நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் (9632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9632

Date uploaded in London – –  –22 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்

நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று உகும் இறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் என்ன?

ச.நாகராஜன்

நம்மாழ்வார் கருங்கடல் வண்ணனை நினைத்தாலே கண்களில் நீர் மல்க நெக்கொசிந்து கரைவார். கண்ணபிரான் என்று சொன்னாலேயே உகந்து உகந்து உள் மகிழ்ந்து ஆனந்தம் அடைவார்.

அவரது திருவாய்மொழியில் பண்டிதர்களுக்கும் அரசன் விக்ரமசிங்கனுக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது.

திருவாய்மொழியில் ஆறாம் பத்தில் ஐந்தாம் பகுதியில் முதல் பாசுரம் இது:

“துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவனை

நீர் இனி அன்னைமீர்! உமக்காசையில்லை விடுமினோ

தவளவொண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கணென்றும்

குவளையொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”.

பாடலின் பொருள் பார்க்கப் போனால் எளிது தான். சங்கு சக்கரபாணியை நினைத்தால் குவளை ஒத்த மலர்க் கண்கள் நீர் மல்கிடும்.

ஆனால் எப்படி நீர் மல்கும் என்பதை நம்மாழ்வார் கூறுகிறார்: “கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”

இங்கு தான் சந்தேகம் எழுந்தது; விவாதமும் ஆரம்பமானது.

‘நின்று நின்று குமுறும்’ என்பதை சில பண்டிதர்கள் ‘நின்று உகும் இறும்’ என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்றனர்.

அதாவது அவரது இறைவன் பால் கொண்ட காதல் மட்டற்றது. அந்த அன்பினால் நின்று அவர் ‘உகும்’ அதாவது உருகி விடுவார்; பின்னர் ‘இறும்’ அதாவது இறந்து விடுவார்.

எல்லையிலா நெஞ்சத்து அன்பு ஊற அதில் உருகி அவர் இறந்து விடுவார்;

ஆனால் ராஜா விக்ரமசிம்ஹனுக்கு இந்த விளக்கம் பொருத்தமாகப் படவில்லை.

அவன் விளக்கலானான் இப்படி: “நின்று நின்று குமுறும் என்பதில் குமுறும் என்பதை கொந்தளிக்கும் என்ற பொருளிலேயே ஆழ்வார் கூறியிருப்பதாக எனக்குப் படுகிறது. ஏனெனில் உருகி இறந்து விடுவது என்று வைத்துக் கொண்டால் மிகப் பெரும் மகானான நம்மாழ்வாரின் அன்பு அவர் இறப்பதால் ஒரு முடிவுக்கு வந்ததாக ஆகி விடுகிறது. ஆனால் அப்பேர்க்கொத்த மகானின் அன்புக்கும் ஒரு எல்லை உண்டோ, ஒரு முடிவு தான் உண்டோ, நிச்சயமாக இருக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எல்லையற்று குமுறிக் கொந்தளித்துக் கொண்டே தான் இருக்கும். ஒரு ஓடையில் சுழலில் எப்படி நீர் கொந்தளித்துக் குமுறிக் கொண்டே அதே இடத்தில் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்குமோ அதே போல ஆழ்வாரின் அன்பு குமுறிக் கொந்தளித்து அப்படியே ஆழமாய்ச் சுழலின் உள்ளே சென்று சுழன்று சுழன்று என்றும் நிற்கும்; அது அந்த இடத்திலிருந்து அகலாது, செல்லாது. இந்த அன்பு ஓசை அற்றது, இதயத்திலிருந்து வருவது, வார்த்தையால் சொல்வதற்கு முடியாதது; சொல்லுக்கு அப்பாற்பட்டதாகும்! எப்படி ஒரு பசுவானது அதனுடைய கன்று தாயிடமிருந்து விலகிச் சென்று சற்றுத் தொலவில் இருந்த போதும் அதனுடைய மடியில் பால் சுரந்து நிரம்பி நிற்குமோ, எப்படி அது தனது வாயால் தனது கன்றை அடைவதற்காக ஏங்கி நிற்கும் அன்பைச் சொல்ல முடியாது தவிக்குமோ அதே போலத் தான் இதுவும்!”

அரசனின் விளக்கத்தைக் கேட்ட பண்டிதர்கள் அசந்து போனார்கள்; அவனது விளக்கத்தையே மேலான, சரியான விளக்கம் என்று ஒப்புக் கொண்டார்கள்.

