This is part 13 from the book. This is the Last Part.
In the last part numbered Thirteen, rare pictures of Jain and Buddhist sculptures in Abu, Shatrunjai, Ahmedabad, Sanchi , Gwalior and Buddha Gaya are given.
In Kolkata Hindus are cremating dead bodies.
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
–subham—
Tags- Jain centres, Buddhist sculptures, Abu, Sanchi, Gaya, Rajasthan, Gwalior
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 48
கோவில் எண்கள் –76, 77, 78, 79, 80
76. மூவாட்டுப்புழா பழுர் பெருந்த்ரிக் கோவில்
எர்ணாகுளம் வட்டாரத்தில் பிறவம் அருகில் மூவாட்டுப்புழா நதிக்கரையில் அமைந்த இந்த சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றது எர்ணாகுளத்திலிருந்து 35 கி.மீ..
சிறப்பு அம்சம்
இங்குள்ள சிவ லிங்கம் ஆற்று மணலால் செய்யப்பட்டது. நம்பூதிரி பிராமண சிறுவர்கள் விளையாட்டாக செய்த சிவலிங்கம் பெரிய கோவில் உருவாகக் காரணம் ஆகியது .அந்த சிவலிங்கம் மணல் லிங்கம் போல உதிராமல் உறுதியாக நின்றதால் அதை பக்தர்கள் வழிபடத்துவங்கினர்.
இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயம் ஒரு சிறகு கொண்ட மரத்திலான கருடன் உருவம் ஆகும். இதை உருவாக்கிய சிற்பி, இரண்டாவது சிறகு செதுக்கப்பட்டவுடன் அது பறக்க எத்தனித்தது. உடனே அந்த சிற்பியே அதன் இரண்டாவது இறக்கையை வெட்டினான் என்பது இதன் பின்னாலுள்ள கதை
கோவில் விமானம் வட்ட வடிவமாக உள்ளது. மரத்தால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவன், கிழக்கு நோக்கி உள்ளார். சதுர அர்த்தமண்டபத்தின் கூரையில் அழகிய மர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன; பாகவத புராணம், ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு உருவங்களை செதுக்கியுள்ளனர் இது கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில்.
ஆண்டுதோறும் சிவ ராத்திரி உற்சவ காலத்தில் 6 நாள் விழா நடக்கும். யானைகளுடன் அலங்கார பவனி உண்டு.. மாலையில் பிறவம் நகரிலுள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி திரும்புவார். 50 காவடிகள், கரகம், மயிலாட்டம், மேள தாளம் புடை சூழ பவனி நடக்கும். 5 அடுக்குள்ள உயரமான காவடிகள் குறிப்பிடத்தக்கவை.
மறு நாளன்று ஆற்றில் முழங் கால் அளவு நீரில் நின்று முன்னோருக்கு நீர் பலி கொடுப்பார்கள்.
xxxx
77.நெட்டூர் மஹாதேவர் கோவில்
எர்ணாகுளத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள நெட்டூரில் அரியும் சிவனும் இணைந்த சங்கர நாராயணன் காட்சி தருகிறார்.. ஆண்டுதோறும் எட்டு நாள் உற்சவம் நடக்கையில் சிவனையும் விஷ்ணுவையும் கோவிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டுவருவார்கள்; இறைவனின் திருமேனி தாங்கிய உருவம் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது பவனி வரும். ஆராட்டு குளியலுடன் விழா நிறைவு பெறும் .
ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் அத்தம் தாளப் பொலி நடைபெறும் ; பெண்கள் தாம்பாளங்களில் விளக்குகளை ஏந்தி ஊர்வலம் வருவார்கள் . இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும் .
xxxx
78.வடுதலா கணபதி கோவில்
எர்ணாகுளத்திலிருந்து 5 கிமீ. தொலைவில் வடுதலாவில் கணபதி கோவில் இருக்கிறது ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி காலத்தில் எட்டு நாள் உச்சவத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆறாவது நாள் நடக்கும் பள்ளிவேட்டை உற்சவம் சிறப்பானது சப்பரத்தில் பிள்ளையாரை வைத்து கோவிலைச் சுற்றி கொண்டுவருவார்கள் . ஏழாவது நாளன்று யானைகள் மீது கணபதி பவனி வருவார். சிறப்பான இன்னிசைக் கச்சேரி ஒன்றுடன் விழா நிறைவு பெறும் .
xxxx
79.சேரை ஸ்ரீ கெளரீஸ்வர கோவில்
வைப்பீன் என்னுமிடத்திலுந்து 18 கி.மீ. தூரத்தில் சேரை சுப்ரமண்ய சுவாமி கோவில் இருக்கிறது.
