MY TRIP TO SANTORINI ISLANDS IN GREECE (Post No.4120)

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 6-13 am
Post No. 4120
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

We went to Athens and Santorini Islands in Greece for six days in July 2017. The islands are volcanic islands and Hot water springs are in the middle of the sea. The ferry took us to the place where the sea water was heating up due to the volcanic rocks underneath. Tourists jumped from the boat into ocean and swam for 15 minutes and then all of them returned to the boat. I was just watching from the deck of the boat. Even children were swimming with the help of floating life jackets.

One young couple boarded the wrong boat and tried very hard to jump from one boat to other.  Husband succeeded but his wife with bikinis was struggling with fear and embarrassment. At last she managed to jump into our ferry.

If you look at all the pictures you can see the water colour changes from blue to green to yellow. The spot where the color of the water is yellow is the hottest place. swimmers go up to the point to get good hot water bath with sulphur content which will cure skin diseases. Volcanoes underneath is heating the water.

There are two important beaches in Santorini, one is with black sand beach and another is red beach. This is due to the volcanic activity in the islands. I have taken these pictures from the black sand beach. Santorini buildings are in white and blue colours. The churches have six or ten bells at the top. The domes of the churches are in Muslim’s mosque style. People come here for relaxing and to enjoy the breath taking views of the Agean sea , part of the Mediterranean sea. Palm leaf umbrellas are in thousands all along the coast which the tourists hire. They relax themselves there and get tanned in the sun bath.

 

Greece has 2000 islands and out of them 225 are inhabited. If you count all the protruding rocks you may say Greece has 6000 islands.

 

Biggest Volcanic Eruption

 

These volcanic islands have a long history. The biggest eruption happened around 1660 BC. and the Minoan civilization was destroyed because of the tsunami following the explosion or eruption. People believed that the Mysterious Atlantis continent disappeared because of this huge eruption. It must have affected Indus Valley Civilization and the legendary Tamil Kumari Kandam (Lemuria continent). The climatic changes after the biggest eruption in human history affected everyone on earth in one way or other.

Greece survive by tourism. Boarding and Lodging are more expensive in Santorini than in Athens. But the breath-taking views make the trip worthwhile. The blue sea and dry climate give plenty of time to do outdoor activities.

 

One of the emblems of Santorini is donkeys. This helped the people before the modern transport was introduced

There is a monastery in the islands. The islands are famous for the wine. It has a particular type of wine. There is a winery museum.

 

Sunset along the west coast is watched b thousands of people. Sunset point at Oia village attracts thousands of tourists. There is a bazar with lot of shops selling specialised, localised artefacts

 

Fira is the capital of the islands. All the islands were created by the volcanic eruption.

While we were doing shopping in the narrow streets of Oia in Santorini, The White Door Theatre group marched with a band distributing their leaflets of daily show.

 

–Subham–

QUOTES ON CONCENTRATION (Post No.4119)

Compiled  by S NAGARAJAN

 

Date: 2 August 2017

 

Time uploaded in London:- 5-13 am

 

 

Post No.4119

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

Without Concentration nobody could achieve anything.

Here are the best quotes on Concentration.

 

  • The five essential entrepreneurial skills for success: Concentration, Discrimination, Organization, Innovation and Communication.

Harold S. Geneen

  • (To) have one’s ideas exclusively focused on one central interest

– Sigmund Freud

 

  • What does it take to be a champion? Desire, dedication, determination, concentration and the will to win.

Patty Berg

 

  • Beware of dissipating your powers, strive constantly to

concentrate them.

Johann W. Von Gothe

 

 

  • When you want a thing deeply, earnestly and intensely, this feeling of desire reinforces your will and arouses in you the determination to work for the desired object. When you have a distinct purpose in view, your work becomes of absorbing interest. You bend your best powers to it; you give it concentrated attention; you think of little else than the realization of this purpose; your will is stimulated into unusual activity, and as a consequence you do your work with an increasing sense of power.

Grenville Kleiser

 

  • Concentration is my motto – first honesty, then industry, then concentration.

Andrew Carnegie

 

  • When you write down your ideas you automatically focus your full attention on them. Few if any of us can write one thought and think another at the same time. Thus a pencil and paper make excellent concentration tools.

Michael Le Boeuf

  • I have admired two principles. The first one is to train hard and get into the best possible physical condition. The second is to forget all about the other fellow until you face him in the ring and the bell sounds for the fight.

Rocky Marciano

 

9) Concentration of the mind is in a way common to both Knowledge and Yoga. Yoga aims at union of the individual with the universal, the Reality. This Reality cannot be new. It must exist even now, and it does exist.

Ramana Maharshi

 

10) The first law of success in this day, when so many things are clamoring for attention, is concentration – to bend all the energies to one point, and to go directly to that point, looking neither to the right nor to the left.

 

William Matthews
****
 

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா (Post No.4118)

Written  by London Swaminathan
Date: 1 August 2017
Time uploaded in London- 20-12
Post No. 4118
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான் எனது குடும்பத்துடன் ஜூலை (2017) மாதம் கடைசி ஆறு நாட்களுக்கு கிரேக்க நாட்டின் தலை நகர் ஆதென்சுக்கும் (Athens) எரிமலைத் தீவான சாண்டோரினிக்கும் (Santorini Islands) சென்று வந்தேன். நமது இந்து மதம் தொடர்பான விஷயங்களை இரண்டு மூன்று கட்டுரைகளில் தருகிறேன்.

சாண்டோரினி தீவுகள் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உளது. இதன் சிறப்புகள்:

 

  1. இது எரிமலை சீறி, கடலிலிருந்து வீசிய கற்பாறைக் குவியலினால் உண்டான தீவு. வழி நெடுகிலும் கருகிய கற்கள், பெரிய கருமையான பாறைகள் இவைகளைத் தாண்டி மலையேறிச் சென்றால் புகை வெளியே வரும் பெரிய எரிமலைப் பாறையைக் கணலாம். ஆனால் தீப்பிழம்போ, உருகிய எரிமலைக் குழம்போ ( Lava லாவா) கிடையாது. அடுப்பை அணைத்த பின் எவ்வளவு புகையுமோ அவ்வளவுதான்!

 

  1. பின்னர் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு கந்தக, அமிலப் பாறைகள் வழியே சென்று உடல்நலத்தைக் கெடுக்க வேண்டும் என்று கேட்கலாம். அவர்களே, கர்ப்பமான பெண்கள் வரக்கூடாது. கந்தகப் புகை கருவைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். நாக்கில் நுரை தள்ள ஆயிரக் கணக்காண அடிகள் உயரே செல்லக் காரணம்……………….?

 

3.பிரமிப்பூட்டும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகள். அதள பாதாளத்தில் கடலும் அதில் பவனி வரும் கப்பல்களும் படகுகளும் கண்கொள்ளாக் காட்சி. காமெரா உள்ளவர்கள் தொடர்ந்து படம் எடுத்த வண்ணம் இருப்பர். எத்தனை முறை படம் எடுத்தாலும் ஏதோ புதுப் புது காட்சிகளை எடுப்பது போலவே தோன்றுகிறது. இதில் சூரியனின் வண்ண ஜாலங்கள் வேறு! கடலே பொன்னிறமாக மாறிவிடும்.