உகும், இறும் என்றால் உருகி இறந்து படுவதாக ஆகி விடும். ஆழ்வாரின் அன்புக்கு ஒரு  முடிவு ஏற்பட்டதாக ஆகி விடும்! அது சாத்தியமே இல்லையே! ஆகவே குமுறிக் குமுறி அது கொந்தளித்து எப்போதும் அதே இடத்தில் நிலையாக வளர்ந்து கொண்டே இருக்கும்!

சபாஷ் ராஜா! சரியான விளக்கம்!

***

இந்த அருமையான சம்பவத்தை பகவத் விஷயம் ஆறாம் தொகுதியில் 2804ஆம் பக்கம் படித்து மகிழலாம்.

tag–நம்மாழ்வார்

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு:நம்மாழ்வாரும் சொல்கிறார்! (Post 8687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8687

Date uploaded in London – –15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்

3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
      
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
      
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
      
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
      
ஒன்றும் துயர் இலனே (5)
Top of Form Bottom of Form
 

இடர் இன்றியே, ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

உலகும் கழிய

படர்ப்புகர்ப்  பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற 

திண் – தேர்க் தடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன்  பிள்ளைகளை

உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய் மொழியில் ஒரு அற்புதமான கதை சொல்கிறார்

என்ன கதை ?

YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES

நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட  வெளிப் பயணம் –  பற்றி விவரம் உளது

இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது .

ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN)  அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன  48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.

ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .

பரம பதம் எங்கே உள்ளது?

திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.

முடிவுரை என்ன?

YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !

ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.

அதில் 13 பேர் வரை செல்லலாம்.

உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.

இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே  தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .

இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.

இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்

ஐன்ஸ்டைன் (Albert Einstein)  என்னும் விஞ்ஞானி  சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY)  என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான்  அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும்  .

ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம்  பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.

*****

ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்

ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட  மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.

ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS  மட்டும் எழுதி வருகின்றனர்.

ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்BLACK HOLE SECRETS  ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்

இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.

அது எப்படி?

ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”

என்ன அர்த்தம்?

 நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான்  அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.

ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.

இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர்,  கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .

எப்படி வந்தாள் ?

13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .

1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.

2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.

ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!

இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  கதை போகிறது!

இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?

காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப்   (TIME IS AN ILLUSION ) புகைதான்.

இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்

அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்

“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)

இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.

இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து  ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.

இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA  , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று  வந்ததையும்  அறிகிறோம்.

******

TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA

ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை

இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை  வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.

எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை,  பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.

*******

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்

உள்ளது போகாது, இல்லது வாராது .

அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ   போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்..

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.

TAGS-  ஐன்ஸ்டைன், தப்பு, நம்மாழ்வார் ,  காலப் பயணம், உள்ளது போகாது,

3116:THIRU VAY MOZI OF NAMMALVAR 

idar inRiyE oru naaLoru pOzthil* ellaa ulakum kaziya,*

padar_pugazp paartthanum vaithikaNnum* udan  ERath thiNdhErkadavi,*

sudaroLiyaay _ninRa thannudaic sOthiyil*  vaithikan piLLaigaLai,*

udalodum koNdu kodutthavaNnaip paRRi*  onRum thuyarilanE.    3.10.5

5. Once, Sri KrishNan took arjun and a Brahmin in His chariot to Parama Padham.

Within a day and in one muhUrtha nEram, He drove the chariot to Sri Vaikuntam

and brought the brahmin’s sons from there in their physical bodies back to the

earth. Such Sarva shakthan- Emperumaan Sri KrishNan – since, I have taken Him

as my refuge, I have become “No-Problem” man.


TIME TRAVEL by TWO TAMIL SAINTS | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/02/14 › time-travel-by-two-…

  1.  
  2.  

14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO TAMIL SAINTS.


காலப் பயணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலப…

  1.  

24 Sep 2012 – Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 …


காலம் (Concept of Time) | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலம…

30 Apr 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › வெள…

  1.  

T

https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/. Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து …


காலமென்பது என்ன? | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கால…

  1.  

19 May 2015 – சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் …


வேத கால மக்களுக்கு வெளி …

tamilandvedas.com › 2020/06/23

  1.  

23 Jun 2020 – வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும்? … மாதலி தேரில் அர்ஜுனன் விண்வெளிப் பயணம் செய்தபோது … 30 Apr 2018 – வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! … https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ …


சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339 …

tamilandvedas.com › 2015/11/18

  1.  

