ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி, நடிகை ஜேன் பாண்டா (Post No.7427)

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7427

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

1992ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்  தினமணியில் எழுதிய மூன்று பழைய விஷயங்கள்

1.பிரிட்டிஷ் மஹாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) – இன்னும் பதவியில் நீடிக்கிறார். விக்டோரியா மகாராணியின் 64 ஆண்டு ஆட்சி சாதனையை முறியடித்த பின்னர் பதவி விலகி இளவரசர் சார்லசுக்கு வழிவிடுவார் என்று நம்பப்பட்டது . ஆனால் இப்போது அவர் 67 ஆண்டுகளாக பதவியில் உள்ளார். தற்கால உலகில் நீண்ட காலம் ஆடசி செய்யும் ராணி இவர்தான்

XXXX

ஜேன் பாண்டா (Jane Fonda) வின் மணம் முறிந்தது.

மூன்றாவது கணவரான டெட்டுடன் 2001 வரை வாழ்ந்தார்.

பின்னர் நாலாவது கணவராக ரிசர்ட் பெறி வந்தார். அவர்கள் திருமண வாழ்வு 2009ல் துவங்கி 2017ல் முடிந்தது. இப்போது ஜேனுக்கு வயது 82.

XXX

ஷான் கானரி

ஷான் கானரிக்கு (Sean Connery) வயது 89. அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

TAGS —ஷான் கானரி, பிரிட்டிஷ் மஹாராணி , இரண்டாம் எலிசபெத்,நடிகை ஜேன் பாண்டா

–SUBHAM–

வைகுண்ட ஏகாதசிக்கு ஏன் பெருமை அதிகம்? (Post No.7426)

By London swaminathan

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7426

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Tags முக்கோடி ,ருக்மாங்கதன் , வைகுண்ட ஏகாதசி,

agathi leaves
Hindu Board game- Paramapada Sopana Padam
Famous Vishnu Temple in Sri Rangam.

WHAT IS VAIKUNDA EKADASI? WHY DO HINDUS FAST ON THAT DAY? WHY IS IT CALLED MOKSHA EKADASI? (7425)

Written by London Swaminathan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7425

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Agathi leaves
Hindu Board Game- Snakes and Ladders

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

Written by S Nagarajan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7424

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்

9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.

காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற பொருள் கொள்ள வைக்கும் இது.  

இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள் + இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது. காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது. பர்யங்க நிலையில் அதாவது கால்களை மடக்கி அமர்ந்து, யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகக் காட்சி அளிக்கும் இறைவனை வேதாந்த தேசிகர் ஒன்பது ஸ்லோகங்களால் துதிக்கிறார். ஒரு சிறப்பு அம்சம் இறைவன் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார் இங்கு.

இறுதி ஸ்லோகத்தில் இதைக் கூறுவோருக்கு இஷ்ட பலிதம் ஏற்படும் என அவர் அருள்கிறார்.

12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.

காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலமும் கூட. இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம் இது தான். ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.

பரமார்த்தம் என்றால் மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்றாகும். அது ஸ்ரீ ராமரைக் குறிக்கிறது.

போரேறு என்று ஆழ்வார்கள் ராமரைக் குறிக்கையில் இந்த ஸ்துதியில் தேசிகர் ராமரை ரணபுங்கவன் என்றும் ஆஹவபுங்கவன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது போரில் வெற்றி பெறும் மிகப் பெரும் வீரன் என்று பொருள் இதற்கு.

சரணாகதி அடைந்தவருக்கு அருள் புரிபவன் என ராமரை தேசிகர் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறார்.

13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்

53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப் போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில் வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.

