலைகள் தொன்றுதொட்டு நிகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.

சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வரும்

மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது.

கதையின் சுருக்கம் இதுதான்

சேதிநாட்டில், திர்க்கோவலூரில்,மலையமான் குலத்தில் வந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். எப்பொழுதும் திருநீறு பூசி சிவனைப் பூஜித்து, மெய்ப்பொருள் காண்பதையே லட்சியமாகக் கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று. அவரிடம் பலமுறை போரில் தோற்றுப்போன முத்தநாதன் என்பவன், நேர் வழியில் வெல்லுவது அரிது என்று கருதி, பொய்யான தவ வேடம் பூண்டு வந்தான். சிவ குரு என்று சொல்லி எல்லாக் காவல் நிலைகளையும் தாண்டி வந்தபோதும் மெய்ப் பொருள் நாயனாரின் முக்கியக் காவல் அதிகாரி தத்தன் மட்டும் சந்தேகக் கண்ணுடன் பார்த்தான். படுக்கை அறையில் மனைவியுடன் இருப்பதையும் மீறி மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளி அறையில் நுழைய மஹா ராணி திடுக்கிட்டு எழுந்தாள். மன்னரோ முத்த நாதன் சிவனியார் வேடத்தில் வந்ததால் வணங்கி என்ன காரத்தினால் வந்தீர்? என வினவ புதிய ஆகம நூல் கிடைத்து இருப்பதாகவும் அதை உபதேசிக்க வந்து இருப்பதாகவும் சொன்னான்.

முத்தநாதன் ‘மனதிலே கரு(று)ப்பு வைத்து’

முத்த நாதனின் வேடத்தை சேக்கிழார் வருணிக்கும் அழகே அழகு. உடம்பெல்லாம் வெண்மை நிறம். ஆனால் மனம் மட்டும் கறுப்பாம்:

மெய்எலாம் நீறு பூசி
     வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
     புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
     மனத்தின்உள் கறுப்பு வைத்துப் 
பொய்த்தவ வேடம் கொண்டு
     புகுந்தனன் முத்த நாதன்

மனைவி உடனிருந்தால் உபதேசிக்க முடியாது என்று சொல்லி அவளை அனுப்பச் செய்துவிட்டு, மன்னர் தனியாக வந்த போது புத்தக் கட்டை (ஏட்டுச் சுவடிக் கட்டு) அவிழ்ப்பது போல அவிழ்த்து ஏடுகளுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவரைக் கொலை செய்தான்.

சப்தம் கேட்டு தத்தன் உள்ளே வந்து, முத்த நாதனைக் கையும் களவுமாகப் பிடித்த போதும் சிவ சின்னங்களை அணிந்திருந்த ஒரே காரனணத்துக்காக அவரை, ‘தத்தா இவர் நமர் (நம்ம ஆள்)’ என்று சொல்லி ஊர் எல்லை வரை பாதுகாப்போடு அழைத்துச் சென்று விடுக என்று கட்டளையும் இடுகிறார். தத்தனும் அப்படியேசெய்தான்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

தின்னவரும் புலிதனையும் -……………….

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

என்ற பாரதி பாட்டை நினைவுபடுத்துகிறது மெய்ப்பொருள் நாயனாரின் செயல்.

கைத்தலத்து இருந்த வஞ்சக் 
     கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று      
     புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
     நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
     பொருள்எனத் தொழுது வென்றார் 

நிறைத்தசெங் குருதி சோர 
     வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
     நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்

xxx

வள்ளுவன் வாக்கு

திருவள்ளுவரும் சொல் வணக்கம், வில் வணக்கம் பற்றி எச்சரிக்கிறார். தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார். அவருக்கும் தேவ பூதி, ஜூலியஸ் சீஸர் கதைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு

சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமையான்— குறள் 827

பொருள்

வில் வளைவது தீமை வரப் போவதைக் காட்டும். அதே போல பகைவர்கள் வணக்கத்தோடு சொல்லும் சொல்லை நன்மை என்று கருதி விடக்கூடாது ((வணங்குவது போல வணங்கி காலை வாரி விடுவர்; புலி பதுங்குது பாய்வதற்காகத் தானே)- 827

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்  ஒன்னார்

அழுத கண்ணீரும்  அனைத்து- 828

பொருள்

பகைவர் வணங்கும் கைகளுக்கு உள்ளும் கொலைக் கருவியை மறைத்து வைத்திருப்பர். அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தகையதே-828

xxx

சீவக சிந்தாமணி

தொழுத்தங் கையினுள்ளும் துறுமுடி அகத்துமும் சோர

அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்தகத்து மாய்ந்து

பழுத கண்ணரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றா

தொழிகயார் கண்ணும் ஹேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சீவக சிந்தாமணி 1891

tags–பயங்கரவாதிகள்,முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனார்

–subham–

ENGLISH CROSSWORD 12-12-18 (Post No.5770)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 12 December 2018


GMT Time uploaded in London – 6-40 am

Post No. 5770


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Find at least 14 words linked to Hindu scriptures and Indian History. If you split the words you may even get 16 to 18 words.


