
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,168
Date uploaded in London – 6 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வங்கத்தில் உள்ள அதினா மசூதி, ஆதிநாத் சிவன் கோவிலா? ஹிந்துக்களின் விழிப்புணர்வு!
ச. நாகராஜன்


மேற்கு வங்கத்தில் மால்டாவில் உள்ள அதீனா மசூதி புராதனமான ஆதிநாத் சிவன் கோவிலே என்று பக்தர்கள் இப்போது விழிப்புணர்ச்சியுடன் கூறுகின்றனர்.
இது பற்றி ஶ்ருதி சாகர் 25-7-26 opindiaவில் உண்மைகளைச் சித்தரித்துள்ளார்.
650 ஆண்டு பழமையான அதினா மசூதிக்கு வெளியே உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஆதரவுடன் பக்தர்கள் வழிபாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
‘ஆதிநாத் புராதன் சிவ மந்திர் இயக்கத்தைச்’ செர்ந்தவர்கள் இங்கு
3.6 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்தை நிறுவ ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இதனுடைய எடை 1.5 டன்னாகும். இங்கிருந்து 289 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரகேஸ்வரத்திலிருந்து இந்த சிவலிங்கம் மால்டாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
பிஜேபியைச் சேர்ந்த காஜல் கோஸ்வாமி, ‘மசூதி என்று சொல்லப்படும் இதன் உள்ளே ஏராளமான புத்த மத மற்றும் ஹிந்து மதம் சார்ந்த சிலைகள் உள்ளன’ என்று கூறுகிறார்.
இதை மீட்டு இங்கு சிவலிங்கத்தை நிறுவுவதே எங்களது பிரதான லட்சியமாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால் சட்டத்திற்கு உட்பட்டே தங்கள் செயல்கள் இருக்கும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா மசூதிக்கு உள்ளே எந்த வித வழிபாடும் நடத்தக் கூடாது என்றும் வெளியே நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.
1958ம் ஆண்டின் AMASR ACTஇன் படி இது பாதுகாக்கப்பட்ட இடமாகும். இதன் உள்ளே எந்தவித சடங்கும் வழிபாடும் நடத்தப்படக் கூடாது.
மால்டா மாவட்டத்தில் பாண்டுவா என்ற இடத்தில் உள்ள அதினா மசூதி 1373 முதல் 1375 உள்ள ஆண்டுகளில் சுல்தான் சிகந்தர் ஷாவால் கட்டப்பட்டது. இவர் இல்யாஸ் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்தவர்.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பால சேனா காலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹிந்து மற்றும் புத்த கட்டுமானங்களைச் சிதைத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள், தூண்கள், செதுக்கப்பட்ட கற்கள் உள்ளிட்டவற்றால் இது அமைக்கப்பட்டது.
இங்குள்ள கட்டுமான அமைப்பு இது புராதனமான ஆதிநாத சிவாலயத்தை அழித்து கட்டப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது. சிவாலயத்தை அடுத்து இங்கு ஒரு விஷ்ணு ஆலயமும் அமைந்திருந்திருக்கிறது.

இங்குள்ள கதவுகள், செதுக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட அனைத்தும் இதை நிரூபிக்கின்றன.மலர்களின் அமைப்பு, கர்பக்ருஹத்தின் அமைப்பு ஆகியவை பால சேனா வம்ச கட்டுமான வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
சீனியர் அட்வகேட்டான ஹரிசங்கர் ஜெயின் இதை மீட்டு ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த பின்னர் இந்த இயக்கம் சூடு பிடித்துள்ளது.

இது விரைவில் மீட்கப்படுமா?
காலம் பதில் சொல்லும்!
**