WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,780
Date uploaded in London – 24 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹனுமனின் வியப்பு ! துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்—ஓர் ஆய்வு – 15
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமன் அவர்களுடன் பேசத் தொடங்குகிறார்.
की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥
की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1
को तुम्ह स्यामल गौर सरीरा। छत्री रूप फिरहु बन बीरा ॥
कठिन भूमि कोमल पद गामी। कवन हेतु बिचरहु बन स्वामी॥4॥
பொருள்:
की तुम्ह तीनि देव महँ कोऊ। (கீ தும்ஹ தீனி தேவ மஹம் கோஊ)
பொருள்: நீங்கள் மூன்று முக்கிய தெய்வங்களில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவரா? இந்த வரியில், கவிஞர் (துளசிதாஸ்) இராமரைப் பார்த்து, அவர் திருமூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவராக இருக்கலாமா என்று வினவுகிறார். இது இராமரின் தெய்வீகத் தன்மையை உயர்த்திப் புகழும் ஒரு கேள்வியாக அமைகிறது.
नर नारायन की तुम्ह दोऊ॥ (நர நாராயண கீ தும்ஹ தோஊ)
பொருள்: அல்லது நீங்கள் இருவரும் (ராமர் மற்றும் இலக்ஷ்மணர் ) நர-நாராயணர்களா? இங்கு, ராமர் மற்றும் இலகஷ்மணர் ஆகியோர் நர-நாராயணர்களின் அவதாரங்களாகக் கருதப்படுகிறார்கள்.
की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥ (கீ தும்ஹ அகில புவன பதி லீன்ஹ மனுஜ அவதார்)
பொருள்: அல்லது நீங்கள் (ராமர்) முழுப் பிரபஞ்சத்தின் இறைவனாக இருந்து மனித அவதாரம் எடுத்தவரா? இந்த வரி இராமரை முழுப் பிரபஞ்சத்தின் அதிபதியாக (விஷ்ணு) குறிப்பிடுகிறது. அவர் தெய்வீக இறைவனாக இருந்தாலும், மனிதர்களுக்கு மத்தியில் மனித உருவில் (மனுஜ அவதாரம்) அவதரித்தவர் என்று புகழ்கிறது. இது ராமரின் மனித உருவில் உள்ள தெய்வீகத் தன்மையை வலியுறுத்துகிறது.
இந்த வரிகள் இராமனையும் இலக்ஷ்மணரையும் தெய்வீக அவதாரங்களாக உயர்த்திப் புகழ்கின்றன. துளசிதாஸ், இராமனைப் பற்றி பேசும்போது, அவர் மூவுலகங்களையும் ஆளும் விஷ்ணுவின் அவதாரமாகவும், இலக்ஷ்மணரையும் நர-நாராயணரின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடுகிறார். இராமன் மனித உருவில் அவதரித்தாலும், அவரது தெய்வீகத் தன்மை மறைந்துவிடவில்லை; அவர் முழு பிரபஞ்சத்தின் இறைவனாகவே இருக்கிறார். இந்த வரிகள் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வைத் தூண்டி, ராமரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
ஹனுமனுக்கு ஒரு சந்தேகம். இராமாவதார நோக்கத்திற்காக பிரம்மா, தேவர்களில் ஒரு பகுதியினரை குரங்குகளாகவும் கரடிகளாகவும் பிறப்பெடுத்து பூமியில் அந்த முழுமுதற் கடவுளுக்காகக் காத்திருங்கள் அன்று சொன்னாரே அந்த முழுமுதற்கடவுள் இவர்கள்தானா? என்று வியந்து நோக்கிக் கொண்டிருந்தார்.
இராமனிடம் கேள்வி
இராம இலக்ஷ்மணர்களை வணங்கிவிட்டு ஹனுமன் “சுவாமி! மகாவீரர்களான நரநாராயணர்களே! அழகில் அஸ்வினி குமாரர் போலிருப்பவர்களே! தாங்கள் யார்? கருமேகம் போல நிறமுடைய தாங்கள் யார்? அதில் பொலிந்திருக்கும் (லக்ஷ்மி தத்வமாகிற) மின்னல் போல நிறமுள்ள தாங்கள் யார்? ஆயுதங்களைத் தரித்த க்ஷத்ரிய வீரர்களைப் போலவும், ராஜகுமாரர்கள் போலவும், ஜடாதரர்களாவும் வனத்தில் சஞ்சாரம் செய்கின்றீர்களே! உங்களுடைய பாதங்கள் மெல்லிய மலராலான பூமியைச் ஸ்பர்சித்ததும் சிவந்து போய் விடுமே? அப்பேர்பட்ட மேன்மையுள்ள மலர்ப் பாதங்கள் கடினமான மலைப்ரதேசங்களில் ஸ்பரிசம் செய்வதைப் பொறுக்க மாட்டாதவையன்றோ? (தாங்கள் அரண்மனையின் சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவிக்கத்தகுந்த இராஜகுமாரர்களாக இருந்தும்) வனத்தில் எதையோ தேடிக்கொண்டு அலைந்து போகிறீர்களோ? தாங்கள் எதை என்ன காரணத்தினால் தேடி அலைகிறீர்கள்? உங்களுக்கு சம்மதமிருப்பின் சுவாமி தயவு செய்து எனக்கு விளக்க வேண்டும். என்றான்.
