வெண்கலக் குரலில் பாடிய
எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடலை அறியாத சங்கீத ரஸிகர்கள் இருக்க மாட்டார்கள். கருப்பு-
வெள்ளை திரைப்படங்களிலும், அந்தக் கால கச்சேரிக்ளிலும் தூள்
கிலப்பிய மேதை. ஆனால் குடிபோதையால் அவர் வாழ்வு 28
வயதில் முடிந்தது. இதோ அந்த சோகக்கதை- பிரிட்டிஷ் லைப்ரரியில் அவரது வாழ்க்கையை
படித்தவுடன் அனைவரும் அதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளே எழுந்தது.
ஏனெனில் நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் அவரது ‘மஹா
சுகிர்த ரூப சுந்தரி’ , ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை’…………………….பாடல்களைக்
கேட்டு திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே (முனுமுனுத்துக் கொண்டே) இருப்போம்.
கிட்டப்பா நூலாசிரியர் – ஆக்கூர்
அனந்தாச்சாரி, அவருடைய நண்பர்
புல்லட்
பாயின்ட்ஸ் S G Kittappa’s Biography in
Bullet Points
“தெய்வம் யாரிடத்தில் அன்பு காட்டுகிறதோ அவர்களுக்கு ஆயுள் குறைவு”– கிரேக்க நாட்டுப் பழமொழி
முழுப்பெயர்-
செங்கோட்டை கங்காதர ஐயர் கிட்டப்பா
பிறந்த
ஊர்- செங்கோட்டை
தாயார்-மீனாட்சி
அம்மாள்
தந்தை-
கங்காதர ஐயர்
பிறந்தபோது
இட்ட பெயர்- ராம கிருஷ்ணன்
தாத்தா
பெயர்- கைலாசமய்யர்
பாட்டி
பெயர் சுப்புலக்ஷ்மி
அஷ்டஸ்ஹஸ்ரம்; கௌசிக கோத்ரம்
கைலாசமய்யருக்கு
7 ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள்; அவர்களில் ராமகிருஷ்ணன் என்னும்
கிட்டப்பா ஒருவர்.
கிட்டப்பா
பிறந்தது ஆகஸ்ட் 25,
1906; விசாக
நக்ஷத்திரம்
படிப்பு
கிடையாது; பணம் இல்லாததால் பள்ளிக்குச்
செல்லவில்லை.
கோலி
விளையாட்டில் கில்லாடி.
ஆறு
வயதில் சங்கரதாஸ் நாடகக் குழுவில் முதல் நடிப்பு;
ஏழு
வயதில் தென்னாடெங்கும் விஜயம்.
திருநெல்வேலியில்
தாம்பரபரணி நதியில் விழுந்தபோது நடந்த அதிசயம்.
கொழும்பு
நகருக்குப் பயணம்
கன்னையா
நாடகக் கம்பெனியில் சேருதல்
வள்ளி
திருமணன்; நாரதர் வேடம்
விஷ்ணு
திகம்பர் பரவசம்; ஆசீர்வாதம்
எல்லா
நாடகங்களிலும் ரகுபதி ராகவ ராஜா ராம் பாடல் பாடியதன் காரணம்;
ஜூன்
23 1924 விவாகம்; மணப்பெண் விசுவநாதய்யர் புதல்வி
கிட்டம்மாள்.
கன்னையா
கம்பெனி தசாவதார நாடகத்தில் நடிப்பு.
1927ல் கே.பி. சுந்தராம்பாளுடன் தொடர்பு
துஷ்ட
சஹவாசம் பிராண சங்கடம்- கெட்டவர் சஹவாசத்தால் குடி போதை; உடல் நலக் கேடு
தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).
You’ve visited this page 3 times. Last visit: 16/12/16
24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …
பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …
இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by London swaminathan. Research article No. 1789 Date 9th April 2015. Uploaded from London at 10-18 காலை. கட்டுரையின் முதல் பகுதி …
நான் முதன் முதலாக கடிதம் எழுதியது Indian Express பத்திரிகைக்குத்
தான்.
அது அந்தக் காலம். Mother India பத்திரிகையை நடத்திய
பாபுராவ் படேல் கேள்வி- பதில் பகுதியின் மன்னன். அவரைப் போல இன்னும் ஒருவரை பதில் சொல்வதில்
நான் இதுவரை காணவில்லை. அவர் கிறிஸ்தவ பாதிரிகள் மதமாற்றத்தில் செய்த அட்டூழியங்களையும்
மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டவர்.
