DEVI- GODDESS WORSHIP IN HARAPPA, MOHANJADARO சிந்து சமவெளியில் தேவி வழிபாடு
Written by London Swaminathan
Post No. 15,628
Date uploaded in London –17 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
HUMAN SACRIFICE IN INDUS VALLEY; சிந்து சமவெளியில் ஒரு தெய்வத்துக்கு நர பலி; கீழே சப்த மாதர்கள்
கடவுளைக்க கல்லிலோ, உலோகத்திலோ, படத்திலோ ஓவியத்திலோ உருவமாக வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது ; வேதத்தில் உருவங்கள் வருணிக்கப்பட்டாலும் சிந்து சமவெளியில்தான் ஆதாரங்கள் கிடைத்தன . ஒருவர் தேவியின் முன்னால் குனிந்து வணங்கி ஒரு (மனிதனின்) தலையை காணிக்கையாக சமர்ப்பிப்பதைக் காண்கிறோம். கீழே சப்த மாதர்கள் (ஏழு கன்னிமார் ) இருப்பதையும் காண்கிறோம். சிவலிங்கங்கள் கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரர்கள் முதல் நாளிலேயே சொன்ன தெல்லாம் தவறு என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள் சொல்லிவிட்டனர் ; அவைகள் லிங்கம் அல்ல யோனிகள் அல்ல என்றும் தாயக்கட்டடத்தில் வைத்து விளையாடும் காய்கள் GAMESMEN என்றும் சொல்லிவிட்டார்கள் ; பிராணிகள் சூழ்ந்த உருவத்தை பசுபதி முத்திரை என்று வெள்ளைக்காரர்கள் சொன்னதை மறுக்கும் விதத்தில் அயர்லாந்திலும் பஹ்ரைன் தீவிலும் பிராணிகள் சூழ்ந்து நிற்கும் தெய்வங்களின் முத்திரைகள் கிடைத்தன ; ஆகையால் அது பசுபதி அல்ல ; பொதுவாக இறைவன் என்ற கருத்தும் உருவானது . ஹரப்பா, மொஹஞ்சசதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தேவியர் சிலைகள் பாகிஸ்தான் மியூசியங்களில் உள்ளன. எது எப்படியாகிலும் யஜுர் வேதத்தில் சிவ பெருமானை வருணித்ததை அப்படியே புறநானூற்றிலும் தேவார திருவாசகத்திலும் காண்பதோடு நில்லாமல் சோழர்காலச் சிற்பங்களிலும் காண்கிறோம்; கோயில் வழிபாட்டு விக்கிரககங்களிலும் காண்கிறோம். ரிக்வேதத்திலேயே சிவ பெருமானின் உருவம் வருணிக்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் .
DEVI WOSHIP IN INDUS VALLEY
வேத காலத்தில் துவங்கி சிந்து சமவெளியில் வணங்கி இன்று பாரத நாடு முழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள இந்த உருவ வழிபாடு இன்றுவரை இந்து மத்தில் மட்டுமே உள்ளது .ஒரு காலத்தில் இந்த உருவ வழிபாடு உலகம் முழுதும் இருந்ததை முகமது நபிக்கும் முன்னதாக உள்ள காபா (மெக்கா) உருவத்திலும் கிறிஸ்தவ மத கன்னிமேரி சிலைகளிலும் காணலாம் ; ஆயினும் அவர்கள் உருவ வழிபாட்டினைப் போற்றுவதில்லை .
இதற்குப்பின்னர் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கடவுள் உருவங்களை பெருமளவில் உற்பத்தி செய்து விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு சாணக்கியர் யோஜனை தந்ததையும் காண்கிறோம் .
சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தெளிவான குறிப்பு ஒன்று கிடைக்கிறது ; ஒரு பட்டிக்காட்டான் திருப்பரங்குன்றத்துக்கு வந்தபோது ஒரு சமய ஓவியத்தில் பூனை இருப்பது வினோதமாக இருக்கிறதே என்று கிராமத்தானின் மனைவி கேட்கவே அவளது கணவன் “அடியே! உனக்கு இது தெரியாதா ? அஹல்யாவை மானபங்கப்படுத்திவிட்டு இந்திரன் பூனை போல சென்றானே” என்கிறான். அங்கே இந்திரனின் புராணக்கதை சித்தரிக்கப்பட்டது தெரிகிறது .
SO CALLED PASUPATI IN INDUS VALLEY
காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி காதல் தொகுப்பில் ராமாயண ஓவியம் வருகிறது; அண்ணன் மனைவி வீட்டில் தனியே இருக்கும் பொது தம்பியானவன் தவறான பார்வையில் அண்ணியைப் பார்த்தவுடன் அவள் ராமாயண ஓவியத்தைக் காட்டுகிறாள். “அதோபார் லட்சுமணன், அண்ணியின் (சீதையின்) கால்களை மட்டும் பார்த்த வண்ணம் நடக்கிறான்” என்று ; இந்த பிராகிருத நூல் சங்க காலத்தில் எழுந்ததே ; ஆனால் ஓவியம் இருந்த இடம்- ஆந்திரத்தில் கோதாவரி நதிக்கரை ஊரில்.
பதஞ்சலி முனிவர் , உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலான பாணினீயத்துக்கு உரை எழுதினார்; அதை மஹா பாஷ்யம் / பேருரை என்றே அழைப்பார்கள் . அதிலும் அர்த்த சாஸ்திரம் போல பல குறிப்புகள் கிடைக்கின்றன
2200 ஆண்டுகளுக்கு முன்னர் கருட ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டதை கரிகால் சோழன் யூப ஸ்தம்ப பாடலிலும் ககிரேக்க தூதன் மத்திய பிரதேச விதிஷா நகரில் நிறுவிய தூணிலும் காண்கிறோம்
புத்த மதத்தினர் கற்களில் உருவத்தை சமைக்கும் வரை இந்துக்கள் களிமண்ணையும் பட ஓவியங்களையும் மட்டுமே பயன்படுத்தினர் இதனால் புத்தரின் காலத்துக்கு முந்திய ஓவியங்களோ உருவங்களோ கிடைக்கவில்லை; குஷானர் வெளியிட்ட நாணயங்களில் இந்து தெய்வங்கள் உள்ளன; அதற்கு முன்னர் வடமேற்கு இந்திய கிரேக்க மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் கிருஷ்ணன் பலராமன் உருவங்கள் உள்ளன . இந்தப் பின்னணியில் பார்க்கையில் அடுத்து வந்த சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததை இல்லுறைத்தெய்வம் என்ற குறிப்புகளில் காண முடிகிறது.
