உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167)

 Written by London Swaminathan

Post No. 16,167

Date uploaded in London – 5 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Project Madurai website has got the whole book. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0022.html

1

உலகநீதி நூலினை இயற்றியவர் யார் ? அவரைப்பற்றிய முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் என்ன?

2

இந்த நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன ? அவற்றில் இழையோடும் விஷயம் என்ன ?

3

இந்த நூல் எப்படித் துவங்குகிறது ?

4

கெட்ட நண்பர்களுடன் சேரக்கூடாது; உண்மையே பேசவேண்டும் என்பதை எப்படி வலியுறுத்துகிறார் ?

5

பாரதியார் பெண்ணுரிமையைப் பாடிப் புகழ்   பெற்றார் ? உலக நீதி நூல், பெண்களுக்கு எவ்வாறெல்லாம் ஆதரவு தருகிறது ?

6

தமிழ்நாடு என்றாலே வானளாவிய கோபுரங்கள்தான் நினைவுக்கு வரும்; தமிழ் நாடு அரசின் சின்னத்திலும் கோபுர படத்துடன் வாய்மையே வெல்லும் என்ற முண்டகோபநிஷத் வசனம்தான் உள்ளது; உலக நீதி கோயில் பற்றி என்ன செப்புகிறது ?

7

ஐந்து பேருக்கு கூலி தராமல் ஏமாற்றினால் எமன் சும்மாவிடமாட்டான் என்று எப்படி எச்சரிக்கிறார் ?

8

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்- என்று சொல்கிறாரே! இதன் பொருள் என்ன ?

9

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்- என்று ஏன் சொன்னார்

10

உலக நீதியைக் கேட்டு அதைப் பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

*********************

விடைகள்

1.உலகநாதர் , திருவாரூரைச் சேர்ந்தவர் என்றும் சைவத் திருமுறைகள் வெளிவர உதவியவர் என்றும் தெரிகிறது . பாடல் நடையைப் பார்க்கையில் எளிய தமிழாக இருப்பதால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்தவர் என்று ஊகிக்கமுடிகிறது.

***

2.இவர் ஒரு முருக பக்தர். ஆகையால் 1 3 பாடல்களை இயற்றிய இவர் ஒவ்வொரு பாடலிலும் முருகப்பெருமானைப் போற்றுகிறார் ; ஒருவர் எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று நீதிநெறிகளை எளிய தமிழில் எதுகை மோனையுடன் பாடியுள்ளார்; சிறுவர்கள் மனப்படமாகப் பாடும் வகையில் அமைந்தது இதன் சிறப்பு .

***

3.உலக நீதி – ஆசிரியர்: உலகநாதர்  நூலினைத் துவக்கியவிதம்:

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

      போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.

***

4.நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

      நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

      நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

      அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #2

XXX

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

***

5.பெண்களுக்கு ஆதரவான வரிகள்:-

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்:- பிறருடைய மனைவியை மனதிலும் விரும்பக்கூடாது .

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்:-

பெண்களுக்கு விரைவாகத் திருமணம் செய்ய வேண்டும் .

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்:–

மனைவியை குறைகூறக் கூடாது ; இந்தக் கருத்து வேறு எவரும் சொல்லாத புரட்சிக்கருத்து !

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்:-

இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு

இருதலைப்பாம்பு  போல இருக்காதே.

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் (இதை ஏன் சொன்னார் என்று விளங்கவில்லை )

***

6.கடவுள் விரோதக் கயவர்களுக்கு செமை அடி கொடுக்க ஒரே வரியில் சொல்கிறார்: கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

XX

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

XX

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

***

7.அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

      அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

      சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

      மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

      ஏதெது செய்வானோ ஏமன்றானே.       #11

Don’t forget to give the fees to washerman(laundry), barber (hair cutting saloon), Teacher or school, nurse, and doctor.

***

8.பழங்காலத்தில் பெரும்பாலும் நிலத் தகராறுகள் விசாரணைக்கு வரும் ; அதற்குப் பொய் சாட்சி சொல்லவும் ஆட்களைத் தயார் செய்வார்கள்; அதுபோன்ற விசாரணைகள் கிராமத்தலைவர் தலைமையில் ஆலமரத்துக்கு அடியிலுள்ள மேடை அருகே நடைபெறும் அப்போது மண் தரை மீது நின்று கொண்டு மண் / நிலம் தொடர்பான சாட்சியம் சொல்ல சிலர் வருவார்கள் ; அப்படி பூமி மீதே நின்று கொண்டு பூமி பற்றியே பொய்ச் சாட்சியம் சொல்லுவது தகாது என்பதே இந்த வாசகத்தின் பொருள். 

***

9.தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உள்ளது; தானும் உண்ணாமல் மற்றவர்களுக்கு காசு கொடுத்தும் உதவாமல் பொற்  காசுகளைப்  பானையில் வைத்து அவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் புதைத்துவிடுவார் அதை யாருக்கும் சொல்லாமலேயே இறந்த பின்னர் அது யாரோ ஒருவருக்குப் புதையலாகக்  கிடைத்துவிடும்; பெரும்பாலும் புதையலை எடுப்போர் அதை யாருக்கும் தெரிவிக்காமல் பங்கு பிரித்துக்  கொள்வார்கள் ; தொல்பொருட் துறையினர் கண்டுபிடிக்கும்போது மட்டும் அந்தச் செய்தி பத்திரிகையில் வரும்.

***

10. உலக நீதியால் கிடைக்கும் பலன்:

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

      அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

      உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

      கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

      பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.       #13

–subham—

Tags. உலகநீதி, நூல், 10 கேள்விகள், உலகநாதர், பெண்கள் உரிமை, 5 பேர் கூலி

Leave a comment

Leave a comment