அவரது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அப்போது நடந்த கிறிஸ்தவ
பாதிரிகளின் கொடூரமான மதமாற்றத்தைக் கண்டித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு நான்
ஒரு கடிதம் எழுத, அது அப்படியே வந்தது.
ஒரே மகிழ்ச்சி. எழுதத் தொடங்கினேன்.
அப்போதிருந்து நல்ல கடிதங்களை கலெக்ட் செய்து என் ‘கலெக் ஷனில்
சேர்த்து வைத்திருப்பேன். இதில் பிரபலங்களின் கடிதமும் அடக்கம்.
சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்குப் பதில் ஹிந்து
பத்திரிகையை என் வீட்டில் போட அதை எடுத்துப் பார்த்தேன். அதில் அன்றாட பிரச்சினையைத்
தீர்க்கும் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதி ஒன்று இருந்தது.
எனக்கு – அல்லது – எங்கள் பகுதியினருக்கு ஒரு பிரச்சினை.
எங்கள் வீட்டின் வாசலில் பஸ் ஸ்டாப். தாறுமாறாக கர்நாடகப் போக்குவரத்து
பஸ் டிரைவர்கள் பஸ்களை (ஒரு நிமிடத்திற்கு ஐந்து முதல் பத்து பஸ்கள், அத்துடன் எண்ணில்
அடங்கா மினி கேப்கள்) நிறுத்துவதால் சிறுவர் சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பாக
நடக்கவே முடியவில்லை.
இதைச் சுட்டிக் காட்டி ஒரு கடிதத்தை ஹிந்து பத்திரிகைக்கு அனுப்பினேன்.
இரு நாட்கள் கழித்து எனக்கு ஒரு போன். ஹிந்து அலுவலத்தினர் பேசினர்.
பிரச்சினையை விளக்கினேன்.
“உங்கள் போட்டோ ஒன்றை அனுப்புங்கள்’ என்றார்கள்.
“வேண்டாம், கடிதம் மட்டுமே போதும் “ என்றேன்.
விளம்பரமே பிடிக்காதவர் என்று நினைத்து விடாதீர்கள்.
கடிதத்தைப் போட்டோவுடன் பார்த்தால்… என்னை நடக்க அனுமதிக்க
வேண்டுமே! கை கால் போயிற்று என்றால் யார் தருவார்கள்.
அடுத்து நடந்ததைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
பெரிய பெரிய சிமெண்ட் ஸ்லாப்கள் வந்து திடீரென்று இறங்கின.
பஸ் போவதற்கு ஒரு தனிப்பாதை ஓரமாக அமைக்கப்பட்டது.
காவலர்களும் போக்குவரத்துப் பிரிவினரும் அங்கு நின்று கடுமையாக
சில விதிகளை அமுல் படுத்தினர்.
அட, ஒரு கடிதம் இவ்வளவையும் செய்யுமா? செய்தது.
*
திரு ஏ.என். சிவராமன் பெயரைத் தாங்கி வந்த தினமணி கதிர் இதழில்
ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய கதையைக் கண்டித்து அனுப்பப்பட்ட கடிதம் பற்றியும், பிரபல
நாவல் ஆசிரியர் இர்விங் வாலஸுக்கு நமது எமர்ஜென்ஸியை ஒட்டி அனுப்பப்பட்ட கடிதத்தையும்
பற்றி முன்பே ஒரு கட்டுரையில் எழுதி விட்டதால் அதை இங்கே மீண்டும் எழுதவில்லை.
*
அப்படி என்ன சார், கடித இலக்கியத்தில் ‘interesting’ சமாசாரம் இருக்கு?
என்று கேட்பவர்களுக்காக ஒரு சாம்பிள் போல இரு கடிதங்களைக் கீழே தருகிறேன். (எனது collection-லிருந்து)
முதலில் கல்கியில் வந்த ஒரு கடிதம்
மனைவி : வழவழவென்று இருக்காமல்
‘வட்டத்தை’ப் போய்ப் பாருங்களேன்
மலைத்து நின்றே
மயங்காமல்
‘மாவட்டத்தைத்’ தான் கேளுங்களேன்
என் பிள்ளைக்கு
வேலை கொடுங்கன்னு
எம்.எல்.ஏவைத்
தான் கேளுங்களேன்
மளமளவென்று
காரியம் முடிய
மந்திரியிடம்
தான் சொல்லுங்களேன்
கணவன் : சளசளவென்று துளைக்காதே
சனவரியோ
டதெல்லாம் போச்சு
வளரும் தமிழ்நாட்டில்
நேர்மை
வளரும்
காலமும் வந்தாச்சு
நீடாமங்கலம் ச.சேதுராமன்
2-2—76
இந்தக் கடிதத்திற்குப் பின்னணியை விக்கிபீடியாவில் இப்படி
காணலாம் : –
On 31 January 1976, Karunanidhi’s government
was dismissed by the central government of Prime Minister Indira
Gandhi citing non co-operation for MISA and President’s rule was imposed on the state.