ஆண்டுதோறும் 9 நாள் விழா நடக்கையில் கதகளி, ஓட்டந்துள்ளல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏழாவது நாளன்று பகதர்கள் 150 காவடிகளை சுமந்து ஆட்டிக்கொண்டு வருவார்கள். கடை சி நாள் விழாவில் 18 யானைகள் வண்ண வண்ண குடைகளுடன் வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமையும் .ஊர்வலத்தின் சுருதியை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டுபோக பஞ்ச வாத்யக்காரர்கள் கொட்டி முழக்குவார்கள் .
xxxx
80. அம்பலமேடு கோவில்
ஹரி மட்டம் சிவன் கோவில் எனப்படும் கோவிலில் சிவனும் விஷ்ணுவும் கோவில் கொண்டுள்ளனர். எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அம்பல மேடு இருக்கிறது.
ஆண்டு தோறும் எட்டு நாள் விழா நடைபெறும். ஏழாவது நாள் மாலை யில் யானைகளுடன் இறைவன் பவனி வருவார் . கதகளி, ஓட்டந்துள்ளல் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கொச்சி வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அங்கு நடைபெறும் இறைவன் ஊர்வலங்கள் யானைகளை வளர்ப்போருக்கும் , கதகளி ஓட்டந்துள்ளல் , சங்கீத, நாட்டிய கலைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் வரும்படியையும் உண்டாக்குகின்றன. ஆண்டு முழுதும் கோவில் விழாக்கள் நடப்பதால் கலை ரசிகர்களுக்கும் நல்ல விருந்து கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் பெரிய கோவில்களில் மட்டுமே நடக்கும் கலை விஷயங்களும் யானைகள் ஊர்வலமும் கேரளத்தில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.என்றால் மிகையாகாது .
மேலேயுள்ள பல கோவில்களின் பெயர்கள் தமிழ் நாட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது..
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
‘பை’– விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதை!
ச.நாகராஜன்
விஸ்லாவா சிம்போர்ஸ்கா (Wisława Szymborska) என்ற பெண்மணி போலந்து நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர். (தோற்றம் 2-7-1923 மறைவு 1-2-2012)
தத்துவம், அறநெறி, ஒழுக்கம் பற்றிய இவரது கவிதைகள் பிரபலமானவை. இவர் 1996ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்காக நோபல் பரிசைப் பெற்றார்.
அவரது பை (PI) என்ற இந்தக் கவிதை உலக மக்களைக் கவர்ந்த ஒன்று:
The admirable number pi:
three point one four one.
All the following digits are also initial,
five nine two because it never ends.
It can’t be comprehended six five three five at a glance,
eight nine by calculation,
seven nine or imagination,
not even three two three eight by wit, that is, by comparison
four six to anything else
two six four three in the world.
The longest snake on earth calls it quits at about forty feet.
Likewise, snakes of myth and legend, though they may hold out a bit longer.
The pageant of digits comprising the number pi
doesn’t stop at the page’s edge.
It goes on across the table, through the air,
over a wall, a leaf, a bird’s nest, clouds, straight into the sky,
through all the bottomless, bloated heavens.
Oh how brief – a mouse tail, a pigtail – is the tail of a comet!
How feeble the star’s ray, bent by bumping up against space!
While here we have two three fifteen three hundred nineteen
my phone number your shirt size the year
nineteen hundred and seventy-three the sixth floor
the number of inhabitants sixty-five cents
hip measurement two fingers a charade, a code,
in which we find hail to thee, blithe spirit, bird thou never wert
alongside ladies and gentlemen, no cause for alarm,
as well as heaven and earth shall pass away,
but not the number pi, oh no, nothing doing,
it keeps right on with its rather remarkable five,
its uncommonly fine eight,
its far from final seven,
nudging, always nudging a sluggish eternity
to continue.
பை என்பது கணிதத்தில் சிக்கலான ஒரு நிலை எண். ஒரு வட்டத்தில் சுற்றளவிற்கும் அதன் குறுக்களவிற்கும் இடையே உள்ள தொடர்பை அது குறிக்கிறது
2πr என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்க உதவும் சூத்திரம். R என்பது ஆரம்.
Π என்பது 3.142.
இந்தக் கவிதையில் அது எல்லையற்ற தன்மையையும் நமக்குத் தெரியாத ஒன்றையும் பற்றி உருவகமாகக் குறிப்பிட கவிஞரால் பயன்படுத்தப்படுகிறது.