18 Nov 2015 – … சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி …


மஹாபாரதம் உண்மையே | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மஹா…

– 

23 May 2017 – காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய … ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன. Amy and Chris …


A blog exploring themes in Tamil and vedic … – Tamil and Vedas

tamilandvedas.com › page › archives…

30 Apr 2018 – கால நேரம் பற்றிய அற்புத அறிவு … 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் … https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


கருந்துளைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கருந்…

  1.  

9 Aug 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் …


தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 113

tamilandvedas.com › https: › category

5 May 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.

—subham—

‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’ (Post No.4297)

Written by London Swaminathan

 

Date:13 October 2017

 

Time uploaded in London- 7-37 am

 

 

Post No. 4297

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது:

முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்

இரண்டு பெரிய பக்தர்கள், ஒரே கருத்தைச் சொல்லும்போது, அதை நம் மனதில் வைப்பது எளிதாகிறது; மேலும் ஒருவர் வைணவர்கள் போற்றும் நம்மாழ்வார், மற்றொருவர் சைவர்கள் போற்றும் பட்டினத்தார் என்பதைக் காணுகையில் நம் ஆர்வம் கொப்புளிக்கிறது.

 

இருவரும் என்ன சொல்கிறார்கள்?

நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் இறுதியில் ஆண்டியும் அரசனும் சந்திக்கும் இடம் ஒன்றே.

 

நம் வாழ்வில் காணா சமரச இடம்

சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம் அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது

எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு

தொல்லையின்றினே தூங்கிடும் வீடு

உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே.

 

 

ஆண்டி எங்கே அரசனும் எங்கே

அறிஞன் எங்கே அசடனும் எங்கே

ஆவி போன பின் கூடுவார் இங்கே

ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே

 

 

பட்டினத்தார் பாடல்

பாமர மக்களுக்குப் புரியும் வகையில் எழுதப்பட்டது திரைப்படப் பாடல். இலக்கிய நயம்பட எழுதப்பட்டது பக்திப் பாடல்; மேலும் பக்திப் பாடல்களைப் பாடுவோர் அதை அடிமனதில் தோன்றும் ஆன்மீகப் பேரூற்றில் இருந்து தருகையில் நாம் மிகவும் ரசிக்கிறோம்; பருகுகிறோம். ஆகையால் காலா காலத்துக்கும் அப்பாடல்கள் அழிவதில்லை. அதே கருத்து திரைப்பாடல்களில் வருகையில் அது அழிந்துவிடுகிறது. ஏனெனில் அவர்கள் காசு, பணத்துக்கு எழுதுகிறார்கள்.

 

இதோ பட்டினத்தார் பாடல்:–

 

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

 

 

பொருள் மிகவும் எளிது:

பெரிய  வைர, ரத்தின, தங்க கிரீடங்களை (மணி முடி) தாங்கி பாரையே ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே!

 

இது பட்டினத்தாரின் ஏக்கம்.

இதோ நம்மாழ்வார் பாசுரம்:

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ

–திருவாய் மொழி, திவ்வியப் பிரபந்த பாடல் எண் 3009

 

பொருள்:-

 

பேரரசர்கள் ஒரு சமயம். மற்ற சிற்றரசர்களின் முடிகள் தங்கள் காலில் படும்படி (காலில் விழுந்து வணங்கும்போது) ஆட்சி புரிந்தனர். இடி போன்ற முரசங்கள் ஒலிக்கும்படி சபை வீற்றிருந்தனர். ஆனால் அவர்களே பின்னொரு நாளில் இவை அழியும்படி, போரில் தோற்று பொடியாக, துகளாக ஆனார்கள். ஆகவே மணம் பொருந்திய துளசி மாலையை அணிந்த கண்ணன் திருவடிகளை நினை மனமே; இப்போதே நினை மனமே.

 

ஆக நம்மாழ்வாரும் பட்டினத்தாரும் பேசும் பெரிய மன்னர்கள் தகுதி நமக்கு இல்லை. ஆனால் அவர்களுகே அந்தக் கதி என்றால் ஊர் பேர் தெரியாத நமக்கு எந்த கதியோ?

 

இறைவன் சந்நிதியில் மட்டுமே நாம் அனைவரும் சமம்.

