Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
1968ம் ஆண்டு சென்னை நகர உலகத் தமிழ்
மாநாட்டுக் கண்காட்சிக்கு வெளியிடப்பட்ட கையேடு
அரிய தகவல்களை பட்டியலாக வெளியிட்டுள்ளது. இது பாதுகாத்துவைக்கப்படவேண்டிய
குறிப்பு.
இவைகளைப் பற்றி ஏற்கனவே கட்டுரைகளில்
குறிப்பிட்டுள்ளதால் இங்கே விளக்கம் தரவில்லை.
96 பிரபந்தம், 32 அறம், 64 கலை, 11 ஆடல், 10 ஆயுதம் பட்டியல், அட்டநாகம், அட்ட போகம், அட்டபந்தனம் (அஷ்ட பந்தனம்), 16 வகைப் படைகள், பத்து விரல்கள், பல வகை மணிகள் ஆகியவை இதில் உள்ளன
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Hindus are the first race to give divine status to stars. They gave the little boy Dhruva’s name to Pole star. They named the Ursa Major (Great Bear) constellation after Seven Great Hindu seers. And they named the double star system in it after Vaishtha and Arundhati. Every newly married Hindu couple must see the Vaishtha- Arundhati star system before they enter the First Night room. 27 stars in the zodiac have stories from Hindu mythology.
But the
wonder is that they named some stars in the Southern Sky also after some Hindu
seers and Kings. The Southern Cross is named after the King Tri Sanku. And the Canopus
is named after the great seer Agastya. Agastya will beat 100 Columbuses and
1000 Captain Cooks. He did incredible jobs of laying road route via the mighty
Vindhya mountains and crossed the Indian ocean to establish Hindu rule in South
East Asia. These incredible feats were made mythological stories ‘Agastya
drinking ocean’ and ‘Agastya belittling Vidhya mountains’. tamilandvedas.com,
swamiindology.blogspot.com
But my
latest research is about how and why they did name Southern Cross and Canopus
after Trisanku and Agastya respectively. Sapta Rishi and Pole star cant be seen
by people living in Southern most part of Australia. And in the same way Indians
living in Northern most part of India cant see Trisanku and Canopus. Then how come
the Bhagavatha Purana and other Puranas talk about Trisanku and the star
system. Hindu scriptures praise Viswamitra creating new heaven (star system).This
shows the seers can go above the earth and see the star system. Sanskrit and Tamil
literature talk about seers using the sky route (Gagana Marga).
Some may say that the people in the south might have added Trisanku and Agastya star stories in Hindu mythology, because the star system cant be seen by the northern most people. Even that shows that India was one country from North to South. This will explode the myth of British uniting India. More over 2000 year old Sangam Tamil literature is also talking about one county – From the Himalayas to Kanyakumari.
So Trisanku-
Agastya Stories illustrate two points:
1.Puranic
writers know southern hemisphere and the stars visible there. They gave divine
status to Southern stars also.
2.Even
before British arrived in India, the country was considered one.
Latest
Interpretation-
One article
in the book ‘Facets of Vedic Culture’ give new interpretation to Tri Sanku and
Agastya stories. The interpretation is based on the Big Hindu Numerals Sanku
and Jaladhi.
Who was
Trisanku?
Tri sanku
was a great king of solar dynasty. When he was nagging his teacher/Guru
Vasishtha to send him to heaven with his human body he refused. When the king
abused the Guru, he was cursed by him. Then the cursed king approached another
seer Visvamitra. He sent Tri Sanku to heaven with his power. But the Devas in
the heaven rejected him and pushed him down to earth. Visvamitra stopped him
half way through the sky. This is called Southern Cross by westerners because
it looks like hanging cross. It is found in the flags of Australia, New Zealand,
Samoa, Brazil and Papua New Guinea. Hindus are using Tri Sanku Swarga as a
phrase for any half- finished or unfinished task. tamilandvedas.com,
swamiindology.blogspot.com
Date: 1 SEPTEMBER 2019 British Summer Time uploaded in London – 17-30
Post No. 6963
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
18 வகை கூலம், 4 வகை
யாழ் என்ன என்ற பட்டியலை 1968ம் ஆண்டு சென்னை உலகத் தமிழ் மாநாட்டு கையேடு வெளியிட்டுள்ளது-
Food is God, says VedasWork is God18 Types of Grains, 4 Types of Lyre (yaaz in Tamil)Tamil Lyre/ YaazFrom London Underground StationYaaz in Gupta CoinYaaz/ Lyre- oldest in Gupta sculpture–SUBHAM-
Pictures are taken from various sources; this is a non- commercial,
educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a
non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
12,000.
Date: 31 AUGUST 2019 British Summer Time uploaded in London – 21-00
Post No. 6960
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. –(7)–அசோகரின் மகள்
5. – 5–அப்பரின் தமக்கை
8. – 6–பாகிஸ்தானைப்
பிளவுபடுத்தி இந்தியா உருவாக்கிய தேசம்.
