WRITTEN BY S NAGARAJAN Post No. 10,476 Date uploaded in London – – 23 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்! ச.நாகராஜன்
பாரதம் கண்ட 64 கலைகளில் இசைக் கலை மிக முக்கியமானது. அந்தக் கலையிலும் வாத்தியங்கள் அற்புதமான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவை. இந்திய மக்களின் வாழ்க்கையில் இசையும் வாத்தியங்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் காலம் காலமாக முழுவதுமாகக் கலந்திருப்பதை நமது இதிஹாஸங்களான இராமாயணம், மஹாபாரதத்தில் காணலாம். வேதங்கள் இசை மஹிமை பற்றியும் ஒலியின் சக்தி பற்றியும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன; ஒலி பற்றிய பல அபூர்வ இரகசியங்களை அவை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நமக்கு ஒரு அபூர்வமான நூலைப் படைத்து அளித்திருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன். பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பிள்ளையவ்ர்களைப் பற்றித் தெரிந்திராதவர்களே இல்லை. அவரது பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர். பாரம்பரிய சங்கீதம் இவர் ரத்தத்தில் ஊறியதற்கு இந்த ஒரு காரணம் போதாதா என்ன? மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இசை சம்பந்தமான மிருதங்க இசை மரபு என்ற அரிய ஆய்வை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது ஆய்வின் அடிப்படையில் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் ஒரு புத்தகம் : மிருதங்க இசை மரபு. 104 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகதம் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்னுரை, மிருதங்கம் தோற்றம், வளர்ச்சி, மிருதங்கம் தயாரிப்பு மரபு, மிருதங்கம் பாட மரபு, மிருதங்கம் வாசிப்பு மரபு, முடிவுரை ஆகிய தலைப்புகளில் ஏராளமான சுவையான செய்திகளைப் படித்து வியக்கிறோம். பிரமிக்கிறோம்.
முன்னுரையில் நூலாசிரியர் தரும் சுவையான தகவல்களில் சில : இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் தமிழகத்தில் இருந்தன. சர்.சி.வி.ராமன் மிருதங்க வாத்தியத்தின் மீது அபார பற்று கொண்டவர். அதன் ஒலி பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். தினமும் காலையில் எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் ஒன்றாக மிருதங்கத்தை நமது சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. அடுத்து மிருதங்கம் அதன் தோற்றம் வளர்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தில் சிவபிரானிடமிருந்து எப்படி வாத்தியங்கள் தோன்றின என்ற வரலாறு நமக்குக் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் அர்ஜுனன் மிருதங்கம் வாசித்தது, சங்க இலக்கியத்தில் வாத்தியங்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள், கல்வெட்டு தரும் சான்றுகள் என பிரமிக்க வைக்கும் தகவல்கள் ஓரிழையாகத் தரப்படுகிறது. மிருதங்க வாத்தியம் மரபு வழுவாது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம். இந்தத் தயாரிப்பாளர்கள் எந்த ஊர்களில் இருக்கிறார்கள் என்பதும் தரப்படுகிறது.
தாளத்தினைப் போட்டு பாடல்களைப் பாடும் போது அவற்றிற்குத் துணையாகப் பலவகைத் தாள வாத்தியங்கள் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும், மிருதங்கத்திற்குரிய சொற்கள், கால அளவு மிக நுட்பமாக இங்கு விளக்கப்பட்டுள்ளன. சில சொற்களை மிருதங்கத்தின் இரு புறங்களிலும் வாசிப்பதனால் தான் நாதம் பிறக்கிறது. நாதம் நாதம் நாதம் நாதத்தேயோர் நலிவுண்டாயின் சேதம் சேதம் சேதம்
தாளம் தாளம் தாளம் தாளத்திற்கோர் தடையுண்டாயின் கூளம் கூளம் கூளம் என்ற மஹாகவி பாரதியாரின் கவிதா சொற்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை இந்த நூலாசிரியர் திரு க.தியாகராஜன் தக்க தகவல்களைத் தந்து நிரூபிக்கும் போது இவ்வளவு நுட்பமான நாம் அறிய வேண்டிய ஆழ்ந்த விஷயங்கள் உள்ளனவே என்ற வியப்பு மேலிடுகிறது. சங்கீதப் பயிற்சி கொள்வோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
மிருதங்க சம்பந்தமான தற்போதைய பாட திட்டத்தையும் 1966இல் தோற்றுவிக்கப்பட்டு மிக அருமையாக நடந்து வரும் மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பற்றிய விவரங்களையும் இந்த அத்தியாயம் கூடவே தருகிறது. அடுத்து மிருதங்கம் வாசிப்பு மரபை விவரிக்கும் ஆசிரியர் மிருதங்கம் பற்றி பல மிருதங்க நிபுணர்கள் கூறிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தருகிறார்.
வயலினும் மிருதங்கமும் இல்லாத இசைக் கச்சேரிகளே தற்போது இல்லை. மிருதங்க வாசிப்பில் பாணி, தனித்தன்மைகள் (Different Styles) வேறுபடுகின்றன. முடிவுரையில் பிரபஞ்சம் உள்ள வரை இயக்கங்கள் உண்டு. இயக்கம் உள்ளவரை லயம் உண்டு. லயம் உள்ளவரை ஜீவன் உண்டு. உயிர் உண்டு. லயத்திற்கே உயிர் கொடுக்கும், உருவைக் கொடுக்கும் மிருதங்க இசை மரபானது இசைத்துறைக்கு மட்டுமல்லாது உலகம் மேம்படவே வழிகளைத் தரும் என்று கூறி நூலை முடிக்கிறார் தியாகராஜன். அறிவியல் ரீதியாகத் தரப்பட்டுள்ள சான்றுகளைப் படித்தபின்னர் ஆம் என்று நாமும் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறோம். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கூறி இருக்கிறாரே, “ஸொகஸுகா மிருதங்க தாளமு” என்பதில் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பதை நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்வர்.
இந்த நூலுக்குத் தமிழக அரசு தக்க விருதைத் தர வேண்டும்; மத்திய அரசு தக்கபடி இவரை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் இதைப் படிப்போர் மனதில் எழுவது இயல்பே.
இவர் ஆய்வுக்கு தக்க முறையில் ஊக்கம் அளித்த ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலய முதல்வர் திருமதி டாக்டர் லதா வர்மா பாராட்டுக்கு உரியவர்.
இந்த நூல் அனைத்து நூலகங்களையும் சங்கீதத்தில் ஆர்வமுள்ளோர் இல்லங்களையும் அலங்கரித்து, ஏராளமான இசை விற்பன்னர்களை துறை சார்ந்த அறிவுடன் உருவாக்கும் என்று நம்பலாம்.
