பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்- 1 (Post No.8830)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8830

Date uploaded in London – – 20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM  நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.

FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நமக்கு  முன் வந்துள்ள கேள்வி – பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல், தேவாரம், சங்க இலக்கியம் போல நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா?

இதற்கான பதில், ஆம், பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் அற்புதமாக நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நல்ல பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழும் போதே ஆரிய என்ற சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவோரும் உள்ளனர் என்பது மறைமுகமாகத் தெரிகிறது.

ஆம், உண்மை தான். இதற்கான மூலத்தை மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1823ஆம் ஆண்டு பிறந்த மாக்ஸ்முல்லருக்கு மிகுந்த வறிய நிலை இருந்தது. அவரது 22ஆம் வயதில் அவரது தாயாருக்கு 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அவர் எழுதினார் – ஒரு கப் சாக்லட்டிற்கு இரண்டு ஃப்ராங்க் கொடுக்க வேண்டியிருக்கிறது, இனி ஒரு போதும் இதைச் சாப்பிடக்கூடாது என்று நினைத்தேன். இரண்டு ஃபிராங்கிற்கு வக்கில்லாத நிலை.

அந்தக் கால கட்டத்தில் இந்தியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்த மெக்காலேயை இரண்டாம் முறையாக 1855இல் அவர் சந்தித்தார்.  இந்தியரை மதமாற்றும் மெக்காலேயின்எண்ணத்தை அவர் புரிந்து கொண்டார். பிழைக்கும் வழியும் அவருக்குப் புரிந்து விட்டது. அந்த எண்ணத்திற்கு இணங்க சரியானபடி தாளம் போட்டார். வேதம் ஒரு குப்பை என்பது நிரூபணமாகி விடும் என்று தன் தாயாருக்கு எழுதினார். மற்றவருக்கு கிடைக்காத பெரிய தொகையான ஒரு தாளுக்கு 4 பவுண்ட் என்று அவருக்கு நிர்ணயிக்கப்பட்டது. அங்கு தான் வந்தது வினை.

ஆரியர் என்பது ஒரு தனி இனம், அது இந்தியாவில் புகுந்தது என்ற விஷ வித்தை அவர் ஊன்றினார். பின்னால் 1859இல் மெக்காலே இறந்தவுடன் அவர் பயம் போனது. வேதத்தைப் புகழ ஆரம்பித்தார். இந்தியாவின் அட்மைரர் ஆக மாற ஆரம்பித்தார். ஆனால் அவர் செய்ய வேண்டிய டாமேஜ் அனைத்தையும் செய்து விட்டார். அவர் வைத்த வித்து நச்சு மரமாக மாறி ஆரியன் என்பதற்கு ஏராளமான அர்த்தங்கள் தரப்பட்டன; அதையொட்டி இந்தியாவைப் பிளப்பதற்கான சதி ஆரிய வாதத்தால் அரங்கேற்றப்பட்டது. 1896இல் விவேகானந்தர் அவரை அவர் இல்லத்தில் சந்தித்த போது அவருக்கு வயது 73. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர் வாழ்ந்தார். அப்போது அவர் இந்தியாவை வெகுவாகப் புகழ்ந்தார்.

ஆரியம், திராவிடம் என்ற தவறான கொள்கைகள் பிறந்தது இதன் அடிப்படையில் தான்.

 மெக்காலேயின் இந்தியப் பண்பாட்டை ஒழித்துக் கட்டும் இந்தத் திட்டம் முழுதுமாக அவன் எண்ணப்படி நிறைவேறவில்லை என்றாலும் அந்த விஷமரத்தின் கனிகளைச் சாப்பிட்டவர்கள் அந்த ஆரிய வாதத்தால் ஆதாயம் தேட முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

இந்தப் பின்னணியில் ஆரிய என்பதற்கான அர்த்தத்தை நம் இலக்கியங்களில் பார்ப்போம்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு எட்டுத் தொகை மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களிலும் தொல்காப்பியத்திலும் ஆரிய என்ற சொல் இல்லை.

