Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-29; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,763)

Written by London Swaminathan

Post No. 15,763

Date uploaded in London –20 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவேளுக்கை (காஞ்சிபுரம்)

காஞ்சிபுரத்திலுள்ள ஒன்பது திவ்யதேச கோயில்களில் இதுவும் ஒன்று ; ஒருவர் காஞ்சிபுரத்துக்கும்  கும்பகோணம் அருகிலுள்ள திரு நாங்கூருக்கும் சென்றால் 20 தலங்களை இரண்டே அல்லது மூன்றே நாட்களில் தரிசித்து விடலாம். அத்தோடு அருகில் மேலும் பல திவ்ய தேசங்களையும்  தரிசித்து முடிக்கலாம். 

காஞ்சிபுரத்திலேயே, அஷ்டபுயகரத்திலிருந்து முக்கால் மைல் தென்மேற்கே உள்ளது திருவேளுக்கை.

மூலவர் – அழகியசிங்கர், ந்ருஸிம்ஹர், முகுந்த நாயகன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி.

தீர்த்தம் – கனக ஸரஸ், ஹேமஸரஸ்.

விமானம் – கனக விமானம்.

ப்ரத்யக்ஷம் – ப்ருகுமுனி.

விசேஷங்கள் – ந்ருஸிம்ஹன் ஹஸ்திசைல குகையில் இருந்துபடியே வேறொரு ந்ருஸிம்ஹ வடிவம் கொண்டு மேற்கு திக்கில் அசுரர்களைத் துரத்திக்கொண்டுபோய் அசுரர்கள் மறுபடி வராதபடி செய்ய அங்கேயே யோகநரஸிம்மராக இருக்கிறார். இது காமாஸிகா ந்ருஸிம்ஹன் ஸந்நிதி. பெருமாள், தாயார், கருடன் ஸந்நிதிகள் உள்ளன. வேள்’ என்ற சொல்லுக்கு ‘ஆசை’ என்பது பொருள். நரஸிம்ஹன் ஆசையுடன் வசிக்கும் இடமாதலால் வேளிருக்கை (வேளுக்கை) எனப் பெயர் பெற்றதாக ஐதிஹம். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இவரைப்பற்றி “காமாஸிகாஷ்டகம்” அருளியுள்ளார்.

மங்களாசாஸனம் -பேயாழ்வார் – 2307, 2315, 2343; திருமங்கையாழ்வார் – 2674 (127); மொத்தம் 4 பாசுரங்கள்

.புராண வரலாற்றின்படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்

****

காஞ்சியில் உள்ள வைணவக் கோயில்கள்

காஞ்சிபுரம் ஒரு முக்கிய ஆன்மீகத் தலமாகும். இங்கு 108 திவ்ய தேசங்களில் இடம்பெற்றுள்ள 15 புகழ்பெற்ற வைணவக் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் தொண்டை நாட்டு திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

காஞ்சியில் உள்ள மிக முக்கியமான வைணவக் கோயில்களின் பட்டியல்:வரதராஜப் பெருமாள் கோயில் (அத்தியூர்): காஞ்சியில் உள்ள முதன்மையான வைணவத் தலம். 108 திவ்ய தேசங்களில் 43-வது. அத்திகிரி எனப்படும் சிறு குன்றின் மீது பேரருளாளன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

உலகளந்த பெருமாள் கோயில் (ஊரகம்): திருவிக்கிரம அவதாரத்தில் பெருமாள் உலகளந்த கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் தலம்.

வைகுண்ட பெருமாள் கோயில் (பரமேஸ்வர விண்ணகரம்): பல்லவர்கால கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயிலில் பெருமாள் அமர்ந்த, நின்ற மற்றும் சயன கோலங்களில் மூன்று தளங்களில் அருள்பாலிக்கிறார்.