மொத்தத்தில் நல்ல ஒரு இசைக் கச்சேரியைத் தகுந்த மிருதங்க வாத்தியத்துடன் கேட்டு அனுபவித்த உணர்வை இந்த நூல் தருகிறது. முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
A herb called Apaamaarga is mentioned at least in four hymns of Atharvana Veda(AV). It shows its importance. Magical qualities of this herb make interesting reading. I have given here all the four verses. Let me mention the interesting bits first with my comments:
Apamarga is Achyranthes Aspera; it is Naayuruvi in Tamil according to Wikipedia
Ralph T H Griffith gives the following information in the footnotes: –
What is Apamarga?
It is identified as Achyranthes Aspera, a biennial plant frequently used in incantations, in medicines, in washing linen and in sacrifices, and still believed to have the power of making men proof against the stings of scorpions. It is called also Paraakpushpii, Pratyak Pushpii, and Pratyak parni from the reverted direction of the growth of its leaves, flowers and fruit.
See also AV. IV-19- 4,7; VI-129-3; and VII-65-1
What is the meaning in Sanskrit?
Apaa= with; mrj= to cleanse, wipe.
This hymn is a charm , addressed to the plant endowed with magical virtues to secure immunity from various kinds of evil, and restoration of health.
xxx
MY COMMENTS
The first two mantras praise the virtues of this herb as ‘Conquering’ and ‘Queen of Medicines’. It banishes the curse.
Other mantras in the hymn are about evil spirits, which are driven out by this herb.
Tamils still believe in such things. The most famous Kavasam (armour, shield) in Tamil is on Lord Skanda composed by Devaraya Swamikal. It is recited by all Saivite Tamils. That has a long list of ghosts, fiends, and evil spirits. By reciting this Kavsam, all those evil spirits are driven away. It is an echo of Vedic mantras.
Hanuman Chalisa , the most famous hymn in the North, also considered an antidote for evil spirits; the hymn says ‘Bhuta Pisacha nikata nahim ave’, where Hanuman’s name is recited.
In the olden days even the virus and bacteria were listed as evil sprits. So South Indian Hindus used neem leaves to get immunity from small pox, chicken pox etc. and those neem leaves are considered symbol of goddess.
If the identification of this plant as Nayuruvi in Tamil is correct, then we can add one more interesting point. That herb is used in Navagraha Homa done in all House warming ceremonies. (My comments continues at the end of the hymns.)
HYMN XVII; BOOK 4; AV; SUKTA 119
A charm to secure freedom from various evils
1.We seize and hold thee, Conquering One! the queen of medi- cines that heal. O Plant, I have endowed thee with a hundred powers for every man, 2.Still conquering, banishing the curse, mighty, with thy reverted. bloom. Thee and all Plants have I invoked: Hence let it save us! was my prayer. 3.She who hath cursed us with a curse, or hath conceived a murderous sin, Or seized our son to take his blood, may she devour the child she bare. 4.What magic they have wrought for thee in dish unbaked or burnt dark-red, What they have wrought in flesh undressed,—conquer the sorcerers therewith. 5.Ill dream and wretchedness of life, Rākshasa, monster, stingy hags, All the she-fiends of evil name and voice, we drive away from us. 6.Death caused by famine, caused by thirst, failure of children,. loss of kine, With thee, O Apāmārga, all this ill we cleanse and wipe away. 7.Death caused by thirst, death caused by stress of hunger, loss at play with dice, All this, O Apāmārga with thine aid we cleanse and wipe away.
8.The Apāmārga is alone the sovran of all Plants that grow. With this we wipe away whate’er hath fallen on thee: go in health!
XXXX
HYMN XVIII; BOOK 4; AV
A counter-charm against the incantations of enemies
1.The moonlight equalleth the sun, night is the rival of the day. I make effectual power my help: let magic arts be impotent. 2.Gods! if one make and bring a spell on some man’s house who knows it not, Close as the calf that sucks the cow may it revert and cling to him. 3.When one puts poison in a dish of unbaked clay to kill a man, It cracks when set upon the fire with the sharp sound of many stones. 4.Endowed with thousand powers! adjure the bald and those with necks awry. Back to its author turn the spell like a dear damsel to her friend! 5.I with this Plant have ruined all malignant powers of witchery. The spell which they have laid upon thy field, thy cattle, or thy men. 6.No power had he who wrought the spell: he hurt his foot, he broke his toe. His act hath brought us happiness and pain and sorrow to him- self.
7.Let Apāmārga sweep away chronic disease and every curse, Sweep sorceresses clean away, and all malignant stingy hags.
8.Sweep thou away the sorcerers, all stingy fiendish hags away. All this, O Apāmārga, with thine aid we wipe away from us.
XXXX
HYMN CXXIX; BOOK 6; AV
A charm for success and happiness
1.With fortune of the Sisu tree—with Indra as my friend to aid I give myself a happy fate. Fly and begone, Malignities! 2.That splendour and felicity wherewith thou hast excelled the trees Give me therewith a happy fate. Fly and begone, Malignities 3.Blind fortune, with reverted leaves that is deposited in trees— Give me therewith a happy fate. Fly and begone, Malignities.
XXX
HYMN LXV; BOOK 7; AV
A charm against imprecation and threatened evils
1.With retroverted fruit hast thou, O Apāmārga, sprung and grown. Hence into distance most remote drive every curse away from, me. 2.Whatever evil we have done, whatever vile or sinful act, With thee, O Apāmārga, who lookest all ways, we wipe it off. 3.If with the cripple we have lived, whose teeth are black and nails deformed, With thee, O Apāmārga, we wipe all that ill away from us.
Hymn 18 given above adds interesting details about collecting this plant:-
The plant is collected during night time on full moon days .
Mantra 1 in hymn 18 says: I gather a plant whose efficacy is undoubted, which shall counteract the magical practises of malignant fiends and sorcerers.
In short people believed in its medical and magical qualities. Westerners are affected mentally than any other place. They spend a lot of time and money in counselling. Psychologists make good money in ‘driving away the evil thoughts/spirits. Hindus don’t waste time or money; they are advised to go to temples and breath fresh air and enjoy nature. They get cured within a few months. Westerners spoil the people with lithium tablets. So, mantras like this have more psychological benefits for the patients and the family that looks after the patients.
I taught Tamil at SOAS, University of London, for over 20 years as a part time tutor. I prepared lot of lessons to cater to the students at different levels. I was part of Cambridge University Tamil Examinations at GCSE and A Level and ASSET languages.
I am uploading Tamil lessons prepared over 20 years. Some pictures or tabular columns are from other books or sites. I will explain them as far as possible.