சிலப்பதிகாரத்தில் ஆரிய என்ற சொல்லை 15 இடங்களில் காண முடிகிறது. ஆரியமன்னர்ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்குவஞ்சி 25/162

அடும்தேர்தானைஆரியஅரசர்வஞ்சி 26/211

ஆரியஅரசர்அமர்க்களத்துஅறியவஞ்சி 26/217

ஆரியமன்னர்அழகுறஅமைத்தவஞ்சி 27/22

இப்படி வருகின்ற இடங்களில் ஆரிய மன்னர் என்று குறிப்பிடப்படுவது வட நாட்டில் ஆண்டுவந்த மன்னரைக் குறிக்கும் சொல்லாக வருகிறது.

மணிமேகலையில் ஒரே ஒரு இடத்திலும் சீவக சிந்தாமணியில் ஒரே ஒரு இடத்திலும் வரும் ஆரிய என்ற சொல்லும் நல்ல பொருளிலேயே வருகிறது.

அடுத்து கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இதில் 240566 சொற்கள் உள்ளன. இவற்றில் 8 இடங்களில் ஆரிய என்ற சொல் வருகிறது.  

ஆடுஇயல்பாணிக்குஒக்கும்ஆரியஅமிழ்தபாடல்கிட்:10 32/3 தேர்முன்நடந்தேஆரியநூலும்தெரிவுற்றீர்கிட்:17 14/4

ஆரியற்கு என்ற சொல் 3 இடங்களில் வருகிறது.

அளவு_இல்சேனைஅவிதரஆரியற்குஇளையவீரன்சுடுசரம்ஏவினான்.

ஆரியற்கு இளைய வீரன் இலக்குவன்.

அடுத்து ஆரியன் என்ற சொல் 35 இடங்களில் வருகிறது. ஆரியன் என்பது இராமனையே குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக ஒரு நான்கு இடங்களைப் பார்ப்போம்:

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1

ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1

ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – ஆரண்:13 56/3

அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்  –

அடுத்து சம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள .பதிகங்கள் 385 பாடல்களின் எண்ணிக்கை 4169 மொத்த அடிகள் 16501.

சொற்கள் மொத்தம்  108252

இவற்றில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியத்தொடு என்ற வார்த்தை வருகிறது!

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர் 


கந்துசேனனும் கனகசேனனும் முதலாகிய பெயர்கொளா 


மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா 


அந்தகர்க்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே.

இங்கு ஆரியம் என்பது வடமொழியைக் குறிக்கிறது. 

அப்பர் தேவாரத்தில் (4,5,6 திருமுறையில்) 312 பதிகங்கள் உள்ளன. 3066 பாடல்கள் உள்ளன. 12256 அடிகள் உள்ளன. 83730 சொற்கள் உள்ளன.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆரியம் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியன் என்ற சொல்லும் ஒரு இடத்தில் ஆரியனை என்ற சொல்லும் வருகிறது.

ஆரியம் தமிழோடு இசை ஆனவன் – தேவா-அப்:1246/1

இங்கு ஆரியம் வடமொழியைக் குறிக்கிறது.

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய் – தேவா-அப்:2321/3

செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட – தேவா-அப்:2552/3

இங்கு ஆரியன் சிவனைக் குறிக்கிறது.

சுந்தரர் தேவாரத்தில் ஒரு சொல் கூட ஆரிய என்று இல்லை.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 3438 அடிகள் உள்ளன. 21798 சொற்கள் உள்ளன.

அவற்றில் இரண்டே இரண்டு சொற்கள் சிவபிரானைக் குறிக்கும் படியாக ஆரியன், ஆரியனே என்று வருவதைக் காண்கிறோம்.

அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும் – திருவா:2/22

பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே.

ஓரளவு இப்படி சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் பார்த்து விட்டோம்.

இந்தப் பின்னணியில் பாரதியாருக்கு வருவோம்.