 

 

4.இந்தத் தீவில் 90 சதவிகித கட்டிடங்கள் வெள்ளை நிற, நீல நிறக் கலவைதான். நாம் எப்படிக் கோவிலுக்கு சிவப்பு வெள்ளை பயன்படுத்துகிறோமோ அப்படி இவர்கள் வெள்ளை நிறச் சுவர்களின் மேலேயுள்ள கும்பம் போற இடங்களுக்கு நீல நிறம் அடித்திருக்கிறார்கள். இது கிரேக்கர்களுக்கு மிகவும் பிடித்த, புனிதமான வண்ணமாம்.

 

5.சூடான கடல் நீர்!

 

எரிமலையுள்ள இடத்துக்கு பெரிய படகில் சுமார் 100, 200 பேர்களை அழைத்துச் செல்லுவர். அதைப் பார்த்த பின்னர் சூடான வெப்ப நீர் ஊற்று உள்ள கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லுவர் . யார் யாருக்கு நீந்தத் தெரியுமோ அவர்கள் அனைவரும் கடலில் குதிக்கலாம் என்று அறிவித்தவுடன் அழகிகள், கிழவிகள், குமரன்கள், தொண்டுக் கிழங்கள் எல்லோரும் கடலில் குதிப்பார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளால் சூடுபடுத்தப்பட்ட நீருள்ள பகுதிக்குச் சென்று நீந்துவார்கள். பத்து நிமிடம் ஆன பின்னர் அவர்கள் கப்பலுக்கு (படகுக்கு) திரும்பிவரவேண்டும்.

 

ஒரு இளம் காதல் ஜோடி அருகில் இருந்த கப்பலுக்கு நீந்திச் சென்று ஏறிவிட்டன. உடையோ உடலில் மிக மிகக் குறைவு. கணவன் எங்கள் கப்பலில் கு தித்துவிட்டான். அந்தப் பெண்ணோ பயந்து நடுங்கி ‘’மதில் மேல் பூனையாக’’ தவித்தாள். பின்னர் அனவைரும் வேடிக்கைப் பார்க்கையில் எங்கள் கப்பலுக்குள் குதித்தாள்.

 

இந்த இரண்டு இடங்களுக்குச் சென்று கப்பலில் திரும்பி வர தலைக்கு 20 (Euro) யூரோ கட்டணம். இது சாண்டோரினி தீவுகளில் ஒரு நிகழ்வு. இது போல பல வீரதீர செயல்கள் செய்யலாம்.

 

 

6.ஒவ்வொரு சர்ச் (Church)  மீதும் மணிகலைளை மூன்று அல்லது ஆறு அல்லது பத்து என்று ஒரு பிரமிடு வடிவத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள்

 

7.கடற்கரை ஓரம் நெடுகிலும் நூற்றுக் கணக்கான ஓலைக் குடைகள் அதற்குக் கீழே இரண்டு படுக்கைகள்; இவை அனைத்தும் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு ஜோடி படுக்கைக்கு பத்து யூரோ. கீழே அரை நிர்வாண,,,, இல்லை முழு நிர்வாண அழகிகள், கணவர்களுடன் (???) படுத்திருப்பர். அவ்வப்பொழுது கடலில் குதிப்பர். சன் க்ரீமைத் (Sun Cream)  தடவிச் சூரியக் குளியல் எடுப்பர். எதற்காக இப்படிச் செய்கின்றனர்? சன்கிரீமைத் தடவி சூரியக்(Sun bath) குளியல் எடுத்தால் தோலின் நிறம் தாமிரக் கலராக — Copperகாப்பர் கலராக மாறிவிடும். நம்முடைய கோவில் செப்புத் திருமேனிகள் போல அழகிகள் ஜொலிப்பர்!!

 

 

அடுத்த கட்டுரையில் கழுதைக்கு ஏற்பட்ட கிராக்கி, சூரிய அஸ்தமன தரிசனம், தொல்பொருட் துறை மியூசியம், கி.மு 1660 வாக்கில் ஏற்பட்ட (Volcanic Eruption) எரிமலை வெடிப்பு அதனால் ஒரு (Minoan Civilization) நாகரீகம் அழிந்த கதை, அது நமது நாகரீகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம், சுனாமிப் பேரலைகளால் (Atlantis) அட்லாண்டிஸ் அழிந்த கதை, கிரேக்க அர்த்தடாக்ஸ் (Greek Orthodox Monastery) மொனாஸ் ட் ரீ, இயா (Oia) கிராமம், வரவு செலவுக் கணக்கு பற்றிச் சொல்லுகிறேன்

 

TAGS: சாண்டோரினி தீவு, எரிமலைப் பாறை, கருப்பு மணல், வெப்ப நீரூற்று

 

–Subham–

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! (Post No.4117)

Written by S NAGARAJAN

 

Date: 1 August 2017

 

Time uploaded in London:- 4-51am

 

 

Post No.4117

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

இரண்டு கோர ராட்ஸசர்கள் : எதிர் விளைவு பற்றிய ஒரு ஒப்பீடு

 

 

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! விசித்திரமான எதிரெதிர் மனப்போக்கு!!

 

by ச.நாகராஜன்

 

நம் கண் முன்னே வரலாறு கண்ட இரு மாபெரும் பாவிகள் கஜினியும், ஹிட்லரும்!

ஹிட்லரை சமீப காலத்திலேயே அனைவரும் பார்த்து விக்கித்து விட்டனர்.

இப்படி ஒருவன் தோன்ற முடியுமா என்ற திகைப்பும், மலைப்பும் அனைவருக்கும் உண்டு.

அரவிந்தர் அவனுக்கு ஆன்மாவே கிடையாது என்று கூறி இருக்கிறார்.

 

அப்படி ஒரு கோரமான படைப்பு; படைப்பு விசித்திரம்!

இதே அளவு கோரமான கொடூரன் கஜினி முகமது.

அவனுக்கும் ஆன்மா இருந்திருக்காது; கோரமான படைப்பு.

ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்கள் ரஷியர்கள்.

அவர்களால் இந்த கோர ராட்ஸசனின் கொடுமைகளைத் தாளவே முடியவில்லை.

ஆகவே ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என்று சபதம் எடுத்தனர் அவர்கள்.

BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH என்பதே அவர்கள் முழக்கமாகவும் சபதமாகவும் அமைந்தது.

 

ரஷியாவிலிருந்து வெளிவரும் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பிராவ்தாவைப் பற்றி அனைவரும் அறிவர். அதில் 22-8-1941 மாஸ்கோ ரேடியோவில் ஒலிபரப்பான ஒலிப்ரப்பு பற்றிய தலையங்கம் ஒன்று வெளியானது.

 

 

ஆங்கிலத்தில் அதை அப்படியே கீழே பார்க்கலாம்:

“BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH ‘ is the title of an editorial in the ‘Pravda’, the organ of the Communist party quoted by the Moscow radio on 22-8-1941. The article which gives details of atrocities perpetrated by the Nazis of Soviet citizen says, “no words can express the intensity of feeling and the wrath which prevails in the hearts of Soviet men and women on hearing the news of the atrocities carried out by the German hordes on their bloody way.

 

 

Intense hatred which knows no pity and which knows no mercy is the only rule of fighting against biped animals which constitute the German Fascist armies.