குஷான மன்னர்களுக்கும் முன்னதாக யாதேயா வெளியிட்ட நாணயங்களில் முருகனின் ஆறுமுகங்களையும் ஆறு புள்ளிகளாக வடித்துள்ளனர் .
GHOSTS IN INDUS VALLEY SEALS
சங்க கால குறிப்புகளைக் காண்போம்:
நடுகல் வழிபாடும் உருவ வழிபாடே ; இதைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் நிறைய உள்ளன ; உலகம் முழுதும் நடுகற்கள் அல்லது இறந்தோரின் சின்னங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் பூத்தூவி வழிபட்ட செய்தி இல்லை ; தமிழ் நாட்டிலோ தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை அதுபற்றிய ஆகம விதிகளை பார்க்கிறோம்.
சேர்ன் செங்குட்டுவன் இந்த விதி முறைகளைப் பின்பற்றி புனித இமய மலையில் கல்லெடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினிக்கு / கண்ணகிக்கு சிலை எடுத்தையும் அது அந்த பத்தினி வழிபாடு இலங்கை முழுவதும் பரவியத்தையும் சிலப்பதிகாரத்திலும் இலங்கை நூல் குறிப்புகளிலும் காணலாம் .
நடுகல் வழிபாடு, பத்தினி வழிபாடுகள், காலப்போக்கில் அழிந்துவிட்டன; ஆனால் அந்தக் காலத்தில் இருந்த கோவில்களின் நீண்ட பட்டியலை சிலப்பதிகாரம் தருகிறது .அந்தக்கோயில்கள் இந்திரன் முதலான தேவர்களுக்கும் கூட எழுப்பப்பட்டன. கந்தழி வழிபாடு
BALARAMA, KRISHNA IN INDO-GREEK COINS
தொல்காப்பிய சூத்திரம்
“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்
(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).
மேலும் சிலர் கந்து என்பது கம்பம் போன்ற கல் என்றும் இதுவே சிவ லிங்க வழிபாடு ஆனதாகவும் கூறுகின்றனர் ; பிற்காலத்தில் கந்தழி என்று தெய்வீகப் பாடல்களில் இல்லாததால் இந்தச் சொல் மர்மமானதாவே இருக்கிறது.
SIVA ON KUSHANA COIN; SKANDA/MURUGA ON YAUDHEYA COIN
இல்லங்களில் உறையும் கடவுள் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த, பிரார்த்தனை அறையில் இருந்த , படங்களையோ களிமண் வடிவங்களையோ குறித்தாகக் கொள்ளலாம் . கல் கத்தா காளி /துர்கா பூஜையானாலும் சரி , மஹாராஷ்டிரா கணேஷ் சதுர்த்தி ஆனாலும் சரி, தமிழ் நாட்டு கிராம தேவதை கோவில்களானாலும் சரி மண்ணினால் உருவத்தைச் செய்து, வழிபாடு முடிந்தவுடன் ஆற்றில் கரைப்பதை இன்று வரை காண்கிறோம் . ஆகவே நிரந்தரமாக வழிபடுவதற்கு சுவர் ஓவியமும் விழாக்காலங்களில் வழிபடுவதற்கு களிமண் உருவங்களும் செய்யப்பட்டன எனலாம்; விஷ்ணுவின் ஓண விழா முதல் சிவனின் ஆதிரை விழா , கார்த்திகை தீப விழாக்குறிப்புகள்சங்க இலக்கியத்தில் இருப்பதால் உருவங்கள் இல்லாமல் இவை நடந்திராது .
TIGER GODDESS IN HARAPPA, MHANJADARAO IN PAKISTAN
இல்லத்து உறையும் தெய்வங்கள்
அணங்கு வழங்கும் அகல் அங்கண் என்ற மதுரைக்கு காஞ்சி 164 வரிக்கு இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் பொருள் கண்டுள்ளார் .
கோவிலில் உள்ள உருவங்களின் வீதி உலா என்று நான் கருதுகிறேன் ; இப்போது இதை நாம் சாமி/ பெருமாள்/ அம்மன் புறப்பாடு என்கிறோம் .
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேவிய,
மணம் புணர்ந்து ஓங்கிய , அணங்குடை நல் இல் – மதுரைக் காஞ்சி 577-578 வரிகளின் பொருள்
“வளம் மிக்க குடிப்பிறந்த செல்வரும் அவர் வழிச் சார்ந்த பிற செல்வர்களும் வாழும் இல்லங்கள் தெய்வங்களை உடையனவாக இருக்கின்றன” என்பதைக் காட்டுகிறது
இல்லத்தின் வாயில் நிலைகளிலும் தெய்வம் நிலைபெற்றிருப்பதாகக் கொண்டாடினர்.
“வீட்டின் வாயிலில் தெய்வம் உறைவதைக்குறிப்பிட்டு அதற்கு நெய், ஐயவி என்னும் வெண்கடுகு சமர்ப்பிக்கப்பட்டதையும் உரைகாரர் நச்சு. குறிப்பிடுகிறார்.
இன்றுவரை அரண்மனைக் கதவுகளில் , செட்டியார் வீட்டுக் கதவுகளில் கஜ லெட்சுமி உருவம் பொறித்திருப்பதைக் காணலாம் . மைசூர் அரண்மணிக் கதவுகளில் உள்ள கஜலட்சுமி உருவத்தைப் புகைப்படமும் எடுத்தேன் ; குபேரனின் நவ நிதிகளில் சங்கம் பதுமம் என்ற இரண்டை மட்டும் கதவில் பொறிக்கும் வழக்கமும் உள்ளது
மாலை நேரத்தில் இரும்புத் தகளிகளில் விளக்கேற்றி மலர் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை வரிகள்
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)
கருத்துரை
வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின. அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர்.
பெண் ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவளுடைய தோழி, “வா, மனையில் உறையும் தெய்வத்தை வணங்கி பலியையும் செலுத்துவோம் என்கிறாள்
செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். மகளே!
என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். அவர்கள் இப்போது தவிக்கின்றனர். நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன். அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை”..
