நர்த்தன விநாயகர் தோன்றியது எங்கே? (Post No.15,736)

Written by London Swaminathan

Post No. 15,736

Date uploaded in London –14 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நர்த்தன விநாயகரைத் தரிசிக்கும்போது நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது ;இவரைப் பற்றிய ஸ்லோகங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோமாதேவர் எழுதிய கதைக்கடல் நூலில் இருப்பது பலருக்கும் தெரியாது. சோமதேவர் கதா சரித் சாகரத்தில் தொகுத்த கதைகள் அதற்கு முன்னரும் பாரத நாட்டில் இருந்தவைதான் ; அவர் அதை நமக்கு சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தது நமது பாக்கியமே

அவர் நடனமாடும் கணபதியையும் சிவபெருமானையும் வருணித்துப் பாடியுள்ளார் . அதன் பெயர் ந்ருத்த கணபதி .

அதற்கு முன்னர் அவர் பாடிய கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் மாலை நேர சந்தியாகாலத்தில் நடனமாடியதைக் கண்ட விநாயகர் ஆனந்தமடைந்து துதிக்கையை உயரத்தூக்கி பிளிறல்  சப்தத்தை உண்டாக்கி, தாளம் எழுப்பியதையும் சோமதேவர் நமக்கு  ஒரு காட்சியாகத் தருகிறார்.

நடனமாடும் கணபதிக்கு எட்டு கைகள் ; அவற்றில் அவர் பாசம் அங்குசம், மோதகம், வளையம், தந்தம் முதலியவற்றை வைத்திருக்கிறார் ; சில கைகள் ஆயுதமின்றி இருக்கும்.

இதோ அந்த ஸ்லோகம் ,

பாசாங்குச பூப  குடார தந்தம்   சஞ்சத்கரம் வலயமங்குலியகஞ்ச

பீத ப்ரபம் கல்பதரூருஹஸ்தம் பஜாமி ந்ருத்தைகபதம் கணேசம்  

   வங்களத்தையும் பீகாரின் பெரும்பகுதியையும் ஆண்ட பால வம்ச மன்னர்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றியபோதும் ஹிந்து தெய்வங்களையும் ஆதரித்தனர்; இதனால் அற்புதமான சிலைகளும் விக்கிரகங்களும் தோன்றின. இவைகளை தற்போது வங்க தேசத்தில் டாக்கா, ராஜசாஹி, மைநாமதி மியூசியங்களில்   காணலாம்  இவைகளில் நடனமாடும் கணபதி சிலை குறிப்பிடத்தக்கது ; பால வம்ச நர்த்தன கணபதி சிலை ஒன்று சென்னனை மியூசியத்தில் உள்ளது . தமிழ் நாட்டின் கோவில்களில் கூத்தனுர், சென்னை மயிலாப்பூர் கோயில்களிலும் நடனமாடும் வின்யாகரின் சிலைகள்   இருக்கின்றன .

நர்த்தன விநாயகர் (நடனமாடும் கணபதி) விநாயகரின் 32 திருவுருவங்களில் ஒன்றாகும். இவர் மகிழ்ச்சியுடன் நடனமாடும் கோலத்தில், தனது வாகனமான மூஞ்சுறுவின் மீது அல்லது நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

நர்த்தன கணபதி ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும், கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருவார்.

முருகப்பெருமான் சூரனை சம்கரிக்கச் செல்லும்போது, விநாயகர் நர்த்தன கோலத்தில் ஆசிர்வதித்ததாக தலபுராணம் கூறுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார்.

கங்கைகொண்ட சோழபுரம் ,திருச்சி மன்னார்புரம் நர்த்தன விநாயகர் கோயில், மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்வயம்பு நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். மேலும், தருமபுரம் ஆலய கோஷ்ட மூர்த்தங்களிலும் நர்த்தன கணபதி இடம்பெற்றுள்ளார்; சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நர்த்தன விநாயகர் பெண் வடிவில் (கணேஷினி) ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளார்.

பல மாநிலலங்களிலும் நர்த்தன கணபதி சிலைகளும் விக்கிரககங்களும் உள்ளன .

கணபதி பற்றிய பாடல்கள் நமக்கு பக்தி இலக்கிய காலத்திலிருந்தான் கிடைக்கின்றன ; சம்பந்தரும் அப்பரும் கணபதி குறித்துப் பாடி இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு மன்னரே தமிழ் நாட்டில் கணபதி வழிபாடு இருந்திருக்கிறது. காளிதாசானிலோ மாணிக்க வாசகரிலோ கணபதி இல்லை ;இவர்கள் காலத்தால் முந்தியவர்கள். அதற்காக கணபதி வழிபாடு இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. விநாயகரை முதலில் வணங்கும் கோட்பாடு இல்லை. சங்க இலக்கியத்திலும் கணபதி இல்லாவிட்டாலும் அவருடைய தந்தை சிவன் மீது ஐந்து கடவுள் வாழ்த்துப்பாக்கள் உள்ளன .

இத்துடன் நர்த்தன கணபதி படங்கள் இணைக்கப்பட்டுள்ளன  .அவர் ஒரு காலைத்தூக்கிக்கொண்டு மூஞ்சுறு மீது தனியாகவோ ஆடுவதைப் பார்க்கலாம்; சம்ஸ்க்ருதத்தில் பவபூதி எழுதிய மாளவி மாதவ நாடகத்திலும் விநாயகர் இருப்பதால் தமிழுக்கும் முன்னரே அங்கு பிரபமாகிவிட்டதை அறியலாம் . முன் காலத்தில் பல நாடுகளிலும்  கணபதி வழிபாடு இருந்தது. ஆயினும் அவை இந்தியாவைவிடக் காலத்தால் பிற்பட்டவைதான்.

Ganesh, Pala Dynasty, Bengal

–subahm—

Tags- நர்த்தன விநாயகர், தோன்றியது எங்கே?, நடனம் ஆடும், விநாயகர்

Leave a comment

Leave a comment