 

(இந்த வரியை அப்படியே கஜினி முகமதுவிற்கும் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களும் கூடச் சொல்லலாம்)

 

 

Wherever its armies pass they leave behing hem a morbid trail fo muder and robbery. The HITLER DOGS  have covered with shame not only German army but also all  GERMAN PEOPLE. To redeem its shame, to resore to itself the place in the family of peoples the German nation must clear itself of the HITLER VERMIN. Every hour brings news of crimes carried out by the Fascists on Soviet soil.”

 

The article goes on to give details of almost unspeakable horrors carried out by the Nazis in search for military information citing such instances as men, women and children soaked in petrol in a village square and burned alive.

A nine year old boy shot in front of his mother who then joined the guerillas. The journal declares, “corpses, corpses and again corpses, all totured and killed people, the same scenes in every village, in every town where the Germans have passed.”

 

“What army ever committed such crimes?” asks the Pravda. “Does the Fascist gang of robbers deserve the name of army for these monstrosities, for all these crimes are not isolated cases, they are a mass phenomenon, a system taught by the German Fascist army command.”

After giving an extract from the note-book of a dead German soldier referring to mass exefutions of population it quotes an excerpt from the secret instruction of a German army commander. This instruction states, “It is necessary to emphasise once more the fundamental problems arising from conditions of warfare on the eastern front. Here more than on other front it is necessary to develop in the German soldier a feeling of mercilessness. A feeling of COMPASSION towards anybody irrespective of age or sex  CANNOT BE TOLERATED.

Every initiative of German soldiers likely to spread fear of the German army must be encouraged. It is necessary to inculcate in every German soldier a feeling of personal interest in this war.

 

The Soviet people will never forget nor will it forget these crimes. The blood calls for CRUEL AND MERCILESS VENGEANCE.

 

This Vengeance will come; it’s hour is near. The Soviet people have arisen in the Fatherland war and they will not lay down their arms until the enemy is crushed and annihilated.

“BLOOD FOR BLOOD , DEATH FOR DEATH.”

 

இந்த கட்டுரையில் உள்ள வார்த்தைகளில் ஹிட்லர் அல்லது நாஜி என்பதற்கு பதிலாக கஜினி முகமது அல்லது அவன் படை என்றும் சோவியத் மக்கள் என்பதற்கு பதிலாக ஹிந்து மக்கள் என்றும் போட்டுப் படித்துப் பார்த்தால அதிசயமாக அப்படியே கட்டுரை பொருத்தமாக இருக்கிறது அல்லவா?

ரஷியர்கள் தாங்கள் நினைத்தபடி ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என பழி வாங்கினார்கள்.

 

 

சரித்திரம் காட்டும் சித்திரவதை முகாம்களையும் ஸ்டாலினின் வன் கொடுமைகளையும் படித்தவர்கள் இதை அறிவர்.

(உண்மையில் ஹிட்லரை விட அதிகமான பேரைக் கொன்று முதலிடத்தைப் பிடிப்பது ஸ்டாலின் என்பது அதிசயமான செய்தியாக இருக்கலாம்; ஆனால் அது உண்மை!)

இப்போது ஹிந்து தேசத்திற்கு வருவோம். ரஷியர்கள் போல ரத்தத்திற்கு ரத்தம் ;சாவுக்கு சாவு என்ற அணுகுமுறையில் ஹிந்துக்கள் ஒரு போதும் இருந்ததில்லை.

 

 

கஜினி முகமது தொட்டு ஔரங்கசீப் வரை, கிழக்கிந்த கம்பெனி வணிகன் முதல் இறுதியான மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஹிந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் எவ்வளவு?

ஒரே வரியில் பிரிட்டிஷாரைப் பார்த்து விவேகானந்தர் சொல்லி விட்டார்: “நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஹிந்து மஹா சமுத்திரம் அடியில் உள்ள சேற்றை முழுதுமாக வாரி உங்கள் மீது இறைத்தாலும் நீங்கள் எங்களுக்குச் செய்த தீங்கிற்குத் தினையளவும் பதில் செய்ததாக ஆகாது.

 

 

உண்மை; இது கஜினிக்கும் பொருந்தும் தானே!

 

    ஆனால் வழிவழியாக வந்த உயர்ந்த சிந்தனா பாரம்பரியம் கொண்ட ஹிந்துக்கள், முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக அழிக்க எண்ணம் கூடக் கொள்ளவில்லை. மதமாற்றவும் நினைக்கவில்லை!!      

    பிரிட்டிஷாரை ஒட்டு மொத்தமாக ரத்தத்திற்கு ரத்தம் சாவுக்கு சாவு என்று முழங்கி அழிக்க முற்படவில்லை.

 

இஸ்லாமியரை இன்று வரை வாழ வைத்து மதிப்புடன் நடத்தி வருகிறோம். அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் தோழமை உறவு தொடர்கிறது.

 

பிரிட்டிஷாரை மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கடைசி வரை நடத்தினோம் – சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட.

இது தான் ஹிந்து பாரம்பரியத்திற்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் உள்ள வேற்றுமை.

 

இஸ்லாம் தன்னை ஒப்புக்கொள்ளாதவனை ஒப்புக் கொள்ளாது. காபிர் காபிர் தான்!

கிறிஸ்தவமும் ஏசுவிடம் “ஓப்புக் கொடுக்காதவரை ஒப்புக் கொள்ளாது.

 

ஆனால் ஹிந்து மதமோ அப்படியில்லை; ஒரு ஹிந்துவானவன், “அனைவரும் வாழ வேண்டும்; கொள்கையில், வாழ்க்கை முறையில், மதத்தில், இனத்தில் வேறுபட்டிருந்தாலும் கூட என்று எப்போதும் எண்ணி வந்திருக்கிறான்; எண்ணி வருகிறான்; இனியும் எண்ணுவான்.

இதுவே ஒரே வித்தியாசம்.

 

இதே அணுகுமுறை இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வருமானால் அப்போது “உலகத்தில் கலி அழிந்தது; கிருத யுகம் எழுந்தது மாதோ என்று உரக்கக் கூறலாம்.

****

MORE DRINKING ANECDOTES (Post No.4116)

Compiled  by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-9-19 am
Post No. 4116
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

“I see you are drinking coffee, Judge”, someone remarked to Ben Lindsey on a hot summer’s day, “why don’t you try something cooling? Did you ever try gin and ginger ale?”

“No”, said judge Lindsey, “but I have tried fellows we have”.

 

xxx

The story is told about Arthur Sullivan, the composer, that the one faculty which never forsook him was his tonal sense. It is said that he returned one night to his flat in a state of inebriation sufficient to render the row of identical houses in which he lived a difficult problem in identification. Sullivan ambled down the row pausing from time to time and kicking at the metal shoe scrapers by the side of the steps of the houses. Coming to one, he paused, kicked it again, murmured to himself, “That’s right. E flat” and entered the door.

 

xxx

 

While Sir Wilfred Lawson was pushing anti-liquor agitation in the House of Lords, some of his waggish enemies passed this story about:

During Sir Wlifred’s university days he was accused of breaking rules, and the head of his college called him upon the carpet, “Sir, said the dignitary, “ I am told you have a barrel of beer in your room, which you should know is contrary to orders.”

