
Written by London Swaminathan
Post No. 15,866
Date uploaded in London –13 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதனின் ஆராய்ச்சிக் கட்டுரை
உலகிலேயே அதிக நகைகளை இந்துக்களின் சிலைகளில் மட்டும்தான் காண முடியும்; எகிப்திய பெண்களின் சிலைகள், ஓவியங்களில் கழுத்தில் மட்டும் நகைகளை காணலாம்; ஆனால் தெய்வங்களிடத்தில் இருக்காது ; கிரேக்க சிலைகளில் நகைகளையே காண முடியாது ; வேதத்தில் நகைகளின் பெயர்கள் உள்ளன; அதையடுத்து ஹரப்பா மொகஞ்சதாரோவில் தேவி சிலைகளில் மூன்று அல்லது நான்கு சங்கிலிகள் தொங்குவதைக் காணலாம் ; இந்துப் பெண்கள் திருமணத்தின்போது அணியும் நகைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ; தலையில் அணியும் சுட்டி முதல் காலில் உள்ள மெட்டி வரை எங்கும் நகைகள் தான்!
இங்கு சில நகைகளின் பெயர்களைக் காண்போம்; அவைகளைக் கோவில் சிலைகளிலும் எல்லோரும் காணலாம் .
கோவிலுக்குள் இறைவனுக்கு அணிவிக்கப்படும் தங்க வைர இரத்தின நகைகள் அவ்வளவையும் சேர்த்துப் பார்த்தால் உலகிலேயே இன்றும் பணக்கார நாடு இந்தியாதான் என்பது வெள் ளிடை மலை என விளங்கும் . திருவனந்தபுரம், பூரி ஜகந்நாதர் கோவில் நகைகளின் பட்டியல் கூட பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை ; திருப்பதி , மூகாம்பிகை கோவில்களில் தினமும் நகைகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது அயோத்திலுள்ள புதிய ராமர் கோவிலுக்கும் நிறைய நகைகள் காணிக்கைகளாக வந்து கொண்டிருக்கின்றன.
மாயா நாகரீகம்
இந்தியாவுக்கு வெளியே மாயன் (மயன்)ஆஸ்தீக (அஸ்டெக்) நாகரிக மக்கள் மட்டும் இந்துக்களைப் போலவே கை, கால், கழுத்து காது ஆகிய உறுப்புகளில் ஆபரணங்களை அணிந்தார்கள் ; ஏனெனில் அவர்கள் இந்தியாவிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள லோகத்துக்கு ( தென் அமெரிக்காவுக்கு ) அனுப்பப்பட்டார்கள் .
மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் -கிருஷ்ணர் தரப்பில் இருந்தான். மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர் மய தானவன் இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி!
காண்டவ வனம் என்பதைத் திரித்து கோண்ட்வானா லேண்ட் என்ற புதிய சொல்லை வெள்ளியர்கள் உருவாக்கினர் .
Kahaandava Vana= Gondwana (land)
இந்துக்களுக்கும் மாயாக்களுக்கும் உள்ள அறுபது ஒற்றுமைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளாக எழுதினேன்; அது புஸ்தகமாகவும் வந்து விட்டது
***
இதோ நகைகளின் பெயர்கள்:–
ஆங்கிலக் கட்டுரையில் ரிக் வேத துதிகள் எண்களையும் குறிப்பிட்டுள்ளேன்
ரிக் வேதத்தில் ஆபரணங்கள்; அணிகலன்கள், நகைகளின் பெயர்கள்:
கர்ணசோபனா – காதணி – ரிக் வேதம்
காதி – கங்கணம் தோள் வளையம்
காதி ஹஸ்த- கங்கணம் அணிந்த
காதி பாத – காலில் வளையம் , சிலம்பு
க்ருசணம் – முத்து அல்லது முத்து போன்ற
கிருஷ்ணவத் – முத்து அணிந்த
சந்த்ர – வெள்ளி
சந்த்ரவத் – வெள்ளி நகை அணிந்த
தம்ச- அணிந்து கொள்
நிஸ்கா- காலத்தில் அணிய தங்கக்காசு / சங்கிலி
நிஸ்க க்ரீவ – கழுத்தில் தங்கச்சி சங்கிலி அணிந்த
மணி – ரத்தினம், ஸ்படிகம் ; உருண்டை வடிவ
மணிக்ரீவ – கழுத்தில் ரத்தினம் உடைய
ரஜத – வெள்ளி
ரத்ன- ரத்தினைக் கற்கள் ; நவ ரத்தினம்
ரத்னதா – பெரும் செல்வமுடைய
ரத்னதேய – கோட்டை வள்ளல், ரத்தினங்களை வழங்குவோன்
ருக்ம – தங்கச் சங்கிலி
ருக்மவக்ஷ – மார்பிலே தங்கச் சங்கிலி உடைய
ருக்மி – தங்க நகை அணிந்த
வருஷகாதி – நீண்ட சங்கிலி அணிந்த
ஹிரண்யய- தங்கம் கொழிக்கும்
ஹிரண்யம் – தங்கம்
ஹிரண்ய பாணி – தங்க நகை அணிந்த கைகள்
ஹிரண்ய பிண்ட – தங்க கட்டி
ஹிரண்ய பாஹு- தங்கத் தோள் வளையம்
ஹிரண்ய பேஷ – தங்க நகைகள் அணிந்த
ஹிரண்ய கர்ண- காதில் தங்க நகைகள்
புஷ்கர ராஜ் – தாமரை மாலை (தங்கத்தினால் ஆனது)
****
இவைகளில் பிண்டம் (கட்டி), மணி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளன . ஆண்களும் பெண்களும் கை,கால், தோள்களில் அணியும் நகைகளை சங்கத் தமிழ்ப் பாடல்கள் அதிகம் குறிப்பிடுகின்றன; பாணர்களுக்கு பொற்றாமரை வழங்கி கெளரவிக்கும் வழக்கத்தை சங்கப் புலவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் ; வளையல், கழல், சிலம்பு ,தோள் வளையம் என்பன அடிக்கடி வரும் அணிகலன்களாகும்.
இவைதவிர அதர்வண வேதம், யஜுர் வேதம் பிராமண, உபநிஷத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன ; அவைகளைப் பட்டியலிட்டால் புஸ்தக அளவுக்கு கட்டுரை வளர்ந்துவிடும்.
வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன . (பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நவரத்தினங்கள்பற்றிய கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்துள்ளேன் ; எனது ‘பிளாக்’குகளில் காண்க)
***
இந்துக்கள் அணியும் நகைகளின் பெயர்கள்
உடலின் மேல் பகுதி —
புல்லகம்- தென் பல்லி, வட பல்லி;
பூரப் பாளை;
தந்தளம்;செவிப்பூ ;
அளக சூடம் ; தொய்யகம் ;
குதம்பை;
சாவடி;
காறை;
வாகுமாலை ;
முத்தாரம்;
தோள் வளை ;வாளைப்பகு வாய் மோதிரம் ;
பரியகம்;
வீரச் சங்கிலி ; சூடகம்;
பவழ வளை;
கடக வளை;
ஆடைக்கட்டு
*****
உடலின் நடுப் பகுதி –
முத்தரை ;
விரிசிகை
***
உடலின் கால்ப் பகுதி –
உடைதாரம்
குறங்குச் செறி ;
நூபுரம்;
பாடகம்
காற் சவடி (பரியகம்)
To be continued…………………..
Tags- இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1, நகைகள் , ஆபரணங்கள்; அணிகலன்கள், ஆராய்ச்சிக் கட்டுரை, ரிக் வேதம் , நகைகள் பட்டியல்