9. – சேறும் நீரும்
சேர்ந்தால் வருவது
10. –;
ஒரு வாரப்பத்திரிகையின் பெயர்.
கீழே
1. –(8)) —சோழர்கள் சூரியகுலம்; பாண்டியர் யார்?
2. —6–கர்நாடக மன்னர்; இவர்களை மேலை, கீழை என்று பிரிப்பர் வரலாறு அறிந்தோர்
3. – 5–கதையிலுலும், சினிமாவிலும் எதிர்பார்ப்பது
4. – 4–ரேவதியின் தந்தை
6. – 6– அஸ்ஸாமில் வங்கதேசத்தினர் இந்தவகை
7. –4– புகழ் —- என்று வாழ்த்துவர்
11.5– மூன்றுதெருக்கள் கூடும் இடம்// கீழிருந்து மேலே செல்க.
12. –3– ஆணும் பெண்ணும் சந்தித்தால் ஏற்படுவது// கீழிருந்து மேலே செல்க.
Date: 31 AUGUST 2019 British Summer Time uploaded in London – 18-22
Post No. 6959
Pictures are taken from various sources; this is a
non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
12,000.
சென்னையில் 1968-ம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டின் போது ஒரு கையேடு (Guide for the Exhibition) வெளியிடப்பட்டது. அதில் தமிழர்களின் அளவை முறைகள் அனைத்தும் ஆதார பூர்வமாக தரப்பட்டுள்ளது. இன்று சில அளவை முறைகளைக் காண்போம்.
Pictures are taken from
various sources; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000.
தமிழ்நாட்டில் சங்க காலம் முதல்
தற்காலம் வரை நடந்த போர்களை 1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டு கையேடு
பட்டியலிட்டுள்ளது.இதோ விவரங்கள்:–
மாலைமலர் நாளேட்டில் ஆகஸ்ட் 2019 மூன்றாம் வாரம் வெளியாகியுள்ள
கட்டுரை. வெவ்வேறு ஊர்களின் பதிப்புகளில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகியுள்ளது இந்தக்
கட்டுரை.
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி
பொங்க உலகின் தலை சிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்!
ச.நாகராஜன்
வீட்டில் ஒரே சண்டை, சச்சரவு, மனக்கவலை, நிம்மதியே இல்லை, செலவு
அதிகம் எனக் குறைப்பட்டுக் கொள்வோர் ஏராளம்.
இந்த நிலைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை அவர்கள் யாரும் சரியாக உணர்வதே இல்லை. காரணத்தைக்
கேட்டால் நூற்றுக்கணக்கான காரணங்களைச் சொல்வார்கள். ஆனால் உண்மைக் காரணம் என்ன என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் உலகின் தலையாய சிறந்த பெண்மணிகள்
மூவர்.
இவர்கள் கூறும் அன்புரைகளைச் சற்றுக் கேட்டு முயன்று பார்த்தால்
உங்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்குமே!
இவர்களின் கூற்றைக்
கேட்டு சந்தோஷம் அடைந்து வருவதாக ஆயிரக்கணக்கானோர் உலகெங்குமுள்ள பிரபல பத்திரிகைகள்
மற்றும் டி.வி.நிகழ்ச்சிகள் வாயிலாகக் கூறி வருவதும் ஊடகங்களில் தங்களின் நன்றியைப்
பதிவு செய்து வருவதுமே இவர்களின் வழிமுறைகள் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று
என்பதை நிரூபிக்கிறது.
இவர்கள் யார், என்ன
சொல்கிறார்கள் என்று சற்று பார்ப்போமே!
இரகசியத்தைக் கூறும் ரோண்டா பைர்ன்!
‘தி சீக்ரட்’ (The Secret) – இரகசியம் – இந்தத்
தலைப்பில் எழுதிய புத்தக வாயிலாகவும் திரைப்படம் வாயிலாகவும் உலகெங்கும் புகழ் பெற்றவர்
ஆஸ்திரேலியப் பெண்மணியான ரோண்டா பைர்ன். (Rhonda Byrne)
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 26ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் பிறந்த இவருக்கு இப்போது இவருக்கு
வயது 74. இவரின் இப்போதைய சொத்து மதிப்பு 10 கோடி டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு
சுமார் ரூ 70) ஆரம்பத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் சீக்ரட்
என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றார். 50 மொழிகளில் இந்தப் புத்தகம்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு பிரபல டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை
மாற்ற வல்ல 100 பேருள் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்தது. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம்
‘தி சீக்ரட்’ படமாகவும் வந்து உலகத்தினரைக் கவர்ந்தது. படமும் புத்தகமும்
வெளி வந்தவுடனேயே ஈட்டிய தொகை சுமார் 2100 கோடி ரூபாய்!