“Well, sir, the delinquent admitted, “that is true; but the fact is I am of a weak constitution, and the doctors told me that if I drank this beer I should get stronger.”

“And are you stronger? the head asked sarcastically. “Oh yes, sir; indeed, I am. When the barrel came, I could scarcely move it; but it was not long before I could easily roll it around the room”.

xxx

In Texas they like their liquor straight, as witness the case of one old timer who, upon taking in his hand a small tumbler of whiskey, said, “Blindfold me and hold my nose—‘cause if I see it or smell it, my mouth will water and dilute it!”

xx

The young fellow, slightly green in the ways of the smart set, apologised to his hostess, explaining, “Though I may be slightly under the affluence of incohol, I am not so think as you drunk as I am”.

xxx Subham xxx

 

 

கடல் பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.4115)

ஆகஸ்ட் 2017 காலண்டர்

 

Compiled by London Swaminathan
Date: 26 July 2017
Time uploaded in London-6-32 am
Post No. 4115
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விழா நாட்கள்:- – ஆடிப் பெருக்கு -August 3; வரலெட்சுமி விரதம்—August 4; ரக்ஷாபந்தன்—7; காயத்ரி ஜபம்—8; ஜன்மாஷ்டமி/ கிருஷ்ணன் பிறப்பு—14 & 15;  சுதந்திர தினம்-15; விநாயக சதுர்த்தி—25

 

முகூர்த்த நாள்:- August 31

ஏகாதசி:-  3, 18

பௌர்ணமி- August 7

அமாவாசை- August 21

 

ஆகஸ்ட் 1 செவ்வாய்க்கிழமை

கடலிலே ஏற்றம் போட்ட கதை

 

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

கடலிலே துரும்பு கிடந்தாலும்,  மன திலே ஒரு சொல் கிடவாது

ஆகஸ்ட் 3 வியாழக் கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும் மலையிலே விளைகிற நார்த்தங்காய்க்கும் தொந்தம்

 

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

கடலிலே போட்டு சாக்கடையிலே தேடுகிறதா?

 

ஆகஸ்ட் 5 சனிக்கிழமை

கடலிலிட்ட புளி போல

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

 

ஆகஸ்ட் 7  திங்கட் கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

 

ஆகஸ்ட் 8 செவ்வாய்க்கிழமை

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற்போல

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளச்சி தாலி வற்றாது

ஆகஸ்ட் 10 வியாழக் கிழமை

கடல் திடலாகும், திடல் கடலாகும்

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

கடல் நீர் நிறைந்து என்ன? காஞ்சிரை பழுத்து என்ன?

ஆகஸ்ட் 12 சனிக்கிழமை

கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

கடல் பெருகினால் கரையும் பெருகுமா?

ஆகஸ்ட் 14  திங்கட் கிழமை

கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?

 

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை

கடல் மீனுக்கு நுளையன் இட்டது சட்டம்

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

கடலில் கரைத்த பெருங்காயம் போல

ஆகஸ்ட் 17 வியாழக் கிழமை

கடலில் கையைக் கழுவி விடுகிறதா?

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

கடலுக்கு கரை போடுவார் உண்டா?

ஆகஸ்ட் 19 சனிக்கிழமை

கடலை அடைக்க கரை போடலாமா?

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை

 

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

ஆகஸ்ட் 22 செவ்வாய்க்கிழமை

கடலைத் தூர்த்தாவது காரியத்தை முடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாதே—வெற்றிவேற்கை

ஆகஸ்ட் 24 வியாழக் கிழமை

கடலாற்றாக் காம நோய், குறள் 1175

 

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

பிறவிப் பெருங்கடல், குறள் 10

ஆகஸ்ட் 26 சனிக்கிழமை

நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – குறள் 17

 

ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடாநிலத்து –குறள் 496

 

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

கடலன்ன காமம் – குறள் 1137

ஆகஸ்ட் 29 செவ்வாய்க்கிழமை

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல

ஆகஸ்ட் 30 புதன் கிழமை

கப்பல் அடிப்பாரத்துக்கு, கடற்கரை மண்ணுக்குத் தவுகெட்டாற்போல

 

ஆகஸ்ட் 31 வியாழக் கிழமை

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெந்தலைப் புணரிக் குட கடற் குளிக்கும் (புறம்.2)

 

–Subham–

 

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி (Post No.4114)- Part 2

Written by S NAGARAJAN

 

Date: 26 July 2017

 

Time uploaded in London:- 5-33 am

 

 

Post No.4114

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ராட்ஸசன் கஜினி

 

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள் – 2

by ச.நாகராஜன்

 

கஜினியின் பத்தாம் படையெடுப்பு கி.பி.1022ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

 

கனௌஜ் ராஜாவுடன் கூட்டுச் சேர்ந்து அவன் லாகூரை ஆண்ட மன்னன் இரண்டாம் ஜெயபாலைத் தோற்கடித்தான்.

லாகூரை தனது ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டான்.

அங்கு தன் சார்பில் ஒரு கவர்னரை நியமித்தான்.

இது தான் முகலாய சாம்ராஜ்யம் இந்தியாவில் தோன்ற வழி வகுத்தது.

 

 

கஜினியின் பதினொன்றாம் படையெடுப்பு 1023ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஆனால் அவன் இதில் வழக்கம் போல கொள்ளையடிக்க முடியவில்லை.

 

அடுத்த ஆண்டு பால்க் நோக்கிப் படையெடுத்த அவன் அங்கு தன்னை எதிர்த்து கலகம் செய்த சுல்தானை அடக்கினான்.

ஆனால் அந்த மஹா பாவிக்கு – பாப ராட்ஸசனுக்கு – இந்தப் பன்னிரெண்டாம் படையெடுப்பு ஹிந்துக்களின் புனித பூமியான சோமநாத்தின் மீது பார்வை பதிய உதவியது.

மஹா பிரம்மாண்டமான சோம்நாத் ஆலயம் ஹிந்துக்க்ளின் உயிர்.

 

அரபிக் கடலின் அலைகள் தழுவி பூஜை செய்த ஆலயம் சோமநாதர் ஆலயம்.

பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வழிபட்ட தலம் அது.

1024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.

 

முல்தான் நகரை அடைந்தான் கஜினி. சிந்து பாலைவனத்தின் ஊடே ஆஜ்மீர் நகர் நோக்கிச் செல்ல ஆயத்தமானது அவனது சேனை.

 

மூன்று நாட்கள் நீடித்தது யுத்தம்.

 

ஆலயத்தை முகமதின் சேனை அணுகக் கூட முடியவில்லை. திடீரென்று கஜினி சேனாவீரர்கள் அனைவரும் பார்க்கும்படி தரையில் வீழ்ந்தான். வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான். உடனே மூர்க்கத்தனமாக வெறி கொண்ட அவனது சேனை போருக்கு ஆயத்தமானது.

 

உக்கிரமான போரில் சோமநாதர் ஆலயத்தைப் பாதுகாத்த படை பின் வாங்கியது. 5000 பேர் பிணமாகக் கிடந்தார்கள்.

சோமநாதர் ஆலயத்தின் பிரம்மாண்டமான மண்டபத்தை அடைந்தான் பாப ராட்ஸசன்.

