Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,694)

Written by London Swaminathan

Post No. 15,694

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவெள்ளியங்குடி

திருவெள்ளியங்குடி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள கோலவில்லி ராமர் கோயில், சுக்கிரன் வழிபட்ட பார்கவ க்ஷேத்திரம் ஆகும்; சுக்கிர தோஷ பரிகாரத் தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மயன் உருவாக்கிய இந்தத் தலத்தில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

கோலவில்லி ராமர் கோயில்

மூலவர் – கோலவில்லி ராமர், க்ஷீராப்திநாதன்(சயன கோலம்).

உற்சவர் – சிருங்கார சுந்தரர்

தாயார் – மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

தலவிருட்சம் – செவ்வாழை

தீர்த்தம் – சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

விமானம்: புஷ்கலாவர்தக விமானம்.

சுக்கிரன் தலம்: சுக்கிரன் (வெள்ளி) தன் கண் பார்வையை மீண்டும் பெற வழிபட்டதால், இது சுக்கிர பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 16-18 கி.மீ தொலைவில் திருப்பாணாந்தாள் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

பெருமாளின் 108 திருத்தலங்களில் இங்கு மட்டும் கருடாழ்வார் சங்கு,சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.

தனக்குக் கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, வந்தது இறைவன் என்றறியாத மன்னனும் சம்மதிக்க..ஆனால், உண்மை நிலை அறிந்த சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை…வண்டாக உருவெடுத்து அடைத்துவிட்டார்.

இந்தச் செயலை அறிந்தபகவான் , ஒரு குச்சியால் துவாரத்தைக் குத்த, ஒரு கண்ணை இழந்தார் சுக்கிராச்சாரியார்.சுக்கிரன் ஒரு கண் இழ்ந்த நிலையில் பலத் தலங்களில் வழிபட்டு இங்கு மீண்டும் பார்வையினைப் பெற்றார்.இதனால் இத்தலம் வெள்ளி (சுக்கிரன்)யங்குடி என்றானது

தவிர்த்து, தேவ சிற்பியான விஸ்வகர்மா, பெருமாளுக்கு அழகிய கோயில்களைக் கட்டி முடித்ததைப் பார்த்த, அசுரகுல சிற்பி மயன், தன்னால் கட்டமுடியவில்லையே என வருத்தப்பட்டு பிரம்மனை வேண்டினான். பிரம்மனும், இத்தலம் பற்றிக் கூறி இங்கு மயனை பெருமாளை வேண்டி தவம் இருக்கச் சொன்னான்.

பெருமாள், சங்கு சக்கரத்துடன் மயனுக்கு தரிசனம் தர, மயனோ, தனக்கு ராம அவதாரமாய் காட்சித் தர வேண்டினான்.தன் கரத்திலிருந்த சங்கு, சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு பெருமான் கோலவில்லி ராமனாக அம்புகளுடன் காட்சி தந்தார்.

மண்டோதரியின் தந்தை மயன் வழிபட்ட தலம். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான் வழிபட்ட தலம்.

கண் தோஷத்தை போக்கும் திருவெள்ளியங்குடி :-

நவக்கிரகங்களில் “வெள்ளி” எனப்படும் “சுக்கிர பகவான்”, இத்தல இறைவனை தவமிருந்து வழிபட்டமையால் இவ்வூர் “வெள்ளியங்குடி” எனப் பெயர் பெற்றது.  மேலும், இவ்வூர் “சுக்ரபுரி”

****

திருவெள்ளியங்குடி  பாசுரங்கள்

“ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்

அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப

வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங் குடியதுவே”

***

முடியுடையமரர்க்கு இடர்செய்யும்அசுரர்தம் பெருமானை அன்று

அறியாய்

மடியிடைவைத்து மார்வை முன்கீண்ட மாயனார் மன்னிய கோயில்

படியிடை மாடத்து அடியிடைத் தூணில்nபதித்த பன் மணிகளின் ஒளியால்

விடிபகல் இரவென்று அறிவரிதாய        திருவெள்ளியங்குடியதுவே.                   –   திருமங்கையாழ்வார்.

—Subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவெள்ளியங்குடி, சுக்கிரன் தலம், சுக்கிர பரிகாரத் தலம், கோலவில்லி ராமர் கோயில்

Leave a comment

Leave a comment