முக்கிய உபநிஷத மந்திரங்கள்-11(Post No.16,021

Written by London Swaminathan

Post No. 16,021

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

61

यस्मात्परं नापरमस्ति किंचिद्यस्मान्नणीयो न ज्यायोऽस्ति कश्चित्‌।
वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत्येकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वम्‌॥

yasmātparaṁ nāparamasti kiṁcidyasmānnaṇīyo na jyāyo’sti kaścit |
vṛkṣa iva stabdho divi tiṣṭhatyekastenedaṁ pūrṇaṁ puruṣeṇa sarvam ||श्वेताश्वतरोपनिषद्

யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்

யஸ்மான்னாணீயோ ந ஜ்யாயோ(அ)ஸ்தி கஸ்சித்

வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ்தேனேதம்

பூர்ணம் புருஷேண ஸர்வம்

ஸ்வேதச்வரோபநிஷத்

யாரைக்காட்டிலும் மேலானதும் வேறானதும் ஏதுமில்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணியதும் பெரியதும் ஏதுமில்லையோ அவர் தனிப்பொருள் ; மரம் போன்று அவர் உறுதியானவர் .வானத்து மஹிமையில் அவர் நிலைத்து நிற்கிறார். அந்தப் பரம புருஷனால் இவையாவும் நிறைந்திருக்கின்றன.

***

62

Verse 2.4.5:

स होवाच: न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवति, आत्मनस्तु कामाय पतिः प्रियो भवति । न वा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति । न वा अरे पूत्राणां कामाय पुत्राः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति । न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति । न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवति, आत्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति । न वा अरे क्षत्रस्य कामाय क्षत्रं प्रियं भवति, आत्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति । न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति । न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति । न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्ति, आत्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति । न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति, आत्मनस्तु कामाय सर्वं प्रियं भवति । आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेयि, आत्मनो वा अरे दर्शनेन श्रवणेन मत्या विज्ञानेनेदं सर्वं विदितम् ॥ ५ ॥

sa hovāca: na vā are patyuḥ kāmāya patiḥ priyo bhavati, ātmanastu kāmāya patiḥ priyo bhavati | na vā are jāyāyai kāmāya jāyā priyā bhavati, ātmanastu kāmāya jāyā priyā bhavati | na vā are pūtrāṇāṃ kāmāya putrāḥ priyā bhavanti, ātmanastu kāmāya putrāḥ priyā bhavanti | na vā are vittasya kāmāya vittaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya vittaṃ priyaṃ bhavati | na vā are brahmaṇaḥ kāmāya brahma priyaṃ bhavati, ātmanastu kāmāya brahma priyaṃ bhavati | na vā are kṣatrasya kāmāya kṣatraṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya kṣatraṃ priyaṃ bhavati | na vā are lokānāṃ kāmāya lokāḥ priyā bhavanti, ātmanastu kāmāya lokāḥ priyā bhavanti | na vā are devānāṃ kāmāya devāḥ priyā bhavanti, ātmanastu kāmāya devāḥ priyā bhavanti | na vā are bhūtānāṃ kāmāya bhūtāni priyāṇi bhavanti, ātmanastu kāmāya bhūtāni priyāṇi bhavanti | na vā are sarvasya kāmāya sarvaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya sarvaṃ priyaṃ bhavati | ātmā vā are draṣṭavyaḥ śrotavyo mantavyo nididhyāsitavyo maitreyi, ātmano vā are darśanena śravaṇena matyā vijñānenedaṃ sarvaṃ viditam || 5 |

மைத்ரேயி – யாக்ஞவல்க்யர் உரையாடல்

Brihadaranyaka Upanishad (2.4.5)

ந வா அரே பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி

ஆத் மனஸ்து  காமாய பதி: ப்ரியோ பவதி

 ந வா அரே ஜாயாயை காமாய ஜாயா  ப்ரியா  பவதி

ஆத் மனஸ்து  காமாய ஜாயா  ப்ரியா  பவதி

ந வா அரே புத்ராணாம்  காமாய புத்ரா: ப்ரியா  பவந்தி

 ஆத் மனஸ்துகாமாய புத்ரா: ப்ரியா  பவந்தி

பிருஹதாரண்யக உபநிஷதம் 1-4-5

ஒய் ! கணவனுடைய விருப்பத்துக்காக கணவன் நேசிக்கப்படுபவன் அல்லவே அல்லன்; ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  கணவன் நேசிக்கப்படுகிறான்.

ஒய் ! மனைவியுடைய  விருப்பத்துக்காக மனைவி நேசிக்கப்படுபவள்  அல்லவே அல்லள்; ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  மனைவி  நேசிக்கப்படுகிறாள்.

 ஒய் ! புதல்வர்களின் விருப்பத்துக்காகப்ப் புதல்வர்கள்   நேசிக்கப்படுபவர்கள்   அல்லவே அல்லர். ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  புதல்வர்கள்  நேசிக்கப்படுகிறார்கள் .

***

63

नान्त: प्रजम् न बहि:प्रजम् नभोयत:प्रजम्, न प्रजानघनम्, न प्रजम् नाप्रजम् !