 

பிறகு கர்பகிரஹத்தினுள் நுழைந்தான். பின்னர் தான் போரில் பயன்படுத்தும் தனது கோடாலியாலேயே விக்ரஹத்தை அடித்து நொறுக்கினான்.

விக்ரஹத்தின் இரு துண்டுகளை எடுத்து கஜினிக்கு அனைவரின் பார்வைக்காகவும் அனுப்பினான்.

சுமார் 600 ஆண்டுகள் அந்தத் துண்டுகள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

1612ஆம் ஆண்டு இந்த வரலாற்றையெல்லாம் எழுதிய ஃபெரிஷ்டா (Ferishta)  தான் அவற்றைப் பார்த்ததாக எழுதியுள்ளார்.

ஆலயத்தினுள் இருந்த பிராமணர்கள் கஜினி முகமதிடம் விக்ரஹத்தை மட்டும் சேதப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினர். அதற்கு ஈடாக ஒரு பெரும் செல்வத்தைத் தருவதாகச் சொல்லி மன்றாடினர்.

 

அவர்களிடம் ஆணவத்துடன் கஜினி முகமது,” வரலாற்றில், அழிப்பவன் முகமது என்று இருக்க வேண்டுமே அல்லாது சிலைகளை விற்பவன் முகமது” என்று இருக்கக் கூடாது” என்று கூறினான்.

 

அவன் சிலையை உடைத்து பெயர்த்தெடுத்த  போது அதனடியில் எழுத்தினால் விளக்க முடியாத பெரும் செல்வமும் ரத்தினக்கற்களும் கிடைத்தன.

 

சோமநாதர் என்ற பிரம்மாண்டமான ஆலயத்தில் 2000 பிராமணர்கள் பணி புரிந்தனர். 500 நாட்டியமாடும் நங்கையர் இருந்தனர்.300 பாடகர்களும் 300 நாவிதர்களும் இருந்தனர்.

நாவிதர்கள் வரும் பக்தர்கள் கர்பகிரஹம் செல்வதற்கு முன் அவர்களுக்கு மொட்டை அடிப்பது வழக்கம்.

 

நெஹ்ர்வாலா ராஜாவைத் தோற்கடித்த பின்னர் முகமது குஜராத்தின் தலைநகரில் சிறிது காலம் ஓய்வெடுத்தான்.

குஜராத் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதையே தனது தலைநகராமாக ஆக்கிக் கொள்ளலாமா என்று யோசித்தான்.

அங்கிருந்து சிலோன் மீதும் பெகு மீதும் படையெடுக்கலாம் என்றும் ஆலோசித்தான்.

 

பின்னர் தனது பிரதிநிதியை அங்கு நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தான்.

 

முல்தான் நோக்கிச் செல்ல முயன்ற அவன் பாலைவனத்தினூடே செல்ல வேண்டியிருந்தது. அவனுக்கு வழிகாட்டியாக அமைந்த ஹிந்துக்கள் தவறாக அவனை வழி நடத்தவே சொல்ல முடியாத சித்திரவதைக்கு ஆளானான்.

 

வெப்பம் ஒரு பக்கம்; தாகம் ஒரு பக்கம், அவன் தவித்தான்.

தனக்கு வழிகாட்டியவர்களை அவன் சித்திரவதை செய்ய ஆரம்பித்தான்.

ஒரு புனிதமான தலத்தைச் சின்னாபின்னமாக்கிய அவனுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் பழி வாங்க வேண்டும் என்றும் எண்ணியே அவனுக்கு அப்படித் தவறுதலாக வழிகாட்டியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 

ஒரு வழியாக 1026ஆம் ஆண்டு கஜினியை அவன் அடைந்தான்.

குஜராத்தில் அவன் நியமித்த வைசிராயான இளவரசன் அவனிடம் தன் எதிரியைத் தன்னிடம் தருமாறு வேண்டினான். கஜினியை அடைந்தவுடன் அவன் பெற்ற முதல் பெடிஷன் அது.

வைசிராயின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் எதிரியை அவனிடமே ஒப்படைக்க இணங்கினான் கஜினி.

 

ராட்ஸசனான அந்த வைசிராய் தனது சிம்மாசனத்தின் கீழே ஒரு குழியைத் தோண்டச் சொன்னான். அதில் அவனை உயிருடன் புதைப்பது அவன் திட்டம்.

 

ஆனால் தலைநகர் நோக்கிச் சென்ற வைசிராய் வழியில் ஒரு மரத்தின் அடியே இளைப்பாறுவதற்காகப் படுத்தான்.

தனது  முகத்தில் ஒரு சிவப்புத் துண்டைப் போட்டு மூடி அவன் உறங்க ஆரம்பித்தான்.

 

பெரிய பருந்து ஒன்று அந்த சிவப்புத் துண்டை ரத்தம் சொட்டும் இறைச்சித் துண்டு என்று நினைத்து பாய்ந்து கவ்வ, அவன் கண்கள் இரண்டும் பருந்தால் பிடுங்கப்பட்டன.

குருடனான அவன் ஆட்சி செய்யத் தகுதியற்றவன் ஆனான்.

எந்தக் குழியில் எதிரியைப் புதைக்க வேண்டும் என்று எண்ணினானோ அந்தக் குழியில் அவன் போடப்பட்டான்.

கஜினி முகமதின் கடைசியும் பதிமூன்றாவதுமான படையெடுப்பு பஞ்சாபில் இருந்த் ஜட் இனத்தவரை “புனிதமாக்கி” இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்வதற்காக எடுக்கப்பட்டது.

 

சோமநாதர் ஆலயத்தை அவன் அழிக்க முயன்ற போது ஜட்கள் அவனுக்கு எதிராக இருந்தனர்.

 

சிந்து நதியில் ஒரு கப்பல் போரில் கஜினி அவர்களைத் தோற்கடித்தான். எந்த இடத்தில் அலெக்ஸாண்டர் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நாட்டிற்கு திரும்பத் தீர்மானித்தானோ அதே இடம் தான் அது!

இத்துடன் கஜினியின் இந்தியப் படையெடுப்பு வரலாறு முடிகிறது.

பின்னால் அவன் செல்ஜுக் துருக்கர்கள் உள்ளிட்டவர்க்ளுடன் போரிட்டான்.அந்த வரலாறு தனி வரலாறு.

1030ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் கஜினியில் அவன் மரணமடைந்தான்.

 

அவன் மரணமடைவதற்கு இரு தினங்களுக்கு முன் அவன் மரணப்படுக்கையில் இருக்க, அவன் கொள்ளையடித்த செல்வம் அனைத்தும் வரிசையாக  அவன் முன்னர் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில் அவனது குதிரைகள், ஒட்டகங்கள், யானைகள், ரதங்கள் பிரம்மாணடமான ஆர்ப்பாட்டத்துடன் அணி வகுத்துச் சென்றன.

தான் இறப்பதை நினைத்து அவன் கலங்கிக் கண்ணீர் விட்டான்.

ஒரு வழியாக பாப ராட்ஸசனின் பூவுலக வாசம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

மனித இனத்தில் கோரமான கொலைகளை மதம் மற்றும்  இனம் ஆகியவற்றின் பேரால் செய்தவர் இருவர்.

