Written by London Swaminathan
Post No. 15,781
Date uploaded in London –24 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருவில்லிப்புத்தூர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்) மூலவர் – வடபத்ரசாயீ (ரங்கமன்னார்) ,புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ஆண்டாள் (கோதா நாச்சியார்)
தீர்த்தம் – திருமுக்குளம்.
விமானம் – ஸம்சன விமானம்.
ப்ரத்யக்ஷம் – மண்டூகமணி, பெரியாழ்வார்.
விசேஷங்கள் – ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்தலம்.
ஆண்டாள் ரெங்கநாதரை மணந்த ஸ்தலம். ரங்கமன்னாருக்கு வலதுபுறம் ஆண்டாளும் இடதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். பெருமாளுடன் கருடாழ்வார் நிற்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். பெருமாள் வடபத்ரசாயீயாயிருந்தாலும் ஆதிசேஷன் உண்டு. வழக்கம்போல் பெருமாளின் நாபீகமலத்திலுருந்து ப்ரஹ்மா ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களான வில்லி, புத்தன் என்ற இரு வேடுவ அரசர்களுடனும் உள்ளனர். இவ்வேடுவர்களால் இந்நகரைக் கட்டப்பட்டபடியால் வில்லிப்புத்தூர் என்று பெயர் வந்துள்ளது. பெரியாழ்வார் ஸந்நிதி ஒன்றும், ஆண்டாள் கண்டெடக்கப்பட்ட நந்தவனத்தில் துளசிசெடி பக்கத்தில் ஆண்டாள் ஸந்நிதி ஒன்றும் உள்ளன. ஸ்ரீரங்கத்திற்போல் இங்கும் “அரையர்ஸேவை” உண்டு.
பெரியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்து கொண்டு, மாலை பெருமாளுக்கு ஸமர்ப்பித்து வருகையில், ஆண்டாள், ஆழ்வாருக்குத் தெரியாமல் பெருமாளுக்கு ஸமர்பபிக்கும் மாலையை தான் அணிந்து கொண்டு கணணாடியில் அழகு பார்க்க, இதனைக் கண்ட ஆழ்வார் ஆண்டாளை கோபிக்க, ‘ஆண்டாள்‘ சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று பெருமாள் கனவில் சொல், அது முதல் கோதை நாச்சியாருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் உண்டாயிற்று.
தென்காசி – விருதுநகர் ரயில்பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனிலிருந்த இப்பெரிய ஊர் 1 1/2 மைல் தூரத்திலுள்ளது. பலவிடங்களிலிருந்தும் பஸ்களும் உண்டு. அஹோபில மடம், சத்திரங்கள், ஹோட்டல்கள் வசதிகள் உண்டு. மலைமீது ஸ்ரீநிவாஸர் கோயில்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ கோவில் ஆகும். வரலாறு இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்
தாயார் : ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
மூலவர் : ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
மங்களாசாஸனம் –
பெரியாழ்வார் – 133
ஆண்டாள் – 549
ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வார் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும்.
இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பாசுரங்கள்
1. திருப்பாவை (ஆண்டாள் அருளியது):மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து, ஆண்டாள் தன் தோழியரை எழுப்பும் விதமாகப் பாடிய 30 பாசுரங்கள்.திருப்பாவை பாசுரங்களை தமிழ் வேதம் தளத்தில் முழுமையாக வாசிக்கலாம்.2. நாச்சியார் திருமொழி (ஆண்டாள் அருளியது):ஆண்டாள் தனது பாசுரங்கள் மூலம் பெருமாள் மீது கொண்ட தூய அன்பை வெளிப்படுத்தும் 143 பாடல்கள்.3. பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளியது):பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து, கண்ணனின் சிறு வயது லீலைகளைப் பாடிய 473 பாடல்கள்
மொத்தம் 2 பாசுரங்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும் இது 11 அடுக்குகளைக் கொண்டது; கோபுரத்தின் உயரம் 192 அடி
புராணம்
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேட்டுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.
ஆண்டாள் எண்ணெய்க்காப்பு
திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.
தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் உள்ளது
ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்
18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும்.
முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே); ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர்.
இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்
பெரியாழ்வார் இயற்றிய “திருப்பல்லாண்டு”, ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை”, “நாச்சியார் திருமொழி” ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.
பால்கோவா தயாரிப்பு
இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.
முக்கிய ஆலயங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்
திருவண்ணாமலை கோயில்
பெரிய மாரியம்மன் கோயில்(mariamman kovil)
சந்தன மாரியம்மன் கோயில்
செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி
செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.. காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன.. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ‘பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்’ மற்றும் வடமேற்குப் பகுதியில் ‘மேகமலை காப்புக்காடுகள்’ அமைந்துள்ளன.
இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora)
புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களில் கூட்டை கட்டும்.
. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான ‘இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்’ இங்கே காணப்படுகிறது.
தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.
மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது.
–SUBHAM—
TAGS-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ,ஆண்டாள் கோவில்