சாதாரணமாக பாதம் முதல் கேசம் வரை பாதாதி கேசம் என்ற மரபை மாற்றி தேசிகர் இதில் இறைவனை கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கிறார். மனிதர்களை மட்டுமே இப்படிப் பாடுவது மரபு என்பதால் இறைவனை தேசிகர் தனது நண்பராகக் கருதுவது புலப்படுகிறது. தேவநாதனை உபநிடதம் சத்யம் என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்டவனை தேசிகர் பாடியதால் அவர் சத்யவாதியாக ஒளிர்கிறார் என இறுதி ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

14) ஸ்ரீ அச்சுத சதகம்

101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம் திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும். நாயிகா பாவத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல் இது. மதுர பக்தி பாவத்தை இதில் காணலாம்.

15) ஸ்ரீ மஹாவீர வைபவம்

உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான இதில் 96 உரைநடை வரிகள்  செய்யுளைக் காணலாம்.

பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில் ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.

இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனது இந்த சுருக்கமான ராமாயணத்தை அவரே கடோர- சுகுமார  நடையில் – கடினமான மற்றும் எளிய நடையில் இயற்றியிருப்பதாக இறுதி ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

***

HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422)

Acupressure in Rig Veda

HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7422

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

I explained the medical knowledge in the Rig Vedic hymn 10-136 yesterday on the basis of R T Griffith’s comments. Griffith (1826- 1906) makes another interesting comment in the next Rig Vedic hymn in the Tenth Mandala (10-137)

I add my comments about the Vedic seers’ knowledge about the two monsoons of India and Naturopathy including massage and acupressure.

Here is the full hymn:-

Rig Veda 10-137

xxx

Griffith says,

10-137-7

This stanza is important as showing that the Indians employed touches or laying-on of hands to relieve suffering or to restore health. See also X-60-12

Griffith’s translation of 10-60-12 also talks about hand cure:-

Felicitous is this mine hand, yet more felicitous is this.

This hand contains all healing balm, and this makes whole with gentle touch . tamilandvedas.com , swamiindology.blogspot.com

10-137-4

The Wind speaks , weakening malady: yaksma may be sickness in general, or the name of a large class of diseases, probably of consumptive nature.

10-137-1

Who committed sin: sickness and death being regarded as the consequence of sins.

Xxx

My Comments

This hymn is received from the great Seven Seers; Hindus named the Ursa Major constellation in the northern sky as Seven Seers (Sapta Rishi) constellation. They also named the twin star at the end of the seven star system as Vasishta and his wife Arundhati.

These Seven Seers and the chaste woman Arundhati are worshipped by Hindus for over 2000 years from the Himalayas to Kanyakumari. 2000 year old Sangam Tamil literature has all the praise for the chaste Hindu wife Arundhati in umpteen places. Seven Star system is worshipped by the Tamils according to Narrinai verse 231 by Tamil poet Ilanaganar. tamilandvedas.com , swamiindology.blogspot.com

The Sapta Rishis say one stanza each in the hymn; they are

Bharadvaja, Kasyapa, Gautama, Atri, Visvamitra, Jamadagni,

and Vasishtha.

xxxx

Two Monsoons in the Rig Veda

Meteorology and Two Monsoons

10-137-2 speaks of the two winds from the seas. My interpretation is that they are South West Monsoon and North East Monsoon. Kalidasa of first century BCE, travels with the S W monsoon up to the Himalaya in his poem Megadhuta. He is the oldest poet who tracks the monsoon from south to north. He is the oldest tourist guide who describes all the places along the path of the S W monsoon.

10-137-1 shows the belief in the Karma theory of Hindus. What we get in this birth is from the acts we did in our previous births; Diseases come out of sins. Even atheists would agree that the sinful acts(smoking, drinking, too much indulgence etc)  done during this birth would result in several types of diseases. tamilandvedas.com , swamiindology.blogspot.com

10-137-5 is about the wind born cure. Several patients carry oxygen cylinders for easy breathing. Hindus know from the early days that fresh, unpolluted air refreshes the body and mind. Maruts mentioned here are Wind Gods. Maruti (Hanuman, Anjaneya) is derived from this wind deity Marut.