 

–சுபம்–

தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்! (Post No 4282)

Written by London Swaminathan

 

Date: 8 October 2017

 

Time uploaded in London- 11-40 am

 

Post No. 4282

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நம்மாழ்வாரின் திருவாய் மொழி தித்திக்கும் தேன்; திகட்டாத செங்கரும்பு; திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாசுரங்களில் கால் பகுதியை ஆக்ரமிக்கும் நம்மாழ்வார் பாசுரங்கள், மஹாகவி பாரதியாருக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு மட்டும்தானா? நமக்கும் குலோப் ஜாமுனையும் கோதுமை, அல்வாவையும் அடுத்தடுத்து கொடுப்பது போல இருக்கிறது. பன்னீர் ஜாங்ரியையும் பாதுஷாவையும் சாப்பிட்டது  போல இனிக்கிறது.

 

மிகவும் துணிச்சலாலகப் பாடி இருக்கிறார்; பச்சைப் பொய்கள் என்ற சொற்கள் மூலம் மனிதர்களைப் பாடும் புலவர்களைச் சாடுகிறார்.

சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் என்று துணிந்து விட்டார்.

 

பணத்திற்கு ஆசைப்பட்டு குறு நில மன்னர்களையும், உதவாக்கரைப் பணக்காரகளையும் பாடும் — இந்திரனே! சந்திரனே! என்று பாடும் — புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார்.

 

நான் நினைக்கிறேன்; நம்மாழ்வாரின் இந்தத் துணிச்சல்தான் பாரதியை அவர்பால் ஈர்த்திருக்க வேண்டும் என்று. நாடே சுதந்திரத்துக்காக ஏங்கியபோது சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைத் தொழில் புரிந்தமையும், அவர்களைப் போற்றி நூல் தோறும் கவி பாடியதும் பாரதியாரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’– என்று பாடினார்.

 

நம்மாழ்வார்தான் அவருக்கு வழிகாட்டி.

நம்மழ்வாரின் அற்புதப் பாசுரங்களைப் பாருங்கள்:-

 

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து

என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே

பொருள்

நான் சொல்வது பகையாகப் படலாம். ஆயினும் சொல்லாமல் விடமாட்டேன். பெருமாளுக்கே என் கவிதைகளைத் தருவேன்; மற்றவரைப் பற்றி கவி பாடேன். வண்டுகள் தென்னா, தெனா என்று இசைபாடும் திருவேங்கடத்தில் உள்ள பெருமாள் எல்லாருக்கும் தந்தையாய் இருப்பவன்; அவனை விட்டு யாரையும் பாட மாட்டேன்.

பச்சைப் பொய்கள்! வாய்மை இழக்கும் புலவீர்காள்!!

 

இன்னும் இரண்டு பாடல்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்:

கொள்ளும் பயன் இல்லை, குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!

கொள்ளக் குறைவு இலன், வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (3213)

பொருள்:-

 

புலவர்களே! குப்பையைக் கிளறினாற்போல, தள்ளத் தக்க குற்றமுடைய செல்வரைப் புகழ்ந்து பாடாது, வள்ளல் மணிவண்ணனைப் பாடுங்கள். அவன் ஒருவனே கவி பாடுவதற்குப் பொருளானவன். குணங்களில் குறைவில்லாதவன். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அவனைப் பற்றி கவி பாட வாருங்கள்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை, ஓர் ஆயிரம்

பேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான் கிலேன்

மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே

 

பொருள்:

உண்மை இல்லாமல், பொய் மொழியால் உன் கைகள் மேகம் போன்று கொடையாளி, உன் தொள்களோ மலை போன்ற வலிமை உடயவை- என்று மனிதப் பதரை பேச மாட்டேன்.வள்ளன்மையும் புகழுமொப்பில்லாத ஆயிரம் திருப்பெயர்களும் உடைய எம்பெருமானை அல்லாமல் வேறு யாரையும் பேசுவதற்கு நான் தகுதி அற்றவன்.

 

மானிடரைப் பாடாது மாதவனை மட்டும் பாட வேண்டும் என்று பத்து கவிகள் சாத்தியுள்ளார் நம்மாழ்வார். ஏனைய ஏழு கவிகளையும் படித்து இன்புறுக.

 

ஆழ்வார்கள் தரும் அமுதம் திகட்டாது!

