சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)

Date: 6 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-52 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4463

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சிவ நாம மகிமை

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

 

ச.நாகராஜன்

 

1

சிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.

பன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.

 

32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

தமிழ் இவர் வாக்கில் விளையாடியது; அற்புதங்களை நிகழ்த்தியது.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.

தமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.

 

அப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.

சிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

 

2

சிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.

 

சிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.

எல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.

 

வேத மாகமம் வேறும் பலப்பல

ஓதி நாளு முளந் தடு மாறன்மின்

சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே

என்பது முதல் பாடல்.

 

வேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.

 

சாந்தி ராயண மாதி தவத்தினான்

வாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்

போந்த பாதக மேனும் பொருக்கெனத்

தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே

என்பது நான்காவது பாடல்.

சாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள்? எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.

தீய நாளொடு கோளின் செயிர்தபும்

நோய கன்றிடு நூறெனக் கூறிய

ஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்

தீய தீருஞ் சிவ சிவ வென்மினே

என்பது ஆறாவது பாடல்.

 

நவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.

இறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் எப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

 

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்

கொலைவேட னெனினும் பொல்லாப்

பழிமருவு பதகனெனி னும் பதிக

னெனினுமிகப் பகரா நின்ற

மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்

றொரு முறைதான் மொழியில் லன்னோன்

செழியநறு மலரடியின் றுகளன்றோ

வெங்கள் குல தெய்வ மென்ப.

 

எப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.

 

 

சிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.

 

பாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

***

MARRIAGE – TWO OPPOSSING TAMIL VIEWS (Post No.4462)

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7–49 am

 

 

Post No. 4462

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

(Tamil Joke: Husband:While I read my love letters now which i sent you before marriage, i feel they were nonsense/rubbish; Wife: Oh, for me they looked nonsense/rubbish even before marriage!)

Manu in his Manava Dhrama Shastra and Tiru Valluvar in his Tamil Veda Tirukkural support marriage; but Jain Munis who composed several hundred poems in Tamil in Naladiyar and Pazamozi had different views. Dr G U Pope, Christian priest and Tamil scholar, Father Constantine Beschi, Jesuit priest from Italy and a Tamil scholar had compared several couplets in Tirukkural and Manu’s Law book. Dr G U Popes puts forth several arguments in his translation of Tirukkural, published in 1886, to prove that Tiruvalluvar, author of Tirukkural was not a Jain. One of the arguments is about marriage.

 

Tiruvalluvar, an ardent Hindu supports marrying. Dr G U Pope compared couplet 41 with Manu’s 3-78 and showed Naladiyar, the poems of Jains were opposed to marriage.

 

We know the views of the Greek philosopher Socrates:

“By all means marry; if you get good wife, you will become happy; if you get a bad one, you will become a philosopher.”

 

Tamil poet Valluvar says,

He is the true householder who helps the three orders of the virtuous (Brahmachari, Vanaprastan, Sanyasin) in their home life is the fruit of love begotten by a harmonious, right path of life.

 

Even before Valluvar, Manu said the same in Sanskrit:

“3.78. Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order (Manu).”

Marriage is throwing Stones at you!

Naladiyar, the didactic book has 400 verses composed by Jain saints of Tamil Nadu who were great Tamil scholars. Here are two poems opposing marriage:

“Since it is a hard thing for a husband to reject his wife though she may neither have borne children nor have a good disposition, the wise have, on account of the misery entailed by matrimony, called it a thing to be eschewed – Naladiyar verse 56.

“Though one is advised to eschew marriage, he eschews it not; though the sound of death-drum pierces his ear , he heeds it not. He moreover takes in another wife and indulges in the delusion of matrimonial pleasures. These the wise say ‘ like one stoning himself’ “- Naladiyar 364

 

‘to be or not to be’ is up to you!

–subham–

 

 

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

காலத்திற்கு முன்னரே அவதரித்த அரவிந்தர்! (Post No.4460)

Date: 5 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-13 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4460

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

டிசம்பர் 5 : அரவிந்தர் அஞ்சலி

 

காலத்திற்கு முன்னரே அவதரித்த அரவிந்தர்!

 

.நாகராஜன்

 

1

அரவிந்தர்!

பாரத மண்ணிலே உதித்த அபூர்வமான அவதார புருஷர்.

அவரது பேரறிவு பரந்தது; எல்லையற்றது; ஆழம் காண முடியாதது.

அவரது பேரருள் பணியும் அப்படித்தான்!

வங்கத்திலே பிறந்து உலகினருக்கு வழிகாட்ட புதுவையிலே வந்து வசித்தார்.

அவர் பிறந்தது 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி.

அவரது சமாதி தினம் டிசம்பர் 5, 1950

அவரிடம் கடிதம் மூலமாகவே ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டவர் அவரது அணுக்க பக்தரான நிரோத்பரன். (நிரோத்பரனைப் பற்றி இந்தக் கட்டுரை ஆசிரியர் நூறாண்டு வாழ்ந்த பெரியோர் வரிசையில் கட்டுரை எழுதியுள்ளார்.அதைப் படித்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.)

அவரது கடிதங்களிலிருந்து அவர் பெற்ற  சுவையான செய்திகள் மற்றும் அருள் உரைகள் ஏராளம். அரவிந்தரின் அறிவின் வீ ச்சையும், அவரது பணிகள் பற்றியும் கூறத் தகுதி படைத்த மிகச் சிலருள் அவரும் ஒருவர்.

2

 

அரவிந்தரின் அறிவு எல்லையற்றது என்பதை அவரே சுட்டிக் காட்டி இருக்கிறார். தான் காலத்திற்கு முன்னரே வந்து பிறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே மக்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிய இன்னும் சற்றுக் காலம் பிடிக்கும்!

அரவிந்தர் யார் என்று ஒரு கட்டுரையை ஜோதி பத்திரிகையில் நிரோத்பரன் எழுதியுள்ளார். அதில் அவரது அபார அறிவு பற்றியும் அவரது பணி பற்றியும் விளக்கியுள்ளார். அவரது கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே பார்ப்போம்:

 

The vast world of knowledge he had possessed remains unparalleled. He has himself admitted to us that what he knows will remain untold even if he goes on writing for twelve years. We asked him, “Will all that knowledge remain unknown to us and posterity?” “Learn first of all what I have written,” he replied with a sweet smile, and added. “I am afraid I have come perhaps before my time.” Comes to mind a mighty line from one of his poems: “I have drunk the Infinite like a giant’s wine.”
Only with the help of such a Wine could he have given to India and the world his four major contributions: a national awakening and fiery thirst for total independence, a new and deeper interpretation of the Vedas, the rediscovery of the Supermind, and a life-embracing system of Integral Yoga.

இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே போனாலும் தனது அறிவில் ஒரு பகுதியைக் கூடப் பகிர்ந்து கொண்டதாக ஆகாது என்ற அரவிந்தரை அந்த அறிவெல்லாம் நாங்களுக்கும் எங்கள் சந்ததியினரும் அறியாமலேயே இருந்து விடுமோ என்று கேட்ட போது, அவர், “முதலில் நான் எழுதியதை அனைத்தும் படியுங்கள்” என்று புன்னகையுடன் கூறினார்.

“ஒருவேளை நான் காலத்திற்கு முன்பு பிறந்து விட்டேனோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தொடர்ந்து கூறினார், அரவிந்தர்.

அவரது ஆங்கிலக் கவிதைகளில் ஒரு வரியை நிரோத்பரன் நினைவு கூர்கிறார்.

‘எல்லையற்றதை நான் ராட்ஸச மது போலக் குடித்தேன்’ என்பதே அந்த வரி.