***
உலகப்புகழ் பெற்ற இலக்கணமான பாணினீயத்துக்கு, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதிய பதஞ்சலி யானை குதிரை ஒட்டகம் போன்ற பொம்மைகளை பிரகிருதி என்றும் வழிபடக்கூடிய உருவங்களை அர்ச்சா என்றும் எழுதியுள்ளார் . இவைகளை புரோகிதர்கள் பயன்படுத்தினர் . அவர்கள் வீடு வீடாக இவைகளை எடுத்துச் சென்றோ கோவில் போன்ற ஒரே இடத்தில் வைத்தோ சம்பாத்தித்தனர்; வாழ்வூதியம் பெற்றனர் . இவை தவிர தனிப்பட்டவர் வழிபாட்டிலும் அர்ச்சா என்னும் உருவங்கள் இருந்தன. சிவன், ஸ்கந்த/ விசாகன் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார் .
சாணக்கியன் யோசனையின் பேரில் மெளரிய மன்னர்கள் வணிக ரீதியில் கடவுள் உருவங்களை செய்து, விற்று அரசாங்கத்துக்குப் பணம் ஈட்டித்தந்தனர் . ஆனால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தக் கடவுள் பொம்மைகளின் பெயர்களுடன் க என்னும் பின்னொட்டைச் சேர்த்தனர் ‘சிவக’. ‘விசாகாக’ .
PUNCH MARKED COINS
பாணினியின் , 6-3-26; 8-1-15 சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஸ்கந்த- விசாக ஜோடி மிகவும் வரவேற்றைப் பெற்றன என்கிறார். ஆக, முருகனின் இரண்டு உருவங்கள் ஜோடி ஜோடியாக விற்கப்பட்டது தெரிகிறது.
இன்னொரு சுவையான விஷயத்தையும் பதஞ்சலி தருகிறார் பாணினி சூத்திரம் 1-2-64 க்கு உரை எழுதுகையில் காஷ்யபரின் உருவங்களையும் மக்கள் வழிபட்டது தெரிகிறது ; வர்ணன், விஷ்ணு ஆகிய இருவருக்கும் காஷ்யபர் என்ற பெயர் உண்டு.
க்ஷத்ரியர்கள் கொட்டத்தை அடக்கிய பின்னர் பரசுராம அஸ்வமேத யாகம் செய்து, இந்த பூமியை காஷ்யபரிடம் கொடுத்தார் . இதனால் பூமாதேவிக்கு காஷ்யபி தேவி என்ற பெயரும் இருக்கிறது
தனபதி /வைஸ்ராவண /குபேர வழிபாடு, ராமர் /கேசவர், பலராமர்/ கிருஷ்ணர் வழிபாடும், பதஞ்சலி காலத்தில் நடந்தது
தெய்வம் தொடர்பான விழாக்களை மஹஸ், சம்சத் என்ற சொற்களால் பதஞ்சலி குறிப்பிடுகிறார் .இந்திரன் , கங்கா , ராம கேசவ , தனபதி (குபேரன்) விழாக்கள் கோவில்களில் நடந்த போது சங்கு, மிருதங்கம், பணவ வாத்தியங்கள் ஒலித்தன . இந்த விஷயம் தேவாரம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் வருகின்றது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக உருவ வழிபாடு இருந்ததற்கான இலக்கிய, தொல்பொருட் துறை சான்றுகள் நம்மிடம் உள்ளன; இந்து மதத்துக்கு சனாதன மதம் என்று பெயரிட்டது பொருத்தமே!
–SUBAHM—
TAGS-சங்க காலம், தமிழ் நாடு, உருவ வழிபாடு , ஹரப்பாவில் நரபலி , தேவி வழிபாடு , சிந்து சமவெளி நாகரீகம்
பழமுதிர்ச்சோலை மலை மிசை … பழமுதிர்ச்சோலை மலையின்மீது
மேவு பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.
* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
****
வாகனங்களின் கதை
முடுகு வீர சூர பத்மர் … வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான
சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின்
தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக … தலைகளில் உள்ள
மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,
ஆடு நிர்த்த மயில்வீரா … (துடிக் கூத்து) நடனம் ஆடிய
மயிலின் மீதமர்ந்த வீரனே,
முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் …
முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச் சொல்லும்போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.
கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு விட் ட செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.
என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்
காதில் பூணத் தக்கவற்றை விரலில் அணிபவரும்
இடுப்புக்குரியவற்றை கழுத்தில் அணிபவரும்
கழுத்துக்குரியவற்றை இடையில் அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?
இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்
, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது
அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது
XXXX
கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —
சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்தஅவிர்மணிக் கோவை ஆரம்
மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ
–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்
பொருள் :–
தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண் குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .
இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .
–Subham—
TAGS: திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள், Part 78, சீதை ஆபரணங்களை எறிந்த கதை, வாகனங்களின் கதை , ஆறுமுகம் என்பதன் பொருள் , PART 78, குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு 378
உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கமாக அமைவது ‘ஸுகேசன் என்ற அரக்கனின் உற்பத்தி’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய மஹரிஷியிடம் ஶ்ரீ ராமர் அரக்கர்களுக்கு மூல புருஷன் யார்?” என்று கேட்க அகஸ்தியர் அரக்கர்களின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.
அந்த அரக்கர்களின் வரலாற்றில் அவர் கூறியதாவது:
ஹேதி என்ற அரக்கன் வித்யுத்கேசன் என்ற புத்திரனைப் பெற்றான். வித்யுத்கேசனுக்கும் சந்த்யா என்பவளின் புத்திரியான ஸாலகடங்கடை என்பவளுக்கும் திருமணம் நடந்தது. அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். பெற்ற குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் கணவனுடன் அவள் காமத்தில் மூழ்கி விட்டாள்.
குழந்தை தானாகவே வாயில் விரலை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது.
அவ்வழியே சிவபிரானுடன் சென்று கொண்டிருந்த பார்வதி தேவி அழும் குழந்தையைப் பார்த்து இரக்கம் கொண்டாள்.
தம் ராக்ஷஸாத்மஜம் சக்ரே மாதுரேவ வய:சமம் | அமரம் சைவ தம் க்ருத்வா மஹாதேவோக்ஷரோவ்யய: ||
உத்தரகாண்டம் நான்காவது ஸர்க்கம், ஸ்லோக எண் 21
அக்ஷர: – நித்தியமானவரும்
அவ்யய: – பலன்களை அளிக்க வல்லவருமான
மஹாதேவ: ஏவ – ஶ்ரீ மஹாதேவரே
தம் – அந்த’
ராக்ஷஸாத்மஜம் – ராக்ஷஸி பெற்ற குழந்தையை
அமரம் க்ருத்வா – மரணமில்லாததாய்ச் செய்து
ச – அத்துடன்
தம் – அவனை
மாது: – தாயாருக்கு
வய: சமம் ஏவ – ஸமமான வயதுள்ளவனாகவும்
சக்ரே – அனுக்ரஹித்து அருளினார்
இது மட்டுமல்ல, பார்வதி தேவியின் பிரியத்திற்கு அந்தக் குழந்தை ஆளானதால் தேவிக்குப் பிரியமானதைச் செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணிய சிவபிரான் ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல ஒரு நகரத்தைத் தந்தருளினார். உமாதேவியாராலும் அரக்கர்களுக்குக் கருவின் உடனே தரித்தலும், உடனே பிரசவித்தலும், அதே சமயத்தில் தாயின் சமமான வயதையும் பெறுதலும் ஆக்கினையாக விதித்து அருளப்பட்டது.
