Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?!
ச.நாகராஜன்
அருமையான நூறு சுபாஷிதங்களை சரோஜா பட் தொகுத்து ‘சுபாஷித சதகம்’ என்ற ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமே. அவற்றில் ஐந்தைத் தமிழில் பார்ப்போம் :
ஆறு காதுகளில் கேட்கப்பட்ட ரகசிய திட்டமானது வெளியில் கசிந்து விடும். நான்கு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியம் அப்படியே இருக்கும். என்ற போதிலும், இரண்டு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியமானது பிரம்மாவினால் கூட கேட்கப்பட மாட்டாது.
Secret plan (delibertions) heard by six ears leak out. Secrets heard by four ears remain stable. However, even the creator cannot penetrate into the secret which remains in two ears.
நீரில் இடப்பட்ட எண்ணெய், துஷ்டன் காதில் விழுந்த ரகசியம், சரியான தகுதியுள்ளவனுக்குக் கொடுக்கப்பட்ட தானம், நல்ல புத்திசாலிக்குக் கொடுக்கப்பட்ட சாஸ்த்ரம் ஆகிய இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிறியதாக இருப்பினும் கூட தனது உள்ளார்ந்த சக்தியால் பெரிதாகப் பரவி விடும்.
Oil (put) in water, a secret (divulged to) a wicked person, gift (given to) a proper person and knowledge (imparted to an) intelleigent person, these things spread on their own due to the inherent power in each object although they are small (in the beginning).
கற்குவியல் அல்ல, மரங்களே தண்ணீர் விடும் போது தளிர்த்து வளர்கின்றன. நல்ல தரமுள்ள பொருளே அப்படி ஒரு செயலைச் செய்யும் போது தகுதி உடையதாக ஆகிறது.
Trees and not heaps of stones grow by the sprinkling of water. An object of good quality alone becomes a worthy object when it is processed in that (specific) manner.
*
ஜாத்யுத்க்ருஷ்டஸ்ய ஹி மணேனோர்சிதம் ஷாணகர்ஷணம் |
ஆதர்ஷே சித்ரகாரை: கிம் லிக்யதே ப்ரதிபிம்பத்வம் ||
ஒரு நல்ல தரம் வாய்ந்த அசல் நவரத்தின மணியை பளபளப்பாக்கும் கல்லில் தேய்ப்பது உகந்ததல்ல; ஒரு கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம் ஓவியர் வரைந்ததாகி விடுமா என்ன?
Rubbing on a polishing stone is not desirable for a gem which is originally of high quality. Is the reflection in a mirror drawn by an artist?
*
ஆத்மாதீனசரீராணாம் ஸ்வபதாம் நித்ரயா ஸ்வயா |
கதன்னமபி மத்யார்நாமம்ருதத்வாய கல்பதே ||
தனது கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவர்களுக்கும், தானாகவே தூங்க முடிபவர்களுக்கும் தகுதியற்ற உணவும் கூட அமிர்தமாகும்!
Even the worthless food is nectar for them who have a control over their body and who sleep their own sleep.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பிரிட்டனில் 22 பிரதமர்களின் ஆட் சியைக் கண்ட பெண்மணி சார்லோட் ஹ்யுஜஸ் .
அவரைப் பற்றி நான் எழுதிய செய்தி 13-9-1992ல் தினமணி கதிரில் வெளியானது. இணைப்பில் படியுங்கள். பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள பத்து கட்டளைகளை பின்பற்றியதே நீண்ட ஆயுளின் ரகசியம் என்கிறார் . பத்து கட்டளைகளில் பெரும்பாலானவை பைபிளில் வருவதற்கு முன்பாகவே வேத கால நூல்களில் உள்ளவைதான்.
அவர் 1993ஆம் ஆண்டில் இறந்தார்.அதாவது தினமணி கதிர் செய்தி வந்த ஆறே மாதங்களில் 1993 மார் ச் 17ம் தேதி இறந்தார். வெப்சைட் செய்தி ஒன்றில் அவர் தேநீர் அருந்தியதே நீண்ட ஆயுளின் ரஹஸ்யம் என்றும் காணப்படுகிறது.