அப்படிப்பட்ட ராட்ஸச மதுவினால் தான் அவர் இந்தியாவிற்கு உலகிற்கும் நான்கு பிரதானமான கொடைகளை அளித்துள்ளார்.

 

  • தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் முழு சுதந்திரத்திற்கான தணியாத தாகத்தை ஏற்படுத்துதலும்
  • வேதத்திற்கான ஒரு புதிய ஆழ்ந்த அர்த்தத்தைத் தருதல்
  • சூப்பர்மைண்ட் எனப்படும் அதிமானஸ மனதை மறுபடியும் கண்டுபிடித்தல்
  • வாழ்க்கையைத் தழுவி அமையும் ஒரு ஒருங்கிணைந்த யோகத்தை உருவாக்கல்

 

3

நிரோத்ரன் குறிப்பிடும் நான்கு மகத்தான பணிகளால், 1) இந்தியர்கள் விழிப்புணர்ச்சி பெற்று சுதந்திரத்தை அடைந்தனர்

2) வேதத்திற்கான ஒரு அரிய ஆய்வால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் பெறப்பட்டது. இதைப் பின்னர் கபாலி சாஸ்திரிகள் உள்ளிட்டோர் விரிவு படுத்தி விளக்கம் எழுதினர். 3) சூப்பர் மைண்ட் எனப்படும் அதிமானுட மனம் பற்றிய அதிசயிக்கத் தக்க உண்மைகளை அறிந்தது. 4) யோகத்தை வாழ்க்கையுடன் இணைக்கும் புது யோக முறையை உலகம் அறிந்து கொண்டது.

4

 

இப்படிப்பட்ட  மகத்தான பணியை உடனடியாக அவர் செய்து முடித்து விடவில்லை. அதற்கான கடுமையான தவத்தை அவர் மேற்கொண்டார்.

அவர் கூறுவதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:

“It took me for years of inner striving to find a real way, even though the divine help was with me all the time, and even then, it seemed to come by an accident; and it took me ten more years of intense yoga under a supreme inner guidance to trace it out and that was because I had my past and the world’s past to assimilate and overpass before I could find and found the future.”

 

5

இந்தியாவிற்கு ஒளி மயமான எதிர்காலம் இருப்பதாக உறுதி கூறியுள்ளார் அரவிந்த மஹரிஷி.

ஆனால் அந்த ஒளிமயமான பாரதத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தன் அரிய பங்கை ஆற்ற வேண்டும்.

அவரது நினைவு ஏற்படுத்தும் உத்வேகத்தால், தேச பக்தியுடன் தெய்வ பக்தியை ஒருங்கிணைத்து வேத உண்மைகளை உலகிற்கு அளித்து உலகை வேத பூமியாக மாற்ற உறுதி பூணுவோம்!

–subham–

MANU IN TAMIL VEDA TIRUKKURAL: Rev GU Pope and Father Beschi compare -1 ( Post No.4459)

MANU IN TAMIL VEDA TIRUKKURAL: Rev GU Pope and Father Beschi compare -1 ( Post No.4459)


Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-07

 

 

Post No. 4459

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Rev. G U Pope, a Tamil scholar and Christian preacher published The Sacred Kural of Tiruvalluva Nayanar in 1886 with his English translation. Throughout the book he had used his predecessors’ views. He had used Italian Jesuit priest Constantine Joseph Beschi’s Latin translation of Tirukkural, the Tamil Veda and also the translation of Ellis. They have compared some of the Kural couplets with the Manu Smrti, also known as Manava Dharma Shastra.

I will give their list below:

 

 

Role of a King

Valluvar says in his Kural Couplets,

The world clings to the feet of the great leader who wields his sceptre with love for his subjects (Kural 544)

The leader saves his subjects from enemies and flawlessly punishes wrong doers (549)

The judge gives capital punishment to wicked killers like removing weeds from a flourishing field (550)

 

 

Manu says in the Seventh Chapter,

  1. Let him be ever ready to strike, his prowess constantly displayed, and his secrets constantly concealed, and let him constantly explore the weaknesses of his foe.
  2. Of him who is always ready to strike, the whole world stands in awe; let him therefore make all creatures subject to himself even by the employment of force.
  3. Having fully considered the purpose, (his) power, and the place and the time, he assumes by turns many (different) shapes for the complete attainment of justice.
  4. The (man), who in his exceeding folly hates him, will doubtlessly perish; for the king quickly makes up his mind to destroy such (a man).

xxxxxx

Oppression of a Tyrant

Valluvar says in his Kural Couplets,

The leader who does not injure and adopt proper measures each day – his kingdom will perish day by day (Kural 553)

 

Let them that want their greatness to continue begin with sternness and punish within measure (562).

 

Manu says in the Seventh Chapter,

  1. Having fully considered the time and the place (of the offence), the strength and the knowledge (of the offender), let him justly inflict that (punishment) on men who act unjustly.

 

  1. Let the king, having carefully considered (each) affair, be both sharp and gentle; for a king who is both sharp and gentle is highly respected.

xxxxx

Espionage

Valluvar says,

Kural Couplets 581-590

The reports given by one spy must be tested and verified through another spy (Kural 588)

The spies must be sent one by one, apart; if three spies agree, the information shall be confirmed (589)

Able spies watch keenly the officers, kinsmen and the enemies and all for information (584)

 

Manu says in the Seventh Chapter

  1. Let that (man) always personally visit by turns all those (other officials); let him properly explore their behaviour in their districts through spies (appointed to) each.
  2. For the servants of the king, who are appointed to protect (the people), generally become knaves who seize the property of others; let him protect his subjects against such (men).
  3. On the whole eightfold business and the five classes (of spies), on the goodwill or enmity and the conduct of the circle (of neighbours he must) carefully (reflect).

xxxxxxxx Subham xxxxxxxxxxxxx

 

 

 

கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6 (Post No.4458)

Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-34

 

 

Post No. 4458

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இதற்கு முந்தைய ஐந்து பகுதிகளைப் படித்துவிட்டு இதையும் படிப்பது பொருள் விளங்க உதவும்.

எனது விமர்சனத்தை இறுதியில் கொடுத்துள்ளேன்.

 

ஸ்லோகம் 71: தேவர்களுக்கு ஒரு யுகம் என்பது 12,000 தேவ வருடங்கள்; அதாவது நாலு யுகங்கள்.

 

72.தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மனின் ஒரு நாள். இதே போல இரவும் ஆயிரம் யுகம்.

 

73.பிரம்மனுடைய பகல் புண்ணிய காலம்; இரவு சொப்பன காலம். ஆயிரம் யுகங்களுப் பின்னர் பிரம்மனின் ஆயுள் முடிகிறது.

74.பிரம்மா விழித்துக்கொண்டவுடன் பூர், புவ, சுவர் லோகங்களை மீண்டும் படைக்கிறார். ஏனெனில் தினப் பிரளயத்தில் அழிவது இந்த மூன்று உலகங்கள் மட்டும்தான். இதுவே சத், அசத் (நல்லது, கெட்டது).

75.பிரம்மாவின் மனதில் தோன்றிய ஆசை முதலில் ஆகாயத்தைப் படைக்கிறது; அதன் குணம் சப்தம் (ஒலி)

76.அந்த ஆகாயத்திலிருந்து நறுமணம் நிரம்பியதும், தூய்மையுமானதும், வலிமை நிரம்பியதாகவும் காற்று உண்டாகிறது. இதன் குணம் ஸ்பரிசம்; அதாவது தொடும் உணர்ச்சி.