மனித அறிவின் எல்லையை இந்தக் கவிதை மூலம் அளக்கிறார் கவிஞர். பிரபஞ்சத்தின் மர்மத்தையும் கூடவே விளக்குகிறார்.
இந்தக் கவிதை கணிதத்தின் அழகையும் நுட்பத்தையும் அதில் நிறைந்திருக்கும் சிக்கலான தத்துவத்தையும் குறிக்கிறது. இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.
பை என்ற கணித நிலை எண்ணை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பிரபஞ்ச மர்மத்தை உணர்த்த முற்படுகிறார் கவிஞர்.
பை என்பதில் உள்ள மர்மங்கள் ஏராளம். உலகெங்கும் மார்ச் 14 பை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்ச் – 3; 14 – 14 அதாவது 3.14 என்பதைக் குறிக்கிறது.
¾ என்பது 0.75. அவ்வளவு தான்.
1/3 என்பது 0.333333. அவ்வளவு தான்.
ஆனால் பை-யோ மாறிக் கொண்டே வரும் எண்களைக் கொண்டது.
பை 3.142 என்று ஆரம்பித்தாலும் அது எல்லையற்ற தன்மையில் நீண்டு சென்று கொண்டே இருக்கும்.
எண்கள் மாறிக் கொண்டே இருக்கிறது இல்லையா. Πயில் இதுவரை 100 டிரில்லியன் எண்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நவீன கணினி உத்தியைக் கொண்டு. (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண். அதாவது ஓராயிரம் பில்லியன். ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. அதாவது ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் நூறு கோடி.
பை- ஐ வைத்து ஏராளமான ஜோக்குகள் உண்டு. சிக்கலான கணிதங்கள் உண்டு.
ஆனால் அதை வைத்து பிரபஞ்ச மர்மத்தைச் சுட்டிக் காட்டும் கவிதை
In part TWELVE, rare pictures of Ayyanar, Saivite, Puri, Konark, Bhuvaneswar Temples, Sun Temple, Stone Chariot are given below.
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
Picture of Tibetan Lama
Ayyaanar
Krishna, Balabhadra, Subhadra of Puri Jagannatha Temple.
Puri Jagannath Temple Plan
World Famous Sun Temple in Konark, Orissa/Odisha
—subham—
Tags- rare pictures, , part 12, 1928 German book, with Ayyanar, Saivite, Puri, Konark, Bhuvaneswar Temples, Sun Temple, Stone Chariot
ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி பாலாஜி என்று போற்றப்படும் வெங்கடாசலபதி கோவிலுக்கு தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் கோடிக் கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். அவருக்கு கேரளத்திலும் கோவில்களும் பக்தர்களும் இருப்பது பலருக்கும் தெரியாது .
எர்ணாகுளம் நகருக்குள்ளேயே வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது . கெளட சரஸ்வதி பிராமணர்களுக்கு இவர் கண்கண்ட தெய்வம்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் எட்டு நாட்களுக்கு விழா நடக்கும். ஒவ்வொருநாள் காலையிலும் 3 யானைகளுடன் பெருமாள் பவனி வருகிறார். 5, 6, 7 ஆவது நாட்களில் சப்பரத்தில் பவனி நடக்கும்.
கடைசி நாள் மதியத்தில் வஞ்சியெடுப்பு நடக்கும். இதில் படகுகளின் மாதிரிகள் கொண்டுவரப்படும். இந்த ஊர்வலம் கோவில் குளத்தில் முடிவுபெறும். இரவில் கருட வாகன தர்சனத்தைப் பல்லாயிரக்கணக்கான பக்த்ர்கள் காண்பர் . பெருமாள், ரதத்தில் பவனி வருவார்.. மறுநாள் அதிகாலையில் தெப்போற்சவம் நடக்கும்.
மட்டாஞ்சேரி பகுதியில் கோவில்; உள்ளது . இது ஒரு பெரிய கோவில்; கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது கோவில் குளத்தின் நடுவில் செப்பு/ தாமிரக் கூரை வேயப்பட்ட மண்டபம் இருக்கிறது .மேல் அடுக்கு சுழலும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது
கோவிலின் வாசல் 70 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும்.மூன்று நிலை கிழக்கு கோபுரமும் கவர்ச்சிமிக்கது .
