சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றி வெளிவந்த சிறப்பு மலர்! (Post.16,087)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,087

Date uploaded in London – 14 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜூலை-ஆகஸ்ட் புதுகைத் தென்றல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

சுதந்திரப்  போராட்ட வீரர்களைப் போற்றி வெளிவந்த

சிறப்பு மலர்! 

ச. நாகராஜன், பெங்களூர் 

புதுகை திரு பி. வெங்கட்ராமன் மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் போது நிறுவனத்தின் உள்சுற்று இதழான ஹார்மனி (HARMONY) இதழின் ஆசிரியராகவும் விளங்கினார்.

சுதந்திரதின பொன்விழா ஆண்டை ஒட்டி 1997 ஜூலை-ஆகஸ்ட் ஹார்மனி இதழை சிறப்பு மலராக வெளியிட அவர் திட்டமிட்டார்.

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, சேலம் திரு. விஜயராகவாச்சாரியார், தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம், திரு சுப்ரமணியம் சிவா மற்றும் மதுரை திரு ஏ. வைத்தியநாதய்யர் ஆகியோரது  வழித்தோன்றல்கள் டி.வி.எஸ். நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரையும் திரு பி. வெங்கட்ராமன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து போராட்ட தியாகிகளைப் பற்றிய கட்டுரைகளை எழுத ஊக்குவித்து,  அவற்றை மலரில் வெளியிட்டார்.

நிறுவனத்தின் உள்சுற்று இதழ் இதனால் மிக்க பெருமை பெற்று பத்திரிகை உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் வித்தகரான ராஜாஜியைப் பற்றி வெளியுலகம் அறியாத அரிய விஷயங்களை அவர் பேரன் தர, பாரதமாதாவிற்குக் கோவில் எழுப்பிய திரு. சுப்ரமணிய சிவா பற்றி அவரது பேரன் வருஷவாரியாக குறிப்புகளைத் தர, தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டிய திரு. வைத்தியநாதய்யரைப் பற்றி அவரது பேரன் எழுத, வெகுஜன விழிப்புணர்ச்சி ஊட்டியதற்கான விருதாக சிறைவாசம் பெற்ற தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ. சந்தானம் பற்றி அவர் மகன் விவரங்களைத் தர சிறப்பு மலர் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக மலர்ந்தன. 

இப்படி ஒரு கருத்தை முன்வைத்து ஒரு பொன்விழா மலர் மலர்ந்தது சுதந்திர பாரதம் மலரக் காரணமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பை உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நிகழ்வாகும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

**

Leave a comment

Leave a comment