 

  1. அந்த வாயு என்னும் காற்றிலிருந்து ஒளிமிகுந்த தேயு, அதாவது தீ உண்டாகிறது. அதன் குணம் உருவம் (ரூப). அது இருளைப் போக்கும்

 

78.தேயு எனப்படும் தீயிலிருந்து அப்பு எனப்படும் தண்ணீர் உண்டாகிறது. அதன் குணம் ருசி (சுவை). அதிலிருந்து பிருதுவி என்பப்படும் பூமி தோன்றுகிறது; அதன் குணம் (இயல்பு) வாசனை (கந்தம்).

இதுதான் தினப் பிரளயம் என்பது; அதாவது பிரம்மாவின் ஒரு நாள்

 

  1. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு தேவ யுகம் என்று சொல்லப்பட்டதல்லவா? அது போல 71 முறை நடந்தால் ஒரு மனுவின் அதிகாரம் முடிந்ததாகிவிடும்; அதைத்தான் மன்வந்தரம் என்கிறோம்.

 

80.இவ்வாறு அளவற்றதான மன்வந்தரங்களின் சிருஷ்டியும் சம்ஹாரமும் (படைப்பும் அழிப்பும்) பரம்பொருளின் விளையாட்டு போல நிகழ்கிறது’

 

  1. (முதல் யுகமான) கிருத யுகத்தில் தருமமும் சத்தியமும் நான்கு கால்களுடன் நிற்பதால் மனிதர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது.

82.மற்ற யுகங்களில் களவு, பொய், வஞ்சகம் ஆகியவற்றால், அறவழியில்லாத வகையில் சம்பாதிக்கப்பட்ட பொருள், கல்வி அறிவால், தர்மம் என்பது ஒவ்வொரு காலாக (பகுதியாகக் ) குறைகிறது.

 

83.கிருத யுகத்தில் மனிதனின் ஆயுள் 400 வருஷம். நோய் நொடிகள், துன்பம் இராது. அவர்கள நினைத்தது நடக்கும்; கிடைக்கும்; தவ வலிமையால் ஆயுளை அதிகரிக்கவும் இயலும்.இதற்கு அடுத்தடுத்த யுகங்களில் வயது நூறு நூறாகக் குறைந்து கொண்டே வரும்

 

84.மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், நினைத்ததை முடிக்கும் வல்லமையும், பிராமணர்களின் சாபங்களும் அனுக்கிரகங்களும் யுகத்திற்கேற்றவாறு பலன் தரும்

  1. .கிருத யுகத்தின் தர்மம் வேறாகவும் திரேதா யுகத்தின் தர்மம் வேறாகவும் துவாபர யுகத்தின் தர்மம் வேறாகவும் கலி யுகத்தின் தர்மம் வேறாகவும், யுகத்திற்குத் தக்கவாறு குறைவாக வரும்.

 

86.கிருத யுகத்துக்குத் தவமும், திரேதா யுகத்துக்கு ஆத்ம ஞானமும், துவாபர யுகத்துக்கு யக்ஞம் எனப்படும் வேள்வியும், கலியுகத்துக்கு தானம் எனப்படும் கொடுத்து உதவுதலும் முக்கிய தர்மமாக இருக்கும்

 

87.அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக,  தனது முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றிலிருந்து முறையே பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர வருணத்தாரைப் படைத்து அவரவர்களுக்கு உரிய தொழில்களை தனித் தனியாக வகுத்தார்.

 

88.பிராமணர்களுக்கு ஆறு தொழில்களைக் கொடுத்தார்; வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்

 

89.க்ஷத்ரியர்களுக்கு வேதம் ஓதுதல், குடிமக்களைக் காத்தல், தானம் கொடுத்தல், வேள்விகள் இயற்றல் முதலிய கருமங்களைக் கொடுத்தார். அத்தோடு பாட்டு, கூத்து, பெண்கள் ஆகியவற்றில் ஈடுபடவும் தடை போட்டார் (கேட்பதற்கோ காண்பதற்கோ, ஆதரவு தருவதற்கோ தடை இலை. தானே அந்தத் தொழிகளில் ஈடுபடுவதற்கே தடை)

 

90.வஸ்யர்களுக்குப் பசுவைக் காத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பூமியிலுண்டான இரத்தினம், நெல் தானியங்களில் வியாபாரம் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

 

 

  1. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்யும் தொழிலை ஏற்படுத்தினார்.

xxxx

 

எனது கருத்து

 

மனு நீதி நூலைக் குறை கூறுவோர் அதிலுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்பதானால்தான் அதைக் குறை கூற  முடியும். மனு தன்னுடைய நீதி த்ருஷத் வதி– சரஸ்வதி நதி தீரத்துக்கு இடைப்பட்ட நீதிகள் என்று சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? அதாவது வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்குவது இதுதான்

 

மனு, கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மக்களின் வயது என்றும் ஒவ்வொரு யுகத்திலும் 100 வயது வீதம் குறைந்து கொண்டே வரும் என்றும் சொல்கிறார். மற்ற விஷயங்களில் மனுவின் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வோர் இது பற்றி இயம்புவது யாதோ?

 

குறை கூறுவோரை ஒதுக்கிவிட்டு நாம் இதை (400 ஆண்டுகள் மக்களின் வயது) ஆராயப் புகுந்தால், இதுவரை அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் சண்டை சச்சரவு, நோய் நொடியில்லாத அமைதியான வாழ்க்கை வாழ்வோர் 120 முதல் 150 ஆண்டுவரை வாழ்ந்ததற்கு சான்று உண்டு.

 

மனு தர்மமோ, பகவத் கீதையோ வர்ண ஆஸ்ரமம் பற்றிப் பேசும்போது அது தொழில் முறைப் பகுப்பு என்றே சொல்கின்றன. ஆயினும்  புரோகிதர் மகன் புரோகிதனாகவும் மன்னர் மகன் மன்னனாகவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஐயர் மகன், ஐயராக இருப்பது தப்பு என்று சொல்லுவோர்,  உ லகம் முழுதும் மன்னன் மகன் மன்னனாக — பரம்பரைத் தொழிலாக — இருந்ததை ஏன் குறை கூறுவதே இல்லை. அது சரி என்றால் புரோகிதர் மகன் புரோகிதனாக இருந்ததைப் பற்றிக் கவலைப் படவோ ஆதங்கப்படவோ உரிமை இல்லை.

 

 

இப்போது அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகவும், சினிமா நடிகர் மகன் சினிமா நடிகராகவும் இருப்பதை ஏன் குறை கூறுவதில்லை; ஒவ்வொரு து றையிலும் இப்படிப் பார்க்கிறோம். ஆகவே, அந்தக் காலத்தில் இப்படி இருந்ததில் என்ன வியப்பு? என்ன குறை?

 

யாரும் யாரையும் முன்னேற விட முடியாமல் தடுத்தால் தவறு. அப்படி ஒரு சான்றும் இல்லாமல் பிராமணர்களும் கூட மன்னனாகவும், மன்னர்களும் கூட பிராமணனாகவும் மாறியதை புராண, இதிஹாசங்களில் படிக்கிறோம்.

 

பெரும்பாலும் குலத்தொழில் முறைதான் இருந்தது. தமிழ் மன்னரின் மகன்தான் தமிழ் மன்னரானான். பாமரன் ஆகவில்லை! இதில் ஏன் குறை காண்பது இல்லை?

பிராமணர்- சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள் மட்டுமே இருப்பதாக திராவிட அரசியல்வாதிகள் கிளப்பியதும் பொய்; ஆரியர்- திராவிடர் என்ற இரண்டே இனங்கள்தான் உண்டு என்று வெளிநாட்டினர் பரப்பியதும் பொய்; பிறப்பு மட்டுமே ஜாதியை நிர்மாணிக்கும் என்பதும் தவறு என்பதை புராண, இதிஹாசங்களைப் படிப்போருக்கு நன்கு விளங்கும்.