இந்தக் கோவிலில் உள்ள வெண்கல மணி இந்தியக் கோவில்களில் உள்ள மிகப்பெரிய மணிகளில் ஒன்றாகும்.
xxxx
72.வடக்கு பாரூர் வெங்கடாசலபதி கோவில்
இந்தக் கோவிலில் ஏப்ரலில் 6 நாள் உற்சவம் நடக்கிறது.3,4 ஆவது நாட்களில் திக் விஜயம் நடக்கும். பல்லக்கில் பெருமாளை எழுந்தருளச் செய்து கோவிலைச் சுற்றி எடுத்துவருவார்கள் ஐந்தாம் நாள் பள்ளி வேட்டை நடக்கும்.
ஆராட்டு , தெப்போற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.
xxxx
73.பல்லுருத்தி வெங்கடாசலபதி கோவில்
எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் பல்லுருத்தி இருக்கிறது. சிவராத்திரி காலத்தில் பெருமாளுக்கு விழா எடுப்பது குறிப்பிடத் தக்கது. 5 நாள் விழாவுக்கு பல்லக்கு பிரதட்சிணம் என்று பெயர்.. பல்லக்கில் பெருமாள் பவனி வருகிறார் .
மேற் கூறிய எல்லா விழாக்களிலும் கேரளத்துக்கே உரித்தான கொட்டு மேளங்களும் தமிழ்நாட்டு நாதஸ்வரமும் இருக்கும்.
xxxx
74.ஆல்வாய் சிவன் கோவில்
எர்ணாகுளம் நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த ஆல்வாய் சிவன் கோவில் பல சிறப்புகளை உடையது. சிவலிங்கம் கருவறையில் இல்லாது ஆற்றங் கரையில் நிற்கிறது . சிவராத்ரி உற்சவம் மிகப்பெரிய அளவில் நடக்கும். மறு நாளன்று முன்னோர்களுக்கு வாவுபலி கொடுப்பார்கள் .
உற்சவ காலத்தில் 14 நாட்களுக்கு சந்தை, கண்காட்சிகள் இடம்பெறும்.
xxxxx
75. உளியனூர் மஹாதேவர் கோவில், பொறியியல் அதிசயம்!!
ஆலவாயிலிருந்து 2 கி.மீ தொலைவில் பெரியாற்றங்கரையில் அமைந்த கோவில் இது .
இதே ஊரைச் சேர்ந்த பெருந்தச்சன் கட்டிய கோவில் ஆகும் . கேரளத்தின் மிகப்பெரிய கட்டட சிற்பி பெருந்தச்சன்.
இந்தக் கோவில் பொறியியல் கலையின் அதிசயம். ஸ்ரீ கோவில் என்னும் கருவறை 42 மீட்டர் சுற்றளவு கொண்டது; கிழக்கு நோக்கி சிவ பெருமானும் மேற்கு நோக்கி பார்வதியும் காட்சி அளிக்கிறார்கள்.
கூரையில் இருக்கும் இறை வாரக்கை,கைமரம்,அல்லது உத்தரங்கள் எண்ணிக்கை 64; இந்து மத நூல்களில் 64 என்பது சிறப்புடைத்து; மதுரை சிவ மெருமானின் திருவிளையாடல்கள் 64. வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் பெண்கள் கற்க வேண்டிய 64 கலைகளின் பட்டியல் (FIRST WOMAN’S SYLLABUS IN THE WORLD) உள்ளது. ஆய கலைகள் 64-கையும் தருபவள் சரஸ்வதி என்கிறது தமிழ்ப்பாடல் இந்தக் கோவிலின் 64 இறைவாரக்கைக்கையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளது .
கருவறையில் உள்ள 4 வாசல்களும் 4 வேதங்களைக் காட்டி நிற்கின்றன..
பிரதான கோவிலிலிருந்து சிறிது தூரத்தில் மேலும் ஒரு சிவன் கோவில் உள்ளது;.பரசுராமர் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பது ஐதீகம். கேரளத்தை உண்டாக்கியவர் பரசுராமர் என்பதால் அவர் சம்பந்தம் எல்லா இடத்திலும் இருக்கும் . இந்தியாவில் உள்ள பழைய சிவலிங்கங்களில் இதுதான் பெரியது என்பது மக்கள் நம்பிக்கை. தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் எழுப்பிய பெருவுடையார் என்னும் மிகப்பெரிய லிங்கம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிஷ்டை ஆனது. இங்குள்ள சிவலிங்கமோ அதற்கும் முந்தியது என்பது நம்பிக்கை. தற்காலத்தில் உலகம் முழுதும் மிகப்பெரிய சிவலிங்கங்கள் நிறுவப்படுவதை பத்திரிக்கைகளில் படிக்கிறோம் .