PICTURE POSTED BY LALGUDI VEDA
1
2
3







4
5













6











7










8
9




10




11








12





ACROSS

1.If you do punya/good things you go this place in the sky

5.Seer of ancient times; did great Yajna mentally and came out of a well; His name is No.3 in Sanskrit

6.Great saint poet of Karnataka; he created social awareness through his poems- Vachanas

7.Name of an era; named after the greatest emperor of India

9.Name of Siva always goes with Hari

11.Consort of Siva; described beautifully by Kalidasa in Kumara Sambhava

12.Mauryan Emperor who took Buddhism to the nook and corner of Asia

DOWN

1.Ideal woman of Hindus; great character in Ramayana

2.Greatest philosopher of India; synonymous with Advaita

3.Basic unit of Indian village

4.A devotee of Krishna from Rajasthan whose Bhajans echo in every Bhajan sung from North to South

7.All Hindu gods ride on it

8.Second son of Yayati and Sharmishta

10.Parasurama’s older brother; dead and revived along with Renuka

PICTURE POSTED BY LALGUDI VEDA

ANSWERS

S1WA2RG3A
I
D
R
M4
T5RITA
I
A
S
M
R

B6ASAVA


N



V7IKRAMA
A
A
A8

H9ARAN
V10
A
A
U11MA
N




S
A12SOKA
U

ACROSS

1.SWARGA- if you do punya/good things you go this place in the sky

5.TRITA- Seer of ancient times; did great Yajna mentally and came out of a well; His name is No.3 in Sanskrit

6.BASAVA- Great saint poet of Karnataka; he created social awareness through his poems- Vachanas

7.VIKRAMA- name of an era; named after the greatest emperor of India

9.HARAN- Name of Siva always goes with Hari

11.UMA- Consort of Siva; described beautifully by Kalidasa in Kumara Sambhava

12.ASOKA- Mauryan Emperor who took Buddhism to the nook and corner of Asia

DOWN

1.SITA- Ideal woman of Hindus; great character in Ramayana

2.ADI SANKARA- Greatest philosopher of India; synonymous with Advaita

3.GRAMA- basic unit of Indian village

4.MIRA- A devotee of Krishna whose Bhajans echo in every Bhajan sung from North to South

7.VAHANA- All Hindu gods ride on it

8.ANU- Second son of Yayati and Sharmishta

10.VASU- Parasurama’s older brother; dead and revived along with Renuka

SANKARA, RAMA, KARA, SOKA, ADI –ARE ADDITIONAL WORDS AVAILABLE.

-subham–

பாரதியும் வானசாத்திரமும்! – 2 (Post No.5769)

Written by S Nagarajan

Date: 12 DECEMBER 2018


GMT Time uploaded in London –4- 59 am


Post No. 5769

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாரதி இயல்

பாரதியும் வானசாத்திரமும்! – 2

ச.நாகராஜன்

பாரதியார் வானவியல் பற்றிக் கூறிய பாடல்களில் முக்கிய வரிகள்/ பகுதிகள் இங்கு தொடர்கின்றன.

பாரதியாருக்கு அறிவியல் பூர்வமான வானவியலில் மிக அதிகமாக ஆர்வம் உண்டு.

சூரியன், சந்திரன், நட்சத்திரம், அண்டம் இவற்றை எல்லாம் கவிதைப் பொருளாக உள்ள அனைத்திற்கும் பாரதியார் பயன்படுத்தி உள்ளார்.

சுட்டும் விழிச்சுடர் தான் சூரிய சந்திரரோ என்பன போன்ற உவமைகள் ஏராளம் உள்ளன.

ஒவ்வொரு வானக் காட்சியிலும் அவர் இறைவனின் மஹாசக்தியை எண்ணி வியக்கிறார்.

தமிழர்கள் வானவியலில் அதிக ஆர்வம் காட்டவில்லையே என்ற பச்சாதாபமும் அவருக்கு உண்டு.

முன்னாளில் வான சாஸ்திரத்தில் இந்தியா தலை சிறந்து விளங்கியதை அவர் நினைவு கூர்கிறார்.

இன்று அவர் இருந்தால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ விண்ணில் ஏவும் ஏவுகணைகளைப் பார்த்து சந்தோஷப்படுவார்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்ற அவரது கனவை இந்தியா கூடிய விரைவில் நிறைவேற்றும்.

கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதியை இங்கு தொடர்கிறோம்:

கண்ணன் என் தாய்

விந்தைவிந்தை யாக எனக்கே – பல 

விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; 
சந்திரனென் றொரு பொம்மை – அதில் 

தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; 
மந்தை மந்தையா மேகம் – பல 

வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; 
முந்தஒரு சூரியனுண்டு – அதன் 

முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 

வானத்து மீன்க ளுண்டு – சிறு 

மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்

கண்ணன் எனது சற்குரு

சந்திரன் சோதி யுடையதாம்; – அது 

சத்திய நித்திய வஸ்துவாம்; – அதைச் 
சிந்திக்கும் போதினில் வந்துதான் – நினைச் 

சேர்ந்து தழுவி அருள்செயும் -; 

”ஆதித் தனிக்பொரு ளாகுமோர்; – கடல் 

ஆருங் குமிழி உயிர்களாம்; – அந்தச் 
சோதி யறிவென்னும் ஞாயிறு – தன்னைச் 

சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; – இங்கு 
மீதிப் பொருள்கள் எவையுமே – அதன் 

மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்;-

கண்ணம்மா – என் காதலி – 1 
(காட்சி வியப்பு) 

செஞ்சுருட்டி – ஏகதாளம் 
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா! 

சூரிய சந்திர ரோ? 
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா! 