Charlotte Marion Hughes (née Milburn; 1 August 1877 – 17 March 1993) is the longest-lived person ever documented in England and the United Kingdom overall, at 115 years 228 days. She is 220 days older than Annie Jennings, the next oldest British supercentenarian. She is among the 25 oldest people overall and was the 4th verified supercentenarian to turn 115. She drank tea and said it has helped with her longevity.
tags – 22 பிரதமர்கள் , சார்லோட் ஹ்யுஜஸ் , நீண்ட ஆயுள் , ரகசியம்
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Date: 24 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 6-45 AM Post No. 7131
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் 21-10-2019 நாளிதழில்
வெளியாகியுள்ள கட்டுரை
அனைத்து நலன்களையும் அருளும் ருத்ராட்ச ரகசியம்!
ச.நாகராஜன்
ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும்
பயன்கள்
உலகில் அனைத்து நலன்களையும்
பெறும் பல வழிகளில் ருத்ராட்சம் அணிவது மிகவும் முக்கியமான பயன் தரும் ஒரு வழியாகும்.
இதன் இரகசியங்களை அறிதல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
இறையருள் பெற ஏற்றது,
சகல தோஷங்களையும் போக்க வல்லது
பெரும் செல்வம் சேர்க்கச் செய்வது
ஆரோக்கியத்தையும் நல்ல புத்தியையும்
அருள்வது
சிறந்த ஞானம் ஏற்பட வழி வகுப்பது
நவ சக்திகள் நம்மிடம் உருவாக
வைப்பது
சுப காரியங்களைத் தடையின்றி
நிறைவேற்றி வைப்பது
காம தேவனின் அருள் சித்திப்பது
என இப்படி மனித வாழ்வில் ஒருவன் எதை எதைப் பெற விரும்புகிறானோ அதைப் பெற வைப்பது ருத்ராட்சமே. இதை அணிவது என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம் என்பது குறிப்பிடத் தகுந்தது.
புராண வரலாறு
ருத்ராட்சம் தோன்றியது பற்றி
நமது புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
தேவி பாகவதம் கூறும் வரலாறு
இது:
ஒரு காலத்தில் திரிபுரன் என்னும்
அசுரன் திருமால் பிரமன் உள்ளிட்ட அனைவராலும் ஜயிக்க முடியாதபடி இருந்து அனைவரையும்
துன்பப்படுத்தி வந்தான்.
அக்கினி போலச் சுடர் விட்டு
எரிப்பதாயும், சகல தேவ சொரூபமாயும் உள்ள அகோரம் என்னும் திவ்ய அஸ்திரத்தைப் பற்றி சிவபிரான்
பல்லாயிரம் வருடம் சிந்தித்திருந்து கண் விழித்தார். அவரது அஸ்திரத்தால் அசுரன் அழிந்தான்.
அப்போது அவரது மூன்று கண்களிலிலிருந்தும்
நீர்த்துளிகள் கீழே விழுந்தன. அதிலிருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாயின. அவரது ஆணையின்
பொருட்டு அந்த மரங்களிலிருந்து முப்பத்தெட்டு பேதமாயுள்ள ருத்ராட்சங்கள் தோன்றின. வலக்கண்ணாகிய
சூரிய நேத்திரத்திலிருந்து தோன்றிய பன்னிரெண்டு பேதங்கள் கபில நிறமாயின.
இடக்கண்ணாகிய சந்திர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினாறு பேதங்கள்
வெண்ணிறமாயின.
அக்னி நேத்திரத்திலிருந்து தோன்றிய
பத்து பேதங்கள் கறுப்பு நிறமாயின.