                          ***         அடுத்த கட்டுரையுடன் முடியும்

tags- பாரதியார் பாடல், ஆரிய , சொல்

என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!-2 (Post No.4969)

 

Written by London Swaminathan 

 

Date: 2 May 2018

 

Time uploaded in London – 9-59 am (British Summer Time)

 

Post No. 4969

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

என் கேள்விக்கு என்ன பதில்? சொல், சொல், மனமே!-2 (Post No.4969)

கீழ் கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

 

1.தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி

 

 

xxx

2.மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்

xxx

3.என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே.

xxx

4.எங்கள் பகைவ எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

 

xxxx

5.நச்சு மாமரமாயினுங் கொலார்

நானும் அங்ஙனே யுடைய நாதனே

xxxxx

 

6.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்து இருபல்முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

xxx

7.அஞ்சல்! அஞ்சல்! என்று தினம் அண்டையிலே தான் இருக்க

நஞ்சுதனை ஏன் அருந்தினார்?

xxxx

 

8.பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்

தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே………

தேவர் பாடையின் இக்கதை செய்தவர் மூவர்

xxxx

 

9.அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

xxxx

10.மாநீர்வேலி வச்சிர நல்நாட்டுக்

கோனிறை கொடுத்த கொற்றப்பந்தரும்

மகநல்நாட்டு வாள்வாய் வேந்தன்

பகைப்புறத்து கொடுத்த பட்டிமண்டபமும்

அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த

நீவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும்

 

xxxx

 

11.அறமிருக்க மறம்விலைக்குக் கொண்டவாறே

பனிநீராற் பாவைசெயப் பாவித்தேனே

கரும்பிருக்க இரும்புகடித்து எய்த்தவாறே

xxx

 

12.ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்!

ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ!

xxx

13.அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

xxxx

 

ANSWERS

1.தற்கால அவ்வையார்

2.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை

3.பட்டினத்தார் பாடல்

4.பாரதிதாசன் பாடல்கள்

5.மாணிக்கவாசகர், திருவாசகம்

6.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்

7.காளமேகம்,  தனிப்பாடல்கள்

8.கம்பன், கம்ப ராமாயணம்

9.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்

10.இளங்கோ, சிலப்பதிகாரம்

11.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

12.பாரதி, பாரதியார் பாடல்கள்

13.திருமூலர் எழுதிய திருமந்திரம்

 

-SUBHAM–

 

 

ஒரு குட்டிக் கதை: மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை! (Post No.4353)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 6-43 am

 

 

Post No. 4353

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேதங்களின் துதிப்பாடல்களை அடுத்துத் தோன்றியவை பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்கள். கிரேக்கர்கள் புத்தகம் எழுதுவதற்கு முன்னரே தோன்றியவை இவை. எல்லாக் கதைகளும் உரையாடல்களும், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கும். மொழி, சொல் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு நாகரீக முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

யார் பெரியவர்? யார் சிறந்தவர் என்று மனதுக்கும் வாக்கிற்கும் (வாக்= சொல்) வாக்குவாதம் ஏற்பாட்டது. நானே சிறந்தவன் என்று இரண்டும் கூறின.

மனம் சொன்னது: ஏ, சொல்லே, நான் நினைப்பதைத்தானே நீ பேசுகிறாய். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பின்னர் தானே நீ அதைச் சொல்ல முடியும்; ஆகையால் நானே உன்னை விடச் சிறந்தவன்; உயர்ந்தவன் — என்றது.

 

வாக்கு சொல்லியது: நீ என்னதான் நினைத்தாலும் நான் சொன்னால்தானே மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகையால் தகவல் தரும் நானே உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றது.

 

 

இரண்டும் தொடர்ந்து வாதாடின; பின்னர் வா, நாம் பிரஜாபதியிடம் (பிரம்மா) முடிவு கேட்போம் என்று புறப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பிரஜாபதி செப்பினார்: “மனதே பெரியவன்; நீ அது நினைப்பதைச் சொன்னாலும், அதைப்போல, அதைப் பின்பற்றி நடக்கிறாய் அல்லவா? ஆகையால்நீ இரண்டாம் தரம்தான்-

BRAHMA—Picture sent by Lalgudi Veda

இப்படிப் பிரஜாபதி சொன்னவுடன் வாக்கிற்குக் கோபம் வந்தது. “அப்படியா சேதி! நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? உன்னையும் நான் நிராகரிப்பேன். எங்கு எங்கெல்லாம் யாக யக்ஞங்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உன் பெயர் வரும்போது அவர்கள் உச்சரிக்காமல் போகட்டும் -உன் பெயர் என் சொல்லால் பிரகாசிக்கக்கூடாது” என்றது.