TAGS:__நம்மாழ்வார், சொன்னால் விரோதம், பச்சைப் பொய்கள்

–சுபம்–

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

Picture  by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 28 September 2017

 

Time uploaded in London- 6-34 am

 

 

Post No. 4252

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம் (Post No.4252)

கடவுளை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிப் பரவிப் பரவசப்படும் அழகே தனி; ஆழ்வார்களில் பாரதியாருக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார். அவரது பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டதை இதே பிளாக்கில் எனது பழைய கட்டுரைகளில் படித்து மகிழலாம்.

 

 

கடவுளை ஒளி ரூபத்தில் வணங்குவதுதான் இந்துக்களின் மிகப்பெரிய மந்திரமான காயத்ரீ மந்திரம். மூன்று வேதங்களில் உள்ளது.

 

தமிழில் வேதக் கருத்துகளைப் பரப்பியவர்கள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆவர். நம்மாழ்வார், எல்லோருக்கும் பிடித்தவர் என்பதால் ‘நம்ம+ ஆழ்வார்’ என்று புகழப்படுகிறார். அவர் பாடிய ஒரு பாடல் திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாடல்களில் தனித்து நிற்கிறது. நாமும் படித்துப் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆவோம்:

 

 

முடிச் சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?

அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே.

–நம்மாழ்வார், திருவாய்மொழி, பாடல் 2897

 

திருமாலைப் பார்த்தார் நம்மாழ்வார்; எங்கும் ஒளிமயம்; ஜோதி ஸ்வரூபம்; இந்த ஒளிக்கு என்ன காரணம்? உன்னால்தான் நீ அணிந்திருக்கும் ரத்தின முடி ஒளி பெற்றதோ? உன்னுடைய காலின் ஒளிதான் தாமரையாக மலர்ந்துவிட்டதோ? நீ அணிந்திருக்கும் ஆடைகள் கூட பளபள என்று தங்க வெள்ளி ஜரிகைகளால் ஒளிவீசுகிறதே? அதுவும் உன் ஒளி பரவியதால்தானோ?

 

உண்மையில் தங்க ஜரிகை, ரத்தினக் கற்கள், சூரியனைக் கண்டு மலரும் தாமரை ஆகியவற்றுக்கு இயற்கை ஒளி உண்டு. ஆனால் அவை நம் கண்களில் புலப்பட கட்டாயம் வெளிச்சம் வேண்டும். சூரிய ஒளிபடும்போது நாம் அவற்றின் பளபளப்பால் அறிகிறோம். இங்கு அந்த சூரியன்தான் பெருமாள்; இறைவனின் அருள் ஒளி இல்லாவிடில் எதுவும் பிரகாசிக்காது; அதை விளக்க வந்த பாசுரம்தான் இது.

Tamarind Tree under which Nammalvar got inspiration

 

இதோ பாடலின் பொருள்:

 

திருமகள் தங்கும் மார்பை உடைய திருமாலே, பெருமாளே! உன் திருமுகத்தின் அழகுதான் உன் தலை மீதுள்ள கிரீடத்தின் — திரு முடியின்- அழகு ஒளியாக பரவி இருக்கிறதோ?

 

உன் பாதாரவிந்தங்களின் ஒளி பரவிதான் தாமரையும் பிரகாசிக்கிறதோ?

 

(தாமரைதான் அதிகமான, பிரசித்தமான மலர்; அதனால்தான் இந்துப் பெண்கள் மலர், தாமரை, அம்புஜம், பங்கஜம், கமலம், அரவிந்தம் என்று தாமரையின் பெயர் சூட்டிக்கொண்டு பவனி வருகிறர்கள்)

 

உன் திருமேனியின் ஒளிதான் உனது ஆடைகளிலும், ஆபரணங்களிலும் பரவி பட்டொளி வீசுகிறதோ? இவ்வாறு உன்பால் ஒளிரும் அழகின் தன்மையை எனக்கு எடுத்துச் சொல்வாயாக” என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

 

நம்மாழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார்; அதன் மற்றொரு பெயர் திருக்குருகூர். இவருக்கு சடகோபன், மாறன், பராங்குசன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவர் இயற்றிய நூல்கள்– திருவாய்மொழி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி.

 

மதுரகவி ஆழ்வார், இவரை வழிபட்டே பேரருள் பெற்றார்.

‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்பது பெரியோர் வாக்கு. திருவாய் மொழியில் ஆயிரம் பாசுரங்கள் உண்டு

 

இதற்கு ஐந்து உரைகள் இருக்கின்றன:

திருக்குருகை பிரான் பிள்ளை அருளிய ஆறாயிரப்படி,

நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி,

வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் அருளிய பன்னீராயிரப்படி,

பெரியவாச்சான் பிள்ளை அருளிய இருபத்து நாலாயிரப்படி,

வடக்குத் திருவீதிப்பிள்ளை அருளிய முப்பதாறாயிரப்படி.

 

கம்பனும் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரைப் பாடிக் கொண்டாடுகிறார்.

 

சேரா தனவுள வோ? பெருஞ்செல்வர்க்குவே தம் செப்பும்

பேராயிரம்திண் பெரும்புயமாயிரம் பெய்துளவத்

தாரார் முடியா யிரங்குருகூர்ச்சடகோபன் சொன்ன

ஆரா அமுதக் கவியாயிரமவ் வரியனுக்கே!

-கம்பர் பாடிய சடகோபர் அந்தாதி

திரு மறை என்று போற்றப்படும். திருவாய்மொழியைப் பாராட்டி மணவாள மாமுனிகள் ஒரு அந்தாதி பாடியுள்ளார்.

 

தகவல் தந்து உதவிய நூல்:- ஞானத் தமிழ், ரெ.முத்துக் கணேசன், காரைக்குடி, 1970

TAGS: நம்மாழ்வார், முகச் சோதி, திருவாய்மொழி

  1. Nammalvar | Tamil and Vedas

tamilandvedas.com/tag/nammalvar

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … later known as Nammazvar, … Bharati used it for political freedom as well.

 

–SUBHAM–

நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் (Post No.3590)

Compiled by London swaminathan

 

Date: 30 JANUARY 2017

 

Time uploaded in London:-  19-59

 

Post No. 3590

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (தைமாசி மாதம்)

 

 

முக்கிய நாட்கள்:- பிப்ரவரி 3ரத சப்தமி, 9-  தைப்பூசம், 24-மஹா சிவரத்திரி.

ஏகாதசி- 7, 22; அமாவாசை- 26; பௌர்ணமி– 10

முகூர்த்த நாட்கள்1, 2, 6, 9, 16, 17, 23.

 

பிப்ரவரி 1 புதன்கிழமை

திரு உடம்பு வான்சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்

திரு இடமே மார்வம்; அயன் இடமே கொப்பூழ்;

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே;

ஒருவு இடமும் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (3054)

 

பிப்ரவரி 2 வியாழக்கிழமை

ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்;

காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்;

பேணுங்கால், பேணும் உரு ஆகும்….. (3062)

 

பிப்ரவரி 3 வெள்ளிக் கிழமை

உன்னைச் சிந்தை செய்து செய்து, உன் நெடு மா மொழி இசைபாடி, ஆடி, என்

முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் (3069)

பிப்ரவரி 4 சனிக்கிழமை

அனைவது அரவு- அணைமேல்; பூம்பாவை ஆகம்

புணர்வது; இருவர் அவர் முதலும் தானே;

இணவன் ஆம் எப்பொருட்கும்; வீடு முதல் ஆம்-

புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (3088)

 

பிப்ரவரி 5 ஞாயிற்றுக்கிழமை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே!

அம்மா! அடியேன் வேண்டுவது ஈதே-3099

(கைம்மா=யானை).

 

பிப்ரவரி 6 திங்கட்கிழமை

மகிழ் கொள் தெய்வம் உலோகம், அலோகம்

மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே!

மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்

மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே -3104

 

பிப்ரவரி 7 செவ்வாய்க்கிழமை

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்

வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்,

வளர் இளம் பொழில் சூழ்மாலிருஞ்சோலை

தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே–3110

 

பிப்ரவரி 8 புதன்கிழமை

வரும்காலம், நிகழ்காலம், கழிகாலம் ஆய், உலகை

ஒழுங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?-3125

 

பிப்ரவரி 9 வியாழக்கிழமை

கிற்பேன், கில்லேன் என்று இவன் முனம் நாளால்;

அற்ப சாரங்கள் அவை அகன்றொழிந்தேன்;

பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்

நற்பொன் – சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?—3137

 

பிப்ரவரி 10 வெள்ளிக் கிழமை

 

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்

முந்தை – வானவர் வானவர் – கோனொடும்

சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து

அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே -3144

 

பிப்ரவரி 11 சனிக்கிழமை

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன்முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?-3157

 

பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை

கும்பிடு நட்டம் இட்டு ஆடி

கோகு உகட்டுண்டு உழலாதார்

தம்பிறப்பால் பயன் என்னே

சாது சனங்களிடையே?–3168

 

பிப்ரவரி 13 திங்கட்கிழமை

கனியை, கரும்பின் இன்சாற்றை,

கட்டியை, தேனை, அமுதை

முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்

முழுது உணர் நீர்மையினாரே—3170

 

 

பிப்ரவரி 14 செவ்வாய்க்கிழமை

ஒருமை மனத்தினுள் வைத்து,

உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து

பிதற்றுமின், பேதைமை தீர்ந்தே!-3174

 

பிப்ரவரி 15 புதன்கிழமை

தேவதேவனை, தென் இலங்கை

எரி எழச் செற்ற வில்லியை

பாவநாசனை, பங்கயத் தடங்

கண்ணனைப் பரவுமினோ -3177

 

பிப்ரவரி 16 வியாழக்கிழமை

குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை

நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,

வலம்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்

கலந்தார் அடியார்- தம் அடியார் எம் அடிகளே -3195

 

பிப்ரவரி 17 வெள்ளிக் கிழமை

அடிஆர்ந்த வையம் உண்டு, ஆல் இலை அன்னவசம் செய்யும்

படியாதும் இல் குழவிப்படி எந்தைபிராந் தனக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியார்- தமக்கு

அடியார் அடியார் – தம் அடியார் அடியோங்களே -3196

 

பிப்ரவரி 18 சனிக்கிழமை

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

எந்நாவில் இன்கவி  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் –3209

 

பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை

மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே – 3215

 

பிப்ரவரி 20 திங்கட்கிழமை

இடர் இன்றியே, ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய

படர்புகர்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திந்தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே –3224

பிப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ

இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்

பொடிசேர் துகளாய்ப் போவார்கள்; ஆதலில் நொக்கெனக்

கடிசேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -3233

 

பிப்ரவரி 22 புதன்கிழமை

ஏக மூர்த்தி இரு ஊர்த்தி

மூன்று மூர்த்தி பல மூர்த்தி

ஆகி, ஐந்து பூதம் ஆய்,

இரண்டு சுடர் ஆய், அருவு ஆகி – 3255

 

பிப்ரவரி 23 வியாழக்கிழமை

கண்ணன், எம்பிரான், எம்மான்

காலச்சக்கரத்தானுக்கே -3257

 

பிப்ரவரி 24 வெள்ளிக் கிழமை

அறியும் செந்தீயைத் தழுவி

அச்சுதன் என்னும்; மெய் வேவாள்;

எறியும் தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்; -3266

 

பிப்ரவரி 25 சனிக்கிழமை

திரு உடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்;

உரு உடை வண்ணங்கள் காணில்

உலகு அளந்தான் என்று துள்ளும்;

கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும்;

வெருவிலும் வீழ்விலும் ஓவாள்;

கண்ணன் கழல்கள் விரும்புமே -3271

 

 

பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை

விரும்பிப் பகவரைக் காணில்

வியல் இடம் உண்டானே என்னும் -3272

(பகவர்= துறவி)

 

 

பிப்ரவரி 27 திங்கட்கிழமை

 

கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை

வண்-தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே -3284

 

பிப்ரவரி 28 செவ்வாய்க்கிழமை

கொள்ளமாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்

வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ என்று என்று-3298

 

–subham–

 

 

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064)

chart-cloud-types.jpg

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 9-21 AM

Post No.3064

Pictures are taken from various sources; thanks for the pictures.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.

 

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.

 

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

 

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

 

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

earth-atmosphere-layers

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

 

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 

ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 

ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.

cloud_types

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை!, posted on 22-11-2014

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

கீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க!, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014

–subham–

 

ஆழ்வார் அமுதம்: நம்மாழ்வார்

வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன?

 

Written by S NAGARAJAN

Post No.2221

Date: 7th   October 2015

Time uploaded in London:  9-34 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

இறைவனை எப்படி விளக்குவது?

 

இறைவன் பெரியவன்! எல்லாம் வல்லவன்!!

ஆகவே “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று ஆழ்வார் ஆசைப்படுகிறார் (நம்மாழ்வார் திருவாய் மொழி 3 -3 1)

ஆனால் இறைவன் யார்? எங்கே இருக்கிறான்? உருவமாகவா? அருவமாகவா? மனிதருள் அவதாரமாகவா? இயற்கையாகவா? மணியாகவா? ஒளியாகவா?