ருத்ராட்சம் என்றால் ருத்ரனின் கண்கள் எனப் பொருள். (அக்ஷம் – கண்கள்)
ருத்ராட்சம் கிடைக்கும் இடங்கள்
சிவ பிரானின் அருளால் இப்படித்
தோன்றிய அபூர்வமான ருத்ராட்ச மரங்கள் வடக்கே இமயமலைப் பகுதிகளிலும், நேபாளத்திலும்,
திபெத்திலும், மலேசியா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் நெடிது வளர்கின்றன. சுமார்
75 அடி உயரம் வரை இந்த மரங்கள் வளர்வது ஒரு அபூர்வக் காட்சி. ருத்ராட்ச மரங்களிலிலிருந்து
உருவாகும் ருத்ராட்சக் கொட்டைகள் பனாரஸ் உள்ளிட்ட இடங்களில் சுத்தமானதாகக் கிடைக்கின்றன.
ருத்ராட்ச மரத்தின் அறிவியல்
பெயர் எலாயோ கார்பஸ் கானிட்ரூஸ் (Elecocarpous Ganitrus )
என்பதாகும்.
இன்று உலகில் 38 வகை ருத்ராட்சங்களில்
21 வகைகள் கிடைக்கின்றன.
ருத்ராட்ச வகைகளும், அவை தரும்
பலன்களும்
ருத்ராட்ச பழங்கள் அல்லது விதைகள் சுத்தப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள துவாரம் வழியே நூலால் இணைக்கப்பட்டு மாலையாக்கி அணிவது சாதாரணமாக நடைமுறையில் உள்ள ஒரு மரபாகும். ருத்ராட்சங்களின் பகுதிகளை முகம் என்று அழைக்கிறோம்.
ஒரு முகத்திலிருந்து 21 முகம்
வரை உள்ள ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன என்ற போதிலும் சில வகைகள் கிடைப்பது அரிது.
ஒரு முகத்திலிருந்து 14 முகம்
வரை உள்ள ருத்ராட்சங்களை அணிவதால் ஏற்படும் அரிய பலன்களை ருத்ராட்ச ஜாபால உபநிடதம்
விளக்குகிறது.
சிவ புராணமும் தேவி பாகவதமும்
சில விளக்கங்களை அளிக்கின்றன.
அவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்:
ஒரு முகம் : இந்திரிய நலம் பெற்று
பர தத்துவத்தில் லயிப்பர்.
இது சிவ சொரூபம்.
இரண்டு முகம் : அர்த்த நாரீஸ்வர
சொரூபம். இதை அணிபவரிடம் அர்த்த நாரீஸ்வரரின் அருள் இருக்கும். புத்தி பூர்வமாகவும்
புத்தியற்று செய்ததுமான பாவங்கள் அனைத்தையும் போக்கும்.
மூன்று முகம் : மூன்று அக்னிகளின்
சொரூபம். இதை அணிந்தால் அக்னி தேவனின் அருள் கிடைக்கும். ஸ்த்ரீ ஹத்தியை ஒரு நொடியில்
போக்கும்.
நான்கு முகம் : பிரம்மாவின்
வடிவம். இதை அணிவதால் பிரம்ம பிரீதி ஏற்படும். நரனைக் கொன்ற பாவம் போக்கும்.
ஐந்து முகம் : பஞ்ச பிரம்ம சொரூபம்.
பிரம்மஹத்தி பாவத்தையும் போக்க வல்லது.
ஆறு முகம் : முருகனை அதி தேவதையாகக்
கொண்டது. இதை அணிவதால் பெரும் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும். நல்ல புத்தி,
சிறந்த ஞானம், சம்பத்து, தூய்மை ஆகியவற்றிற்கு இடமானது. புத்திமான் இதை அணிய வேண்டும்.
விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரிவர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஏழு முகம் : சப்த மாதாக்களை
அதி தெய்வமாகக் கொண்டது. இதைத் தரிப்பதால் செல்வ வளம், உடல் நலம் சிறந்த ஞானம் ஏற்படும்.