மஹா கணபதி கோவிலையும் புதிதாக எழுப்பியுள்ளனர் .
சிவன் கோவில் விழா ஆண்டுதோறும் ஜனவரியில் 10 நாட்களுக்கு நடைபெறும் .
–SUBHAM—
TAGS- பொறியியல் அதிசயம், உளியனூர் மஹாதேவர் கோவில், வெங்கடாசலபதி கோவில்கள், PART 47, கேரள கோவில்கள்- 47, பெருந்தச்சன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
SNR Article Index : DECEMBER 2023
DECEMBER 2023
1-12-23 12785 கொங்குமண்டல சதகம் – பாடல்கள் 6 & 7
2-12-23 12789 SNR Article Index : NOVEMBER 2023 3-12-23 12792 நிறைகுடம் தளும்பாது! 4-12-23 12795 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! – அத் 18 – ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி! 5-12-23 12799 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! -அத் 19 தவறான
மொழிபெயர்ப்பால் போடப்பட்ட அணுகுண்டு! 6-12-23 12803 வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்! – ஒரு வரி
சுபாஷிதங்கள் 7-12-23 12806 நடாஷா டெம்கினா – அதீத உளவியலும் அதிசயங்கள்
கண்ட அறிஞர்களும்! – 2 8-12-23 12812 சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு – கொங்குமண்டல
சதகம் பாடல் 21 9-12-23 12814 தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம்
செய்த ஆணூர்ச் சர்க்கரை! -கொங்குமண்டல சதகம் பாடல் 52. 10-12-23 12817 பாலஸ்தீனம் என்று ஒரு இடமே கிடையாது! 11-12-23 12820 முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் –
கொங்குமண்டல சதகம் பாடல் 74. 12-12-23 12825 லவ குசரின் ஜன்ம பூமி சீரமைக்கப்படும்! 13-12-23 12827 நோய், சிகிச்சை, வைத்தியர், நோயாளி பற்றி ஆயுர்வேதம்
தெரிவிக்கும் அடிப்படை உண்மைகள்! ஹெல்த்கேர்
டிசம்பர் 2023 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. 14-12-23 12831 அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை! – தேவாரச் செல்வம் 15-12-23 12836 ஆசார்யர், தந்தை, தாய், சகோதரன், சகோதரன் பெருமை! 16-12-23 12840 ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா! 17-12-23 12843 பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்! 25-12-23 12846 லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக்கணக்கானோர் வாழ்வு
வளம் பெற வழி வகுத்தவர்! – 1, 2 and 3 26-12-23 12848 நிகோலா டெஸ்லா – ஏழு அறிவுரைகள்! 27-12-23 12852 காளத்தீ கண்டத்தே, நெற்றியிலே, கரத்திலே, அங்கமெங்கும்
In part eleven, rare pictures of Mahabalipuram, Kanchipuram temples are shown. Ellora Cave sculptures are given below.
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
River Ganga descending from sky
above images are from Mahabalipuram
xxxx
Indra in Ellora
Kanchipuram Temple
—subham—
Tags- rare pictures, Mahabalipuram, Ellora caves, Kanchipuram, part 11, 1928 German book
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 46
கோவில் எண்கள் –67,68,69,70
கேரள மாநிலத்தில், தென் திசையை நோக்கி வர வர , திருவனந்தபுரம் வரை ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களைக் காணலாம் . மாநிலம் முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை முதல் 40 பகுதி கட்டுரைகளில் கண்டோம். ஏனையவை விழாக்கள் மூலம் நிறைய பக்தர்களை இழுக்கின்றன. பகவதி , ஐயப்பன் , சிவன் விஷ்ணு கோவில் இல்லாத இடம் இல்லை . பல இடங்களில் சுப்ரமண்யர், மாரியம்மன் , பேச்சியம்மன் கோவில்களும் இருப்பது தமிழ்நாட்டின் தாக்கத்தைக் காட்டுகிறது . காலடி, சோட்டாணிக்கரா , த்ரிபுனித்துரா , த்ரிகக்காரா , எர்ணாகுளம் கோவில்களைக் கண்டோம் .மாதிரிக்காக மேலும் சில கோவில்களைக் காண்போம்.
67.கக்கூர் காளவயல் மாட்டுவண்டி ரேஸ்
எர்ணாகுளத்திலிருந்து 45 கி.மீ., பிரவம் என்னும் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் காளை வயல் என்னும் அறுவடைத் திருவிழா பிப்ரவரி மாதம் நடக்கும். இதன் சிறப்பு என்னெவென்றால் மாட்டுவண்டி பந்தயமும் இரண்டு கோவில் அம்மன்கள் சந்திப்பும் ஆகும்.