கேட்கிறார்:

புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

குன்றங்கள் அனைத்தும் என்கோ?

மேவு சீர் மாரி என்கோ?

விளங்கு தாரகைகள் என்கோ?

நாவியல் கலைகள் என்கோ?

ஞான நல்லாவி என்கோ?

பங்கயக் கண்ணன் என்கோ?

பவளச் செவ்வாயன் என்கோ?

அங்கதிர் அடியன் என்கோ?

அஞ்சன வண்ணன் என்கோ?

செங்கதிர் முடியன் என்கோ?

திரு மறு மார்வன் என்கோ?

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன் முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவில் சீர் விளக்கம் என்கோ?

ஆதியஞ் ஜோதி என்கோ?

ஆதியம் புருடன் என்கோ?

அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம் என்கோ?

நலங்கடல் அமுதம் என்கோ?

அச்சுவைக் கட்டி என்கோ?

அறுசுவை அடிசில் என்கோ?

நெய்ச்சுவைத் தேறல் என்கோ?

நான்கு வேதப் பயன் என்கோ?

சமய நீதி நூல் என்கோ?

நுடங்கு கேள்வி இசை என்கோ?

இவற்றுள் நல்ல மேல் என்கோ?

வினையின் மிக்க பயன் என்கோ?

கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ?

வானவர் ஆதி என்கோ?

வானவர் தெய்வம் என்கோ?

வானவர் போகம் என்கோ?

வானவர் முற்றும் என்கோ?

ஊனமில் செல்வம் என்கோ?

ஊனமில் சுவர்க்கம் என்கோ?

ஊனமில் மோக்கம் என்கோ?

ஒளி மணிவண்ணன் என்கோ?

நளிர்மணிச் சடையன் என்கோ?

நான்முகக் கடவுள் என்கோ? (திருவாய்மொழி 3-4- 1 முதல் 7)

யாரை இறைவன் என்று சொல்வது? எப்படி அவனை விவரிப்பது?

தேவர்களுக்கு மட்டுமா தெய்வம் அவன்?

அவன் வானில் உறைபவர்க்கு மட்டும் தான் தெய்வம், அவர்களுக்கு மட்டுமே அருள் பாலிப்பான் என்றால், அவன் ஒரு தெய்வமா, அப்படிப்பட்ட தெய்வத்தால் எனக்கு என்ன பயன்? அவனுக்கு அது புகழ் ஆகுமா?

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ? (திருவாய்மொழி 3-3-4)

நிச்சயம் இல்லை!

சரி, மேலே சொன்ன அனைத்தில் யார் என ஆழ்வார் இறைவனை இனம் கண்டாரா?

கண்டார்; விடையையும் தெரிவித்து விட்டார்! இப்படி:-

யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்

 புலன் ஐந்துக்கும் சொலப்படான்

உணர்வின் மூர்த்தி

அவனை அடையக் கூடிய வழி? அதையும் கூறுகிறார்;-

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாம்! (திருவாய்மொழி 3-5-10)

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு’! ((திருவாய்மொழி 1-2-4)

பிணக்கு அற அறுவகைச் சமயமும் நெறி உன்னி உரைத்த கணக்கறு நலத்தனன் (திருவாய்மொழி 1-3-5)

ரகசியம் புரிகிறது

ஆஹா! ஆழ்வார் சொன்ன ரகசியம் கொஞ்சம் புரிகிறது.

இறைவன் அனைவருக்கும் பொது; அனைத்தும் ஆனவன் அவன்! அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.

வேண்டுதல் வேண்டாமை இலான்!

ஒவ்வொரு சமயமும் தன் தெய்வம் என் தெய்வம் என்று சொல்லுபவனும் அவனே! பற்றிலாத பாவனை கூடில் அவனையும் கூடி விடலாம்.

அந்த பாவனை வருவதற்கு அவன் நினைவு வேண்டும்; பக்தி வழி நடத்தல் வேண்டும்; சேவை செய்ய வேண்டும். To know God; To Love God; To Serve God இதுவே வழி!

இதைச் செய்தால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய முடியும்!

இதைத் தெளிவாகச் சொல்கிறார், நமக்காக, நம்மாழ்வார்!

ஆழ்வாரின் பாடல்கள் அத்தனையும் நம்மை வாழ்விக்கும் அமுதம்!

******************