Written by London Swaminathan
Post No. 15,675
Date uploaded in London –30 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒப்பிலியப்பன் கோயில்
திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோயில்
ஊர் -திருநாகேஸ்வரம்(கும்பகோணம் நகருக்கு மிக அருகில் உள்ள ஊர்)
மாவட்டம்- தஞ்சாவூர்
மூலவர் பெயர் -ஒப்பிலியப்பன்
தாயார் / அம்மன் பெயர்- பூமிதேவி
தலமரம்- வில்வம்
திருக்குளம் / ஆறு -அஹோராத்ர புஷ்கரணி, ஆர்த்தி புஷ்கரிணி, சார்ங்க தீர்த்தம், சூர்ய தீர்த்தம், இந்திர தீர்த்தம்
ஆகமம்- ஸ்ரீவைகானஸம்
திருவிழாக்கள்- ஆடி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி பிரம்மோற்சவம், ஸ்ரீராமநவமி, திருக்கல்யாண உற்சவம்
காலம் — கி.பி .8 to 16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
108- திவ்ய தேசங்களில் ஒன்று. பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்.
திருப்பதி போக இயலாதவர்கள் வேங்கடேசனுக்குச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை இங்கேயும் செலுத்தலாம். திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையனார் என்கிற ஐதீகம். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம்.
சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்துக் குறி சொல்லுவது இங்குவிசேஷம்) .
திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. நம்மாழ்வார் இருந்த இடத்திலேயே இருக்க பல ஸ்தலங்களில் இருக்கும் பெருமாள்கள் அவருக்கு காட்சி கொடுக்க அவர் ஆனந்தித்து பாடியதாக ஐதீஹம்.
இத்தலத்துப் பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாரை அணைந்து ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார். அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இவ்வைந்து பெயரிட்டு,
“என்னப்ப னெக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாயப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பணென்ப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப் பாரில்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே“ –
என்பது திருவாய்மொழி 6-3-9 நம்மாழ்வாரின் பாசுரம்.
**
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய், வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய், பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை, செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.
**
இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரம், திருமங்கையாழ்வார் 34 பாக்கள், பொய்கை யாழ்வார்-1, பேயாழ்வார்-2. மங்களாசாசனம். பிள்ளைப் பெருமாளய்யங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
**
இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே சம்ஸ்க்ருத நூல்கள் கூறுகின்றன. வைகுண்டத்தில் ஓடக்கூடிய விரஜா நதியே நாட்டாரு (தட்சிண கங்கை) என்ற பெயரில் இங்கு ஓடுவதாக ஐதீஹம்.
மார்க்கண்டேயருக்கு காட்சி கொடுத்த இத்தலம், திருமணத் தடைகளை நீக்கும் முதன்மைத் தலமாக நம்பப்படுகிறது.
**
பெயர்க்காரணம்: ‘தன்னொப்பாரில்லப்பன்’ (தன்னைவிட வேறு எவரும் ஒப்பில்லாதவர்) என்பது மருவி ‘ஒப்பிலியப்பன்’ ஆனது. உப்பு இல்லா உணவை ஏற்பதால் ‘உப்பிலியப்பன்’ என்றும் அழைப்பர்.
தல அமைப்பு: 5 நிலை ராஜகோபுரத்தைக் கொண்ட இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5-7 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரத்தில் உள்ளது.
மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும்.
1. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல்-வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண்ணகர்
2. விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு
மேலே இருக்கும் இரண்டு பாசுரங்களும் பேயாழ்வார் அருளியது.

–Subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-9; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,ஒப்பிலியப்பன் கோயில்