எட்டு முகம் : எட்டு மாத்ருகா
தேவிகளின் உறைவிடம். இதை அணிபவர்கள் ஸத்தியவாதிகளாவர். அஷ்ட மாதாக்களின் அருளையும்
அஷ்ட வசுக்களின் பிரியத்தையும் கங்காதேவியின் அருளையும் பெறுவர்.
நவ முகம் : நவ சக்திகளின் உறைவிடம்.
இதை அணிவதால் நவ சக்திகளின் அருள் ஏற்படும்.
தச முகம் : யமனை அதி தேவதையாகக்
கொண்டது. இதை அணிவதால் நவ கிரக தசைகளின் சாந்தி ஏற்படும்.
பதினொரு முகம் : ஏகாதச ருத்ரர்களை
அதி தேவதையாகக் கொண்டது. எப்போதும் சௌபாக்கியத்தை வளர்க்கும்.
பன்னிரெண்டு முகம் : மஹா விஷ்ணு
சொரூபம். 12 ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.
பதிமூன்று முகம் : விரும்பிய
சுப சித்திகளை அருள்வது. இதை அணிவதால் காம தேவனின் அருள் ஏற்படும்.
பதினான்கு முகம் : ருத்ர நேத்திரத்திலிருந்து தோன்றியது. எல்லா வியாதிகளையும் போக்கி எப்போதும் ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும்.
நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்ச வகைகள்
இனி 27 நட்சத்திரங்களுக்கான
அதி தேவதையையும் அணிய வேண்டிய ருத்ராட்சத்தையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்தப் பட்டியல் வருமாறு:-
நட்சத்திரம் அதி தேவதை அணிய
வேண்டிய ருத்ராட்சம்
அசுவனி கேது நவமுகம்
பரணி சுக்ரன் ஷண்முகம்
கார்த்திகை சூர்யன் ஏக முகம், த்வாதச முகம்
ரோஹிணி சந்திரன் இரண்டு முகம்
மிருகசீரிஷம் செவ்வாய்
மூன்று முகம்
திருவாதிரை ராகு
எட்டு முகம்
புனர்பூசம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
பூசம் சனி சப்த முகம்
ஆயில்யம் புதன் நான்கு முகம்
மகம் கேது நவ முகம்
பூரம் சுக்ரன் ஷண்முகம்
உத்தரம் சூர்யன் ஏக முகம், த்வாதச முகம்
ஹஸ்தம் சந்திரன் இரண்டு முகம்
சித்திரை செவ்வாய் மூன்று முகம்
சுவாதி ராகு எட்டு முகம்
விசாகம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
அனுஷம் சனி சப்த முகம்
கேட்டை புதன் நான்கு முகம்
மூலம் கேது நவ முகம்
பூராடம் சுக்ரன் ஷண்முகம்
உத்தராடம் சூரியன் ஏக முகம், த்வாதச முகம்
திருவோணம் சந்திரன் இரண்டு முகம்
அவிட்டம் செவ்வாய் மூன்று முகம்
சதயம் ராகு எட்டு முகம்
பூரட்டாதி ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
உத்தரட்டாதி சனி சப்த முகம்
ரேவதி புதன் சதுர் முகம்
ஜன்மராசிக்கு உரிய ருத்ராட்சங்கள்
ஜன்ம ராசியை வைத்தும் ருத்ராட்ச
வகைகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். அந்தப் பட்டியல் வருமாறு :
ஜன்ம ராசி ராசி அதிபதி அணிய வேண்டிய ருத்ராட்சம்
மேஷம், விருச்சிகம் செவ்வாய் மூன்று முகம்
ரிஷபம், துலாம் சுக்ரன் ஷண்முகம்
மிதுனம், கன்னி புதன் நான்கு முகம்
கடகம் சந்திரன் இரண்டு முகம்
சிம்மம் சூரியன் ஏகமுகம் அல்லது த்வாதச முகம்
தனுசு, மீனம் ப்ருஹஸ்பதி ஐந்து முகம்
மகரம், கும்பம் சனி சப்த முகம்
ருத்ராட்சங்களை எப்படி அணிவது
ருத்ராட்சங்களை அதற்குரிய பட்டு
நூலில் இணைத்து அணிவது மரபு. பித்தளையிலும்,
வெள்ளியிலும், தங்கத்திலும் இணைத்து அணிவது அவரவர் வசதியைப் பொறுத்தது.