எடப்பாரா , அம்பசேரி என்னும் இரண்டு ஊர்களில் கோவில் கொண்டுள்ள தேவிகள் விழாவன்று
கக்கூர் காளவயலில் சந்திப்பார்கள்; அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்ப மாதத்தில் 4 நாட்களுக்கு விழா நடக்கும்.. மூன்றாம் நாள் விழாவில் தேவியர் சந்திப்பு நடக்கும். இரண்டு அம்மன்களும் பஞ்சவாத்யம், நாகஸ்வரம் முழக்கத்துடன் யானை மீது பவனி வருவார்கள்.பின்னர் அம்பசேரி கோவிலில் எழுந்தருளுவார்கள் ; மறுநாள் இரவில் அவரவர் கோவிலுக்குத் திரும்பிப் போவார்கள்.
பிரவம் மாட்டுவண்டி ரேஸ்
இந்த விழாவினை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி ரிஷப வாஹனம் என்ற பெயரில் ஊர்வலமாக வரும். நிறைய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் . முக்கியமாக 40 மாட்டு வண்டிகள் பங்கேற்கும் பந்தயம்/ ரேஸ் நடைபெறும் . அத்தோடு ஐந்து நாட்களுக்கு விவசாயக் கண்காட்சியும் நடக்கும்.
68.பேச்சியம்மன், மாரியம்மன் கோவில்கள்
எர்ணாகுளம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் ..பேச்சியம்மன் கோவில் இருக்கிறது (மதுரையிலும் வைகை ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் .பேச்சியம்மன் கோவில் இருக்கிறது. அந்தப் படித்துறைக்கே அம்மனின் பெயர்தான் ).
ஆண்டுதோறும் எட்டுநாள் விழா நடக்கும் கடைசி நாள் விழாவில் வளஞ்சசம்பலம் தேவி கோவிலிலிருந்து நையாண்டி மேளம், உடுக்கு இசையுடன் ஊர்வலம் புறப்படும்; அதி காலையில் கோவிலை அடையும் தீ மிதித்தல் அல்லது பூக்குழி இறங்குதல் எனும் அக்கினிப்பிரவேசம் முக்கிய சடங்கு ஆகும் . நிறைய நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் பங்கேற்பது தனிச் சிறப்பு ஆகும்
எர்ணாகுளம் திவான் ரோடு மாரியம்மன்- பத்ர காளி கோவில் நகரின் முக்கியக் கோவில்களில் ஒன்று. ஒரே கருவறையில் மாரியம்மனும் பத்ரகாளியும் இருப்பது தனித்துவம் மிக்கது.
ஆண்டுதோறும் 5 நாள் விழா நடக்கிறது கடைசி நாளன்று இரண்டு அம்மன்களும் இரண்டு யானைகளில் இரவு முழுதும் பவனி வருவார்கள். நையாண்டி மேளம், நாகஸ்வரம், பஞ்ச்ச வாத்யம் வாசிப்போர் தம் திறமையைக் காட்டுவார்கள். இரவில் பெண்கள் தட்டுகளை ஏந்தி வரும் தாளம் வரவு நடக்கும் கதகளி, ஓட்டந்துள்ளல் நடனங்கள் இடம்பெறும்.
எடப்பள்ளி மாரியம்மன் கோவில் 8 கிமீ தொலைவில் இருக்கிறது எட்டு நாள் விழாவில் 7ஆவது நாள் நடக்கும் கனலாட்டம் குறிப்பிடத்தக்கது. விரதம் அனுஷ்டிக்கும் மாரியம்மன் பக்தர்கள் தீ மீது நடனம் ஆடுவார்கள் அவர்கள் ஆவேசத்துடன் நடனம் ஆடுவது பார்ப்போர் மனதில் அச் சத்தையும் பக்தியையும் உண்டாக்கும். மாலையில் நடக்கும் காவடியாட்டத்தில் அம்மன் குடம், கரகம் முதலியனவும் சேரும்.