நான் ஐந்தாம் பகுதியில் சொன்னது போலவே வெவ்வேறு காலக் கணக்கீடு உள்ள பல வெளி உலகங்கள் இருப்பதும் மேற்கூறிய ஸ்லோகங்கள் மூலம் தெரிகிறது.

யுகங்களைப் பற்றிய மநுவின் வர்ணனை மிகவும் அழகானது. கிருதயுகத்தை ஒரு பசுமாடாக கற்பனை செய்தால் அதற்கு 4 கால்கள்; அடுத்தது த்ரேதா யுகம் அதற்கு மூன்றே கால்கள்; அடுத்தது த்வாபர யுகம் அதற்கு இரண்டே கால்கள்; அடுத்தது கலியுகம்; அதற்கு ஒரே கால்; நாம் வாழும் காலம்!

 

யுகங்கள் இறங்கு வரிசையில் பெயர் இடப்பட்டதும் இந்த பசு அல்லது ஒரு டேபிள் (Table or Chair) என்ற கற்பனையில்தான் போலும்! த்ரே=3, த்வா=2; பின்னர் கலியுகம்.

 

நான்கு வருணத்தாரும் உண்டான விதம் ரிக் வேதத்தில் புருஷ சூக்த துதியில் (10-90) வருகிறது. அருமையான கற்பனை; பிராமணன் வாயினால் பிழைப்பதால் (வேதம் ஓதி) முகத்திலிருந்து வந்தான் என்றும் போர்வீரன் தோள் பலத்தால் பிழைப்பதால் தோளிலிருந்து க்ஷத்ரியன் வந்தான் என்றும் உழுதும் வியாபாரம் செய்தும் பிழைப்பதால் வைஸ்யன் தொடையில் இருந்து வந்தான் என்றும் உடல் உழைப்பால் பிழைப்பதால் சூத்திரன் காலில் இருந்து வந்தான் என்றும் சொல்லும்; இந்த உடலில் எந்த உறுப்பு இல்லாவிடிலும் அது மனிதன் இல்லை. அது போல சமுதாயத்தில் இந்த நான்கு உறுப்புகள் இல்லாவிடில் அது சமுதாயம் இல்லை. இன்றும் கூட இந்த நான்கு தொழில்கள்தான் உலகின் மிகப்பெரிய தொழில்கள்: கல்வி; படைகள், வணிகம், உடலுழைப்பு வேலைகள்.

2600-க்கும் மேலான பாடல்கள் அடங்கிய மனுநீதியில் இப்போதுதான் 91 ஸ்லோகங்களை முடித்துள்ளோம்.

 

தொடரும்—————-

 

கம்பன் கவி மந்திரம் (Post No.4457)

Date: 4 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-51 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4457

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 9)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

மழைத்தாரை போலப் பொழியும் காவிய அமுதால் கம்பன் கவி மந்திரம் அமைத்தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

 

பாடல் 58

வில்லெடுக்கும் மீளிகை விரல்தெரிந்த வாளி போற்

சொல்லெடுக்கும் வன்மையி லவைதொடுக்குஞ் சூழ்ச்சியில்

எல்லெடுக்கும் கம்பன்முன் னெதிரடுத்த பாவலர்

புல்லெடுக்கும் போர்மறவர் போலொதுங்கிப் போவரே

 

பாடல் 59

சொல்லினுட் டுவன்றலாம் பொருட்டொரும் தெருட்டலோ

கல்லினுட் டுறுமணுக் கலைத்தெடுத்த லாகுமோ

புல்லுட னுயிர்த்திறன் பொறித்திறன் புலத்திறன்

எல்லைமாய வொன்றினொன் றெழுந்தவா றெழுதவால்

 

பாடல் 60

கடல்மடைதி றந்தகாட்சித் தாயினுங்கம் பன்கவி

அடலடைந்தொ ளிர்சொல்வ னத்துமட்டி னன்றுகாண்

உடலடைந்தி யக்குயிர்போ லொண்பொருளூ டோடியாற்

றிடையடைந்தொ ழுக்குபோலி சையுமுன் னிழுக்குமால்

 

பாடல் 61

நாடிநாடிப் பாவல்லோர் நயந்தசெஞ்சொல் மாமணி

மூடிமூடி வைத்தசெப்பும் முற்றுமுட்டல் செய்வதோ?

தேடித்தேடிச் சென்றுமன்னார் சேர்கிலா மணித்திரள்

கோடிகோடி யாக்குவிக்கும் கம்பனாழி கூலமே

 

பாடல் 62

ஐயின் வாரிக்கொண்டவா ரமுதளாவு சீர்பதம்

கையின் வாரித் தூவினர்மற் றைக்கவிஞர்; கம்பனோ

மெய்யின் வாரிக் கொண்டசொல் விரைமுகந்து போகமே

வையமாரு மாறுவட்டி வட்டியாகக் கொட்டினான்

 

வேறு

பாடல் 63

பொருள்தேடிடப் புகுவார்மிடிப் புரையாடிடல் முறையோ

தெருளாய்ந்துறத் திரிவார்செறி மருள்மாய்ந்திடல் திறனோ

அருனாடிய உளத்தார்கவி யருட்பாவினை மிகத்தாம்

சுருள்குடுசூத் திரமாமெனத் தொகுத்தாரிருள் மிகுத்தார்

 

பாடல் 64

முன்னார்வினை விளைவோகலை முடிப்பார்தவ முடிவோ

மின்னார்தமிழ் மிளிர்மேனியின் மெலிவோ பிணிநலிவோ

பின்னாளுறை வார்கொண்டதோர் பித்தோ கவிமுத்தேன்

சின்னாபின மாக்கிட்டுருச் சிதைத்தார்திருப் புதைத்தார்

 

பாடல் 65

அறியார்செயுந் தீங்கோசிறி தறிந்துமறி யாராய்

வெறியார்புரி வினைமுன்னரே வெளிறாமெனல் மெய்யே

குறியாதுமுன் னார்பாட்டுறை குறைப்பெய்தனர் பின்னார்

செறியாதன செருகாங்கவி யுளவோவுளச் செருக்கால்

 

பாடல் 66

குருடனெறி காட்டக்குறி யிடங்கூடிடல் செலுமோ?

புருடன்வெலாப் போரையொரு  பூவைவெலப் புகுமோ?
அருடன்வரத் தாலாங்கவி யறிவானரு ளிலையேல்

மருடன்வயத் தாராய்தொடர் வழிவிட்டுழல் வாரே

 

பாடல் 67

எல்லார்விரி வெயிலைச்சில ரிருளோவென மருளாப்

புல்லார்சிறு விளக்காலொளி புகட்டப்புகுந் தனரே

முல்லைமுருக்கவிழ்மாமணம் முடையென்றிவ ரடையாம்

வில்லைவெறி யளவாவெறி யளவாமிகுத் துரைத்தார்

 

பாடல் 68

அழகுக்கழ கணிதலருஞ் செயல்யாவினு மரிய

பழுதும்பழக் கனிவைப்படுங் கனியாக்கலும் பழுதே;

மழைத்தாரைபோற் கம்பன்பொழி வான்காவிய வமுதைக்

குழைத்தாரென லன்றிச்சுவை குவித்தாரென லாமோ?