இப்படியாக அகஸ்திய மஹரிஷி சுகேசனின் வரலாற்றை ராமருக்கு எடுத்துரைத்தார்.
இப்படி சிவபிரான் மற்றும் உமாதேவியாரின் அனுக்ரஹம் சுகேசனுக்கு அருளப்பட்டது. இதை வரமாகக் கொள்ள முடியாது. அனுக்ரஹமாகக் கொள்ளலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru Wonders -21 Ancient Tamil Encyclopaedia -Part 61; One Thousand Interesting Facts -Part 61
Item 458 Puranas in Sangam Tamil Literature
Tamils living during Sangam age (100 BCE to 300 CE) were ardent Hindus. We did not have the name of Gautama Buddha or Mahavira in the 30,000 lines in 2500+ Sangam poems sung by 450++ poets. Only Hindu Gods are praised in those poems.
Purananuru verse 56 composed by famous and controversial poet Nakkirar (nakkeerar) shows Hinduism in full colour. Here we see Lord Siva, Lord Skanda/Kartikeya/Muruga, Lord Vishnu and Balarama along with their flags or Vahanas.
Since all the Puranic details and stories are in Sangam poems, Puranas must be dated in the BCE period. We know Hindus were keen in updating everything, which they did up to Gupta period and so foreigners dated them wrongly. When it came to writing, the updating slowed down. We will deal with the details in verse 56 one by one.
***
Item 459 Lord Siva on Bull
“Sivan has a victory flag with a bull, flame-like bright matted braids, axe that is hard to avoid and a sapphire blue neck”.
Lord Siva is shown as we see in Siva Purana and later Tevaram and Tiruvasagam hymns.
Name Siva is not in the Rig Veda as well as 34,000 lines of Tolkappiam and Sangam literature. But He is described in other ways. Here Nakkirar says Siva rides on Bull with red coloured matted hair. The matted hair is in Yajur Veda (see Rudram Chamakam Mantras).
This shows Tamils were well versed in the Vedas and Puranas. This is confirmed by various other Sangam poets (Even Indra’s molestation of Ahalya is in Paripaatal poems).
***
Item 460 Balarama
“Balarāman has a white body as white as whorled conch growing in the ocean, kills with his murderous plough and carries a palmyra palm on his flag”.
Lord Krishna and his brother Balarama were household names in Tamil Nadu. It has been there for at least 2500 years. Even today children are named after them. Film songs praise Krishna or use Him as a simile.
Here the poet described his flag with Palmyra tree emblem, his skin colour, his picture with a plough on his shoulder. During Mahabharata war, he differed with Krishna and went on a pilgrimage to the South and he spread agriculture through out India. The plough symbol mentioned by the poet confirms it.
***
Item 461
“Thirumāl who is the colour of lovely, blue, washed sapphire, longs for triumph, and has a bird is on his flag which towers high into the sky”.
In the same way Lord Vishnu (Tirumaal) is portrayed with his Eagle Flag (Garuda) ; Pul means bird, but in Tamil this word is sued to mention Garuda Vahana of Vishnu). His skin colour was Bluish Black. Krishna means Black.
Black colour was very much appreciated and even most beautiful Draupadi was called Krishnaa (aa—long sound)
Tamil were thorough with all the Vishnu, Siva, Devi Puranas.
***
Item 462 “Murukan who has never been defeated, glows, has a peacock on his flag and rides a peacock.”
Lord Skanda was always victorious and he was riding on a peacock. He is the most popular god among village folk in Tamil Nadu. In the Puranas he is shown as Deva Senaapati- Commander in Chief of the Divine Army.
In other poems we see Tiruchendur , one of His Six Abodes, where he became victorious after killing the demon Sura Padman (suura Padman).
The same poet has written another work called Tiru Murukaatruppadai in praise of Lord Skanda/Muruga.
***
Item 463 Kings are Gods
In Tamil the same word is used for King and God (iraivan in Tamil) and for the place where they reside (Ko il in Tamil).
Here the poet explains in what way the king is like Hindu Gods (described above). Manu smriti and other Sanskrit scriptures also describe the king in this way. This is a Hindu concept; kings are gods.
***
Item 464 Yavana Ships
“wearing bright bangles serve you fragrant and cool wine brought in fine ships by the Yavanas, pouring from finely made pitchers made of gold. O Māran whose sword is raised high!”
In the Sangam Tamil literature Yavanas are mentioned at least six time. They wee not Greeks but Romans. The contact between Rome and South Indian ports 2000 years ago is confirmed by the Roman coins unearthed in a lot of places in South India. Coins from Augustus Ceasar period confirmed the Age of Sangam Literature as well.
Tamil kings liked Roman wine.
Dr R Nagaswamy, world famous historian and archaeologist of Tamil Nadu, ha given full details in his book Roman Karur.
Yavana/Roman ships came to Tamil Nadu ports with gold and exchanged it with pearls, black pepper, spices, ivory, Indigo etc
***
Item 465 Long Live like Sun and Moon
“May you live in this earth for long, like the sun with hot rays that drives away darkness in the sky, and like the cool moon that spreads its rays from the west!”
Hindus were great astronomers even 2000 years ago. They named famous constellations after Hindu Puranic figures. They used strs and heavenly bodies as similes. They knew Sun and Moon are eternal (in human years) and compared them with the kings or one’s life span. They used to sing this Ramayan story will be sung on earth as long as Sun and Moon exist. The inscriptions also used the cliché As long as the Sun and Moon exist. Manu Smriti and epics also use the Sun and Moon with regard to kings.
****
Puranānūru 56, Poet Mathurai Kanakkāyanār Makanār Nakkeeranār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran
1
Sivan has a victory flag with a bull, flame-like bright matted braids, axe that is hard to avoid and a sapphire blue neck.