अट्रुष्टमव्यवहार्यम् अलक्षण-मचित्यम्-मव्यपतेश्य-मेकात्म-पोरत्ययसारम्- प्रपन्ज्चोपशमम्

शन्तम् शिव-मद्वैदम् चतुरथम् मन्यन्ते स आत्मा स विजेय !!- Mundakopanishad

nāntaḥprajñaṁ na bahiṣprajñaṁ nobhayataḥprajñaṁ na prajñānaghanaṁ na prajñaṁ nāprajñam|
adṛṣṭamavyavahāryamagrāhyamalakṣaṇamacintyamavyapadeśyamekātmapratyayasāraṁ prapañcopaśamaṁ śāntaṁ śivamadvaitaṁ caturthaṁ manyante sa ātmā sa vijñeyaḥ ||

நாந்த: ப்ரஞம்  ந பஹி: ப்ரஞம்  ந உபயத: ப்ரஞம் ந

ப்ரஞானகனம்  ந ப்ரஞம்  ந  அப்ரஞம்

அத்ருஷ்டம் அவ்யய  கார்யம் அக்ராஹ்யம்  லக்ஷணம் அசிந்த்யம் அவ்யபதேச்யம்  ஏகாத்ம ப்ரத்யய ஸாரம்

ப்ரபஞ்சோபசமம்   சாந்தம் சிவம் அத்வைதம்  சதுர்தம் மன்யந்தே  ஸ ஆத்மா  ஸ விக்ஞேய:

முண்டகோபநிஷத்-7

துரியம் என்னும் சிதாகாசத்தைப் பற்றிச் சான்றோர் பகர்வதாவது : அந்த அறிவுப் பெருவெளி உள்ளத்தினுள் அடங்கியிருப்பதன்று.  புறத்தில் கயிலாயம் போல பூமியில் இருப்பதன்று . அகம், புறம் என்பனவற்றிற்கு  இடைநிலையில்  இருப்பதன்று. அது ஜீவாத்மாக்களின் தொகையன்று . அது தோன்றி வளர்ந்த உணர்வு அன்று. அது மறைந்துள்ள உணர்வு அன்று. அதைக் கண்கொண்டு பார்க்க இயலாது ; எதனோடும் அதைச் சீர்தூக்கமுடியாது ;அது மனதுக்கு எட்டாதது;எடுத்துச் சொல்லும்படியான கூறுகள் அதனிடத்தில் இல்லை. அது நினைவுக்கு எட்டாதது ; அதை விளக்க முடியாது; நனவு, கனவு, உறக்கம் ஆகியவைகளுக்குப் பொதுவாயுள்ள  தனியுணர்வின் தெளிவு அதுவாம். அது பிரபஞ்சசத்துக்கு அப்பாற்பட்டது . அது சாந்தம், சிவம், அத்வைதம். அதுவே மெய்ப்பொருள்.  அது அனுபவ ஞானத்தால் பயிற்சியால் அடையப்பெறுவது .

***

64

ஸர்வே வேதா யத் பதமாமனந்தி 

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி

யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சாந்தி

தத் தே பதம் ஸங்க்ரஹேண  ப்ரவீம்யோமித்யேதத்

सर्वे वेदा यत्पदमामनन्ति तपासि सर्वाणि  यद्वदन्ति |

यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पद सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ||

sarve vedā yatpadamāmananti tapāṁsi sarvāṇi ca yadvadanti |

yadicchanto brahmacaryaṁ caranti tatte padaṁ saṁgraheṇa bravīmyomityetat ||

கடோபநிஷதம் 2-15  

எதை வேதங்கள் உயர்த்திவைத்துப் பேசுகின்றனவோ , எதைத் தவங்கள் பாராட்டுகின்றனவோ , எதை நாடி பிரம்மச்சர்ய வாழ்வு  வாழ்கிறார்களோ , அப்பெருநிலையை நான் சுருக்கமாகச் சொல்கிறேன்.  அதுவே ஓம் என்பது .

Or

•     அனைத்து வேதங்களும் எந்த உயர்ந்த இலக்கினை ஒரு குரலில் கூறுகின்றனவோ,

•     அனைத்துத் தவங்களும் எதனைப்பற்றிப் பேசுகின்றனவோ,

•     எதனை அடைவதற்காக மக்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ,

•     அந்த இலக்கை நான் உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன்: அதுவே ‘ஓம்’ (Om) ஆகும்.

***

65

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।

तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥१५॥

ஹிரண்மயேன   பாத்ரேன  ஸத்யஸ்யாபிஹிதம்

தத் தவம்  பூஷன் ன பாவ்ருனு ஸத்ய தர்மாய த்ருஷ்டயே 

hirāṇmayena pātreṇa satyasyāpihitaṁ mukham |

tat tvaṁ pushann apāvṛṇu satya-dharmāya dṛṣṭaye || Ishavasya Upanishad Part 16, Mantra 15

பொன்னிறமான ஒளி மெய்ப்பொருளை மறைத்து நிற்கிறது; இறைவா! எனக்கு அதைக் காட்டிக்கொடு; உண்மையை அறிவது என்னுடைய கடமை ஆகும்

—Subham—

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள்-11, மைத்ரேயி – யாக்ஞவல்க்யர் உரையாடல்

Leave a comment

Leave a comment