Written by London Swaminathan
Post No. 15,737
Date uploaded in London –14 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

சோளிங்கர்
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
தாயார் : அமிர்தவள்ளி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்
திருமாலின் தசாவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும்.
பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
கோயில் சிறப்புகள் :
சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது.
சிம்மபுரம் எனவும் அழைக்கப்பட்டது.
மலை மீது யோக நிலையில் நரசிம்மரும், அருகில் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்
1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் சந்நிதி உள்ளது . பெரிய மலை – 1,305 படிகள், சிறிய மலை – 400 படிகள்.

சோளிங்கர் ரோப்கார் வசதி :23 Mar 2024 — சென்னை அருகே சோளிங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோவிலில் ரோப் கார் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் சேவை தொடங்கியதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரித்துள்ளது
யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது.
நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். இங்கு தாயார், பெருமாள். பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும்.
அக்கார அடிசில் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்ல 406 படிகள் ஏறவேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார்.
தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார்.
அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
***
தொட்டாச்சார்யர்
இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு வருகிறார் .
***
திருவிழா:சித்திரை மாதம்: சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர்.
***
சோளிங்கர் தலமானது திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. அரக்கோணம் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணியில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவு. சென்னை, அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலுக்கு உள்ளூர் வாகனங்களில் செல்லலாம்.
***
திவ்யதேச பாசுரங்கள்
1731.
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
1736.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
| வரிசை எண் | கட்டண விளக்கம் | குறிப்புரை | கட்டணம் |
| 1 | திருமஞ்னம் | 600.00 | |
| 2 | தளிகை புளியோதரை | 200.00 | |
| 3 | தளிகை – சர்க்கரை பொங்கல் | 400.00 | |
| 4 | அருள்மிகு ஆஞ்சநேயர் பிராத்தனை உற்சவம் | 5750.00 | |
| 5 | தளிகை – ததியோதனம் | 220.00 | |
| 6 | தளிகை – வெண்பொங்கல் | 350.00 | |
| 7 | அருள்மிகு இராமர் பிராத்தனை உற்சவம் | 5750.00 | |
| 8 | தளிகை – பானகம் | 70.00 | |
| 9 | சுவாதி திருமஞ்சனம் | 1500.00 | |
| 10 | வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு அமிர்தவள்ளித்தாயார் பிராத்தனை உற்சவம் | 6000.00 |
Showing 1 to 10 of 10 entries
—subham—
Tags- 23Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-23; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், சோளிங்கர், தொட்டாச்சார்யர்