2
Balarāman has a white body as white as whorled conch growing in the ocean, kills with his murderous plough and carries a palmyra palm on his flag.
3 Thirumāl who is the colour of lovely, blue, washed sapphire, longs for triumph, and has a bird is on his flag which towers high into the sky.
4
Murukan who has never been defeated, glows, has a peacock on his flag and rides a peacock.
5
You are to be placed among these four gods who protect the earth and bring on destruction, whose fame cannot be ruined. With your anger that cannot be opposed, you are like Kootruvan in his killing. You are like Balarāman in might. In your great fame, you are like Thirumāl who kills enemies. You are like Murukan who has the might to create the end of time, because you finish tasks that you set out to do. There is nothing that you cannot perform, since you resemble these gods.
6
May you live sweetly, giving away precious ornaments to those who come in need and never run out of them, while you enjoy life every day as women
7 wearing bright bangles serve you fragrant and cool wine brought in fine ships by the Yavanas, pouring from finely made pitchers made of gold. O Māran whose sword is raised high!
8
May you live in this earth for long, like the sun with hot rays that drives away darkness in the sky, and like the cool moon that spreads its rays from the west!
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும், கடல் வளர் புரி வளை புரையும் மேனி, அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும், மண்ணுறு திருமணி புரையும் மேனி, 5 விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும், மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும், என ஞாலங் காக்கும் கால முன்பின், தோலா நல் இசை நால்வர் உள்ளும், 10 கூற்று ஒத்தீயே மாற்று அருஞ் சீற்றம், வலி ஒத்தீயே வாலியோனைப், புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை, முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின், ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் 15 அரியவும் உளவோ நினக்கே அதனால், இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, 20 ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத் தண் கதிர் மதியம் போலவும் நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! 25
****
Item 466 Lord Vishnu Again
“Whether they have talent or not, you give gifts to them like Thirumāl, O King Māran with fame and greatness fit for words! Let me tell you something!”
Like Nakkirar in Puram verse 56, poet Kaarik Kannanaar , also compared the king with Lord Vishnu for his generosity. All the Tamils knew the story of Kuchela/Sudama, where Krishna made his hut into a palace in a second.
***
Item 467 Tamil atrocities
Tamils were ferocious and aggressive in wars. The plundered enemy lands and they set fire to big towns. Even today we hear about such atrocities in the Middle East War.
The surprising thing is Tami poets praised it!
***
Item 468 Don’t cut trees
Here is an irony. The same poet supported burning cities of enemies, but he was against cutting trees. But it is ironical statement. We don’t know whether the poet was a Tree lover, an environmentalist or advising the king to occupy the land permanently and tie his war elephants there.
May be the poet was an environmental warrior and supporter of the trees.
***
Item 469 Bhagavad Gita reference
Poet says,
“Whoever it is you give them ADVICE like Vishnu”.
These lines are interpreted as Krishna’s advice given to Arjuna in Bhagavad Gita and to Kunti, Draupadi and others.
Whether they have talent or not, you give ADVICE to them like Thirumāl, O King Māran with fame and greatness fit for words
***
Puranānūru 57, Poet Kāviripoompattinathu Kārikannanār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran,
1 Whether they have talent or not, you give ADVICE to them like Thirumāl, O King Māran with fame and greatness fit for words! Let me tell you something!
2
When you seize lands of others, let your young warriors plunder fields where stalks are bent with heavy grains, let fires eat large towns, and let your tall spear, bright like lightning flashes, kill enemies.
3
But do not cut down their protected trees, for they will serve as posts to tie your tall, fine elephant!
***
புறநானூறு57, பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற! நின்னொன்று கூறுவது உடையேன், என் எனின், நீயே பிறர் நாடு கொள்ளுங் காலை, அவர் நாட்டு 5 இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க, நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க, மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க, என்னதூஉம் கடிமரம் தடிதல் ஓம்பு, நின் 10 நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே.
****************************************
Item 470
Velliampalam Silver Stage in Madurai
Poet Karikkannan (kaarikkannanaar) in verse 58 refers to Choza and Pandya kings with the places where they died. It is seen only in Tamil literature. Here Velliampalam throws more light on the history of Madurai. Chidambaram has Pon Ambalam- Golden Stage where Nataraja/ Siva danced. Madurai temple has Silver Stage where Nataraja danced. Probably Pandya king died of heart attack while he was worshipping in the temple.
Velli/ Silver Ambalam has more stories in Tiru Vilaiyadal Puranam.
***
Item 471
Poet mentioned what made them great and advised them to be united. Kaveri river is great in Choza country and Pandya lost his father and he is a young ruler; but yet he supports all like Banyan roots.
***
Item 472
Poet used the cliché in Tamil literature. They believed that thunder and lightning destroy snakes. That simile is used here for the destruction of his enemies.
***
Item 473
Then the poet says what is special about two capitals. Choza capital Uranthai (Uraiyur near Trichy) was famous for the Justice Court there. Pandya capital Madurai was famous for Tamil Sangam.
***
Item 474
Kings are compared to Lord Vishnu and Lord Balarama. This is in previous poem as well.
***
Item 475
Tamil poets always supported unity among three Tamil Kingdoms. They always praised whenever two or three kings sitting together in a place or in an event. Poets knew Tamils always fought with one another.
***
Item 476 Tamil Emblems
Modern Tamils are more inclined towards erecting statues for their leaders. But ancient Tamils were keen to carve their symbols on peaks, particularly the northern Himalayas. Pandya symbol Fish and Choza Symbol Tiger are referred to. We have the history of Tamils for over 1500 years. They never changed their symbols or Flags.
***
Puranānūru 58, Poet Kāviripoompattinathu Kāri Kannanār sang to Chozhan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan and Pandiyan Velliampalathu Thunjiya Peruvazhuthi,
1
You are the ruler of Kāviri River with cool waters! He is born of great lineage of an ancient Pandiyan clan, and because his ancestors have vanished, he is the support, like a hanging root from a non-flowering banyan tree that supports a long branch that offers dense shade, after the thick trunk has died.
2
Even though he is young, he is a bull among Pandiyars with war wisdom. Like white lightning and thunder that attacks snakes and their families, he will not tolerate his enemies.
3
You are lord of Uranthai where justice resides. He is the king of Koodal where Thamizh flourishes, where he rules with his cool, just scepter and he commands three royal drums with resounding voices, in a city that gets sandalwood from the mountains, pearls from the ocean waves, and water and paddy is easily available for all.