 

ஆகையால்தான் வேத மந்திர உச்சாடனத்தில் பிரஜாபதி பெயர் வருகையில் மெல்லிய- சன்னமான குரலில் மந்திரம் சொல்லுகின்றனர்.

 

இந்தக் கதையை ஆழ்ந்து யோசித்தால் நிறைய தத்துவங்கள் விளங்கும்.

 

ஒருவர் சொல்லும் சொல், தேன் போல இருக்கலாம். ஆனால் மனதில் விஷம் வைத்திருக்கலாம். ஆகவே மனதளவில் சுத்தம் வேண்டும்; ஆகையால் மனதே உயர்ந்தது.

 

ஒருவர் பலர் அறிய அழகாக மந்திரங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் மனது காமம், க்ரோதம், பேராசையால் மூடப்பட்டிருக்கலாம். அவர் சொல்லும் மந்திரத்தை வைத்து அவரை எடைபோட முடியாது. ஆகையால் மனமே பெரியது.

 

இப்படி யோசிக்க யோசிக்க நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

 

ஜபம் செய்யும்போதுகூட வாயால் மந்திரத்தைச் சொல்லுவதைவிட மனதால் சொல்லுவது பல மடங்கு பலன் தரும் என்பர் பெரியோர்.

 

ஆக மனமே பெரியது என்பதை நாமும் ஒப்புக்கொண்டு உதட்டளவில் பேசாமல் மனத்தளவில் பேசுவோமாக!

இந்தக் கதை சதபத பிராமணத்தில் உள்ளது.

TAGS:–சதபத, பிராமணம், சொல், வாக்கு, மனம், சண்டை

 

-Subham, Subham–

அர்ஜுனன் சபதமும், ராமன் சபதமும் (Post No.2766)

arjuna, bali, indonesia

PICTURE: ARJUNA IN INDONESIA

Translated by london swaminathan

Date: 29 April, 2016

Post No. 2766

Time uploaded in London :–  8-33

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அர்ஜுனன் உறுதி மொழி (பிரதிக்ஞா)

ந தைன்யம் – என்றும் பரிதாபத்துக்குரிய நிலையை அடையமட்டேன்

ந பலாயனம் – என்றும் புறமுதுகு காட்ட மாட்டேன் (போரில்).

 

“அர்ஜுனஸ்ய பிரதிக்ஞே த்வே ந தைன்யம் ந பலாயனம்”

Xxx

tiruvallur rama

ஒரே சொல், ஒரே அம்பு

தத் ப்ரூஹி வசனம் தேவி ராக்ஞா யதபிகாங்க்ஷிதம்

கரிஷ்யே ப்ரதிக்ஞாதே ச ராமோ த்வினார்பிபாஷதே

வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 18-30

 

தேவி! நீ சொல். அரசனால் விரும்பப்பட்டராமன், இரண்டாவது முறை அம்பு தொடுப்பதுமில்லை; இரண்டாவது தடவை உறுதிமொழி செய்வதுமில்லை.

 

ராமனுக்கு சொல் ஒன்றே; அதிலிருந்து மாற மாட்டான். அதே போல அவன் ஒரு வில் விட்டால் போதும்; எதிரிகள் வீழ்வர். அதற்குப்பின், மற்றொரு அம்பைத் தொடுக்கும் தேவையே இராது.

 

த்வி: சரம் நாபிசந்தத்தே ராமோ த்விநார்பிபாஷதே— மஹாநாடகம்

இரண்டாவது அம்பு தொடுப்பது இல்லை; இரண்டாவது சொல் பேசுவதுமில்லை.

 

கைகேயி, சீதை, பரதன், அனுமன், சுக்ரீவன்,குகன், விபீஷணன் ஆகிய எல்லோருக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினான்.

இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் (மனதாலும் மற்ற பெண்களை நினைக்க மாட்டேன் என்று சீதைக்கு வாக்குக் கொடுத்தான்). அதனால் தான் ராமர் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான் என்பர் பெரியோர். மண், பெண், பொன் ஆசையைத் துறந்தவன் அவன். இலங்கையின் பொன்மயமான கோட்டைகளை லெட்சுமணன் புகழ்ந்த போது “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” (ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசி)

இந்த உறுதி மொழிகளால்தான் வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு ராமன் என்று உலகம் புகழ்கிறது.

xxx

 

RAMA ARCH

முந்தைய கட்டுரை

ராமனுக்கு ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் !!!

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 by ச.நாகராஜன்; Post No 1635; Dated 9th February 2015

 

–Subham—

 

 

பேனா முனையும், கத்தி முனையும்! சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள் (Post No. 2490)

pen_versus_sword

Written by london swaminathan

Date: 30 January 2016

Post No. 2490

Time uploaded in London :–  4-36 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

 

euripides

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது! வில் முனையைவிட சொல் முனை வலியது என்பதை உலகம் அறியும். சோழ மன்னனை துச்சமாக மதித்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். போஜ ராஜனை கெஞ்சும்படி வைத்தான் உலக மஹா கவிஞன் காளிதாசன். கிரேக்க நாட்டிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளனின் சக்தி மிகப்பெரியதாக விளங்கியது. இதைக் காட்டும் இரண்டு சுவைமிகு சம்பவங்களைக் காண்போம்.

 

கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ரோமானியர்கள், ஏதென்ஸ் நகர அதீனீயர்களைச் சிறைப்பிடித்து சைரக்யூஸ் என்னுமிடத்தில் காவலில் வைத்தனர். போர்க் கைதிகளுக்குப் பொழுது போகவில்லை. கிரேக்க நாட்டின் கவிஞன், நாடகாசிரியன் யூரிபெடீசின் கவிதைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள். நாம் அந்தாதி விளையாட்டு விளையாடுவது போல, அவர்கள் உற்சாகம் காட்டினர். இதை காவற்காரர்களும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.

 

சாதாரணமாக கைதிகளை மிருகங்கள் போல நடத்தி, கண்ட வேலைகளைச் செய்யச் சொல்லுவது அங்கே வழக்கம். ஆனால் நாடகத்தில் வரும் கவிதையின் மஹா சக்தி, அந்தக் காவற்காரர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தச் செய்தி மேலதிகாரிகளுக்கும் போனது. அவர்களும் கைதிகளைத் தொடர்ந்து கவிதை வாசிக்கும்படி சொன்னார்கள். அந்தக் கைதிகளை, கவுரவ விருந்தாளிகளாக நடத்தி, பின்னர் விடுதலையும் செய்தார்கள்.

 

 

அதீனிய கைதிகள், ஏதன்ஸ் நகரத்துக்குத் திரும்பியவுடன் நேராக யூரிபிடீசின் வீட்டுக்குப்போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். வாள் முனையில் தோற்றாலும், பேனா முனையில் வெற்றி கிடைத்தது குறித்து யூரிபிடீசுக்கு ஏக சந்தோஷம். முன்னாள் கைதிகள் அவரை வணங்கி, ஐயன்மீர்! நீங்கள்தான் எங்களை விடுதலை செய்தீர்கள், உயிர் கொடுத்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

Xxx

 

sophocles

சோபோக்ளிசுக்கு விடுதலை!

கிரேக்க நாட்டின் புகழ்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சோபோக்ளீஸ். அவர் சோகச் சுவை நாடகங்கள் எழுதுவதில் மன்னன். சதா சர்வ காலமும், அல்லும் பகலும் அனவரதமும் பேனாவும் கையுமாகத் திரிந்ததால், நிலபுலன்களையும், வீடு வாசலையும் அவர் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலைப் பட்டனர்.

 

அவர்கள் என்ன சொன்னாலும் இவரோ “நமக்குத் தொழில் கவிதை- நாட்டிற்குழைத்தல்” என்ற கொள்கையுடன் எழுதினார்- எழுதினார்- எழுதிக் கொண்டேயிருந்தார். பிள்ளைகளுக்குப் பொறுக்கவில்லை. அப்பா மீது வழக்குத் தொடுத்தனர்.

