பூமியின் இருண்ட பாதாள உலகம்: ஆழமான குகைகள்! (Post.15,876)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,876

Date uploaded in London – 16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-6-26 கல்கி ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

பூமியின் இருண்ட பாதாள உலகம்: மனிதனே செல்ல அஞ்சும் உலகின் மிக ஆழமான குகைகள்!

ச. நாகராஜன்

பூமியில் உள்ள குகைகள் பல்வேறு விதமானவை.

சில குகைகளில் ரிஷிகள் தவம் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர்.

இன்னும் சில குகைகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

கெண்டுகியில் உள்ள குகை மிக நீளமான குகை என்று சொல்லப்படுகிறது.

அடுத்த்து வியட்நாமில் உள்ள குகையும் மிக நீளமான ஒன்று தான்! மெக்ஸிகோவில் உள்ள குகை தான் நீருக்கடியில் உள்ள நீளமான குகை.

ஆனால் உலகில் இருளடைந்த மிக ஆழமான குகை எது?

லைவ் ஸயின்ஸ் பத்திரிகை இது பற்றிய தகவல்களைத் தருகிறது.

ரிபப்ளிக் ஆஃப் ஜார்ஜியாவில் அப்காஸியா என்ற இடத்தில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் இரு குகைகளே மிக ஆழமான குகைகள் என்று அறியப்படுகிறது. விரியோவ்கினா மற்றும் க்ருபேரா வொரொன்ஜோ ஆகிய இரு குகைகள் 6560 அடிக்கும் அதிகமாக ஆழமானவை!

இதை ஆராயப் புகுந்த அலாஸ்கா நேஷனல் பார்க்கைச் சேர்ந்த பால் பர்ஜர் என்ற நிலவியலாளர் விரியோவ்கினா 7257 அடி ஆழமுள்ளது என்று துல்லியமாகக் கூறுகிறார். க்ருபேரா 7215 அடி ஆழம் உள்ளதாகும்.

காகஸஸ் பகுதியில் உள்ள இந்த இரண்டு குகைகளும் மிக மிக இருள் நிறைந்தவை; ஈரமானவை; குளிர்ச்சி உடையவை. இரண்டு முதல் 3 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலை உள்ளவை!

இங்கு வாழும் மிருகங்கள் இந்த இருளடைந்த குகைகளில் சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக் கொண்டு விட்டன.

ஆழம் அதிகமாக அதிகமாக அங்கு பயிர்களே இருக்காது. ஆகவே இவை இருப்பவற்றை நெடுநாட்களுக்கு ஒருமுறையே உண்கின்றன.

ஸ்பிரிங்டெய்ல் (Springtail) என்று ஒரு பூச்சி வகை இங்கு இருக்கிறது

இதை ஆராய்ச்சியாளரான பெண்மணி ரெபொலெய்ராவும் (Reboleira) அவரது சக ஆய்வாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு இறக்கைகள் கிடையாது. 6500 அடி ஆழத்தில் இந்த பூச்சி இனம் வாழ்கிறது!

இவற்றை எல்லாம் ஆராய்வதால் நம் கால்களுக்குக் கீழே பூமியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம் என்கிறார் அவர்.

“பாதாள உலகத்தில் பரந்து கிடக்கும் பகுதியில் குகைகளே ஜன்னல்களாக அமைகின்றன” என்கிறார் அவர்.

 சுற்றுப்புறச்சூழல் அமைப்பிற்கு குகைகளும் ஒரு பெரிய பங்கை அளிக்கிறது. அவை நீரைப் பல்வேறு அடுக்குகளில் சுத்தம் செய்து உலகிற்குத் தருகிறது. கார்பன் என்ற மாசுப் பொருளை தங்கள் பாறைகளில் ஈர்த்து அங்கேயே தக்க வைத்துக் கொண்டு உலகின் மாசுக் கட்டுப்பாடு வேலையைச் செய்கிறது.

16.3 கோடி வருஷங்களுக்கு முன்னர் உருவாகிய இவைகள் காலப்போக்கில் சுண்ணாம்புக் கலவை அடுக்குகளை இறுகச் செய்து இப்படிப்பட்ட ஆழமான குகைகளை உருவாக்கி இருக்கிறது.

நீரானது சுலபமாகப் பாய்வதற்கு ஏற்றபடி இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் செங்குத்தாக நிற்கின்றன. நீரானது இடுக்குகளின் வழியே பாய்ந்து அருகில் உள்ள தரைப் பகுதிகளை அடைந்து அங்கிருந்து ஆறுகளையும் நீர்நிலைகளையும் அடைந்து நீர் பற்றாக்குறையைப் போக்குகிறது.

நமது இமயமலை குகைகளில் ரிஷிகளும் முனிவர்களும் வாழ்வது நாம் அறிந்த ஒரு செய்தி தான். அஜந்தா, எல்லோரா குகைகளில் உள்ள வண்ணச் சிற்பங்களை உலகினரை ஈர்ப்பவை. திருவண்ணாமலை குகையிலே சமீப காலத்தில் வாழ்ந்த மஹரிஷி ரமணர் திருவண்ணாமலை பற்றிய பல அரிய தெய்வீக தகவல்களை அறிவித்துள்ளார்.

குகைகள் மனித குலத்திற்கு இறைவன் தந்துள்ள வரங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை!

**

Leave a comment

Leave a comment