4
You two are like the great gods – Balaraman with a palmyra flag whose skin is white as milk and Thirumal who is blue, and wields a discus, glowing together and causing terror. Is there anything sweeter?
5
Listen to more! May your fame flourish forever! If you help each other and do not ruin this unity, you will win this beneficial world that is surrounded by oceans. So, be good and fair to each other.
Paying attention to the path that your ancestors took, may your unity continue with caring hearts like it is today, while paying no attention to strangers who come between you! May your spears see victory after victory in murderous battlefields! In the lands of others, where mountains rise high,
6 may the peaks be incised with the signs of the tiger with curved stripes and of the carp from the deep waters!
***
புறநானூறு58, பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், திணை: பாடாண், துறை: உடன்நிலை
நீயே தண் புனல் காவிரிக் கிழவனை, இவனே, முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழு நிழல் நெடுஞ்சினை வீழ் பொறுத்தாங்குத், தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ, 5 இளையது ஆயினும் கிளை அரா எறியும் அரு நரை உருமின் பொருநரைப் பொறாஅச் செரு மாண் பஞ்சவர் ஏறே, நீயே, அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை, இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென 10 வரைய சாந்தமும் திரைய முத்தமும், இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே, பால் நிற உருவின் பனைக்கொடியோனும், நீல் நிற உருவின் நேமியோனும், என்று 15 இரு பெருந்தெய்வமும் உடன் நின்றாஅங்கு, உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ? இன்னும் கேண்மின்! நும் இசை வாழியவே! ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர், இருவீரும் 20 உடனிலை திரியீர் ஆயின், இமிழ் திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப்படுவது பொய்யாகாதே, அதனால் நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும் 25 காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று வென்று அடு களத்து உயர்க நும் வேலே, கொடுவரிக் கோள் மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி 30 நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.
-subham—
Tags- – Purananuru Wonders -21, Full-fledged Hinduism , Tamil Sangam Literature, Ancient Tamil Encyclopaedia -Part 61, One Thousand Interesting Facts -Part 61, Hindu flags, Hindu Vahanas, Hindu Gods,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
77திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 77
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 77
***
திருப்புகழில் தசாவதாரம்
ஆதி சரண் எனக் கயம் குலாவு அ(ம்) முதலையைக் கிடங்கில்
ஆர உடல் தனைப் பிளந்த அரி நேமி … ஆதி மூலமே,
அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக்
கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப்பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால்,
ஆமை கயல் எனச் செயம் கொள் கோல குறள் அரித்தடங்கை
யான அரவணை சயந்தன் மருகோனே … ஆமை, கயல் மீன்
என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே,
சோதி உரு எனத் திரண்டு கோல அருணையில் கலந்த
சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா … ஜோதி
உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி
நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை
மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,
தோகை மயில் எனச் சிறந்த ரூபி குற மகட்கு இரங்கி
தோள்கள் இறுகிடப் புணர்ந்த பெருமாளே. … கலாபம் கொண்ட
மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே.
London Swaminathan pictures from Oppiliappan Koil near Kumbakonam, March 2026.
***
பாரிஜாத மலர் கதை
வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக்
கருது(ம்) மநு ராமன் … வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு
மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால்,
வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி
மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா …
விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே,
உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே …
மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய
அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே,
நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள்
ஒப்பு அரிய பெருமாளே. … அன்பு கூடும்படி, மயில் போன்ற
குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப
மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.
* இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என்று சொன்னார்; ஆயினும் விஷ்ணுவின் வாகனமான கருடன், சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார் கருடன்.
இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.
***
புலி கரடி காட்டெருமை
குருபர சரவணபவ சண்முக குக … குருபரனே, சரவணபவனே,
ஷண்முகனே, குகப் பெருமானே,
ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்
சண்டத் திரண்டபுஜ … ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள
களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக.
(??? .. ) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி
தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல் … அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம்vஎழுப்பும் ஓசை,
வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர
உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்
எங்கும் எழ … மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக,
வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (??? .. இங்கு முற்றுப்
பெறவில்லை) … கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர,
தேவர்கள் (??? .. ) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி
சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.
அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.
****
ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள் !
இந்தப்பாட்டின் முக்கியக்கருத்து :– விஷ்ணு தலங்கள், சிவ பெருமான் கோவில்கள், தேவியரின் கோவில்கள் ஆகிய எல்லா வற்றிலும் உள்ள இறைவன் ஒருவனே; அவனைத்தான் நாம் பல்வேறு வடிவங்களில் வழிபடுகிறோம்
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் … (1) கும்பகோணம்,
அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம்,
உம்பர் வாழ்வுறு சீகாழி … தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும்
(4) சீகாழி,
நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் … நிலையான கொன்றை
மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம்,
அம்பெறு சிவகாசி … அழகு வாய்ந்த (6) சிவகாசி,
கொந்து உலாவிய ராமேசுரம் … திரளான பக்த ஜனங்கள்
கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம்,
தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் … ஒப்பற்ற நிலையில்
வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள்
கும்பு கூடிய வேளூர் … கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும்
வேளூர் – வைத்தீஸ்வரன் கோயில்,
பரங்கிரி தனில்வாழ்வே … (9) திருப்பரங்குன்றம் எனப்படும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-4-26 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ரமண மஹரிஷி அருளுரை : மகாத்மாவின் தரிசன மஹிமை!
ச. நாகராஜன்
1
பகவான் ரமணரின் அவதார தினம் : 30-12-1879
மஹா சமாதி தினம் : 14-4-1950
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஶ்ரீ பகவான் அவதரித்த புண்ணியப் பெருநாளாம் புனர்வசு நட்சத்திரத்தன்று பகவானின் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பகவான் மஹாநிர்வாணம் அடைந்த நாளன்று பகவானின் ஆராதனை சிறப்பாக நடத்தப்படுகிறது.
2
திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் அன்றாடம் பக்தர்கள் பகவானின் முன்னிலையில் கூடுவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளுக்கு அற்புதமாக பகவான் விடையளிப்பது வழக்கம். அங்கு நடக்கும் அற்புதங்களும் நிகழ்வுகளும் முறையாகப் பல பக்தர்களால் தொகுக்கப்பட்டுள்ளன.