Feel free to contact me for clarfications or tutions.
Here is the First Lesson
Ival Oru Pen; Ival Pusthakam Padikkiraal.
She (is) a girl. She reads (a) book
Note:
இவள் (ஒரு) பெண் ; இவள் புஸ்தகம் படிக்கிறாள்
In Tamil short sentences can be formed without a verb.
in Tamil articles like a or an or the are optional; they are not alwayes used.
xxx
FRUIT SHOP (Picture is at the top)
This (is) a Fruit Shop. He sells fruits
Pazam = Fruit in singular
when you add Kal it becomes plural- Fruits.
In Engish you add S in most of the words.
If I say VirkiraaN= male
If I say virkiraaL = female
If I say VirkiraaR = gender free verb; but respectful.
Vil= to sell
Virkiraar = present tense
Kadai = Shop
Fruit Shop = Pazak Kadai
Ivar = He (with respectful R at the end.
இது ஒரு பழக்கடை ; இவர் பழங்கள் விற்கிறார்.
xxx
These (are) Stones
இவைகள் கற்கள் = Ivaikal Karkal கல்= Kal = Stone கற்கள்= Karkal = Stones இவை = Ivai = These இவைகள்= Ivaikal = These
Adding Kal, we change a word into plural.
xxxx
இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது
xxxx
இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன
முதல் மந்திரம்
மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .
மந்திரம் -2
நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை
3
எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்
4.
சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில் அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு
5
கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்
6
அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —- பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்
7.
இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன், உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.
ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்
8
வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.
இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்
Xxxx
அபா மார்கம் என்றால் என்ன ?
தேள் கடி போன்ற விஷத்தை நீக்க இது பயன்படுகிறது மருந்துகள், யாகங்களிலும் உபயோகிக்கிறார்கள்; இதனுடைய வேறு பெயர்கள்- பராக் புஷ்பம், பிரத்யாக புஷ்பம், பிரத்யாக பரணி
இந்தப் பெயரின் சம்ஸ்க்ருத மொழி விளக்கம் —
அபா = உடன், உதவியுடன் ; ம்ரிஜ் = துடைத்து அழி = அபாமார்க ; ஏழாவது மந்திரத்தில் இது வினைச் சொல்லாக வந்துள்ளது
இதனுடைய தாவரவியல் பெயர்—
ACHYRANTHES ASPERA ; இதை நாயுருவி என்று அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது
மேல் விவரம் — லினன் போன்ற சணல் நார் துணிகளைச் சுத்தப்படுத்தவும் உபயோகிக்கிறார்கள்
இதனுடைய இலைகளும் பூக்களும்
எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதால் இதை ‘பராக்’ என்ற சொல்லின் மூலம் விளக்குகிறார்கள்
இந்த மூலிகையை 4-19-4, 6-129-3; 7-65-1 ஆகிய மந்திரங்களிலும் காணலாம்.
xxx
எனது விமர்சனம்
இந்துக்களிடையே இரண்டு, மூன்று நம்பிக்கைகள் உண்டு
1. நாம் செய்த பாவத்தால் நோய்கள் வரும்
2. நாம் மற்றவர்க்கு தீங்கு செய்தால் நமக்குத் தீங்கு வரும்
3. பிறர், பில்லி, சூனியம், மாய மந்திரத்தால் நமக்கு நோய்களைத் தர முடியும் .
இவை அனைத்துக்கும் விஞ்ஞான விளக்கமும் உளது
1. பாவம் என்பது என்ன ? கெட்ட உணவு, அதிக உணவு உண்ணுதல், குடித்தல் , பெண் வழிச் சேரல் , புகை பிடித்தல் முதலியன இவை தீமை என்பதை டாக்டர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் – குறள் 202- என்பது வள்ளுவன் வாக்கு.
2.நாம் மற்றவர்க்கு தீங்கிழைத்தால் அது நமக்கு கெடுதி செய்யும். உணமைதான் ; அவர்கள் பழிக்குப் பழி வாங்குவார்கள் ; அதுமட்டுமல்ல; கோபம், ஆத்திரம், சாபம் இடுதல் முதலியன ஒருவரின் சக்தியை உறிஞ்சுவிடும், மன நிலையைப் பாதிக்கும் என்று உள்ளவியல் – PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட் — நிபுணர்களும் நமக்குச் சொல்லுகிறார்கள்
இந்துக்கள் இதற்கும் மேல் ஒருபடி சென்று தர்மமே நம்மைத் தண்டிக்கும் என்பர். பக்கா ஹிந்துவான வள்ளுவனும் — மறந்தும் பிறன்கேடு சூழற்க , சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு — குறள் 204 — என்கிறான். இது தர் மோ ரக்ஷதி ரக்ஷிதஹ — என்பதன் மறு வடிவம்.
கடைசி விஷயம், எல்லா பண்பாடுகளிலும் உளது. ஐரோப்பாவில் 19 வயது பிரான்ஸ் நாட்டு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் உள்பட 90 லட்சம் பெண்களை சூன்யக்காரி என்று சொல்லி கிறிஸ்தவர்கள் , உயிருடன் எரித்துக் கொன்றதை GRIFFITH கிரிப்பித், வேத மொழி பெயர்ப்பில் சுட்டிக்காட்டுகிறார். உலகம் முழுதும் இப்படி நடந்துள்ளது.
இந்துக்கள் அப்படி யாரையும் கொல்லவில்லை ; ஆனால் சூனியம் வைத்தலை நம்புகிறோம். இதில் சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள்; மக்களுக்கு அவற்றைச் சொன்னால் புரியாது; ஆகையால் பேய், பிசாசு என்று சொல்லி வேப்பிலை போன்ற உண்மையிலேயே மருத்துவ குணம் உள்ள செடிகொடிகளை பயன்படுத்தினர். இரண்டாவது விஷயம் மன நோயைக் குணப்படுத்த நோயாளிக்கும், நோயாளியின் குடும்பத்துக்கும் நம்பிக்கை ஊட்ட சில விஷயங்களைக் ‘கற்பித்து’ விரட்ட வேண்டும்.
வெளிநாடுகளில் மன நோய் உடையவர்களைக் குணப்படுத்துவது ஒரு பெரிய பிசினஸ் (Money Making Industry) . ஐந்தில் ஒருவருக்கு மன நோய் தாக்கியதாக புள்ளி விவரம் கூறுகிறது. நல்ல தூக்கம் தூங்கும் வயதுள்ள ஆட்கள் வெளிநாட்டில் இல்லை; சிறுவர்கள் மட்டுமே நல்ல தூக்கம் தூங்குகிறார்கள். மன உளைச்சவர்கள், சண்டை போடுவோர் முதலியோர் கவுன்சலிங் COUNSELLING என்ற பெயரில் ஆயிரக்கணக்கான டாலர்களை டாக்டர்களுக்கு கொடுக்கின்றனர். இந்துக்கள் மாய மந்திரம் என்று சொல்லி 5, 6 மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள். அவர்களும் பெரும்பாலும் குணம் அடைந்து விடுகிறார்கள்.