10-137-6 is about the hydrotherapy; people use water to cure various diseases. This includes the holy dip in cold water, hot water springs and the springs with medicinal properties. Modern day spas are also included.

10-137-7  is about the ten fingers used to cure diseases. Those who believe in the human aura interpreted it as the magical vibration that passed to the patients. Those who don’t believe in such things interpret is as massage and acupressure.  We have already seen Acupuncture in the Bhisma’s Bed of Arrows. So here we may interpret it as Acupressure and Massage techniques with ten fingers. These are all part of Naturopathy.

All the Seven Rishis use nature as balms. Their soothing words will give psychological treatment to the patients. Placebo effect is great.

So I look at this hymn as a hymn on Naturopathy, Magical hand cure, Hydrotherapy, Meteorology and the Fresh air therapy which we get in hilly tourist resorts. tamilandvedas.com , swamiindology.blogspot.com

Hydrotherapy

Long Live the Vedic Seers.

–subham–

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 2 (Post No.7421)

Acupressure in Rig Veda

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7421

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Vedic Seers knew Monsoons
Hydrotherapy in Rig Veda

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 3 (Post No.7420)

Written by S Nagarajan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7420

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

9) ஸ்ரீ வேகாசேது ஸ்தோத்ரம்

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள ஸ்தோத்ரம் இது. வேகா என்ற நதியின் மீது சேது (அணை) கட்டியவர் பற்றிய புகழ் மாலை இது.

நான்கு முகமுடைய பிரம்மா ஒரு யாகம் செய்ய விரும்பினார். அவர் மீது கோபம் கொண்ட பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த யாகத்திற்கு இடையூறு செய்ய விரும்பினாள். பாய்ந்தோடும் வேகா என்ற நதியாக அவள் மாறினாள். யாக பூமியில் பாய்ந்தோட விழைந்தாள். பிரம்மா விஷ்ணுவை நோக்கித் துதிக்க, விஷ்ணு ஒரு சேதுவாக (அணையாக) வேகா நதியின் இடையே தோன்றி பிரம்மாவின் யாகத்தைக் காப்பாற்றினார். சின்ன காஞ்சிபுரத்திற்கு மேற்கே  ஒரு மைல் தொலைவில் உள்ள இந்த இடம் திருவெஃகா என ஆழ்வார்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் ஸ்தல புராணம் தரும் விவரங்கள் இவை.

யதோக்தகாரி என்பது இங்குள்ள பெருமாள் பெயர், தமிழில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர். பிரம்மாவின் வரலாறைச் சுட்டிக் காட்டுகிறது இது.

திருமழிசை ஆழ்வாரின் வாழ்வில் நடந்த ஒரு புகழ் பெற்ற சம்பவம் நடந்த இடமும் இது தான்.

பல்லவ மன்னன் திருமழிசை ஆழ்வாரின் சிஷ்யரான கனி கண்ணன் என்பவர் பெருமாளைத் துதித்துப் பாடுவதைக் கேட்டான். அவரது இனிய குரலால் கவரப்பட்ட அவன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி ஆணையிட்டான். அவரோ மறுத்து விட்டார்.கோபமடைந்த மன்னன் உடனே அவரை நகரை விட்டு நீங்குமாறு உத்தரவிட்டான். இதைக் கேட்ட ஆழ்வார் தானும் கனிகண்ணனுடன் நகரை விட்டுப் புறப்பட நிச்சயித்தார்.

தான் வணங்கும் பெருமாளும் அங்கிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

பெருமாளிடம் சென்றார்; ஒரு விண்ணப்பம் செய்தார் இப்படி:

கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

பெருமாள் ஆழ்வாருடனும் அவர் சீடருடனும் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

நகரே இருளில் மூழ்கியது.

திடுக்கிட்ட மன்னவன் தன் தவறை உணர்ந்தான். ஆழ்வாரிடம் சென்று இறைஞ்சி மூவரும் மீண்டும் திரும்ப வேண்டும் என வேண்டினான்.