69.சுப்ரமண்ய சுவாமி கோவில்கள்
எர்ணாகுளம் குமரேஸ்வர சுப்ரமண்ய சுவாமி கோவில், பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நாள் விழாவில் காவடியாட்டம், கரகாட்டம் இடம்பெறும். யானைகள் பவனியும் உண்டு
எர்ணாகுளம் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள வைத்திலா .சுப்ரமண்ய சுவாமி கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள் இருக்கின்றன. ஆங்கு .சுப்ரமண்ய சுவாமி , சிவ பெருமான், ஐயப்பன் தரிசனம் தருகிறார்கள். எட்டு நாள் விழா ஆராட்டுடன் நிறைவுபெறும். அப்போது 2 யானைகள் ஜெண்டை மேளம், பஞ்சவாத்யம் முழக்கத்துடன் ஆற்றுக்குச் செல்லும் .
தைப்பூசம் நாளன்று முருகனுக்கு விழா எடுப்பார்கள்; .மாலை முதல் நள்ளிரவு வரை காவடி ஆட்டம் நடக்கும் .
எர்ணாகுளத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் கும்பலாவில் ஒரு சுப்ரமணிய சுவாமி கோவில் இருக்கிறது.
அதன் பெயர் குமராலயம் கோவில் ஆண்டுதோறும் நடக்கும் ஆறு நாள் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தோளில் காவடி சுமந்து ஆடும் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். மூன்று யானைகள் புடை சூழ காவடி ஆட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லுவார்கள். 24 மணி நேரத்துக்கு விரதம் அனுஷ்டிப்போர் மட்டுமே காவடிகளை சுமக்கலாம் என்ற விதி இருக்கிறது.
பொன்னாக்கரா சுப்ரமண்ய சுவாமி கோவில் எர்ணாகுளம் அருகில் இருக்கிறது. ஆறு நாள் விழாவில் முக்கிய அம்சம் சூலந் தூக்கல் ஆகும். முருக பக்தர்கள் நாவிலும், கன்னத்திலும் காதுகளிலும் வேல் வடிவிலான சூலத்தைக் குத்திக்கொள்ளுவார்கள் முதல் இரண்டு நாட்களில் களமெழுத்துப்பாட்டும் கடைசி 4 நாட்களில் ஓட்டந்துள்ளல் நடனமும் நடக்கும். கரகம் காவடியாட்டம் முதலியன இடம்பெறும்.
கொச்சி கோட்டை ஸ்ரீ கார்த்திகேய கோவில், எடகொச்சி பரமேஸ்வர குமாரமங்கலம் கோவில் , மூவாட்டுப்புழா குமார பஜன தேவஸ்வம், இளம்குன்னபுழா சுப்ரமண்ய சுவாமி கோவில்களிலும் காவடியாட்டம் முதலியன நடக்கின்றன .
70.கொத்தமங்கலம் த்ரிகாரியூர் மஹாதேவ கோவில்
கொத்தமங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது பரசுராமர் உண்டாக்கிய கேரள சாம்ராஜ்யத்தில் 64 பகுதிகள் இருந்தன. அவற்றில் ஒன்றான தளி வட்டாரம் கி.பி. 800 முதல் 1100 வரை கேரளத்தின் தலைநகராக இருந்தது . இந்தப் பழைய சிவன் கோவிலில் பத்து நாள் விழா நடக்கும்.. முதல் 3 நாட்களுக்கு குறத்தியாட்டம் நடக்கும்; சாக்யர் கூத்து, பாடகம் ஆகியவையும் விழாவில் உண்டு. கடைசி மூன்று நாட்களில் இன்னிசை வாத்ய முழக்கத்துடன் யானை மீது சிவன் வலம் வருவார் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்!
ச.நாகராஜன்
இராமன் என்றொரு வள்ளல் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்தித்தார் கவி வீரராகவ முதலியார்.
அவரைப் பாடிப் புகழ்ந்தவுடன் ராமன் அவருக்கு பரிசாக ஒரு யானையைக் கொடுத்தார்.
யானையை வீட்டிற்குக் கொண்டு வந்தார் புலவர்.
வீட்டில் பாணி (பாடினியானவள்) அவரை நோக்கி, “பாணரே! இராமன் என்ற வள்ளலைப் பார்க்கச் சென்றிருந்தீரே! அவர் என்ன கொடுத்தார்? என்ன கொண்டு வந்தீர்” என்று கேட்டாள்.
அதற்குப் புலவர் பிரான் தான் கொண்டு வந்தது யானை என்று சொல்லாமல் யானைக்கு பரியாயப் பெயர்களான மாற்றுப் பெயர்களைக் கூறினார்.
ஒவ்வொரு பெயருக்கும் அதன் உண்மைப் பொருள் புரியாத அவரது மனைவி அவரைக் கிண்டல் செய்தாள்.