ஆயினும் பில்லி சூனியம் வெகு அபூர்வமாக நடை பெறுவதுண்டு . இதை கோடிக்கணக்கான இந்துக்கள் நம்புவதை கந்த சஷ்டிக் கவசம் முதலிய மந்திரங்கள் காட்டுகின்றன.; இது பற்றிய அச்சமும் மக்களிடையே இருக்கக்கூடாது என்பதற்காகவே தேவராய சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்றே நாம் கருத வேண்டும் .
“தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
ALL PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN DURING HIS VISIT TO NERUR IN 2019
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,472 Date uploaded in London – – 22 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2 ச.நாகராஜன்
தஞ்சாவூரில் இரு முஸ்லீம் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் பெருமையை அறிந்து அவர் முகமது நபியால் அனுப்பப்பட்டவர் என்று கருதினர். அவரைச் சந்தித்து அவரது அருளாசியையும் அவர்கள் பெற்றனர். தங்களது மத வழக்கப்படி அல்லாவை எப்படித் தொழுவார்களோ அதே போலவே சதாசிவ ப்ரஹ்மேந்திராளையும் அவர்கள் தொழுவார்கள். அவருடனேயே அவர்கள் இருந்து காலத்தைக் கழித்தனர். அவரது அருளைப் பெற்றதால் பெரிய மகான்களாக அவர்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான் என அனைவரும் அழைப்பர். அவர்கள் இறந்தபின் அவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் சமாதி எழுப்பப்பட்டது.. அது இரட்டை மஸ்தான் சமாதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரே சமயத்தில் அவர் மூன்று இடங்களில் தோன்றிய சம்பவ்ம் ஒன்று உண்டு. திருச்செந்தூரில் பாம்பு கடித்து இறந்த மணப்பெண்ணை அவர் உயிர்ப்பித்தார்; அதே சமயம் தஞ்சாவூர் அருகே கொதித்துக் கொண்டிருந்த வெல்லப்பாகைத் தண்ணீர் அருந்துவது போல கையால் மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் சிதம்பரத்தில் தரபாடித் திருவிழாவில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்.
1712-1718இல் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அமைச்சரான மல்லாரி பண்டிட் அவரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்கவில்லை என்றும் அவரது அருளாசி வேண்டும் என்றும் வேண்ட அவர் ஆசி வழங்கி ஆத்ம வித்யாவிலாஸம் என்ற நூலையும் அவருக்கு அளித்தார்.
மௌனமாகவே தன் நாட்களைக் கழித்து வந்த போது ஒரு நாள் திருவிசைநல்லூர் ஐயாவாள் உங்கள் குரு பேசத்தானே கூடாது என்றிருக்கிறார், இறைவனைத் துதிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே என்றார். அந்தக் கணத்திலிருந்து இறைவன் மீது அற்புதமான பல கிருதிகளை சதாசிவர் இயற்றிப் பாடலானார். பிரபலமான அவரது பாடல்கள் ஏராளமான சங்கீத கச்சேரிகளில் இன்றும் இடம் பெற்று வருகின்றன. அவரது பாடல்கள் பரமஹம்ஸ அல்லது ஹம்ஸ என்ற முத்திரையைக் கொண்டிருக்கும். பஜரே யதுநாதம், பஜரே கோபாலம், ஸ்மர வாரம் சேதஹ போன்ற பாடல்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். சாமா ராகத்தில் அமைந்த மானஸ சஞ்சரரே மிகவும் பிரபலமான ஒரு பாடல்.
this picture is taken from public domain
ஏராளமான அபூர்வ நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். யோகசூத்திர விருத்தி, பிரும்ம சூத்திர விருத்தி, சித்தாந்த கல்பவல்லி, சிவமானஸ பூஜை, ஆகிய நூல்களைக் குறிப்பாகச் சொல்லலாம். குரு ரத்தினமாலிகை என்ற அவரது நூல் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆசார்யர்களின் திவ்ய சரிதங்களையும் பாரத தேசத்தில் அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்களைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றிய செய்திகளையும் தருகிறது. நவ மணி மாலா என்ற நூல் அவரது குருவான பரமசிவேந்திர சரஸ்வதியைப் போற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். ஆத்ம வித்யா விலாஸம் என்ற நூல் 62 செய்யுள்களைக் கொண்டுள்ள ஒரு சம்ஸ்கிருத நூல்.
திருவிசைநல்லூரில் வாழ்ந்து வந்த சதாசிவர் அங்கிருந்து நெரூருக்குச் சென்றார். நெரூர் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தவம் செய்யவும் தனித்து வாழவும் உகந்த இடமாக அது அமைந்திருந்தது. அது மட்டுமின்றி அங்குள்ள ஆறு தெற்கு நோக்கிப் பாய்வதால் அது காசிக்குச் சமமாகக் கருதப்பட்டது.
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் 1755ஆம் ஆண்டு மக நக்ஷத்திரத்தன்று வைசாக சுக்ல தசமியில் சமாதி நிலை எய்தினார். தான் சமாதி அடைவதற்கு முன்னர் அங்கு சமாதியில் ஒரு வில்வ மரம் தழைக்கும் என்று அவர் கூறினார். காசியிலிருந்து ஒரு அந்தணர் லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார். அன்றே நமக்கு நிர்யாணம் ஏற்படும். அகண்ட காவிரியின் தென்கரையில் நெரூரில் சமாதி வைத்து வில்வ மரத்தையும் அங்கு வளரச் செய்யுங்கள் என்றார். அதே போலவே நடந்தது. அதே போல சமாதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த பாணலிங்கத்தை புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமான் ஸ்தாபித்தார். அங்கு ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது. அவர் மூன்று இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் கூறுவர்.
தமிழ் நாட்டில் உள்ள நெரூர், மதுரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய மூன்று இடங்களில் அவர் சமாதி அடைந்தார்.