ஒருவன் கஜினி முகமது.இன்னொருவன் ஹிட்லர்.

இஸ்லாத்தின் பெயரால் லட்சக்கணக்கானோரைக் கொன்று குவித்த மாபாவி கஜினி முகமது.

 

யூத இனத்தை அழிப்பேன் என்று கங்கணம் கட்டி லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தவன் ஹிட்லர்.

ஹிட்லருக்கு ஆன்மாவே கிடையாது என்று கூறியிருக்கிறார் மஹரிஷி அரவிந்தர். அவன் ஒரு கோரமான அபூர்வப் படைப்பு என்று இதற்குப் பொருள்.

 

அப்படியானால் அவனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவனுடன் சம எடை இருக்கும் கஜினிக்கும் ஆன்மா கிடையாதோ! அவனும் ஒரு கோரமான அபூர்வப் படைப்பு தானோ!!

 

ஒவ்வொரு ஹிந்துவும் சோமநாதர் ஆலயம் மீண்டும் எழுப்பப்பட்ட வரலாற்றைப் படித்து கஜினி அழிக்க முயன்றாலும் அழிக்க முடியாத மாபெரும் ஹிந்து சக்தியைப் பற்றி எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டும். அழியாத ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம் என்பதை உணர்ந்து அதைக் காக்க உறுதி பூண்டு பணியாற்ற வேண்டும்.

 

***                                                         வரலாறு தெரியாமல் ஹிந்துக்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாப ராட்ஸனைப் பற்றி எழுத நேர்ந்தது.அபூர்வ தியாகிகளாக அமைந்த ஹிந்து ராஜாக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவர்களைப் போற்றிப் புகழ வேண்டுமல்லவா!

 

***                                                             கஜினி பற்றிய் கட்டுரை முடிகிறது.

ஆனால் இதன் தொடர்ச்சியாக ஹிட்லரையும் கஜினியையும் இணைத்து இன்னொரு கட்டுரை விரைவில் மலரும்.

***                                                            இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள வரலாறுக்கு ஆதாரமாக அமையும் நூல் The Muslim Epoch.

எழுதியவர் : J.D.Rees I.C.S.

முதல் பதிப்பு வெளியான ஆண்டு 1894

 

 

 

Sleeping and Drinking Anecdotes (Post No.4113)

Compiled  by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-18-02
Post No. 4113
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Stephen Leacock says, “I often think this ‘insomnia’ business is about 90 percent nonsense. When I was a yong man living in boarding house in Toronto, my brother George came to visit me, and since there was no spare room, we had to share my bed. In the morning, after day light, I said to George,

“Did you get much sleep?”

“Not a damn minute”, said he.

Neither did I, I rejoined. “I could hear every sound all night.”

“Then we put our heads up from the bed clothes and the bed was coveed with plaster. The ceiling had fallen on us in the night. But we hadn’t noticed it. We had ‘insomnia’.

 

xxx

The old light house keeper had been at his post continuously for thirty ears. During that entire period he had been accustomed to a gun going off, practically under his nose, every six minutes, day and night This was the method followed for warning the ships Naturally, he grew hardened to this periodic explosion, and paid no attention to it. Then, one night, in his 31st year at his post, the gun failed to go off. The old man awoke from a sound slumber.

“What was that?” he cried in alarm.

xxx

 

Drinking Anecdotes

One day Dr Johnson was conversing with Mrs Williams, ablind friend of his. She was telling him where she had dined the day before, “There were several gentlemen there”, said she, “and I found that there had been a good deal of hard drinking”. She closed this observation with a tite moral reflection: I wonder what pleasure men can take in making beasts of themselves!”

Dr Johnson replied, “I wonder madam that you have not the penetration to see that he who makes a beast of himself gets rid of the pain of being a man.”

 

xxx

A lady once asked Secretary of State Evarts if drinking so many different wines did not make him seedy (unwell) the next day.

“No madam, he repied, It is the indifferent wines that produce that result”.

xxx

All teetotellers should be as gracious in their excuses as the Irish poet, George Russel, better known as A.E.

When declining a drink, he would murmur, “No, thank you. You see…………. I was born intoxicated”.

 

xxx

Sir Campbell Bannerman M.P. was once asked his opinion on the liquor traffic. He replied, “The liquor traffic is a large subject, and I can hardly enter on it here. There is an old story of a Highlander who was asked if whisky was not a bad thing. ‘Yes’, said he, ‘very bad—especially bad whiskey.”

–Subham–

 

 

துன்முகனுக்கு உண்டோ சுகம்? (Post No.4112)

Written by London Swaminathan
Date: 25 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4112
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘இடும்பைக்கு  இடும்பை படுப்பர்’ — துன்பத்துக்கு துன்பம் செய்வர் என்று வள்ளுவனும் நெப்போலியனும் சொன்னார்கள். அதாவது அறிவில் சிறந்தவர்கள் துன்பத்தையே திணறடித்துவிடுவார்கள்; அது பயந்துகொண்டு ஓடிவிடும்!

 

நீதி வெண்பா என்னும் நூலில் ஒரு அழகான செய்யுள்:-

 

தூய அறிவினர் முன் சூழ்துன்ப மில்லையாம்

காயும் விடங்கருடற் கில்லையாம் — ஆயுங்காற்

பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீத மில்லையாம்

துன்முகனுக்  குண்டோ சுகம்

 

பொருள்:-

ஆயுங்கால் = ஆராய்ந்து பார்க்குமிடத்து

காயும் விடம் கருடற்கு இல்லை = கொல்லுகின்ற விஷம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை

(அது போல)

தூய அறிவினர் முன் சூழ் துன்பம் இல்லை = நல்ல அறிவினர்க்கு வரும் துன்பம் அவருக்கு ஒரு தீங்கும் செய்யாது

பன் முகம் சேர் தீ முன் = நாலா பக்கங்களிலும் பற்றி எரியும் தீக்கு முன்னால்

பயில் சீதம் இல்லை = குளிர் என்பது நெருங்காது.

(அது போல)

துன்முகனுக்கு உண்டோ சுகம் = தீயோருக்கு சுகம் என்பது உண்டோ (கட்டாயம் இல்லை)

 

திருக்குறளில் இடுக்கண் அழியாமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அழகான பத்து குறள்களை அமைத்து இருக்கிறார்.

இடுக்கண் வருங்கால் நகுக (621)

இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படா அதவர் (623)

இப்படி அடுக்கிக் கொண்டே போவார்.

சுருக்கமாகச் சொன்னால் அறிவுடையோர் துன்பத்துக்கே துன்பம் செய்வர்!

 

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் ஞானிகளை இன்பமும் துன்பமும் ஒன்றும் செய்யாது  என்பார். இதைப் பல இடங்களில் திரும்பத் திரும்ப உரைப்பார்.

 

 

ஆத்திச் சூடி பாடிய அவ்வையோ மனந்தடுமாறேல், “துன்பத்திற்கிடங்கொடேல் என்கிறார்.

 

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை — என்று கொன்றை வேந்தன் செப்பும்

 

கேட்டில் உறுதி = கைப்பொருளை இழந்த காலத்தில் மனம் தளராமல் இருப்பது

உடைமை கூட்டும் = இழந்த அப்பொருளை உண்டாக்கும் அல்லது ஈடு செய்யும். அதாவது அதை இழந்த உணர்வே இல்லாமற் செய்துவிடும்.