**
10-11-1990 Indian Express இதழில் வெளியான கடிதம் இது:
Autobiography
of an F.C. Indian
Sir,
It
was nearly eighteen years ago, when I was in the second year of my B.A. We were
eight – five brothers, one sister and my parents. We could afford food only
once a day. To reach my college at Tiruchirapally Junction (TPJ), Tamilnadu, I
had to travel by train from Mekkudi (Allur) where we lived. The train was at 8.40
a.m. At 8 a.m. the seven of us (excluding my mother) would sit around the rice
pot and my mother would measure out one cupful of rice for each. It did not
fill even a corner of my stomach. I used fill my stomach with water. My younger
brother Shiv Shankar, who was then seven, was so anemic that he could not even
eat his food. But he also used to sit
with us for his quota. The moment the rice was served, he would reject it. We,
the remaining brothers, would then pounce upon his plate like a pack of hungry
dogs and grab his share. I being the eldest at 18, used to grab it all for
myself all the time. (I am so ashamed now of what I did then that I wish I had
died). With tears in her eyes, my mother used to be a silent spectator. If my
father intervened at times, I used to hurl harsh words at him, forgetting for a
moment that he was my father.
On
reaching TPJ at 9.40 a.m., my stomach would return to square one to empty. And
the gnawing urge to fill it somehow used to be uppermost in my mind while
walking from TPJ to my college 20 minutes away. The next “meal” was 24 hours
away. Under the guise of playing pranks with my friends and classmates, I used
to finish off their lunch boxes. Of course such pranks could not be played too
often, as there was the risk of my “Brahmin pride” being hurt.
This
forward caste and backward caste business is all hogwash. There are only
forward classes and backward classes. Forward, those who are well-to-do, and
backward, the opposite.
One
day, when I was so hungry that I could not bear it any more, I literally begged
for food from a Brahmin’s house in Srirangam, Tiruchirapalli. Although the
person knew that I was a Brahmin, he gave me food on plantain leaf and asked me
to eat it outside the house but within the compound. (The food was so delicious
that even now my mouth waters to think of it.) If I had been of the same class
as the Brahmin’s, I would not have begged for food and I would have been a
guest at his dining table.
I
had the “good fortune” of working with a two-term Parliamentarian, belonging to
the academic elite. He used to wax eloquent about the uplift of the
downtrodden, secularism, classless society and all that. Once when I claimed
auto-rickshaw fare on performing one of his so-called official errands, he
said: “Since when you moved into the upper middle class?” His tone and look
were so contemptuous that they are still etched in my mind.
Yes,
as per the present definition of the term ‘Brahmin’, I might be a Brahmin by birth
and according to the assumptions and presumptions of the V.P. Singhs and Yadavs
and Paswans, I might belong to the so called forward caste. But I was not taken
into a forward class person’s house to dine, and I was ridiculed for claiming
auto-rickshaw fare by yet another forward class person.
I
used to literally beg, borrow and steal-food from my friends. Many of them were
non-Brahmins. Thanks to them, I was at least able to pass my B.A. albeit in the
Third Class. Now, as per the standards prescribed by that two-term
Parliamentarian, I may have moved into the middle class, if not the upper
middle class. I earn around four thousand five hundred rupees a month and have
a house of my own in Delhi.
There
were other Brahmin boys poorer than myself – who could not even complete their
schooling. They became table cleaner/waiters in hotels, gate-keepers in cinema
houses – some of them even pick-pockets and petty thieves.
There
are only two communities in our country. The haves and the have-nots, the rich
and the poor; the exploiter and the exploited; the ruler and the ruled. The
likes of Paswan and V.P.Singh and Yadav belong to the former category. The can
afford to glibly talk about handing out social justice and all that, because
they have nothing to lose. The interests of their near and dear ones are taken
care of. Their children get educated in elitist ‘public’ schools and they can
go out of this ‘wretched’ country to haven like Switzerland. And they have
everything to gain solid vote banks, and its natural corollary, power.