முதலில் அணியும் போது ருத்ராட்சங்களை
கங்கை ஜலம் அல்லது பசும்பாலில் அல்லது கோமூத்திரத்தில் நனைத்து அணிதல் வேண்டும்.
சுத்தமான நிலையில் அணிவது நல்ல பயனைத் தரும்.
புஷ்ய நட்சத்திரமும் வியாழக்கிழமையும்
கூடிய நாளில் இதை அணிந்தால் அதிகப் பலனைப் பெறலாம் என அற நூல்கள் கூறுகின்றன. (வருடத்திற்கு
இந்த அமைப்பு இரு தடவை வரலாம்)
பெண்களும் ருத்ராட்சத்தை அணியலாம்.
சிவ புராணத்தில் சிவன் பார்வதியிடம் , “அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும்,பெண்களும்
இதை அணியலாம்” என்று கூறி அருள்கிறார் (சிவ
புராணம் அத்தியாயம் 25, சுலோகம் 47)
எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது
நல்ல விஷயம் தெரிந்த, உங்கள்
நலனில் அக்கறையுள்ள நண்பர் அல்லது நிபுணர் மூலம் வாங்குவதே சிறந்தது.
ஏக முகம் கிடைப்பது அரிது. பஞ்ச
முகம் சுலபமாகக் கிடைக்கும்.
அரிதாகக் கிடைக்கும் ஏக முகம்
லட்ச ரூபாய் என்று சொல்லும் போது பஞ்ச முகம் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்குக் கூடக்
கிடைக்கும். சில ருத்ராட்சங்களின் விலை இருபது லட்சம் என்று சொல்லும் போது மலைக்க வேண்டி
இருக்கும்.
108 மணிகள் அல்லது 54 மணிகளைச் சேர்த்து மாலையாக அணிவது பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்கும் மரபாகும்.
எப்படி சோதிப்பது?
ருத்ராட்சம் வாங்குவதில் சுலபமாக
ஏமாற்றப்படலாம்.
ஆகவே நல்ல ருத்ராட்சமா எனச்
சோதித்து உறுதியான பின்னரே வாங்கி அணிய வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.
ருத்ராட்சம் நல்ல தரமானதா என்பதை
எப்படி அறிவது?
முதலில் பார்வையால் சோதனையிட
வேண்டும். ருத்ராட்சம் அனைத்தும் ஒரே போல ஒரு வித வேறுபாடுமின்றி இருந்தால் அது மோல்டிங்
எனப்படும் அச்சில் வார்க்கப்பட்ட செயற்கை மணிகள்- சிந்தடிக் – என்பதைச் சுலபமாகக் கண்டு
பிடித்து விடலாம். இயற்கை ருத்ராட்சங்கள் நிச்சயம் சிறிது வேறுபாட்டுடன் துளைகளுடன்
இருக்கும்.
அடுத்து அதன் ஸ்பெஸிபிக் கிராவிடி
எனப்படும் அடர்த்தி எண் அல்லது ஒப்படர்த்தி 1.1 முதல் 1.6 வரை இருக்கலாம்.
தாமிரக் காசுகளின் இடையே மிகவும்
தரமான ருத்ராட்ச மணியை வைத்தால் அது சுழலும்.
இன்னும் ஒரு எளிய வழி – ருத்ராட்சத்தை நீரில் போட்டால் நல்ல ருத்ராட்சம் மூழ்கும். போலிகள் மிதக்கும்.
அறிவியல் வியக்கும் ருத்ராட்சம்
ஆயுர்வேதத்தில் மூட்டுவலி உள்ளிட்ட
பல வியாதிகளுக்கு ருத்ராட்சப் பயன்பாடு அறிவுறுத்தப்படுகிறது. வல்லார் ஒருவர் வழியே
இதைக் கேட்டு அறியலாம்.
காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
சுபாஷ் ராய் என்பவர் ருத்ராட்சத்தை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
நவீன சாதனங்களை வைத்து ஆராய்ந்ததில் அவர் ருத்ராட்ச
மணிகளின் பல அபூர்வ உண்மைகளைக் கண்டு பிரமித்தார். ருத்ராட்சம் உடலில் படும் போது டை
எலக்ட்ரிக் பொருளாகப் பயன்பட்டு வெவ்வேறு முகங்கள்
உடைய ருத்ராட்ச மணிகள் வெவ்வேறு கபாசிடர்களாக இயங்கிப் பல்வேறு பயன்களைத் தருவதை அவர்
கண்டார்; உலகிற்கு அறிவித்தார்.
ஆக அறிவியலும் வியக்கும் மணி
ருத்ராட்ச மணி.
மணிகளிலேயே சிறந்த மணி ருத்ராட்ச
மணி என நமது சாஸ்திரங்கள் உரத்த குரலில் அறிவிக்கின்றன.
Date: 27 JANUARY 2019 GMT Time uploaded in London –10-47 am Post No. 5994 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
((தமிழ்த் திருடர்களுக்குஎச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்குகூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))
மூன்று பொம்மை கதை
விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.
Masks sold in Bangalore; newspaper picture
மறு நாள் எல்லோரும் ராஜ சபையில் இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்
வேண்டினான்.
கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்
தம்பி கையில் கம்பி வந்தது.
முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.
யாரும் பார்க்காத துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.
இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்
இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்; எங்கே கம்பியின் மறு புறம் என்று வியந்தனர்.
தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.
இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:
முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.
இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.
மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.
அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.
இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.
இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.
XXXX
சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!
மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்
மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்
பொருள்
உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.
சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7
இது நல்ல புத்திமதி; ஏன்?
1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்
2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்
3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்
ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.
பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.
விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-
குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்
மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்
அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்
ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே
பொருள்
ஆசிரியர் செய்த உபதேசம்,
ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,
தான் எவ்வளவு நியாயவான்,
எவ்வளவு படித்தவன்,
எவ்வளவு தருமம் செய்தனன்,
என்ன வயது ஆகியவற்றையும்
பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.
தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,
தனது பலம்,
பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;
அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.
திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-
அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076
பொருள்
சிலர், தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்; அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.
xxx
பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:
பெருமலை நாட! பிறரறியலாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை
நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று
பொருள்
பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.
இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-
நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட
துயவாதொழிவார் ஒருவருமில்லை
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க் குரையார் மறை
பொருள்
மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்
TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.
நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!
“அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்
கவசத்தை அறைக அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க எனக்கிளந்து
மரீசி தனது இருக்கையுற்றான்”
என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.
புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.
ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.
பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.
மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.
பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated) மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.
ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.
மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா
ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.
ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது. அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.
ஏன் இந்த ரஹசியம்?
கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!
Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)
Pictures are taken from different sources such as Wikipedia, Face book, google for non commercial use; thanks.
contact: swami_48@yahoo.com
எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
ச.நாகராஜன்
108இன் மகிமை
பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன! உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன!
வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் தான்!
நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108.
புத்தமதம் போற்றும் 108
புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும் மகிமையும் தரப்படுகின்றன. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.
புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பக்கத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லட்சணங்கள் இருப்பதாக புத்த மத நூல்கள் கூறுகின்றன.
புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்தில் புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து (Kanjur எனப்படுகிறது) அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் 108 என்ற எண் இறைவனைக் குறிக்கிறது. சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகிக்கப்படுகிறது.
பௌத்தர்களும் இந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்
இந்த மாலையை சு-சு (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.
ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குண நலன்கள் முறையே 12, 8, 36,25,27 என்று குறிக்கப்பட்டு மொத்தம் 108 ஆகிறது.
இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப் போனால் பெரும் நூலாக ஆகி விடும்! அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக்கூடாது?
நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் இந்த 108 என்ற அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!
வானவியல் காரணம்
சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவைப் போல 108 மடங்கு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளூடே சஞ்சரிக்கின்றன.பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கி வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையா இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.
ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800. இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!
ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளையும் – பகல் இரவு 10800 பகுதிகளையும் -உடையதாக இருக்கிறது. ஆகவே இந்த 108 என்ற எண்ணிக்கை காலம் மற்றும் வெளியை ( Time and Space ) இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது!
ஜீவனும் பரமனும்
ராமகிருஷ்ண ம்டத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பை எடுத்துக் காட்டுகிறார்.
108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை வராஹ உபநிடதத்தை மேற்கோள் காட்டி அவர் விளக்குகிறார்.ஒவ்வொருவர் உடலும் அவரவர் விரலின் பருமனால் (கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது) சரியாக 96 ம்டங்கு இருக்கிறது!
பரம்பொருள் என்னும் பரமாத்மன், ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத்தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது. அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது.
ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மாவுடன் ஒன்று படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!
இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும். சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.
பாபாவின் விளக்கம்
ஸ்ரீ சத்ய சாயி பாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லி என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.
மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் ‘ஸோஹம்’ (நான் அவரே) என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு. பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது. ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது.
அதோடு மட்டுமல்ல. ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத் தொகை) ஒன்பதாக்வே இருக்கிறது!
9 x 8 = 72; 7+2=9
9 x 7 = 63; 6+3= 9
இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் (அதாவது இணைத்தாலும் ) அது கடவுளாகவே ஆகிறது!
ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது.
2 x 8 = 16; 1=6=7 (எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது)
3 x 8 = 24; 2+4 = 6;
4 x 8 = 32; 3+2 = 5
இம்மாதிரி மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான் மாயையின் சின்னம்!
தேவர்கள் அமிரதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த காலம் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! (10478 நாட்கள் 12 மணி 18 நிமிடம்)
ஸ்ரீ யந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54. இவை ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது 108 (2 x 54 = 108) ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளைத் தருகிறது. உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான். 27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், வானத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்பதுத்தி வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது
.கணிதம் காட்டும் மெய்ப்பொருள்
கணித இயலில் 108 ஒரு அபூர்வ எண்!
ஒன்றின் ஒரு ம்டங்கும், இரண்டின் இரு மடங்கும், மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 ( 1x1x2xx2x3x3x3 = 1 x4 x27 = 108)
இதில் ஒன்று ஒரு பரிமாண உன்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மையையும் மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்!
இப்படி 108இன் மகிமையை உபநிடங்களும் வான்வியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!
உணர்வதே உய்வதற்கான வழி
‘கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன’ என்று கேட்டு ஸ்ரீ சத்ய் சாயி பாபா, ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெற முடியாது’ என்கிறார்.
ஆகவே 108ன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது. 108 முறையிலான ஜபமாலை உபயோகம், திவ தேச தரிசனம், சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான வழி!
26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …
“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …
29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …
சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930). Written by S NAGARAJAN. Date: 22 May 2017. Time uploaded in London:- 7-18 am. Post No.3930. Pictures are taken from different sources; thanks. contact: swami_48@yahoo.com.
கம்பன் போகிற போக்கில் சில புதுத் தகவல்களை உதிர்த்துவிட்டுப் போவான்; அத்தனையும் முத்துக்கள்; வைரங்கள்; அவைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதும், படித்து சுவைத்து ருசிப்பதும் நம் கைகளில் உள்ளது.