 

போனால் போகட்டும் போடா’— என்ற தத்துவ உணர்வு பிறந்து விடும்!

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது என்று முதுமொழிக் காஞ்சி சொல்லும்

துன்பம் வெய்யோர்க்கு = துன்பத்தை விரும்பி பொறுத்துக் கொள்ளுவோருக்கு

இன்பம் எளிது = இன்பம் எளிதாகும்

 

ஒரு காரியத்தைச் செய்வோருக்கு அப்படிச் செய்யும்போது வரும் துன்பங்களை விரும்பி ஏற்கும் பக்குவம் வந்துவிட்டால் அந்தக் காரியம் எளிதில் முடியும்; சந்தோஷமும் ஏற்படும் என்பது பொருளாம்.

TAGS:–துன்பம், இடும்பை, குறள், அவ்வை, இன்பம்

 

–SUBHAM–

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி!- Part 1 (Post No.4111)

Written by S NAGARAJAN

 

Date: 25 July 2017

 

Time uploaded in London:- 6-57 am

 

 

Post No.4111

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ராட்ஸசன் கஜினி

 

கொலைகாரன்,கொள்ளைக்காரன் கஜினி முகமதுவின் கொடூரச் செயல்கள்

ச.நாகராஜன்

 

தனது நீண்ட நெடும் வரலாற்றில் ஹிந்துஸ்தானம் பார்த்த கொடூரன்களில் கஜினி முகமது ஒரு பாப ராட்ஸசன்.

 

அவன் செய்த கொடுமைகளை எழுதக் கூடாது என்று செகுலரிஸம் பெயரால் சொல்வது நியாயமில்லை.

வரலாறு மறைக்கப்படக் கூடாது. ஒரு வேளை மறக்கப்பட்டாலும் கூட!

அந்தப் பாவி இஸ்லாமின் பெயரால் ஹிந்துஸ்தானத்தில் செயத அக்கிரமங்களை எழுதவே கை நடுங்கும்.

 

கி.பி 1002ஆம் ஆண்டு அவன் ஹிந்துஸ்தானத்தின் மீது முதல் முறையாகப் படையெடுத்த பின் திரும்பிக் கொண்டிருந்தான்.

அந்த முதலாவது படையெடுப்பில் அவனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டவன் லாகூரை ஆண்ட ராஜா ஜெயபால்.

அவனை வென்ற கஜினி முகமது 16 நெக்லெஸ்கள் உட்பட ஏராள செல்வத்தைக் கொள்ளையடித்தான். ஒர் நெக்லஸின் மதிப்பு மட்டும் 80000 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்பு என்கிறார்  The Muslim Epoh என்ற நூலை எழுதிய ஜே.டி.ரீஸ்.( J.D.Rees I.C.S -First published in 1894)

 

 

ஹிந்து மன்னனான ஜெயபால் கஜினி முகமது மற்றும் அவனது புதல்வனால் தோற்கடிக்கப்பட்டவுடன் இந்தத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றான்.

ஆனந்த் பால் என்ற தன் மகனிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான்.

 

பின்னர், ஒரு பெரிய சிதையைத் தயார் செய்து அதில் புகுந்து தனக்குத் தானே சிதைய்ல் தீ மூட்டிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தான்.

 

அற்புதமான இந்த உயிர்த் தியாகம் பற்றி இதுவரை ஹிந்து மக்கள் அறிந்திருக்கின்றனரா என்பது கேள்விக் குறி.

ஹிந்து தியாகங்களையும் இந்த தேசத்தைத் தற்காத்துப் போரிட்ட வீரச் செம்மல்களையும் பற்றி  பாடப் புத்தகங்களிலோ அல்லது இதர விதமாகவோ எழுத செகுலர் அரசு இடம் தரவில்லை.

 

 

ஜெயபாலின் சிதை பற்றிச்  சொல்பவர் ஃபெரிஷ்டா (Ferishta) என்ற யாத்ரீகர். வரலாற்று ஆசிரியர்.

காளிகட்டைச் சேர்ந்த ஜமீந்தார்கள் கூட இதே போல தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்துக் கொண்டு தங்கள் வாரிசுகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். இதை பயணம் செய்த பயணிகள் எழுதி வைத்துள்ளார்கள்.

Sanskrit in Gazni Mohammed Coins!

 

இரண்டு வருடம் கழித்து பாடியாவைச் சேர்ந்த ராஜாவைக் குறி வைத்தான் கஜினி. அவனை மதமாற்றுவதே அவன் முக்கியக் குறிக்கோள்.

 

ஆனால் தீரமிக்க ராஜா மூன்று நாட்கள் இடைவிடாமல் போரிட்டான்.

 

நான்காம் நாள் இரண்டு படை வீரர்களும் செய் அல்லது செத்து மடி என்ற விரதத்துடன் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர்.

திடீரென்று மெக்காவை நோக்கி விழுந்து வணங்கிய கஜினி முகமது” முன்னேறுங்கள்; கடவுள் நம் பக்கம் இருக்கிறார்” என்று கூவினான்.

 

தீவிரமான தாக்குதலை எதிர் கொண்ட ஹிந்து ராஜா தன் கோட்டையை விட்டு வெளியேறி காட்டை அடைந்து தன் வாளால் தன்னை முடித்துக் கொண்டான்.

முதல் மற்றும் இரண்டாம் படையெடுப்பில் அடித்த கொள்ளையைப் பார்த்த கஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது.

இவ்வளவு செல்வமா?

 

தனது மூன்றாம் படையெடுப்புக்கு ஒரு வருடம் கழித்து ஆசையுடன் ஆயத்தமானான்.

 

ஆனந்த் பாலுடன் போரிட்ட அபுல் ஃபட்டா லோடி ஆனந்த் பால் தோற்கவே, கஜினியிடம் சமாதானம் பேசினான். சமாதானம் உடனே ஏற்கப்பட்டது. ஏனெனில் காஸ்கர் அரசன் கோரஸ்ஸானின் தலை நகரான ஹெராத் என்ற நகரின் மீது படையெடுத்தான்.

 

மிகுந்த தந்திரசாலியான கஜினி இந்த அவசர நிலையில் தனது வெற்றிகளை எல்லாம் ஒரு இந்திய பிரதிநிதியிடம் ஒப்படைத்தான்.

 

அவனது முதல் வேலை ஹிந்துக்கள் அனைவரையும் மதமாற்றம் செய்ய வேண்டும், முகமதியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

 

தன் தேச மக்களுக்கு எதிராகத் தானே துரோகம் இழைக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது.

1006இல் கஜினி நோக்கிச் சென்ற முகமது, பல்க் என்ற இடம் அருகே நடந்த பெரும் போரில் எலிக் கான் என்பவனை எதிர்த்தான்.

 

போரைப் பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் குதிரைகளின் ஓலமும் வீரர்களின் கைகலப்பு சத்தமும் வானை எட்டியது என்று எழுதியுள்ளனர்.

 

1008இல் லாகூர் மன்னனான ஆனந்த் பாலை ஒரேயடியாக அழிப்பது என்று கஜினி முகமது கங்கணம் பூண்டான்.