Ultimately it is we who are left clutching each other by the throat. We are
mere pawns in their political game. This many killed or that many maimed are
but marks of the power that they wield.
Poverty
knows no class, creed, language or religion. Just because someone is born in a
so-called forward caste, it does not automatically immunize him/her from the
vagaries of life. Preferential treatment based purely on economic grounds is
the only way out, if the Government is genuinely interested in raising the
standard of living of its citizens.
New
Delhi
S.Raju Aiyer
***
எப்படி இருக்கிறது என் கலெக் ஷன்? இது போதுமா, இன்னும் கொஞ்சம்
வேணுமா?
பத்திரிகையை எடுத்தவுடன் நான் படிக்கும் முதல் பகுதி ஆசிரியருக்குக்
கடிதங்கள் தான்!
அதில் தான் நாட்டு நடப்பைப் பற்றிய சரியான கணிப்பு இருக்கும்;
பல தரப்பட்ட கருத்துக்கள் தரப்பட்டிருக்கும்.
பழைய காலத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் ‘ஹிந்து’ – The Hindu – நிஜ ஹிந்துவாக
இருந்த காலத்தில் தவறாமல் அதைப் படிப்பது எனது வழக்கம்.
குன்னூர் நாராயணசாமி ஐயர் என்பவர் ஒரு விவாதத்தைத் தொடங்குவார்
– சரியான விஷயம் பற்றித் தான். அவ்வளவு தான், உடனே அலை அலையாகக் கடிதங்கள் வரும். அவருக்கு
பதில், ஆதரவு எல்லாம் வரும். ஒரு செட் ஆஃப் பீப்பிள் (Set of people)
-தான்.
அதாவது, ‘அவர் சமிக்ஞை காண்பிப்பார், தொடர்ந்து அலைகள் எழும்பி
கரை புரண்டோடும்’ என்பது போல இருக்கும்.
ஆனால் அந்தக் கடிதங்கள் ஏராளமான உண்மைகளைத் தரும்.
படிப்பதும் ஆனந்தம்; பகிர்வதும் ஆனந்தம்.
ஆசிரியராகப் பார்த்து ஒரு ‘நல்ல நாளில்” இத்துடன் இந்த
விவாதம் முடிவடைகிறது என்று போடுவார்.
அடுத்த குன்னூர் நாராயணசாமி ஐயரின் கடிதத்திற்காகக் காத்திருப்பேன்.
ஆனால் இப்போதெல்லாம் அது போலக் காண முடிவதில்லை!
*
எனது எழுத்துக்களுக்கு வரும் விமரிசனங்கள் பலதரப்பட்டவை.
உதாரணத்திற்கு சிலவற்றைச் சொல்கிறேன்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் திருச்சி அகில இந்திய் வானொலி
நிலையம் எனது நாடகங்கள் சிலவற்றை ஒலி பரப்பியது.
புரட்சிவீரன் பகத் சிங் என்ற நாடகத்தை எழுதி அனுப்பினேன்.
அதை அனுப்பியதைத் தொடர்ந்து அலுவலகத்தில் என்னை இலங்கைக்கு அனுப்பினார்கள்.
ஒரு வாரம் அங்கு இருந்து விட்டுத் திரும்புவதாகத் திட்டம். ஆனால்
அங்கு ஜனவரி மாதம் சென்றவன் அக்டோபர் முடிய இருக்க வேண்டியதாயிற்று.
ஆல் இந்தியா ரேடியோவில் பல சட்ட திட்டங்கள் உண்டு. அதன்படி இலங்கையில்
இருந்த எனது நாடகத்தை அவர்களால் ஒலிபரப்ப முடியவில்லை. (காண்ட்ராக்டில் கையெழுத்துப்
போட என்னால் முடியவில்லை)
ஒரு வழியாக நான் இந்தியா திரும்பியவுடன் நாடகம் ஒலிபரப்பானது.
அடுத்த வாரம் புரோகிராம் எக்ஸிகியூடிவ் திரு தெய்வசிகாமணி எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
ரத்னம் என்ற நேயரின் கடிதம் அது.
அதில் நான் கூறிய படி பகத்சிங்கின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இல்லை
என்றும் அவை தவறு என்றும் எழுதி இருந்தார் அவர்.
தூக்கிவாரிப்போட்டது எனக்கு.
எல்லா ஆதாரங்களையும் புத்தகங்களின் சகிதம் எடுத்துக் கொண்டு
திருச்சிக்குப் புறப்பட்டேன்.