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மானாமதுரை சிவன் கோவிலின் பின்புறம் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் சமாதி உள்ளது. அதிஷ்டானத்தின் மீதுள்ள கல் சிற்பத்தில் காயத்ரி, காமதேனு, திரிசூலம் ஆகிய மூன்றும் செதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர நர்மதா நதிக்கரையில் உள்ள ஓங்காரம் என்ற இடத்தில் அவர் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காசியிலும் அவர் சமாதி அடைந்ததாகவும் அங்கும் பூஜைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
தான் வாழ்ந்த காலத்தில் அவர் பல இடங்களிலும் விக்ரஹங்கள் மற்றும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அவர் ஸ்ரீ சக்ரம் ஒன்றை ஸ்தாபித்தார்.
இவர் அருளிய கீர்த்தனைகள் மற்றும் நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பிரும்ம லக்ஷணங்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட்டதால் அவர் சதாசிவ பிரம்மம் என்ற பெயரை அடைந்து போற்றப்படுகிறார். அவருடைய பாதுகைகள் மோஹனூர் அசல தீபேஸ்வரர் சிவாலயத்தில் உள்ளது. இது நெரூரிலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிகப் பெரும் மகானான இவரைப் பற்றி ஆதார பூர்வமான வரலாற்றுக் குறிப்புகளுடனான சரித்திரம் முழுமையாக வெளிவரவில்லை என்பது ஒரு குறையே!
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளை போற்றுவோமாக! அவர் அருளைப் பெறுவோமாக!!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.
இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி
முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.
“அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால் பார்க்கிறான்;அவன் தூரம் பார்க்கிறான்;அவன் பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.
வெளிநாட்டார் விளக்கம்
இந்தப் பாடலுக்கு ரால்ப் டி எச் கிரிப்பித் RALPH T H GRIFFITH சில விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.
முதல் மந்திரத்தில் வரும் “அவன்” என்பது ‘சதாபுஷ்பம்’ என்னும் மூலிகை என்று பழைய வியாக்கியனக்காரர்களில் ஒருவரான தாரிலர் (DAARILA) சொல்கிறார்; ஆனால் அது என்ன மூலிகை என்று எவருக்கும் தெரியாது. ஆயிரக் கணக்கான இடங்களில் குறிப்பிடப்படும் சோம ரஸ மூலிகையே என்ன என்று எவருக்கும் தெரியாத பொழுது ‘சதா புஷ்பம்’ பற்றித் தெரியாததில் வியப்பில்லை!
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற (Milton’s Paradise Lost) சொர்க்க இழப்பு கவிதையை எழுதியவர் மில்டன் என்ற புலவர் ஆவார். இங்கிலாந்தில் ஐ பிரைட் EYE BRIGHT / கண் ஒளி என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை வேறொன்றுடன் கலந்து மைக்கேல் (Arhangel Michael) என்ற தேவதை ஆதாமின் கண்களில் விட்டதாகவும் இதனால் ADAM ஆதாம் எதிர்காலத்தைப் பார்க்கும் வல்லமை பெற்றதாகவும் விளக்கம் சொல்கிறார்கள்.
வள்ளுவர் பல இடங்களில் சொல்லும் ‘அனிச்சம்’ என்னும் மலரையோ, மயிர் நீப்பின் வாழாக் கவரி மானையோ இதுவரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் !
ஆனால் இது உண்மையா ? கப்சாவா என்றால் உண்மை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்துக்களிடம் பவிஷ்ய புராணம் உளது. அதில் எதிர் காலம் பற்றி உளது. கலியுகத்தில் என்ன என்ன நடக்கும் என்பதை பல புராணங்களும் மஹாபாரதமும் பேசுகின்றன. அது பற்றி இங்கு முன்னரே எழுதியுள்ளேன்.
மேலும் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா , அர்ஜுனனுக்கு எதிர்காலத்தைக் காட்டுவதையும் பார்க்கிறோம். அர்ஜுனன் , தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு முன்னரே ‘காலம் TIME என்னும் சக்தி அவர்களைக் கப்ளிகரம் செய்து Blackhole பிளாக் ஹோல் என்னும் கருந் துளைக்குள் இழுப்பதைக் கண்ணன் காட்டுகிறான். அது மட்டுமல்ல. சுந்தர மூர்த்தி சுவாமிகள், சம்பந்தர் போன்றோர் காலத்திற்குள் பின்னோக்கிச் (Time Machine) சென்று மாண்ட இருவரை மீட்டு வந்த கதையும் பெரிய புராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது அவர்கள் இருவரும் திரும்பி வந்த காலத்தில் என்ன வயது ஆகி இருக்குமோ அந்த வயதில் திரும்பி வந்ததையும் சேக்கிழார் பெருமான் செப்புகிறார்.
இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது; நாம் அறியாத இன்னொரு பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கிறது. அங்கு எல்லாம் முன்னரே நடந்த கதையாக பதிவாகிறது. வெகு அபூர்வமாக ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் தலையிட்டு காலச் சக்கரத்தைத் திருப்பி விடுகிறார்கள். ஆனால் எல்லார் விஷயத்திலும் இதைச் செய்வதில்லை!
மந்திர மூலிகை விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல் ‘அவன்’ , ‘அது’ என்று பேசவும் காரணம் உளது. ஒரு கெட்டவன் போதும்!உலகையே அழிப்பதற்கு ! அவர்கள் கைகளில் இத்தகைய மூலிகை கிடைத்தால் ஆபத்து. மாயா ஜால சக்தி பெறும் பல சாது சந்யாசிகள் அவர்களுக்குக் கிடைத்த அபூர்வ சக்திகளை துஷ் பிரயோகம் செய்து சிறையில் அவதிப்படும் செய்திகளையும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம் இதனால்தான் அவர்கள் வெளிப்படையாக சில ரகசியங்களை சொல்லுவதில்லை.
இதே துதியில் மேலும் சில அபூர்வ விஷயங்கள் வருகின்றன.
மூன்று பூமிகள், மூன்று வானங்களைப் பார்க்கும் சக்தி பற்றி Mantra No.2 மந்திரம் இரண்டு பேசுகிறது
இதற்கெல்லாம் கிரிப்பித் Griffith போன்றோரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.
கருடன் பற்றி வரும் மந்திரத்தை சூரியன் என்று சொல்கின்றனர். கருடன் போல சூரியனும் பார்க்க முடியும் என்று விளக்குகின்றனர். அது தவறாக இருக்கலாம். ஏனெனில் இன்னொரு மந்திரத்தில் கருடனுக்கு மூலிகையைக் கண்டு பிடிக்கும் அபூர்வ சக்தி உண்டு என்று சொல்லுகின்னர் . ரிக் வேதத்தில் 20, 30 இடங்களில் கருடன் அல்லது பருந் து அபூர்வ (Soma) மூலிகையைக் கொண்டுவந்து தருவதாக முனிவர்கள் பாடிவைத்துள்ளனர்.