Hanuman in America
வால்மீகியும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார்
ममैवाभिमुखं स्थित्वा पृच्छ त्वं हरिपुङ्गव।
प्रयोजनं प्रवेशस्य वनस्यास्य धनुर्धरौ॥ २६॥
அதாவது சுக்ரீவன் ஹனுமனிடம் வீரர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்க்காக இந்த வனத்தில் நுழைந்திருக்கின்றனர் என்று கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்கிறான். அங்கு தான் ஒரு தூதன் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடந்து கொள்கிறான் ஹனுமன். சந்தித்த உடனேயே நேரடியாக இந்த விஷயத்தைக் கேட்காமல் அவர்களைப் புகழ்ந்து பேசிவிட்டு தங்களுடைய மென்மையான பாதங்கள் இந்தக் கடின மலைப் பிரதேசங்களில் நடப்பதற்கு ஏற்றவை அல்லவே. அதையும் மீறி நீங்கள் இங்கு நுழைந்துள்ளதால் தங்களுக்கு என்ன பயன்? என்று நளினமாகப் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான் ஹனுமன்.
.(இங்கு துளசி தாஸர் போடும் பதங்களைக் கவனிக்க வேண்டும். को तुम्ह स्यामल गौर सरीरा இருவரில் இராமன் பெரியவன் இலக்ஷ்மணன் இளையவன். காரணம் இராமன் முன் செல்கிறான். இலக்ஷ்மணன் இராமனைத் தொடர்கிறான். இராமனின் உடலில் அதிக தேஜஸ் தெரிகிறது. அதனால் முதலில் இராமனை ஸ்யாம (கரிய மின்னல்) இலக்ஷ்மணனை கோர் (பொன்னிறத்தான்) என்று கிரமமாக அழைத்தான். துளசி தாசர் சொன்ன கருத்துக்களைத் தான் வால்மீகியும் சொல்லி இருந்தார்.)
सिंह विप्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ |
शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु नाशनौ || ४-३-९
उभौ योग्यौ अहम् मन्ये रक्षितुम् पृथिवीम् इमाम् || ४-३-१५
स सागर वनाम् कृत्स्नाम् विन्ध्य मेरु विभूषिताम्
महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषणौ || ४-३-१८
खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव |
(சிங்கம் போன்ற கூரிய பார்வையைக் கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், மகா பலசாலிகளாகவும், பராக்கிரமசாலிகளாகவும், இந்திரனின் வில்லைப் போன்ற வில்லை சுமந்திருப்பவர்களாக்வும் தோற்றமளிக்கும் நீங்கள் இந்த தேசத்திற்கு ஏன் வந்தீர்கள்? நான் உங்கள் இருவரையும் மொத்த அகிலத்தையும் காக்கும் தகுதி உள்ளவர்கள் என அறிகிறேன். கடல்கள், வனங்கள், விந்தியம், மேரு {போன்ற மலைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமண்டலத்தையும் ரக்ஷிப்பதற்கு பூமியையும் தகுதியானவர்கள் என்று உங்கள் இருவரையும் நான் கருதுகிறேன். சித்திரமானவையும், வழுவழுப்பானவையும், அற்புதமாகப் பளபளப்பவையுமான இந்த விற்கள் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தைப் போலப் பிரகாசிக்கின்றன.)
(துளசி தாசர் कठिन भूमि कोमल पद गामी என்ற பதத்தைப் பயன் படுத்தி உள்ளார். தங்களுடைய மெல்லிய பாதங்கள் கல்லும், முள்ளும் நிறைந்த இந்த மலைப் பிரதேசத்தில் நடக்க ஏற்றவை அல்ல. அவை மிகவும் நோகும். உரையாசிரியர்கள் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது இவ்வளவு கடினமான பகுதிகளில் நடந்த பிறகும் தங்களுடைய பாதங்கள் மெல்லியதாக அழகாக இருக்கின்றன. தங்களுடைய பாதங்கள் படும் பூமியும் மிருதுவாக ஆகிவிடுகின்றது.. உண்மையாகவே தாங்கள் யார்? என்று கேட்கிறார் ஹனுமன். அவர்களின் பாதங்களைப் பற்றி துளசிதாசர் அவரின் கீதாவலி என்ற நூலில் அயோத்யா காண்டத்தில் சொல்லி உள்ளார் )
पथिक पयादे जात पङ्कज-से पाय हैं |
मारग कठिन, कुस-कण्टक-निकाय हैं ||
सखी! भूखे-प्यासे, पै चलत चित चाय हैं |
इन्हके सुकृत सुर-सङ्कर सहाय हैं ||
பாதயாத்திரை செய்யும் பயணியின் கால்கள்
தாமரை இதழ் போல மென்மையானவை
ஆனால் பாதை மிகக் கடினமானது –
வெயில், முள்ளு, கல், காட்டு முட்கள் நிறைந்தது
சகியே! பசியோடும் தாகமோடும்
இருந்தாலும் அவர்களது மனம் சோர்ந்து போவதில்லை
ஏனெனில், அவர்களுடைய முற்பிறவி புண்ணியமும்
இறைவனின் (சங்கரனின்) அருளும் துணையாக இருக்கின்றன!
to be continued…………………………………….