வானக் கருமை கொல்லோ? 
பட்டுக் கருநீலப் – புடவை 

பதித்த நல் வயிரம் 
நட்ட நடு நிசியில் – தெரியும் 

நக்ஷத் திரங்க ளடீ! …

கண்ணம்மா – என் காதலி – 2 
(பின் வந்து நின்று கண் மறைத்தல்) 

நாதநாமக்கிரியை – ஆதிதாளம் 
சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே 

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; 
மூலைக் கடலினையவ் வான வளையம் 

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; 

கண்ணம்மா – என் காதலி – 6
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; 

 
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; 

கவிதைத் தலைவி

வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,


சின்னப் பையல் சேவகத் திறமை;


எனவரு நிகழ்ச்சி யாவே 

நிலாவும் வான்மீனும் காற்றும்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;


தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!


சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை

ஒப்பதொர் செல்வமுண்டா’

சாதாரண வருஷத்து தூம கேது

எண்ணில் பல கோடி யோசனை யெல்லை

எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவால்

புனைந்த நின்னொடு வால் போவதென்கிறார்;

பாரத நாட்டில் பரவிய எம்மனோர்

நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;

உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே

தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலர்

சுய சரிதை

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;

உலகத்தை நோக்கி வினவுதல்

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?

ஆத்ம ஜெயம்

அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?

கிளிப்பாட்டு

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று, 
ஆயிர மாண் டுலகில் – கிளியே! – அழிவின்றி வாழ்வோமடீ! 

சூரிய தரிசனம் 
ராகம் – பூபாளம் 

சுருதி யின்கண் முனிவரும் பின்னே 
      தூமொ ழிப்புல வோர்பலர் தாமும் 
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும் 
      பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; 
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே! 
      பானுவே! பொன்செய் பேரொளித் திரளே! 
கருதி நின்னை வணங்கிட வந்தேன்; 
      கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 

வேதம் பாடிய சோதியைக் கண்டு 
      வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்; 
நாத வார்கட லின்னொலி யோடு 
      நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்; 
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே 
      கடுகியோடும் கதிரினம் பாடி 
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன் 
      அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 


 ஞாயிறு வணக்கம் 

கடலின்மீது கதிர்களை வீசிக் 
      கடுகி வான்மிசை ஏறுதி யையா! 
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு 
      பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள். 
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே 
      ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச் 
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே 
      சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 

என்ற னுள்ளங் கடலினைப் போலே 
      எந்த நேரமும் நின்னடிக் கீழே 
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும் 
      நின்றன் ஜோதி நிறைந்தது வாகி 
நன்று வாழ்ந்திட செய்குவை யையா! 
      ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா! 
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம் 
      வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 

காதல் கொண்டனை போலும் மண்மீதே, 
      கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே! 
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல் 
      மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை; 
சோதி கண்டு முகத்தில் இவட்கே 
      தோன்று கின்ற புதுநகை யென்னே! 
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே 
      ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 


வெண்ணிலாவே 

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை 
      வெண்ணிலாவே! – விழிக் 
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை 
      வெண்ணிலாவே! 
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு 
      வெண்ணிலாவே! – நின்றன் 
சோதி மயக்கும் வகையது தானென்சொல் 
      வெண்ணிலாவே! 
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன் 
      வெண்ணிலாவே! – இந்த 
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன் 
      வெண்ணிலாவே! 
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று 
      வெண்ணிலாவே! – வந்து 
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு 
      வெண்ணிலாவே! 

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் 
      வெண்ணிலாவே! – அஃது 
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது 
      வெண்ணிலாவே! 
காத லொருத்தி இளைய பிராயத்தள் 
      வெண்ணிலாவே! – அந்தக் 
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள் 
      வெண்ணிலாவே! 
மீதெழும் அன்பின் விலைபுன் னகையினள் 
      வெண்ணிலாவே! – முத்தம் 
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு 
      வெண்ணிலாவே! 
சாதல் அழிதல் இலாது நிரந்தரம் 
      வெண்ணிலாவே! – நின் 
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்? 
      வெண்ணிலாவே! 

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு 
      வெண்ணிலாவே! – நன்கு 
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன் 
      வெண்ணிலாவே! – அந்த 
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி 
      வெண்ணிலாவே! – இங்கு 
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர் 
      வெண்ணிலாவே! 
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும் 
      வெண்ணிலாவே! – நல்ல 
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் 
      வெண்ணிலாவே! 

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர் 
      வெண்ணிலாவே! – நினைக் 
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை 
      வெண்ணிலாவே! 
சீத மணிநெடு வானக் குளத்திடை 
      வெண்ணிலாவே! – நீ 
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை 
      வெண்ணிலாவே! 
மோத வருங்கரு மேகத் திரளினை 
      வெண்ணிலாவே! – நீ 
முத்தி ணொளிதந் தழகுறச் செய்குவை 
      வெண்ணிலாவே! 
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் 
      வெண்ணிலாவே! – நலஞ் 
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ? 
      வெண்ணிலாவே! 

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் 
      வெண்ணிலாவே! – உன்றன் 
மேனி யழகு மிகைபடக் காணுது 
      வெண்ணிலாவே! 
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை 
      வெண்ணிலாவே! – மூடு 
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும் 
      வெண்ணிலாவே! 
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும் 
      வெண்ணிலாவே! – நின் 
சோதி வதனம் முழுதும் மறைத்தனை 
      வெண்ணிலாவே! 
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள் 
      வெண்ணிலாவே! – இருள் 
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி 
      வெண்ணிலாவே! 

இன்னும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவற்றில் அவன் கண்ட வானக் காட்சிகளை அடுத்துப் பார்த்து இந்தத் தொடரை முடிப்போம்!

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்

தமிழ் குறுக்கெழுத்து 11-12-18 (Post No.5768)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 December 2018


GMT Time uploaded in London – 20-18

Post No. 5768


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Tamil cross word 11-12-18

கட்டத்திலுள்ள 15+++ சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும் குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழே தரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.

குறுக்கே

3. தகப்பனுக்கு ஓம்கார ரகசியம் சொன்னவன்

7. குழந்தை உருவாவதன் முதல்படி

8. காரம் மிகுந்த காய்

9. பழத்தின் முதல்படி

13. பெரிய தேர் உடைய ஊர்

14. மலையில் விளயும் கிழங்கு; பார்வதியின் தாண்டவ ரூபம்

16. – உடுக்கை இழந்தவன் கைபோல உதவுபவன்

1. – வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்

, 2.நெல்லின் பகுதி

 4. கடலில் செல்லும் கலம்

 5. எல்லோரையும் விட்டுப் போகும் ஒரு ரகம்

6. சாப்பிட உதவும்

1a. வேதகாலக் கடவுள்; நண்பன் என்றும் சொல்லலாம்

 10. – எல்லோரும் பெற விரும்புவது

 11. வணிகர்களை   விரட்டிவிட்ட நாடு

 12. படிக்கலாம்; சமணராக  இருந்தால் படுக்கலாம்

 15. துட்டு


1

2




3


45





6
7

8

9

10





11
12

13











1415




16


குறுக்கே

3.சுவாமிநாதன், 7.கரு, 8.மிளகாய், 9.காய், 13.திருவாரூர்

14.மா 15காளி, 16.நண்பன்,

கீழே

1.விசுவா 1a.மித்திரன், 2.உமி, 4.நாவாய், 5.தனி, 6.வாய்

1a.மித்திரன், 10.மகன், 11.பர்மா, 12.பள்ளி, 15.காசு

குறுக்கே

3.சுவாமிநாதன் – தகப்பனுக்கு ஓம்கார ரகசியம் சொன்னவன்

7.கரு – குழந்தை உருவாவதன் முதல்படி

8.மிளகாய் — காரம் மிகுந்த காய்

9.காய்- பழத்தின் முதல்படி

13.திருவாரூர் – பெரிய தேர் உடைய ஊர்

14.மா 15காளி – மலையில் விளயும் கிழங்கு; பார்வதியின் தாண்டவ ரூபம்

16.நண்பன் – உடுக்கை ழந்தவன் கைபோல உதவுபவன்

கீழே

1.விசுவா 1a.மித்திரன் – வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர்

, 2.உமி- நெல்லின் பகுதி

 4.நாவாய்- கடலில் செல்லும் கலம்

 5.தனி-  எல்லோரையும் விட்டுப் போகும் ஒரு ரகம்

6.வாய் — சாப்பிட உதவும்

1a.மித்திரன்  – வேதகாலக் கடவுள்; நண்பன் என்றும் சொல்லலாம்

 10.மகன்  – எல்லோரும் பெற விரும்புவது

 11.பர்மா- வணிகர்களை   விரட்டிவிட்ட நாடு

 12.பள்ளி- படிக்கலாம்; சமணராக  இருந்தால் படுக்கலாம்

 15.காசு- துட்டு


1வி
*2உ*னி**

3சு
வாமி4நா5தன்*

வா
**6வா*7 கரு

8மி
9காய்*10 ம

த்
***11 ப*12 ப
தி13ருவாரூர்*ள்

***14 மா15 காளி
ன்
ண்16ந
சு

–subham–

HOW SISTER NIVEDITA CHANGED BHARATI (Post No.5767)




Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 December 2018


GMT Time uploaded in London – 8-56 am

Post No. 5767



Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.




Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the Benares Congress Conference. This brief meeting took place at Dum Dum, Calcutta in 1905. This meeting has changed Bharati’s life to a great extent.


Bharati went back via Calcutta with the intention of meeting great Bengali patriots. He was fortunate to meet Nivedita. Their conversation turned towards women’s upliftment. Sister Nivedita casually asked Bharati whether he was married. He replied in the affirmative and immediately Nivedita asked him whether his wife also came with him now. Bharati told her that it was not a normal practice to take women to social and public functions.


This reply made Nivedita very angry. She admonished him and said that we should give equal importance and equal participation for women. This awakened Bharati and opened his eyes. From that day onwards, he had vowed to work for women’s liberation. He came back to Madras (Chennai) and started a separate Tamil magazine (Chakravarthini) for the women.



Just before leaving Dum Dum , Sister Nivedita gave him a leaf which she brought from the Holy Himalayas. She touched his head and blessed him. Bharati preserved this leaf until his death in 1921.


K S Raman in an article writes,


“It may be of interest to know that Bharati had handsomely acknowledged his deep sense of gratitude to the great woman Nivedita by dedicating his two books to her in which he says, ‘in a flash without the aid of speech or reasoning thou revealed to me the sacredness of service to the Motherland and glory of renunciation. To you who by virtue of thy piety and excellence became the spiritual daughter of Swami Vivekananda, I dedicate this book’.


In one of his poems also he speaks of the Sister in most glowing terms, which reads as under,
“An offering to Mercy
A Temple of Love
A sun to his spiritual darkness
Rain to the withering country
A fire to the scroll of meanness’



The enlightenment Bharati derived from the Sister can be gauged from the poems he sang in praise of women and their equal status.
It was Bharati, more than anybody else in Tamil Nadu, who worked untiringly for the social uplift of women and the essays and poems he wrote on this question were legion.


About Sister Nivedita, K S Raman adds,


Born of an Irish parentage at Dungannon (Northern Ireland) in 1867, and despite her manifold pursuits, Margaret Noble (later Nivedita) had the growing consciousness of uncertainty and despair in respect of religion; neither Christian doctrines nor the tenets of Buddhism could provide panacea toher disturbed mental state. The visit of Swami Vivekananda to England in 1895 and his teachings kindled Margaret’s latent religious aspirations and desire to serve humanity selflessly. Therefore, she came to India in 1898, and lived in a cottage at Belur with Swamiji’s other two American disciples, was subsequently initiated into Brahmacharya and given the name of Nivedita (the dedicated). The rest of her life of thirteen years in India were devoted to the cause of Indian freedom and emancipation and upliftment of Indian women till her death in 1911.

Tags- Bharati, Nivedita, Women’s status, upliftment of women

வினோபாஜிக்குப் பிடித்த பாரதி பாடல்கள் (Post No.5766)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 December 2018


GMT Time uploaded in London – 7-35 am

Post No. 5766


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சர்வோதயத் தலைவர் டாக்டர் எம்.அறம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தைத் தமிழில் வரைகிறேன். கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் வெளியிட்ட பாரதி பற்றிய ஆங்கில நூல்களின் மூன்றாவது தொகுதியில் இது உளது.

“நாங்கள் ஒரிஸ்ஸா மாநிலத்தின் சம்பல்பூர் – பார்கார் சாலையில் நடந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்துக்கு முன்னால், சாலையின் ஓரத்தில், ஒரு ஒதுக்குப் புறத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை, தியானம் செய்தோம். கீழ் வானம் அற்புதமாக செக்கச் செவேல் என்று காட்சி தந்தது. அங்கே அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டுதான் பிரார்த்தனை நடந்தது. பனி மூட்டமும் அழகு சேர்த்தது. கீழ் வானம் முழுதும் செந்நிறப் பிழம்பு. சற்று மேலே சிவப்பும் ஆரஞ்சு வர்ணமும் பட்டை பட்டையாக இருந்தன. சில நட்சத்திரங்கள் கூட இன்னும் தெரிந்தன. இரவு நேரம் விடை பெற்றுக்கொண்டு பகற் பொழுதுக்கு அழைப்புவிட்டுக் கொண்டிருந்த அற்புதமான காலைப் பொழுது அது.

மீண்டும் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். வினோபாஜி அழைத்ததால் நான் முதல் நாள்தான் அங்கே சென்றிருந்தேன். அந்த நாள் 1963 அக்டோபர் 9ம் தேதி. டில்லி- பீகிங் நட்புறவுப் பயணம் பற்றிய திட்டங்களை விவாதிக்கவே என்னை அழைத்திருந்தார். நான் ஏற்கனவே நிலமையை விளக்கி முழு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அது பற்றி மேற்கொண்டு விவாதிக்கவே இந்த சந்திப்பு.

கொஞ்சம் கொஞ்சமாக சம்பாஷணை, உலக நடப்புகளை நோக்கி நகர்ந்தது. திடீரென்று வினோபாஜி சொன்னார்:-

தக்ஷிண பாரதமே இப்பொழுது என்னோடு நடந்து கொண்டிருக்கிறது

நாங்கள் என்ன என்று நினைத்துப் பார்ப்பதற்குள் அவரே விளக்கமும் தந்தார்.

அதோ பாருங்கள் (சந்யாஸி உடையில் இருந்தவரைக் காட்டி), அவர் கேரளத்திலிருந்து வந்திருக்கிறார். வினோபாஜியின் ‘குரானின் சாராம்ஸம்’ என்ற நூலை சரிசெய்து கொடுக்க வந்திருந்த ஒரு வயதானவரைச் சுட்டிக்காட்டி, அந்த முதியவர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து  வந்திருக்கிறார். வினோபாஜியின் உதவியாளரான ஜயதேவ் பாயை நோக்கி அவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். நீங்களோ தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தென் இந்தியாவே என்னுடன் நிற்கிறது என்றார் வினோபா பாவே.

எல்லோரும் அதைகேட்டு சிரித்து மகிழ்ந்தோம்.

பாரதி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று நான் சொன்னேன். நாங்கள் சுமார் 25 பேர் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தோம். அப்பொழுது வினோபாஜி சொன்ன கருத்துக்கள் மிகவும் சுவையானவை.

ஒரிஸ்ஸாவின் முன்னாள் முதலமைச்சர் நவகிருஷ்ண சௌத்ரியும் அங்கே இருந்தார்.