ஒரு எளிய மத்திய தர வர்க்கத்தினரின் சிறிய வீடுகள் அடங்கிய ஒரு
பகுதி. மரம் ஒன்றின் அடியில் ஒரு கயிற்றுக் கட்டில். அதில் வயதானவர் ஒருவர் படுத்திருந்தார்.
அவர் தான் ரத்னம்.
அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது கடிதத்தைக் காண்பித்து,
“எனது நாடகத்தில் ..” என்று ஆரம்பித்தேன்.
அவர் திடுக்கிட்டார். “ஐயா! இதற்காகவா மதுரையிலிருந்து வந்தீர்கள்.
சும்மா நினைவிலிருந்து எழுதியது அது. ஆதாரம் காண்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள்
எழுதினால் அது சரியாகத் தான் இருக்கும்” என்று சொல்லி விவாதத்திற்கு
ஆரம்பத்திலேயே சமாதி கட்டி விட்டார்.
எனக்குச் சப்பென்று போயிற்று. வானொலி நிலையம் சென்றேன்; நடந்ததைச்
சொன்னேன்.
தெய்வசிகாமணி சிரித்தார். நீங்கள் இப்படி வந்திருக்க வேண்டிய
அவசியமே இல்லை என்று சொன்னவர், “சரி, வந்ததும் நல்லதாகப் போச்சு, ஆர் எம் வீரப்பன்
சொன்னதைப் படித்தீர்களா?” என்று கேட்டார்.
எம் ஜி ஆர் அரசில் அறநிலையப் பொறுப்பு போன்றவற்றை வகித்தவர்
அவர். காந்திஜியின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்கள் தென்னாட்டிலேயே நிகழ்ந்தன என்றும்
அந்தச் சம்பவங்கள் பிரதானமாக எடுத்துச் சொல்லப்படவில்லை என்றும் அவர் தன் ஆதங்கத்தை
வெளிப்படுத்தி இருந்தார் அவர்.
காந்திஜி வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு நாடகம் அனுப்புங்களேன்
என்றார் அவர்.
இரு நாட்கள் தான் அவகாசம். வீடு வந்தவன் அனைத்து நூல்களையும்
அலசி ஆராய்ந்து வருவார் காந்திஜி என்ற தொடர் நாடகத்தை எழுதி அனுப்பினேன்.
நடனு என்பவர் காந்திஜி பாத்திரத்திற்குக் குரல் கொடுத்திருந்தார்.
அருமையான குரல் – காந்திஜியே பேசுவது போல!
நாடகம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.
ஒரு விமரிசனக் கடிதத்திற்கு பதில் சொல்லப் போய் நான் பெற்றது
நல்ல பெயரை!
*
இஸ்ரேலிருந்து ஒரு மின்னஞ்சல்.
இயற்கையில் எண் கணித
ரகசியங்கள் அமைந்திருப்பது (Nature’s Numbers By Ian
Stewart) பற்றிய ஒரு அருமையா
புத்தகத்தைப் பற்றி ஒரு மதிப்புரை எழுதி இருந்தேன் – www.ezinearticles.com இல்!
அது பற்றி ஏராளமான கேள்விகள். விடாது பதில் அனுப்பினேன்.
ஆனால் கேள்விகள் ஆழ்ந்த ஞானத்தைச் சுட்டிக் காட்டியது.
அந்தப் பெண்மணியிடம், “ நீங்கள் யார்? உண்மையைச் சொல்லுங்கள்,
எனது விவரங்களை விட அதிகம் அறிந்தவர் நீங்கள்” என்று ஒரு மெயிலை
அனுப்பினேன்.
உண்மை வெளி வந்தது. அந்தப் பெண்ணின் தந்தை இஸ்ரேலின் பிரபல விஞ்ஞானி.
அவர் கேட்ட கேள்விகளை அந்தப் பெண் அனுப்பி இருந்தார்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று விஞ்ஞானிக்கு என் வணக்கங்களைக்
கூறி மெயிலில் விடை பெற்றேன்.
*
ஐன்ஸ்டீனும் கீதையும் பற்றிய எனது கட்டுரையை அதே www.ezinearticles.com இல் படித்த ஒரு
பேரறிஞர் ஐன்ஸ்டீன் கீதையைப் பற்றிக் கூறியதற்கான ஆதாரம் – Source – என்ன என்று கேட்டு
மெயில் அனுப்பி இருந்தார்.
தலை சுற்றியது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த கட்டுரை
தான் ஆதாரம். அதைத் தேட ஆரம்பித்தேன்.
