WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,835
Date uploaded in London – 6 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமனுக்கு இராமனின் பதில்
कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥
नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥
इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥
आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥


இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.
पिताँ दीन्ह मोहि कानन राजू। जहँ सब भाँति मोर बड़ काजू॥3॥
தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)
ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர். நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேகியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.
இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?
अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।
सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९॥
आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।
तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।
तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥
“நான் தசரத புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான் இராமன்.
இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும்.ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்; சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில் இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற தனது மனைவியான வைதேஹியைத் தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.
விதேகம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன், இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள். நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமான் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
“सुकुमारि सुहाई़’ என்று இராமன் சொல்வதன் பொருளாவது “அவள் மிகவும் மென்மையானவள். கரடுமுரடான இந்த வனத்திற்கு வரத் தகுதி அற்றவள். ஆனாலும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக உடன் வந்தாள். இப்பொழுது அவளில்லாமல் எனக்கு எந்தச் சுகமும் இல்லை” என்கிறான். இதையே துளசிதாசர் தன்னுடைய கவிதாவளி என்ற நூலில் கூறியுள்ளார்.
पुर ते निकसी रघुबीर-बधू, धरि धीर दये मर्ग में डग है ।
झलक भरि भाल कनी जल की, पुट सूखि गये मधुराधर वै ॥
फिरि बूझति हैं-”चलनो अब केतिक, पर्णकुटी करिहौ कित है?”
तिय की लखि आतुरता पिय की अँखिया अति चारु चलीं जल च्वै॥
இராமன் சீதை இலக்ஷ்மணன் மூவரும் வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து இரதத்தில் கிளம்பி ஓரளவு தூரம் சென்ற பிறகு ஸ்ருங்கிபேரபுறம் நோக்கி நடக்கிறார்கள். நல்ல வெயில். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே சீதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள். தண்ணீர் இல்லாமல் உதடுகள் வறண்டன. இராமனை நோக்கி “ஐயனே! இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்கவேண்டும். எவ்வளவு தூரத்தில் பர்ணசாலை அமைப்பீர்கள்” என்று கேட்கிறாள். இராமனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவள் களைத்துவிட்டாள் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டான். அரணமனையில் இராணியாக உள்லசாமாக இருந்தவள் இன்று இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறாளே என்பதை நினைத்து இராமனின் கண்களில் கண்ணீர் வந்ததாம்.
மீண்டும் துளசிதாஸ்
ஹனுமனின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டான் இராமன். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இராமன் தான் பதிலுரைக்கவில்லை. மாறாக இலக்ஷ்மணன்தான் பதிலளித்தான்.. காரணம் இராமனுக்கு ஹனுமனைத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை அந்நியன். ஒரு அந்நியனிடம் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற விரும்பவில்லை. மேலும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த அரசரும் தனக்குச் சமமாக உள்ளவர்களிடம்தான் பேசுவார்கள். அதனால் அந்தப் பொறுப்பை இலக்ஷ்மணனிடம் விட்டுவிட்டார். இலக்ஷ்மணனும் துளசிதாசர் சொன்ன விவரங்களையே வால்மீகி இராமயணத்தில் கூறி உள்ளார்.
ஹனுமான் கேட்டான் “இந்தக் கடினமான கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மிருதுவான பாதங்கள் கொண்ட தாங்கள் ஏன் வந்தீர்கள்? “काठिन भूमि कोमल पद गामी। कवन” என்று கேட்டதற்கு தந்தையின் கட்டளைப்படி ‘हम पितु बचन मानि बन आए! வந்தோம் என்று சுருக்கமாகச் சொல்கிறார்.
இராமன் ஹனுமனிடம் எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். संग नारि सुकुमारि सुहाई.எப்படிப்பட்ட அழகு? ஏற்கனவே பல இடங்களில் சீதையின் அழகைத் துளசி தாசர் சொல்லியுள்ளார். ஆனால் இந்த இடம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம். துளசிதாசரின் புலமைக்கு ஒரு எடுத்தக்காட்டு. அதாவது சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.
कुंद कली दाड़िम दामिनी। कमल सरद ससि अहिभामिनी॥
बरुन पास मनोज धनु हंसा। गज केहरि निज सुनत प्रसंसा
இயற்கை எல்லாம் இன்று மகிழ்கிறது —
அவள் இல்லாத உலகம்,
அழகை மீண்டும் புகழ்கிறது!
ஆனால் என் இதயம் —
அவள் இல்லாமல்,
அழகின் அர்த்தம் இழந்துவிட்டது!
“குந்த மலரின் மொட்டு, மாதுளை பழம், மின்னல், தாமரை, சரத்கால சந்திரன், பாம்பு, வருணனின் பாசம், மன்மதனின் வில், அன்னப்பறவை, யானை, சிங்கம் — இவை எல்லாம் இன்று தங்கள் அழகைப் பற்றி புகழப்படுகிறதைக் கேட்டு மகிழ்கின்றன.”
இந்தச் ஸ்லோகம், அவளின் அழகுடன் ஒப்பிடப்படும் இயற்கை உருவங்கள், இப்போது சீதையைக் காணாமல், தங்கள் அழகைப் பற்றிப் புகழப்படுவதால் மகிழ்கிறார்கள் என்கிற விலாபக் கவிதை.
இயற்கையின் அழகு கூட சீதையின் அழகின் முன்னிலையில் மங்கியதாக இருந்தது. இப்போது அவள் இல்லாததால், அவை தங்கள் பெருமையை மீண்டும் கேட்டு மகிழ்கின்றன.
இராமன் வைதேஹியைத் தேடி இங்கு வந்தோம்.என்று சொல்கிறான். இதை ஏன் ஹனுமனிடம் சொல்லவேண்டும்? ஹனுமன் அந்தண வேடத்தில் உள்ளான். திருமணத்தில் கணவன் மனைவியிடம் உன்னை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறான். அந்தணன் என்ற முறையில் ஹனுமன் இதை அறிந்திருப்பான். அதனால் எனது மனைவியான வைதேஹியைத் தேடி இங்கு வந்தேன் என்று சொல்கிறான்..
இராமன் எங்கள் சரித்திரத்தை நான் சொல்லிவிட்டேன். இனி உனது கதையைச் சொல் आपन चरित कहा हम गाई। बिप्र कहहु निज कथा“! உரையாசிரியர்கள் இதுவரை உள்ள “आपन चारित! இராமாயணத்தையே இராமன் சொல்லிவிட்டான் என்கிறார்கள் . எப்படி? ‘कोसलेस दसरथ के जाए” இது பால காண்டம் हम पितु बचन मानि बन आए य இது அயோத்யா காண்டம் “इहाँ हरी निसिचर बेदेही இது ஆரண்ய காண்டம் “बिप्र फिरहिं हम खोजत तेही இது கிஷ்கிந்தாக் காண்டம் .இதைச் சொல்லிவிட்டு ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரத்தைக் கேட்கிறான்., ‘कहहु बिप्र निज कथा बुझाई இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும் வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார்
न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |
न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८
नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |
बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९
வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,. அதுபோக துளசிதாசர் “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமனுக்குத் தெரியாததா? ஹனுமான் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.
தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள் “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள் கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக.
**