நாலாவது மந்திரத்தில் 1000 கண்ணுள்ள இறைவனே என் வலது கையில் அந்த மூலிகையை வைத்தால் நான் ஆரியர் , சூத்திரர் அனைவரையும் காணமுடியும் என்கிறார் ரிஷி. 1000 கண் கடவுள் என்பது பிற்காலத்தில் இந்திரனை மட்டும் குறித்தாலும் அதற்கு முன், எல்லா வேத கால கடவுளருக்கும் அந்த அடை மொழி வருகிறது. வலதின் சிறப்பை தமிழர்கள் நன்கு அறிவர். வலது புறம் விழும் இரையை மட்டுமே புலி சாப்பிடும் என்று சங்க இலக்கிய புலவர்கள் பாடுகின்றனர். “மண மகளே! மண மகளே!! உன் வலது காலை எடுத்து வைத்து (வீட்டுக்குள்) வா” என்று பாடுகிறோம்.; ஆரியர் முதல் சூத்திரர் வரை என்பது மனிதர்கள் எல்லோரையும் என்ற பொருளில் கையாளப்படுகிறது. சம் பந்தர் “வாழ்க அந்தணர் , வானவர் ஆனினம்” என்றால் பார்ப்பனர், பசு மட்டும் வாழ்கவே என்று பொருள் அல்ல; அவர்கள் முதலாகவுள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாரும் வாழ்க என்றே பொருள்.
கடைசி 4 மந்திரங்களில் பேய் பிசாசுகளை விரட்டும் சக்தியும் இந்த மூலிகைக்கு உண்டு என்று ரிஷி பாடுகிறார் . இடையே இரண்டு உவமைகளும் வருகின்றன . “களைப்படைந்த மண மகள் படுக்கையை நாடுவது போல”, என்றும் “நான்கு கண் நாய்” பற்றியும் பாடுகிறார். நான்கு கண் நாய் என்பது யமன் கொண்டுவரும் இரண்டு நாய்களின்(2+2=4) கண்கள் என்று ரிக் வேதம் பாடுகிறது.
ஆக மொத்தத்தில் நிறைய விஷயங்களை இக்கவிதை காட்டுகிறது.
இதை கற்பனை, கப்ஸா என்று யாராவது கருதினால் விஞ்ஞான புனைக் கதைகள் எழுதுவதில் வேத கால முனிவர்களே முன்னோடிகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று வெளிநாடுகளில் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன.
–சுபம் —
tags- வருங்காலம், எதிர்காலம், மூலிகை, அதர்வண வேதம் , காட்டும் , மில்டன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Hindu’s fourth Veda Known as Atharvana Veda (AV) has very interesting information about magical and miraculous herbs. One hymn talk about making you invisible; another verse makes you to see the future. How good would it be to see future of yourself, your family members, the government, and your own country? Commenting on this hymn Ralph T H Griffith mentioned that even Milton’s Paradise Lost has some information like this.
Let us look at the hymn in AV, Book 4; Hymn 20 (Sukta 122)
The hymn is a charm addressed to a magical plant, for the acquisition of superhuman powers of sight.
First let me give you the interesting bits, before giving you the full verse:
Mantra 1 in the hymn:
“It” : the magical plant; O Goddess, the divine plant is directly addressed and also spoke of in the third person. The plant is said by Daarila (one of the ancient commentators) to be the Sadam Pushpaa (Semperflorens, Ever blooming), not yet identified. Its virtues resemble those attributed in England to Euphrasy or Eyebright. The plant with which together with Rue, and three drops from the Well of Life, the Archangel Michael ‘purged the visual nerve of Adam’ (Paradise Lost XI. 414), and enabled him to look into the distant future.
MY COMMENTS
This is nothing new to Hindus. We have a whole book called Bhavishya Purana (Bhavisya= Future) giving what is going to happen in future. There is a very clear description of Kaliyuga in Puranas and Vana Parva of Mahabharata (Please see my earlier articles on the same subject).
In Bhagavad Gita, Krishna shows to Arjuna, what will happen in future. Even before Arjuna killed his foes, they were all devoured by TIME. Probably Hindus believed in a Parallel Universe, where everything is acted already and recorded. I wrote about Time Travel by two Tamil Saints Tiru Gnana Sambandar and Sundarar , both of them went back in Time and brought back the dead alive. Thousand years ago they recorded it in verse and said two dead people were grown up according to their age when they came alive. That shows the dead people were living somewhere in some state or level.
And we have one more incident of Live TV broadcasting by Sanjaya in Mahabharata. The Blind King Dhritarashtra wanted to know what happened to his sons in the battlefield of Kuru kshetra. Sanjaya got divine vision to see it LIVE and he told everything in a running commentary.
The Western world knows only one Nostradamus, but Hindus have thousands of Nostradamus. They did not want to interfere in the Cyclical Time, but watched them as if children watch Video games. Very rarely they interfered in the course of TIME and did some miracles. This blog has lot of miracles done by saints regarding FUTURE. Nowadays westerners use this theme in science fiction stories.
What is this herb?
Unfortunately, the hymn did not name the herb. Why? Our seers deliberately hid some information from the public. They knew that even one bad guy can abuse it and destroy humanity. We read about Rasputin like characters throughout history. Even several Hindu saints were jailed for abusing their super human powers. Hindu scriptures say that while you practise certain Yogic things, Goddess will send you temptations in the form of magical powers. Several saints misuse them and never go up in the spiritual ladder and land themselves in prisons.
Even Swami Vivekananda , while replying to a question about PAST, he said everything is recorded in a film roll and placed inside you. If I wanted to see I can unroll it and see, but I am least interested in it. Imagine yourself in his condition and dared to look at your future. What would happen to you mentally if you come to know that you were a worm in the dirtiest place on earth in your past life! So, better not look at past or future but concentrate more on PRESENT is the advice of Hindu saints.
Xxx
Mantra 2
In the second Mantra of the hymn, the seer wants to see ‘Three Several Heavens’, ‘Three Several Earths’ and these ‘Six regions’ one by one.
The footnote given by Griffith is not satisfactory. Vedic seers use NUMBERS indiscriminately. No. 3 and No.7 occur in thousands of places. Not all mean the same. Even in Harappan civilisation No. 3 and No.7 are seen more in seals showing that it is a Vedic Civilization.
Here Griffith says three heavens are Earth, Sky and Heavens. Again they are divided into three. No.6 mean four directions and Up and Down making it Six.
My Comments
We see the underlying meaning clearly. The seer believes that he can see up to heaven with the help of the herb; he was very clever in saying ‘IT’ without naming the herb.
Suppose we consider it a fiction, then we must at least give the credit of writing the first science fiction story to the seer.