 

பாடல் 69

தெய்வமணம் நாறியுயிர் திளைக்குங்கவித் தெறியற்

செய்வான்வரு மலரோசிறு தரைசிந்தின வலவே;

மெய்வானுறைதரு நின்றவன் மிளிர்மாலர் பொறுக்கிப்

பெய்வாந்தனிப் பிணையலிதைப் பிறிதார்கமழ் பிணிப்பார்

 

பாடல் 70

மின்னற்பிழம் பாலுமெரி வெயிலோன்கதி ராலும்

பொன்னினொளி யாலுஞ்சுவர் போக்கிமணிக் குவைக்காழ்

தன்னிற்புரை தபுத்தேசவி தனதந்துயர் கம்பன்

கன்னிக்கூர் காலம்பொலி கவிமந்திர மமைத்தான்

 

பாடல் 71

கவிமாளிகை புனைவாரிவண் கடந்தேகவின் கிடந்த

சவியோவியச் சமைப்பால்விழி யிமைப்பற்றுயிர்ப் பெடுப்பர்

புவியுள்ளுற யொருவனிதிற் புரைகாணிய விரைவான்

அவிகொள்வன வமுதிற்சுவை யறுபாகமாய் வானே

 

வேறு

பாடல் 72

சொல்கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல்கண்டார் எல்லே கண்டார்; இனிமை யோடிகலுஞ் சந்த

மல்கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல்கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?

 

பாடல் 73

மொழிவளம் மொழிகு வேனோ? மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம் புகலு கேனோ? பொருள்வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ? காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்

 

வேறு

பாடல் 74

பொன்கொண் டிழைத்தமணி யைக்கொடு பொதிந்த

மின்கொண் டமைத்தவெயி லைக்கொடு சமைத்த

என்கொண் டியற்றியவெ னத்தெரிகி லாத

மன்கொண் டமாமதிம ருட்கேவி மாடம்

***

கம்பனின் சொற்களாலேயே கம்பனைப் புகழும் வித்தையைக் கொண்டவர் கவிஞர் சிவராஜ பிள்ளை. கம்பன் கையாண்ட அதே சந்தத்தை அவர் கையாளும் போது சுவை இன்னும் கூடுகிறது.

கம்பன் முன் மற்ற கவிஞர்கள் போர்க்களத்தில் புல் எடுக்கும் மறவர் போல ஒதுங்கி ஒடுங்கி ஓடி விடுவர்.

முன்னவர் செய்த வினையின் விளைவோ என்னவோ! கவிதையின் உரு சின்னாபின்னமாகப் போகும் நிலை! குருடன் வழி காட்டப் போகுமிடம் செல்ல முடியுமா? பெரிய போர் வீரனான புருஷன் வெல்ல முடியாத போரை அவனது மனைவி வெல்ல முடியுமா? கவிஞனின் உளத்தை அறிந்தோரின் அருள் பெறாவிட்டால் அவன் கவிதையின் பொருளை உணர முடியாது.

கம்பனது பாடல்களை ரஸிக்கப் போனவர்கள் சொல் இன்பப் பிரியர்களாக இருப்பின் சொல் இன்பத்திலேயே திளைத்து நிற்பார்கள். அதில் விளங்கும் பொருளின் ஒளி கண்டவர்கள் அதிலேயே லயித்திருப்பர். இப்படிப்பட்ட அபூர்வ கவிஞரின் மொத்த நூலை யார் தான் முடியக் கண்டார்? ஒருவரும் இல்லை!

காலம் வென்ற ஒரு கவி மந்திரம் அல்லவா கம்பன் அமைத்து விட்டான்!

 

மொழிவளத்தைப் புகழ்வதா! கதைத் தருணம் நினைத்துப் பொழிகின்ற தன்மையைப் புகழ்வதா? பொருள் வளத்தைப் புகழ்வதா?

 

என்று இப்படி உளத்திலிருந்து எழும் சொற்களால் கம்பனின் அருமையை விதந்து கூறுகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

இதுவரை 90 பாடல்களில் 74 பாடல்களைப் பார்த்து விட்டோம். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள பாடல்களைப் பார்ப்போம்.                                                                                        அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

*********** SUBHAM ******************

 

 

 

Interesting Story of Dirgatamas in the Veda and Mahabharata (Post No.4456)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-07

 

 

Post No. 4456

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Dirgatamas of Rig Veda was one of the famous blind poets like Homer of Greece. But he lived at least a few thousand years before Homer of Odyssey and Iliad. Dirgatamas meant ‘Long Darkness’. He was the son of Mamata and Ucathya. So he is known with two surnames Mamateya and Aucathya. His son was Kakshivan who was also a famous poet in the Rig Veda.

Though he was born blind he recovered his vision at the end. He lived a full hundred years. His name is found in the Rig Veda and Sankayana Aranyaka. In the Aitareya Brahmana, he was praised as the priest of the most famous king Bharata, whose name is given to India that is Bharat. He was thrown in to the river Ganga

 

In his old age by his servants. Traitana attacked him but killed himself. When he was floating in a raft in the River Ganga, he was rescued by the king of Anga Desa. There he married a slave girl by name Usij.

Though there are some contradictions in the Mahabharat version given below, we are able the get the outline of his life story.

Mahabharata version

He was the son of a Brahmana coupe- Uthathya and Mamata. His father’s younger brother Brihaspati forcibly possessed Mamata while she was pregnant.  The child inside her asked Brihaspati not to enter as there was very little space. When Brihaspati still insisted the child inside Mamata’s womb pushed out Brihaspati’s seed. Brihaspati became angry and cursed the baby in the womb to become blind. Thus, Dirgatamas was born blind.

 

He became a very learned seer and married Pradveshi. They had five children including Gautama. Some of the seers in the community hated Dirgatama and persuaded Pradveshi and his sons to send him out. They asked the servants to float him in a raft in the River Ganga so that he could find a better place to live.

 

Dirgatama was lucky to be found by the King Baliraja of Anga Desa. Hearing his full story he wanted to get him a child through his wife Queen Sudeshna. She had no issues and in those days kings without wards to succeed approached Brahmin seers to get them children.

Though Dirgatamas consented, queen Sudeshna did not like the idea of going to bed with a blind man. she feared her child would also be born blind and so she sent one of her maids to him. They had several children including Poet Kakshivanth.

One day the king asked Dirgatamas whether all of the children were his own, Dirgatamas told him the truth. The king insisted that Sudeshna should have a child through Dirgatamas and as a result they had five children: Anga, Vanga, Kalinga, Pundra and Suhya. Each one of them was given a region to rule and they started their own dynasties.

 

This anecdote was narrated by Bhishma to Queen Satyavati to support the suggestion that a Brahmana be invited to produce children in the wives of Vichitraveerya who had died childless.

 

This is in the Adi Parva of Mahabharata.

 

From the stories in the Rig Veda, Aranyakas, Brahmanas and the epic, we are able to get the facts:

Dirgatamas was born blind. He was married and had children. He was hated by some jealous seers. They made his wife and children to send him out of his home. So he was floated in the River Ganges. He was rescued by a king. He produced children thorough King’s wife at the request of the king. They started new dynasties.

The reason attributed to his blindness is also based on medical science. If a pregnant woman was put under pressure through domestic violence o rape, then the child would be affected due to stress. Since Mamata was forcibly taken by her husband’s brother, it was possible that the child was born handicapped.

 

Dirgatamas became famous for his number symbolism and his quotations on one god with different names, four types of sounds and Adam and Eve story (At/dma= adam; Eve= Jeeve Atma) in the two birds on the same branch episode, in which one eating an apple and another being a passive observer. This is in the sculptures of India and post Vedic Upanishads as well. Bible used this story and gave Atma and Jeevatma as Adam/a and Eve/jeeva.