பாண்டவதூதப் பெருமாள் கோயில் (திருப்பாடகம்): மகாபாரத காலத்தில் தூது சென்ற கிருஷ்ணர், 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாய் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

அஷ்டபுஜ பெருமாள் கோயில் (அஷ்டபுயக்கரம்): பெருமாள் சங்கு, சக்கரம், வில், அம்பு உள்ளிட்ட எட்டு கரங்களுடன் (அஷ்டபுஜம்) நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் தலம்.

திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்): பொய்கையாழ்வார் அவதரித்த தலம். பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அருள்பாலிக்கிறார்.

அழகிய சிங்க பெருமாள் கோயில் (திருவெள்ளுக்கை): நரசிம்மர் அவதாரத்திற்குரிய தலம்.

:திருத்தங்கா (தீப பிரகாசர்)தி ருநீரகம் திருக்காரகம் திருக்கர்வண்ணம் திருக்கள்வனூர்  திருப்பவளவண்ணம் திருநிலாதிங்கள் துண்டம் திருப்புட்குழி .

*****

திருவேளுக்கை பாசுரங்கள்

1. பேயாழ்வார் பாசுரங்கள்:”விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை…””இருந்து வேளுக்கை…” எனத் தொடங்கும் பாசுரத்தில், உலகளந்த களைப்பு தீர எம்பெருமான் இத்தலத்தில் வீற்றிருப்பதாக சிறப்பித்துக் கூறுகிறார்.

2. திருமங்கையாழ்வார் பாசுரம்:“மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி” எனத் தொடங்கும் பாசுரத்தில், திருவேளுக்கை நரசிம்மனை (ஆள் அரி) போற்றிப் பாடியுள்ளார்.

அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று ஆழ்வார் சொல்வது போல், மூலவர் அழகியசிங்கர் அழகு; உத்சவர் முகுந்த நாயகன் மிக மிக அழகு.மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ (பெரிய திருமடல் 127) என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.  ஆள் அரி என்பது அழகான தமிழ் திருநாமம்.

பேயாழ்வார், “ சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம்கடவார் தண்டுழா யார் ” (மூன்றாம் திருவந்தாதி, 26) என்று இந்த திவ்யதேசத்தை. எம்பெருமான் என்றும் வாழும் (நித்யவாஸம்) இடங்களை சொல்லும் போது சொல்கிறார்.

“இருந்து வேளுக்கை (34) ” என்ற பாசுரத்தில், திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் எம்பெருமான் வீற்றுஇருந்து சேவை சாதிப்பது, முன்பு உலகளந்த களைப்பு தீருவதற்கோ என்று  பேய்ஆழ்வார் வினவுகிறார்.

இன்னொரு பாசுரத்தில் இந்த திருத்தல எம்பெருமானின் சௌலப்ய, ஸௌசீல்ய அனுபவங்களில் ஆழ்வார் திளைக்கிறார். “விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம், மாமாட வேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு” (62) என்பதில் கடைசி வரியில் உள்ள நீர் ஏற்றான் தாழ்வு என்பது வாமன அவதாரத்தின் போது, தாழ்ச்சிதோற்ற இருந்த எளிமையை சொல்வது ஆகும்.

***

மூன்றாம் ஆயிரம் ; இயற்பா ; திருமங்கை ஆழ்வார் ;பெரிய மடல்

2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்

சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்

மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்

மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்

என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)

மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்

பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)

தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்

மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்

என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்

என்னும் இவையே முலையா வடிவு அமைந்த

அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)

தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்

உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட

பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்

மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்

முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்

முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)

மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்

நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)

பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்

தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்

என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி

துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)

மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்

இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து

தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்

இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்

என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)

மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்

அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)

தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே

அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு

அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)

முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற

அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்

பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)

கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்

மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)

கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு

இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)

மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்

முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப

அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்

பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்

மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை

இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்

மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)

………………………………………

TO BE CONTINUED…………………………..

TAGS- திருவேளுக்கை (காஞ்சிபுரம்), Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-29; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment