
Written by S NAGARAJAN
Date: 25 May 2017
Time uploaded in London:- 5-38 am
Post No.3939
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ஜோதிடமே துணையாகும்
மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
முதல் 5 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும்
1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம் – 6
ச.நாகராஜன்
- சில முக்கிய குறிப்புகள்
விதி விளக்கம் என்ற நீண்ட நூலில் சில முக்கியமான சுவையான பகுதிகளை மட்டும் பார்த்தோம். ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய அடிப்படையான விஷயங்கள் இவை.
ஜோதிடத்தில் புலமை பெற்றவர்களுக்காக திரு முனிசாமி செட்டி நிறைய குறிப்புகளை நூல் முழுவதும் தருகிறார்.
அவற்றை இந்தத் தொடரில் தருவது நமது நோக்கமல்ல.
ஜோதிடத்தில் மிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை – இலவசமாக- பெற விரும்பினால் திரு சுவாமிநாதன், www.tamilandvedas.com அவர்களை அணுகவும். மின்னணு முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூலான இது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். (நூலின் பக்கங்கள் 112)
பொதுவான சில முக்கிய குறிப்புகளைத் தந்து இந்தத் தொடரை இத்துடன் முடிக்கிறோம்.
- நம் முன்னோர்கள் சாஸ்திரங்களில் வள்ர்பிறைச் சந்திரன் யோகத்தை வளர்ப்பிக்கிறான் என்றும் தேய்பிறைச் சந்திரன் யோகத்தை வர வர மட்டுப்படுத்துகிறான் என்றும் போதிக்கின்றார்கள். ஆனால் அனுபவரீதியில் பார்க்கும் போது தேய்பிறையில் கூட அரசன் ஜனிக்கிறான், வியாபாரிகளும், பணக்காரர்களும், ம்ஹா பண்டிதர்களும் கூட தேய்பிறையில் பிறந்து நல்ல சுக போக பாக்கியத்தை அனுபவிக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.ம்ஹாத்மா காந்தியும் கூட தேய்பிறையில் பிற்ந்திருப்பதாகத்தான் தெரிகின்றது. ஆகவே கெட்டபலனைக் கொடுக்க தேய்பிறை ஜனனம், சனீஸ்வரர் என்று பொதுவாகக் கூறுவது தவறு. நல்ல பலனைக்கொடுக்க குரு மற்றும் சுக்கிர பகவான் என்பதும் வளர் பிறை ஜனனம் என்று பொதுவாகக் கூறுவதும் தவ்று.
- நம் வாழ்க்கையில் நமக்கு இய்ற்கையாக அமைந்துள்ள கெட்ட பலனிலிருந்து அதை நீக்க சில அனுஷ்டானங்களைச் செய்து நமது இஷ்டம் பூர்த்தி பெறச் செய்யலாம்.
- சிருஷ்டியின் அற்புதம் இது தான் :- ஸ்தூலமாக இது கெட்டதென்றும், இது தான் ஸ்தூலமாக நல்லதென்றும் கிடையவே கிடையாது. நாம், நம் புத்திக்கும் வீரியத்திற்கும், நம் நிலைமைக்கும், நமக்குள்ள துணைக்கருவி முதலிய உப பலன்களால், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற மட்டும் முயற்சி செய்து அபீஷ்ட பிராப்தி (நினைத்ததை அடைதல்) அடைய மார்க்கமுண்டு. இதுவே சிருஷ்டியின் உண்மையான தத்துவம். இதுவே விதி விளக்கத்தின் கருத்து.

- யோகத்தை எடுத்துக் கொண்டால், வராஹமிஹிரர் பிருஹத்ஜாதகத்தில் யோகத்தினால் ரோக நிவாரணம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் எந்த யோகத்தில் பிறந்தவனுக்கு எந்த யோக அனுஷ்டானத்தினால் இவ்வித பலன் கிடைக்கும் என்று சொல்லவில்லை.
- கரணத்தை எடுத்துக் கொள்வோம். கரணத்தினால் காரிய சித்தி உண்டாகுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விவரமாக இந்த ஜாதகன் இந்த வித கரணத்தில் இந்த விதமாக அனுஷ்டானத்தில் ஈடுபடவேண்டுமென்றும் அப்படிப்பட்ட அனுஷ்டானத்தினால் காரிய சித்தி உண்டாகும் என்றும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இது ஆய்வுக்குரிய விஷயம்.
- 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் ஜனன காலத்திலிருந்தே மிகக் கொடிய பலனைத் தரும். அப்படிப்பட்ட நட்சத்திரத்தில் யோகவான் பிறந்தாலும் ஆயுளின் பிற்பாகத்தில் கஷ்டப்பட்டே தீர வேண்டும். அவை கீழ்வருமாறு. இது பொதுவான விதி:
- அசுவதி 2) மகம் 3) மூலம் 4) கேட்டை – இந்த நான்கு நட்சத்திரங்களுடன் சந்திரனுக்கு க்ஷீண கதியும் உண்டானால் பலன் எல்லா விதத்திலும் கெடுதல்.
- தென்னிந்தியாவில், அநேகமாக, புராதன கல் சிலைகளில், ஸ்தம்பங்களில், செப்பேடு புராதன செப்புத்தகடு சாஸனங்களில், அநேகமாய் திதி, யோகம், நட்சத்திரங்கள் இவைகளைக் குறிப்பாகக் காட்டி இருக்கின்றன. தவிர தேதியும் கிழமையும், அநேகமாக கி.பி. நானூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் கிடையாது என்பது காலஞ்சென்ற D. ந சுவாமிக்கண்ணு பிள்ளை என்னும் வான சாஸ்திர நிபுணரின் கருத்து. முற்காலத்தில் ஆண்டு, திதி, யோகம் இவற்றைக் குறிப்பிட்டே ஒரு விசேஷ வர்த்தமானங்களை எக்காலத்தும் பிரபலமாகும் படி செய்வது வழக்கம். மதுரை தேவஸ்தானத்திலும், ராமேஸ்வர தேவஸ்தானத்திலும் இன்னும் வடக்கே அநேக இடங்களிலும் உள்ள சிலாசாசனங்களளக் கவனித்தால் இது விஷயம் தெளிவாகும். ஆகவே நம் முன்னோர்களுக்கு திதியும், யோகமும் முக்கியமானவையே ஒழிய தேதி, வாரம் அவ்வளவு முக்கியமானவை அல்ல.

இந்தச் சிறிய நூல் ஒரு ஜாதகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதில் சில முக்கியமான வித்தியாசமான கருத்துக்களை முன் வைக்கிறது.
இதை அனுபவத்தில் பரீசிலித்துப் பார்த்து உண்மையைக் கண்டறியுங்கள் என்றும் சொல்கிறது.
ஜோதிட ஆர்வலர்கள் இதைத் தங்கள் அனுபவம் மூலமாகச் சோதித்து உண்மையைத் தெளிந்து அறியலாம்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்ட இந்த நூல் கால வெள்ளத்தில அழிந்து படாமல் இருக்கவே இந்தச் சிறிய தொடர் வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி. வணக்கம்
**** தொடர் முற்றும்

