 

Dirgatamas hymn with 52 couplets in the Rig Veda 1-164 is the longest one and most often quoted. His number symbolism made this hymn a very interesting and debatable one. And the subjects he dealt with made this an encyclopaedic verse.

 

–Subham–

 

தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் (Post No.4455)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-25

 

 

Post No. 4455

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தீர்கதமஸ் ஒரு ரிக்வேத கால ரிஷி. கண் பார்வையற்றவர். குருட்டுக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதிய கிரேக்க மஹாகவி ஹோமர். ஆனால் ஹோமருக்கும் முன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் ஹோமர் முதலிய அந்தகக் கவிகளைப் பந்தாடிவிட்டார். தீர்கதமஸின் கவிதைகள் ரிக் வேதத்தின் — உலகின் பழமையான நூலின் — முதல் மண்டலத்தில் உள. அவர் ‘கண்டுபிடித்த’ மிக நீண்ட கவி ரிக் வேதப் பாடல் எண் 1-164.  ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை கவிகளைப் புனைவதில்லை. அவர்கள் வானத்தில் மிதக்கும் ஒலிகளைக் கிரஹித்து நமக்கு வழங்குவதால் அவர்களை ‘மந்த்ர த்ருஷ்டா’ என்பார்கள். அதாவது மந்திரத்தைப் பார்த்தவர்கள்; ஞானக் கண்களல் கண்டுபிடித்தவர்கள்; காதால் கேட்டவர்கள்; இதனால்தான் திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கத் தமிழ்ப் புலவர்களும் “கேள்வி” என்பர்; காதால் கேட்டது ‘ச்ருதி’= ‘கேள்வி’. நிற்க

இவருடைய பெயரின் பொருள்- நீண்ட இருள்

இவர் தாயின் பெயர் மமதா

தந்தையின் பெயர் உசத்யா

ஆனால் இவர் சத்யகாம ஜாபாலா போல தாயின் பெயர் கொண்டு ‘தீர்கதமஸ் மாமதேய’ என்றே அழைக்கபட்டார். அதுவும் புதிரானதே.

சில நேரங்களில் தந்தையின் பெயரால் ‘தீர்கதமஸ் ஔசத்ய’ என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் ரிக் வேதத்திலும் சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படும். இவர் நூறு ஆண்டுகள்  வாழ்ந்ததாக அவை செப்பும்.

 

 

 

தீர்கதமஸின் 1-164 கவி அறிஞர்களைத் திணறடித்துவிட்டது. 52 கண்ணிகளில் எண்களை வைத்து விளையாடிவிட்டார். இவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த திருமூலர், சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வார் ஆகியோரும் எண்களைக் கொண்டு கவிபாடினர். இதற்குப் பலவிதமான பொருள்களைக் கற்பிக்க முடியுமாதலால் அவை  சுவை உடைத்து.

 

இந்தியாவுக்குப் பெயர் கொடுத்த – ‘பாரதம்’ என்று பெயர் கொடுத்த – பரத மாமன்னனுக்கு இவர் புரோஹிதர் என்றும் ஐதரேய பிராம ணம் பகரும்.

பிருஹத் தேவதா என்னும் நூல் இவர் பற்றிய செய்திகளை மொழியும். இவர் கண் பார்வையில்லாமல் பிறந்து பிற்காலத்தில் பார்வை பெற்றாராம்.

வயது முதிர்ந்த காலத்தில் இவரை த்ரைதன என்பவன் தாக்கினானாம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான். இவரை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டனர். அங்க தேசத்தில் இவரை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றினர். அங்கு ஒரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்தார். கக்ஷிவந்த் என்ற மகனை ஈன்றெடுத்தார். அவனும் மாபெரும் கவிஞன் ஆனான்.

 

இனி மஹாபரதத்தில் இவர் பற்றி  காணப்படும் செய்திகளைக் காண்போம்.

 

ஆதி பர்வத்தில் இவர் முற்காலத்திய ரிஷி என்று சொல்லப்படுவதால் இவர் மஹாபாரதத்துக்கு மிகவும் முன்னால் வாழ்ந்தவர் என்பது தெளியப்படும்.

 

பிராமணர்களான மமதாவுக்கும் உதத்யனுக்கும் பிறந்தவர் இவர் என மஹாபாரதம் உரைக்கும்.

ஒரு விநோதக் கதை இதோ:-

மமதா கர்ப்பிணியாக இருந்தபோது உதத்யனின் தம்பி பிருஹஸ்பதி அவளைப் பலவந்தப்படுத்தினார். உள்ளே இருந்த குழந்தை இன்னும் ஒரு வித்துக்கு கர்ப்பப்பையில் இடமிலை என்று அறிவித்தது. அப்படியும் பிருஹஸ்பதி பலவந்தம் செய்யவே புதிய விதையை, மமதாவின் உள்ளே இருந்த குழந்தை வெளியே தள்ளியது. உடனே சிற்றப்பன் பிருஹஸ்பதி ஒரு சாபம் போட்டார். மமதாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை குருடாகப் பிறக்கட்டும் என்று சபித்தார். இதுவே தீர்க தமஸ் கண் பார்வை இழந்த கதை.

 

(என் கருத்து: ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒருவர் பலவந்தப்படுத்தினால் அந்த அதிர்ச்சியால், குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதை நவீன அறிவியலும் ஏற்கிறது)

 

காலப்போக்கில் அவர் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். பிரத்வேஷி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப் பெற்றார்.மூத்த மகனுக்கு கவுதமன் என்பது திரு நாமம். சில முனிவர்களுக்குக் குருட்டுக் கவிஞன் தங்களிடையே இருப்பது பிடிக்காததால் மனைவி பிரத்வேஷியையும் மகன்களையும் தூண்டிவிட்டனர். பிரத்வேஷியும் இந்த வயதான கிழவரைக் கவனிக்க என்னால் இனிமேல் முடியாது என்று அவரை ஒரு படகில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்கவிட்டனர்.

 

பலிராஜன் என்ற மன்னன் கங்கை நதியில் குளிக்க வந்தபோது படகில் ஒரு கண் பார்வையற்றவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவருடைய பூர்வ கதைகளைக் கேட்ட மன்னன் தன் மனைவி சுதேஷ்னாவுடன் படுத்டு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். ஒரு மன்னனுக்கு வாரிசு இல்லாவிடில் பிராமண முனிவர்களை அணுகி குழந்தைப் பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுவது அக்கால வழக்கம்.

ஆனால் இவரிடம் படுக்க மனம் இல்லாத மஹாராணி, தனது தோழிகளில் ஒருவரை அனுப்பி வைத்தார். 11 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்களில் ஒருவர்தான் கக்ஷிவன ரிஷி என்றும் மஹாபாரதம் இயம்பும். அவர்கள் அனைவரும் தன்னுடைய குழந்தைகளா என்று மன்னன் வினவ, தீர்க தமஸ் உண்மையைச் சொன்னார். பின்னர் மன்னன் தனது மனைவியிடம் வலியுறுத்த அவர் தீர்க தமஸுடன் கூடி ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள்: அங்க, வங்க, கலிங்க, பன்ற, சுஹ்ய. என்ற பெபயருடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு வம்சத்தை ஸ்தாபித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டனர்.

 

இதை சத்யவதியிடம் பீஷ்மர் கூறினார்.  விசித்ர வீர்யனுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவ்னுடைய மனைவியிடத்தில் பிராமணர்களைக் கொண்டு குழந்தைகளைப் பெறுவதே முறை என்று பீஷ்மர் வலியுறுத்தினார்.