மகானின் தரிசனம் பற்றிய ஒரு நிகழ்வு இது:
1-10-1936 Talks with Sri Ramana Maharshi Volume 2
டாக்டர் சையத் என்ற முஸ்லீம் பேராசிரியர் ரமணாஸ்ரமத்திற்கு வந்திருந்தார். “அட, மஹரிஷி புரியும் அற்புதம் தான் என்ன? இங்கு வந்தோருக்கு உள்ளம் அமைதி அடைகிறதே” என்று வியந்தார்.
பேச்சு மஹான்களின் தரிசனத்தால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றித் தொடர்ந்தது.
அப்போது பகவான் கூறலானார்:
மாத்வ சம்பிரதாய மகானான தத்வராயர் தனது குருவான ஸ்வரூபானந்தர் பற்றி ஒரு பரணியை இயற்றினார். இதற்கு பண்டிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். “ஒரு பெரிய போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரருக்கு மட்டுமே பரணி பாடப்படவேண்டும் என்றும் ஸ்வரூபானந்தர் மக்களுக்குத் தெரியாதவர் என்பதோடு தனியான இடத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தவர், அவர் மீது பரணி பாடுதல் கூடாது. அதற்கு அவர் தகுதியற்றவர்” என்றும் அந்த பண்டிதர்கள் வாதிட்டனர்.
தத்வராயர் அந்தப் பண்டிதர்கள் அனைவரையும் தன் குருநாதர் முன் வருமாறு கூறினார். அவரது குருநாதர் ஆயிரம் யானைகளைக் கொல்லக் கூடியவர் தானா என்பதை அவர்களே பார்க்கலாம் என்றார் அவர்.
அனைத்து பண்டிதர்களும் இதற்குச் சம்மதித்து ஸ்வரூபானந்தர் முன் கூடினர்.
அவர் முன் வந்தவுடன் அனைவரும் பேச்சற்று ஊமைகளாயினர். ஒரு அசைவுமின்றி ஆழ்ந்த அமைதியை அவர்கள் அனுபவித்தனர். சில நாட்கள் இப்படியே ஓடின. தங்கள் உணர்வு திரும்பியவுடன் அனைத்துப் பண்டிதர்களும் ஸ்வரூபானந்தரையும் தத்வராயரையும் நமஸ்கரித்தனர்.
தாங்கள் மிகவும் திருப்தி அடைந்துவிட்டதாக ஒருமித்து அவர்கள் கூறினர்.
ஆயிரம் யானைகளைக் கொல்வதை விட அதை விட கஷ்டமான காரியமான பலரது அகங்காரத்தை அவர் கொன்று விட்டார் என்பது அனைவருக்கும் புரிந்தது.
இதைக் கூறி முடித்த ரமண மஹரிஷி, “இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மஹாத்மாவை தரிசிக்கும் போது உள்ளார்ந்த அமைதி கிட்டும் என்பது தான் அது” என்றார்.
12-6-1937
அலகாபாத் பல்கலை கழகத்திலிருந்து திரு தாஸ் என்பவர் ரமணாஸ்ரமம் வந்து பகவானைத் தரிசித்து பல கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்.
அவர், “ஒரு பெரும் ஞானியைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை சோதனைகள் யாவை என்று கேட்டார்.உடனே பகவான் பதிலிறுத்தார்.
“ஒரு ஞானியை இன்னொரு ஞானியால் மட்டுமே அறிய முடியும். ஒரு ஞானியின் சூழ்நிலையில் பெரும் மன அமைதி ஒருவருக்குக் கிட்டினாலேயே அவர் மகான் தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் பகவான்.
இந்த மன அமைதியை ரமணாஸ்ரமம் வந்த ஒவ்வொருவரும் அனுபவித்தனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mantras are taken from wisdomlib.org; Thanks.
ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.
“ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.
இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;
“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்” ரிக் வேதம் (1.164.46 ) .
‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டும்’
‘நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’
என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.
ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.
வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :
1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;
2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;
3.ஆரண்யகங்கள் – கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;
4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .
நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :
நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் –ரிக் வேதம் 8-43-31
இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;
We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,
இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.
****
மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம் செல்வதும் அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!
ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம்,
“ஓ பவமான சோமனே
எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.
விவஸ்வானுடைய மகன் அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;
சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,
புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”
–RV 9-113-7/8
7. O Pavarnana, place me in that deathless, undecaying world
Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.
8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,
Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.
இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்
ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது
ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.
அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,
எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்; பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19
yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||
English translation:
“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19
சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்
இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.
“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8
अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥Rig Veda 10.53.8
aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8
English translation:
“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8
***
கர்மவினைக் கொள்கை
சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,
முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .
according as he acts and according as he behaves, so will he be;
a man of good acts will become good, a man of bad acts, bad;
he becomes pure by pure deeds, bad by bad deeds;
And here they say that a person consists of desires,
and as is his desire, so is his will;
and as is his will, so is his deed;
and whatever deed he does, that he will reap.
— Brihadaranyaka Upanishad,
ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக கூறுகிறார் ,
“ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”
இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,
பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?
இதற்கு ரிஷி கொடுத்த பதில்,
இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .
இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்; அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத் தருகின்றன .
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .
—subham—
Tags- உலகு இன்பக் கேணி, பாரதியார் கூற்றுக்கு, ஆதாரம் எங்கே?, Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 76
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 76
திருப்புகழில் அருணகிரிநாதர், திருப்பதி பாலாஜி கோவிலை முருகன் கோவில் என்றார்; பிள்ளையார் கையில் சிவன் கொடுத்தது மாம்பழம் அல்ல, மாதுளம் பழம் என்றார்; சரஸ்வதி நதி இப்போது இல்லை; அங்கே வயிரவி வனத்திலுள்ள முருகன் கோவில் என்று பாடுகிறார் ; இப்போது சிவன் உடலில் தேளையும் பாம்பையும் அணிந்ததாகப் பாடுகிறார் ; உரைகாரர் கள் செய்யும் தவறா ? அல்லது உண்மை உள்ளதா ? ஆராய்வோம்!
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கி லக்க லாமிர்தப் …… பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
சுத்த சொற்ப கீரதித் …… திரைநீலம்
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
பொற்பு மத்தை வேணியர்க் …… கருள்கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்பு தப்பி ராணனுக் …… கருள்வாயே
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்க மிட்டு லாவியச் …… சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்ட னோடமுத் …… தெறிமீனக்
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
துட்க முத்து வாரணச் …… சதகோடி
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
கைப்பி டித்த சேவகப் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் … புள்ளிகளைக்
கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை
வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.
thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,
sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,
suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,
suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,
puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai –
vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA
***
Alam (अलम्).—ind. Ornament. 2. Enough, abundance. 3. Able, adequate or equal to. 4. Prohibition, no not. 5. Unnecessary, no need of. It is chiefly used in composition, as alañjīvikaḥ having enough for subsistence; alandattvā refusing to give; ityalam enough; alaṅkāra ornament, &c. E. ala to adorn. &c. and am aff.