ஆனந்த் பாலோ முகமதியர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து ஹிந்து மன்னர்களின் உதவியையும் நாடினான். அனைவரும் உடன் பட்டனர்.

 

Ghazni in modern Afghanistan

வரலாறு காணாத அளவில் மிக பிரம்மாண்டமான ஹிந்து சேனை ஒன்று உருவானது.

இந்த சேனையின் பிரம்மாண்டம் எவ்வளவு பெரியது என்றால் பெஷாவர் அருகே அது கஜினி முகமதை நாற்பது நாட்கள் எதிர் கொண்டு போரிட்டது.

 

ஆனால் தந்திரக்காரனான முகமது மன்னனின் யானையைத் துரத்திக் கொண்டே செல்லவே ஹிந்து வீரர்கள் தலைவன் இல்லாத நிலையில் கலங்கி அசந்து நின்றனர்.இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முகமதுவின் சேனை ஹிந்து வீரர்களை கொன்று குவித்தது.

 

இருபதினாயிரம் பேர் போர்க்களத்திலிருந்து ஓடினர்.

அடுத்து, அமிர்த்ஸருக்கு வடகிழக்கில் இருந்த இமயமலை அடிவார நகரான நாகர்கோட்டின் மீது கஜினி முகமது பார்வையைச் செலுத்தினான்.

 

அங்கிருந்து தங்கம், விலை மதிப்புள்ள ரத்தினக்கற்கள், வெள்ளி உள்ளிட்ட ஏராளமான செல்வத்தைக் கொள்ளையடித்தான்.

அந்தக் கால மதிப்பின் படி இது 313,333 ஸ்டர்லிங் பவுண்ட் மதிப்புடையதாகும்.

 

கஜினிக்குத் திரும்பிய முகமது தனது நகருக்கு வெளியே ஒரு பெரிய மைதானத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அங்கு தான் கொள்ளையடித்த அனைத்தையும் கண்காட்சியாக வைத்தான்.

 

தன் சேனையில் இருந்த படைப்பிரிவு தலைவர்களுக்கு பரிசுகளையும் வீர விருதுகளையும் அளித்தான்.

மக்களுக்கோ ஒரே விருந்து!

 

1011இல் டெல்லிக்கு மேற்குப் பக்கம் 30 மைல் தொலைவில் இருந்த தாணேஸ்வரத்தை நோக்கித் தனது ஆறாம் படையெடுப்பை எடுத்தான்.

புனிதமான யமுனை நதியோ அருகில் இருந்தது. மன்னன் ஆனந்த் பால் தனது சகோதரனை அனுப்பினான்.

 

தாணேஸ்வரத்தை விட்டு விடுவதாயிருந்தால் அந்தப் படையெடுப்பில் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரனான கஜினி முகமது வழக்கமாக எதிர் பார்க்கும் கொள்ளையைத் தந்து விடுவதாக சொல்லி அனுப்பினான்.

 

ஆனால் கோவில் சிலைகளை உடைப்பதையே நோக்கமாகக் கொண்ட கஜினி முகமது அந்த கோரிக்கையை நிராகரித்தான்.

கோவில்கள் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

இரண்டு லட்சம் பேரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்.

 

இதனால் ஒவ்வொரு முகமதிய வீரனுக்கும் ஏராளமான அடிமைகள் கிடைத்தனர்.

 

 

தனது ஏழாம் படையெடுப்பில் அந்தப் பாவி எதிர் கொண்டது ஆனந்த் பாலை அடுத்து அரியணை ஏறிய இரண்டாம் ஜெய்பாலை! காஷ்மீரில் இருந்த அனைவரையும் முஸ்லீம்களாக மாறக் கட்டாயப் படுத்தினான்.

 

மாற மறுத்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

அவனது எட்டாம் படையெடுப்பும் காஷ்மீரின் மீது தான்.

தன்னை எதிர்த்த படைத்தலைவர்களைத் தண்டிப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக அவன் கொண்டிருந்தான்.

கங்கைக் கரையில் அமைந்திருந்த கனௌஜ் நகரின் மீது அவன் பார்வை விழுந்தது.

 

அந்த அழகிய நகரம் செல்வச் செழிப்பிற்கு பெயர் பெற்றது. உலக அளவில் அது ஒரு உன்னதமான நகரம்.

ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அங்கிருந்த வெற்றிலைபாக்கு கடைகள் மட்டும் 30000 என்ற எண்ணிக்கையைத் தொட்டதாம்.

 

அந்த நாட்களில் உலகின் எந்த நாட்டிலும் இந்த எண்ணிக்கையில் வெற்றிலை பாக்கு கடைகள் இல்லை என்றால் இதர கடைகளைப் பற்றியும் கனௌஜின் செல்வச் செழிப்பையும் யாரும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

கஜினியின் படையில் ஒரு லட்சம் குதிரைகள் இருந்தன. 20000 போர் வீரர்கள் இருந்தனர்.

 

ஆனால் ராஜாவோ எதிர்ப்பே தெரிவிக்காமல் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

மதுராவில் அடித்த கொள்ளை சொல்லத்தரமன்று. அனைத்துக் கோவில்களும் இடிக்கப்பட்டன. சிலைகள் உடைக்கப்பட்டன.

தப்பியது மதுரா கோவில் மட்டுமே. ஏன்? அது அவ்வளவு வலுவாக உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.

 

 

அதை கஜினி முகமதாலும் கூட இடிக்க முடியவில்லை.

மஹாபன் ராஜா கஜினி தன் மக்களை கொன்று குவிக்கும் கோரத்தைப் பார்த்து கண்ணீர் விட்டான்.

 

தன் மனைவி மக்களுடன் நதியினுள் சென்றான்.

இதே போல ரஜபுதன ராஜாவும் தங்கள் மனைவி மகன்களுடன் தீயை எரியூட்டி அதில் விழுந்து உயிர் துறந்தனர்.

தோல்வியை ஏற்க அவர்கள் மனம் ஒப்பவில்லை.

இப்போது கஜினி அடித்த கொள்ளையின் மதிப்பு அந்தக் கால பண மதிப்பீட்டில் 416000 ஸ்டர்லிங் பவுண்டாகும்!!

 

5300 அடிமைகள், 350 யானைகள் , இது தவிர சிலைகளின் கண்களில் இருந்த விலையே மதிக்க முடியாத மாணிக்கக் கற்கள், முத்துக்கள் பதித்த நெக்லேஸ்கள், நீலக்கற்கள் ஆகியவையும் கொள்ளையில் அடக்கம்.

 

இந்தக் கொள்ளையால் மகிழ்ச்சி அடைந்த கஜினி  ஊருக்குத் திரும்பியவுடன் அங்கு சலவைக் கற்களால் ஒரு பெரிய மசூதியைக் கட்டினான். அதில் இருந்த கம்பளங்களில் விதவிதமான நவரத்தினக் கற்களை இழைத்தான்.

 

அவன் செய்த கொள்ளையையும் கொலையையும் நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும்.

 

அந்த பாப ராட்ஸசன் செய்த இன்னும் பல கொடுமைகளை இன்னொரு கட்டுரையில் காணலாம்

 

– அடுத்த கட்டுரையுடன் முடியும்.