 

வழக்கு, நீதி மன்றத்துக்குச் சென்றது. மகன்கள் சொன்னார்கள்: “எங்கள் அப்பனுக்கு படிச்சுப் படிச்சு மூளை குழம்பி போச்சு; வீட்டு வாசல் நினைவும் தப்பிப் போச்சு. ஆகையால் இந்தக் கிழவனை கையலாகாத பயல் என்று அறிவித்து, அந்த சொத்து சுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் தர உத்தரவிட வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

 

சோபோக்ளீஸ் நகைத்தார்; அப்பொழுதுதான் அவர் ஒரு அருமையான நாடகத்தை எழுதி முடித்திருந்தார். கையில் அந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. எடுத்தார் சுவடிகளை; தொடுத்தார் சொல் அம்புகளை. ஐயன்மீர்! வயது காரணமாக மூளை குழம்பியிருந்தால் நான் இப்படி எழுத முடியுமா? என்று வினவினார். அவருடைய எழுத்தின் மஹா சக்தியைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும், “கூரிய புத்தியுடையவர் இவர்” என்று அறிவித்து விடுதலை செய்தனர். மகன்கள் தொடுத்த வழக்கு மண்ணைக் கவ்வியது!

சொல் அம்பு வலியது; வில் அம்பு மெலியது;

சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.

pen and sword

தன்னுடன் கிரேக்க நாட்டுக்கு வராவிடில், தலையைச் சீவிவிடுவேன் என்று இந்து சந்யாசியை மிரட்டினான் மாமன்னன் அலெக்ஸாண்டர். அந்த சந்யாசியோ இடிபோலச் சிரித்து, இந்த ஆன்மாவை வாள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது; இது தோன்றியதுமில்லை; அழிவதுமில்லை. என்றுமுளது! –என்று இடிமுழக்கம் செய்யவே அலெக்ஸாண்டர் அசந்தே போனான்! அவனது வீர வாளை உறைக்குள் சொருகிவிட்டு அவரை வணங்கிச் சென்றான் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க, ரோமானிய எழுத்தாளைர்கள் எழுதிவைத்துள்ளனர் (முழு விவரம் வேண்டுவோர் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்சாண்டர்” என்ற என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க)

 

–சுபம்–

 

 

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

om tamil

Compiled  by S NAGARAJAN

Post No.2256

Date: 19 October 2015

Time uploaded in London: 8-07 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

ரகசியத் தெளிவு

சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!

 

.நாகராஜன்

 OM red filter

சொல்லில் இருக்குது அனைத்துமே

 

இரகசியங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியான அறிவுரைகளையே சொல்கின்றன. யூதம், ஹிந்து என்றெல்லாம் இதில் வேறுபாடு கிடையாது. ஏனெனில் அடிப்படை உண்மைகள் சாஸ்வதமானவை!

தேவி பாகவதத்தில் அம்பிகையின் முன்னர் ஆகப் பெரும் மஹரிஷிகள் வாயைப் பொத்தி மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று!

 

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனை புரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் காணுங்கள் என்கிறது!

லிக்விடிம் எக்வாரிம் (தேர்ந்தெடுக்கப்பட்ட ஞான முத்துக்கள்) தொகுப்பில் முக்கியமான ரகசியம் சொல்லப்படுகிறது இப்படி:-

 

EACH MORNING A NEW CREATION

Take special care to guard your tongue                                            

 Before the morning prayer.

Even greeting your fellowman, we are told.                                    

Can be harmful at that hour.
A person who wakes up in the morning is                                     

Like a new creation

Begin your day with unkind words,                                                  

Or even trivial matters –

Even though you may later turn to prayer,                                      

You have not been true to your Creation

All of your words each day                                                         

Are related to one another

All of them are rooted                                                           

 In the first words that you speak                     

                                                LIQQUTIM YEQARIM

MAHALAKSHMI LAMPS

உனது நாவைக் காப்பதில் விசேஷ கவனம் எடு                               

காலை பிரார்த்தனைக்கு முன்னர்

உங்கள் சக மனிதருக்கு வணக்கம் செலுத்துவது கூட,                            

அந்த நேரத்தில் தீமை பயக்கக்கூடும் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது

காலையில் கண் விழிக்கும் ஒரு மனிதன்                                           

ஒரு புதிய படைப்பு போல

 

அன்பில்லாத வார்த்தைகளுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்,                      

அல்லது அல்ப விஷயங்களுடன் துவங்குங்கள்

பின்னால் நீங்கள் பிரார்த்தனை புரியத் தொடங்கினாலும் கூட,                          

உங்கள் படைப்புக்கு நீங்கள் உண்மையானவராக இல்லை

ஒவ்வொரு நாளும் உங்களின் எல்லாச் சொற்களும்                               

ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டிருக்கின்றன

 

அந்த அனைத்துமே நீங்கள் பேசும் முதல் வார்த்தைகளை                          

வேராகக் கொண்டிருக்கின்றன

                                                             லிக்விடிம் எக்வாரிம்

 

 

பிரம்மாண்டமான ஒரு ரகசியம் மிக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஹிந்து தத்துவத்தில் காலை எழுந்தவுடன்

 

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கர மத்யே சரஸ்வதி                                            

கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்ஸனம்

 

என்று நல்ல சொற்கள் மூலம் திருமகள், கலைமகள், கோவிந்தன் ஆகியோரை நமஸ்கரித்து நாளை நல்ல நாளாக்கி நமது நாளாக்குகிறோம்.

ஒரு நாளைக்கு 100 ஆசீர் வசனம் ஓதுங்கள்

 

கடவுள் நம்மிடம் எதை விரும்புகிறார் என்பதை யூத மதத்து ராபி மெய்ர் (Rabbi Meir) அருமையாக விளக்கிக் கூறுகிறார். மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இறையாளர் இவர்.

 

தால்முட்இல் வரும் செய்யுளுக்கு இவர் அற்புத விளக்கம் ஒன்றைத் தருகிறார். அது Mah என்ற வார்த்தையைக் கூறுகிறது. இதன் பொருள் என்னஎன்பதாகும். ஆனால் மெய்ரோ அந்த உச்சரிப்பை அதே போன்று உள்ள Meah என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இதன் பொருள் 100 என்பதாகும். அதாவது கடவுள் நம்மை தினமும் 100 Blessings (100 ஆசீர் வசனங்கள்ஓத வேண்டும் என்று விரும்புகிறார் என்றார்.

 

தினமும் நூறு நல்ல வார்த்தைகளைப் பேசும் ஒருவனுக்கு என்றைக்கேனும் கெடுதி விளையுமா? நிச்சயம் ஒரு கெடுதியும் வராது. ரகசியங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது.

அனைத்தும் பொருள் பொதிந்தவை.

 IMG_4438

சொல் ஒன்று வேண்டும்

 

மஹாகவி பாரதியார் பாடிய சொல் என்ற பாடல் அற்புதமான பாடல்.

சொல் ஒன்று வேண்டும் தேவசக்திகளை நம்முள்ளே                             

நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்

மின்னல் அனைய திறல் ஓங்குமேஉயிர்                                             

வெள்ளம் கடை அடங்கிப் பாயுமே                                                     

தின்னும் பொருள் அமுதம் ஆகுமே இங்கு                                    

செய்கை  அதனில் வெற்றி ஏறுமே

 

என்று சொல்லின் பெருமை கூறும் அவரது பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது யூதர்களின் வேதம் கூறும் சொல்லுக்குள் ஜோதி காணும் அனுபவம் கை கூடும், இல்லையா!

பேசுகின்ற வார்த்தைகள் பலவற்றை நம்மிடம் அன்றாடம் சேர்க்கின்றன. இவற்றில் நாளைத் துவக்கும் போது பேசுபவை அன்றைய போக்கை உருவாக்குகின்றன. ஆகவே பேசுவதைச் சரியாகப் பேசு; சரியான சொற்களைத் தேர்ந்தெடு என்பதே அறநூல்களின் அறிவுரை.

 

இதை ஒரு சோதனையாகக் கூடச் செய்து பார்க்கலாம்; விளைவுகள் பிரம்மாண்டமான அளவில் நலம் பயப்பதைக் கண்டு நாமே பிரமித்து விடுவோம்!

 

*****************