அது தான் இந்தப் பாடல்:
இம்பர்வா நெல் லையிரா மனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசு மென்றாள்
மாதங்க மென்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் றின்னு மென்றாள்
பகடென்றே னுழுமென்றாள் பழனந் தன்னைக்
கம்பமா வென்றெனற் களியா மென்றாள்
கைம்மாவென் றேன்சும்மா கலங்கினாளே
பாடலின் பொருள் :
பாணி – பாடினியானவள் (புலவரின் மனைவியானவள்)
பாணா – பாணனே
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி – இவ்வுலகமும் அவ்வுலகமும் தன் புகழின் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் இராமன் என்பவனைப் பாடி
நீ என் கொணர்ந்தாய் – நீ என்ன பொருள் கொண்டு வந்தாய்?
என்றாள் – என்று என்னை நோக்கி வினவினாள்
(அதற்கு விடையாக நான்)
வம்பது ஆம் களபம் என்றேன் – புதுமையாகிய களபம் என்றேன்
அதற்கு அவள்
பூசும் என்றாள் – அதைப் பூசுவீர் என்றாள்.
மாதங்கம் என்றேன் – மாதங்கம் என்று சொன்னேன்
நாம் வாழ்ந்தோம் என்றாள் – நாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் – மிக்க சிறப்பினை உடைய வேழம் என்று சொன்னேன்
தின்னும் என்றாள் – அதைத் தின்னுவீர் என்றாள்
பகடு என்றேன் – பகடு என்று சொன்னேன்
பழனம் தன்னை உழும் என்றாள் – வயலை உழுவீர் என்று சொன்னாள்
கம்பமா என்றேன் – கம்பமா என்று சொன்னேன்
நல் களி ஆம் என்றாள் – நல்ல களியைக் கிளறலாம் என்றாள்
கைம்மா என்றேன் – கைம்மா என்று சொன்னேன்
அதன் பொருள் தெரியாததால்
சும்மா கலங்கினாள் – சும்மா கலங்கி நின்றாள்
பாடலில் வரும் சொற்களுக்கு இரு பொருள் உண்டு. வரிசையாகப் பார்ப்போம்.
களபம் என்றாள் யானை. ஆனால் பாடினி புரிந்து கொண்டதோ களபச் சந்தனம் என்று. ஆகவே இவ்வளவு தானா, அதை எடுத்துப் பூசும் என்றாள் அவள்.
உடனே புலவர் மாதங்கம் என்று யானையைச் சொன்னார். மா தங்கம் என்று புரிந்து கொண்ட பாடினி உயர்ந்த பொன்னையா கொண்டு வந்தீர் நாம் வாழ்ந்தோம் என்றாள்.
புலவர் வேழம் என்றார். வேழத்திற்குக் கரும்பு என்று பொருள் கொண்ட பாடினி அதைத் தின்னும் என்றாள்.
புலவர் பகடு என்று யானையைக் கூறினார். பகடுக்கு எருமை என்ற பொருள் கொண்ட பாடினி அதனால் வயலை நன்கு உழுவீர் என்றாள்.
புலவர் கம்பமா என்றார். கம்பமா என்பதற்கு கம்பை அரைத்துச் செய்த மா என்று பொருள் கொண்ட அதை வைத்து நன்கு களி கிளறலாம் என்றாள்.
கடைசியாக புலவர் கைம்மா என்று கூறினார்.
கைம்மாவிற்குப் பொருள் விளங்காத மனைவி சும்மா கலங்கி நின்றாள்.
பின்னர் புலவர் யானையைக் காண்பிக்க மனைவி மகிழ்ந்தாள்.
இன்னொரு வள்ளல் அவருக்குத் தானன் என்று பெயர். அவரும் புலவருக்கு ஒரு யானையைப் பரிசாகத் தந்தார்.
புலவர் பாடினார்:
இல்லெனுஞ் சொல் லறியாத சீகையில் வாழ் தானனைப் போயாழ்பாணன் யான்,
In part ten, rare pictures of Thanjavur, Srirangam temples, Trichy Rockfort, Jambukeswaram and Kumabakonam temples are shown. Chidambaram temple, tank and mandap are pictured
xxxx
There are over 200 pictures in this YEAR 1928 book. I am posting them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
above pictures are from Thanjavur temple
above are from Chidambaram Temple
above pictures are from Trichy, Srirangam and Jambukeswaram Temples
Tiruvannamalai towers
Kumbakonam Temple
—subham—
Tags- rare pictures, Thanjavur, Chidambaram, Trichy, Srirangam, Kumbakonam, part 10, 1928 German book