இஸ்லாமோபோபியா – அபாயகரமான பேச்சு! (Post.16,017)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,017

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இஸ்லாமோபோபியா – அபாயகரமான பேச்சு! 

ச. நாகராஜன் 

திடுக்கிட வைக்கும் ஒரு கருத்தை மிக தைரியமாக இந்தியாவிலேயே முன் வைத்திருக்கிறார் ஆல் இந்தியா முஸ்லிம் பர்ஸனல் லா போர்ட்(AIMPLB – All India Muslim Personal Law Board) உறுப்பினரான மௌலானா காலிலுர் ரஹ்மான் சஜ்ஜட் நொமனி (MAULANA KHALILUR RAHMAN SAJJAD NOMANI) – தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில்!

“ஹிந்துக்கள் இந்தியாவில் இனியும் மெஜாரிட்டி என்று சொல்ல முடியாது” – இதுவே அவர் முன் வைத்திருக்கும் அதி பயங்கரமான கருத்து.

ஷெட்யூல்ட் டிரைப்ஸ், ட்ரைபல்ஸ், ஷெட்யூல்ட் கேஸ்ட் சமூகத்தினர், தமிழ்நாட்டு மக்கள் , லிங்காயத்துகள், ஜட் சமூகத்தின் சில பிரிவினர் மற்றும் இது போல உள்ள வேறு பலர் ஆகியோரை ஹிந்துக்களாக கருதக் கூடாது என்று பகிரங்கமாக இவர் கூறி அனைவரையும் திடுக்கிட வைத்திருக்கிறார் 

பிரித்து ஆளும் சூழ்ச்சி என்பது ஆங்கிலேயருக்கே உரித்தான தனியான மோசமான உத்தி. அதை வைத்தே இந்தியாவை அவர்கள் பிளவு படுத்தினார்கள்.

இப்போது இந்த மௌலானா அதே உத்தியை பயன்படுத்தி ஹிந்து சமுதாயத்தை அழிக்க நினைக்கிறார்.

முஸ்லீம்கள் எப்போது இந்தியாவில் 51 சதவிகிதம் ஆகிறார்களோ அப்போதே இந்தியா 100 சதவிகிதம் முஸ்லீம் நாடாக ஆகி விட்டது என்று கொள்ளலாம் என்பதை பலமுறையும் தீவிரவாத முஸ்லீம் தலைவர்கள் பல முறை கூறியுள்ளனர். அதாவது 49 சதவிகிதமாக இருக்கும் ஹிந்துக்கள் எந்தவிதத்திலேனும் முஸ்லீமாக மாற்றப்படுவார்கள் என்பதே இதன் மறைமுகமான அர்த்தம். 

மௌலானா காலிலுர் ரஹ்மான் சஜ்ஜட் நொமனி தனது கருத்தை எப்படி வலியுறுத்தி இருக்கிறார் தெரியுமா?

I place my hand on Hajr-e-Aswad and the cover of Kaaba and say that Hindus are a minority in India. Under no circumstances can Hindus be considered a majority.

ஹஜிர் அஸ்வாட் மற்றும் காபா அட்டை மீது கைவைத்துச் சொல்கிறேன் -ஹிந்துக்கள் இந்தியாவில் மைனாரிட்டி என்று. எந்த ஒரு விதத்திலும் ஹிந்துக்கள் இந்தியாவில் மெஜாரிட்டி என்று கருதப்பட முடியாது.

இது மட்டுமல்லாமல் அவர் இன்னொரு பயங்கரமான கருத்தையும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார் இப்படி:

இஸ்லாமிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஹிந்துக்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது துரதிர்ஷ்டவசமாக அனைவரும் பிஜேபிக்கு ஓட்டு போட்டதால் தோல்வி அடைந்து விட்டது. 

இஸ்லாமில் பிரிவுகளே இல்லாதது போல இஸ்லாமிய மௌலானாக்கள் பேசுவது எள்ளி நகையாடுவதற்கு உரியது.

ஈராக் – ஈரான் போர் ஏன்? ஷியாவும் சன்னியும் எந்தக் காலத்திலாவது ஒன்றாக இணைந்திருக்கிறார்களா?

ராவுத்தரில் ஆரம்பித்து இங்குள்ள ஏராளமான பிரிவுகளில் முஸ்லீம்கள் திருமண உறவு வைத்துக் கொள்வார்களா?

இது போல ஒரு கேள்வி அல்ல, ஒரு நூறு கேள்விகளை இவர்களின் பிரிவுகள் பற்றிப் பேசலாம். ஆனால் பெருந்தன்மை காரணமாக ஹிந்துக்கள் ஒரு போதும் இப்படி பேசுவதில்லை. 

ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

ஹிந்துக்களே விழித்தெழுங்கள். இவர்களின் பயங்கரவாதப் பரப்புரையை ஒவ்வொரு ஹிந்து இல்லத்திற்கும் கொண்டு செல்லுங்கள்.

எழுமின்! விழிமின்! இவர்களின் பயங்கரவாதத்தை அடியோடு அழிக்கும் வரை தளராது முன்னே செல்மின்! 

ஆதாரம்: ட்ரூத் கொல்கத்தா வார இதழ், 3-7-2026 தொகுதி 94 இதழ் 12

**

Leave a comment

Leave a comment