வினோபாஜி சொன்னார்,

முதலாவதாக,

நான் அப்பொழுது வேலூர் சிறைச் சாலையில் இருந்தேன். நான் பாரதியார் கட்டுரைகள் புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் கல்வி பற்றி எழுதிய விஷயம். விஞ்ஞானமானது புதுப் புது கிருமிகள், சிற்றுயிர்களைக் கண்டுபிடித்து வருகிறது. காலரா, பிளேக் கிருமிகள் முதலியன. ஆனால் இந்த உயிரினங்களில் மனிதன்தான் மிகச் சிறந்தவன். அவன் எல்லா உயிர்களையும் விட முன்னேறிவன். பாரதியாரின் இந்தக் கருத்து– மனிதனே மிகச் சிறந்த படைப்பு– என் மனதில் ஆழப் பதிந்தது.

வினோபாஜி சற்று மவுனம் சாதித்தார்.

அந்த மவுனமானது அவர் சொன்ன விஷயத்தை எங்கள் மனதிலும் பதித்தது. பின்னர் அவர் தொடர்ந்தார்,

இரண்டாவதாக,

பாரதியார் இந்த பிரபஞ்சம் முழுவதையும் சொந்தபந்தமாக நினைக்கிறார். மனிதர்கள் பிராணிகளுடன் அவர் நிறுத்தவில்லை.

இதை வினோபாஜி தமிழில் சொல்லி விட்டு மற்றவர்களுக்காக இந்தியிலும் அவரே மொழி பெயர்த்தார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி

இப்படி உயிரினங்கள் மட்டுமின்றி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

இந்த பிரபஞ்சமே நமது உறவினரென்ற பாரதி கருத்து என்னை ஈர்த்தது.

பல மொழி பேசும் மக்கள் அந்தக் குழுவில் இருந்தனர். எல்லோரும் சபாஷ் போட்டு ரஸித்தனர்.

 வினோபாஜி தொடர்ந்தார்,

மூன்றாவதாக,

பாரதியார் ஒரு தேசீயவாதி என்பது அறிந்ததே. அவருடைய தேசீயப் பற்று அஹிம்ஸையை அடிப்படையாக உடையது.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே,

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

…………………………………….

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தையில் போற்றிடுவாய்……………….

இதைக் கேட்டு மகிழ்ந்த

ஆந்திராக்காரர், எங்கள் தெலுங்கு மொழியிலும் ‘புலி’ என்றுதான் சொல்லுவோம் என்றார்.

இதைச் சொல்லி முடித்தவுடன் வினோபாஜி என்னைப் பார்த்து, கிண்டல் செய்யும் தொனியில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்றார்.

அவரே பின்னர், அடுத்த முறை இன்னும் சொல்கிறேன் – என்று முடித்தார்.

இதற்கிடையில் கூடவே நடந்து வந்த வினோபாஜியின் உதவியாளர்/ காரியதரிஸி  பாலுபாய், ‘நம் டி.பி. சுப்ரமணியம் (தமிழ் நாட்டு சாந்தி சேனை அமைப்பாளர்) அடிக்கடி சொல்லுவாரே, பயப்படாதே, பயப்படாதே என்ற கருத்துள்ள பாரதி பாடல். அது என்ன? மறந்துவிட்டதே’– என்று நினவுபடுத்திக் கொள்ள முயன்றார். வினோபாஜியே அந்தப் பாடலையும் நினைவுகூர்ந்தார்.

நான் மேற்கொண்டு அவருடன் பேசுகையில் பூதானத்தின் அடிப்படைக் கருத்துகளைப் பாரதி பாடல்களிலும் காணமுடிகிறது என்றேன்.

ஆமாம், உண்மைதான். இது பற்றி ஸர்வோதய பத்திரிக்கைகளில்

ஏற்கனவே எழுதியுள்ளோம் என்றார்.

(உலகில் அதிகமான மொழிகளைப் பேச வல்லோரில் பூதான இயக்கத் தலைவர் வினோபா பாவேயும் ஒருவர். அவர் பாரதியாரை எந்த அளவுக்குப் படித்து, அவரது கருத்துக்களை உள்வாங்கி இருக்கிறார் என்பது இந்த உரையாடல் மூலம் வெளிப்படுகிறது.)

tags– வினோபா பாவே,  பாரதி பாடல்கள்

–சுபம்–

பாரதியும் வானசாத்திரமும்! – 1 (5765)


Written by S Nagarajan

Date: 11 DECEMBER 2018


GMT Time uploaded in London –4- 50 am


Post No. 5765

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாரதியும் வானசாத்திரமும்! – 1

ச.நாகராஜன்

பாரதியார் பிறந்த நாள். அவரை வணங்கிப் போற்றுவோம்.

புண்ணியன் பிறந்த நாள்

     பூவுலகம் சிறந்த நாள்

எண்ணிநின்  றேத்து வோம்

     இனியநாடு போற்று வோம்

நன்னிதிப் பாடல் கள்

     நவின்றநா வாணி நா

உன்னியவை ஏற்று வோம்

    உயிர்கலந்து பாடு வோம்

                                    ச.நாகராஜன்

***

பாரதியாரைப் பலவிதமாக ஆராய்ந்து பார்த்து உவகை அடையலாம்.

அவரை வானசாத்திரத்தின் மூலமாகப் பார்க்கும் பார்வையே இந்தக்

குறுந் தொடர்.

பாரதியார் வானக் காட்சிகளைக் கண்டு ரசித்து மயங்கி அவ்வண்ணங்களைக் கவிதைத் தேனெனப் பொழிந்திருக்கிறார். வசன நடையிலும் எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் பற்பல இடங்களிலிருந்து எடுத்துத் தொகுத்துப் பார்த்துள்ள ஒரு மாலையே இது.