 

மொத்தத்தில் பல கதைகள் சொன்னாலும் அதில் இழையோடும் கருத்துக்களை எவரும் பிடித்துக்கொள்ள முடியும்.

 

தீர்கதஸுக்குப் புகழ் அவர் சொன்ன வேத மந்திரங்களிலிருந்து வந்தது என்பதைக் கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

 

TAGS:- தீர்கதமஸ், கதை, சுவையான

–சுபம்–

 

பாரதியார் நூல்கள் – 44, வரகவி பாரதியார்’ (Post No.4454)

 

Date: 3 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-38 am

 

Post No. 4454

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 44

பண்டித வித்துவான் தி.இராமானுசன் எழுதியுள்ள வரகவி பாரதியார்

 

.நாகராஜன்

1

மஹாகவி பாரதியாரின்  வாழ்க்கை வரலாறைச்சீரிய தமிழ்ப் புலவர்என்ற நோக்கில் தரும் ஒரு சிறிய புத்தகம் வரகவி பாரதியார். இதை எழுதியவர் மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பண்டித வித்துவான் தி.இராமானுசன் அவர்கள்.

96 பக்கங்களே உள்ள இந்த குட்டி நூல் 1949இல் இரண்டாம் பதிப்பைக் கண்டது. அதன் அப்போதைய விலை பதினான்கு அணாக்கள். (ரூபாய் அணா, தம்பிடி என்ற காலத்தை அறியாதவர்க்கு ஒரு சின்ன குறிப்பு : ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களைக் கொண்டிருக்கும். ஒரு அணாவிற்கு நான்கு காலணாக்கள். ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள். ஆக பதினான்கு அணா என்றால் இந்தக் காலத்தில் 87.5 பைசாக்கள்)

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் நூலாசிரியர் கூறுவதில் ஒரு பகுதி: “இதனுள் பாரதியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவர்சீரிய தமிழ்ப் புலவர்என்னும் நிலையிலே காட்சியளிக்குமாறு கோவைப்படுத்தியுள்ளேன். என் முயற்சியில் முழு வெற்றி கிட்டாது போகலாம்! முதலிலே முயன்ற தகுதி எனக்குப் பயன் அளித்தால், அதுவே போதுமானதுஎன்கிறார்.

1949ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பைக் கண்ட இந்த நூல் உண்மையிலேயே ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

வேறு வாழ்க்கை வரலாறுகள் சொல்லாத நிகழ்ச்சிகள் இவை.

 

2

பாரதியாரின் காசி வாசம் பற்றி நூல் கூறுவதில் ஒரு பகுதி:-

பாரதியாரின் அத்தையாரான குப்பம்மாள் காசி வாசி. அவருக்குப் பாரதியாரிடம் பாசம் மிகுதி.தந்தையார்  இறந்த பின், பாரதியாரை இந்து கல்லூரியில் சேரும்படி செய்து மேற்படிப்புக்கும் வழி செய்தவர் அவரே

நெல்லை இந்து கல்லூரியில் பாரதியார் படித்த படிப்பிலே அவர் தம் அத்தையாரான குப்பம்மாளுக்கு உறுதி இல்லை.தம்மோடு பாரதியாரை அழைத்துக் கொண்டு போய்க் காசியிலே படிக்க வைக்க அவ்வம்மையார் விரும்பினார். அதற்கிணங்க நம் கவிஞர், 1898-ஆம் ஆண்டில் காசியை அடைந்தார். அக்காலத்தில் காசியிலே தனிப் பல்கலைக்கழகம் இருந்ததில்லை; அங்குள்ள மத்திய இந்து கல்லூரியைச் சார்ந்த ஓர் உயர்தரக் கலாசாலையிலே சேர்ந்து தான் கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்குப் பாரதியார் படித்தார். அங்கு நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் இரண்டு மொழிகளைப் படிக்க வேண்டும் என்னும் நியதி இருந்தது. காசியிலே தமிழ் படிக்க முடியாது. ஆகவே இந்தி மொழியை விருப்பப்பாடங்களுள் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. வடமொழியிலும் கூடுமான வரை நல்ல புலமை ஏற்படும் வசதியும் அவருக்கு ஏற்பட்டது. பாரதியார் இந்தி பேசும் வகையினைக் கண்ட யாவரும், வடநாட்டவர் என்றே அவரைக் கருதி மயங்குவது உண்டாம். பேச்சு மட்டுமா? நடை,உடை, பாவனைகளும் அப்படியே தான் அன்று காட்சி அளித்தன.

**

3

எட்டையபுர மன்னர் காசி சென்று திரும்பும் போது பாரதியாரைத் தம்முடன் வருமாறு அழைத்த செய்தியைத் தொடர்ந்து நூலில் ஒரு பகுதி:-

மன்னர் நம் கவிஞருடன் தமிழாராய்ச்சியும் வேதாந்த விசாரணையும் நடத்தி வருவார் என்பதும் தெரிகிறது. அக்காலங்களில் எல்லாம், நம் கவிஞர் ஷெல்லி தாஸன் என்ற புனைபெயருடன் பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.

**

4

மதுரையில் பாரதியார் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது நடந்த பல விவரங்களை நூல் சுவைபட விளக்குகிறது. அதில் சில பகுதிகள்..

 

அக்காலத்தில் மதுரைக் கல்லூரியில் கோபாலகிருஷ்ணையர் என்ற புலவர்மணி, தமிழ் விரிவுரையாளராய் இருந்தார். தமிழிலே அவர் பெரும்புலவர்; பிறருக்கு உதவும் பேருபகாரி; நல்ல செல்வாக்கும் உள்ளவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒப்புயர்வற்ற பெரும்புலமை அவருக்கு உண்டு. பாரதியாரிடம் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. பாரதியாரது தமிழறிவு, கவிதை நலன் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி அவர் பிறரிடம் பாராட்டிப் பேசுவது வழக்கம். பாரதியாருக்கு உற்ற நண்பராய் அவர் இருந்ததனாலே தான், மதுரைச் சேதுபதி பள்ளியில் அவருக்கு அலுவல் கிடைத்தது. அவ்வலுவலிலே மூன்று மாதம் தங்கி, பாரதியார் தமிழாசிரியத் தொழில் புரிந்தார்.அதிலும் அவருக்குப் பற்று இல்லை. மூன்றாவது மாதத்தில், அவ்வேலையை விட்டு நீங்கினார். பாரதியார் மதுரையில் இருந்த போது தான் அங்குள்ள தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றி அடிக்கடி புலவர்களுடன் அளவளாவிப் பழகி வந்தார்.

**

5

சென்னையில் அக்காலம் சுதேசமித்திரன் பத்திரிகையைத் தேசபக்தர் சுப்பிரமணிய ஐயர் நடத்தி வந்தார். அவருக்கும், மதுரைக் கோபாலகிருஷ்ணையருக்கும் நல்ல நட்பு இருந்தது. அடிக்கடி மதுரை வரும்போது, அவர் கோபாலகிருஷ்ணையருடன் பத்திரிகை வளர்ச்சி பற்றிக் கலந்து பேசுவது வழக்கம். அதன்படி ஒருமுறை, “எனக்குத் துணை செய்ய ஒருவர் தேவை. அவர் நல்ல தமிழ் எழுதக் கூடியவராயும், தேசீய உணர்ச்சியுடையவராயுக் இருத்தல் நலம். ஒருவர் கிடைத்தால் பார்த்து அனுப்புங்கள்,” என்று தன் நண்பரிடம் சொன்னார். நம் கவிஞரைத் தேசீயத்தில் திருப்பி நலம் காணத் தமிழன்னை தருணம் பார்த்துக் கொண்டிருந்த காலமும் அதுவே ஆகும். காலமும் கணக்கும் ஒன்று சேர்ந்தன. கோபாலகிருஷ்ணையர், பாரதியாரைத் தருவித்துச் சுப்பிரமணிய ஐயருக்கு அறிமுகப்படுத்திவிட்டார். நம் கவிஞர் அவருடன் சென்னை சென்று, 1904ஆம் ஆண்டில் சுதேசமித்திரம் காரியாலத்தில் அலுவலில் அமர்த்து பணி ஆற்றினார்.