சரி, சீக்ரட் (இரகசியம்) என்ன சொல்கிறது?
ஆழ்ந்து படித்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய
சீக்ரட் வழிகளில் முக்கியமான சில மட்டும் இங்கு தரப்படுகிறது.
எண்ண
சக்தி : உங்கள் எண்ணங்களுக்கு பிரம்மாண்டமான சக்தி உண்டு. நீங்கள் எதை
நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள். ஆகவே எதையும் ஆக்கபூர்வ
சிந்தனையுடன் பாஸிடிவாக நினையுங்கள்.
ஒரே ஒரு மகத்தான சக்தி மூலமாக மட்டுமே நாம் அனைவரும்
உலகத்தில் இயங்குகிறோம்.
இந்த இயக்கத்தில் கவர்ச்சி விதி (The Law of Attraction) என்பது தான் இரகசியம்!
உங்கள்
மனதிலிருந்து எது வெளியே செல்கிறதோ அதைத் தான் நீங்கள் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
நாம் ஒரு காந்தம் போல, அவ்வளவு தான்!
பொதுவாக மக்கள்
எதை வேண்டாம் என்று நினைக்கிறார்களோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள், ஆகவே
அதுவே அவர்களை வந்து அடைகிறது. (சண்டை சச்சரவு என்று நினைத்துக் கொண்டிருந்தால்
அது தான் வரும்; வளரும்)
எண்ணங்களைக் கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.
சந்தோஷமான
தருணங்களை நினைத்துக் கொண்டிருந்தால், இன்னும் சந்தோஷமான தருணங்கள் உங்களை வந்து
அடையும்.
கோபம், பொறாமை, இயலாமை, வருத்தம், மனச்சோர்வு போன்ற
எதிர்மறை உணர்ச்சிகளை உடனே போக்க வல்லவை எவை தெரியுமா?
ஆக்கபூர்வமான
சிந்தனை, சந்தோஷமான உங்கள் வாழ்க்கைத் தருணங்கள், உங்களுக்கு மிக மிகப் பிடித்த
பாடல் – இவை போன்றவை தான்!
இப்படி இவற்றை
நினைக்க ஆரம்பித்தால், இதைத் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக
மாறும்; நல்லவை நாடி வரும். ஏனெனில் நீங்கள் தான் அதைக் காந்தம் போலக் கவர்ந்து
வரச் செய்கிறீர்கள்!
நன்றியை
மறக்காதீர்கள்.அனைவருடனும் பகிருங்கள்.
பிரபஞ்சம் வேகமாகப்
போகும் ஒன்று. நல்லவை வரும் போது இறுகப் பற்றிச் செயல் படுங்கள். வாய்ப்பை நழுவ
விடாதீர்கள். மாறுங்கள். சந்தோஷத்தையும் முன்னேற்றதையும் கவர்ந்து இழுங்கள்.
மகிழ்ச்சிக்கான மாரி காண்டோவின் வழிமுறை!
அடுத்து ஆயிரக்கணக்கான இல்லங்களில் இன்று மகிழ்ச்சி பொங்கக்
காரணமாக இருப்பவர் ஒரு ஜப்பானியப் பெண்மணி. அவர் பெயர் மாரி காண்டோ (Marie Kondo) . ஏராளமான தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் இவரைப் பற்றி, ‘எனது வாழ்க்கையை மாற்றியவர்’ என்று புகழ்ந்து பேசுவோர்
ஏராளம்.
1984, அக்டோபர்
9ஆம் தேதி பிறந்த இவருக்கு இப்போது வயது 35. இவரது சொத்து மதிப்பு 56 கோடி ரூபாய்கள்!
இவர் எழுதியுள்ள புத்தகத்தின் பெயர் – ‘தி லைஃப் சேஞ்சிங் மாஜிக் ஆஃப் டைடியிங் அப்’ (‘The life
Changing Magic of Tidying Up’).
லட்சக்கணக்கில் விற்பனையாகி வரும் இந்தப் புத்தகம் மகிழ்ச்சி
அடைவதற்கான எளிய வழிமுறைகளைச் சொல்கிறது.
அவற்றில் சில:.
வீட்டில் தேவையற்று இருக்கும் பொருள்களைத் தூக்கிப் போடுங்கள்
என்பது தான் இவர் கூறும் அன்புரை.
வீட்டைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக்
கொண்டு, வேண்டாத துணிகள், புத்தகங்கள்,இதர தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை அகற்றுங்கள்;
அகற்றுவதற்கு முன்னர் அவை இது வரை உங்களுக்குத் தந்த நன்மைக்காக
மனதார நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி
உணர்வைத் தராத, தூண்டாத எதையும் இல்லத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். இதைச் செய்யும்
போது தனியாக இருந்து, துணிகள், புத்தகங்கள், இதர பொருள்கள் என்ற வரிசைப்படி செய்ய வேண்டும்.