Xxx
Mantra 3
It is more interesting from another angle; Here comes two similes, one regarding tired bride longing to go to bed in the palanquin (portable bed). ‘Vahyam’ is the Sanskrit word used here. Vah= to carry. Until this day we use Vahanam for vehicles and temple Mounts of Gods/Vahanam. English word ‘VEH’ilcle is derived from this VAH, so do Tamil Vaahanam (in temples)
Another simile is Eagle , which is Garutman in Sanskrit. Here the interpreters say it is Sun. Veda called Sun as eagle, ship, one wheeled chariot, Eye, speckled cow (with Sunspots), swan etc. Highest number of epithets to Sun is found in the Vedas than any literature in the world.
My Comments
Throughout Vedas we come across Suparna, Syena, Garutman etc which foreigners translate as falcon, eagle, vulture, kite without rhyme or reason. Sun is called Eagle because it looks from top with clear vision.
But I would go further; eagles are praised for bringing miraculous Soma herb from the top of the Himalayan range. We may look at it as a magical bird who can identify miraculous herbs. The Vedic Seers/Rishis might have trained them to identify the magic herbs and bring them. In another verse in Atharva Veda a seer sings about the amazing abilities of birds and animals in identifying the magical herbs (Read my article posted recently)
Xxx
Mantra 4
God with 1000 eyes; this phrase is repeated several times throughout the Four Vedas. It is applicable to most of the Vedic Gods. The most famous Purushasukta hymn of Rig Veda 10-90 described the Cosmic Person (English word Person is derived from Purusha in Sanskrit) with 1000 eyes (Sahasraaksha); later Puranas attributed it mostly to Indra. One interpretation is Indra is Sky and 1000 eyes are Stars.
The same mantra give two more interesting points:
Arya and Shudra: Let 1000 eyed god place “IT” on my Right Hand and I will see each Shudra and each Arya; Four castes are mentioned in only one place in the oldest book Rig Veda (10-90). Here Arya and Shudra were only mentioned; not all the four castes. We may take it as all human beings.
The other interesting point is Let 1000 eyed God place it on my RIGHT HAND.
This right hand is praised sky high only in Hinduism. All rituals regarding negative things such as death are left handed. Hindus circle the dead body in anti clockwise direction. All good things are done with right hand, right foot, right shoulder etc. Tamils sing “O New Bride! Step with Your right foot into this New House (husband’s house)” . 2000 year old Sangam literature say that tigers would consume its prey only when it falls on its RIGHT side!
Brahmins in their thrice a day ritual called ‘Sandhyavandana’ start with their right side in doing everything. Brahmins use left side for giving oblations to departed souls. The Pradakshina (circumambulation) means going in the right direction (Dakshina = South, Right. Facing East you begin your rituals and then turn right to do a round)
So much information is there in that one word. Throughout the Vedas, we see the significance of Right Side.
Xxx
Mantra 5, 6, 7, 8
These four mantras deal with demons, ghosts etc. all negative forces. Kimidins, Yatudhanas, Pisachas and Kasyapas.
My Comments
We don’t have a proper interpretation for Kasyapas. It is the name of a Seer /Rishi. But here it is explained as “semi divine genii connected with or regulating the course of sun”. it is not making any sense. We know the 60,000 thumb sized Valakhilyas travelling in front of Sun (read my article on Valakhilyas and Gulliver Travels Lilliputians)
Another thing mentioned here is the HOUND WITH FOUR EYES. It is already in RV 10-14-11. Yama god of death comes with Two Dogs and their eyes (2+2) make Four. Sarama and Sarameya are taken by the Greeks and changed to Hermes (H=S in Greek). Please read my old article on Hermes= Sarama.
So, we understand the magical herb would help anyone not only to look into future but also to drive away the evil spirits.
Xxx
Last Mantra (9)
This mantra speaks about the fiends flying in the mid air. Here, Griffith adds, as witches in Europe are popularly believed to do.
This is very superficial; Hindus have a long list of Ghosts with different capacities and various habitats. Westerners couldn’t even explain the Chost ‘KIMIDIN’
Griffith’s explanation:
Kimiidin- One of a class of malignant spirits. According to Nirukta of Yaska,the word originally means one who goes about crying ‘Kim Idaaniim? Quid nunc? What now?’ or ‘Kim Idam? What is this?’ Literally a quid nunc; a vile an treacherous spy and informer.
Ref.RV VII-104, RV X-87
Xxx
Here is the Full Hymn -AV; Book 4; Hymn 20
Hymns of the Atharva Veda, by Ralph T.H. Griffith, [1895], at sacred-texts.com
HYMN XX
A charm for the acquisition of superhuman powers of sight
1.It sees in front, it sees behind, it sees afar away, it sees The sky, the firmament, and earth: all this, O Goddess, it beholds.
2.Through thee, O godlike Plant, may I behold all creatures that exist, Three several heavens, three several earths, and these six regions one by one.
3.The pupil, verily, art thou of that celestial Engle’s eye. On earth hast thou alighted as a weary woman seeks her couch.
4.The God who hath a thousand eyes give me this Plant in my right hand! I look on every one therewith, each Sūdra and each Āryan man.
5.Make manifest the forms of things; hide not their essences from sight. And, thou who hast a thousand eyes, look the Kimidins in the face.
6.Make me see Yātudhānas, make thou Yātudhānis visible. Make me see all Pisāchas With this prayer, O Plant, I hold thee fast.
7.Thou art the sight of Kasyapa and of the hound who hath four eyes. Make the Pisācha manifest as Sūrya when he rides at noon.
8.Kimidin, Yātudhāna from their hiding-places have I dragged. I look on every one with this, Sūdra and Aryan man alike.
9.Make that Pisācha visible, the fiend who flies in middle air, The fiend who glides across the sky, and him who deems the earth his help.
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,469 Date uploaded in London – – 21 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 20-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை. எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 1 ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
காவிரிக் கரை கண்ட மகான்களில் மிகப் பெரும் சித்திகளைப் பெற்று பகவன் நாமத்தை உச்சரித்து அனைவருக்கும் வழி காட்டிய மகான் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திர ஸ்வாமிகள் ஆவார். இவர் திருவிசைநல்லூர் ஐயாவாளின் சமகாலத்தவர்.
இளமையிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேறிய இவர், பெரும் வித்வான்களுடன் வாதத்தில் இறங்கி ஜெயிப்பது வழக்கம். காஞ்சி காமகோடி பீடத்தில் 57வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி அவர்களை குருவாக வரித்தார் இவர்.