6

 

சென்னையில் இந்தியா பத்திரிகை அரசாங்கத்தின் அடக்கு முறைச் சட்டத்திற்குய் உள்ளாகியவுடன் பாரதியாருக்கு ஒரு அன்பர் சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து, பாரதியாரை மறைந்துறைய மன்றாடினார்.  ….

இந்த நிலையில் புதுவைக்குப் புறப்பட்டார் பாரதியார்.

புதுவை வாழ்க்கை என்ற அத்தியாயத்தில் பாரதியாரின் புதுவை வாழ்க்கை பற்றிய ஏராளமான செய்திகளை இந்த நூல் சுவைபடத் தருகிறது.

அந்த அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்:-

மறு நாள் இரவு பாரதியார் சைதாப்பேட்டையில் பயணச் சீட்டு வாங்கி இரயில் ஏறிப் புதுவை சேர்ந்தார்; சிட்டி குப்புசாமி ஐயங்காரைக் கண்டு, அறிமுகக் கடிதத்தை நீட்டினார். எளிய வியாபாரியும், நல்ல தமிழறிஞருமாய் இருந்த அவர், பாரதியாரை விரும்பி வரவேற்றார்.

*

சென்னையில் நடந்து வந்தமெட் ராஸ் ஸ்டாண்டர்டுஎன்ற ஆங்கிலத் தினசரி இதழில் பாரதியார் கீதையைப் பற்றி, பேராசிரியர் சுந்தரராமனோடு விவாதமும் நடத்தினார். அதிலே பாரதியாரின் புலமையை அனைவரும் உச்சிமேற்கொண்டு மெச்சிப் போற்றினர். அதிலிருந்தே நம் கவிஞரின் ஆங்கிலப் புலமையையும்வடமொழி மேதையையும் உலகறிந்து புகழலாயிற்ற்!

மகாபாரதத்தை, ‘கிரிப்பித்துஎன்ற வெள்ளைக்காரரும், இரமேஷ் சந்திரதத்தர் என்ற வங்க அறிஞரும் தனித்தனி மொழிபெயர்த்திருக்கின்றனர். அம்மொழி பெயர்ப்புகள்பண்டம் அற்றவைஎன்று பாரதியார் கருதினார். அரவிந்தரும், ஐயரும் அதே கருத்தினை வலுப்படுத்தினர். அதற்காக, நம் கவிஞர் வியாசபாரதத்தைப் படிக்க நேரிட்டது. அதிலிருந்துபாஞ்சாலி சபதம்என்ற இறவாத புதுநூல் ஒன்று நம் கவிஞர் வாக்கில் உருக்கொண்டது.

*

போலிஸார் முதலிலே, பிரெஞ்சு கவர்னரிடம் சென்று அவர்களை அரசாங்க விரோதிகள் என்று சொல்லி, வெளியேற்ற முயற்சி செய்தனர். கவர்னர், ‘தக்க ஆதாரம் இல்லை,’ என்று சொல்லி, அதனை மறுத்து விட்டார். பின்பு, அரசியலார், அந்நியர்களுக்குக் குடியிருப்பு உரிமை இல்லை என்று சொல்லும் சட்டம் ஒன்றைச் செய்யுமாறு கவர்னரைத் தூண்டினர். அதிலே, “சட்டம் நடைமுறையில் வரும் தேதிக்கு முன்னால், ஓர் ஆண்டாகக் குடியேறியிருப்பவர்கள், ஐந்து மாஜிஸ்ட் ரேட்டுகள் கையெசுத்துத் தந்தால், இதிலிருந்து விலக்குப் பெறலாம்என்ற உட்பிரிவு ஒன்று இருந்தது. அதை வைத்து நம் கவிஞர் கலவல சங்கரஞ் செட்டியார் என்ற நண்பரின் மூலம், ஐந்து மாஜிஸ்ட் ரேட்டுகளிடம் கையெழுத்து வாங்கி வந்தார். இம்முயற்சியால், ஐயர், அரவிந்தர், பாரதியார் ஆகிய மூவருமே சட்டத்தின் கொடுமையினின்று தப்பினர்

*

7

கடையம் திரும்புதல் என்ற அத்தியாயத்தில் நிறைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றில் ஒரு நிகழ்ச்சி:-

ஒரு சமயம் பாரதியார் கம்பரைப் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்திலே இருந்த பரலி நெல்லையப்பர் சில கவிக்கு அவரைப் பொருள் சொல்ல வேண்டினார். பாரதியார் இங்கும் அங்குமாகச் சில கவிகட்கு மட்டும் பொருள் சொல்லி, பல கவிகளைக் குறுக்குக் கோடிட்டு அடித்து விட்டார். காரணம் கேட்ட போது, “கம்பர் இங்கே நமக்குப் பாடவில்லை. அவர் பூலோகத்தில் இல்லாதபடி ஏழாவது படி கடந்து நின்று பாடுகிறார். அவர் அறிவு பெரிது!ஒன்றுமே நமக்குப் புலனாகவில்லை!” என்று கூறினாராம். பொருள் விளங்காத பாடலைப் பற்றிக் கவலைப் படவேண்டா என்ற் மனநிலை அவருக்கு இருந்தது உண்மை! என்றாலும், பழங்கவிகளை இகழும் மனப்பான்மை அவரிடம் இருக்கவில்லை. வரகவி பாரதியார், “கம்பர் அறிவு பெரிது! அது நமக்கு விளங்கவில்லை,” என்பதைச் சொல்லும் போது, தமது குறையை உணர்ந்து அதனை எவ்வளவு நயமாகக் குறிப்பிடுகிறார் என்பதைப் பாருங்கள்

**

 

8

வாழ்வின் முடிவுஎன்ற அத்தியாயத்தில் வருகின்ற ஒரு செய்தி இது:-

அன்னி பெஸண்டு அம்மையார், நம் கவிஞரின் பாடல்கள் பலராலும் போற்றிப் பேசப்படுவதனைக் கண்டார். நேருக்கு நேர் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. ஆகவே, சில கவிகளை ஜேம்ஸ் கஸின்ஸ் என்ற மற்றொருவரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து படித்து மெச்சினார்.

**

9

96 பக்கம் தான் என்றாலும் கூட  ஒன்பது அத்தியாயங்களில் பிற நூல்களில் காண முடியாத அரிய செய்திகளை தி.இராமானுசன் விரித்துரைக்கிறார்.

இந்த இரண்டாம் பதிப்பின் இரண்டாம் பக்கத்தில் கீழ்க்கண்ட வரிகள் உள்ளன:

Approved by the Text Book Committee, Madras, for Class use Vide Fort St.George Gazette Supplement to Part 1-B of the Consolidated list of approved books, 24th May, 1949, Page 11 of Part II.

இதன் மூலம் 1949ஆண்டு வாக்கிலேயே பாரதியார் பற்றிய துணப்பாட நூல்கள் அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகளில் பாடநூலாக ஆகியிருப்பது தெரிய வருகிறது.

 

அருமையான பல செய்திகளை அடக்கியுள்ள இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் வரவேற்பர்.

— SUBHAM–