நல்ல வேளை, அதை எழுதியவர் மதுரையில் இருந்தார். அவரைத் தொடர்பு
கொண்டேன். அவர் பெயரைச் சொன்ன போது அவர், “நான் அவனில்லை. இப்போது சுவாமிஜி ஆகி விட்டேன்” என்றார். அவருக்கு
எனது பணிவான நமஸ்காரத்தைச் சொல்லி விஷயத்தைக் கேட்டேன்.
அவரோ, “ஐன்ஸ்டீன் கீதையைப் பற்றிக் கூறியதையும் குப்தா என்பவர்
பெயரைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அதற்கான
ஆதாரம் Hindu பத்திரிகையில்
அப்போது வந்த ஒரு கட்டுரை தான்” என்று கூறினார்.
அதை அப்படியே இஸ்ரேலுக்கு அனுப்பினேன். அவரோ ‘இதற்காக நான் இஸ்ரேலில்
ஐன்ஸ்டீன் பற்றிய அனைத்து ஆவணங்களையும் படித்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார்.
இது பற்றி இணையதளத்தில் நிறைய கட்டுரைகள் வெளியானதென்னவோ உண்மை
தான்!
பொதுவாக அனைத்துக் கட்டுரைகளுக்கான ஆதாரங்களையும் பத்திரமாகச்
சேமித்து வைத்திருப்பவன் நான்! சில சமயம் ஆதாரத்திற்கும் ஒரு ஆதாரத்தைச் சுட்டிக் காண்பித்து
ஆதி மூலத்திற்கே போக வேண்டி இருக்கிறது.
*
நஞ்சப்பா அவர்கள் எனது கட்டுரைகளை படித்து விட்டு எழுதும் விமரிசனங்கள்
எனது ஒரிஜினல் கட்டுரைகளை விட அதிக விஷயங்களைத் தருவதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
திரு பரமசிவனோ நன்று, அருமை என ஒற்றை வாக்கியத்தில் கருத்தைச்
சொல்லி விடுவார். (சாண்டில்யனின் “ஒற்றைச் சொல்லை அவன் உதிர்த்தான்” என்பது உங்கள்
நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பல நாவல்களில் அவரது கதாநாயக, நாயகிகள்
ஒற்றைச் சொல்லை உதிர்ப்பர்; அதற்கு மஹிமை அதிகம்!)
சரி, நீங்கள் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் ஒன்றைச் சொல்லுங்களேன்
என்று கேட்கிறீர்களா. அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.
தமிழ் ஒரு அதிசய மொழி. உயிர் தழைக்கவும் அதனுடைய ஜீவ சொற்கள்
உதவும்.
மனம் வெதும்பி ஒருவர் மீது வசை பாடவும் அது உதவும்.
திருஞானசம்பந்தர் தமிழ்ப் பாடல் பாடி தன் அருளாணையால் மயிலையில்
பூம்பாவையின் எலும்புகள் இருந்த அஸ்திக் குடத்திலிருந்து அவளை மீண்டும் உயிருடன் எழச்
செய்தார்.
அதே போல பல புலவர்கள் வசைப் பாடல் பாடியதையும் தமிழக வரலாற்றில்
பார்க்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக கொங்கு மண்டலத்தில் நடந்த ஒரு நிகழ்வை கொங்கு
மண்டல சதகம் தனது 81ஆம் பாடலில் கூறுகிறது.
தமிழ்ப் புலவன் ஒருவன் அறம் பாடிய வரலாறு இது.
குறுப்பி நாட்டில் உள்ள விஜயமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்த
சாமிநாதப் புலவன் என்னும் புலவர் தமிழில் வல்லவர். அவர் ஒரு
சமயம் பொன்கலூர் நாட்டில் உள்ள புற்றிரைச்சல் என்ற ஊருக்குச் சென்றார். அவ்வூருக்கு
அதிபனாக முத்தன் என்பவர் இருந்தார். தனது வறுமை நிலையை அவரிடம் எடுத்துரைத்த சாமிநாதப்
புலவன் தனக்கு உதவி புரியுமாறு வேண்டினார்.
நெற்போர்கள் நிறைய இருந்தும் கூட தன்னிடம் ஒன்றும் இல்லை என்று
சொன்னார் முத்தன்.
மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டார் புலவர். ஆனால் முத்தன்
இல்லை என்றே சொன்னார்.
அதனால் மனம் வெதும்பிய சாமிநாதப் புலவன் ஒரு வசை வெண்பா பாடினார்
இப்படி :