இளமைக்காலத்தில் சிவராமகிருஷ்ணன் என்ற பெயரைக் கொண்டிருந்த இவர் தனது உடன் பயிலும் தோழனாகத் திருவிசைநல்லூர் ஐயாவாளைக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் இவரது வாதத்தைப் பொறுக்கமாட்டாத வித்வான்கள் இவரது குருவிடம் இவரைப் பற்றி புகார் செய்யவே, அவர் இவரை அழைத்து, “அனைவரது வாயையும் அடைத்து மூடி விடுகிறாயே, நீ எப்போது உன் வாயை மூடப் போகிறாய்?” என்று கேட்டார்.
அந்த க்ஷணத்திலிருந்தே அவர் மௌனத்தை மேற்கொண்டார். இவருக்குத் இளமையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் வீட்டிலிருந்து வெளியேறி எல்லா இடங்களிலும் சுற்ற ஆரம்பித்தார். நாளடைவில் ஆடைகளையும் களைந்து திரிய ஆரம்பித்தார். பின்னர் பெரும் சித்திகளை அடைந்தார். இவரது அருள் விளையாடல்கள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் பல உண்டு.
சிலவற்றைப் பார்ப்போம்.
காவேரிக் கரையில் அமைந்துள்ள மஹாதானபுரத்தில் ஒரு நாள் இவரைச் சுற்றி இருந்த சிறுவர்கள், பல மைல்கள் தள்ளி இருந்த மதுரையில் நடக்கும் ஒரு திருவிழாவைக் காண வேண்டுமென்று விரும்பினார்கள். அவர்களது விருப்பத்தைத் தெரிந்து கொண்ட சதாசிவர் அவர்களிடம் கண்களை மூடுங்கள் என்றார். சிறுவர்களும் கண்களை மூடினர். சில விநாடிகள் கழித்துக் கண்களைத் திறந்த போது அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தனர்.
ஒரு நாள் தானியக் குவியல் அருகே இவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அந்த நிலத்தின் சொந்தக்காரனான விவசாயி இவரைத் திருடன் என்று நினைத்து இவரை அடிக்கத் தன் கம்பை ஓங்கினான். ஆனால் அசையக் கூட முடியாமல் அப்படியே சிலையாக நின்றான். காலை வரை இந்த நிலை நீடித்தது. தனது தியானத்தை முடித்த சதாசிவர் அந்த விவசாயியைப் பார்த்து சிரித்தார். அவன் உடனே தன் சுயநிலைக்கு வந்தான். இவரைப் பெரிய மகான் என்று உணர்ந்த அவன் இவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
தியானத்தில் தன்னை மறந்த நிலையில் இருப்பது இவர் வழக்கம். ஒரு முறை காவேரியில் அப்படி ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். வாரங்கள் சில கழிந்தன. கிராமத்தார் மண் குவியலைத் தோண்டிய போது இவர் அதிலிருந்து வெளிப்பட்டார். தன் நிலை உணர்ந்து நடக்கலானார்.
புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்தவர் மஹாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் (1730-1768). அவர் சதாசிவ பிரும்மத்தின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரை தனது அரண்மனைக்கு அழைத்து வருவதற்காக அவரிடம் சென்றார். மௌனத்தில் இருந்த சதாசிவர் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை. திருவரங்குளத்தில் முகாமிட்ட மன்னர் சதாசிவரை வணங்கி வந்தார். சதாசிவ ப்ரஹ்மேந்திரர் அவரை அழைத்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை மண்ணில் எழுதித் தந்தார். இது நடந்த வருடம் 1738ஆம் ஆண்டு. அது மட்டுமின்றி பிக்ஷாண்டார் கோவிலைச் சேர்ந்த கோபால கிருஷ்ண சாஸ்திரி என்பவரை மந்திரியாக நியமித்துக் கொள்ளுமாறும் கூறினார். சதாசிவர் மந்திரம் எழுதிய மண்ணை தன் அங்கவஸ்திரத்தில் ஏந்திய மன்னர் அந்த மந்திர மண்ணைத் தன் பூஜையறையில் வைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சிவஞானபுரம் என்னும் ஊராகும். இன்று வரை இது புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி கோவிலில் தொழப்பட்டு வருகிறது.
1732ஆம் ஆண்டு அவர் புதுக்கோட்டையைச் சுற்றி இருந்த காடுகளில் திரிந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் அவரைக் கண்டு அவரிடம் விறகுகளைச் சுமந்து வருமாறு கட்டளை இட்டனர். அவரும் சந்தோஷமாக விறகைச் சுமந்து சென்றார். அதை சமையலறையில் கொண்டு வைத்தவுடன் அவை எரிந்து விட்டன. இதைப் பார்த்துத் திகைத்துப் போன வீரர்கள் அவர் யார் என்பதை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.
ஊமையாக இருந்த ஒருவன் அவர் பால் அதீத பக்தி கொண்டான். ஒருநாள் அவன் தலைமேல் கைவைத்து சதாசிவர் ஆசீர்வதித்தார். அவ்வளவு தான், உடனே அவன் பேசத் தொடங்கினான். அவர் தான் பின்னால் மிகவும் பிரசித்தி பெற்ற அக்ஷபுராண ராமலிங்க சாஸ்திரி ஆவார். இந்த சம்பவம் ஸ்ரீ சதாசிவேந்த்ர ஸ்தவத்தில் 22 மற்றும் 26வது செய்யுள்களில் கூறப்பட்டிருக்கிறது.
திருகோகர்ணம் சிவன்கோவிலில் ப்ரஹதாம்பாள் சந்நிதிக்கு அருகே அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது வழக்கம். அவர் தியானம் செய்த இடத்தை இன்றும் அனைவரும் தரிசிக்கின்றனர்.
ஒரு சமயம் கோவில் கர்பக்ருஹத்திற்கு வெளியில் நின்று கொண்டு சிவ நாமாவளி அர்ச்சனையைச் சொல்லிக் கொண்டிருக்க ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு புஷ்பம் மூல ஸ்தானத்தில் உதிர்ந்ததாம்.
நிர்வாணமாக அவர் தன்னை மறந்து அலைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் நவாபின் அந்தப்புரத்தில் செல்லலானார். இதனால் அதிர்ச்சியுற்ற நவாப் அவரைப் பிடிக்குமாறு கட்டளை இட்டான். வீரர்கள் அவரது இரு கைகளையும் வெட்டினர். ஆனால் எதுவுமே நிகழாதது போல அவர் சென்று கொண்டிருந்தார். இதனால் பிரமித்துப் போன முஸ்லீம் நவாப் வெட்டுப்பட்ட கைகளை எடுத்துக் கொண்டு அவர் முன்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். அந்தக் கைகள் முன் போல இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டன. பேசாமல் தன் வழியில் சென்றார் சதாசிவர்.