அடுத்தவர்கள் இருந்தால்
அதைப் போடாதே, இதை எறியாதே என்ற குறுக்கீடுகள் இருக்கும். ஒவ்வொரு இடமும் தூய்மையாகும்
போது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி மலர்கிறதா என்பதைக் கேட்டுப் பாருங்கள்; உணர்ந்து
பாருங்கள். பதில் ஆம் என்றால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நுழைந்து விட்டது என்று
பொருள்!
நீங்களே உங்களது மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் க்ரெட்சன் ரூபின்!
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை சுலபமாக நீங்களே
உருவாக்கலாம் என்று சொல்லும் இன்னொரு பெண்மணி அமெரிக்காவைச் சேர்ந்த க்ரெட்சன் ரூபின்
(Gretchen Rubin). இவர் எழுதிய பத்துக்கும்
மேற்பட்ட புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம்
பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இவரது The Four tendencies, Better than Before என்ற இரு புத்தகங்கள் மகிழ்ச்சிக்கான வழியைச் சொல்லும் புத்தகங்கள்.
க்ரெட்சென்
அமெரிக்காவில் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
14ஆம் தேதி பிறந்தார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கைப்
போக்கையும் கூர்ந்து ஆராய்ந்த க்ரெட்சன் மனிதர்களின் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும்
அவர்களே காரணம் என்பதைக் கண்டு பிடித்தார். ஒருவரின் பழக்க வழக்கத்தை மாற்றினால்
அவர் வாழ்க்கை அடியோடு மாறி மகிழ்ச்சிக்கு வித்தாக அமையும் என்பதை ஆணித்தரமாகச்
சொல்லும் க்ரெட்சன் மனிதர்களை 1) திட்டமிட்டு உயர்பவர் (Upholder) 2) கேள்வி
கேட்பவர் (Questioner) 3) சொன்னால்
கேட்பவர் (Obliger) 4) புரட்சியாளர்
(Rebel) என இப்படி நால் வகையாகப்
பிரிக்கிறார்.
நீங்கள் முதலில் எந்த டைப் (வகை) என்பதை இனம்
காண வேண்டும். திட்டமிட்டு உயர்பவர்களுக்கு அடுத்தவர்களின் உந்துதல் தேவை.
கேள்வி கேட்டு விடை கண்ட பின்னரே
செயல்படுவோருக்கு தன்னைத் தானே மேற்பார்வையிடல் (Monitoring) தேவை. அடுத்தவரும் கூட
இவரைச் சரி பார்த்துக் கொண்டே இருக்கலாம். முன்னேற்றமும், மகிழ்ச்சியும்
நிச்சயம்!
சொன்னால் கேட்பவர் எதிலிருந்தும் எப்படி
தப்பிக்கலாம் எனப் பார்க்கும் சுபாவம் உடையவர். அதைக் கண்காணித்து அப்படித்
தப்பித்தலைத் தவிர்த்து விட்டால் இவருக்கும் இவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி
பொங்க ஆரம்பிக்கும்.
தன்னை மதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கும்
புரட்சியாளருக்கோ காரண காரியத்துடன் எதையும் அலசி ஆராய்ந்து விளக்கினால் போதும்,
தங்களின் வேண்டாத பழக்கங்களை விட்டு விட்டு மகிழ்ச்சி முகத்தில் தவழ மாற
ஆரம்பிப்பர்!
நல்ல பழக்கவழக்கங்களை இனம் கண்டு அவற்றை
வளர்க்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கிறோமா என்பதை தினமும்
மேற்பார்வை பார்த்து, வரும் வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்தி, இதில்
கவனத்தைச் சிதற வைப்பவை எவை என்பதை இனம் கண்டு அவற்றை ஒதுக்கி, ஏற்படும்
முன்னேற்றங்களை அன்றாடம் ஒரு டயரியில் குறித்து பதிவு செய்து மகிழ்ச்சி பொங்க
நீங்கள் வலம் வந்தால் உலகமே உங்களுடன் மகிழ்ச்சியுடன் குலுங்கும்.
உலகின் சிந்தனைப் போக்கை மாற்றி மகிழ்ச்சியான
வாழ்க்கையை நிர்ணயிக்க வல்ல இந்த மூன்று பெண்மணிகளது ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த
பொருள் கொண்டது என்பதால் அதை ஆழ்ந்து யோசித்து மனதில் ஏற்றி செயல்முறைப்படுத்த
வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
முயல்வோம்;
வெற்றி நிச்சயம்! மகிழ்ச்சிக்கான அஸ்திவாரம் இட விழையும் அனைவருக்கும்
(மாலைமலரின்) வாழ்த்துக்கள்!