*

பாரத தேசம் என்ற கவிதையில் ..

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்

    வானையளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

விநாயகர்  நான்மணி மாலை (விருத்தம்)

வையந்தனையும் வெளியினையும்

    வானத்தையுமுன் படைத்தவனே

விநாயகர்  நான்மணி மாலை (விருத்தம்)

படர்வான் வெளியிற் பலகோடி

     கோடி கோடிப் பலகோடி

இடறா தோடும் அண்டங்கள்

    இசைத்தாய் வாழி, இறையவனே!

இறைவா, இறைவா!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்                            இறைவா, இறைவா, இறைவா

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு

       சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்

அத்தனை யுலகமும் வண்ணக் களஞ்சிய

       மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்

மஹாசக்தி வெண்பா

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்

விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர்

சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு

பக்தியுடன் வாழும் படிக்கு

மஹாசக்தி

சந்திரனொளியில் அவளைக் கண்டேன்

சரண மென்று புகுந்து கொண்டேன்;

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்

    வீசிநிற்கும் வளியைச் செய்தாள்

வான்கணுள்ள வெளியைச் செய்தாள்

    வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

காளி ஸ்தோத்திரம்

வான கத்தி னொளியைக் – கண்டே – மனம கிழ்ச்சி பொங்கி

யானெ தற்கும் அஞ்சேன் – ஆகி – எந்த நாளும் வாழ்வேன்

ஞான மொத்த தம்மா – உவமை – நானு ரைக்கொ ணாதாம்!

வான கத்தி னொளியின் – அழகை – வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம் – தருமோர் – நல்ல பேரொ ளிக்கே

தேய மீதோர் உவமை – எவரே – தேடி யோத வல்லார்?

வாயி னிக்கும் அம்மா! – அழகாம் – மதியின் இன்ப ஒளியை

நேயமோ டுரைத் தால் – ஆங்கே – நெஞ்சி ளக்க மெய்தும்

மஹாசக்தி பஞ்சகம்

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும், 
      யாவுமாம் நின்றனைப் போற்றி 
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும் 
      மயங்கிலேன் 

மஹாசக்தி வாழ்த்து
 விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன்.


கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?

பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை, 

வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளியருள் செய்குவை

கோமதி மகிமை


நக்க பிரானருளால் — இங்கு

   
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;


தொக்கன அண்டங்கள் — வளர்


   தொகைபல கோடிபல் கோடிகளாம்!


இக்கணக் கெவரறிவார்? புவி


   எத்தனை யுளதென்ப தியார றிவார்?

நக்க பிரானறிவான்; — மற்று


    நானறி யேன், பிற நர றியார்;


தொக்க பேரண்டங்கள் — கொண்ட


     தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற


தக்கபல் சாத்திரங்கள்; — ஒளி


    தருகின்ற வானமொர் கடல்போலாம்;


அக்கட லதனுக்கே — எங்கும்

     அக்கரை இக்கரை யொன்றில்லையாம்

இக்கட லதனகத்தே — அங்கங்


     கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்


தொக்கன உலகங்கள்; — திசைத்

     
தூவெளி யதனிடை விரைந்தோடும்;


மிக்கதொர் வியப்புடைத்தாம் — இந்த


    வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;


மெய்க்கலை முனிவர்களே! — இதன்


மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, — கண்டீர்.

எல்லையுண்டோ இலையோ – இங்கு

   யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?

சொல்லுமோர் வரம்பிட்டால் – அதை

    ………………….

(இது முற்றுப் பெறவில்லை)

அல்லா அல்லா

 பல்லவி

அல்லா,அல்லா,அல்லா!

சரணங்கள்

பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!

நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி!   (அல்லா அல்லா)
                

நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்

   வெட்ட வெளியின் விரிவெலாம் நான்

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்

புதிய ஆத்திசூடி

வானநூற் பயிற்சி கொள்

***      தொடரும்

tags– பாரதி, வானசாத்திரம்

ENGLISH CROSS WORD 10-12-18 (Post No.5764)

FIND THE SIX WORDS IN THE SQUARE; SOME TIPS ARE GIVEN HERE.ANSWERS ARE GIVEN AT THE END.

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 December 2018


GMT Time uploaded in London – 19-35

Post No. 5764


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1. Best of the milk maids/Gopis. Lover of Krishna

4. A seer and foster father of Sakuntala (Sakuntalam of Kalidasa)

5. Meaning lower, inferior, used for mentioning funeral rituals

DOWN

1. Meaning line; most famous line drawn by Lakshman; in palmistry the lines in the hand etc

2. One of the four tactics used by the kings; meaning rod, stick (hard punishment)

3. Another name of sage Vasishtha in Mahabharata

ANSWERS

ACROSS

1.RADHA- Best of the milk maids/Gopis. Lover of Krishna

4.KANVA- A seer and foster father of Sakuntala (Sakuntalam of Kalidasa)

5.APARA- meaning lower, inferior, used tomention funeral rituals

DOWN

1.REKHA- meaning line; most famous line drawn by Lakshman; in palmistry the lines in the hand etc

2.DANDA – One of the four tactics used by the kings; meaning rod, stick (hard punishment)

3.APAVA- Another name of sage Vasishtha in Mahabharata

–subham–

VINOBA BHAVE AND BHARATI POEM ANECDOTE (Post No.5763)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 December 2018


GMT Time uploaded in London – 18-14

Post No. 5763


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

DR M ARAM, EDUCATIONIST AND SARVODAYA LEADER NARRATED THE FOLLOWING INCIDENT:

“This was in Sambalpur district, Orissa. We were walking on the Sambalpur- Bargarh road. Early morning.