ஆழ்வாரும் மனம் கனிந்தார்.

பெருமாளை நோக்கித் துதித்தார் இப்படி :

கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய

செந்நாப் புலவனும் செலவொழிந்தேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

பெருமாள் இந்த வேண்டுகோளுக்கு மனமிரங்கி மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளி பைந்நாகப் பாயின் மீது படுத்து அருள் பாலிக்கலானார்.

அற்புதமான இந்த உண்மை வரலாறு பகவானின் சௌலப்ய குணத்தை – பக்தர்களுக்கு எளியவன் ஆகும் குணத்தைக் – காண்பிக்கிறது.

இந்த வரலாறால் கவரப்பட்ட வேதாந்த தேசிகர் 9ஆம் ஸ்லோகத்தில் பெருமாளை காஞ்சி பாக்யம் எனக் கூறுகிறார்.(காஞ்சி பாக்யம் கமல நிலயா – ஸ்லோகம் 9)

இந்த 9 ஸ்லோகங்களைச் சொன்னவர்களின் வார்த்தைகளின் படி பெருமாள் நடப்பார் என்று வேதாந்த தேசிகர் பத்தாவது ஸ்லோகத்தில் அருள்கிறார்.

10) ஸ்ரீ அஷ்டபுஜாஷ்டகம்

இந்த ஸ்தோத்திரம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது.

காஞ்சியில் பிரம்மா ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். அதைத் தடுக்க அசுரர்கள் முயன்றனர். உடனே ஆதி கேசவப் பெருமாள் எட்டு கரங்களைக் கொண்டு அவர்களை அழித்தார்.

ஆழ்வார்கள் இந்த ஸ்தலத்தை அட்டபுயக்கரம் எனக் குறிப்பிடுகின்றனர். இது 108 வைணவத் தலங்களுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது.

விஷ்ணு இங்கு தனது வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடபுறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.

மூலவருக்கு இப்படி எட்டு கரங்கள் இருக்க, உற்சவருக்கோ நான்கு கரங்கள் மட்டுமே உண்டு.

இறுதி ஸ்லோகத்தில் தேசிகர் இந்த ஸ்லோகங்களைப் படித்தவர்கள் தன்னை சரணம் அடைந்தவர்களுக்கு தன் கரங்களை இரட்டிப்பாக்கிய விஷ்ணு அருள்வார் என்று கூறியருள்கிறார்.

***

ரஷ்யத் தலைவர் யெல்ட்சின் (Post No.7419)

Written by London Swaminathan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7419

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மதுபானக் குடிப்பழக்கம் மிகவும் ஆபத்தான அளவுக்கு அதிகரித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் யெல்ட்சின். அவர் 2007ல் இறந்ததற்கு இருதய நோய் காரணம் காட்டப்பட்டாலும் உண்மையில் அவர் உடல் நிலையைப் பாதித்தது குடியே . 1990 முதல் 1999  வரை பதவியில் இருந்தார். பின்னர் அரசியல் கொந்தளிப்பால் ராஜினாமாச் செய்தார் . இவரைப் பதவியிலிருந்தது அகற்றும் தீர்மானங்களுக்கு (Impeachment) மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாததால் பதவியில் நீடித்தார். பின்னர் ராஜினாமாச் செய்தார். நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர் தனது சுய சரிதையையையும் எழுதினார். எல்டசினுக்குப் பின்னர் தற்போது ரஷ்ய அதிபராக உள்ள விளாடிமீர் புடின் பதவி ஏற்றார்

GUINEA – CIRCA 2011: A stamp printed in Republic of Guinea shows first Boris Nikolayevich Yeltsin (1931-2007), President of the Russian Federation, series George H. W. Bush forty-first President of the United States, circa 2011
bonus item

–subham–

TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS- Part 1(Post No.7418)

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7418

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 1 (Post No.7417)