Written by London Swaminathan
Post No. 15,723
Date uploaded in London –11 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பார்த்தன்பள்ளி
திருப்பார்த்தன்பள்ளி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியுடன் தாமரையாள் கேள்வன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருப்பார்த்தன்பள்ளி பற்றிய முக்கிய தகவல்கள்:
- மூலவர்: தாமரையாள் கேள்வன் (பார்த்தசாரதி) – நின்ற கோலம்.
- தாயார்: தாமரைநாயகி.
- சிறப்பு: குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பார்த்தசாரதி பெருமாள் அர்ஜுனனுக்கு காட்சி கொடுத்த தலம்.
- ஆழ்வார் பாசுரம்: திருமங்கையாழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.
- அமைவிடம்: சீர்காழி – திருவெண்காடு சாலையில், திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.
- திருநாங்கூர் திருத்தலங்கள்: இது திருநாங்கூர் பதினொரு திருத்தலங்கள் குழுவில் ஒன்றாகத் திகழ்கிறது.
திருவெண்காட்டிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் அமைதியான மற்றும் பிரார்த்தனை தலமாக போற்றப்படுகிறது.
மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி
என்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள்.
இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும், கொண்டு காட்சி அளிக்கிறார்.
இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் திருநாமத்தில் திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவரும் இருப்பது ரசிக்க வேண்டிய ஒன்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு சன்னதி உண்டு.
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில்
எழுந்தருளியுள்ள எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் காட்சி அளிக்கிறார்.
மூன்று நிலை ராஜகோபுரம், 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது.
***
திருக்காவளம்பாடி
திருக்காவளம்பாடி திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) 108 வைணவத் திவ்ய தேசங்களில் 27-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் ஒன்றாகும்.
முக்கியத் தகவல்கள்:
மூலவர்: கோபாலகிருஷ்ணன் (ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன்).
நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
தீர்த்தம் – தடமலர்ப்பொய்கை.
விமானம் – ஸ்வயம்பு விமானம்.
ப்ரத்யக்ஷம் – சேனைத் தலைவர், ருத்ரன்,
அமைவிடம்: சீர்காழி – பூம்புகார் சாலையில் திருநாங்கூரிலிருந்து சுமார் 1.5 மைல் தொலைவில் உள்ளது சென்னை மாயூரம் ரயில் பாதையில் வைதீசுவரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் இருக்கிறது. சீர்காழி ஸ்டேஷனிலிருந்து கிழக்கே 7 மைல். சீர்காழியிலிருந்தும், திருவெண்காட்டிலிருந்தும் பஸ்ஸில் வரலாம். திருநகரியிலிருந்து வண்டிப்பாதை உள்ளது.
: இத்தலம் வட துவாரகைக்கு இணையாகக் கருதப்படுகிறது.திருவிழா: ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் திருநாங்கூர் கருட சேவை (திருமங்கையாழ்வார் மங்களாசாசன உற்சவம்) மிகவும் முக்கியமானது.
விசேஷங்கள் – திருமங்கையாழ்வார் அவதாரஸ்தலமான திருக்குறையலூர், மங்கை மடம், இரண்டும் இத்தலத்திற்கு மிக அருகாமையில் உள்ளது.
மங்களாசாஸனம் -திருமங்கையாழ்வார் – 1298-1307 – 10 பாசுரங்கள்.
–Subham—
Tags- திருக்காவளம்பாடி,திருப்பார்த்தன்பள்ளி, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-20, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்