Just a little while ago we had stopped by the road-side for meditation and prayer. The eastern sky facing which we were seated was a wonderous spectacle. The distant mist and the entire horizon were lit up in gorgeous red. Above the belt of orange and red, one could see some stars glimmering. it was that glorious period of transition when dusk departs and day dawns.

Now we had resumed walking. Vinobaji called me. I had gone the previous day, 

October 9th, 1963. for consultations with him regarding the future plans of the Delhi-Peking Maitri Yatra. I had already given him a full report on the situation. We were to have further discussions on the matter later in the day. But now was the time to talk about matters of general interest.

The whole of Dakshin Bharat (South India) is walking with me! quipped Vinobhaji. And he explained:

That Sanyasi (pointing to a swamiji clad in saffron) comes from Kerala. This person (pointing to an elderly gentleman who helped editing Vinobhaji’s Essence of Quoran) comes from Andhra Pradesh. And he (pointing to Jayadev Bhai, long time associate and aide of Vinobhaji) is from Karnatak. And you from Tamil Nadu. South India is here with me!

We laughed one and all.

Tell us something about Bharati, I asked. What followed was a most interesting talk which all of us, about twenty five or so, enjoyed very much. Shri Nabhakrishna Choudry, former chief minister of Orissa, was one of those walking close to Vinobha and listening to his discourse.

First – I was then in Vellore jail. I read a book containing the essays of Bharathiyar.

(this Vinobhaji said in Tamil)

In an essay on education, Bharathiyar speaks about man. Science is discovering many new kinds of living organisms, he says. Germs that cause Cholera, germs that cause plague etc. But let us realize, Bharahtiyar says, the greatest of all living organisms is man himself. he flourishes over and above all living organisms. He is the greatest of all. This thought that the man is the supreme organism I got from Bharathiyar……………..”

Vinobhaji paused here. We were all appreciating the significance of his  remarks in thoughtful silence He continued:

Second – Bharathiyar felt a kinship with the whole universe, not only human beings and animals.

Vinobhaji said this in Tamil and then translated it into Hindi for benefit of others. The above lines mean—

The crow and the sparrow are our tribe

Continued V, not only living beings inanimate objects also.

The sea and the hills are our crowd.

this universal feeling I got from Bharathiyar.

Throughout the talk V referred to Bharathi  as Bharathiar, with the Tamil honorifix -ar.

friends from different parts of India speaking different languages particularly enjoyed the above two lines of Bharati as quoted by Vinobhaji.

Third –  Bharathi was a nationalist no doubt But his nationalism was rooted in our tradition of Ahimsa. he said

Even for the tiger that rushes to devour you

Entertain love…………..

The Andhra friend walking next to me enjoyed these lines very much . He told me PULI means tiger in Telugu also.

Now Vinobhaji  turned to me. He had in quick succession said so much in response to my simple request to say some about Bharathi. In a mischievous tone, he asked me: enough?

Some more please!

After a while, came the reply:

More next time!

Shri Balubhai, long time associate and secretary to V, was reminded of a well known line of b he tried to recall the line about NO FEAR. Immediately came  the words from Vinobhaji.

I told V that the basic idea of Bhoodan is to be found in the writings of Bharathi.

Vinobhaji said he knew about this and it has been published in Sarvodaya journals.

Source:– Essays on Bharati , Volume Three, Bharathi Tamil Sangham, Calcutta, 1970

tags—Vinoba,Bharati poems, M Aram

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10-12-18 (Post No.5762)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 December 2018


GMT Time uploaded in London – 16-39

Post No. 5762


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்திலுள்ள ஆறு சொற்களைக் கண்டு பிடியுங்கள். இதோ உதவும் குறிப்புகள்; முயன்று பாருங்கள்; முடியாவிட்டால் விடை கீழே தரப்பட்டுள்ளது. அதைக் கண்டு மகிழுங்கள்.

குறுக்கே

1.பாம்பின் தலையில் இருக்குமாம்; இரவில் ஒளி வீசுமாம்

4.நகரைக் காக்க தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் இப்பட குழு அமைத்தனர்.

5.மரத்தை அறுக்க உதவும்

கீழே

1. வாய் பேசாதோர் நால்வர் வந்தனர்

2. உஜ்ஜைனி நகரில் 12 ஜோதிர்லிங்கத்தின் ஒரு பெயர்

3. வரதட்சிணைக்கு ஸம்ஸ்க்ருதச் சொல்; கன்யா என்று சொல்லுடன் சேர்ந்து வரும்.

Picture shows Kanwarias in Ujjain

Answers

குறுக்கே

1. நாக மணி

4. ஊர் காவல்

5. ரம்பம்

கீழே

1.நாலு ஊமை

2.மஹா காலம்

3.சுல்கம்

  நா ணி*
  லு
*ஹா*சு
ர்கால்
மை
**
*
ம்ம்

tags- குறுக்கெழுத்துப் போட்டி, 10-12-18

–subham–