அனுமனிடம், அவன் தந்தையான வாயு பகவான் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்லுகிறான். அதை அனுமன், சுக்ரீவனிடம் சொல்லி ராமனை நம்புங்கள் என்கிறான். அப்படியும் நம்ப முடியாவிட்டால் ராமனுக்கு ஒரு டெஸ்ட் TEST (குட்டித் தேர்வு) வைக்கலாம் என்கிறான். ஏழு மராமரங்களில் ஒன்றை அவனுடைய அம்புகளால் துளைக்கச் செய்வோம் என்கிறான்.
இதோ வாயு பகவான் சொன்ன ரகசியம்:-
என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவர்க்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்
பொருள்:-
தலைவா (சுக்ரீவா)! என்னைப் பெற்ற வாயுதேவன், இந்த உலகங்களை எல்லாம் படைத்த பிரம்மாவை தனது கொப்பூழிலிருந்து தோற்றுவித்த விஷ்ணுவுக்குப் பணி செய்; அதுதான் சிறந்த தவம்; அப்படி நீ செய்தால் எனக்கும் நல்ல நிலை கிட்டும் என்றான். இந்த இராமந்தான் அந்தத் திருமால்/விஷ்ணு
கடவுள் என்பது எப்படித் தெரியும்?
உடனே அனுமன் கேட்டான்; அப்பா (வாயுதேவனே); விஷ்ணுவை நான் எப்படிக் கண்டு பிடிப்பது; எனக்குத் தெரியாதே; ஏதேனும் அடையாளங்கள் சொல்லுங்கள்;
(அனுமன் மனதில் எழுந்த சந்தேகங்கள்: – அவர் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு வருவார்? கைகளில் பை (suitcase) கொண்டுவருவாரா? கண்ணாடி (Spectacles) போட்டிருப்பாரா? மீசை வைத்த ஆளா? என்ன உயரம்? குட்டையா? நெட்டையா?)
வாயுதேவன் சொன்னான்:
யாராவது கஷ்டப்பாட்டால் ஓடி வந்து உதவி செய்வான்; இது முதல் அடையாளம்.
அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உன் உடலில் அன்பு சுரக்கும்; அளக்கமுடியாத காதல் உருவாகும். இது இரண்டாவது அடையாளம்
இதோ கம்பன் சொற்கள்:-
துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் இயம்ப
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ
பொருள்:-
நீ கூறிய அவனை அறிதற்கு என்ன வழி? – என்று நான் தந்தையான வாயுதேவனிடம் கேட்டேன். அதற்கு அவன், “அப் பெரியோன் எல்லார்க்கும் துன்பம் உண்டாகும் போது உடனே தோன்றுவான். மேலும் அவனைக் கண்ட அளவில் உனக்கு மனதில் அன்பு உண்டாகுவதே சான்றாகும்”- என்று கூறினான். அவன் சொன்ன படியே இந்த இராம பிரானைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் எலும்பும் காணாதவாறு உருகிவிட்டது. இதற்கு மேலும் சந்தேகம் வருமா?
ஒருவருக்குத் துன்பம் வந்தால் கடவுளை நாடுவதை கிருஷ்ணனும் பகவத் கீதையில் சொல்கிறான். அதிலிருந்து துன்பப் பட்டோருக்கு கடவுள் உதவுகிறார் என்பது தெளிவு.
கண்ணன் சொல்லுகிறான்:-
1.துன்பம் அடைந்தவர்கள்
2.ஞானத்தைத் தேடுவோர்
3.செல்வத்தை விரும்புவோர்
4.ஏற்கனவே ஞானியானவன்
ஆகிய நாலு வகையான மனிதர்கள் என்னை வழிபடுகின்றனர் (பகவத் கீதை 7-16)
பாண்டவர்களின் தாயான குந்தீ சொல்கிறாள்:-
துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் எனக்கு அடிக்கடி துன்பம் வரட்டும்; இதுவே என் பிரார்த்தனை– (பாகவதம்)
விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் இறுதியில் “சங்கீத நாராயண
சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தம் கேட்ட மாத்திரத்தில் துன்பம் பறந்தோடிப் போய்விடும்; சுகம் தழைக்கும்.
You must be logged in to post a comment.