சம்ஸ்க்ருதத்தில் அலம்என்றால் “போதுமான, ஆபரணம்” முதலிய அர்த்தங்கள் உண்டு; இந்த இடத்தில் ஆபரணம் என்பது பொருந்தும் அல்லது ஆலம் என்று கொண்டால் சிவன் கழுத்திலுள்ள விஷத்தைக் குறிக்கும்.
ஆலம் என்பதை படி எடுத்தவர்கள் தவறாக அலம் என்று அடுத்த ஏட்டில் எழுதி இருக்கலாம்
என்னுடைய கருத்து
இந்த இடத்தில் திருநீலகண்டனின் கழுத்திலுள்ள ஆலம் / விஷம் என்பதே !
தமிழ் அகராதியில் ஆலம் என்பதற்கு விஷம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது; சம்ஸ்க்ருதத்தில் இதை Halāhala (Sanskrit हलाहल) ஹலாகல என்பார்கள். தமிழில் ஆலகாலம் என்றும் சொல்லுவதுண்டு.
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவில் மயில் தீவு என்னும் திட்டில் உமானந்தா சிவன் கோவில் உள்ளது ; அங்குள்ள தேள் வடிவத்தைக்கூட தேவி என்றுதான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்; சிவபெருமானை அல்ல; சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட தேள் முத்திரைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை .
FOLLOWING IS THE ARICLE WRITTEN BY ME ON 11TH NOVEMBER 2012. IT IS POSTED IN TWO BLOGS ON THA DAY.
தேள்— ஒரு மர்மதெய்வம்!
படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்
(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)
உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.
அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.
கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர். சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.
தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.
கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.
ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.
மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.
படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி
27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.
தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)
எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.
படத்தில் தேள் வீரன்
படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை
எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.
இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.
சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.
பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.
பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.
For more details, see my English post: The Great Scorpion Mystery in History.
Other articles on Snake, Indus Valley etc:
1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God around the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com
–SUBHAM—
TAGS – சிவபெருமான், தேள், அணிந்தாரா? ,அருணகிரிநாதர் புதிர், திருப்புகழில், அரிய செய்திகள் Part 76ருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
21-3-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி!
ச. நாகராஜன்
உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு புதிய புத்தகம் ‘ஆர்ட் க்யூர்” ART CURE!
2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தை எழுதியவர் டெய்ஸி ஃபேன்கோர்ட் (Daisy Fancourt) என்ற பெண்மணி.
டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள இவர் யுனிவர்ஸிடி காலேஜ் ஆஃப் லண்டனில் சைக்கோ பயாலஜி மற்றும் எபிடெமியாலஜி துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
யாருமே இதுவரை செய்யாத ஒரு அபூர்வ ஆய்வை இவர் மேற்கொண்டார். என்ன அது?
கலைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ளதொடர்பு பற்றிய ஒரு ஆய்வை இவர் மேற்கொண்டார்.
நல்ல உணவுத் திட்டம், உடல்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போல கலையைக் கற்பதும் உடல் நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும், மன அமைதியை நல்கும் என்பதை இவரது ஆய்வின் முடிவு கண்டுபிடித்துள்ளது.
ஹீதர் ரோஸ் ஆர்டுஷின் (Heather Rose Artushin) என்ற
பெண்மணி இவரை சைக்காலஜி டு டே பத்திரிகைக்காக பேட்டி கண்டார்.
அதில் தன்னைப் பற்றியும் தனது ஆய்வைப் பற்றியும் இவர் மனம் திறந்து பல தகவல்களை வெளியிட்டார்.
15 வருடங்களாக ஒரு விஞ்ஞானியாக கலைகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி இவர் ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.
எந்த ஒரு கலையிலும் ஈடுபடும் ஒருவர் தான் சந்தோஷமாக இருப்பதையும் மிகுந்த மனஅமைதியை பெறுவதையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையை நம்ப முடியாத உயரத்திற்கு ஏற்றும் என்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் இவர் உறுதிப்படுத்துகிறார்.
மூளையைப் படம்பிடித்து ஆராய்தல், உடலில் ஏற்படும் மாறுதல்களை ஆராய்தல், இரத்த சாம்பிள்களை எடுத்து ஆய்வு நடத்தல், ஏன் மரபணுவையே ஆய்வுக்கு உட்படுத்தல் என்பன போன்ற ஆய்வுகளை முழு வீச்சில் நடத்தி கலைகளில் ஈடுபடுவதானது உடலில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துள்ளார்.
மன ஆரோக்கியத்திற்கு கலைகள் பெரிதும் உதவுகின்றன. உணர்ச்சிகளைச் சீராக்கல், படைப்பாற்றலை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நலன்கள் கலைகளில் ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. மூளையில் டோபமைன் என்ற முக்கிய நியூரோ டிரான்ஸ்மிட்டர் (இரசாயன தூதுவர்) அதிகரிக்கிறது. மன அழுத்த ஹார்மோனானான கார்டிஸால் குறைகிறது.
ஒவ்வொருவரும் உணவுத் திட்டத்தை சீர்படுத்தி அமைத்துக் கொள்வது போல கலைகளிலும் ஒரு நாளைக்கு இருபது நிமிட நேரமாவது ஈடுபட வேண்டும் என்கிறார் இவர்.
இசை, நடனம், ஓவியம், நடிப்பு என்று எந்தக் கலை ஆகட்டும் நன்மையே பயக்கும்.
கலை ஈடுபாட்டை ஒரு ப்ரிஸ்கிரிப்ஷனாகவே தர வேண்டும் என்ற இவரது அதிரடி சிபாரிசு கலைப்பிரியர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியையே தருகிறது!
இதை ஆதாரத்துடன் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக் காட்டிக் கூறும் போது இந்த அறிவியல் ஆமோதிப்பை அனைவரும் மனம் திறந்து வரவேற்கத்தானே வேண்டும்!
ஆர்ட் க்யூர் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.
புத்தகத்தின் விலை பேப்பர் பேக் எடிஷன் ரூ 662.33. பக்கங்கள் 328.